Jump to content

இந்தியா எதிர் நியூசீலாந்து ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

ஒருநாள் தொடரிலும் ஆவேசமாகவே விளையாடுவோம்: அஜிங்கிய ரஹானே உறுதி

 

 
ரஹானே. | படம்: விவேக் பெந்த்ரே.
ரஹானே. | படம்: விவேக் பெந்த்ரே.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைபிடித்த அதே ஆவேசமான அணுகுமுறையையே ஒருநாள் தொடரிலும் கடைபிடிப்போம் என்று அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தரம்சலாவில் அவர் கூறியதாவது:

கட்டுக்கோப்பு மிக முக்கியமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆவேசமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஒருநாள் தொடரிலும் அதே அணுகுமுறையிலேயே ஆடுவோம். தீவிர கிரிக்கெட்டை எங்கள் பலத்திற்குத் தக்கவாறு ஆடுவோம். எதிரணியினரின் பலம், பலவீனத்தில் கவனம் செலுத்தப்போவதில்லை.

டெஸ்ட் தொடருக்குப் பிறகே ஒருநாள் தொடரை ஆவலுடன் நான் எதிர்நோக்கினேன். இங்கும் புதிதாகவே தொடங்க வேண்டும். உத்வேகம் முக்கியமானது. உத்வேகம் பெற முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

தொழில்பூர்வ கிரிக்கெட் ஆட்டக்காரர்களாக டெஸ்டிலிருந்து ஒருநாள் ஆட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது கடினமல்ல. இது மனரீதியாக மாற்றி அமைத்துக் கொள்வதுதான். சில சூழ்நிலைகளையும், காரணிகளையும் எப்படி எதிர்கொள்வது என்பதுதான் விஷயம்.

அணியில் புதிய வீரர்கள் வந்திருப்பது கண்டு உற்சாகமடைகிறேன். அனைவரும் நல்ல நிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, புதுரத்தங்கள் அணிக்கு ஆற்றலை அதிகப்படுத்தும். இதில் சிலர் இந்தியா ஏ தொடரிலும் சிலர் ரஞ்சி கோப்பையிலும் நன்றாக ஆடியிருக்கின்றனர்.

உயர்நிலை கிரிக்கெட்டில் இத்தகைய வீரர்களுக்கு வாய்ப்பு மற்றும் நம்பிக்கை வழங்குவதே இத்தகைய முயற்சிகளின் நோக்கம்.

http://tamil.thehindu.com/sports/ஒருநாள்-தொடரிலும்-ஆவேசமாகவே-விளையாடுவோம்-அஜிங்கிய-ரஹானே-உறுதி/article9220360.ece

Link to comment
Share on other sites

இந்தியா-நியூஸிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய ஆதிக்கம் தொடருமா?

 

 
கேன் வில்லியம்சன், தோனி. | கோப்புப் படம்.
கேன் வில்லியம்சன், தோனி. | கோப்புப் படம்.

டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 3-0 என்று ஒயிட்வாஷ் செய்யப்பட்டாலும் ஒருநாள் போட்டிகளில் நியூஸிலாந்து அணி ஒரு தனிப்பட்ட சக்தியாக விளங்குகிறது.

இரு அணிகளுக்குமிடையுமான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (16) தரம்சலாவில் தொடங்குகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி 5 போட்டிகளில் நியூஸிலாந்து அணி 4-ல் வென்றுள்ளது ஒரு போட்டி ஜடேஜாவின் அபார பேட்டிங்கினால் ‘டை’ ஆனது.

இது வரை இரு அணிகளும் தங்களுக்கிடையே 93 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன, இதில் இந்திய அணி 46 போட்டிகளிலும் நியூஸிலாந்து அணி 41 போட்டிகளிலும் வென்றுள்ளன, 5 போட்டிகள் முடிவு தெரியாதது, ஒரு ஆட்டம் டை.

இந்தியாவும் நியூஸிலாந்தும் 1975 உலகக்கோப்பையில் ஒருநாள் போட்டியில் முதன் முதலாக மோதின, அப்போது 60 ஓவர்கள் கொண்ட போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் நியூஸிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. கிளென் டர்னர் 114 ரன்கள் எடுத்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 230 ரன்களை எடுத்தது, அபிட் அலி அதிக பட்சமாக 70 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து 1.1 ஓவர் மீதமிருக்கையில் இலக்கை துரத்தி வெற்றி கண்டது. அடுத்த 3 போட்டிகளிலும் நியூஸிலாந்து வெற்றி கண்டது.

அதன் பிறகு 1980-81-ல் பென்சன் ஹெட்ஜஸ் கோப்பை ஒருநாள் முத்தரப்பு தொடரில் ஒரு போட்டியில் ரிச்சர்ட் ஹேட்லி 32 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 162 ரன்களுக்குச் சுருண்டது, சந்தீப் பாட்டீல் மட்டுமே அபாரமாக ஆடி அதிகபட்சமாக 39 ரன்களை எடுத்தார். 163 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கிய நியூஸிலாந்து அணி ராஜர் பின்னியின் (4/41) ஸ்விங்கிற்கு 157 ரன்களுக்கு மடிந்து அதிர்ச்சித் தோல்வி கண்டது. இதே தொடரில் இன்னொரு போட்டியிலும் நியூஸி.யை இந்தியா அணி வீழ்த்தியது, அப்போதும் பந்து வீச்சு அபாரமாக அமைந்தது. 1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற போது நியூஸிலாந்து அணியுடன் மோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

நியூஸிலாந்துக்கு எதிராக 3-வது வெற்றிக்காக 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று, அது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளாகும், ஆஸ்திரேலியாவில் 7 நாடுகளுக்கிடையே நடைபெற்ற மினி உலகக்கோப்பையாகும் அது. இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் கேப்டனாக இருந்தார். இதில் முக்கியப் போட்டி ஒன்றில் நியூஸிலாந்து அணி 206 ரன்களுக்குச் சுருண்டது, மதன்லால் 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ரவி சாஸ்திரி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள். இலக்கை விரட்டிய இந்திய அணி 43.3 ஓவர்களில் நியூஸிலாந்தை வீழ்த்தியது, வெங்சர்க்கார் தனது ராஜ கவர்டிரைவ்கள் மூலம் 63 ரன்களையும் கபில்தேவ் ரிச்சர்ட் ஹேட்லியை தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் அடித்து 54 அதிரடி ரன்களையும் எடுக்க இருவரும் 105 ரன்கள் கூட்டணி அமைத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பிறகு இறுதிப் போட்டியில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் அதிரடியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது.

கடைசியாக நியூஸிலாந்துடன் ஆடிய 5 போட்டிகளில் நியூஸிலாந்து 4-ல் வென்று ஒரு போட்டி டை ஆனது. இந்த டை ஆன போட்டி அருமையான போட்டியாகும். நியூஸிலாந்து அணி மார்டின் கப்தில் (111) கேன் வில்லியம்சன் (65) ஆகியோரின் ஆட்டத்தினால் 314 ரன்களைக் குவிக்க, இந்திய அணி தவண், ரோஹித் சர்மா மூலம் நல்ல தொடக்கம் கண்டது, ஆனால் நியூஸிலாந்து அபார பந்து வீச்சின் மூலம் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 18-வது ஒவரில் இந்தியா 79/4 என்று இருந்தது. ரெய்னா தோனி இணைந்து 65 ரன்கள் சேர்த்தனர். ரெய்னா 31 ரன்களில் ஆட்டமிழந்தார், கேப்டன் தோனி அருமையான அரைசதம் எடுக்க ஸ்கோர் 184ஆக இருந்த போது தோனி ஆட்டமிழந்தார். அப்போது ஜடேஜா, அஸ்வின் நியூஸிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்தனர். 9.1 ஓவர்களில் 85 ரன்களை இருவரும் சேர்த்தனர். அஸ்வின் 65 ரன்களில் வெளியேறினார். புவனேஷ் குமார், ஷமி விரைவில் வெளியேற ஜடேஜா வசம் ஆட்டமிருந்தது. 47.5 ஓவர்களில் இந்தியா 286/9 என்று இருந்தது. 2.1 ஓவர்கள் மீதமிருக்கையில் இந்திய அணி 28 ரன்கள் எடுக்க வேண்டும். ஜடேஜா மைதானம் நெடுக பந்தை விரட்டினார். ஆனால் கடைசியில் டை-தான் செய்ய முடிந்தது. ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கடைசியாக இரு அணிகளும் ஜனவரி 31, 2014-ல் வெலிங்டனில் ஆடிய போட்டியில் நியூஸிலாந்து 303 ரன்களை குவிக்க இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

இந்நிலையில் இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட விறுவிறுப்பான ஒருநாள் தொடரில் சந்திக்கின்றன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெற்ற தோல்வியை தோனியும் இந்திய அணியினரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

நியூஸிலாந்து அணியில் ஒருநாள் போட்டிகளில் மார்டின் கப்தில் தொடக்கத்தில் அதிரடி முறையில் ஆடி வருகிறார். ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன், கோரி ஆண்டர்சன், ஜேம்ஸ் நீஷம், வாட்லிங், ரோங்கி என்று நியூஸி இப்போதும் வலுவாகத் திகழ்கிறது. பவுலிங்கில் டிரெண்ட் போல்ட், டக் பிரேஸ்வெல், ஹென்றி, நீஷம், சாண்ட்னர், இஷ் சோதி, சவுதி உள்ளனர்.

இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பது நியூஸிலாந்து அணிக்கு சாதகமானது. எனவே அமித் மிஸ்ரா, அக்சர் படேல் இந்திய ஸ்பின் வரிசையில் முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி: தோனி (கேப்டன்), பும்ரா, கேதர் ஜாதவ், விராட் கோலி, தவல் குல்கர்னி, மந்தீப் சிங், அமித் மிஸ்ரா, மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அஜிங்கிய ரஹானே, ரோஹித் சர்மா, ரெய்னா, ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ்.

நியூஸிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், டிரெண்ட் போல்ட், டக் பிரேஸ்வெல், ஆண்டன் டெவ்சிச், மார்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லேதம், ஜேம்ஸ் நீஷம், லுக் ரோங்கி, சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, ராஸ் டெய்லர், பி.ஜே.வாட்லிங்.


போட்டி அட்டவணை:

அனைத்து போட்டிகளும் பகலிரவு போட்டிகள்; ஆட்டம் மதியம் 1.30 மணிக்குத் தொடங்கும்.

முதல் போட்டி அக்.16, தரம்சலா

2-வது போட்டி அக்.20, டெல்லி

3-வது போட்டி அக்.23, மொஹாலி

4-வது போட்டி அக்.26, ராஞ்சி

5-வது போட்டி. அக்.29, விசாகப்பட்டனம்.

http://tamil.thehindu.com/sports/இந்தியாநியூஸிலாந்து-ஒருநாள்-தொடர்-இந்திய-ஆதிக்கம்-தொடருமா/article9219941.ece

Link to comment
Share on other sites

கோலியின் ஆலோசனையை கேட்கிறேன்-டோனி ஓப்பன் டாக்

600_19114.jpg

இந்தியா-நியூஸிலாந்து இடையே முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலாவில் நாளை நடக்கிறது. இந்நிலையில் இந்திய ஒரு நாள் அணி கேப்டன் தோனி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒவ்வொரு சீனியர் ப்ளேயர்களுமே, வளர்ந்து வரும் ப்ளேயர்களை வழி நடத்துவது அவசியம். அதுவும் கேப்டன், துணை கேப்டன் என்று வரும் போது பொறுப்புகள் அதிகம். அணி நிர்வாகம் தனக்கான மாற்று வீரரை கண்டறிந்துள்ளது (பெயரை குறிப்பிடவில்லை).


ஒரு நாள் போட்டிகளில் நான் கோலியின் ஆலோசனைகளை அதிகம் கேட்டு வருகிறேன். நீங்கள் போட்டியை உற்று கவனத்திருந்தால் தெரியும், நான் போட்டி குறித்து அதிகம் விவாதிப்பது கோலியுடன் தான். நியூஸிலாந்து தொடரில் நான் பேட்டிங் ஆர்டரில் சற்று முன்னரே வருவதற்கு வாய்ப்புள்ளது" என்றார்

http://www.vikatan.com/news/sports/69747-dhoni-says-considering-kohlis-advice-more.art

Link to comment
Share on other sites

கோஹ்லி பாஸ்... தோனி ரிசல்ட் என்ன? #firstODIpreview

indian%20team%20practice%20%283%29_17346


இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 3-0 என டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது. அத்துடன் டெஸ்ட் ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் -1 இடத்தைப் பிடித்தது. 

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது. இது இந்தியாவின் 900வது ஒருநாள் போட்டி. இதில் இந்தியா தோனி தலைமையில் களமிறங்குகிறது.  கோஹ்லி தலைமையிலான அணி டெஸ்டில், நம்பர் -1 இடத்தைப் பிடித்ததால், தற்போது தோனி மீது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் தரவரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்திலும், நியூஸிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த தொடரை 4-1 என வென்றால் மட்டுமே இந்தியா மூன்றாவது இடம் பிடிக்க முடியும். வரலாறு மற்றும் புள்ளி விவரங்கள் அனைத்தும் இந்தியாவுக்கே சாதகமாக இருப்பதால், தொடரை வெல்வதில் சிரமம் இருக்காது. 

இதற்கு முன் 1988, 1995, 1999, 2010ல் இந்தியாவில் நடந்த இரு அணிகளுக்கு இடையிலான நான்கு தொடர்களிலும் நியூஸிலாந்து தோல்வியே அடைந்துள்ளது. கடைசியாக 2010ல் நடந்த தொடரில், இந்திய அணி ரெகுலர் வீரர்கள் இல்லாமல் கவுதம் கம்பீர் தலைமையில் களமிறங்கி 5-0 என தொடரை முழுமையாக வென்றது. ஆனால், பல அணிகள் பங்கேற்கும் தொடர்களில் 18-11 என நியூஸிலாந்தின் கையே ஓங்கி உள்ளது.

இரு அணிகளும் இதுவரை 93 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 46, நியூஸிலாந்து 41  போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஐந்து போட்டிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை. ஒரு போட்டி ‛டை’ ஆனது. கடைசியாக இரு அணிகளும் மோதிய ஐந்தில் நான்கு போட்டிகளில் நியூஸிலாந்து வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டை ஆனது. 

தோனி மீண்டும் அணிக்குத் திரும்பி இருப்பது ஒருபுறம் உற்சாகம் அளிக்கும். ஆனால், எதிர்கால தொடரை கருத்தில் கொண்டு ரவிச்சந்திர அஷ்வின், ரவீந்திர ஜடஜோ, முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா அல்ரெடி காயம் காரணமாக ஓய்வில் உள்ளனர்.  அஷ்வின், ஜடேஜா இருவரும் இல்லாதது நிச்சயம் தோனிக்கு தலைவலியாக இருக்கும். ஏனெனில் சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில் அஷ்வின் மட்டுமே 27 விக்கெட்டுகளை அள்ளியிருந்தார். 

indian%20team%20practice%20%282%29_17419


இந்த பவுலர்களுக்குப் பதிலாக ஜயந்த் யாதவ், அக்ஷர் படேல், தவல் குல்கர்னி வாய்ப்பு பெற்றுள்ளனர். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா ‛ஏ’ தொடரில் ஹர்டிக் பாண்ட்யா பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி நடக்க உள்ள இங்கிலாந்து ஆடுகளத்துக்கு ஏற்ப ஒரு வேகப்பந்து ஆல்ரவுண்டர் தேவை என்பதை மனதில் வைத்து அவர் பெயர் டிக் செய்யப்பட்டிருக்கலாம். அசத்தல் ஃபார்மில் இருக்கும் மணிஷ் பாண்டேவை சேர்த்தது நல்ல விஷயம். 

சாம்பியன்ஸ் லீக் இலக்கு

பேட்டிங்கைப் பொறுத்தவரை விராட் கோஹ்லி, டெஸ்ட்டில் காட்டிய ஆட்டத்தை ஒன்டேயிலும் தொடர்வார். இது தோனிக்குத்தான் நெருக்கடியாக இருக்கும். ஏனெனில் தோனி 2015ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 92 ரன்கள் அடித்ததே சமீபத்திய அவரது பெஸ்ட் ஆட்டம்.  பெர்சனல் பெர்ஃபார்மன்ஸ் தவிர்த்து, வைரஸ் காய்ச்சல் காரணமாக சுரேஷ் ரெய்னா, கட்டை விரல் காயம் காரணமாக ஷிகர் தவன் விலகியிருப்பதால், பேட்டிங் லைன் அப்பை தீர்மானிக்கும் சிக்கலும் தோனிக்கு  உள்ளது.

சீனியர் வீரர்களுக்கு பதிலாக அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் தங்களை நிரூபிக்க, இந்த தொடர் ஒரு நல்ல களம்.  ஏனெனில் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடக்க இருப்பதால், அதற்குள் ஒரு நல்ல டீமை ஃபார்ம் செய்வது அவசியம். தற்போது அணியில் இருப்பவர்களில் ஜயந்த் யாதவ் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் சர்வதேச அரங்கில் அடியெடுத்து வைத்தவர்கள். அதேநேரத்தில், சீனியர் வீரர்களும் போதிய அளவு விளையாடவில்லை என்பதும்  கவனிக்க வேண்டிய விஷயம். 2015 உலக கோப்பைக்குப் பின் இந்தியா 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஏழு வீரர்கள் மட்டுமே 12க்கும் மேற்பட்ட போட்டிகளில்  பங்கேற்றுள்ளனர். மற்ற வீரர்கள் அடிக்கடி ஓய்வில் இருந்துள்ளனர். 

அதேபோல, இன்னொரு புள்ளி விவரம் இந்திய அணிக்கு எதிராகவே உள்ளது. உலக கோப்பைக்குப் பின் இந்தியா பங்கேற்ற 19ல் ஒன்பது போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக பங்கேற்ற ஐந்தில் மூன்று தொடர்களில் தோல்வி. ஜிம்பாப்வேக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். அதனால், சொந்த மண்ணில் விளையாடுகிறோம், டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்து விட்டோம் என, மெதப்புடன் இருக்க முடியாது. 

டெஸ்ட் தொடரை இழந்ததால், ஒருநாள் தொடரை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி.  மிரட்டல் பவுலர் டிம் சவுதி, கோரி  ஆண்டர்சன் வருகை அந்த அணிக்கு பலம் சேர்த்துள்ளது. 

அணிகள் விவரம்:

இந்தியா: தோனி (கேப்டன்), விராட் கோஹ்லி, ரகானே, ரோகித் ஷர்மா, மணிஷ் பாண்டே, ஜயந்த் யாதவ், அக்ஷர் படேல், ஜஸ்ப்ரிட் பும்ரா, கேடர் ஜாதவ், மன்தீப் சிங், அமித் மிஷ்ரா, தவல் குல்கர்னி, உமேஷ் யாதவ், ஹர்டிக் பாண்ட்யா.


நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், டிரென்ட் போல்ட், பிரேஸ்வெல், ஆன்டன் டேவ்சிச், மார்டின் கப்டில், டாம் லாதம், மாட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம், லூக் ரோஞ்சி, மிச்செல் சான்ட்னர், சோதி, ராஸ் டெய்லர், வாட்லிங், டிம் சவுதி. 

இடம்: தர்மசாலா
நேரம்: மதியம் 1:30
டிவி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 

http://www.vikatan.com/news/sports/69732-virat-kohli-passes-the-test-what-will-be-dhoni-result.art

Link to comment
Share on other sites

நியூஸிலாந்துடனான முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்களால் இந்தியா வெற்றி
2016-10-16 20:06:44

நியூஸிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.


தர்மசாலா நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 43.5 ஓவர்களில் 190 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. டொம் லதாம் 98 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களைப் பெற்றார்.


இந்திய அணியின் சார்பில் அறிமுக வீரர் ஹர்திக் பாண்டியா 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அமித் மிஷ்ரா 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

19982dhoni-and-kohli.jpg


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி33.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது. 

 

19982_team-india.jpg

 

விராத் கோஹ்லி 81 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களைக் குவித்தார்.  அஜின்கியா ரெஹானே 34 பந்துகளில் 33 ஓட்டங்களையும் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி 24 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

http://www.metronews.lk/article.php?category=sports&news=19982

Link to comment
Share on other sites

விட்டே கொடுக்காமல் விரட்டிய இந்தியா! அசத்தல் வெற்றி!  #FivePointReport.


India%201_20226.jpg

தர்மசாலாவில் இன்று நடந்த போட்டியில் நியூசிலாந்து அணியை ஊதித்தள்ளியது இந்தியா. நியூசிலாந்து நிர்ணயித்த 190 ரன்களை எளிதாக விரட்டிப்பிடித்தது.

இன்றைய போட்டியில் நடந்த ஐந்து முக்கியமான விஷயங்கள் இங்கே! 

1. 900-வது  ஒருதின போட்டியில் ஆடுகிறது இந்தியா. இந்த மேட்சில் இந்தியா சார்பாக முதல்  முறையாக சர்வதேச ஒருதின போட்டி விளையாடும் வாய்ப்பு பெற்றார் ஹர்திக் பாண்டியா. குப்தில், கோரே ஆண்டர்சன், ரோஞ்சி என மூன்று அதிரடி பேட்ஸ்மேன்களை பெவிலியன் அனுப்பி் ஹர்திக் முதல் ஒருநாள் போட்டியிலேயே கவனிக்க வைத்திருக்கிறார். 

2. கேன் வில்லயம்சனின் மோசமான ஃபார்ம் ஒருதின தொடரிலும் தொடர்கிறது. டெஸ்ட் தொடரில் ஆடிய இரண்டு போட்டியலும் அஷ்வினின் பந்துக்கு விடை தெரியாமல் வீழ்ந்தார். இதையடுத்து உமேஷ் யாதவின் பந்து வீச்சில் இன்று சரிந்தால் வில்லியம்சன். நியூசி கேப்டனின் இந்த மோசமான ஆட்டம் அந்த அணியின் கூடாரத்தை கவலைப்பட வைத்திருக்கிறது. 

india3_20269.jpg

3.  18.4 ஓவரில் வெறும் 65/7 என தடுமாறியது நியூசிலாந்து. ஆனால் டாம் லாதம் அற்புதமான ஒரு இன்னிங்க்ஸ் ஆடினார். காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் விலகியிருந்த பந்து வீச்சாளர் சவுத்தீ இன்றைய போட்டியில் களமிறங்கினார். இந்திய பவுலர்களுக்கு கடும் தலைவலியாக அமைந்தது சவுத்தி. அதிரடியாக ஆடிய அவர் 45 பந்தில் 55 ரன் எடுத்தார்.ஒன்பதாவது விக்கெட்டுக்கு லாதம் - சவுத்தீ இணை 71 ரன்களை சேர்த்தது. லாதம் 98 பந்தில் 79 ரன் அடித்து நாட் அவுட்டாக இருந்தார்.

4. ரோகித் ஷர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கினார் ரஹானே. வழக்கத்துக்கு மாறாக ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடினார் ரஹானே. பிரேஸ்வெல்லின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார் ரஹானே. ரோகித் 14 ரன்னும், ரஹானே 33 ரன்னும் எடுத்தனர். 

5. சேஸிங் என்றாலே வெறி பிடித்து ஆடும் கோலி இந்த போட்டியிலும் தனது பணியை செவ்வனே செய்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் கொளுத்தி எடுத்தார். கோலி. கிடைக்கிற கேப்பில் எல்லாம் பவுண்டரியாக விளாசித்தள்ளினார். தோனியை ரன் அவுட்டாக்கி விட்டாலும் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார் கோலி. 81 பந்தில் 85 ரன்கள் கோலி விளாசியதில் 33.1 ஓவரிலேயே 194 ரன்கள் அடித்து மேட்ச்சை முடித்தது இந்தியா. 

வாழ்த்துகள்  டீம் இண்டியா!

http://www.vikatan.com/news/sports/69777-india-wins-the-first-odi-in-style.art

Link to comment
Share on other sites



இந்தியா, நியூசிலாந்து ஒ.நா.ச.போ தொடர் முன்னோட்டம்
 
 

-ச.விமல்

article_1476627090-Inxuvfex7r.jpg

இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர், டெஸ்ட் தொடருக்கு பின்னதாக ஆரம்பிக்கவுள்ளது. டெஸ்ட் தொடர், இந்திய அணிக்கு வெற்றியினை கொடுத்த போதும் இலகுவான வெற்றி எனக் கூறிவிட முடியாது. இந்திய அணி போராடியே வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

ஆனால், ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் வித்தியாசமாக அமையும். ஆடுகள தன்மைகள், இங்கே முழுமை ஆதிக்கத்தை செலுத்தாது. எனவே நியூசிலாந்து அணியும் ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரை விட்டுக் கொடுக்காது. பலமான பந்து வீச்சு நிச்சயம் இந்திய அணிக்கு சவாலாக அமையும்.  இரு அணிகளும் ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் சமபல அணிகள் என வர்ணிக்க முடியும். உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி அணி நியூசிலாந்து. அரையிறுதிப்போட்டி அணி இந்தியா. ஆக, அடுத்தடுத்த அணிகள் எனக்கூற முடியும். 

தரப்படுத்தல்களில் மூன்றாமிடத்தில்  நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடனும், இந்திய அணி 110 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் உள்ளன. எனவே இங்கேயும் அடுத்தடுத்த அணிகள். எனவே மூன்றாமிடத்தை உறுதி செய்யும் தொடராக இது அமையவுள்ள போதும் இரண்டாமிட வாய்ப்புகள் நியூசிலாந்து  அணிக்கு உள்ளது. நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால், அவர்கள், தென்னாபிரிக்கா அணியை பின்தள்ளி இரண்டாமிடத்தைக் கைப்பற்ற முடியும்.  இந்தியா அணி, நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நியூசிலாந்து அணியை முந்த முடியும். இல்லாவிட்டால் நியூசிலாந்து அணி தனது மூன்றாமிடத்தை தொடர முடியும்.

2016ஆம் ஆண்டு இந்திய அணிக்கு ஒரு நாள் சர்வதேசப்போட்டிகள் குறைவான ஒரு ஆண்டு. அவுஸ்திரேலியா அணியுடனான தொடரில் 1-4 என்ற தொடர் தோல்வி. சிம்பாப்வே தொடரில் 3-0 என்ற வெற்றி. ஆக போட்டிகள் குறைவு. ஆனால் நல்ல ஆண்டு எனக்கூற முடியாது. கடந்த வருடத்தில், 23 போட்டிகளில், 13 போட்டிகளில் வெற்றி பெற்று 9 போட்டிகளில் தோல்வியைசச்‌ சந்தித்துள்ளது. ஒரு போட்டி கை விடப்பட்டது. இந்த போட்டிகளில், தென்னாபிரிக்கா தொடர் மட்டுமே இந்தியாவில் நடைபெற்றது. இதிலும் இந்தியா 2-3 என தோல்வியை சந்தித்தது.

எனவே இந்திய அணிக்கு, இந்தத் தொடர் தங்கள், ஒரு நாள் சர்வதேசப்போட்டித் தொடரின் ஆதிக்கத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள ஏதுவாக இருக்குமென நம்பலாம். அணியின் தலைவர் தோணி, இப்போது தலைமைத்துவதிலிருந்து விலகலாம் என்ற பேச்சுக்கள் எழ இந்த முடிவுகளும் காரணம். இந்தத் தொடரை அவரும் குறி வைப்பார் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி வழங்க.

இந்தியா அணி, நியூசிலாந்து   அணிக்கெதிராக இதுவரை 93 போட்டிகளில் மோதியுள்ளது. இவற்றில் 46 வெற்றிகள், 41 தோல்விகள். ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. ஐந்து போட்டிகள் கைவிடப்பட்டன. நியூசிலாந்து அணி 1987ஆம் ஆண்டு உலககிண்ண தொடருக்காகவே முதலில் இந்தியாவுக்கு ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் விளையாடச் சென்றது. பின்னர் 1988ஆம் ஆண்டு, முதலில் இந்தியாவுக்கு 4 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாட சென்றது. நான்கு போட்டிகளையும் வென்றது இந்திய அணி.

2010 ஆண்டுக்கு பின்னர் இந்தியாவுக்கு செல்கின்றது நியூசிலாந்து அணி. 2011ஆம் ஆண்டு உலககிண்ண தொடருக்கு பின்னர் சென்றிருந்தது. அப்போதிருந்த அணிகளிலும் பார்க்க பலமான நிலையில் தற்போதுள்ள நியூசிலாந்து அணியுள்ளது. எனவே நியூசிலாந்து அணியின் கடந்த காலத்தை வைத்து இந்தத் தொடரை கணிப்பிட முடியாது. டெஸ்ட் தொடரில் அவர்கள் தோல்வியை சந்தித்தாலும் அவர்கள் காட்டி வரும் திறமை வெளிப்பாடுகள் ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறக்கூடியதாக உள்ளது.

நியூசிலாந்து அணி, இந்த வருடம் 7 போட்டிகளில், நியூசிலாந்தில் மட்டுமே விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணியிடம் ஒரு தோல்வி. அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் தலா இரு வெற்றிகள். இலங்கை அணியுடன் ஒரு வெற்றி. ஒரு போட்டி கைவிடப்பட்டது. ஆகவே வெளிநாட்டுத் தொடர்கள் இவர்களுக்கு இல்லை. இந்த வருடத்தின் முதல் சோதனை என்றும் கூற முடியும்.

கடந்த வருடத்தில் 32 போட்டிகளில் நியூசிலாந்து அணி விளையாடியது. 21 போட்டிகள், இவற்றில் வெற்றி. 10 போட்டிகளில் தோல்வி. ஒரு போட்டி கைவிடப்பட்டது. ஆகச் சிறந்த ஒரு வருடம். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது நியூசிலாந்து அணி மிகப்பலமான அணி என வர்ணிக்க முடியும். அவர்களின் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த இரண்டு வருடங்களிலேயே மிகுந்த உச்ச நிலையில் உள்ளனர் என வர்ணிக்கப்படுகின்றது. எனவே இவர்கள் இந்தியாவில் வைத்து ஏதாவது ஒரு மாற்றத்தை செய்வார்கள் என நம்பலாம். ஆனால் இவர்களது முக்கிய வீரர்கள் சிலரின் உபாதை டெஸ்ட் தொடரில் இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளுக்கு சில வீரர்கள் மீண்டு வந்துள்ளமை இவர்களுக்கு பலமாக அமையும் என நம்பலாம்.

இந்தியா அணி தனது முக்கியமூன்று  பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வை வழங்கி விளையாடுகிறது. அஷ்வின், ஜடேஜா, ஷமி  ஆகியோருக்கு முதல் மூன்று  போட்டிகளிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.  முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா அணி வெற்றி பெறுமானால் மூவரும் தொடர் முழுவதும் ஓய்வை பெறுவார்கள். இந்த தொடரின் பின்னர் 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய இங்கிலாந்து தொடர் ஆரம்பிக்கவுள்ளது.எனவேதான் இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்குள் மீண்டும் சுரேஷ் ரெய்னா உள்வாங்கப்பட்டுள்ளார். துடுப்பாட்ட வரிசையில் ஷீகர் தவான் அணியில் இல்லாமையினால், அஜிங்கையா ரஹானே ஆரம்ப வீரராக களமிறங்க வாய்ப்புகள் உள்ளன. மத்திய வரிசையில், மனிஷ் பாண்டே இடத்தைப் பெறுவார் என நம்பலாம். அவுஸ்திரேலியாவில் வைத்து அடித்த சதம் அவருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது. பந்து வீச்சுப் பக்கமாக இந்திய அணிக்கு சிக்கல்கள் உள்ளன. பந்து வீச்சு வரிசை பலமானது என கூற முடியாத நிலை உள்ளது.

ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் முழு நேர வேகப்பந்து வீச்சாளர்கள். ஜடேஜா இல்லாத நிலையில் ஹர்டிக் பாண்ட்யா, சகலதுறை வீரராக அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார். சுழற்பந்து வீச்சாளர்களில் அமித் மிஷ்ரா, அக்ஸர் பட்டேல் ஆகியோர் விளையாடுவாரக்ள். சுரேஷ் ரெய்னா சகலதுறை வீராகவே விளையாடுவார். சில புதிய வீரர்கள் அணிக்குள் உள் வாங்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான விளையாடும் வாய்ப்புகள் குறைவு எனக்கூற முடியும்.

இந்தத் தொடர் மஹேந்திர சிங் டோணி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு முக்கியமானதாக அமையவுள்ளது. தோனிக்கு அண்மைக்கால தொடர்கள் துடுப்பாட்டத்தில் சிறப்பாக அமையவில்லை. ஓட்டங்களை குவிக்க வேண்டும். மீண்டும் சிறப்பாக முடித்து வைப்பவர் என்ற பெயரை பெற வேண்டும். இவர் மீது அண்மைக்காலமாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கோலி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக, தலைவராக செயற்பட்டு வருகின்றமை இவரின் தலைமைத்துவத்துக்கு அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தத் தொடரில் இவற்றை இவர் உடைத்தெறிவார் என நம்பலாம்.

சுரேஷ் ரெய்னா மீண்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். சரியாக மீண்டும் ஒரு வருடத்தின் பின்னர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கவுள்ளார். இவர் இந்தத் தொடரில் ஓட்டங்களை பெறத் தவறும் பட்சத்தில், இவருக்கு அணியில் இடம் கேள்விக்குறியாக மாறும். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில், ரஹானேக்கு இந்தத் தொடர் முக்கியமானதாக அமையவுள்ளது. இவருக்கு அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் அபார போர்மில் உள்ள இவர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக, ஓட்டங்களை குவித்தால் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக நிரந்தர இடம் பிடிப்பார். 

அணி விபரம்

இந்திய அணி

மஹேந்திர சிங் டோகணி  (தலைவர் ), ரோஹித் ஷர்மா, அஜிங்கையா ரஹானே, விராட் கோலி, மனிஷ்  பாண்டே, சுரேஷ் ரெய்னா, ஹர்டிக்  பாண்ட்யா , அக்ஸர் பட்டேல் , ஜெயந்த் யாதவ், அமித் மிஷ்ரா, ஜஸ்பிரிட் பும்ரா, தவால் குல்கர்னி, உமேஷ் யாதவ், மந்தீப் சிங், கேதார் ஜாதவ்

நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்ஸன் (தலைவர்), கொரே அன்டர்சன், ட்ரெண்ட் போல்ட், டவ் பிரேஸ்வெல், அன்டன் டேவிச், மார்ட்டின் கப்தில், மற் ஹென்றி, டொம்  லதாம், ஜேம்ஸ் நீஷம், லூக் ரொங்கி, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதி, றொஸ் டெய்லர், பிரட்லி வட்லிங்

போட்டி அட்டவணை

ஒக்டோபர் 16 - தரம்சாலா - பிற்பகல் 1.30

ஒக்டோபர் 20 - டெல்லி  - பிற்பகல் 1.30

ஒக்டோபர் 23 - மொஹாலி  - பிற்பகல் 1.30

ஒக்டோபர் 26 - ராஞ்சி - பிற்பகல் 1.30

ஒக்டோபர் 29 - விசாகப்பட்டினம்  - பிற்பகல் 1.30

http://www.tamilmirror.lk/184081/இந-த-ய-ந-ய-ச-ல-ந-த-ஒ-ந-ச-ப-த-டர-ம-ன-ன-ட-டம-

Link to comment
Share on other sites

2 வது ஒருநாள் போட்டியிலும் ரெய்னா இல்லை

received_10210750928038852-696x398.jpeg

2 வது ஒருநாள் போட்டியிலும் ரெய்னா இல்லை.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா , காய்ச்சல் காரணமாக 2 வது ஒருநாள் போட்டியிலும் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுக்கெதிராக விளையாடிவரும் நியூசிலாந்து அணியுடனான கடந்த ஒருநாள் போட்டியின் போது காய்ச்சல் காரணமாக சுரேஷ் ரெய்னா விளையாடி இருக்கவில்லை.

இந்தநிலையில் 2 வது போட்டி டெல்லி மைதானத்தில் நாளைய தினத்தில் இடம்பெறவுள்ள நிலையில், நாளைய போட்டியிலும் ரெய்னா விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.reeshinternational.com/vilaiyattu/கிரிக்கெட்-செய்திகள்/2-வது-ஒருநாள்-போட்டியிலும-2/

Link to comment
Share on other sites

டெல்லி ஒருநாள்: 9,000 ரன்களை எட்டுவாரா தோனி?

 

 
தோனி | கோப்புப் படம்.
தோனி | கோப்புப் படம்.

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) பிற்பகலில் நடைபெறுகிறது.

வெற்றி முனைப்பில் இந்திய அணி இந்த ஆட்டத்தை சந்திக்கும் நிலையில், இப்போட்டியில் கேப்டன் தோனி 61 ரன்களை சேர்த்து 9 ஆயிரம் ரன்களை எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. தற்போது அதே ஆதிக்கம் ஒருநாள் போட்டி தொடரில் தோனியின் தலைமையின் கீழ் தொடர்கிறது. வெற்றியின் தருணங்களை இந்திய வீரர்கள் ஒருநாள் போட்டி தொடரிலும் சுமந்த வண்ணம் உள்ளனர்.

5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஹர்திக் பாண்டியா தனது அறிமுக ஆட்டத்திலேயே பந்து வீச்சில் அசாத்திய திறனை வெளிப்படுத்தினார்.

கடைசி டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்த விராட் கோலி ஒருநாள் போட்டி தொடரிலும் தனது ஆதிக்கத்தை தொடர்கிறார். முதல் ஒருநாள் போட்டியில் 85 ரன்கள் விளாசிய அவர் தனது சொந்த மைதானமான பெரோஷா கோட்லாவில் மேலும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும்.

இந்திய அணியில் இன்று எவ்வித மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை. வெற்றி கூட்டணியை அப்படியே தோனி தொடரக்கூடும். முதல் ஆட்டத்தில் தொடக்க பந்து வீச்சில் அசத்திய ஹர்திக் பாண்டியா இந்த தொடர் முழுவதும் அசத்தும் பட்சத்தில் தனது இடத்தை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள முடியும்.

முதல் ஆட்டத்தில் குறைந்த இலக்கு என்பதால் இந்திய அணிக்கு பேட்டிங்கில் அதிக நெருக்கடி இல்லை. டாப் ஆர்டர்கள் ஜொலிக்க தவறினால் நடுக்கள பேட்டிங்கில் மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தோனி ஆகியோருக்கு நெருக்கடி ஏற்படக்கூடும்.

முதல் ஆட்டத்தில் அக் ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விக்கெட்கள் வீழ்த்தவில்லையென்றாலும் ரன்குவிப்பை கட்டுப்படுத்த உதவினர். இதேபோல் பகுதி நேர பந்து வீச்சாளரான கேதார் ஜாதவ் அணிக்கு பலம் சேர்ப்பது கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது. பேட்டிங்கிலும் அவர் கைகொடுக்கும் பட்சத்தில் ரெய்னா இடத்தை நிரப்பக்கூடும். முதல் ஆட்டத்தில் சோபிக்க தவறிய அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா ஜோடி இன்று நிலைத்து நின்று விளையாட முயற்சிக்கும்.

டெஸ்ட் தொடரில் தடுமாற்றம் கண்ட நியூஸிலாந்து அணி முதல் ஒருநாள் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 65 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் டாம் லதாமும், டிம் சவுத்தியும்தான் அணியை சரிவில் இருந்து மீட்க உதவினர்.

நாளைய ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியில் மாற்றங்கள் இருக்கக்கூடும். தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில், ராஸ் டெய்லர் ஆகியோர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் இருவரும் தற்போதைய இந்திய சுற்றுப்பணத்தில் ஒரு ஆட்டத்தில் கூட 50 ரன்களை தொடவில்லை.

அவர்கள் நீக்கப்படும் பட்சத்தில் ஆன்டன் டேவ்சிச், மேட் ஹென்றி ஆகியோர் இடம்பெறக்கூடும். பெரோஷா கோட்லா மிதவேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது நியூஸிலாந்து அணிக்கு சற்று சாதகமான விஷயமாகவும் கருதப்படுகிறது.

9 ஆயிரம் ரன்கள்

தோனி ஒருநாள் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்கள் மைல் கல்லை நெருங்குகிறார். தற்போது அவர் 8,939 ரன்கள் சேர்த்துள்ளார். இன்னும் 61 ரன்களை அவர் சேர்க்கும் பட்சத்தில் 9 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.

ரெய்னா இல்லை

முதல் போட்டியில் வைரஸ் காய்ச்சல் காரணமாக விளையாடாத சுரேஷ் ரெய்னா தற்போது வலை பயிற்சியை தொடங்கியுள்ளார். எனினும் போட்டியில் விளையாடும் அளவுக்கு அவர் முழு உடல் தகுதியை பெறவில்லை என்பதால் 2-வது ஒருநாள் போட்டியிலும் அவர் களமிறங்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணிகள் விவரம்:

இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, மணீஷ் பாண்டே, ஜெயந்த் யாதவ், அக் ஷர் படேல், ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மன்தீப் சிங், அமித் மிஸ்ரா, தவல் குல்கர்னி, உமேஷ் யாதவ்.

நியூஸிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் குப்தில், ராஸ் டெய்லர், டாம் லதாம், லூக் ரான்ஜி, ஜேம்ஸ் நீஷம், கோரே ஆண்டர்சன், டக் பிரேஸ்வெல், ஆன்டன் டேவ்சிச், வாட்லிங், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட், மேட் ஹென்றி.

http://tamil.thehindu.com/sports/டெல்லி-ஒருநாள்-9000-ரன்களை-எட்டுவாரா-தோனி/article9240845.ece

Link to comment
Share on other sites

2-வது ஒருநாள் இந்தியா பவுலிங்: மார்டின் கப்தில் விக்கெட்டை இழந்தது நியூஸிலாந்து

உமேஷ் யாதவ். | படம்: ஏ.பி.
உமேஷ் யாதவ். | படம்: ஏ.பி.

டெல்லியில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணியை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளார் தோனி.

நியூஸிலாந்து அணியில் போல்ட், ஹென்றி, டேவ்சிச் களமிறக்கப்பட்டுள்ளனர், பிரேஸ்வெல், நீஷம், சோதி நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் மாற்றமில்லை. முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீச 2-வது பந்தில் மார்டின் கப்தில் பவுல்டு ஆகி ரன் எடுக்காமல் வெளியேறினார்.

உமேஷ் வீசியது அருமையான பந்து, தொடக்கத்தில் இது போன்ற பந்து விழுந்தால் எந்த பேட்ஸ்மெனும் ஆடுவது கடினமே. பந்து வந்த லைனுக்கு நேராக மட்டையை கப்தில் வைத்திருந்தாலும் லேசாக வெளியே ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்பை பதம் பார்த்தது.

நியூஸிலாந்து சற்று முன் வரை 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன், டாம் லேதம் ஆடி வருகின்றனர்.

http://tamil.thehindu.com/sports/2வது-ஒருநாள்-இந்தியா-பவுலிங்-மார்டின்-கப்தில்-விக்கெட்டை-இழந்தது-நியூஸிலாந்து/article9245081.ece?homepage=true

Link to comment
Share on other sites

கேன் வில்லியம்சன் அபார சதம்: இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 243 ரன்கள்

 

 
லாங் ஆனில் ஷாட் ஆடும் சத நாயகன் நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்சன். | படம்: சந்தீப் சக்சேனா.
லாங் ஆனில் ஷாட் ஆடும் சத நாயகன் நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்சன். | படம்: சந்தீப் சக்சேனா.

டெல்லியில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட நியூஸிலாந்து அணி வில்லியம்சன் சதத்துடன் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தத் தொடரில் நியூஸி. சார்பாக முதல் சதத்தைப் பதிவு செய்த கேன் வில்லியம்சன் 128 பந்துகளில் 14 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 118 ரன்கள் எடுத்து மிஸ்ரா பந்தில் ஆட்டமிழந்த பிறகு நியூஸிலாந்து அணி மடமடவென சரிந்தது. முன்னதாக தொடக்க வீரர் டாம் லேதம் 6 பவுண்டரிகள் 1 சிக்சர் சகிதம் 46 ரன்கள் எடுத்து கேதர் ஜாதவ் பந்தில் எல்.பி.ஆனார், ஆனால் இது அவ்வளவு திருப்திகரமாக, ஐயமற்ற தீர்ப்பாகத் தெரியவில்லை. லெக் ஸ்டம்பை அடித்திருக்கலாம் என்பது போல் தெரிந்ததே தவிர நிச்சயமாக லெக்ஸ்டம்பை அடித்திருக்கும் என்று கூற முடியவில்லை, சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மெனுக்குத் தந்திருந்தால் கூட ஒன்றும் விஷயமாகியிருக்காது.

ஜாதவ் 21-வது ஓவரில் நன்றாக செட்டில் ஆன லேதமை வீழ்த்துகிறார், ஆனால் அடுத்த ஓவர் அவருக்குத் தரப்படவில்லை. மீண்டும் 33-வது ஓவர் அவருக்குத் தரப்படுகிறது. 2 ஓவர்களில் 11 ரன்கள்தான் விட்டுக் கொடுத்து முக்கியமான விக்கெட்டையும் கைப்பற்றினார். ஆனால் 2-வது ஓவர் இல்லை. ஆம், நாளை ஜடேஜாவோ, ரெய்னாவோ வந்தால் வெளியே உட்கார வேண்டிய வீரர்! என்ன செய்வது? கடந்த போட்டியிலும் இவர் அடுத்தடுத்த பந்துகளில் 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விக்கெட் எடுத்த அடுத்த ஓவரை ஒரு பவுலருக்கு கட் செய்வதும் ஒருவேளை ‘அருமையான கேப்டன்சி’ என்றும் அழைக்கப்படலாம்.

மார்டின் கப்திலுக்கு வந்து நின்றவுடனேயே அப்படி ஒரு பந்து விழுந்தால் என்ன ஆகுமோ அதுதான் நடந்தது பவுல்டு ஆனார். அதனால்தான் பிரெண்டன் மெக்கல்லம் முதல் பந்திலிருந்தே மேலேறி வந்து ஆடுவார் காரணம், இந்தமாதிரி விளையாட முடியாத பந்து விழுந்து விடக்கூடாதே என்பதற்காகத்தான். ஆனால் கப்தில் சுத்தமாக பார்மில் இல்லை.

ராஸ் டெய்லர் உடனடியாக மட்டையும் கையுமாக நல்ல பயிற்சியாளரைச் சந்திப்பது நல்லது. 42 பந்துகளில் அவர் வேதனையுடன் ஆடி 21 ரன்களை எடுத்து திட்டமிட்ட களவியூகம் மற்றும் மிஸ்ராவின் பந்து வீச்சுக்கு பலியானார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே மிஸ்ரா வேகமாக ஒரு பந்தை வீச அதனை வாரிக்கொண்டு ஸ்லாக் ஸ்வீப் செய்தார் பந்து ரோஹித் சர்மாவிடம் எல்லையில் கேட்ச் ஆனது.

கேன் வில்லியம்சன் உமேஷ் யாதவ்வை அருமையாக மிட்விக்கெட்டில் ‘கிளாஸ் பிளிக்’ செய்து பவுண்டரியுடன் தொடங்கினார். பாண்டியாவை 3 பவுண்டரிகளும் பும்ராவை ஒரு பவுண்டரியையும் அடித்த அவர், அக்சர் படேலை மிட்விக்கெட் பவுண்டரி, லாங் ஆன் சிக்ஸ், பிறகு ஷார்ட் பிட்ச் வீசுவார் என்று தெரிந்து பின்னால் சென்று கல்லி வழியாக ஒரு பவுண்டரி என்று அந்த ஓவரில் 15 ரன்களை எடுத்தார். பிறகு மிஸ்ராவை ஸ்வீப் செய்து 56 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்சருடன் அரைசதம் கடந்தார். பிறகு அருமையாக மிஸ்ராவின் பந்தை புல்டாஸாக மாற்றி அதே ஓவரில் ஒரு பவுண்டரி விளாசினார்.

பிறகு மேலும் 5 பவுண்டரிகள் அடித்து 109 பந்துகளில் தனது 8வது சர்வதேச ஒருநாள் சதம் எடுத்தார் வில்லியம்சன். மிகவும் அருமையான ‘கிளாஸ் இன்னிங்ஸ்’.

ஆனால் இவர் அவுட் ஆன பந்தும் அருமை, இவரது ஷாட்டும் அருமை, அதனை லாங் ஆனில் நகர்ந்து பிடித்ததும் அருமை. வில்லியம்சன் மேலேறி வர மிஸ்ரா பந்தை சற்றே இழுத்து பிடிக்க அவர் நேராக ஷாட்டை ஆட ரஹானே அருமையாகப் பிடிக்க நல்ல ஒருநாள் சதம் முடிவுக்கு வந்தது. .கோரி ஆண்டர்சன் முன்னதாக 21 ரன்களில் மிஸ்ராவிடம் ஆட்டமிழந்தார்.

வில்லியம்சன் ஆட்டமிழந்த போது ஸ்கோர் 213/5 அதன் பிறகு 50 ஓவர்களில் 242/9. இந்தியத் தரப்பில் மிஸ்ரா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/கேன்-வில்லியம்சன்-அபார-சதம்-இந்திய-அணிக்கு-வெற்றி-இலக்கு-243-ரன்கள்/article9245979.ece

Link to comment
Share on other sites

இந்திய கடைநிலை வீரர்களின் அதிரடி வீணாகிப்போக ,வில்லியம்சனின் இறுதிவரையான போராட்டதுக்கு இன்று வெற்றி கிட்டியது.

FB_IMG_1476980535916.jpg

இந்திய கடைநிலை வீரர்களின் அதிரடி வீணாகிப்போக ,வில்லியம்சனின் இறுதிவரையான போராட்டதுக்கு இன்று வெற்றி கிட்டியது.

இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 2 வது ஒருநாள் போட்டி டெல்லியில் நிறைவுக்கு வந்திருகின்றது.

இறுதி வரை மிகப்பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியில் இறுதி நேரத்தில் நியூசிலாந்து அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் டோனி, முதலில் களத்தடுப்பு முடிவை மேற்கொண்டார்.

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணியின் ஆரம்பம் அமோகமாக இருந்தாலும் அதன்பின்னர் வேகமாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்கள் பெற்றது.அணித்தலைவர் கேன் வில்லியம்சன் சதம் கடந்து அசத்தினார்.

243 எனும் இலக்குடன் களமாடிய இந்திய அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வேகமாக இழந்து நெருக்கடியை சந்தித்தது. ஆயினும் டோனி,கேடார் யாடவ் ஆகியோர் நம்பிக்கை கொடுத்தனர்.இவர்களது விக்கெடுக்களும் வீழ்த்தப்பட இந்தியா சிக்கலில் தவித்தது.

ஆயினும் இந்தியாவின் கடைநிலை வீரர்கள் ஹார்டிக் பாண்ட்யா மற்றும் உமேஷ் யாடவ் ஆகியோர் அதிரடியாக 9 விக்கெட்டில் 49 ஓட்டங்களை பகிர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தினாலும் இறுதியில் வெற்றியை நெருங்கிய நிலையில், 7 பந்துகளில் 11 ஓட்டங்கள் தேவையான நிலையில் ஹார்டிக் பாண்ட்யா ஆட்டமிழந்து செல்ல இந்தியா 6 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

கடந்த போட்டியில் 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற டோனி தலைமையிலான இந்திய அணியை இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றிகொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்தது.

இந்தியத் தொடரில் நியூசிலாந்து அணிக்கு கிடைத்த முதல் வெற்றி மட்டுமல்லாமல் கும்ப்ளேயின் பயிற்றுவிப்பில் இந்திய மண்ணில் இந்தியா கண்ட முதல் தோல்வியாகவும் இந்த தோல்வி பதிவானது.

ஆட்ட நாயகன் விருது நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனுக்கு கிடைத்தது.

Cricket- India v New Zealand 2nd ODI 20 Oct 2016

Photo
Photo by: Shaun Roy/ BCCI/ SPORTZPICS

253758

Photo Tim Southee of New Zealand is congratulated for taking the return catch to get Indian captain Mahendra Singh Dhoni wicket during the 2nd One Day International between India and New Zealand held at the Feroz Shah Kotla stadium on the 20th October 2016.
Photo by: Shaun Roy/ BCCI/ SPORTZPICS Trent Boult of New Zealand celebrates getting Rohit Sharma of India wicket during the 2nd One Day International between India and New Zealand held at the Feroz Shah Kotla stadium on the 20th October 2016. Photo by: Shaun Roy/ BCCI/ SPORTZPICS Trent Boult of New Zealand celebrates getting Rohit Sharma of India wicket during the 2nd One Day International between India and New Zealand held at the Feroz Shah Kotla stadium on the 20th October 2016.
Photo by: Shaun Roy/ BCCI/ SPORTZPICS Martin Guptill of New Zealand celebrates getting Amit Mishra of India wicket during the 2nd One Day International between India and New Zealand held at the Feroz Shah Kotla stadium on the 20th October 2016. Photo by: Shaun Roy/ BCCI/ SPORTZPICS Martin Guptill of New Zealand celebrates getting Amit Mishra of India wicket during the 2nd One Day International between India and New Zealand held at the Feroz Shah Kotla stadium on the 20th October 2016.
Photo by: Shaun Roy/ BCCI/ SPORTZPICS

253769

http://www.reeshinternational.com/vilaiyattu/கிரிக்கெட்-செய்திகள்/இந்திய-கடைநிலை-வீரர்களின/

Link to comment
Share on other sites

நான் அடித்து விளையாடும் போது மறுமுனையில் விக்கெட் விழுகிறது!

 

டெல்லியில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.

நாணய சுழற்சி வென்ற இந்திய அணி தலைவர் டோனி களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து கேன் வில்லியம்சனின் சதத்தால் 242 ஓட்டங்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 18.4 வது ஓவரில் ரகானே ஆட்டமிழந்த பிறகு 5-வது விக்கெட்டுக்கு தலைவர் தோனி களமிறங்கினார். போட்டி சீராக சென்று கொண்டிருந்த நிலையில் டோனி 65 பந்துகளை சந்தித்த நிலையில் 39 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டம் இழந்தார்.

இந்நிலையில் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தோனி தான் அடித்து விளையாட நினைக்கும் பொழுதெல்லாம் மறுமுனையில் விக்கெட் விழுகிறது கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது:- நான் மேலும் சில ஷாட்களை அடித்து விளையாட விரும்பினேன். ஆனால் மறு முனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தால் அது சாத்தியமில்லை. அப்போது மேலும் நீங்கள் வலுவான பார்ட்னர் ஷிப்பை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.

இது ஒரு சாதாரண ஓட்டங்கள் தான். யாராவது ஒரு பேட்ஸ்மேன் மேலும் 15 நிமிடம் விளையாடி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்.

பந்துவீச்சின் போது வில்லியம்சனின் இரண்டு கேச்சுகளை தவறவிட்டோம். இருப்பினும் 242 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி. இவ்வாறு தெரிவித்தார்.

http://tamil.adaderana.lk/kisukisu/?p=16383

Link to comment
Share on other sites

தோல்விக்கு ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையே காரணம்: தோனி அதிருப்தி

 

 
பேட்டிங் வரிசை மீது அதிருப்தி. | தோனி. படம்: ஏ.பி.
பேட்டிங் வரிசை மீது அதிருப்தி. | தோனி. படம்: ஏ.பி.

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறிய இலக்கை விரட்ட முடியாமல் தோல்வி தழுவியதற்கு ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையே காரணம் என்கிறார் கேப்டன் தோனி.

“கூட்டணி அமையும் போதெல்லாம் விக்கெட்டுகளை சீராக இழந்து வந்தோம். இத்தகைய இலக்குகளைத் துரத்தும் போது விக்கெட்டுகளை இழக்கக் கூடாது. ஏனெனில் ரன்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடைசியில் ஓவருக்கு 6-7 ரன்கள் தேவைப்பட்டால் கூட பிரச்சினையில்லை இலக்கை எட்டிவிட முடியும். ஆனால் நம் பிரச்சினை என்னவெனில் சீராக விக்கெட்டுகளை இழந்ததுதான். 41-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தோம்.

இது ஏதோ ஒரு பேட்ஸ்மென் தோல்வி பற்றியது அல்ல. முழுதும் விக்கெட்டுகளை இழந்து வந்ததாகவே நான் கருதுகிறேன். இன்னும் 10% கூடுதலாக பங்களிப்பு செய்திருந்தால் நாம் வெற்றி பெற்றிருக்கலாம் என்று எந்த ஒரு பேட்ஸ்மெனும் கூறமுடியும். எனவே இது ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையின் பொறுப்பு. பவுலர்கள் நன்றாகச் செயல்பட்டனர்.

இந்தப் பிட்சில் பகல் வேளையில் பேட் செய்வது சிறப்பானது. ஏனெனில் ஆட்டம் செல்லச்செல்ல பிட்ச் மந்தமாக தொடங்கியது. பவுன்ஸும் சீராக இல்லை. ஓரிரண்டு விக்கெட்டுகளையும் இழக்கும் போது அது ரன் விகிதத்தை மந்தப்படுத்துகிறது. பிறகு ஒரு கூட்டணி அமைகிறது பிறகு விக்கெட்டுகள் விழுகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் சரிவிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

நம் பேட்ஸ்மென்களில் யாராவது ஒருவர் 15 நிமிடங்கள் கூடுதலாக பேட் செய்திருந்தால் நாம் வென்றிருப்போம். பவுலர்கள் நன்றாக வீசினர். தொடக்கத்தில் அவர்கள் பேட்ஸ்மென்களை கட்டுப்படுத்துவது கொஞ்சம் கடினமாக இருந்தது. அவர்கள் முறையான கிரிக்கெட் ஷாட்களை ஆடினர். கேன் வில்லியம்சனுக்கு 2 கேட்ச்களை விட்டோம் என்பதையும் மறந்து விட வேண்டாம். அதுவும் ஒரு காரணம். ஒட்டுமொத்தமாக 240-245 ரன்களில் மட்டுப்படுத்தியது மகிழ்ச்சியே. இதனை எளிதில் விரட்டியிருக்கலாம்.

ஜஸ்பிரித் பும்ரா தனது சர்வதேச கிரிக்கெட்டை ஆடத் தொடங்கியிதிலிருந்தே தான் நினைத்த போது சரளமாக யார்க்கர்களை வீசி வருபவர். இதனால்தான் அவரை நான் மிகவும் நம்பி ஆதரவளிக்கிறேன். நிறைய தருணங்களில் யார் எப்படி வீசுகிறார்கள் என்பதை வைத்து கடைசி ஓவர்களை வீசப்போவது யார் என்பதை தீர்மானிப்பேன், ஆனால் பும்ரா வந்த பிறகு எந்த சூழலிலும் கடைசி ஒவர்களை அவரிடம் கொடுக்க முடிகிறது. அவர் அப்படித்தான் பயிற்சி செய்தார். அவருடைய பந்து வீச்சு முறையும் வழக்கத்திலிருந்து மாறுபட்டது. சீராக யார்க்கர்களை வீசும் அவருக்கு பாராட்டுக்கள்” என்றார் தோனி.

http://tamil.thehindu.com/sports/தோல்விக்கு-ஒட்டுமொத்த-பேட்டிங்-வரிசையே-காரணம்-தோனி-அதிருப்தி/article9251459.ece

Link to comment
Share on other sites

தோனியின் விக்கெட்தான் திருப்பம்: நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் கருத்து

 

 
பயிற்சியில் ஈடுபட்ட கேப்டன் தோனி | படம்: பிடிஐ
பயிற்சியில் ஈடுபட்ட கேப்டன் தோனி | படம்: பிடிஐ

இந்தியாவுக்கு எதிராக டெல்லி பெரோஷா கோட்லாவில் நடை பெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுகுறித்து அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறிய தாவது:

தோனியின் விக்கெட்டை சவுத்தி கைப்பற்றியதுதான் மிகப்பெரிய தருணமாக எங்களுக்கு அமைந்தது. தோனி போன்ற ஒருவரை அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதித்தால் நிச்சயம் போட்டியை முடித்து வைத்துவிடுவார். அவர் உலகின் சிறந்த வீரர். சவுத்தி செய்த கேட்ச்தான் வெற்றி பெற பெரிய வகையில் உதவியாக இருந்தது.

இதுபோன்ற ஆடுகளத்தில் நெருக்கடி கொடுக்க வேண்டுமென் றால் பந்து வீச்சாளர்கள் சரியான திசையில் வீச வேண்டும். பனிப் பொழிவு பிரச்சினை இருந்த நிலையிலும் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல் பட்டனர். கவர் திசையிலேயே பந்துகள் அதிகம் சென்றன. இதனால் கூடுதலாக பீல்டரை நிறுத்தி ரன் சேர்ப்பதில் தோனிக்கு நெருக்கடி கொடுத்தோம்.

பந்து ஈரமான நிலையிலும் அதிக பவுண்டரிகளை செல்ல விடவில்லை. அதிர்ஷ்டவசமாக சீரான இடைவேளையில் விக்கெட் களை கைப்பற்றிய நிலையில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன் படுத்த முடிந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்பட்ட விதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

டிரென்ட் போல்ட் மிகவும் புத்தி சாலித்தனமாகவும் துல்லியமாகவும் செயல்பட்டார். 10 ஓவர்களில் 25 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்துவது என்பது எப்போதும் நடைபெறாது. இது அவரது சிறந்த பந்து வீச்சாக அமைந்தது.

இந்த ஆடுகளத்தில் ரன் சேர்க்க கடினமாகவே இருந்தது. பந்து மெதுவாகவும், தாழ்வாகவும் வந்தன. ஆனால் ஆட்டத்தின் பாதி யில் மைதானம் கைகொடுத்தது. இந்தியாவில் எப்படி பந்து வீசவேண்டும் என நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம். டிரென்ட் போல்ட் தலைமையிலான வேகப் பந்து வீச்சாளர்கள் சிறந்த திறனை வெளிப்படுத்தினர். வெற்றி பெறு வதற்கு இதுதான் ஒரே வழி. வெற்றி பெற்ற அணியில் இருப்பது மகிழ்ச்சி யாக உள்ளது. அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் இருந்து அடுத்த ஆட்டத்தில் முன்னேற்றம் இருக்க வேண்டும். சிறந்த இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதால், இன்னும் சில துறைகளில் நாங்கள் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டியதுள்ளது. இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.

http://tamil.thehindu.com/sports/தோனியின்-விக்கெட்தான்-திருப்பம்-நியூஸிலாந்து-கேப்டன்-வில்லியம்சன்-கருத்து/article9254856.ece

Link to comment
Share on other sites

3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து இன்று மோதல்

 

 
மொகாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்கள் | படம்: பிடிஐ
மொகாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்கள் | படம்: பிடிஐ

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது.

தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு டெல்லி பெரோஷா கோட்லாவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து பதிலடி கொடுத்தது. 13 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில் வெற்றிப் பெற்ற உற்சாகத்தில் இன்றைய ஆட்டத்தை நியூஸிலாந்து எதிர்கொள்கிறது. வெற்றியை தக்கவைத்துக்கொள்ள அந்த அணி மேலும் வலுவாக மோதக்கூடும். 2-வது ஒருநாள் போட்டியில் அந்த அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் கடைசிக் கட்டத் தில் சரியான திசையில் பந்துகளை வீசி நெருக்கடி கொடுத்தனர்.

அதிலும் டிரென்ட் போல்ட் அசத்தினார். பேட்ஸ்மேன்கள் குறிப்பிட்ட திசைகளில் மட்டுமே பந்தை அடிக்கும் விதத்தில் பந்துகளை வீசி அந்த இடங்களில் கூடுதல் பீல்டர்களையும் நிறுத்தி ஒன்று, இரண்டு ரன்கள் செல்வதை கூட சீராக கட்டுப்படுத்தி அசத்தினார் கேப்டன் வில்லியம்சன்.

எந்த ஒரு கட்டத்திலும் சரியான திசையில் பந்துகளை வீசி இந்திய பேட்ஸ்மேன்களை அதிக டாட் பந்துகளை எதிர்கொள்ள செய்து விட்டால் எளிதில் நெருக்கடியை ஏற்படுத்திவிடலாம் என்ற வியூகத்தை கடந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி கையாண்டது.

அதே தந்திரத்தை இன்றைய ஆட்டத்தில் அந்த அணி செயல் படுத்த முயற்சிக்கும். வில்லியம்சன், டாம் லதாம் ஆகியோர் மட்டுமே இந்தச் சுற்றுப்பயணத்தில் சீராக ரன் சேர்த்து வருகின்றனர். இவர்கள் நிலைத்து ஆடுவதுதான் பேட்டிங்கில் அணிக்கு பலம் சேர்க்கிறது.

கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த வில்லியம்சன் இன்றும் சிறப்பான ஆட்டத்தை தொடரக்கூடும். மார்ட் டின் குப்தில், ராஸ் டெய்லர், லூக் ரான்ஜி ஆகியோரும் பேட்டிங் கில் கைகொடுத்தால் இந்திய அணிக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்கலாம்

2-வது ஒருநாள் போட்டியில் இருந்து தோனி தலைமையிலான இந்திய அணி பாடம் கற்றுக் கொண்டிருக்கக்கூடும். ஆட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றால் வலுவான பார்ட்னர் ஷிப்பை கட்டமைக்க வேண்டும் என்பதை உணர்ந்து இந்திய வீரர்கள் இன்று செயல்படக்கூடும்.

இன்றைய ஆட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இரு ஆட்டங்களிலும் கிடைத்த வாய்ப்பை மணீஷ் பாண்டே பயன்படுத்த தவறினார். அதனால் அவர் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுரேஷ் ரெய்னா இன்னும் முழு உடல் தகுதியை பெறவில்லை என்பதால் இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்க வாய்ப்பில்லை என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கேதார் ஜாதவ் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் கை கொடுப்பவராக உள்ளார்.

தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே ஜோடி இரு ஆட்டங்களிலும் சொல்லும்படி யான வகையில் சிறப்பான தொடக்கம் கொடுக்கவில்லை. இருவரும் சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் பட்சத்தில் அடுத்து வரும் வீரர்கள் அதை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

விராட் கோலி கடந்த ஆட்டத் தில் லெக் ஸ்டெம்புகளுக்கு வெளியே விலகிச் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு விக் கெட்டை பறிகொடுத்தார். இன் றையப் போட்டி நடைபெறும் மொகாலி மைதானத்தில் கடந்த மார்ச் 27-ம் தேதி நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி 51 பந்தில் 82 ரன்கள் விளாசி அரை இறுதிக்கு முன்னேற உதவிப் புரிந்தார்.

இதே மைதானத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தோனி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 139 ரன்கள் விளாசியிருந் தார். அதன் பின்னர் தோனி இதுவரை சதம் அடிக்கவில்லை. அவரது கேப்டன் பதவி நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நிலையில் தோனி மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியக் கட்டாயத்தில் உள்ளார்.

பந்து வீச்சில் உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா கூட்டணி வலுவாக உள்ளது. கடைசிக் கட்டத்தில் பும்ரா தனது யார்க்கர்களால் பலம் சேர்த்து வருகிறார். இதேபோல் அமித் மிஸ்ரா, அக் ஷர் படேல் சுழல் கூட்டணியும் ரன்குவிப்பை கட்டுப்படுத்துகிறது.

வளர்ந்து வரும் ஆல்ரவுண்ட ரான ஹர்திக் பாண்டியா கடந்த ஆட்டத்தில் பேட்டிங்கின் போது கடைசிக் கட்டத்தில் நெருக்கடியை சரியாக கையாண்ட போதிலும் சாதாரண ஷாட்களை மேற்கொண்டே ரன் சேர்த்தார். இதன் விளைவு அணிக்கு எதிராகவே அமைந்தது. வரும் ஆட்டங்களில் பாண்டியா இதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். இன்றைய ஆட்டத்தில் வெற்றிப் பெற்று தொடரில் முன்னிலை வகிக்க இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

http://tamil.thehindu.com/sports/3வது-ஒருநாள்-போட்டியில்-இந்தியாநியூஸிலாந்து-இன்று-மோதல்/article9258318.ece

Link to comment
Share on other sites

#Ind vs Nz 3 வது ஒருநாள் போட்டி-இந்திய அணிக்கு 286 ஓட்டங்கள் வெற்றி இலக்கு.

FB_IMG_1477221120870.jpg

#Ind vs Nz 3 வது ஒருநாள் போட்டி-இந்திய அணிக்கு 286 ஓட்டங்கள் வெற்றி இலக்கு.

இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 3 வது ஒருநாள் போட்டி மொஹாலியில் இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் டோனி, முதலில் களத்தடுப்பு முடிவை மேற்கொண்டார்.

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து இறுதியில் 285 ஓட்டங்கள் பெற்றது.

டொம் லதம், நீஷாம் ஆகியோர் அரைச்சதம் பெற்றனர். பந்துவீச்சில் கேடார் யாடவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கடந்த இரு போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் வெற்றிபெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் இந்தியாவுக்கு 286 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

fb_img_1477221170519 fb_img_1477224038452

http://www.reeshinternational.com/vilaiyattu/கிரிக்கெட்-செய்திகள்/ind-vs-nz-3-வது-ஒருநாள்-போட்டி-இந்த/

3-வது ஒரு நாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம்
Link to comment
Share on other sites

நியூஸிலாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா

22241_21326.jpg

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி மொஹாலியில் இன்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூஸி., அணி சிறப்பாக விளையாடி 285 ரன்கள் குவித்தது. பின்னர், 286 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, கேப்டன் தோனி கோலி இந்தியாவை சரிவில் இருந்து மீட்டனர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 151 ரன்கள் பார்ட்னர் ஷிப் எடுத்தது.

22238_21567.jpg
தோனி 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  தோனி இந்த போட்டியின் போது உலக அளவில் மிக குறைந்த எண்ணிக்கையிலான போட்டிகளில் 9 ஆயிரம் ரன்கள் கடந்த 6-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அதே போல், ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையையும் முறியடித்தார். சிறப்பாக விளையாடிய கோலி சதம் அடித்தார். ஒரு நாள் போட்டிகளில் இது அவரது 26-ஆவது சதமாகும். இந்தியா 48.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

fgg_21131.jpg

http://www.vikatan.com/news/sports/70332-india-wins-newzealand-in-third-odi.art

Link to comment
Share on other sites

தொடர்ந்து அதிரடி முறையில் ஆடுவேன்: தோனி உறுதி

 

படம்.| பிடிஐ.
படம்.| பிடிஐ.

மொஹாலி போட்டியில் 4-ம் நிலையில் களமிறங்கிய தோனி அவரது ஆரம்பகால அதிரடி முறைக்கு திரும்பினார். தனது இந்த அணுகுமுறை அணி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றார் தோனி.

அணிக்குள் அப்போதுதான் நுழைந்தவரை வெற்றிக்கான பினிஷிங் ரோலில் களமிறக்குவது அவர் மீது சுமையை ஏற்றுவதாகும் என்று கருதிய தோனி தானே பினிஷிங் பங்காற்ற களமிறங்கி வந்தார். இந்நிலையில் கடைசியில் இறங்கும் போது தன்னால் “ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய முடியவில்லை” என்று தோனி ஒப்புக் கொண்டார்.

இதனால் நேற்று 4-ம் நிலையில் களமிறங்கினார், இன்னிங்ஸின் ஆரம்பநிலையிலேயே களம் புகுந்தார் தோனி.

தனது இந்த முடிவு பற்றி அவர் கூறும்போது, “அணி நிர்வாகத்துடன் உரையாடிய போது என்ன செய்ய வேண்டும் என்று பேசினோம், அதில் நான் சுதந்திரமாக பேட்டிங் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையும் அடங்கும். 2 விக்கெட்டுகள்தான் விழுந்திருந்தன. அதனால் பாசிட்டிவ் ஆக ஆடுவது முக்கியமென கருதினேன். நான் அவுட் ஆகிக்கூட இருக்கலாம், 4-,ம் நிலையில் இறங்கும் போது இத்தகைய ரிஸ்க்கை நாம் எடுத்தேயாக வேண்டும்.

இவ்வாறு ஆட வேண்டும் என்று நீண்ட நாட்களாக விரும்பினேன். அதுவும் குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் அபாரமாக ஆடும்போது, நான் 5 அல்லது 6-ல் களமிறங்கினால் பெரிய பேட்டிங் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்த டவுனில் எளிதாக என்னால் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய முடியவில்லை. நமக்குப் பின்னால் ஒரு பேட்ஸ்மென் தான் இருக்கிறார் எனும்போது பெரிய ஷாட்டை ஆடுவதற்கு முன்னால் அது வெற்றியடையுமா என்று 90% உறுதி செய்து கொள்ள வேண்டியுள்ளது.

பின்னால் களமிறங்கும் போது 10-12 ஓவர்களே கிடைக்கும் இதில் நிறைய ரன்களை எடுக்க வேண்டும் என்றே ஆட முடியும். இல்லையெனில் 20-வது ஓவரில் இறங்குகிறோம் என்றால் அப்போது 5 விக்கெட்டுகளை இழந்திருக்கிறோம் என்றால் கூட்டணி சேர்த்து ரன்களைச் சேர்க்குமாறு ஆடவேண்டும். இப்படி நீண்ட நாட்களுக்கு ஆடிவந்தால் ஸ்ட்ரைக் ரொடேட் செய்யும் திறமை போய்விடும்.

பின்னால் களமிறங்குவது ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பதாக இருப்பதால் எனது பேட்டிங்கை அது பாதித்தது. 4-ம் நிலையில் இறங்குவது என்பது பெரிய ஷாட்களை யோசிக்காமல் ஆட சுதந்திரம் அளிக்கிறது. இன்னும் இது போன்ற சில இன்னிங்ஸ்களை ஆட வேண்டும். நான் மீண்டும் ரன்களை எடுக்கத் தொடங்கியுள்ளேன் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. பீல்டர்கள் தலைக்கு மேல் பந்தைத் தூக்கி அடிக்க வேண்டும். அதுதான் என் பேட்டிங்கிற்கு தேவை என்று நினைத்தேன், .இது எனது முதல்நாள், இனி இந்தப் பாணியில் தொடர்ந்து ஆடுவேன் என்று நம்புகிறேன்.

நான் 4-ம் நிலையில் வெற்றியடைந்தால் அணிக்கு அது சுதந்திரம் அளிக்கும் ஏனெனில் நான் விரைவில் ரன்களை எடுப்பதால் அணி சுதந்திரமாக உணரும். இந்த இன்னிங்ஸில் கூட நான் சற்றே மந்தமடைந்ததாகவே கருதுகிறேன். நான் பெரிய ஷாட்களை ஆடுவது முக்கியம். மேலும் விராத் கோலியுடன் விளையாட முடிந்தது. நாங்கள் ரன்களை வேகமாக ஓடினோம். எதிரணி பீல்டர்களில் சிறந்தவர்களுக்கு எதிராகக் கூட எங்கள் ஓட்டம் வெற்றியடைந்தது. நடுவில் 100-125 ரன்கள் கூட்டணி அமைத்து விட்டால் பின்னால் வருபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

கேதர் ஜாதவ், விராட் கோலிக்குப் புகழாரம்

ஆச்சரியகரமானது கேதர் ஜாதவ் பந்துவீச்சு. நடு ஓவர்களில் எங்களுக்கு விக்கெட்டுகளை அவர் பெற்றுத் தருகிறார். ஆனால் இறுதி ஓவர்களை நாங்கள் இன்னும் சிறப்பாக வீச வேண்டுமென்று நினைக்கிறேன். விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. டாப் 5 பேரில் ஒருவர் ஒருசில ஓவர்களை வீசுவது உதவும். அதுவும் எதிரணியில் இடது கை பேட்ஸ்மென்கள் இருப்பதால் கேதர் ஜாதவ் ஆஃப்ஸ்பின் உதவிகரமாக அமைந்தது.

விராட் கோலி ஆரம்பம் முதலே இந்திய அணியை வெற்றி பெறச் செய்து வருபவர். அவர் தனது பலங்களை அறிந்தவர். கிரிக்கெட்டில் எது டாப் லெவல் என்று கூறுவது கடினம் ஆனால் இந்தியாவுக்கு கோலி பெருமை சேர்த்து வருகிறார்.

http://tamil.thehindu.com/sports/தொடர்ந்து-அதிரடி-முறையில்-ஆடுவேன்-தோனி-உறுதி/article9261471.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

ராஞ்சியில் இன்று 4-வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றும் முனைப்பில் தோனி குழுவினர்

 

 
ராஞ்சியில் உள்ள ஜெஎஸ்சிஏ மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி.
ராஞ்சியில் உள்ள ஜெஎஸ்சிஏ மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி.

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் 4-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதுகின்றன. கேப்டன் தோனியின் சொந்த மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுவதால் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து பதிலடி கொடுத்தது. கடைசியாக மொகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது.

விராட் கோலி 154 ரன்கள் விளாசி அசத்தினார். 4-வது வீரராக களமிறங்கிய தோனி புத்துணர்ச்சி யுடன் சில அசாத்தியமான ஷாட்களை விளையாடி 80 ரன்கள் விளாசினார். 3-வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் 151 ரன்கள் சேர்த்தது இலக்கை தொய்வின்றி துரத்த உதவியது.

இன்றைய ஆட்டத்திலும் தோனி 4-வது வீரராக களமிறங்குவார் என கருதப்படுகிறது. 9 ஆயிரம் ரன்களை 50 சதவீத சராசரியுடன் கடந்துள்ள முதல் வீரரான அவரிடம் இருந்து சொந்த மண்ணில் இன்று மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

தோனி தலைமையில் ராஞ்சியில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி 20 ஆட்டத்தில் விளை யாடி உள்ளது. இதில் 2 ஒருநாள் போட்டிகளிலும் டி 20 ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் மழை காரணமாக முடிவில்லாமல் போனது.

துணை கேப்டனான விராட் கோலி ராஞ்சி மைதானத்தில் இரு ஆட்டத்தில் விளையாடி 216 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ரன் 139 ஆகும். 3-வது ஒருநாள் போட்டியில் 286 ரன்கள் இலக்கை அடையை கோலியின் நேர்த்தியான ஆட்டம் உதவியாக இருந்தது. 6 ரன்னில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிய அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

26 சதங்கள் அடித்துள்ள கோலியை இன்றைய ஆட்டத்தில் விரைவில் ஆட்டமிழக்க செய்வதே நியூஸிலாந்து அணியின் பிரதான திட்டங்களுள் ஒன்றாக இருக்கும். 35 வயதான தோனி மீண்டும் அதிரடி பார்முக்கு திரும்பியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

சொந்த மண்ணில் தோனி இனிமேல் மறுபடியும் களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரிய வில்லை. இதனால் இன்றைய ஆட்டம் அவருக்கு உணர்வுப் பூர்வமானதாக அமையக்கூடும். தோனி அதிரடியாக விளையாட ஆரம்பித்துள்ளதால் நியூஸிலாந்து அணிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முன்னணி வீரர்களான அஸ்வின், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இல்லாமலேயே இந்த தொடரில் இந்திய அணி அசத்தி வருகிறது. பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான கேதார் ஜாதவ் இது வரை 6 விக்கெட்கள் கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்கள் கைப் பற்றியவர்களின் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். ஒவ்வொரு முறையும் அவரை தோனி பந்து வீச்சுக்கு உட்படுத்தும் போதும் விக்கெட் வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பவராக உள்ளார்.

அமித் மிஸ்ரா தனது அனுபவத்தால் அசத்தி வருகிறார். அக் ஷர் படேலின் பந்து வீச்சும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளது. வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ் ஆரம்பத்திலும், ஜஸ்பிரித் பும்ரா கடைசி கட்டத்திலும் நெருக்கடி கொடுப்பவர்களாக திகழ்கின்றனர்.

ரெய்னா இடத்தை தக்கவைத் துள்ள 31 வயதான கேதார் ஜாதவ் பேட்டிங்கிலும் கைகொடுப்பவராக உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கருத்தில் கொண்டு கேதார் ஜாதவை 6-வது வீரராக நீண்ட கால திட்டத்துக்கு தகுந்தபடி பயன்படுத்திக்கொள்ள அணி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. ஹர்திக் பாண்டியா முதல் ஆட்டத்தில் ஜொலித்த நிலையில் அடுத்த இரு ஆட்டத்திலும் சொல்லிக் கொள்ளும்படியான திறன் அவரிடம் இருந்து வெளிப்பட வில்லை. இதனால் அவர் ஆல்ரவுண் டராக சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடி உருவாகி உள்ளது.

இந்திய அணியின் தொடக்க பேட்டிங் இந்த தொடரில் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே ஜோடி மூன்று ஆட்டங்களிலும் முதல் விக்கெட்டுக்கு முறையே 49, 21, 13 ரன்கள் மட்டுமே சேர்த்துள் ளது. இன்றைய ஆட்டத்தில் இவர்கள் அதிரடி பார்முக்கு திரும்பினால் நடுக்கள வீரர்களுக்கு நெருக்கடி குறையும்.

டெஸ்ட் தொடரை 0-3 என இழந்த நியூஸிலாந்து அணி ஒருநாள் போட்டி தொடரிலாவது குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி வீரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.

இந்திய சுற்றுப்பயணத்தில் டாம் லதாம், வில்லியம்சன் ஆகியோர் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் ரன்களை சேர்த்துள்ளனர். மார்ட்டின் குப்தில், ராஸ் டெய்லர் ஆகியோரிடமிருந்து இதுவரை பெரிய அளவிலான ரன்குவிப்பு வெளிப்படவில்லை. இவர்கள் இருவரும் இன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அது அணிக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

முன்னணி பேட்ஸ்மேன்கள் பலர் சொதப்பிய நிலையில் இந்த தொடரில் நியூஸிலாந்து அணியின் பின்கள பேட்டிங் பலம் சேர்த்து வருகிறது. நீஷம், மேட் ஹென்றி, டிம் சவுத்தி ஆகியோர் அணியின் ரன்குவிப்பில் சீரான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் நியூஸிலாந்து அணியும் களமிறங்குவதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையக்கூடும்.

அணிகள் விவரம்:

இந்தியா:

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, மணீஷ் பாண்டே, ஜெயந்த் யாதவ், அக் ஷர் படேல், ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மன்தீப் சிங், அமித் மிஸ்ரா, தவல் குல்கர்னி, உமேஷ் யாதவ்.

நியூஸிலாந்து:

வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் குப்தில், ராஸ் டெய்லர், டாம் லதாம், லூக் ரான்ஜி, ஜேம்ஸ் நீஷம், கோரே ஆண்டர்சன், டக் பிரேஸ்வெல், ஆன்டன் டேவ்சிச், வாட்லிங், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட், மேட் ஹென்றி.

நேரம்: பிற்பகல் 1.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

http://tamil.thehindu.com/sports/ராஞ்சியில்-இன்று-4வது-ஒருநாள்-போட்டி-தொடரை-கைப்பற்றும்-முனைப்பில்-தோனி-குழுவினர்/article9270059.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.