Jump to content

சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி


Recommended Posts

சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி

 

 
sivakumar_2789636f.jpg
 

தந்தை சிவகுமாரின் 75வது பிறந்த நாளை, சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

1965ம் ஆண்டு 'காக்கும் கரங்கள்' மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தார். வரும் அக்டோபர் 27ம் தேதி தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சிவகுமார்.

இதனை சிவகுமாருடைய மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் 'மார்க்கண்டேயனுக்கு வைரவிழா' என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சிவகுமார் வரைந்துள்ள பல்வேறு ஓவியங்களில் இருந்து 140 ஒவியங்களைத் தேர்ந்தெடுத்து லலித் கலா அகாடமியில் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. இக்கண்காட்சி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

அக்டோபர் 27ம் தேதி வைரவிழா மலர் வெளியிடப்படுகிறது. அதில் நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட சிவகுமாருடன் நடித்தவர்களின் அனுபவங்கள் இடம்பெற இருக்கிறது. இதில் சிவகுமார் நடித்த படங்களின் குறிப்புகள், புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற இருக்கிறது. மேலும், அவருடைய சொற்பொழிவுகள் அடங்கிய டிவிடிக்களும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/சிவகுமாரின்-75வது-பிறந்த-நாள்-சிறப்பு-ஓவியக்-கண்காட்சி/article9255422.ece?homepage=true

Link to comment
Share on other sites

’அப்பாவுக்கு எதாவது ஸ்பெஷலா செய்யணும்னு நினைச்சேன்!’ -சிவகுமாருக்கு கார்த்தியின் பிறந்த நாள் பரிசு

PKS_2657_20313.JPG

நடிகர் சிவகுமாரின் இன்னோர் அடையாளம் ஓவியர். முதன் முதலில் ஓவியக் கல்லூரியில் சேரத்தான் சென்னை வந்தார். இவர் 1958-1968 காலகட்டத்தில் வரைந்த ஓவியங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளது.

காந்தி, பெரியார், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதல் கோயில்கள், பல மனிதர்கள் என வெரைட்டியான பெயிண்டிங் கண்காட்சியில் வைத்திருக்கிறார். இதை பென்சில், கிரேயான், வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங் பயன்படுத்தி தூரிகையை தீட்டியுள்ளார். விழாவில் பிரபல ஓவியர் மணியம் செல்வம், ஓவியர் அல்போன்ஸா தாஸ், ஓவியர் ஏ பி ஸ்ரீதர், ஓவியர் வீர சந்தானம், ஓவியர் மருது, கார்த்தி, நாசர், பொன்வண்ணன், தனஞ்செயன் போன்ற பலர் கலந்து கொண்டு கொண்டனர். 

PKS_2883_20459.JPG

முதலில் பேசிய நடிகர் சிவகுமார் "என் வாழ்நாள் முழுக்க ஓவியனாக வாழ்ந்து கண்ணை மூட வேண்டும்னு நினைச்சுதான் சென்னை வந்தேன்.  கால மாற்றத்தால ஓவியர்களுக்கும், ஓவியங்களுக்கும் பெருமை இருக்காதுன்னு நினைச்சுட்டு இருந்தப்போ எனக்கு ரெண்டு வருஷம் சீனியரா இருந்த அல்போன்ஸ் தாஸை பார்த்தேன். அவரை பார்த்து  அவர் ஓவியங்களை ரசிச்சுதான் அகடாமி ஓவியங்கள் வரைய ஆரம்பிச்சேன். ஆறு ஆண்டுகள் இந்தியா முழுக்க சுற்றி வந்து நூறுக்கும் மேற்பட்ட கோவில்களையும், மனிதர்களையும்  வரைஞ்சேன். அப்போ சுமார் 1500 பென்சில் ஸ்கெட்ச் போட்டிருப்பேன்.

இப்ப என்னோட பிறந்தநாள் வருது. என்னைக்கும் என்னுடைய பிறந்தநாளை கொண்டாடினதே இல்லை.என் பசங்க சூர்யாவும், கார்த்திக்கும்தான் 'உங்க படைப்புகளை வெளியே கொண்டு போகணும்'னு சொல்லி ஆசைப்பட்டாங்க. என்னால மறுப்பு சொல்ல முடியல. இங்கே இருக்க ஓவியங்கள் எல்லாமும் என்னோட 16 வயசுலேர்ந்து 24 வயசு வரைக்குமான காலகட்டத்துல வரைஞ்சது. என்னோட ஆசிரியர் தான் ஆனந்த விகடன் புத்தகம் கொடுத்து ஓவியர் கோபுலுவின் ஓவியங்களை எனக்கு அறிமுகப் படுத்தினார். ஓவியர் மணியன் ஓவியங்களையும், சிற்பி ஓவியங்கள் அப்பதான் பார்த்தேன்.

அவரை பார்த்து என் ஓவியங்களை கொடுத்தேன். பார்த்து ரசிச்சவர்கிட்ட 'சார், நான் ஓவியர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, பாதை மாதிரி நடிகன் ஆகிட்டேன்'னு சொன்னேன். அவர் 'இந்தியவுல ஓவியராக பிறப்பது சாபம். அதுவும் தமிழ்நாட்டுல பிறப்பது பெரும் சாபம். நீ சரியான முடிவைதான் எடுத்து இருக்கனு சொன்னார். என்னுடைய ஓவியங்களை பாருங்க." என்று மகிழ்ந்தார். 

ஓவியர் வீர சந்தானம் "சிவகுமாருக்கு திரைப்படத்துல அவருக்கான அங்கீகாரம் எப்போவோ கொடுத்தாச்சு. அடுத்தது ஓவியத்துறையில. இங்க இருக்கும் ஓவியங்களை விட சிறப்பா எதுவுமில்லைனு நினைக்குறேன். ஸ்கெட்சஸ்லாம் அவ்ளோ உயிர்ப்பாக துடிப்புடன் ஒரு குதிரையின் வேகத்தை போல இருக்கு. ஓவியனாகவும், நடிகராகவும் தமிழுக்குமான அடையாளமாகவும் இருக்கிறார்" என்றார்.

நடிகர் கார்த்தி "இங்க இருக்கற கேலரி மாதிரி  நிரந்தர கேலரியை உருவாக்கணும்னு அப்பாகிட்ட அடிக்கடி சொல்லிட்டே இருப்பேன். அவரும் பார்க்கலாம்னு சொல்லிட்டே இருப்பார். நாங்க ஒவ்வ்வொரு பிறந்தநாளுக்கும் கேக் வாங்கிட்டுப் போகும்போதும் கூட திட்டுவாரு. சரி இந்த பிறந்த நாளுக்காவது  அப்பாவுக்கு ஏதாவது ஸ்பெஷலா பண்ணனும்னு ஆசைப்பட்டோம். அதுதான் இந்த ஓவியக் கண்காட்சி.

எல்லா விஷயத்துலயும் அப்பா நேர்த்தியா இருக்கணும்னு எதிர்பாப்பார். இந்த கண்காட்சியையும் ரொம்ப மெனக்கெட்டு நேர்த்தியா பண்ணியிருக்கோம். ஒரு ஓவியம் வரைய அப்பா கிட்டத்தட்ட ஏழு மணி நேரமெல்லாம் சாப்பிடாம தண்ணி குடிக்காமலாம் இருந்துருக்கார். அப்படி வரையபட்ட ஓவியங்கள் தான் இங்க இருக்கு." என்று நன்றி சொன்னார். 

nagesh_20479.JPG

மைக் பிடித்த ஓவியர் மணியம் செல்வன் "எண்பதுகள்ல தான் முதல் முதல்ல சாரைப் பார்த்தேன். அவரோட ஸ்கெட்ச் புக்ஸெல்லாம் ஒரு முறைப் பார்த்து மலைச்சு போயிருக்கேன்.

மொத்தம் பன்னிரெண்டு புத்தகங்கள் இருக்கும். ஒரு ஓவியனாகத்தான் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறார். இந்த படைப்புகள் இளைஞர்களுக்கு ரொம்ப முக்கியமான தேவையாக இருக்கும். இது ஒர் முக்கியமான கண்காட்சி" என்றார்.  

http://www.vikatan.com/news/miscellaneous/70425-actor-sivakumar-dreams-as-a-painter-in-his-lifetime-once.art

Link to comment
Share on other sites

நடிகர் சிவகுமாரின் பிரமாண்ட ஓவியக் கண்காட்சி... படங்கள் - பா.காளிமுத்து

 
 
175021.jpg 175022.jpg 175023.jpg 175024.jpg 175025.jpg 175026.jpg 175027.jpg 175028.jpg 175029.jpg 175030.jpg 175031.jpg 175032.jpg 175033.jpg 175034.jpg 175035.jpg 175036.jpg 175037.jpg 175038.jpg 175039.jpg 175040.jpg 175041.jpg 175042.jpg 175043.jpg 175044.jpg 175045.jpg 175046.jpg 175047.jpg 175048.jpg 175049.jpg 175050.jpg 175051.jpg 175052.jpg 175053.jpg 175054.jpg 175055.jpg 175056.jpg 175057.jpg 175058.jpg 175059.jpg 175060.jpg 175061.jpg 175062.jpg 175063.jpg 175064.jpg 175065.jpg 175066.jpg 175067.jpg 175068.jpg 175069.jpg 175070.jpg 175071.jpg 175072.jpg 175073.jpg 175074.jpg 175075.jpg 175076.jpg 175077.jpg 175078.jpg 175079.jpg 175080.jpg 175081.jpg 175082.jpg 175083.jpg 175084.jpg 175085.jpg 175086.jpg 175087.jpg 175088.jpg 175089.jpg 175090.jpg 175091.jpg 175092.jpg 175093.jpg 175094.jpg 175095.jpg 175096.jpg 175097.jpg 175098.jpg 175099.jpg 175100.jpg 175101.jpg 175102.jpg 175103.jpg 175104.jpg 175105.jpg 175106.jpg 175107.jpg 175108.jpg 175109.jpg 175110.jpg 175111.jpg 175112.jpg 175113.jpg 175114.jpg 175115.jpg 175116.jpg 175117.jpg 175118.jpg 175119.jpg 175120.jpg 175121.jpg 175122.jpg 175123.jpg 175124.jpg 175125.jpg 175126.jpg

http://www.vikatan.com/news/album.php?&a_id=5997

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.