Jump to content

’நான் அரசியல் தவிர்த்து பெர்சனல் பற்றிப் பேசினால்... அவ்வளவுதான்...!’ கொந்தளிக்கும் சசிகலா புஷ்பா


Recommended Posts

’நான் அரசியல் தவிர்த்து பெர்சனல் பற்றிப் பேசினால்... அவ்வளவுதான்...!’ கொந்தளிக்கும் சசிகலா புஷ்பா

sasikala-pushpa-1_19390.jpg

டந்த புதன்கிழமையன்று ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் சசிகலா புஷ்பா எம்.பி-யை திட்டி, ‘சாக்கடை புஷ்பாவின் பூக்கடை சமாச்சாரங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தனர். இதனைப் படித்த சசிகலா புஷ்பா ஆதரவாளர்கள், இதுதான் அ.தி.மு.க-வின் அரசியல் நாகரிகமா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இதுகுறித்து சசிகலா புஷ்பா விகடனுக்கு அளித்த பேட்டி...

‘‘மிக மோசமான வார்த்தைகளால் உங்களைத் திட்டி கட்டுரை எழுதியிருக்கிறார்களே?’’

‘‘ஒரு பெண்ணை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது. அவர்களும் பெண்கள்தான். அப்படி நான் ஒன்றும் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. எனது வளர்ச்சி பிடிக்காததால், என்னைக் கவிழ்க்க நினைத்தார்கள். எவ்வளவோ பிரச்னை கொடுத்தார்கள். நான் பயப்படவில்லை. இப்போது மக்களிடம் எனக்கு உள்ள நல்ல பெயரை கெடுக்க நினைக்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே. அவர்களுடைய பத்திரிகை என்ற காரணத்தால் கண்டபடி என்ன வேண்டுமாலும் எழுதுகிறார்கள். சசிகலா குடும்பத்துக்கு அரசியல் நாகரிகம் என்பதே தெரியாது. அதனால்தான் ஒரு பெண்ணை, ஒரு எம்.பி-யைப் பற்றி இப்படி அவதூறு பேசுகிறார்கள். ‘எனக்கு அரசியல் நாகரிகம் தெரியும்’ என்ற காரணத்தினால்தான் அமைதியாக இருக்கிறேன். நானும் அரசியலைத் தவிர்த்து தனி வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், அவ்வளவுதான். ஆனால், அப்படி ஒருபோதும் நான் பேசமாட்டேன். ஏனென்றால், நான் அரசியல் நாகரிகம் இல்லாதவர் அல்ல.’’

‘‘இப்படி ஒரு கட்டுரை வந்ததற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?’’

‘‘வேறு யார்...? சசிகலா தாம்...! கண்டிப்பாக அவர் மட்டும்தான் காரணம். அவருக்கு டெக்னாலஜி பற்றித் தெரியாது. அதனால் அவருடைய அண்ணன் மற்றும் அவருடைய மகன்களை வைத்து இப்படிச் செய்கிறார்.’’

‘‘உங்கள் மீது பாலியல் வழக்கு, பணமோசடி வழக்கு... இப்படி பல வழக்குகள் சமீபகாலமாக வருகிறதே?’’

‘‘இது எல்லாமே ஜோடிக்கப்பட்ட வழக்குகள். நான் எப்போது அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்டேனோ, அதன் பிறகுதானே இப்படிப்பட்ட புகார்கள் என் மீது விழுகின்றன. இவை அனைத்தும் என்னைக் கவிழ்ப்பதற்காக சசிகலா குடும்பத்தாரால் செய்யப்பட்ட சதியே. எவ்வளவு மிரட்டல்கள், எவ்வளவு பொய் வழக்குகள்... இப்போதுகூட நான் டெல்லியில் இருக்கிறேன். ஆனால், எனக்கு எதிராக வழக்காடும் வழக்கறிஞரின் வீட்டை நான் தாக்கியதாகவும், கொள்ளை அடித்ததாகவும் சொல்லி வருகின்றனர். அரசியல் வேலையே தலைக்குமேல் இருக்கிறது. நான் ஏன் அவர்களைத் தாக்க வேண்டும்? இது எல்லாம் என்னை எப்படியாவது பழிவாங்க வேண்டும், ஜெயிலுக்குப் போக வைக்க வேண்டும் என்று நினைக்கும் அந்தக் கும்பலின் சதி. எனக்கு இந்தக் கும்பலால் எவ்வளவு ஆபத்து வந்தாலும் பயந்து ஓடமாட்டேன்; அடிபணியவும் மாட்டேன்; எதிர்த்து தைரியமாக நிற்பேன்.’’

‘‘அவர்களுக்கும், உங்களுக்கும் அப்படி என்னதான் பிரச்னை?’’

‘‘எனக்கு அரசியல் நாகரிகம் தெரியும் என்பதால் அதைப் பற்றிச் சொல்ல விரும்பவில்லை.’

‘‘ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களைச் சுற்றி நடப்பது என்ன?’’

‘‘முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேறி வருவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும். உடல்நிலையைப் பற்றிப் பலரும் பேசுகின்றனர். இவர்கள்தான் ஜெயலலிதாவைப் பார்க்கவே இல்லையே. அப்பறம் எப்படிச் சொல்கிறார்கள்? டாக்டரும், சசிகலாவும் சொல்வதைத்தான் கேட்டு சொல்கிறார். பல அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்காக மருத்துவமனை சென்றுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர்கூட ஜெயலலிதாவை நேரில் சந்தித்தது இல்லை. இவர்களை அங்கு தடுக்கும் சக்தி எது? ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 22 நாட்கள் ஆகின்றன. ஆனால், அவர்களின் உண்மை நிலை என்ன என்று ஓட்டு போட்ட மக்களுக்குச் சொல்லாமல் மறைக்கிறார்கள். ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சி ஜெயலலிதாவை சுற்றி நடந்துகொண்டிருக்கிறது. ஒட்டுபோட்ட மக்களையும் முட்டாள் ஆக்கி வருகின்றனர். பிரதமர், இந்த விஷயத்தில் தலையிட்டு, தீவிர விசாரணை செய்து, ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மை நிலையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.’’

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
69417_thumb.jpg

அரசியலில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரும் உயரத்துக்குச் சென்றவர் சசிகலா புஷ்பா. இவர் சில மாதங்களுக்கு முன் திருச்சி சிவாவை விமானநிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்தார், இதனால் தனக்கு அ.தி.மு.க-வில் நல்ல பெயர் கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால் கிடைத்ததோ கட்சிப் பதவி பறிப்பு. Namadhu MGR Magazine Slams Sasikala PushpaNamadhu MGR Magazine Slams Sasikala Pushpa | உனது 'பூக்கடை' சமாச்சாரங்களை நீயே தோண்டி எடுக்காதே! - சசிகலா புஷ்பாவை தாக்கிய 'நமது எம்.ஜி.ஆர்'.! - VIKATAN

- ஜெ.அன்பரசன்

http://www.vikatan.com/news/politics/69557-sasikala-pushpa-slams-sasikala.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.