Jump to content

ஜெயலலிதா பற்றிய தகவல்கள்


Recommended Posts

ஜெயலலிதாவின் உதவியும் பணியாளர்களின் நெகிழ்ச்சியும்!

47924596_10419.jpg

எம்.ஜி. ஆர் வாழ்ந்த காலத்தில் அவரிடம் வேலை பார்த்தவர்களில் தொடங்கி  அவரை நேரில் பார்த்தவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் அவர் செய்த உதவிகள் ஏராளம். .அதனாலே வள்ளல் எம்.ஜி .ஆர் என இன்று வரை மக்கள் அவரை அழைக்கின்றனர். அவர் வழி வந்த ஜெயலலிதாவிற்கு இரும்பு பெண், சிறந்த நிர்வாகி போன்ற பெயர்கள் கிடைத்தாலும் உதவி செய்வதில் எம்.ஜி.ஆர் போன்றவர் என்ற பிம்பம் கொடுக்கப்படவில்லை. ஆனால், அவரும் முதல்வராக இல்லாமல், தனிப்பட்ட முறையிலும் நிறைய பேருக்கு உதவிகள் செய்து வருபவர்தான்.

எளிய மனிதர்கள் சிலருக்கு ஜெயலலிதா செய்த உதவிகளின் பட்டியல் பெரிது. அதில் சில மட்டும் இங்கே...

காட்சி 1

2011ம் ஆண்டில் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா, கோட்டையில் இருந்து வீட்டுக்கு திரும்பியபோது, போயஸ் கார்டன் சாலையில் உள்ள ஒரு மரத்தடியை பார்த்துக்  கடும் கோபம் அடைந்தார். வேதா இல்லத்தின் வாசலில் காத்து இருந்த IAS, IPS, அதிகாரிகள் யாரையும் சட்டை செய்யாமல் முதல்வர் கோபத்துடன் சென்றதை பார்த்து அரண்டு போயினர் அங்கு கூடி இருந்த அனைவரும். முதல்வரின் கோபத்திற்கு ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்லி கொண்டு இருக்க, வீட்டுக்குள் இருந்து ஒடி வந்த உதவியாளர் அங்கு இருந்த காவல் துறை அதிகாரிகள் காதுகளில் கிசு கிசுத்தார். சீறிக் கொண்டு சென்ற வாகனங்கள் சிறிது நேரத்தில், வேதா இல்ல வாசலில் வந்து களைத்து நின்றன.

அதிகாரத்தின் அத்தனை ஜோடி கண்களும் வண்டியின் கதவு திறக்க காத்து இருந்தன. கதவுக்கு பின்னால் கிழிந்த கைலியும், விடுமுறை போதையில் சிவந்த கண்களுமாய் மெலிந்த தேகம் ஒன்று கதவை திறந்து கொண்டு இறங்கியது. மற்றொறு வண்டியில் இருந்து வறுமையே இறங்கியது  பெண் ஒருவரும் இறங்கினார் . இவர்கள் வந்ததை உறுதி செய்து கொண்டு சென்றார் உதவியாளர். இப்போது வேதா இல்ல கதவு திறக்கப்படுகிறது. வெளியில் காத்து இருக்கும் அதிகாரிகள் தாங்கள் கையில் உள்ள பூங்கொத்துகளை மீண்டும் ஒரு முறை இறுக்கிக்  கொண்டனர்.

முதல்வர் முதலில் யாரை அழைப்பார் என மூத்த அதிகாரிகள் தங்களுக்குள் மனப்போர் நடத்தி கொண்டு இருந்தனர். உதவியாளர் நேராக வந்து மெலிந்த தேகதுடன் குறுகி நின்று கொண்டு இருந்தவரை அழைத்தார் "மணி அண்ணன் உள்ள வா ,நீயும் வாம்மா" என இருவரையும் உள்ளே அழைத்து சென்றனர்.வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்த ஜெயலலிதா, “ நீங்க ரெண்டு பேரும் என் இன்னைக்கு கடை திறக்கல” என கேட்க இருவரும் திரு திரு வென முழித்தனர்.

'பயப்படாம சொல்லுங்க'. 

'இல்லம்மா... இது முதல்வர் போற வழி. இனி மேல் இங்க கடை வைக்க கூடாதுன்னு போலீஸ்காரங்க சொல்லிட்டாங்கம்மா” என டீ கடை மணி தைரியத்தை வரவழைத்து சொல்லி முடித்தார்.

'நேத்துக்  கொண்டு வந்த சாப்பாட்டைக்  கூட விக்க விடாம அனுப்பிட்டாங்கம்மா' என அந்தப்  பெண்ணும் சொல்ல, உதவியாளரைப்  பார்த்து அந்த கமிஷனரை வர சொல்லு என ஜெயலலிதா சொல்ல அடுத்த நொடி என்ன நடந்தது என்று உதவியாளர் கமிஷனருக்கு விளக்கிக்  கூறினார்.

எங்கக்  கட்சியில இருக்குற பாதி பேரு ரொம்ப சாதாரணமானவங்க. இந்த ஏரியாவுல அவங்க சாப்பிடுற மாதிரி இருக்குறது இவங்க கடை மட்டும் தான். எனக்கு என்ன செய்வீங்கன்னு தெரியாது இன்னும் ஒரு மணி நேரத்துல இவங்க கடை அங்க இருக்கனும்.போலீஸ்காரங்க வருவாங்க போவாங்க அவங்க சொன்னாங்கன்னு இனிமேல் கடையை எடுக்க கூடாது புரியுதா என்ன ஜெயலலிதா சொல்லி முடிக்க, நடப்பது கனவா நனவா என புரியாமல் முழித்த படியே வணக்கம் வைத்து விட்டு வெளியே வந்தனர்.மணியும்,சாப்பாடு கடை அக்காவும்.

கமிஷனர், மணியை பார்த்து சரி கடையை போய் திறங்க என கூற, “இப்ப எப்படி சார் திறக்க முடியும்? ரெண்டு நாளா  கடைய திறக்கலை. கையுல காசு இல்ல. அதுவும் இல்லாம 1 மணி ஆச்சு. இனிமேல்நான் எங்க போய் பால் வாங்கி டீ போட்டு...” என எந்தவித பயமும் இல்லாமல் மணி சொல்லி முடிக்க, சரி போங்க உங்களுக்கு தேவையான பொருட்கள் வந்து சேரும் என்றார் கமிஷ்னர்.

அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டில் நின்று கொண்டு இருந்த மணியின் சைக்கிளையும்,அக்காவின் சாப்பாடு பாத்திரங்களும் போயஸ் கார்டன் சாலைக்கு எடுத்து வந்தது காவல்துறை. சைக்களில் இருந்த டீ கேனில் முழுவதுமாக டீ நிரப்பப்பட்டது.அக்காவின் பாத்திரங்கள் முழுவதும் சரவண பவன் சாப்பாடு நிரம்பி வழிந்தது. சாப்பாட்டையும் டீயையும் இலவசமாக அனைவருக்கு வழங்கி கொண்டு இருந்தனர் இருவரும்.

காட்சி 2

அவருக்கு கார்டனில் செடிக்கு தண்ணீர் ஊற்றும் வேலை. வேலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதி வேதா இல்ல போர்டிகோ. அங்கு உள்ள நீர் ஊற்று, அதை சுற்றியுள்ள புல்தரைகளை பராமரிப்பது. ஓரங்களில் உள்ள செடிகளுக்கு நீர் ஊற்றுவது பலர் வந்து செல்லும் வாசலை சுத்தமாக வைத்து கொள்வது என வேதா இல்லத்தில் மிக பொறுப்பான பதவி. பொதுவாக இந்த வேலையை கவனிப்பவர்கள் யாரும் கார்டனில் வெகு நாட்கள் நீடித்தது இல்லை என்பார்கள்.

அவர் பொறுப்பு ஏற்கும் போது புல் தரைகள் காய்ந்து இருந்தன .நீர் ஊற்று செயல்படவில்லை. உடனடியாக களத்தில் இறங்கினார். தினமும் புல் தரைக்கு நீர் ஊற்றி பராமரிக்க தொடங்கினர்.அதே போல் போர்டிகோ முதல் கேட் வரையுள்ள தரையை ஒரு நாளைக்கு 10 முறை அவர் செய்த சுத்தத்தால் பழைய மார்பிள் எல்லாம் உயிர் பெற்று. புதுசாக சிரித்தது. ஸ்பெஷல் கவனிப்பால் புற்கள்  உயிர் பெற்றன. 

சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டு இருந்த காலகட்டம். கார்டனில் இருந்து கோட்டைக்குச்  செல்ல முதல்வர் ஜெயலலிதா தயாராகிக்  கொண்டு இருந்தார்.போர்டிகோவில் அவருக்கான வாகனம் தயாராக இருந்தது.வேதா இல்ல வாசலை விட்டு வெளியே வந்த ஜெயலலிதா முகம் மாறியது.காரில் ஏறிய மறு நொடி தான் உதவியாளரை அழைத்தார்.இந்த போர்டிகோவை கவனிக்கும் நபரை கோட்டைக்கு வர சொல்லுங்கள் என கூறிவிட்டுச் சென்று விட்டார். கார்டனுக்குள் நுழைந்தவரை ஊழியர்கள் சூழ்ந்து கொண்டனர்.

'அதிக பிரசங்கி தனமா பண்ணாதேன்னு சொன்னா கேட்டியா'. 'புல் தரையை சரி பண்ண வேண்டான்னு ஒரு தடவ அம்மா சொன்னாங்க'. அதனால தான் நாங்க யாருமே சரி பண்ணல. நீ என்னடான்னா அத போய் சரி பண்ணி இருக்க போ. இன்னையோட உன் சீட்டு கிழிஞ்சது. உனக்கு முன்னாடி இருந்தவனாவது ஆறு மாசம் வரைக்கும் தாக்கு பிடிச்சான். நீ அது கூட இல்ல” என ஊழியர்கள் கூறியதைக்  கேட்டு தூக்கிவாரி போட்டது அவருக்கு.

பயத்துடன் கோட்டையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். முதல் முறையாக தலைமை செயலகத்துக்குள் அதுவும் முதல்வரை சந்திக்க. ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும் மறு பக்கம் வேலை போக போகிறதோ என்ற பயத்துடன் உள்ளே நுழைந்தார். கோட்டை வாயிலில் நின்ற காவலர்கள் முதல்வரின் செயலர்களிடம் உறுதிபடுத்திக்  கொண்டு அவரை முதல்வரின்  அறை இருந்த தளத்திற்கு அனுமதித்தனர்.மூன்று மணி நேர காத்திருப்பிற்கு பிறகு முதல்வர் அறைக்குள் அனுப்பப்பட்டார்.

உள்ளே இருந்த ஜெயலலிதா ''இனி மேல் நீ கார்டனுக்கு வேலைக்கு வர வேண்டாம்''என சொல்ல அவருக்கு கண்ணீர் கோர்த்துக்  கொண்டு நின்றது. பயத்துடன் நின்றவரை பார்த்து.’ நாளையில் இருந்து இங்க வேலைக்கு வந்துரு.உனக்கு இனிமேல் தலைமை செயலகத்துல தான் வேலை’ என கூறி அடித்து வைக்கப்பட்டு இருந்த அப்பாயின்மென்ட் ஆர்டரை அவர் கையில் கொடுத்தார் ஜெயலலிதா.

இரத்த ஓட்டம் ஒரு நிமிடம் நின்று ஓடியது போல் இருந்தது அவருக்கு. சட்டசபையில் நான் உட்காரும் இருக்கையை சுத்தமாக வைத்து கொள்வது தான் உன் வேலை. என்னை ஒரு கொசு கடிச்சா கூட உன்னை சும்மா விட மாட்டேன் என ஜெயலலிதா சிரித்துக்  கொண்டே சொல்ல அங்கு இருந்த அனைவரும் அனைவரும் சிரித்தனர்,

காட்சி 3

ஜெயலலிதாவை முக்கிய பிரமுகர்களைச்  சந்திக்க வரும் போது அந்தச்  சந்திப்பை புகைப்படம் எடுக்க நேரம் ஒதுக்கப்படும். சந்திப்பின் போது உள்ளே  அனுப்பப்படும் கேமரா மேன்கள் ஜெயலலிதா சைகை செய்த உடன் வெளியே சென்று விட வேண்டும். அது போன்ற ஒரு சந்திப்புக்காக கேமராமேன்கள் வேதா இல்லத்தில் காத்து இருந்தனர்.

டெல்லிலியில் இருந்து வந்து இருந்த தொழில் அதிபருக்கு அன்று சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கேமராமேன் உள்ளே அனுப்பப்பட்டனர். வழக்கமாக உள்ளே சென்ற 5 நிமிடத்தில் ஜெயலலிதா சைகை காட்டி விடுவார் அவர்களும் வெளியே வந்துவிடுவார்கள். ஆனால் அன்று பத்து நிமிடத்திற்கு மேல் ஆகியும் ஜெயலலிதா எந்த சைகையும் காட்டவில்லை.கேமராமேனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்க பொறுத்து பார்த்த தொழில் அதிபர் கேமரா மேன்களை பார்த்து '' படம் எடுத்துட்டேங்கன்னா வெளியில போங்க. இப்படியா நின்னுகிட்டு இருப்பீங்க. மேனர்ஸ் இல்ல'' என சொல்ல சிவந்து விட்டது ஜெயலலிதாவின் கண்கள்.

'first you may get out 'சத்தம் வந்த திசையை நோக்கி தொழிலதிபர் திரும்ப,” மிஸ்டர் முதல்ல நீங்க வெளிய போங்க. என் வீட்டுக்குள்ள வந்துட்டு என் ஸ்டாஃப வெளிய போக சொல்ல நீங்க யாரு? நீங்க உங்க தேவைக்காக இங்க வந்து இருக்கீங்க. அவங்க எனக்காக இங்க இருக்காங்க.” என கோவத்தில் ஜெயலலிதா கொதிக்க கார்டன் ஊழியர்கள் அந்த தொழிலதிபரை அங்கு இருந்து அப்புறப்படுத்தினர்.

கோபம்  குறையாத ஜெயலலிதா, கேமராமேனை பார்த்து ”தைரியமா எதிர்த்து பேச வேண்டியதுதான. இனி மேல் யாராவது என் முன்னாடி உங்கள அப்படி பேசுனா அவங்ககிட்ட தைரியமா பேசணும்” என்றாராம் ஜெயலலிதா.

http://www.vikatan.com/news/tamilnadu/69547-emotional-moments-between-jayalalitha-and-her-servants.art

Link to comment
Share on other sites

அன்று சந்தியா... இன்று சசிகலா... ஜெயலலிதா வாழ்க்கையில் பயணித்த மூவர்!

jaya%20posters%20500%203.jpg

ஜெயலலிதா தனது அரசியல் வாழ்க்கையில் சந்திக்காத சிக்கல்களும், கஷ்டங்களும் இல்லை. ஆனாலும் அவற்றையெல்லாம் கடந்து தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் ஐந்தாவது முறையாக அமர்ந்திருக்கிறார். அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, அது அவரது கையில் இல்லை. அவரது வாழ்க்கையை இதுவரை மூன்று கால கட்டங்களாகப் பிரித்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் என மூன்று பேர் அவரது வாழ்க்கை முழுக்க ஆளுமை செய்திருக்கின்றனர். 

அம்முவும் சந்தியாவும்!

Jayalalitha%20with%20her%20Guru%20K%20J%ஜெயராமன், சந்தியா தம்பதிக்கு மகளாகப் பிறந்த ஜெயலலிதாவுக்கு கோமளவள்ளி என்றுதான் பெயர் வைக்கப்ப்பட்டிருந்தது. ஆனால், அவர் அம்மா அவரை அம்மு என்றுதான் செல்லமாக அழைத்து வந்தார். தாய் சந்தியா அம்முவை கவனமாக வளர்த்து வந்தார். அவருடைய அனுமதி இல்லாமல் அம்மு எதையும் செய்ய முடியாது. அம்மு தனக்கு என்று தனியே எந்த முடிவையும் எடுக்க முடியாது. முழுக்க முழுக்க தாய் சந்தியாதான் அம்முவின் வாழ்க்கையில் இருந்தார். 

படப்பிடிப்புக்கு சந்தியா செல்லும்போதும், அவர் அருகில் இல்லாவிட்டாலும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் அம்மு வளர்ந்தார். சட்டம் படிக்க விரும்பிய அம்மு, நடிக்க வந்ததும் தாய் சந்தியாவின் நிர்பந்தத்தினால்தான். குடும்ப சூழ்நிலையும் அதற்கு ஒரு காரணம். எந்தப் படத்தில் நடிக்க வேண்டும், எவ்வளவு சம்பளம் என அனைத்தையும் தாய் சந்தியாதான் கவனித்து வந்தார். 

ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும்!

MGR-Jayalalitha-movie.jpgசந்தியா இறந்த பிறகு ஜெயலலிதாவின் அரசியல் குருவான எம்.ஜி.ஆர் அவரது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். ஜெயலலிதாவின் துணிச்சலும், அவரது திறமையும் எந்தக் காரியத்தையும் முடித்து காட்டும் தன்மையும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்திருந்தது. சொல்லப் போனால் ஜெயலலிதா எந்தப் படத்தில் நடிக்க வேண்டும், எதில் நடிக்கக் கூடாது, எங்கு போக வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்யும் அளவுக்கு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா மீது மிகவும் பொசஸிவ் மனப்பான்மை கொண்டிருந்தார்.

ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் கொடுத்த பொறுப்புகள் காரணமாக நாளடைவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்தெல்லாம் கூட ஜெயலலிதா நீக்கப்பட்டார். அதையும் மீறி எம்.ஜி.ஆரின் தவிர்க்க முடியாத அரசியல் வாரிசாக ஜெயலலிதா உருவெடுத்தார். 

அம்மாவும் சசிகலாவும்!

22jaya1%20%281%29.jpgஎம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் பிளவு பட்டிருந்த அ.தி.மு.க-வை ஒன்றிணைத்து வெற்றியின் பாதையை நோக்கித் தனி ஆளாக வளர்த்தெடுத்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு ரத்த உறவுகள் இருந்தாலும் கூட அவர்கள் யாரையும் பெரிதாக ஜெயலலிதா தனக்கு அருகில் சேர்த்துக்கொள்ளவில்லை. வீடியோ லைப்ரைரி வைத்திருந்த சசிகலா, வீடியோ கேசட்கள் கொடுக்க வந்த போது ஜெயலலிதாவுடன் பழகினார். நாளடைவில் ஜெயலலிதாவின் அரசியல் முடிவுகளில் சசிகலாவும் ஆளுமை செய்தார்.

சசிகலாவால் ஜெயலலிதாவுக்கு எவ்வளவோ சிக்கல்களும், துன்பங்களும் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி தனது உடன்பிறவா சகோதரி என்று ஜெயலலிதாவே குறிப்பிடும் அளவுக்கு சசிகலாவின் செல்வாக்கு உயர்ந்தது. இன்று ஜெயலலிதா நம்பும் ஒரே நெருங்கிய நபராக சசிகலா மட்டுமே இருக்கிறார். 

சந்தியா, எம்.ஜி.ஆர், சசிகலா மூவரும்தான் தனது நலம் விரும்பிகள் என்று பரிபூரணமாக நம்பினார். அது உண்மையும்கூட. ஜெயலலிதாவின் சுக துக்கங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள மூவர்தான் அவர் அருகில் இருந்தனர். 

சிறு வயதில் தன் மீது செலுத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிர்வினை ஆற்றத் தெரியாமல், தனியே அறைக்குள் சென்று அழுத அம்முவில் இருந்து, இன்று அப்போலோவில் யாரையும் தன் அருகே அனுமதிக்காத அம்மா வரையான ஜெயலலிதா இறுக்கமான ஒரு நபராகவும், யாரும் நெருங்க முடியாத ஒரு நபராகவும் இருப்பதற்கு இவர்கள் மூவரும் கூட ஒரு காரணம்.

http://www.vikatan.com/news/tamilnadu/69513-three-personalities-who-dominated-jayalalithas-life.art

Link to comment
Share on other sites

ஜெ. - அவர் அப்படித்தான்!

ஆளுமைப.திருமாவேலன், படங்கள்: ஸ்டில்ஸ் ரவி

 

பல பெண்களுக்கு ரகசிய ரோல் மாடல், தனித்துவாழும் பெண்களுக்கான நம்பிக்கை விளக்கு என்று ஜெயலலிதா பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவருடைய கடந்த கால தருணங்கள் இதோ...

மிகச் சிறுவயதில் அப்பாவை இழந்தவர். இளம் பருவத்தில் அம்மாவை இழந்தவர். நல்லது கெட்டது புரியத் தொடங்கும் நேரத்தில் தனது குரு எம்.ஜி.ஆரை இழந்தவர். இந்த இழப்பே அவரை சுயம்புவாக வார்ப்பித்தது. நடனம், இசை, ஓவியம், நடிப்பு என தன்னைச் செதுக்கிக் கொண்டார். ஓய்வு நேரங்கள் அனைத்திலும் உள்ளூர் இலக்கியம் முதல் உலக வரலாறு வரை படித்தார். படப்பிடிப்பில் சிறிதளவு இடைவேளை கிடைத்தாலும் புத்தகத்துடன் உட்கார்ந்திருப்பார். வீட்டில் பெரிய நூலகமே வைத்திருந்தார். யாரைப் பார்த்தாலும் புத்தகங்கள் பற்றி பேசுவார். ஆங்கிலத்தில் கவிதை எழுதினார், தமிழில் கதைகள் எழுதினார். அந்தத் தனிமையை, தனது அறிவு, ஆளுமைச் செழுமையாக மாற்றினார். அவர்தான் ஜெயலலிதா.

p138.jpg

``அம்மா சம்பாதித்ததை எல்லாம் சேர்த்து வைத்திருந்தால் நான் சினிமாவுக்கே வந்திருக்க வேண்டாம். என்னை நல்லா படிக்க வெச்சு, 18, 19 வயசுல நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்து, நாலு குழந்தைகளுக்கு தாயாகி இருப்பேன். வாழ்க்கையில் இவ்வளவு மேடு பள்ளங்கள் இருந்திருக்காது. வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தாக போயிருக்கும்” என்று தனது சினிமா வாழ்க்கையின்போது வருத்தப்பட்டுச் சொன்னார் ஜெயலலிதா.

ஒரு ரசிகர், ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார். ‘உங்கள் மீது நான் உயிரையே வைத்துள்ளேன்.  இன்ன தேதிக்குள் நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்”, என்று எழுதினார். இவருக்கு ஜெயலலிதா பதில் போடவில்லை. அந்த தேதி  கடந்த பிறகு அதே ரசிகர் மீண்டும் ஒரு கடிதம் ஜெயலலிதாவுக்கு போட்டார். புதிதாக இன்னொரு தேதியைக் குறிப்பிட்டு, அதற்குள் என்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று எழுதி இருந்தார். இதற்கும் ஜெயலலிதா பதில் போடவில்லை. மூன்றாவதாகவும் இப்படி ஒரு கடிதம் வந்தது. இதற்கு ஜெயலலிதா எழுதிய பதில்தான் அவரையே அடையாளப்படுத்தியது.
 
‘`எனக்கு கணவராக வரவேண்டியவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கூடியவராக இருக்க வேண்டும். மற்ற கொள்கைகளைவிட இதுதான் முக்கியம். சொன்ன வாக்கை மூன்று தடவை மாற்றிய உங்களை எப்படி நான் மணக்க முடியும்? மன்னிக்கவும்” என்று எழுதினார் ஜெயலலிதா. அதன் பிறகு கல்யாணக் கடிதம் வரவில்லை. அவர்தான் ஜெயலலிதா.

பாலா என்ற நிருபர், தனது திருமணப் பத்திரிகையை ஜெயலலிதாவிடம் தருகிறார். ‘`நீங்க எல்லாம் லக்கி பாலா... கல்யாணம், குடும்பம்னு செட்டில் ஆகுறீங்க!” என்று சொன்ன தொனியில் ஜெயலலிதாவின் வலி தெரிகிறது. ‘`எப்ப உங்க கல்யாணம்? என்று கேட்கிறார்கள்... இதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு?” என்று விரக்தி காட்டி இருக்கிறார்.

அரசியல் வெற்றிகளுக்குப் பிறகும் இதே போன்ற கேள்வி கேட்கப்பட்டது. ‘`உங்களது அரசியல் வெற்றிகளை அருகில் இருந்து பார்க்க உங்கள் தாய் இல்லையே?” என்று வருத்தப்படுகிறீர்களா?” என்றபோது, ‘`அம்மா இருந்திருந்தால் இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது. ஏனென்றால், என்னை அவர் அரசியலில் நுழைய அனுமதித் திருக்க மாட்டார்” என்று பதில் அளித்தார்.

கவர்ச்சிகரமான சினிமா உலகமும், அதிகாரமயமான அரசியல் களமும் தனது மனதுக்குப் பிடித்தது இல்லை என்பதை எப்போதும் வெளிக்காட்டியே வந்தார் ஜெயலலிதா. அவர் சினிமாவிலும் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஆனால், மனதளவில் ஒதுங்கியே இருந்தார். அவர்தான் ஜெயலலிதா.

p138a.jpg

கோவையில் நடந்த திருமணம் அது. முன்னாள் சபாநாயகர் கே.ஏ.மதியழகனின் மகள் அருணா - சேரலாதன் ஆகியோர்தான் மணமக்கள். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். திருமணத்தை நடத்தி வைத்தார். அன்றைய அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரான செல்வி ஜெயலலிதாவை மண மக்களை வாழ்த்திப்பேச அழைத் தார்கள்.  தான் மனதில் நினைத்ததை பட்டவர்த்தனமாகப் பேசியே பழக்கப்பட்ட ஜெயலலிதா, மேடையில் உட்கார்ந்திருந்த எம்.ஜி.ஆர்.

உள்பட அரங்கில் இருந்த அத்தனை ஆண்களுக்கும் அறிவுரை சொன்னார். ``ஜனநாயகத்தைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், நமது நாட்டில் பெண்களுக்கு வீட்டில் ஜனநாயக உரிமை இல்லை. பெண்ணுக்கு திருமணமாகும் வரை தான் சுதந்திரம். திருமணமாகி விட்டால் சுதந்திரத்தை இழந்து விடுகிறார். இந்திய அரசியல் சட்டத்தில் பல்வேறு சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் வீட்டில் ஆண்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டியிருக்கிறது” என்று பேசினார் ஜெயலலிதா.

சும்மா இருக்க முடியுமா எம்.ஜி.ஆரால்? ‘`ஜெயலலிதா பேசியது மணமகள் அருணாவுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால், நான் மணமகன் சேரலாதன் பக்கம் நின்று பேச விரும்புகிறேன். திருமணத்தில் ஜனநாயகத்தை பார்க்கக் கூடாது. மணமகனையும் மணமகளையும் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பதில்லை. வீட்டில் ஜனநாயகம் அர்த்தமற்றது. ஜனநாயகம் வேறு. சமத்துவம் வேறு. மண மக்கள் மனம் உணர்ந்து பழக வேண்டும்” என்று வளைத்து வளைத்து ஜெயலலிதாவுக்கு பதில் சொன்னார். தலைவர் சொல்கிறார் என்று தலையசைத்திருப்பாரே தவிர, அதை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மாட்டார். அவர்தான் ஜெயலலிதா.

தனக்குப் பிடிக்காததை எம்.ஜி.ஆரே சொன்னாலும், ஏன்... தன் அம்மாவே செய்தாலும் அதனை துணிச்சலாக எதிர்த்தவர் ஜெயலலிதா. ‘`புரட்சித் தலைவர் என் மீது மிகவும் அன்பு காட்டுபவர். என் தாயார் மறைந்த பிறகு எனக்கு எல்லாமே அவர்தான். தாய், தந்தை, நண்பர், தத்துவவாதி, வழிகாட்டி எல்லாம் அவர்தான். எனது வாழ்க்கையில் மிகவும் செல்வாக்குச் செலுத்தியவரும் அவர்தான். நான் அவருடைய புத்திக் கூர்மையை அதிகமாக மதித்தேன். என் மீது அவருக்கு கரிசனம் இருந்தது. அவர் மீது எனக்கு அனுதாபம் இருந்தது. ஏனென்றால், அவரும் வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டு முன்னேறியவர். ஒரு காலகட்டத்தில் நானே அவர் படங்களைத் தவிர மற்றவற்றில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன். என் வாழ்க்கையில் எனது தாயாரும், புரட்சித் தலைவரும் பெரும் செல்வாக்குச் செலுத்தியவர்கள்” என்று சொன்னவர் ஜெயலலிதா. தனது வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகள் தாய் சந்தியாவின் கட்டுப் பாட்டில் வளர்ந்தார். அடுத்த 20 ஆண்டுகள் எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டில் இருந்தார். அடுத்த 28 ஆண்டுகள் தனது வாழ்க்கையை ஜெயலலிதா வாழ்ந்தார்; வாழ்ந்து வருகிறார். ஒரு வகையில் தனித்துவிடப்பட்ட வாழ்க்கைதான் அவருடையது. தனித்துவிடப்பட்டவர்கள் மகா கோழைகளாக இருப்பார்கள். அல்லது அதீத தைரியசாலிகளாக இருப்பார்கள். ஜெயலலிதா இரண்டாவது ரகம்.

சினிமாவிலும் அரசியலிலும் ஆண்கள் படும் துன்பத்துக்கும் பெண்கள் படும் துன்பத்துக்கும் மலையளவு வேறுபாடு உண்டு. இரண்டிலும் ஆண் வளர நிறைய உழைக்க வேண்டும். இரண்டிலும் பெண் வளர நிறைய அவமானப்பட வேண்டும். இரண்டிலும் ஆண் வளர உறுதியான நெஞ்சம் வேண் டும். இரண்டிலும் பெண் வளர கல் நெஞ்சம் வேண்டும். இதற்கு ஜெயலலிதா வாழ்க்கை யிலேயே ஏராளமான உதாரணங்கள் உண்டு.

சொந்தக் குடும்பத்தில், உறவுகளில், நட்புகளில், எதிர்க்கட்சிகளில், சொந்தக் கட்சிகளில், அவரால் வளர்க்கப்பட்டவர்களில், அவரால் பணம் சம்பாதித்தவர்களில் - இருந்து வந்த பழிச் சொற்களே, ‘பல்லியைக் கண்டாலே எனக்குப் பயம்’ என்று பேட்டி அளித்த ஜெயலலிதாவை சீறும் சிங்கமாக மாற்றியது.

p138b.jpg

‘தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம் எது? என்று கேட்டபோது, ‘ஒன்றா இரண்டா வார்த்தை களில் சொல்ல...?' என்று திருப்பிக் கேட்டவர் அவர். பெண்ணாக இருந்ததாலேயே இத்தனை துரோகங்கள் அடுத்தடுத்து அவருக்கு செய்யப் பட்டன. ‘`பெண்ணாக பிறந்தது தவறு என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது ‘`இல்லை... இல்லவே இல்லை” என்றும் துணிச்ச லாகச் சொன்னவர் அவர்.

ஜெயலலிதாவை நேருக்கு நேர் நின்று வெற்றிபெற முடியாதவர்கள், அவரை அவமானப் படுத்துவதன் மூலமாக விரட்டிவிட நினைத் தார்கள். ‘`என்னை எப்படியும் அரசியலை விட்டு அப்புறப்படுத்துவதே எனது அரசியல் எதிரி களின் நோக்கம். தீராத மனஉளைச்சல் தரும் போது நான் ஹைதராபாத் ஓடிவிடுவேன் அல்லது அமெரிக்கா ஓடிவிடுவேன் என்று கனவு காண்கிறார்கள். நான் எங்கும் போக மாட்டேன்.

இங்கேதான் இருப்பேன்” என்று சொன்ன துணிச்சல்காரர். அவர்தான் ஜெயலலிதா.

‘’தங்களுக்குப் பிடித்த பொன்மொழி எது?” என்று ஒரு முறை கேட்கப்பட்டபோது அப்பர் வாக்கைச் சொன்னார் ஜெயலலிதா. அது இதுதான்:

‘`அஞ்சுவது யாதொன்றுமில்லை
அஞ்ச வருவதுமில்லை!”

http://www.vikatan.com/avalvikatan

Link to comment
Share on other sites

‘பீஷ்மர்’ அம்மு..!

ப.திருமாவேலன்

 

p30a.jpg

ப்போது அவர் கதாநாயகி. தினமும் தனக்கு வரும் எல்லா கடிதங்களையும் அவரே படித்து, அவரே பதிலும் போடுவார். அதனால்தான் அப்போதைய ஹீரோயின்களில் முதலில் அவருக்கே ரசிகர் மன்றங்கள் முளைத்தன. கடிதம் பெற்றவர்கள் அனைவரும், தங்களின் கனவுநாயகியாக அவரை நினைத்தார்கள். அப்படி வந்த கடிதங்களில் ஒன்று இது...

‘என்னுடைய 12 வயது சகோதரி, உங்கள் மீது அளவுகடந்த அபிமானம் வைத்திருக்கிறாள். எப்போதும் உங்களைப் பற்றிய நினைவு, பேச்சுத்தான். ஆனால், இந்த இளம்வயதிலேயே தீராத நோய் ஒன்று அவளைப் பற்றியிருக்கிறது. மருத்துவத்தால் குணமாகவில்லை. உங்களை எங்கள் சகோதரியாக எண்ணி ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். எங்களுக்குப் பண உதவி ஒன்றும் வேண்டாம். உங்கள் அன்பு ரசிகையாகிய என் தங்கைக்கு, தங்களின் புகைப்படம் ஒன்றை அனுப்பிவைக்கவும். அது அவளுக்கு மன ஆறுதலை அளிக்கும்’ - திருச்சிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வந்த கடிதம் அது.

இதைப் படித்ததும் கண் கலங்கின ஜெயலலிதா, தனது புகைப்படத்தை அந்தப் பெண்ணுக்கு அனுப்பிவைத்தார். அத்துடன் அவர் மனதில் இருந்து அந்தக் கடிதம் கரையவில்லை. சில மாதங்கள் கழித்து, திருச்சியில் ஒரு நடன நிகழ்ச்சிக்காகப் போனார் ஜெயலலிதா. உடன் அந்தப் பெண்ணின் முகவரியையும் எடுத்துச் சென்றார். அதை தனது உதவியாளரிடம் கொடுத்து, அந்தப் பெண்ணைப் பார்த்து வரச் சொன்னார். ஜெயலலிதாவின் படத்தை அருகிலேயே வைத்துக்கொண்டு அந்தப் பெண் படுத்திருந்ததாக உதவியாளர் வந்து தகவல் தந்தார்.

ஜெயலலிதா, இப்போது யாருக்கும் தனது புகைப்படம் அனுப்பவில்லை. தமிழ்நாட்டின் நகர, கிராமங்களில் அவர் படத்தை வைத்துக்கொண்டு, நித்தமும் வழிபாடுகள் நடக்கின்றன `நலம்பெற வேண்டும்’ என்று!

சில வாரங்களுக்கு முன்னர் வரை தனக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனை, பரிகாரப் பூஜை - புனஸ்காரப் பிரசாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்ட ஜெயலலிதா, இப்போது அப்போலோவில் இருக்கிறார். ஆனால், நலமாக இல்லை!

p30b.jpg

சிறு காய்ச்சல் என்றுதான் அனுமதிக்கப்பட்டார். எல்லா பெரிய நோய்களுக்குமான முதல் அறிகுறி, காய்ச்சல்தான். ஹை சுகர் - லோ பிரஷர் இரண்டும் சேர்ந்து அவருக்கு லேசான தலைச்சுற்றலுடன்கூடிய மயக்கத்தைக் கொடுத்தது. மூச்சுத்திணறலும் இருந்தது. செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10:30 மணிக்கு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

சில மணி நேரங்களில் இயல்புக்குத் திரும்பினார்.

‘நாம் ராமச்சந்திராவில்தானே பார்ப்போம்?’ என, சுற்றி இருந்தவர்களிடம் கேட்டுள்ளார்.

‘மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக இங்கு அழைத்துவந்தோம்’ எனச் சொன்னார்கள்.

`உடனே வீட்டுக்குப் போய்விட வேண்டும்’ என, ஜெயலலிதா சொல்லி இருக்கிறார்.

‘காய்ச்சல் லேசாகக் குறையட்டும்’ என்றார்கள் மருத்துவர்கள். இயல்பாகத்தான் இருந்துள்ளார். அரசியல் பேசியிருக்கிறார். கருணாநிதியைப் பற்றியும் பேச்சு வந்துள்ளது. தனது உடலுக்கு யாரோ வசியம் வைத்துவிட்டதாகப் புலம்பியும் இருக்கிறார். காவிரி தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தைப் படித்துள்ளார்.

‘இந்த மாதிரியான கடினமான வார்த்தை தேவையா?’ எனக் கேட்ட ஆலோசகரிடம், ‘இருக்கட்டும்’ என்று ஜெயலலிதா சொல்லி யிருக்கிறார். இதை வைத்துத்தான் அதிகாரி களுடன் முதலமைச்சர் கலந்தாலோசனை செய்ததாக செய்தித் துறை அறிக்கை கொடுத்தது. இவை அனைத்தும் 24-ம் தேதி இரவு வரை மட்டுமே. அதன் பிறகுதான் நிலைமை மோசம் அடைந்தது. மூச்சுத்திணறல் அதிகமானது; காய்ச்சலும் குறையவில்லை.

இது சாதாரணக் காய்ச்சல் அல்ல; ‘செப்டிசீமியா’ (Septicemia) என்ற பாக்டீரியா கிருமித்தொற்று ஏற்பட்டதால் வந்த காய்ச்சல். ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஏராளமாகச் செலுத்தினார்கள். ஆனாலும் அந்தக் கிருமித் தொற்று அழியவில்லை. ஏனென்றால், அது நுரையீரல் வரை பாதித்துள்ளது. இதுதான் மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. இந்தத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிப்பதிலும் மருத்துவர்களுக்குக் குழப்பம் இருந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், காலில் ஓர் அறுவைசிகிச்சை செய்துகொண்டார் ஜெயலலிதா. அப்போதே இந்தக் கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் நினைக்கிறார்கள். தீவிரமான சர்க்கரை நோய் பாதிப்புகொண்டவர் என்பதால், அதற்கான உயர்சிகிச்சையையும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே எடுத்துக்கொண்டார். அதைவிட நுரையீரல் தொற்று, கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனாலேயே `வென்டிலேட்டர்’ எனப்படும் செயற்கை சுவாசக் கருவியின் உதவி அவருக்குத் தரப்பட்டது. அதுகூட போதுமானதாக இல்லை. லண்டனில் இருந்து வந்த மருத்துவர் ரிச்சர்டு பியெல், ‘ECMO’ எனப்படும் கூடுதல் கருவியின் பயன்பாட்டைத் தொடங்கிவைத்தார். நுரையீரலும் இதயமும் அதற்கான முறையான சுழற்சியைச் செய்யாமல்போகும்போது அதற்குப் பதிலாக இருந்து இந்தக் கருவி அந்தச் சுழற்சியைச் செய்யும். மூச்சுவிடத் தேவையான காற்றை இது செலுத்தும். இதைப் பொருத்திய பிறகு, சுவாசம் லேசாக மேம்பட்டது. ஆனால், ஒரே மாதிரி சீராக இல்லை. `முன்னேற்றம்’ `முன்னேற்றம் இல்லை’ எனச் சொல்வது இதை வைத்துத்தான்.

p30c.jpg

ஜெயலலிதாவுக்கு அடிப்படைப் பிரச்னையாக இருந்த, சிறுநீரகக் கோளாறைத் தாண்டிய பாதிப்பாக இதயமும் நுரையீரலும் ஆகிவிட்ட தால்தான், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நுரையீரல் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர் கில்நானியும், இதயநோய் சிறப்பு மருத்துவர் நிதிஷ்நாயக்கும் வந்துள்ளார்கள். இந்த நோய் பாதிப்புகளின் மூலமாக உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைந்தாலோ, பாதிக்கப்பட்டாலோ, அதைச் சரிசெய்வதில் உலக அளவில் புகழ்பெற்றவர் ரிச்சர்டு பியெல். இவர்களின் மேற்பார்வையில்தான்  சிகிச்சை நடக்கிறது. இதயத்துடிப்பு சீரான பிறகுதான் மற்ற நோய் பாதிப்புகளைச் சரிசெய்ய முடியும். அதனால்தான் தொடர்ந்து மருத்துவமனையில் அவர் இருந்தாக வேண்டிய நிர்பந்தம். அது எப்போது வரை என்பதை எந்த மருத்துவர் களாலும் கணிக்க முடியவில்லை.

து ஜெயலலிதா, அவராகவே வரவைத்துக் கொண்டதுதான். 14 மாதங்களுக்கு முன்னர் (15.07.2015) ‘ஆனந்த விகடனில்’, ‘நலம்தானா ஜெயலலிதா?’ என எழுதினோம். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்துவிட்டு வந்தது முதல் அவரது உடலும் மனமும் நலம் இல்லை. அப்போதே வெளிப்படையாக மருத்துவமனையில் சேர்ந்து, தொடர்ந்து சிகிச்சை எடுத்திருந்தால், இத்தகைய பெரும் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திருக்க முடியும். நோய்க்கிருமித் தொற்று முன்னரே அவருக்கு ஏற்பட்டுவிட்டது. அதைக் கால தாமதமாகத்தான் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள். `மருத்துவமனைக்குச் சென்று பார்த்தால், இமேஜ் பாதிக்கப்படும்’ என நினைத்திருக்கலாம். ஆனால், இன்று உடலே பாதிக்கப்பட்டுவிட்டது. இரண்டு மூன்று முறை அவர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றதும் ரகசியமாக வைக்கப்பட்டது. இரவு நேரத்தில் சென்றுவிட்டு அவசர அவசரமாகத் திரும்பினார். வீட்டில் ஓர் அறையையே மருத்துவமனை அறையாக மாற்றினார்கள்.

`நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இல்லை’ என்று இப்போது சொல்கிறார்கள் மருத்துவர்கள். அவர் உடலில், வெயிலும் வெளிக்காற்றும் படவில்லை. 24 மணி நேரமும் குளிர்சாதன வசதி வாழ்க்கை. `குறிப்பிட்ட சில மணி நேரமாவது ஏசி இல்லாமல் இருக்க வேண்டும்’ என, அவருக்கு மருத்துவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னார்கள். அதனால்தான் கொடநாடு சென்றார். `இயற்கைச் சூழலில் இருந்தால் ஏசி தேவைப்படாது’ என நினைத்தார். அங்கே தங்கியிருந்த இரண்டு மாத காலமும், பேட்டரி காரில் எஸ்டேட் உள்ளே சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார். அது அவரது உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கும் போகாமல், இங்கேயே இருந்துவிட்டார். முன்னர் எல்லாம் தேர்தல் சுற்றுப்பயணம் செய்வார். கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரப் பயணங்கள் அனைத்துமே ஒருசில நாட்களாகச் சுருக்கப்பட்டன. அந்த நாளிலும் சில மணி நேரங்களுக்குள் முடிந்தது. எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு தங்க மாட்டார். தங்கினாலும் அவருக்குப் பிடிக்கும் வகையில் அனைத்தும் மாற்றி அமைக்கப்படும். வெளிவாசமே இல்லாமல்போனது. வெளிவாசமே அவருக்குப் பிடிக்காமல்போனது. போயஸ் கார்டன் மட்டுமே உலகம். அதைத் தவிர வேறு எதுவுமே தேவை இல்லை. வேண்டாம் என நினைத்தார். சர்க்கரைச் சத்து கூடிக்கொண்டேபோனாலும், தொடர்ந்து இனிப்புகளைச் சாப்பிட்டார். 

அவரது பிடிவாதக் குணம், சினிமாவில் கம்பீரமான நடிகையாகக் காட்டியது; அரசியலில் இரும்பு மனுஷியாகக் காட்டியது. ஆனால், உடம்பு? அதன் வேலையைக் காட்டிவிட்டது.

‘எனக்கு ஐஸ்க்ரீம்னா ரொம்பப் பிடிக்கும். அதுவும் டூட்டி ஃபுரூட்டி ஐஸ்க்ரீம்னா உயிர். ஆகையால், என் நாய்க்கு ‘ஃபுரூட்டி’ எனப் பெயர்’ என்று ஹீரோயினாக இருந்த காலத்தில் (1968) பேட்டி கொடுத்தார் ஜெயலலிதா. அதேபோல் 68 வயதிலும் இருக்க முடியுமா?

‘எனக்குப் பிடித்த...’ என்ற தலைப்பில், ‘தாய்’ இதழில் ஜெயலலிதா ஒரு தொடர் எழுதினார். எனக்குப் பிடித்த தலைவர், மொழி, இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். அதில் ஒன்று, ‘எனக்குப் பிடித்த பிடிவாதக்காரி’ என்பது. பிரான்ஸ் தேசத்தில் சேவியர் என்கிற அரசு வழக்குரைஞர் இருந்தாராம். அவரது மனைவி பெயர் மேடம் ரேனியர். ‘வாயை மூடு!’ என ரேனியரிடம் சேவியர் சொன்னாராம். இதனால் கோபமான ரேனியர், தனது வாழ்நாள் முழுக்க யாரிடமும் பேசாமல் வாழ்ந்துள்ளார். சுமார் 30 ஆண்டுகள் சைகையால் பேசியே ரேனியர் வாழ்ந்துள்ளார். இவரைத்தான் தனக்குப் பிடித்த பிடிவாதக்காரியாக ஜெயலலிதா எழுதினார். அவர் அந்தக் காலத்தில் நிறையப் படித்தார். அப்படியே வாழவும் நினைத்தார். அவரது கையில், இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட் தாட்சர் பற்றிய புத்தகம் எப்போதும் இருக்கும். தாட்சர் மாதிரி ஆக வேண்டும் என நினைத்தார். தமிழ்நாட்டு தாட்சராகவும் ஆனார்.

ழக்கமாக எல்லா நடிகைகளிடமும் கேட்கும் கேள்விதான் ஜெயலலிதாவிடமும் அப்போது (1969) கேட்கப்பட்டது. ‘திரைப்படங்களில் நடிக்க வராமல் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?’ என்ற கேள்விக்கான பதிலில், கடைசி விருப்பமாகத்தான் அரசியலைச் சொன்னார் ஜெயலலிதா.

‘எனக்கு ஆங்கில இலக்கியம் படித்துப் பட்டம் வாங்க வேண்டும் என்று ஆசை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படம் போடக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆசை. பாலசரஸ்வதி, யாமினி கிருஷ்ணமூர்த்தி இவர்களைப்போல கிளாசிக்கல் நடனத்தில் உலகப் புகழ்பெற வேண்டும் எனவும் ஆசைப்பட்டேன். அரசியலில் தீவிரமாக இறங்கி பெரிய அரசியல்வாதி ஆக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால், சினிமாவுக்கு வந்து நடிப்போம் என, கனவிலும் நினைக்கவில்லை. எல்லாம் ‘தலைவிதி’தான். என்ன... கொஞ்சம் அதிர்ஷ்டமான தலைவிதி’ என்று பதில் அளித்தார் ஜெயலலிதா. அந்த அதிர்ஷ்டமான தலைவிதிகூட சில ஆண்டுகள்தான். அதையும் தாண்டிய பேரதிர்ஷ்டமான தலைவிதியாக அவரது அரசியல் வாழ்க்கை அமைந்துவிட்டது.

p30d.jpg

‘அம்மா’ என்ற இந்த இடத்துக்கு, அவர் சும்மா வந்துவிடவில்லை. எம்.ஜி.ஆர் கொடுத்தது, அ.தி.மு.க உறுப்பினர் அட்டையும் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும்தான். ஜெயலலிதா, மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் வென்று முதல் அமைச்சர் ஆனவர். எம்.ஜி.ஆர் மட்டும்தான் தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். ஜெயலலிதாவும் இரண்டாவது முறையும் தொடர்ந்தார். எம்.ஜி.ஆரின் இரண்டாவது முறை தொடர் வெற்றியிலும் ஜெயலலிதாவின் பங்கு இருக்கிறது. எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்தபோது, நாடு முழுக்கச் சென்று பிரசாரம் செய்தவர் ஜெயலலிதாதான். இதுதான், நாடு முழுக்க அவருக்குப் பெயரைக் கொடுத்தது; கட்சி முன்னணியினரிடம் பொறாமையை விதைத்தது. தனி ஆவர்த்தனம் செய்கிறார் எனச் சொல்லி, அவர் வகித்த கொ.ப.செ.பதவியைப் பறித்தார்கள். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு அறை ஒதுக்காமல் தடுத்தார்கள். சென்னை விமானநிலையத்துக்கு வந்து இறங்கிய எம்.ஜி.ஆரைப் பார்க்கவிடாமல் சிறைவைத்தார்கள். பல மாதங்கள் கழித்துத்தான் அவரால் எம்.ஜி.ஆரைச் சந்திக்க முடிந்தது. மீண்டும் அந்தப் பொறுப்பு, காத்திருந்துதான் கிடைத்தது. எம்.ஜி.ஆர் இறந்தபோது அவரது தலை அருகில் பல்வேறு அவமானங்களுடன் ஜெயலலிதா நின்றார். உடல் தாங்கிய ராணுவ வாகனத்தில் இருந்து ஜெயலலிதா இறக்கிவிடப் பட்டார்.

அதுவரை உழைத்த ஜெயலலிதாவைப் புறக்கணித்துவிட்டு, வீட்டுக்குள் முடங்கியிருந்த ஜானகியைக் கொண்டுவந்தார்கள். கட்சி உடைந்தாலும், இரட்டை இலை முடக்கப்பட்டாலும், தலைமைக்கழகம் மூடப்பட்டாலும் ஜெயலலிதா முன்னுக்கு வந்துவிடக் கூடாது என்று பெருங்கூட்டம் திட்டமிட்டது. ஆனால், ஜெயலலிதாதான் வென்றார்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு தான் தான் என்பதை நிரூபித்தார். ஜானகியே வீடு தேடிவந்து சமாதானம் பேசினார். கட்சி கிடைத்தது; சின்னம் கிடைத்தது; தலைமைக் கழகம் கிடைத்தது; தமிழ்நாடே கிடைத்தது. இரண்டு தேர்தல் களில் பறிகொடுத் தாலும் மூன்று தேர்தல்களில் மீட்டார். இப்போதும் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்.

p30e.jpg

‘பெண் என்பதால், நான் எந்தச் சிறப்புச் சலுகையும் அனுபவிக்கவில்லை. பெண் என்பதால், எதுவும் கிடைத்துவிடாது. அதுவும் அரசியலில் அது சாத்தியமும் இல்லை’ என்று ஒருமுறை சொன்னார் ஜெயலலிதா. `அதற்காக, பெண்ணாகப் பிறந்துவிட்டோம் என்று நான் ஒருபோதும் வருத்தப்படவில்லை’ என்றும் ஜெயலலிதா சொன்னார்.

பெண் என்பதால், அவர் அவமானப் படுத்தப்பட்டார்; தூற்றப்பட்டார்; கொச்சைப் படுத்தப்பட்டார். இதைத் துடைத்தெறிந்துவிட்டு ஒவ்வொரு முறையும் வென்ற ஜெயலலிதா, பட்ட அவமானங்களுக்கு பழிவாங்கத் துடித்ததுதான் அவருக்குப் பெரும் கெட்ட பெயர்களையும் விமர்சனங்களையும் விதைத்தது. ‘நான் கடுமையாக இருக்கிறேன் என்பது உண்மைதான். அப்படி இல்லை என்றால், எனக்கு ஏற்பட்ட கரடுமுரடான நிலையில் இருந்து மீண்டு வந்திருக்க முடியாது’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டார். ‘நான் யாரோடும் இணக்கமாக இல்லை என்கிறார்கள். அது முழு உண்மை அல்ல. எனக்கும் அனுசரிக்கும் திறன் உண்டு. அதே நேரத்தில் யாருக்காகவும் விட்டுக் கொடுத்துவிட மாட்டேன்’ என்று சொல்லிக் கொண்டவரும் ஜெயலலிதாதான். ‘உங்களுக்குள் ஒரு சர்வாதிகாரி ஒளிந்துள்ளாரா?’ என்று ஜெயலலிதாவிடம் கேட்கப் பட்டது. ‘ஓர் ஆண் அப்படி இருந்தால் `வலிமையானவன்’ என்பீர்கள். பெண் அப்படி இருந்தால் சர்வாதிகாரமா?’ என்று திருப்பிக் கேட்டு அந்தக் கேள்வியை உடைத்தார்.

p30f.jpg

மகாபாரத்தில் பீஷ்மர் பாத்திரம் தான் ஜெயலலிதா வுக்குப் பிடித்தது. கதை சொல்லும்போது எல்லாம் பீஷ்மரைச் சொல்வார். செய்து கொடுத்த சத்தியத்துக்காக அரசாட்சியையும் துறந்து, மணவாழ்க்கையையும் துறந்தவர் பீஷ்மர். போர்க் களத்தில் அம்புகள் பாய்ந்து பீஷ்மர் படுத்திருந்ததைப் போல நோய்ப் படுக்கையில் இருக்கிறார் ஜெயலலிதா.

மகா உழைப்பு  காக்க வேண்டும்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

"ஒரு வேளை நடிக்க வராவிட்டால் தீவிர அரசியலில் ஈடுப்பட்டிருப்பேன்" - 1969ல் ஜெயலலிதா #Flashback

jayalalitha-actress-turned-politician_10

ஜெயலலிதா - செய்தியாளர்களேயே சந்திக்காதவராகவும், பத்திரிக்கையாளர்களிடம் சினேகபூர்வமாக இல்லாதவராகவும், பொதுவாகவே இறுக்கமானவராகவும் கடந்த 20 ஆண்டுகளாக மாறிவிட்டார். ஆனால் உண்மையில் அது அவரின் குணமல்ல. எம்ஜிஆர் பிரியத்துடன் ஜெயலலிதாவை அழைக்கும் அம்மு என்கிற பெயர்தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவரின் சளசளக்கும் பேச்சுக்காக இவருக்கு முதல் முதலில் எம்ஜிஆர் வைத்த பட்டப்பெயர் "வாயாடி" அனைவரும் பம்மிக்கொண்டு இருக்கும்போது அவரிடம் சரிக்கு சரியாய் 'கவுண்டர்' கொடுப்பதால் அந்தப் பெயரை அவர் வைத்தாராம். 

ஜெயலலிதாவிடம் 1969-ம் ஆண்டு விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில் இரண்டே கேள்விகள்தான் கேட்கப்பட்டது. அதற்கு வெள்ளந்தியான மனதுடன் பதில் சொல்லியுள்ளார். அந்த பேட்டியில் அவருடன் நடித்த நடிகர்கள் பற்றியும், நடிகையாக ஆகவில்லை என்றால்? என்கிற டெம்ப்ளேட் கேள்விக்கும் அவரின் பதில்கள் கீழே...

" நான் நடித்த நாயகர்களில் எம்ஜிஆருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் நான் சில கன்னடப்படங்களில் நடிக்க துவங்கியிருந்தேன். அப்போது பந்துலு அவர்களின் தயாரிப்பில் ஒரு கன்னடப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தையும் பந்துலு தயாரிப்பதால் அதிலும் என்னை நடிக்க வைக்க எம்ஜிஆரிடம் அனுமதி கேட்டார். அப்போது நடித்துக்கொண்டிருந்த கன்னடப்படத்தை ரஷ் பார்த்தபின் உறுதி சொல்கிறேன் என எம்ஜிஆர் சொன்னார். படம் பார்த்தபின் என்னைப்பார்க்கவே இல்லை, பந்துலு பக்கம் திரும்பி சரி என தலையாட்டிவிட்டு சென்றுவிட்டார். எனக்கு பயங்கர சந்தோஷமாகிவிட்டது.  எம்ஜிஆர் - எல்லோரிடமும் சரிசமமாக பழகுவார். அதேபோல் அனைவரிடமும் மரியாதையாக பேசுவார். ஒரு போதும் அது குறையாது. 

"நடிக்க வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள்?" 

'எனக்கு ஆங்கில இலக்கியம் மீது ஆர்வம் அதிகம். கண்டிப்பாக ஆங்கில இலக்கியத்தை கரைத்து குடித்திருப்பேன் அல்லது ஓவிய ஆசிரியாராக ஆகி இருந்திருப்பேன். காரணம் ஓவியத்திலும் ஆர்வம் அதிகம் எனக்கு. 

22-1432280557-mgr3_10108.jpg

மற்ற நடிகர்கள் பற்றி கேட்டபோது ஜெயலலிதா சொன்ன பதில்கள்:

சிவாஜி 

சிவாஜி அவர்களுடன் முதல் முதலில் கலாட்டா கல்யாணம் படத்தில் நடிக்கிறேன். முதல் சீன் ஒரு காதல் காட்சி. நான் சாதாரணமாக இருந்தாலும் சிவாஜி உணர்ச்சிகரமான வசனம் பேச வேண்டிய நேரத்தில் சிரித்து விடுவார். அதனால் இரண்டு, மூன்று டேக் போனது. " நான் உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டும் ஆனால் உன்னுடன் நடிக்கும்போது உன்னை குழந்தையாக கையில் தூக்கி வைத்து விளையாடியது நினைவுக்கு வந்துவிடுகிறது" என குறிப்பிட்டார். என்னை அப்படியேதான் பார்த்தார்.

ஜெய்சங்கர் 

செட்டில் விளையாட்டுதனமாக இருப்பார்.எதைப்பற்றியும் அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டார்.  அனாவசியமான பாலிடிக்ஸ் கிடையாது. யாரைபற்றியும் தேவையின்றி பேசமாட்டார். 

ரவிச்சந்திரன்

 இவர் என்னுடன் நடித்த முதல்படத்தில் காட்டிய அக்கறையை அதன் பின்னர் இழந்துவிட்டார் என்றுதான் நினைக்கிறேன்.  கதாநாயகனுக்குரிய முகவெட்டு,தோற்றம்,நடை, என அனைத்தும் இருந்தாலும் அதை அவர் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று சொல்லலாம். 

எஸ்.எஸ்.ராஜேந்திரன்

 கணீர் கணீர் என மணியடித்தது போன்ற இவரின் வசன உச்சரிப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மணிமகுடம் படத்தில் இவருடன் நடித்தேன். வசனங்களை கையில் கொடுத்தால் முதல் முறை படிக்கும்போதே அதை பலமுறை படித்தது போன்று ஏற்ற இறக்கமாக வாசிப்பார்.

ஏ.வி.எம் ராஜன்

இவருடன் மேஜர் சந்திரகாந்த் படத்தில் நடித்தது. அப்போது செட்டில் யாருடனும் பேசமாட்டார். அவருண்டு அவர் வேலை உண்டு என இருப்பார். செட்டில் கூட கலகலவென பேசியோ சிரித்தோ பார்த்ததே இல்லை.

பாலசரஸ்வதி

 யாமினி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைப்போல 'கிளாசிக்கல்' நடனம் ஆட வேண்டும் என ஆர்வம் அதிகம். அதில் ஈடுபட்டிருப்பேன். அவ்வளவு ஏன் அரசியலிலும் ஆர்வம் அதிகம் உண்டு. ஒரு வேளை நடிக்க வராவிட்டால் தீவிர அரசியலில் ஈடுப்பட்டிருப்பேன். தேர்தல் - இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பேன்" என அதில் தெரிவித்திருந்தார். 

இதில் நடனம் ஓவியம் தவிர அனைத்திலும் வெற்றிகரமாக பிற்காலத்தில் சாதித்துக்காட்டியவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/70238-if-not-an-actor-i-would-have-involved-in-politics--jayalalithaa-1969-flashback.art

Link to comment
Share on other sites

அப்போலோவில் ஜெயலலிதா : 30 நாட்கள் - 30 அதிர்வுகள்! #GetWellSoonCM

j13_11585.jpg

மிழக முதலமைச்சர் ஜெயலலிதா, செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் அட்மிட் ஆனார். இன்றோடு சரியாக ஒரு மாதம் ஆகிறது. ஜெயலலிதா அட்மிட் ஆனது முதல், இன்றுவரை தமிழகத்தின் ஒவ்வொரு அசைவையும் அப்போலோ ஆக்கிரமித்துள்ளது. அப்போலோ, தமிழக மக்களின் பேச்சில் தவிர்க்க முடியாத அங்கம்; ஊடகங்களின் காட்சிகளில் தலைப்பு; இன்றைய தமிழக அரசியலுக்கு குவி மையம்; தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை நகர்த்த, அப்போலோவில் இருந்து கட்டளை வர வேண்டும். இப்படி  கடந்த 30 நாட்களில், அப்போலோவை மையமாக வைத்து, தமிழகம் சந்தித்த 30 அதிர்வலைகள்... 

 

1.போயஸ் கார்டன் டூ அப்போலோ 

p14d_11597.jpg

போயஸ் கார்டன், வேதா நிலையம். 2016 செப்டம்பர் 22. இரவு 9.30 மணிவரை மேட்டிமையான அந்தப் பகுதி, வழக்கமான கனத்த மௌனத்துடன், அமைதியாகத்தான் இருந்தது. இரவு 9.30-க்குப்பிறகு, அந்த அமைதி கலைந்தது. வேதா நிலையத்தில் இருந்து சீறிக்கிளம்பிய ஆம்புலன்ஸ், சென்னை, கீரிம்ஸ் லைனில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் போய்நின்றது. அதில், தமிழக முதலமைச்சர், ஒரு கோடி தொண்டர்களை வைத்திருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மிகப்பெரிய அரசியல் கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா,  உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக வந்து சேர்ந்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவருடைய இன்ப துன்பங்கள் அனைத்திலும் நிழலாய்த் தொடரும் சசிகலா கண்ணீரோடு பின் தொடர்ந்தார். அப்போது நேரம் 10.15.

 

2.அப்போலோ அறிக்கை ‘ஸ்டார்ட்’

செப்டம்பர் 23 - நள்ளிரவு 1 மணிக்கு, “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சாதரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வுக்கு சிகிச்சை பெற அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்” என்று அதிகாரப்பூர்வமாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஊடகங்களிடம் இந்தச் செய்தி காட்டுத் தீயாய்ப் பரவியது. நிருபர்களின் செல்போன்கள் அலறிய அலறலில், அக்டோபர் 22-ம் தேதி இரவு அமைதி இழந்தது. ஊடகங்கள் மூலம் செய்தி அறிந்த தமிழகம் படபடத்துப் பரபரத்தது. 


3.எதிர்முகாமில் இருந்து வாழ்த்து!

309722-stalin_12494.gif

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் தவித்தனர்; அமைச்சர்கள் அப்போலோவில் குவிந்தனர்; அதிகாரிகள் அப்போலோவைக் காவல் காத்தனர்; ஜெயலலிதா விரைவில் குணமடைய, எதிர்கட்சித் தலைவர்கள் வரிசையாக வாழ்த்துச் சொன்னார்கள். ஆனால், இவை அனைத்தையும் மங்கவைத்தது தி.மு.க தலைவர் கருணாநிதியின் அறிக்கை. செப்டம்பர் 24-ம் தேதி வெளியான அந்த அறிக்கையில், “முதல் அமைச்சர் ஜெயலலிதாவோடு கொள்கை அளவில் வேறுபட்டாலும், விரைவில் உடல்நலம் பெற்று பணியினைத் தொடர வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார் கருணாநிதி. 


4. தேர்தல் அறிவிப்பும்... வேட்பாளர் பட்டியலும்...

தமிழக முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தபோதும், மாநிலத் தேர்தல் ஆணையம் கனகச்சிதமாகச் செயல்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானது. செப்டம்பர் 25-ம் தேதி அறிவிப்பு வெளியானதும், ரத்தத்தின் ரத்தங்கள் யாருக்கு சீட்? எங்கே சீட்? என்று வேகம் காட்ட ஆரம்பித்தனர். அதில்,  தங்கள் தலைவியை கொஞ்சம் மறந்தனர். அவர்களுக்கு அடுத்த ஆச்சரிய அதிர்ச்சியை அ.இ.அ.தி.மு.க தலைமைக்கழகம் கொடுத்தது. அ.தி.மு.க சார்பில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, மறுநாளே வெளியிட்டது. சீட் கிடைத்தவர்கள், அம்மாவின் உடல்நிலையை மறந்து கொண்டாடினார்கள்... சீட் கிடைக்காதவர்கள்,  இது அம்மாவின் ஒப்புதல் பெறாத பட்டியல் என்று புலம்பினார்கள். 


5. வதந்திகளும்... முதல் எச்சரிக்கையும்... 

j18_12042.jpg

ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஏராளாமான வதந்திகள் தீயாய்ப் பரவின. கிட்னி பாதிப்பு, நுரையீரலில் பிரச்னை, இதயக் கோளாறு என்று தொடங்கியவர்கள் மூளைச்சாவில் கொண்டுபோய் நிறுத்தினார்கள். சிங்கப்பூருக்கு ட்ரீட்மெண்டுக்குப் போகிறார் ஜெயலலிதா என்றனர். பதறிப்போன அரசாங்கம், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தை வைத்தே, முதல் எச்சரிக்கை மணியை அடித்தது. செப்டம்பர் 25-ம் தேதி, அப்போலோ வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார். அவர் வெளிநாடு செல்லத் தேவை இல்லை. தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

 

6. நான் அம்மா பேசுகிறேன்...

‘நான் உங்களின் அம்மா பேசுகிறேன். நான் நலமாக இருக்கிறேன்..’ என்று ஜெயலலிதாவே பேசுவதுபோல், வாட்ஸ்-அப்பில் ஒரு குரல் பேசியது. தமிழகம் முழுவதும் அது  வைரலாகப் பரவியது. ஜெயலலிதா உடல்நிலை குறித்து, பரவிய வதந்திகளில் இதுதான் உச்சம். ஆனால், அந்தக்குரலுக்கும் ஜெயலலிதாவின் குரலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 

 

7. ஜெ-யின் ஆலோசனையும்... மு.க-வின் கேள்வியும்...

“அப்போலோ மருத்துவமனையில் வைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஒரு மணிநேரம் நடந்த அந்தக் கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக பேசப்பட்டது” என்று தமிழக அரசு சொன்னது. தமிழக அரசின் இந்தச் செய்திக்குறிப்பு வெளியானதும், தி.மு.க தலைவர் கருணாநிதியின் சாட்டையடி அறிக்கை ஒன்று வெளியானது. அதில், முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தும் அளவுக்கு நலமாக இருக்கிறார் என்றால், அந்த ஆலோசனைக்கூட்டத்தின் போட்டோவை வெளியிட வேண்டியதுதானே” என்று கேள்வி எழுப்பினார். மு.க-வின் கேள்வியில், அரசாங்கத்தின் சப்தநாடியும் அடங்கியது. 


8. மன்னார்குடி டாக்டர்கள்... 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, விலகி இருந்த மன்னார்குடி சொந்தங்கள், நெருங்கத் தொடங்கின. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவை, மன்னார்குடி டாக்டர்கள் கட்டுப்படுத்தினார்கள். டாக்டர் சிவக்குமார், திவாகரனின் மகள் டாக்டர் மதாங்கி, அவருடைய கணவர் டாக்டர் விக்ரம் பிரதானமாக இருந்தனர். அதுபோல, அப்போலோவைச் சுற்றி, திவாகரன், மகாதேவன், ராவணனின் நடமாட்டம் காணப்பட்டது. இது கட்சியைக் கொஞ்சம் கலங்கடித்தது.

 

9. அரச குடும்பங்களின் டாக்டர்! 

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க, பிரத்யோகமாக, லண்டன்  டாக்டர் ரிச்சர்ட் பியேல் சென்னை வந்தார். உலகம் முழுவதும் சுற்றி மருத்துவம் பார்க்கும் இவர், சவூதி அரச குடும்பம், புருனே சுல்தான், வல்லரசு நாடுகளின் அதிபர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்.  லண்டனின் புகழ்பெற்ற கைய்ஸ் அன்டு செயின்ட் தாமஸ் மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் மற்றும் வலி தொடர்பான சேவை, அறுவை சிகிச்சைக்கு முந்தைய, பிந்தைய சேவை பிரிவின் இயக்குனராகப் பணியாற்றுபவர். நுரையீரல் பாதிப்பு, ஸெப்ஸிஸ் (செப்டிசீமியா) எனப்படும் பாக்டீரியா தொற்று ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பாதிப்பு, செயற்கை சுவாசம், உடல் உறுப்புக்கள் செயல் இழந்தவர்களுக்கான சிகிச்சையில் ரிச்சர்ட் நிபுணர். 


10. மேதகு ஆளுநர் வருகை!

vidyasagarrao_3030589f_11011.jpg

10 நாட்கள் கடந்த பின்னும், ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று என்று தமிழகத்துக்கே தெரியாவில்லை. டெல்லிக்கு சுத்தமாகப் புரியவில்லை. வேறு வழியில்லாமல் கவர்னரை அனுப்பி அறிக்கை வாங்கியது மத்திய அரசு. மாநில முதலமைச்சர் ஒரு வாரத்துக்கு மேலாக, யாரும் அணுக முடியாத நிலையில் இருப்பது, நாட்டுக்கு நல்லதல்ல என்பதால், தமிழக ஆளுநர் வித்யாசாகர் அக்டோபர் 1-ம் தேதி, அப்போலோ வந்தார். அரைமணிநேரம் அங்கிருந்தவர், “முதல்வர் உடல்நலம் தேறிவருகிறார். மருத்துவர்கள் அவருக்கு அளித்துவரும் சிகிச்சை  திருப்திகரமாக உள்ளது’ என்று அறிக்கை வெளியிட்டார். அது தமிழகத்தை கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்தது. 

 

11 அரசாங்கத்துக்கு பொறுப்பு இருக்கிறது!

“ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மருத்துவமனையில் இருக்கிறார். அவரை அமைச்சர்கள் பார்க்கமுடியவில்லை; கவர்னர் பார்க்கவில்லை; மத்திய அமைச்சர் நேரில் நலம் விசாரிக்கவில்லை; அவருக்கு என்ன ஆனது என்பது மர்மமாக இருக்கிறது. எனவே, முதலமைச்சர் உடல்நிலை பற்றி, அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும்” என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், கருத்துத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், “முதலமைச்சரின் உடல்நிலை பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை” என்று அறிவித்தது. 

 

12. உள்ளாட்சித் தேர்தல் ரத்து!

தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்த உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அக்டோபர் 4-ம் தேதி இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, உள்ளாட்சித் தேர்தல் வேலைகளில் பிஸியாக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் மீண்டும் அப்போலோவுக்கு வந்தனர். 

 

13. அபாயகட்டம்!

இந்து ஆங்கில நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி, தன்னுடைய ட்வீட்டரில் ஒரு செய்தியை பதிவிட்டார். அதில், “முதலமைச்சர் ஜெயலலிதா அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டார்” என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அதுவரை முதலமைச்சர் ஜெயலலிதா அபாயகட்டத்தில் இருந்தார் என்பதே யாருக்கும் தெரியாது. மாலினி பார்த்தசாரதியின் ட்வீட்டுக்குப் பிறகுதான், ஜெயலலிதா அபாயகட்டத்தில் இருந்தார் என்பதே தமிழகத்துக்குப் புரிந்தது.

 

14. எய்ம்ஸ் டாக்டர்கள்!

j15_11305.jpg

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பரிசோதிக்க, அக்டோபர் 5-ம் தேதி, 3 மருத்துவர்கள் வந்தனர். அவர்களில் டாக்டர் கில்நானி நுரையீரல் சிறப்பு மருத்துவர். டாக்டர் அஞ்சன் டிரிக்கா மயக்கவியல் துறை சிறப்பு நிபுணர். டாக்டர் நிதிஷ்நாயக், இதயநோய் சிறப்பு மருத்துவர். இத்தனை டாக்டர்களின் வருகைக்குப் பிறகு, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை அபாயகட்டத்தில் இருக்கிறது என்பதை தமிழகம் உறுதியாகப் புரிந்து கொண்டது. 

  

15. மன்மோகன் சிங்கின் டாக்டர்

எய்ம்ஸ் டாக்டர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தது, கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது. அவர்களை வைத்து உளவு பார்க்கிறார் மோடி என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கொளுத்திப் போட்டார். வந்திருந்தவர்களில் டாக்டர் நிதிஷ் நாயக், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆஸ்தான மருத்துவர் என்பது மற்றொரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பியது.

 

16. சொல்லாமல் சொன்ன அப்போலோ!

அக்டோபர் 6-ம் தேதி, அப்போலோ மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கை கொஞ்சம் வில்லங்கமாக இருந்தது. அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் பிரச்னை, செயற்கை சுவாசம் அளிக்கப்படுவது, நோய்த் தொற்றுப் பிரச்னைகள் இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருந்தன. பாசிவ் பிசியோதேரபி அளிக்கபடுகிறது என்று சொல்லப்பட்டது. 

subramanian-swamy-narendra-modi-pti_650x

17. கைவிட்ட மோடி!

உச்ச நீதிமன்றம் அக்டோபர் 3-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அக்டோபர் 4-ம் தேதிவரை அதற்கு கெடு விதித்தது. ஆனால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை கணக்குப்போட்ட மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மறுத்தது. அதோடு, டெல்லியில் மோடியைச் சந்திக்கச் சென்ற 47 எம்.பி-க்களையும் பார்க்க மறுத்து, வாசலோடு திருப்பி அனுப்பினார் பிரதமர் நரேந்திர மோடி. ஜெயலலிதா நலமுடன் இருந்திருந்தால், இவ்வளவு பெரிய துரோகத்தை நிச்சயம் மத்திய அரசு செய்திருக்காது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

18. ஜனாதிபதி ஆட்சி! - சுவாமியின் குரல்

பரபரப்புக்குப் பெயர் போன சுப்பிரமணிய சாமி, “முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் எப்போது குணம்பெற்றுத் திரும்புவார் எனத் தெரியவில்லை. அதனால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்” என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதினார். தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 


19. ராகுல் வந்தார்!

apollo4454455-07-1475843989_12333.jpg

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று சுவாமி எழுதிய கடிதம்,  பி.ஜே.பி எம்.பி என்று அச்சிடப்பட்ட லெட்டர்பேடில் எழுதியது. இது சுவாமியின் குரல் அல்ல. மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யின் குரல் என்று தமிழக அரசியல் களத்தில் அனல் அடித்தது. இந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கு செக் வைக்க நினைத்த ராகுல் காந்தி, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அப்போலோ வந்தார். பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகுல், எங்களின் ஆதரவு அ.தி.மு.க.வுக்கு உண்டு என்று சொல்லி ஆளும் பி.ஜே.பி முகத்தில் கரியைப் பூசினார்.

 

20. ஓரணியில் எதிர்கட்சிகள்!

ராகுல் காந்தி வந்ததையடுத்து, வரிசையாக எதிர்கட்சித் தலைவர்கள் அப்போலோ வந்தனர். கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் வருகை அதில் முக்கியமானது. இவர்கள் அனைவரும், அப்போலோவில் வைத்து, ஜனாதிபதி ஆட்சி என்றால், அதை நாங்கள் எதிர்ப்போம் என்று சொன்னார்கள். இதன்மூலம், மத்திய அரசின், ‘ஜனாதிபதி ஆட்சி’ என்ற மிரட்டல் பூமரங்காக மாறி மோடி அரசையே திருப்பித் தாக்கியது.

 

21. முகம் மாறிய பி.ஜே.பி!

தமிழகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கியது பி.ஜே.பி. அக்டோபர் 10-ம் தேதி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை அனுப்பி சமாதானக் கொடியைக் காட்டியது. அப்போலோவுக்கு வந்த அவர், கவர்னரையும் சந்தித்தார். “ஜெயலலிதாவின் உடல்நிலையை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இல்லை. அவர்கள் கேட்பதை செய்து கொடுங்கள்” என்று இறங்கிப் பேசினார். 


22. பழைய பன்னீர் செல்வம்!

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சென்றதற்கு மறுநாள், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அதில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் துறைகளை, மூத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கவனிப்பார் என்று குறிப்பிட்டு இருந்தார். இது முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் கவர்னர் அறிக்கை சொன்னது. இதன்மூலம், 2 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ், இந்த முறை முதலமைச்சரின் துறைகளைக் கவனிக்கும் மூத்த அமைச்சராக வலம் வர ஆரம்பித்துள்ளார். 

 

23. ஸ்டாலின் வாழ்த்து-கருணாநிதி எதிர்ப்பு!

ஜெயலலிதாவின் இலாக்கக்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு கொடுக்கப்பட்டதை அடுத்து மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தார். ஆனால், அதற்கு முற்றிலும் நேர் எதிராக கருணாநிதி விமர்சனம் செய்தார். அது தி.மு.க-வில் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

 

24. வதந்திகள்... கைதுகள்...

j17_12030.jpg

ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்திகளை கட்டுப்படுத்தமுடியாமல் திணறிய காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியது. நாமக்கல்லைச் சேர்ந்த  சதிஷ்குமார், மதுரை மாடசாமி, கோவையில் வங்கி ஊழியர்கள் ரமேஷ்,சுரேஷ், தூத்துக்குடி ஆண்டனி சேசுராஜ், சென்னை  திருமணி செல்வம், பாலசுந்தரம் என்ற 7 பேரைக் கைது செய்தது. 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வதந்திகளுக்காக கைதுகள் தொடரலாம்.

 

25. அமித்ஷாவும் அருண் ஜெட்லியும்!

ராகுல் காந்தி வந்ததையடுத்து, பி.ஜே.பி சார்பில், அதன் தேசியத் தலைவர் அமித்ஷாவும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் அப்போலோவுக்கு வந்து அட்டென்டஸ் போட்டனர். 

26. ரகசியமாக வந்த ரஜினி!

அக்டோபர் 16-ம் தேதி, ஜெயலலிதாவின் பக்கத்து வீட்டுக்காரரான நடிகர் ரஜினிகாந்த் ரகசியமாக அப்போலோ மருத்துவமனைக்கு வந்துவிட்டுப்போனார். அதன்பிறகு, அவரும் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்றுவிட்டார்.

 

27. ராஜாத்தி-சசிகலா சந்திப்பு!

rasathi_12577.jpg

அப்போலோ மருத்துவமனையில்போய், மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி விசாரித்தார். இதையடுத்து, ராஜாத்தி அம்மாள் அப்போலோ மருத்துவமனைக்குப்போய் சசிகலாவை சந்தித்தார். மு.க.ஸ்டாலின் போனது கருணாநிதிக்கு கடைசி வரை தெரியாது. ராசாத்தி அம்மாள் அப்போலோவுக்குப் போனது, கருணாநிதியைத்  தவிர, தி.மு.க-வில் வேறு யாருக்கும் தெரியாது. ஏற்கனவே நல்ல அறிமுகம் உள்ள ராசாத்தி அம்மாளும் சசிகலாவும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

 

28) 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும் முதல் ஆளாக அந்தத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது அ.தி.மு.க.

 

29. சிங்கப்பூர் டாக்டர்கள்! 

j14_12324.jpg

லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டநிலையில், தற்போது ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவர்களுடன் சேர்ந்து பார்த்துக் கொள்வது சிங்கப்பூர் டாக்டர்கள். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் பணிபுரியும் இவர்களில் ஒருவர் மூச்சுப் பயிற்சி நிபுணர். மற்றொருவர் பிசியோ தெரபிஸ்ட். 

 

30. ஜெ.நலமுடன் இருக்கிறார்  

apollo_12552.jpg

 

ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஒருமாதம் ஆகும் நிலையில், ஆங்கில ஊடகங்கள் போட்டிபோட்டுக் கொண்டு, அவர் குணமடைந்துவிட்டார்; நலமுடன் இருக்கிறார் என்று செய்திகள் வெளியிட்டு வந்தன. இந்தநிலையில், அப்போலோ மருத்துவமனை நேற்று(21-ம் தேதி) ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், முதலமைச்சர் ‘இன்டிராக்ட்’ செய்கிறார். ஊட்டச்சத்துக்கள் அவருக்கு அளிக்கப்படுகிறது. ஆனாலும், ரெஸ்பரைட்டரி சப்போர்ட்டில் இன்னும் இருக்கிறார் என்றும் சொல்லி இருந்தது.  

 

http://www.vikatan.com/news/coverstory/70272-jayalalithaa-in-apollo--30-days-and-30-incidents.art

Link to comment
Share on other sites

அதே அக்டோபர்... அன்று எம்.ஜி.ஆர்... இன்று ஜெயலலிதா! #FlashBackMemories

mgramerica600_13381.jpg

அ.தி.மு.க என்ற புதியக் கட்சியைத் தொடங்கி, முதல் சட்டசபைத் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் எம்.ஜி.ஆர்.! அடுத்தடுத்த நடைபெற்ற தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்று அரசியிலில் அசைக்க முடியாத தலைவரானார் அவர். அப்படிப்பட்ட 'எம்.ஜி.ஆரின் வாரிசு' என்று தன்னை வெளிக் காட்டிவரும் ஜெயலலிதாவும் தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில், தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று எம்.ஜி.ஆரின் பெயர் வரிசையில் தானும் இடம் பிடித்தார். 

 எம்.ஜி.ஆர் உடல்நிலைக் குறைவால் எந்த அப்போலோவில் அனுமதிக்கப்பட்டாரோ, அதே அப்போலோவில்தான் இன்று ஜெயலலிதாவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிலும் இன்னொரு ஒற்றுமை இதே அக்டோபர் மாதத்தில்தான் எம்.ஜி.ஆரும் அட்மிட் ஆனார். எம்.ஜி.ஆர் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோதும், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியபோதும் அவரோடு இருந்து கவனித்துக்கொண்டவர் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சரான ஹண்டே.

எம்.ஜி.ஆர் உடனான அந்த நினைவுகளை இப்போது நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் ஹண்டே, “1984-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அண்ணா பிறந்த தினம்! அன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று எம்.ஜி.ஆருடன் நானும் சென்றிருந்தேன். கோவிலில் எம்.ஜி.ஆர் தீடீர் என மயக்கம் அடைந்தார். உடனே, மருத்துவர் சுப்பிரமணியம் எம்.ஜி.ஆருக்கு இரத்தப் பரிசோதனை செய்தார். இதில், ரத்தத்தில் யூரியாவின் அளவு 88 என்று இருந்தது. அதன் பிறகு எம்.ஜி.ஆருக்கு தொடர் சிகிச்சைகள் நடைபெற்றன.

அதன்பின்னர், அக்டோபர் 5-ம் தேதி திடீர் என எம்.ஜி.ஆருக்கு  மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக ஜானகி, பாதுகாவலர் ஆறுமுகம் ஆகியோர் எம்.ஜி.ஆரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். நான், நெடுஞ்செழியன், வீரப்பன் ஆகியோர் 6-ம் தேதி மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். அப்போது எங்களோடு எம்.ஜி.ஆர் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார். சட்டசபை நிகழ்வுகள் குறித்து எங்களிடம் ஆலோசனை அளித்தார். அவருக்கு கிட்னி பிரச்னை ஏற்பட்டது கண்டறியப்பட்டதால், பெரிடோனியல் டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நி்லையில் 13-ம் தேதி இரவு மறுபடியும் 'எம்.ஜி.ஆர் பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறார்' என்று எனக்கு போன் வந்தது. பதறியடித்துக்கொண்டு நான் அப்போலோவுக்கு சென்றேன். அங்கு பக்கவாதப் பாதிப்புடன் ஹோமா நிலையில் இருந்தார் எம்.ஜி.ஆர். அப்போது பிரபல மருத்துவராக இருந்த ஜெகநாதனை வரவழைத்து சோதனை செய்தோம். டயாலிஸிஸ் செய்ததில் ஏற்பட்ட பிரச்னையால், மூளையில் ரத்தம் உறைந்து அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகத் தெரியவந்தது.

Hande_MGR_Facebook_13275.jpg

அப்போலோவின் இயக்குநர் பிரதாப் சி.ரெட்டி என்னிடம் “நீங்கள் அமெரிக்காவில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார். உடனடியாக பழனி. பெரியசாமி மூலம் அமெரிக்காவில் இருந்து எலெய்ட் பீட்மேன், பிளாக், ராவ், ஸ்டிர்லிங் மேயர் ஆகிய நான்கு மருத்துவர்களை அழைத்துவந்தோம். அவர்கள் வந்து சிகிச்சையைத் தொடங்கிய பிறகும் முன்னேற்றம் ஏற்படவில்லை. 17-ம் தேதி இந்திரா காந்தி வந்து பார்த்த பிறகு ஜப்பானின் புகழ்பெற்ற மருத்துவர் கானுவை அழைத்து வந்தோம். அவர் வந்து சில சிகிச்சை முறைகளைக் கையாண்ட பிறகு மருத்துவக் குழு ஆலோசனைப்படி தனி விமானம் ஒன்று எம்.ஜி..ஆருக்காகத் தயாரானது. மருத்துவ வசதிகள் செய்யப்பட்ட அந்த விமானம் மூலம் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவின் புருக்ளின் நகரில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆரை அழைத்துச் சென்றோம். அங்குதான் பிசியோதெரபி சிகிச்சையில் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது‘ என்று பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார். 

apollo%201_13535.jpg

எம்.ஜி.ஆருக்கு முதலில் மயக்கம் ஏற்பட்டது தஞ்சாவூரில் செப்டம்பர் மாதம் 15-ம்தேதி; ஜெயலலிதாவுக்கும் செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மயக்கம் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எம்.ஜி.ஆர்! ஜெயலிலதாவும் இதே மாதம் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்று எம்.ஜி.ஆருக்கு அமெரிக்க மருத்துவர்களை அழைத்துவர ஆலோசனை சொன்ன பிரதாப் சி.ரெட்டிதான், இன்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை செய்ய லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயலை வரவழைத்துள்ளார். எம்.ஜி.ஆர். எந்த பிசியோதெரபி சிகிச்சையால் முன்னேற்றம் கண்டாரோ, அதே பிசியோதெரபி சிகிச்சைதான் இன்று சிங்கப்பூர் மருத்துவர்களால் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் நலமுடன் இந்தியா திரும்பியது போல, முதல்வர் ஜெயலலிதாவும் நலமுடன் வீடு திரும்புவார்..!

மீண்டு வாருங்கள் முதல்வரே, தமிழகம் காத்துக்கொண்டிருக்கிறது......

http://www.vikatan.com/news/tamilnadu/70372-mgr-and-jayalalithaa-at-apollo--flashbackmemories.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த நடிகை இவர்.

Link to comment
Share on other sites

இறந்தபின்னும் மகளின் ஆசையை நிறைவேற்றிய சந்தியா; ஜெயலலிதாவினால் மறக்க முடியாத தீபாவளி

jaya%20sad%20left%201_18522.jpgபுகழ்மிக்க நடிகை, பரபரப்பான அரசியல்வாதி, அதிரடியான தலைவர் என தன் வாழ்நாளில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்த இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்நாளில் இந்த தீபாவளி மறக்கமுடியாதது. ஆம் கடந்த செப்டம்பர் மாதம் 22 - ம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 38 நாட்கள் ஆகின்றன. ஆனால் இன்னமும் பூரண குணமடையவில்லை அவர். மருத்துவமனையின் அறிக்கையின்படி இன்னமும் அவர் நோயின் பிடியிலிருந்து முழுமையாக மீண்டதாக தெரியவில்லை. இந்நிலையில் தீபாவளி தினமான அக்டோபர் 29 ந்தேதியும் அவர் அப்போலோவில் தொடரும் நிலை உருவாகியுள்ளது.

ஜெயலலிதா என்ற உறுதிமிக்க ஒரு தலைவருக்கு துர்பாக்கியமான நேரம் இது. ஒரு முதல்வராக அவர் பொதுமக்களை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பார்க்கவில்லை. அவர் இன்னமும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை சொல்லவில்லை. சொல்வாரா என்பதும் தெரியவில்லை. சம்பிரதாயமானது என்றாலும் அந்த வாழ்த்து கிடைக்கப்பெறாமல் தொண்டர்கள் பரிதவிக்கிறார்கள். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அச்சத்தை போக்கும் வகையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அதிகாரபூர்வமாக அவர் சிகிச்சை தொடர்பான எந்த புகைப்படங்கள், அவரது அறிக்கைகளோ வெளியிடப்படவில்லை. இரட்டைவிரல் காட்டி சிறு புன்னகையுடன் அவர் தங்களை கட்சி அலுவலகத்திலும் பொதுக்கூட்ட  மேடைகளிலும் கடந்து சென்றதைத்தான் தொண்டர்கள் இந்த நேரத்தில் நினைத்துப்பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்கின்றனர். அப்போலோ வாசலில் நாம் சந்திக்கிற ஒவ்வொருவரும் தங்களது தலைவியை இறுதியாக சந்தித்த நிகழ்வைத்தான் பரிதவிப்போடு சொல்லி ஆறுதல் படுத்திக்கொள்கின்றனர் தங்களை. இப்படி எல்லாமே மூடு மந்திரமாகிவிட்ட நிலையில் இந்த வருட தீபாவளியை அதிமுக தொண்டர்களும் ஜெயலலிதா அனுதாபிகளும் மறக்கமுடியாது.

பட்டாசு சத்தம் இருக்காது, பகட்டான ஆடை இருக்காது, தீபாவளிக்கு பரிசு கொடுப்பதோ, பரிசு பெறுவதோ ஒரு சம்பிரதாயமானதாக இருக்கும். மொத்தத்தில் இந்த தீபாவளி கொண்டாட்டமாக இல்லாமல் ஒரு மெல்லிய துயரத்துடன் தான் அவர்கள் கடக்கவேண்டியிருக்கும்.

தொண்டர்களின் தீபாவளிக் கொண்டாட்டத்தை மறக்கவியலாததாக்கிய முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையிலும் ஒரு தீபாவளி துக்கரமானதாக அவர் மனதில் பதிந்துகிடக்கிறது. அது அவரது தாயார் சந்தியாவின் மறைவுக்கு முன் வந்த தீபாவளி. ஆம் அது 1971-ம் ஆண்டு அக்டோபர் மாதம். அந்த வருடத்தின் தீபாவளித் திருநாளுக்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் ஜெயலலிதாவின் வாழ்வில் எல்லாமுமாக இருந்த தாய் சந்தியா அந்த ஆண்டும் வழக்கம்போல் பிரபல கடைக்கு தானே நேரில் சென்று மகள் ஜெயலலிதாவுக்கு விருப்பமான டிசைன்களில் 10 க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த சேலைகளை பல மணிநேரங்கள் செலவிட்டு பார்த்துப் பார்த்து வாங்கிவந்திருந்தார்.

jaya%20sad%20600%202_18230.jpg

படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்திருந்த தன் மகளுக்கு அதை ஆசைஆசையாய் காட்டியபோது, தானே நேரில் சென்றிருந்தால்கூட அத்தனை அழகாக சேலைகளை தேர்வு செய்திருக்கமுடியாது என தாயை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஜெ. “இதெல்லாம் உனக்கு தீபாவளி ஆடைகள் என அன்போடு சொன்னார். “எல்லாம் எனக்காம்மா...உனக்கு இல்லையா” என்றார் ஜெயலலிதா.

“என் வயதில் எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்துவிட்டேன். இனிமேல் எனக்கு எதற்கு விலையுயர்ந்த ஆடைகள்...எல்லாம் உனக்காகவே வாங்கிவந்தேன்” என்றார் சந்தியா. தனக்கு இத்தனை புடவைகள் வாங்கி வந்த அம்மா தனக்கென எதுவும் வாங்கிக்கொள்ளவில்லையே என கோபித்துக்கொண்ட ஜெயலலிதாவை சந்தியாவால் தேற்ற முடியவில்லை. ஜெயலலிதா முடிவாக சொன்னார். “என் ஆசைப்படி தீபாவளிக்கு உனக்கும் புதுத்துணி எடுத்துக்கொள்ளவில்லையென்றால் நான் இதில் ஒன்றைக்கூட தொடமாட்டேன்” என உறுதிபட சொன்னார். மகளின் பிடிவாதம் தெரிந்த சந்தியா வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டார். விறுவிறுவென களத்தில் இறங்கினார் ஜெயலலிதா.

வழக்கமாய் தான் துணி எடுக்கும் ராதா சில்க் எம்போரியத்துக்கு போன் செய்தவர், தன் தாயார் தனக்கு எடுத்த அதே எண்ணிக்கை அதை டிசைனில் பல மாதிரிகளில் புடவை எடுத்துவைக்கச்சொல்லிவிட்டு நேரில் அந்த கடைக்கு புறப்பட்டார்.

கடையில் தன் தாயாருக்கு தீபாவளி புடவைகளை வாங்கியவர் அதை அவரிடம் காட்டி மகிழ்ந்தார். “ஒன்று வாங்கினால் போதாதா? ஏன் இத்தனை புடவைகள் எனக்கு?” என மீண்டும் முரண்டு பிடித்த அம்மாவை, 'தீபாவளி தினம் வரை தினம் ஒருபுடவை கட்டிக்கோ' என கட்டிப்பிடித்தபடி குறும்பாக கூறி சிரித்தார் ஜெயலலிதா.

jaya%20sad%205_18055.jpg

பொதுவாக தீபாவளி உள்ளிட்ட எந்த பண்டிகைகளையும் கொண்டாடுவதில் ஜெயலலிதாவுக்கு பெரிய ஆர்வம் இல்லையென்றாலும் அந்த தினங்களை அவர் ஆவலுடன் எதிர்பார்க்க ஒரு காரணம் இருந்தது. அது தாய் சந்தியாவை சிறுவயதில் பல ஆண்டுகள் பிரிந்திருந்த ஜெயலலிதா என்ற மகளின் ஏக்கம். ஆம் சந்தியா பிரபல நடிகையாக இருந்தபோது எப்போதும் சூட்டிங் சூட்டிங் என்று அலைந்துகொண்டிருந்தார். மகளுடன் நேரம் செலவழிப்பது குதிரைக்கொம்பாக இருந்தது அவருக்கு. ஆனால் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட மற்ற விசேஷ தினங்களில் தாய் சந்தியாவுக்கு விடுமுறை என்பதால்  அன்றுதான் ஜெயலலிதா தாயுடன் நேரம் செலவிடுவார். இதனால் பண்டிகை இரண்டாம் பட்சம்தான். தாயுடன் நேரம் செலவழிக்கப்போகிறோம் என்பதுதான் அவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்.

இப்போது காலம் மாறிவிட்டிருந்தது. சந்தியா நடிப்பதை குறைத்துக்கொண்டு வீட்டிலிருந்தார். ஜெயலலிதா புகழின் உச்சியில் இருக்கும் நடிகை. இப்போது தாயுடன் பொழுதைக்கழிக்க மகளுக்குத்தான் நேரம் கிடைக்கவில்லை. தாயுடன் நேரம் செலவிடமுடியாத சிறுவயது ஏக்கம் ஜெயலலிதாவுக்கு இப்போதும் தொடர்ந்தது. இந்த வருட தீபாவளியன்று கால்ஷுட் கிடையாது என்பதால் தாயுடன் தான் செலவிடப்போகும் மகிழ்ச்சிகரமான நாளை உற்சாகத்துடன் வரவேற்றார் ஜெயலலிதா.

தீபாவளியன்று புதுப்புடவை கட்டி பட்டாசு வெடித்து உற்சாகமாக இருந்த தன் மகளை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார் சந்தியா. ஆனால் மகள் வாங்கித்தந்த சேலையை அவர் அணிந்துகொள்ளவில்லை. தான் வாங்கித்தந்த புடவையை தாய் கட்டி தான் அழகு பார்க்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆசை, கடைசி பட்டாசு சத்தம் அந்த பகுதியில் கேட்கும் வரை நிறைவேறவேயில்லை. மகளின் ஆசையை நிறைவேற்றவில்லையே என்ற வருத்தம் சந்தியாவுக்கும் வர “விரைவில் அதில் ஒன்றை கட்டுகிறேன்” என அன்றிரவு மகளின் தலையை தடவிக்கொடுத்தபடி ஆறுதல் சொன்னார் அவர்.  

jaya%20sad%20600%203_18009.jpg

ஆனால் விதிவேறு மாதிரி விளையாடிவிட்டது. ஆம் தீபாவளி முடிந்த சில நாட்களில் சந்தியா மிகுந்த உடல்நலம் பாதிக்கப்பட்டார். ஜெயலலிதா படப்பிடிப்புக்கு சென்றுவிட்ட ஒருநாளில் சந்தியா ரத்த வாந்தி எடுக்க பதறிய உறவினர்கள் அவரை  பூந்தமல்லி ஹைரோட்டில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தனர். மறுநாள் அவர் மரணமடைந்தார். உடல் இறுதிமரியாதைக்காக போயஸ்கார்டனில் கிடத்தப்படிருந்தது.

சடங்கு சம்பிரதாயங்களை செய்த புரோகிதர்கள் ஜெயலலிதாவின குடும்ப வழக்கப்படி இறந்தவரின் உடலில் புதுப்புடவை சாத்தவேண்டும் என்று சொல்ல, விறுவிறுவென உள்ளே சென்ற உறவினர்கள் சந்தியாவின் பீரோவிலிருந்து ஒரு புத்தம் புதிய புடவையை எடுத்துவந்தனர். ஹாலின் நடுநாயகமாக தாயின் உடல் அருகே அழுதபடி இருந்த ஜெயலலிதா தனது தாயின் உடலில் போர்த்த கொண்டுவரப்பட்ட சேலையைப்பார்த்தார். வானை முட்டும் அழுகை பீறிட்டுவந்தது அவருக்கு. ஆம் தாய் சந்தியாவுக்காக துணிக்கடைக்கு தானே நேரில் சென்று ஆசைஆசையாய் பார்த்துவாங்கிய சேலைகளில் ஒன்றுதான் அது.

apollo%20600%20jaya_18366.jpg

 

தன் அன்புக்குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட சந்தியா தன் மகளின் தீபாவளி தின ஆசையை, தான் உயிருடன் இருக்கும்போது நிறைவேற்றமுடியாமல் போனாலும் மகளுக்கு அந்தக் குறை இல்லாதபடி இறந்தபின் அதை நிறைவேற்றிவைத்தார். அடுத்துவந்த பல தீபாவளி தினங்கள், ஜெயலலிதாவுக்கு இந்த  சோக நினைவுகளுடனேயே கடந்துபோயிருக்கும். அது ஒரு மறக்கமுடியாத தீபாவளி நினைவாகவே அவர் மனதில் நிலைத்துநின்றுவிட்டது.

http://www.vikatan.com/news/tamilnadu/70742-unforgettable-diwali-of-jayalalithaa.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.