Jump to content

அப்போலோவில் அதிக நாட்கள் சிகிச்சை எடுத்த அரசியல் தலைவர்கள்! - ஓர் அலசல்


Recommended Posts

அப்போலோவில் அதிக நாட்கள் சிகிச்சை எடுத்த அரசியல் தலைவர்கள்! - ஓர் அலசல்

Apollo%20Jayalalitha_17568.png  

ப்போலோவும் அரசியலும் தமிழக அரசியல்  வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் தலைவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் சிகிச்சைக்காக அவர்கள் முதலில் செல்வது அப்போலோ மருத்துவமனைக்குத்தான். மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களும் இங்கு வந்து சிகிச்சை எடுத்துச் சென்று இருக்கிறார்கள். 

1984-ம் ஆண்டு அக்டோபர் 5 -ம் தேதி முதல்வராக இருந்த எம். ஜி .ஆர்  உடல் நலமின்றி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர்தான் அப்போலோ மருத்துவமனையின்  சிகிச்சை தரம்  குறித்து  இந்தியா முழுவதும் தெரிய ஆரம்பித்தது.

mgr%20rare%20picture_17222.jpg

ஒரு மாத காலம் சிகிச்சை எடுத்த எம்.ஜி.ஆர் !

'எம்.ஜி.ஆருக்கு சளித் தொல்லை, காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா தொந்தரவுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' எனக்கூறியது மருத்துவமனை அறிக்கை. அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி அக்டோபர் 17-ம் தேதி எம்.ஜி.ஆரின் உடல்நலன் குறித்து விசாரிப்பதற்காக சென்னை வந்தார். அதன்பிறகு பிரதமரின் ஆலோசனைப்படி எம்.ஜி.ஆர் அப்போலோவில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

எம்.ஜி.ஆர் சிகிச்சை எடுத்த ஒரு மாத காலமும் சட்டசபையில், அவரது உடல் நிலை குறித்து தகவல் சொல்லப்பட்டது. அரசு சார்பிலும்  அறிக்கை  வெளியிடப்பட்டது. இந்தத் தகவல்களால் தமிழகத்தில் அப்போது பதற்றம் குறைந்திருந்தது.

சில நாட்கள் சிகிச்சை எடுத்த ரங்கராஜன் குமாரமங்கலம்smgf2_17012.jpg

பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசில் மின் துறை அமைச்சராக இருந்தவர் ரங்கராஜன் குமாரமங்கலம். இவர் 2000-வது ஆண்டில், சாதாரணக் காய்ச்சல் என்று அப்போலோவில், அட்மிட் ஆனார். சில நாட்களிலேயே காய்ச்சல் குணமாகி டெல்லி சென்றார் ரங்கராஜன். 

34  நாட்களுக்கு மேல் சிகிச்சை எடுத்த முரசொலி மாறன் 

smgf3_17555.jpgமுன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், கடந்த 2002-ம் ஆண்டு, அக்டோபர் 28 -ம்  தேதி  அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். 34  நாட்கள் அப்போலோவில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பிறகு டெல்லியிலும் அமெரிக்காவிலும் மேல்சிகிச்சை எடுத்துக்கொண்டவர் மறுபடியும் 2004-ம் வருடம் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால்,  சிகிச்சைப் பலனின்றி நவம்பர் 23-ம் தேதியன்று மாறன்  உயிரிழந்தார்.

 

ஒரிரு நாட்கள்  சிகச்சை எடுத்த கருணாநிதி ! 

2008-ம் ஆண்டில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகுவலிக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டுத் திரும்பினார் கருணாநிதி.  பின்னர், 2011-ம் ஆண்டு மே 3-ம் தேதி திடீர்  உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.mgr_17271.jpg

அதே ஆண்டு நவம்பர் 21-ம் தேதி இரவு சிறுநீரகத் தொற்று சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் 22-ம் தேதி இரவு வீடு திரும்பினார்.

31 நாட்களாக சிகிச்சை எடுக்கும் ஜெயலலிதா 

27-jaya_17462.jpgகடந்த செப்டம்பர் 22-ம் தேதி  தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையின் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு உள்ளதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.  ஆனால், காய்ச்சலுக்கு ஐ.சி.யு-வில் அனுமதிப்பார்களா? காய்ச்சல் குணமாக இத்தனை நாட்கள் ஆகுமா? என்றெல்லாம் மக்களிடையே சந்தேகங்கள் எழத் தொடங்கின. இதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில், 'சர்க்கரை நோய், சுவாசக்  கோளாறு, இதயம் சார்ந்த நோய்கள் இருப்பதால் நீண்ட நாட்களுக்கு முதல்வர் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டி உள்ளது' என்று மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் அறிக்கை வெளியிட்டது.

அப்போலோவில் முதல்வர் அனுமதிக்கப்பட்டு இன்றோடு ஒரு மாதம் காலம் ஆகிறது. முரசொலி மாறனுக்குப் பிறகு எம்.ஜி.ஆர்-தான்  அதிக  நாட்கள்  மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொண்ட அரசியல் தலைவர். இந்தவரிசையில் இப்போது முதல்வர் ஜெயலலிதாவும் சேர்ந்துள்ளார். ஜெயலலிதா இன்னும் எத்தனை நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும் என்பது குறித்து தெளிவான பார்வை இதுவரை தமிழக மக்களுக்கு கொடுக்கப்படவில்லை.

முதல்வரின்  உடல்நிலை குறித்து  தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்!

இந்தச் சூழ்நிலையில், முதல்வர் தரப்பு எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து இந்தியக் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் 201607221340458005_Mutharasan-says-Disapமுத்தரசன் நம்மிடம் பேசியபோது, 

"எம்.ஜி.ஆர்., முரசொலி மாறனுக்குப் பிறகு  ஜெயலலிதாதான்  அதிக நாட்கள் சிகிச்சை எடுத்து வருகிறார். உடல்நிலை சரியில்லை என்றால் சிகிச்சை எடுத்துதான் ஆக வேண்டும். அவர் தமிழகத்தின் முதல்வர் என்பதால் அவருடன் இருப்பவர்களுக்கு  கூடுதல் பொறுப்பு உள்ளது . கடந்த காலங்களில் இதே போன்று முக்கியத் தலைவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது  எடுத்த  நடவடிக்கைளைப் பார்க்க வேண்டும். அதே போன்று  தற்போதைய சூழலை அவர்கள்  கையாள வேண்டும். இதுவரை முதல்வரின் உடல்நிலை குறித்து அரசு அறிக்கை அளிக்காதது கவலைக்குரியது.

பாமரனுக்குப் புரியுமா அப்போலோ அறிக்கை ?

மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் முதல்வர் ஜெயலலிதா! அவருடைய  உடல் நிலை குறித்து தமிழக மக்களுக்கு  அரசுதான்   தெரிவிக்க வேண்டும். அப்போலோ அறிக்கை பாமர மக்களுக்குப் புரியுமா என்ன? எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது ஹண்டே தலைமையில் குழு அமைத்திருந்தார்கள். இந்தக் குழுதான் மக்களுக்கு முதல்வரின்  உடல் நிலை குறித்து தெரிவித்து  வந்தது. ஆனால், இப்போது அத்தகைய நிலைப்பாடு இல்லாமல் போனதே வதந்திகள் பரவக் காரணமாகிவிட்டது. முதல்வர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. இதுவரை முதல்வரின் உடல்நிலை  குறித்த  எந்தத் தகவல்களையும் தமிழக அரசு அறிக்கையாக வெளியிடவில்லை.  இனியும் காலம் தாமதிக்காமல், முதல்வரின் உடல்நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

வதந்திகளுக்காக வழக்கு போட்டது இதுவே முதல் முறை!

maxresdefault_17196.jpgஇதுகுறித்துப் பேசும் அரசியல் விமர்சகரும்  பத்திரிகையாளருமான பாலு, "நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்த இரண்டாவது முதல்வர் ஜெயலலிதா. நீண்ட நாட்கள் என்று சொன்ன போதே அவருடைய  பொறுப்பை  மற்றவர்களுக்கு வழங்கி இருக்க வேண்டும். காலம் கடந்துதான் பொறுப்பை வழங்கினார்கள். அதனால் அரசு  நிர்வாகம் முடங்கியது. இப்படி அதிக நாட்கள்  அரசு நிர்வாகம் முடங்கியதும் இதுவே முதல் நிகழ்வாக இருக்கலாம். அதேபோன்று அவருடைய  உடல் நிலை குறித்த தெளிவில்லாத காரணத்தால்தான் வதந்திகள் பரவுகிறது. அவ்வாறு பரப்புவோர் மீது வழக்கு போடுகிறார்கள். இதுவும் தமிழக அரசியலில் நடந்த முதல் நிகழ்வு. எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அரசு  சார்பில் அறிக்கை கொடுப்பதும் பேட்டி கொடுப்பதுமாக  இருந்தனர். கூடவே எம் .ஜி.ஆரின் புகைப்படங்களையும்  வெளியிட்டு வந்தார்கள் . ஆனால்  முதல்வர் ஜெயலலிதாவின்  உடல்நிலை குறித்தத் தகவலை இதுவரையிலும் பூடகமாகவே வைத்துள்ளார்கள். அரசு தரப்பிலோ இதுவரை எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.  அரசின் இத்தகைய செயல்பாடுகள்தான் வதந்தி பரவுவதற்கான காரணம். இதனைத் தவிர்க்க வேண்டுமானால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளவர்கள்  இனிமேலாவது  வரலாற்று நிகழ்வுகளையும் சட்டங்களையும் பார்த்து செயல்பட வேண்டும்"   என்றார்.

http://www.vikatan.com/news/coverstory/70292-list-of-political-leaders-who-had-treatment-in-apollo.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.