Jump to content

மீன் குருமா செய்வது எப்படி

Recommended Posts

மீன் குருமா செய்வது எப்படி

மீன் குழம்பு செய்து அலுத்து போனவர்கள் சற்று வித்தியாசமாக மீன் குருமா செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான மீன் குருமா செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

(வாழை மீன் அல்லது நெத்திலி மீன் மட்டும்)
வாழை மீன் - 3
பொட்டுக் கடலை - 2 டீஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 20 (நீளமாக நறுக்கவும்)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
நாட்டுத் தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
புளிப்பு மாங்காய் - 1
கொத்தமல்லி - ஒரு கையளவு

செய்முறை :

* வாழைமீனை (கழுவி) துண்டு, துண்டாக நறுக்கவும்.

* தேங்காய் சோம்பு, பொட்டு கடலையை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* மாங்காயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் சூடானதும் விட்டு சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்த தேங்காய் கலவை, சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு மீன், மாங்காய் போட்டு நன்றாக கொதி வந்து மீன் வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான மீன் குருமா ரெடி.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நன்றாகத்தான் உள்ளது ..., சுவைக்கவும் நன்றாக இருக்கும்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

பார்க்க நன்றாகத்தான் உள்ளது ..., சுவைக்கவும் நன்றாக இருக்கும்....! tw_blush:

வாழை மீன் என்றால் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

வாழை மீன் என்றால் ??

வாழைமீனின் முள்ளை நீங்கள் சொல்லுகின்றீர்கள் என நினைக்கின்றேன் . அது தப்பு நாதம் , வாழைமீனை நேராக வெட்டினால் அது தப்பு. அந்த மீனை அதன் முள்ளின் பாடு பார்த்து சாய்வாக வெட்டிட வேண்டும். அப்போது முள்ளு செய்கூலி சேதாரமுமின்றி தனியாக பிரிந்து வரும். வாழைமீன் ஆனது சொதிக்கும், அரைத்த குழம்புக்கும் நல்ல ருசியாய் இருக்கும். சொல்லி வேல இல்ல...!  tw_blush:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

இல்லை சுவி....

வாழை மீன் என்பது அதே பெயரிலா, நம்மூரில் அழைக்கப்படுகிறது?

தமிழகத்தில் வஞ்சிரம் என்பது நம்மூரில் வேறு பெயரில்...

விளை மீனுக்கும் வேறு பெயர். சில மீன்களை சிங்களப் பெயரிலே அழைக்கிறோம்... தலபத்து, கொடுவா.. தமிழகத்தில், தமிழில், வேறு பெயர் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைமீன் சீலா போல் நீளமாய் , அதைவிட மினுங்களாய் இருக்கும்.

Afficher l'image d'origine

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் எனக்கேன் நன்றி சொல்லுறார்.நான் ஒண்ணுமே பண்ணலியே நாதம்ஸ்:grin:

Link to comment
Share on other sites

31 minutes ago, நந்தன் said:

இந்தாள் எனக்கேன் நன்றி சொல்லுறார்.நான் ஒண்ணுமே பண்ணலியே நாதம்ஸ்:grin:

அவர் இன்று இரவு மீன் குருமா போடுற அவசரத்தில் நவீனனை,  நந்தன் என்று விட்டார்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நவீனன் said:

அவர் இன்று இரவு மீன் குருமா போடுற அவசரத்தில் நவீனனை,  நந்தன் என்று விட்டார்..:grin:

எதுக்கும் வீட்டுக்காரம்மாவ கேட்டுட்டு போடுங்கோtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2016 at 4:30 PM, நந்தன் said:

இந்தாள் எனக்கேன் நன்றி சொல்லுறார்.நான் ஒண்ணுமே பண்ணலியே நாதம்ஸ்:grin:

நீங்கள் ஒண்ணுமே பண்ணாமல் இருந்ததுக்குத்தான் அந்த நன்றி...!  tw_blush:

நீங்கள் வாழைமீனுக்கு  மும்தாஜின் படத்தைப் போட்டிருந்தால் என்ன ஆகும்....! :unsure:  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.