Jump to content

கைதான ஐந்து பொலிஸாரும் இன்றையதினம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்


Recommended Posts

கைதான ஐந்து பொலிஸாரும் இன்றையதினம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்
 
கைதான ஐந்து பொலிஸாரும் இன்றையதினம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்
 
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயி ரிழந்ந சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்டுள்ள 5 பொலிஸ் அலுவலர்களும் இன்று நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்படவு ள்ளனர்.
 
யாழ்ப்பாண நீதிவான் முன்னிலையில் அவர்கள் ஐந்து பேரும் ஆஜர் செய்யப்படவுள்ளதாகபொலிஸ் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
 
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தமது உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நிலையில் அவர்கள் மீது பொலிஸ் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக இது சாதாரண விபத்து என்று கூறப்பட்டாலும் கூட, பிரதேச மக்கள், சம்பவம் இடம்பெற்ற போது துப்பாக்கி சூட்டு சத்த ங்களை கேட்கக்கூடியதாக இருந்தது என்று சந்தேகம்வெளியிட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகி ன்றன.
 
இதன் அடிப்படையில் பிரேத பரிசோதனையின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற மாணவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தமை தெரியவந்தது.
 
இதனையடுத்து சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் என்று கூறப்படும் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.
 
அவர்களின் பணிகளும் இடைநிறுத்தம் செய்யப்பட்டநிலையிலேயே அவர்கள் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்ப டவுள்ளனர்.

http://onlineuthayan.com/news/19243

Link to comment
Share on other sites

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை : 5 பொலிஸாருக்கும் விளக்கமறியல்

 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CvWJX_DUIAA_0kK.jpg

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் நேற்று அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும் விபத்தொன்றில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸ் அதிகாரிகள் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து குறித்த 5 பொலிஸ் அதிகாரிகளும் யாழ். நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ச.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் ஐவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அவர்கள் ஐவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை 24 ஆம் திகதி யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/12632

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஐவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏன் யாழ்ப்பாணத்தலை சிறைச்சாலை இல்லையோ?

Link to comment
Share on other sites

9 minutes ago, vanangaamudi said:

அவர்கள் ஐவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏன் யாழ்ப்பாணத்தலை சிறைச்சாலை இல்லையோ?

அரச ஆதரவுள்ள குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து தப்பிக்கவைத்து நிரபராதிகளாக்கும் வல்லமை கொண்ட நகரமாக உலகத்தில்,....! இலங்கைத்தீவில்....! அதுவும் அங்குள்ள அநுராதபுரம் என்னும் நகரமும் புதுமைபடைத்துச் சிறந்து லிளங்குகிறது. அத்தகய சிறப்புக்கொண்ட நகரைப் புறந்தள்ளுவது அறிவுடமையல்ல. :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவையள் சுட்டா விபத்து. புலிகள் உந்த அநியாயப்படுவாரை சுட்டால்.. பயங்கரவாதம் என்று குரைக்கும் சர்வதேசம்.. இப்ப உம்மாண்டி மாதிரி இருக்குமே. தனக்கும்.. இதுக்கும் சம்பந்தமில்லாத மாதிரி. சர்வதேச மக்கள் சனநாயகம் என்ற போர்வையில்.. ஏமாற்றப்பட்டு.. பிழையானவர்களின் கையில் ஆட்சி அதிகாரங்களை கையளிக்கச் செய்யப்படுவதின்.. விளைவுகளின் பெறுதியே இவை. 

இங்கு மனித உரிமைகள் மாணவர் உரிமைகள்.. எல்லாம் யாரும் பேச மாட்டினம். 

எங்கட கடிதம் எழுதிற கும்பல்களும் குறட்டை. :rolleyes:

இந்த சிங்கள அரச பயங்கரவாதச் செயலுக்கு சர்வதேச விசாரணை அவசியம். 

Link to comment
Share on other sites

31 minutes ago, nedukkalapoovan said:

அவையள் சுட்டா விபத்து. புலிகள் உந்த அநியாயப்படுவாரை சுட்டால்.. பயங்கரவாதம் என்று குரைக்கும் சர்வதேசம்.. இப்ப உம்மாண்டி மாதிரி இருக்குமே. தனக்கும்.. இதுக்கும் சம்பந்தமில்லாத மாதிரி. சர்வதேச மக்கள் சனநாயகம் என்ற போர்வையில்.. ஏமாற்றப்பட்டு.. பிழையானவர்களின் கையில் ஆட்சி அதிகாரங்களை கையளிக்கச் செய்யப்படுவதின்.. விளைவுகளின் பெறுதியே இவை. 

இங்கு மனித உரிமைகள் மாணவர் உரிமைகள்.. எல்லாம் யாரும் பேச மாட்டினம். 

எங்கட கடிதம் எழுதிற கும்பல்களும் குறட்டை. :rolleyes:

இந்த சிங்கள அரச பயங்கரவாதச் செயலுக்கு சர்வதேச விசாரணை அவசியம். 

150,000 பேரின் மரணத்தையே விசாரிக்கவில்லை , 2 பேரின் மரணத்தையா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Dash said:

150,000 பேரின் மரணத்தையே விசாரிக்கவில்லை , 2 பேரின் மரணத்தையா???

இதே கொழும்பில் குண்டு வெடிச்சு 2 பேர் செத்திருந்தால்.. உலக ஊடகங்கள் எல்லாம் ஓடி வந்திருக்கும். அரசாங்கங்கள்.. மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கிட்டுது என்று கூவிய படி.. இந்தா உதவி என்ற போர்வையில் ஆளையாள் ஓடியாந்து..  பேரம் பேசிக் கொண்டிருந்திருப்பார்கள். அதில் மனித உரிமைகள் பந்தாடப்பட்டுக் கொண்டிருந்திருக்கும். 

எல்லாம் இடம் பொருள் ஏவலில் அமைந்துள்ளது. 

அதற்காக உண்மையாகவே மனித உரிமைகள்.. மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களும்.. ஓய்ந்திருக்க முடியாது. அரச பயங்கரவாதத்தை கட்டிப் பாதுக்காக்க கூடாது. அது தொடர்ந்தால்... இப்படுகொலைகளும் தொடரும். அரச பயங்கரவாதங்கள்..  பூண்டோடு அழிக்கப்பட்டால்.. இதர பயங்கரவாதங்கள் முளைக்கவே வழி இருக்காது. காரணமும் இருக்காது.. இதனை உலகம் உணரச் செய்யனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் உப்படியான செயல்களை செய்தவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்தவை ....இப்ப கைது செய்து விளக்கமறியலிலாவது வைக்கினம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா நம்புகின்றீர்கள் விசாரணை நீதி நியாயம் கிடைக்கும் என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழரசு said:

இன்னுமா நம்புகின்றீர்கள் விசாரணை நீதி நியாயம் கிடைக்கும் என்று 

நிச்சயமாக இல்லை....முதல் நாள் வாள்வெட்டு குழுவினரை பிடிப்பதற்கு விசேட பொலிஸ்குழு அமைக்கப்ப்டுகின்றது அடுத்த நாள் அப்பாவி இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்....

Link to comment
Share on other sites

உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபா நட்ட ஈட்டுடன் வறுமைக்கேற்ற நிவாரங்களும் வழங்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.