Jump to content

பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொலை: ஐந்து பொலிஸார் கைது


Recommended Posts

பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொலை: ஐந்து பொலிஸார் கைது
 
 

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டு பின்னர் அவர்களில் ஒருவர் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன்  தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஐவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இவ்வாறு உயிரிழந்த இந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுடைய சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

http://www.tamilmirror.lk/184470/பல-கல-க-கழக-ம-ணவர-ச-ட-ட-க-க-ல-ஐந-த-ப-ல-ஸ-ர-க-த-

Link to comment
Share on other sites

யாழ். பல்கலை மாணவர்கள் உயிரிழப்பு  ; ஐந்து பொலிஸார் அதிரடி கைது

 

 

யாழ். கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை  யாழ். பல்கலை மாணவர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

asda1.jpg

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (24) ஆகிய மாணவர்கள் இன்று காலை உயிரிழந்திருந்தனர்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மதிலொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆர்ம்பக்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மோட்டர் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவனின் கையின் ஊடாக துப்பாக்கி குண்டு துளைத்து கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலையேற்பட்டிருந்தது.

கொலை குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை குறித்த மாணவர்களின் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியில் கொண்டு செல்ல தாம் அனுமதிக்கபோவதில்லையென மாணவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், உண்மைகள் வெகுவிரைவில் வெளிக்கொணரப்படும் எனவும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பொலிஸார்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/12621

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி, தமிழர் வெறுப்பு எனும் காட்டாற்று வெள்ளத்தை, எவ்வளவு காலத்துக்கு அணை போடுவார்கள்,போட முடியும்?

Link to comment
Share on other sites

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு; 05 பொலிஸார் கைது - மேலதிக விசாரணைகள் CID யிடம்

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு; 05 பொலிஸார் கைது - மேலதிக விசாரணைகள் CID யிடம்

 

 
யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட மாணவர்களில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சந்தேகத்தில் ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23) ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.

குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் 03ம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்கள்.

இவர்கள் இருவரும் விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிலேயே உயிரிழந்துள்ளனர் என்றும் சந்தேகம் எழுந்திருந்த நிலையிலேயே 05 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) ஆரம்பித்துள்ளதாகவும் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக பதவி இடை நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலை வளாகத்தில் ஒன்றுகூடி உள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

இதன்போது அங்கு விஜயம் செய்திருந்த மாவை சேனாதிராஜாவை சூழ்ந்து கொண்ட மாணவர்கள், இது விபத்து அல்ல என்றும், இரு இளைஞர்களினதும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு சரியான விசாரணை இடம்பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு மாணவர்களில் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட விபத்திலேயே இரு மாணவர்களும் உயிரிழந்திருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை கூறத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=84662&mode=lead

Link to comment
Share on other sites

யாழ்.பல்கலை மாணவர்கள் மரணம் ; கைது பின்னணியில் ஜனாதிபதி

 

 

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்குமான விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

asd1.jpg

இச்சந்திப்பின்போது பக்கச்சார்பற்ற விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டுமென எதிர்கட்சித்தலைவர் ஜனாதிபதியிடத்தில் வலியுறுத்தியதையடுத்து விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணம் விரைந்துள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இச்சந்திப்புத் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

திருகோணமலையில் இடம்பெற்ற விசேட நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  நேரடியாக சந்தித்த எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், இச்சம்பவம் தொடர்பாக எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கின்றேன். இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

அதனை தொடர்ந்து ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்தோடு தொடர்புடைய பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு இரா.சம்பந்தன் பொலிஸ் மா அதிபரைக் கோரியதோடு தனது கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார். 

மேலும் தமது பிள்ளைகளை இழந்து துயரில் வாடும் குடும்பத்தாருக்கும் உற்றார் மற்றும் நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்  தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/12623

1477057403_625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

Link to comment
Share on other sites

யாழ் - கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்ற பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த மாணவர்களின் மரணத்திற்கான பிரேதபரிசோதனை அறிக்கை யாழ்.நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிபதி மாணவர்களிடம் கலந்துரையாடி உள்ளார்.

இதன்படி, மோட்டார் சைக்கிளை ஓட்டிய மாணவன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றய மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளான் என யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் தெரிவித்துள்ளார்.

 

பிரேதப்பரிசோதனை இடம்பெறும் சந்தர்ப்பத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் பல அசம்பாவிதங்கள் நடைபெற்றதுடன், பல்கலைக்கழக மாணவர்கள், மக்கள் எனப் பலர் குழுமியிருந்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்த நிலையில் மாலை 5 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரை அழைத்த யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி வன்முறைகளில் ஈடுபட வேண்டாம். என கூறியிருந்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்த நீதிபதி மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியோர் உயிரிழந்த மாணவர்களின் உடலை பார்வையிட்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதன்போது “வன்முறைகளில் ஈடுபட வேண்டாம், ஒரு மாணவனின் உடலில் துப்பாக்கி சன்னம் பாய்ந்துள்ளது, மற்றய மாணவன் விபத்திலேயே உயிரிழந்துள்ளார், உடலை எரிக்க வேண்டாம், புதைக்கும் படியும் விசாரணைகள் விரைந்து எடுக்கப்படும்” எனவும் நீதிபதி கூறியதாக பல்கலைக்கழக மாணவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் இடம்பெற்றதிலிருந்து தற்போது வரை பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்தன. இருப்பினும் இந்த இளைஞர்களின் மரணத்திற்கு விபத்து காரணம் இல்லை என்றும், இவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் தற்போது யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் இந்த சம்பவத்திற்கான காரணத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/statements/01/121816?ref=home

Link to comment
Share on other sites

யாழ் சம்பவம் - மைத்திரியும் சம்பந்தனும் நேரில் சந்திப்பு

யாழ். நகரில் இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகைத் தந்திருந்த ஜனாதிபதியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது கவலையை தெரிவித்ததோடு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ்விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இரா. சம்பந்தன் பொலிஸ்மா அதிபரோடு தொடர்பு கொண்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். துரித கதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

http://www.tamilwin.com/statements/01/121814?ref=home

பல்கலை மாணவர்கள் மரணம் ; சுவாமிநாதன் வடக்கு மக்களிடம் கோரிக்கை

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து பக்கச்சார்பற்ற நடவடிக்கைகள் உடன் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வடபகுதி மக்கள் குழப்பமடைய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்.நகரை அண்மித்த கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு அருகாமையில் மோட்டார்சைக்கிளில் சென்ற இரு பல்கலைக்கழக மாணவர்கள் விபத்துக்குள்ளாகி மரணமானதாக தெரிவிக்கப்பட்ட போதும் அவர்களது மரணம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருந்தன.

யாழ்ப்பாணத்தில் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த என்னிடத்தில் இவ்விடயம் தொடர்பாக கவனத்தில் கொண்டுவரப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துமாறும் பணித்திருந்தார்.

அதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினேன். அதற்கமைவாக இன்று மாலையளவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலான ஐந்து பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு தற்காலிகமாக பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மரணமடைந்த இரு இளம் பல்கலை மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற வகையில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் தொடர்ந்தும் உரிய முறையில் இடம்பெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதோடு வடபகுதி மக்கள் குழப்பமடையாது இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

http://www.virakesari.lk/article/12624

Link to comment
Share on other sites

பல்கலை மாணவர்கள் மரணம் ; சுவாமிநாதன் வடக்கு மக்களிடம் கோரிக்கை

 

 

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து பக்கச்சார்பற்ற நடவடிக்கைகள் உடன் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வடபகுதி மக்கள் குழப்பமடைய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

sdf1.jpg

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

யாழ்.நகரை அண்மித்த கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு அருகாமையில் மோட்டார்சைக்கிளில் சென்ற இரு பல்கலைக்கழக மாணவர்கள் விபத்துக்குள்ளாகி மரணமானதாக தெரிவிக்கப்பட்ட போதும் அவர்களது மரணம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருந்தன. 

யாழ்ப்பாணத்தில் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த என்னிடத்தில் இவ்விடயம் தொடர்பாக கவனத்தில் கொண்டுவரப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துமாறும் பணித்திருந்தார். 

அதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினேன். அதற்கமைவாக இன்று மாலையளவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலான ஐந்து பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு தற்காலிகமாக பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மரணமடைந்த இரு இளம் பல்கலை மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற வகையில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் தொடர்ந்தும் உரிய முறையில் இடம்பெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதோடு வடபகுதி மக்கள் குழப்பமடையாது இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

http://www.virakesari.lk/article/12624

வெடிச்சத்தம் கேட்டதது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மாணவர்களை படுகொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த  ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

img_3229
யாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்‌ஷன் (வயது 24) உயிரிழந்தமை பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திலையே என உடற்கூற்று பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.
 
அதனை அடுத்து குற்றப்புலனாய்வு துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து நேற்றைய தினம் இரவு வீதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான ஐந்து பொலிசார் அடங்கிய குழு கைது செய்யப்பட்டு உள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது ,
 
கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் நேற்றைய தினம் இரவு நடைபெற்ற சம்பவத்தில் இரு பல்கலைகழக மாணவர்கள் உயிரிழந்து இருந்தனர்.
img_3212
மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் தரப்பு ஆரம்பத்தில் தெரிவிக்கையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதுண்டதிலையே மாணவர்கள் மரணமடைந்துள்ளார்கள் என தெரிவித்தனர்.
 
வெடிசத்தம் கேட்டது.
 
குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெரிவிக்கையில் , நேற்று நள்ளிரவு  துப்பாக்கி வேட்டு சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து பாரிய சத்தம் கேட்டது. நாம் உடனே வெளியே ஓடிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மதிலுடன் மோதுண்டு இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தார்கள். என தெரிவித்தார்.
 
விபத்து நடந்து சில நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்தனர்.
 
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசித்த  இன்னுமொருவர்  தெரிவிக்கையில் ,  நள்ளிரவு பெரிய சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்தேன். மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதுண்ட நிலையில் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.
 
நான் அந்த இடத்திற்கு செல்ல பொலிசாரும் அந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு வந்த பொலிசார் நடந்தே வந்து இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்தே இருவரையும், வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தேன்.
img_3216
 
சம்பவ இடத்தில் அதிகாலை பொலிசார் குவிப்பு.
 
அதிகாலை வேளை அவ்விடத்தால் சென்றவர் தெரிவிக்கையில் , நான் அதிகாலை 4 மணியளவில் இந்த வீதியால் சென்ற போது வீதி முழுவதும் பெருமளவான பொலிசார் நின்று இருந்தார்கள்.
 
அதனை பார்த்த போது யுத்த காலத்தில் சுற்றி வளைப்புக்காக பொலிஸ் இராணுவம் அதிகாலையில் குவிக்கப்படுவது போன்று குவிக்கப்பட்டு இருந்தார்கள்.
 
நான் அந்த இடத்தில் நிற்கவில்லை. அதன் பின்னர் நான் திரும்பி  வீட்ட  போகும்  போது தான்  விபத்து நடந்தது தெரியும். என தெரிவித்தார்.
 
அதிகாலை வேளை குவிக்கப்பட்ட பொலிசார் தடயங்களை அழித்தார்களா ?
 
காலை வேளை கொக்குவில் சந்திக்கு வந்த ஒருவர் தெரிவிக்கையில் , நான் காலை 7 மணியளவில் சந்தைக்கு வந்த வேளை பெருமளவான பொலிசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் சம்பவ இடத்தில் தேடுதல்  நடத்தியமையை நான் அவதானித்தேன். அவர்கள் எதனை தேடினார்கள் என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை.
img_3217
 
CCTV கமராவில் பதிவான காட்சி. 
 
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த CCTV கமராவில் 11.45 மணியளவில் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் அந்த கடையை தாண்டி செல்கின்றது. அதன் பின்னர் இரு நிமிடத்தில் 11.47 மணியளவில் மழையங்கி அணிந்தவாறு பொலிஸ் குழு ஒன்று அந்த கடையை கடந்து நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
 
மதியம் 12 மணிக்கு பின்னரே மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.
 
சம்பவம் நேற்றிரவு நடைபெற்ற போதிலும் , இன்றைய தினம் மதியம் 12 மணி வரையில் சம்பவ இடத்தில் பொலிசார் நிலைநிறுத்தப்பட்டு இருந்தனர். 12 மணிக்கு பின்னரே பொலிசார் மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.
img_3257
 
பிரேத பரிசோதனை அறிக்கை.
 
உயிரிழந்த மாணவர்களின் உடல் கூற்று பரிசோதனையின் போது சுலக்ஷன் எனும் மாணவனின் உடலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.  அதனை அடுத்து மேற்கொள்ளபப்ட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் கொண்ட பொலிஸ் குழு கைது செய்யபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
img_3224
img_3229img_3238img_3251  img_3277img_3281
 

You may also like

http://globaltamilnews.net/archives/3940

Link to comment
Share on other sites

உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் - மாவை
உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் - மாவை

யாழில் துப்பாக்கிச்சூட்டில் பலியாகிய மாணவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா அறிக்கை ஒன்றின் மூலம்  

தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில், “யாழ்.பல்கலைக்கழக மாணவர் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய செய்தி எமக்கு பேரதிர்ச்சியை தந்திருக்கிறது. நான் யாழ்.மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களுடனும், அங்கு குவிந்திருந்த மாணவரிடமும் பேசி விசாரித்திருந்தேன். குற்றமிழைத்தவர்கள், கொலைக்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாணவர்கள் வற்புறுத்தினார்கள். நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி வழங்கினேன்.

மாணவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய ஏதுக்கள் எதுமில்லை. பொலிஸாரின் செயலை கடுமையாக கண்டிக்கின்றோம். இத்தகைய செய ல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும். எதிர்க்க வேண்டும். பல்கலை மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மாணவர்கள் கொலைக்கு நம்பகத்தன்மை வாய்ந்த சட்டபூர்வமான விசாரணை நடத்தப்பட வேண்டும்”. என மாவை சேனாதிராஜா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/news/19239

யாழ். பல்கலை மாணவர் மீதான துப்பாக்கிச்சூடு வன்மையாக கண்டிக்கிறார் சரவணபவன் எம்.பி-நீதியான விசாரணைக்கும் வலியுறுத்து
யாழ். பல்கலை மாணவர் மீதான துப்பாக்கிச்சூடு வன்மையாக கண்டிக்கிறார்  சரவணபவன் எம்.பி-நீதியான விசாரணைக்கும் வலியுறுத்து

யாழ்.  பல்கலை மாணவர் மீதான துப்பாக்கிச் சூட்டின் பின்னணி முழுமையாக ஆராயப்பட வேண்டும். நடைபெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். உரிய நடவடிக்களை விரைந்து எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரையும், ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் கோரு கின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். கிளிநொச்சி மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புத் தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை யிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்ப ட்டுள்ளதாவது

கொக்குவில், குளப்பிட்டியில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உந்துருளியில் சென்ற போது விபத்தில் உயிரிழந்ததாக முதலில் தகவல்கள் வெளிவந்தன. பின்பு நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் ஒருவர் சுடப்பட்டதால் இறந்ததாகவும் அதனால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மற்றையவர் இறந்ததாகவும் தெரியவந்துள்ளது. இவர்கள் உந்து ருளியில் சென்ற போது பொலிஸார் மறித்ததாகவும் அவர்கள் நிற்காமல் சென்ற காரண த்தினால் சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மறிக்கும் போது அவர்கள் செல்லும் வாகனத்தின் இலக்கத்தை அடையாளம் கண்டு பின்பு அவர்களை கைது செய்வது சிரமமான காரியம் அல்ல.

மேலும் பல இடங்களிலும் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை அடையாளம் காண்பதும் இயலுமான காரியமே. அப்படியான நிலையில் அவர்கள் சுடப்பட்டிருக்கின்றார்கள் என்றால் அது மக்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படு த்தியுள்ளது. ஒரு வாகனம் மறிக்கும் போது நிற்காமல் சென்றால் அதற்கு எதிராக தவிர்க்க முடியாத உயர்ந்தபட்ச நடவடிக்கையாக ரயருக்கு சுடுவதே வழமையான விடயமாகவுள்ளது. ஆனால் இங்கு மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது முக்கியமாக ஒரு முறை மீறிய நடவடிக்கை என்றே கருத வேண்டியுள்ளது.

இது தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் 5 பொலிஸார் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை நாம் வரவேற்கும் வேளையில் இது தொடர்பான விசாரணைகள் நேர்மையாகவும் நியாயபூர்வ மாகவும் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

போர் முடிந்த பின்பு படுகொலைகள் கொள்ளைகள் கிறிஸ்பூத அச்சுறுத்தல்கள் என பல விதங்களிலும் தமிழ் மக்கள் மீது கொடுமைகள் இழைக்கப்பட்டன. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுமில்லை. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவும் இல்லை. இந்த விடயங்களில் பொலிஸார் ஒரு அக்கறையற்ற போக்கே கடைப்பிடித்தார்கள் என்று மக்கள் நம்பினார்கள். ஆட்சி மாற்றத்தின் பின்னர் அத்தகைய அத்துமீறல்கள் இல்லாமல் போய்விட்ட போதிலும் வாள் வெட்டுச் சம்பவங்கள் மக்களின் இயல்புவாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது. பகிரங்க இடங்களில் வாள்களுடன் வந்து காடைத்தனம் புரிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட போதும் அதனைத் தடுப்பதற்கு பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

சில சம்பவங்களில் சிலர் கைது செய்யப்பட்டாலும் கூட அத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தே வந்தன. சில நாள்கள் அவை இல்லாமல் போன போதும் மீண்டும் அத்தகைய வாள் வெட்டுச் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளன. அதைத் தடுப்பதற்கு சிறப்பு பொலிஸ் பிரிவு அமைத்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அதன் பலன் அப்பாவி மாணவர்கள் வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்படுவதுதானா என்ற கேள்வி எழுகின்றது. அடிப்படையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்கு பின்னால் நின்ற சூத்திரதாரிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவுமில்லை. வெளிப்படுத்தப்படவுமில்லை. அதன் காரணமாகவே சிலர் தண்டிக்கப்பட்டாலும் கூட அவை தொடர்ந்து இடம்பெற்றன என்பதை சகலரும் உணர்ந்து கொள்ள முடியும்.

இன்று அவற்றைக் கட்டுப்படுத்துகின்றோம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மேல் பொலிஸ் பாய்கின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டன என்று ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் முகமாக இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதா எனக் கேட்க வேண்டியுள்ளது. இம் மாணவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் சென்றார்கள் என்றும் அதை தடுத்து நிறுத்தவே சுடப்பட்டார்கள் என்று காரணம் சொல்லும் முகமாக இதை மேற்கொண்டிருக்கலாமோ என்று ஒரு கேள்வியும் எழுகின்றது.

மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கப் போகின்றது என்று ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி சில சக்திகள் முனைந்து வருவதை நாம் அறிவோம். எனவே சம்பவம் தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது மட்டுமன்றி இத்தகைய துப்பாக்கிப் பிரயோகத்தின் நோக்கம் என்ன இதன் பின்னணி என்ன என்பது ஆழ்ந்து ஆராயப்பட வேண்டும். அப்படியில்லாமல் குற்றவாளிகள் மாத்திரம் இனங் காணப்பட்டாலோ அல்லது அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டாலோ தொடர்ந்தும் எமது மக்கள் நிம்மதியற்ற அச்சுறுத்தலுக்கு உள்ளான ஒரு வாழ்வையே எதிர்நோக்க வேண்டிவரும்.

எனவே சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் உரிய நடவடிக்கைகளை உரிய முறையில் எடுக்க வேண்டும் என்று பொலிஸ்மா அதிபரையும், பிரதமர், ஜனாதிபதி ஆகி யோரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம் - என்று அந்த அறிக்கையில் உள்ளது.

http://onlineuthayan.com/news/19241

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பொலிசார் கடமைக்கு செல்லும் போது தோட்டாக்கள் எண்ணி கொடுக்கப்படும்.மீண்டும் நிலையம் திரும்பும் போது எண்ணி வாங்கப்படும்.யாருடைய துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததென்று சுலபமாக கண்டுபிடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2016´ம் ஆண்டு முடிவதற்குள் வரும், சம்சும்  கும்பலின்  தீர்வு இது தான்.

நாம்... மௌனித்த, துப்பாக்கிகளை.... மீண்டும் தூக்க வைக்க, 
இந்த... அரை வேக்காட்டு தமிழ் அரசியல் வியாதிகள்,
30 வருட  போர் முடிந்த, இரத்தம் காய முன்னமே.... சிங்கக் கொடி காட்டி....  
தமிழன், என்றும்... சிங்களவனுக்கு அடிமைத்தனத்தை காட்டிய,  ராசதந்திரி சம்பந்தன்.

இன்று.... ஸ்ரீலங்கா  பாராளுமன்றத்தில், ஒரு பிரதமருக்கு... சமமான பதவியில் இருந்தும்....
எமக்கு குரல் கொடுக்காமல், நியூஸ் பேப்பர் படித்தும், மிகுதி நேரத்தை... கொட்டாவி விட்டும்,

சம்பந்தனும், அவரின் அல்லக்கை சுமந்திரனும்  தான்.... பொறுப்பாளி.

அதற்கும் மேலாக...  ஒன்றுக்கும் உதவாத.... இவங்களை, பாராளுமன்றத்துக்கு அனுப்பின... 
தமிழ் மக்களும்..... இதில் பொறுப்பு, ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியவர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள அரசபயங்கரவாதத்தின் தமிழின அழிப்பின் தொடர்ச்சி. சிங்கள அரச பயங்கரவாதத்தை சர்வதேச விசாரணைக்கும் நீதிக்கும் முன் நிறுத்தாமல் பாதுகாத்து வருபவர்களே இத்தனை மனித உரிமை மீறல்களுக்கும்.. மனிதப் படுகொலைகளுக்கும் காரணம். 

இறந்த பின் இந்த மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய அதி உச்ச நீதி என்ன என்பதை மிஸ்டர் மாவை விபரிப்பாரா...?! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

இது சிங்கள அரசபயங்கரவாதத்தின் தமிழின அழிப்பின் தொடர்ச்சி. சிங்கள அரச பயங்கரவாதத்தை சர்வதேச விசாரணைக்கும் நீதிக்கும் முன் நிறுத்தாமல் பாதுகாத்து வருபவர்களே இத்தனை மனித உரிமை மீறல்களுக்கும்.. மனிதப் படுகொலைகளுக்கும் காரணம். 

இறந்த பின் இந்த மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய அதி உச்ச நீதி என்ன என்பதை மிஸ்டர் மாவை விபரிப்பாரா...?! 

நேற்றைய தினம்

இந்திய அரசால் யாழ்ப்பாண வைத்தியசாலையில் கொலைகள் நடாத்தப்பட்ட நாள்

இதை திசை திருப்பவும்

அடுத்தவரும் காலங்களில் அது பற்றி தமிழர்கள் அதிகம் பேசாதிருக்கவும்

இக்கொலைகள் நடாத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் இருக்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilkingdom.com/2016/10/422_11.html?m=1

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு ஒரு சாதாரண சம்பவம்!- பாதுகாப்பு செயலாளர்

 
 
dig3141052_23032016_kaa_cmy_2.jpg
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு தெற்கில் சாதாரணமாக இடம்பெறும் சம்பவம் போன்றதே இது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
 
இன்று பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் விபத்து என கூறப்பட்டிருந்த நிலையில், ஒரு மாணவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளமை பின்னர் தெரியவந்தது.
 
அதனை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிசார் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர்,
 
இலங்கையின் தெற்கிலும் இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகள் இடம்பெறுகின்றன எனவும், இவ்வாறான விபத்துகள் இடம்பெறுகின்றன எனவும் கூறியுள்ளார்.
 
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது.

 

Link to comment
Share on other sites

5 hours ago, nedukkalapoovan said:

இது சிங்கள அரசபயங்கரவாதத்தின் தமிழின அழிப்பின் தொடர்ச்சி. சிங்கள அரச பயங்கரவாதத்தை சர்வதேச விசாரணைக்கும் நீதிக்கும் முன் நிறுத்தாமல் பாதுகாத்து வருபவர்களே இத்தனை மனித உரிமை மீறல்களுக்கும்.. மனிதப் படுகொலைகளுக்கும் காரணம். 

  1. எது சர்வதேச விசாரணை? ஐக்கிய நாடுகள் செயலாளர் அமைத்த தாருஸ்மன் தலைமயிலான குழு விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்து விட்டது. இது சரவதேச விசாரணை இல்லையா?
  2. சர்வதேச விசாரணை அடையாளம் காணும் குற்றவாளிகளை எந்த நாட்டு போலிஸ் கைது செய்யும்? இலங்கையில் இருக்கும் அவர்களை ஐக்கிய நாடுகள் போலிஸ் இலங்கையில் அனுமதியோ ஆதரவோ இல்லாமல் வலுக்கட்டாயமாக போய் கைது செய்ய முடியுமா? 
  3. இவ்வாறான விசாரணைகளுக்கும் போலிஸ் படை முற்றுகைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆகும் செலவுகளுக்கு யார் பணம் கொடுப்பார்கள்?

இறந்த பின் இந்த மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய அதி உச்ச நீதி என்ன என்பதை மிஸ்டர் மாவை விபரிப்பாரா...?! 

மாவையிடம் கேட்பதற்கு முதல் நீங்கள் எதிர்பார்க்கும் அதி உச்ச நீதி என்ன?

 

Link to comment
Share on other sites

திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவர்களுக்கான இராணுவத்துக்கு தீர்வு வழங்கப்பட்டு விட்டது. தீவுப்பகுதியில் பலாத்காரப்படுத்தி கொல்லப்பட்ட மாணவிக்கு தீர்வு வழங்கப்பட்டு விட்டது. நம்புங்கள் இவ்விரு மாணவர்களை கொன்றவர்களுக்கும் தீர்வு வழங்கப்படும். இதை நம்பவும் ஒரு கூட்டம் உள்ளது. இருந்து பாருங்கள் ஒரு கண்துடைப்புக்கு ஒரு விசாரணை.  மாறி மாறி அறிக்கைகள் வரும்.. ஒரு மாதத்தில் எல்லாம் அடங்கி விடும். மற்றொரு சம்பவம் தானாக நடக்கும் அல்லது நடாத்தப்பட்டு இச்சம்பவம் மறைக்கப்படும்.

உண்மையை சொன்னால் தமிழரை கொன்ற சிங்களவர் தொடர்ந்து ஏதாவது வழியில் கொன்று கொண்டே இருப்பார்கள். புற்று நோய் போன்ற இனவாதிகளை எந்த ஒரு காரணியும் மாற்றாது. கடந்த 60 வருடங்களில் தமிழர்கள் பல வடிவங்களை எடுத்தும் (சிங்களவரோடு ஒத்து வாழ்ந்தும், பிரியப்போகிறோம் என்று கேட்ட போதும்) சிங்களவரின் தமிழர் மீதான தாக்குதல்கள், கொலைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. சிலர் சொல்லாம் ஒன்று தானே என. ஒன்று போதும்  அடுத்ததை தொடர.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:
  1. எது சர்வதேச விசாரணை? ஐக்கிய நாடுகள் செயலாளர் அமைத்த தாருஸ்மன் தலைமயிலான குழு விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்து விட்டது. இது சரவதேச விசாரணை இல்லையா?
  2. சர்வதேச விசாரணை அடையாளம் காணும் குற்றவாளிகளை எந்த நாட்டு போலிஸ் கைது செய்யும்? இலங்கையில் இருக்கும் அவர்களை ஐக்கிய நாடுகள் போலிஸ் இலங்கையில் அனுமதியோ ஆதரவோ இல்லாமல் வலுக்கட்டாயமாக போய் கைது செய்ய முடியுமா? 
  3. இவ்வாறான விசாரணைகளுக்கும் போலிஸ் படை முற்றுகைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆகும் செலவுகளுக்கு யார் பணம் கொடுப்பார்கள்?

மாவையிடம் கேட்பதற்கு முதல் நீங்கள் எதிர்பார்க்கும் அதி உச்ச நீதி என்ன?

 

சர்வதேச விசாரணைக்கு முஸ்தீபான ஒரு முன்னக ஆய்வறிக்கை தான் தாருஸ்மன் அறிக்கையே தவிர.. அது களத்தில் முன்னெடுக்கப்பட்ட.. சர்வதேச விசாரணை அறிக்கை கிடையாது. இதை தான் சுமந்திரன் என்ற வெறுவாயும் சப்பிக்கிட்டு திரியுது.

70,000 மக்களை பலியெடுத்த இன அழிப்பை மூடி மறைக்க வெளிக்கிட்டு தான்.. இப்போ எழுக தமிழின் பின்னணியில் இயங்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களையும் பலியிடல் மூலம் அடக்கி விடலாம் என்ற பாடத்தை சிங்களவனுக்கு எம்மவர்களே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணைகளை சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றினூடு கொண்டு செல்ல முடியும் ஒரு சர்வதேச விசாரணை களத்தில் நடத்தப்பட்டிருந்தால். அதன் மூலம் போர்க்குற்றவாளிகளின் வெளிநாட்டுப் பயணங்களின் போது அவர்களை சர்வதேச பொலிஸ் கைது செய்ய முடியும். இன்னும்.. ஐநா விதிகளை பின்பற்றும் நாடுகளைக் கொண்டு இவர்களை கைது செய்ய முடியும். சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி தண்டித்திருக்கலாம்.

அப்படி தண்டிக்கப்பட்டிருந்தால்.. அல்லது அதற்கான முன்னெடுப்புக்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருந்தால்.. இன்று இந்தப் படுகொலைகளை சர்வதேச பிரசன்னத்தினூடாக தடுத்திருக்கலாம். தமிழ் மக்களுக்கு என்று ஒரு பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கி இருக்கலாம்.

ஆனால்.. இனப்படுகொலையாளனையே.. புரிந்துணர்வாளனாக்கி.. அவனின் அடக்குமுறைகளை.. நல்லாட்சி என்று வர்ணித்து.. நல்லிணக்கம் என்று பொய் சொல்லி.. இன்று.. மக்களை இன்னும் இன்னும் இனப்படுகொலைக்கும்.. அச்சுறுத்தலுக்குள்ளும் வைத்திருக்க முனையும்... சம் சும் மாவை கும்பலின் கொலைகார அரசியல் தான் இந்தப் படுகொலைக்கு முக்கிய காரணம்.

மாவை போன்ற கெடுகுடிகள்.. அன்று தான் மக்களின் இழப்பை தடுக்க வக்கற்று இருந்தன என்றால்.. இன்னும்.. அந்த மக்களின் இழப்புக்கு நீதி கிடைப்பதை தடுத்து.. இன்னும் இன்னும் இன அழிப்பாளனுக்கு இன அழிப்பை தொடர இடமளித்துக் கொண்டு.. இறப்புக்கு அதி உச்ச நீதி தேடும் கோழைத்தனமான அறிக்கைகளை  எல்லாம்.. தான் நாம் கண்டிக்கிறோம். மாவை சம்.. சும் கும்பல் அரசியலை விட்டு போனாலே.. எல்லாம் சரியான திசைக்குப் போய் இருக்கும்.

இந்த பிடாரிகள்.. இன்னும் எவ்வளவு இளைஞர்களை காவு கொடுக்கப் போகின்றனவோ தெரியாது.. தாம் சிங்களவனோடு நல்லவர்கள் என்று ஒட்டி இருக்க. 

அமெரிக்காவில் கறுப்பர்களை சுட்டுத்தள்ளிய போது கறுப்பர்கள்.. சாதாரணம் என்று இருக்கவில்லை. பதிலுக்கு அமெரிக்க காவல்துறை மீது சுட்டார்கள். அப்போது தான் உலகம் கறுப்பர்களின் இழப்பின் வலியை  உணரத்தொடங்கியது. ஒபாமாவும் கடும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். 

இங்கு.. நாம் இதனை இத்தனை ஆண்டுகள் அனுபவித்தும்.. இன்னும் இன அழிப்பை சகிக்கனும் என்று எதிர்பார்ப்பது போல் மடமை எதுவும் இல்லை. மாறா அதனை சர்வதேச விசாரணை வலயத்துக்குள் கொண்டு வந்து இனப்படுகொலையாளர்கள் தண்டிக்கப்பட காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க சர்வதேசத்தை நோக்கி அழுத்தங்கள் பிரயோக்கிக்கப்பட வேண்டும். மாறாக இனப்படுகொலையை தடுக்க மீண்டும்.. வன்முறையில் கையில் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும்.. சிங்களவனை நல்லவனாக்கிக் காட்டுவதனூடாக நாம் இனப்படுகொலையை ஒருபோதும் தடுக்க முடியாது. 

இது எழுக தமிழில் மக்கள் எழுச்சியை அடக்க மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான இனப்படுகொலையின் தொடர்ச்சி. இது சாதாரண சம்பவமே அல்ல. இந்தப் புரிந்துணர்வில்லாதவர்களோடு.. சிங்களவனின் சூழ்சிகளுக்கு துணைபோவர்களோடு.. நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. மாவை போன்ற மதில் மேல் பூனைகள் தான் எம் மக்களின் பல வலிகளின் தொடர்ச்சிக்கு முக்கிய காரணம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் குழந்தைப் போராளிகளை படையில் சேர்த்தார்கள் என்று குற்றஞ்சாடி;டிய சர்வதேசம் இந்த மாணவப் படுகொலைகளுக்கு என்ன பதில்வைத்திருக்கிறது. .2016  ஆம் முடிவுக்குள் வரவிருக்கும் தீர்வின் இலட்சணம்  இதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

http://www.tamilkingdom.com/2016/10/422_11.html?m=1

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு ஒரு சாதாரண சம்பவம்!- பாதுகாப்பு செயலாளர்

 
 
dig3141052_23032016_kaa_cmy_2.jpg
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு தெற்கில் சாதாரணமாக இடம்பெறும் சம்பவம் போன்றதே இது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
 
 

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது.

 

அதாவது இதிலயும் தேசிய நல்லிணக்கம் காண்கிறார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிணத்தின் மீதும் அரசியல் செய்பவர்கள் யார் ..? அதை தெளிவாக தெரிந்தாலே போதும் தமிழன் தனிநாடு அடைய வேண்டும்  /நேரிடும் .. ஈழதோழர்களுகு தேவையான உதவிகளை ... தமிழநாடு அரசு செய்து தர வேண்டும்

டிஸ்கி :
அடி உதைக்கு   பயந்து  அண்ணன் தம்பி பாசம் விட்டு போய்டுமா ? என்ன  ?

தமிழர்கள் என்றால் தெருவிலே பெத்து போட்டு போயிவிட்டார்களா?

 

Link to comment
Share on other sites

21 hours ago, nedukkalapoovan said:

 ஒரு சர்வதேச விசாரணை களத்தில் நடத்தப்பட்டிருந்தால். அதன் மூலம் போர்க்குற்றவாளிகளின் வெளிநாட்டுப் பயணங்களின் போது அவர்களை சர்வதேச பொலிஸ் கைது செய்ய முடியும்.

சர்வதேச விசாரணை என்று நீங்கள் சொல்வது ரோம் ஒப்பந்தத்தின் படி சர்வதேச நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையா? இந்த விசாரணை மூலம் தான் சொலபின் மிலேசொவிச்சை குற்றவாளியாக கண்டு நெதர்லாந்தில் சிறையில் அடைத்தார்கள்.

இந்த நீதிமன்றம் ரோம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நாடுகளையே கட்டுப்படுத்தும். அமேரிக்கா இந்த நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளது ரோம் ஒப்பத்ததில் கைச்சாத்திட வில்லை. இலங்கையும் கைச்சாத்திடவில்லை. நவநீதம் பிள்ளை இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக ஒரு காலத்தில் இருந்தவர். நவநீதம் பிள்ளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளராக இருந்த காலத்தில் இலங்கைக்கு எதிரான விசாரணையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் ரோம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத இலங்கையை பற்றிய  விசாரணையை அமெரிக்க ஆதரவின்றி எப்படி சர்வதேச நீதிமன்றத்தில் இடம்பெற செய்ய முடியும் என்று சொல்வீர்களா? நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.