Jump to content

ஒரு ஷொட்டு(pat) ஒரு குட்டு ×


Recommended Posts

 

1992ம் ஆண்டு GITEX என அழைக்கப்படும் Gulf Information & Technology Exhibition உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். அமீர்கத்திற்கு ஆப்பிள் டீலராக இருந்ததால் வருடா வருடம் எங்களுக்கு அந்த எக்ஸ்போவில் அரங்கம் அமைத்துக் கொள்ள முன்னுரிமை தரப்படும் அப்படி அந்த ஆண்டு 60 சதுர அடி அமைத்துக் கொள்ள இடம் ஒதுக்கப்பட்டது. எங்கள் உரிமையாளர் அரபி முதுகலை படித்தவன். சடையன் வா இங்கே எனக் கூப்பிட்டு இந்த ஆண்டு நம் அரங்கம் நெ 1 ஆக இருக்க வேண்டும். ஆபீஸ் ஊழியர்கள் அனைவரையும் பயன் படுத்திக் கொள் அரங்கம் எல்லோராலும் பேசப்பட வேண்டும் மேலும் இந்த ஆண்டு நம் அரங்கை பார்வையிட ஷேக் மொஹம்மது வருகிறார் கூடவே அமெரிக்காவிலிருந்து ஸ்டீவ் ஜாப் வருகிறார், எனச் சொல்லி விட்டு புறப்பட்டு விட்டான் அரபி.

என்ன செய்வது என தெரிய வில்லை ஆளாளுக்கு யோசனை சொன்னார்களெ தவிர உருப்படியாக ஏதும் சொல்லவில்லை. மனதில் ஒரு ஐடியா உதித்தது. டிரைவரை அழைத்துக் கொண்டு அவீரில் உள்ள ஸ்டோருக்கு சென்றேன். பழைய கணினிகள் போர் போல குவித்துக் கிடந்தது. அதிலெ வகைக்கு ஒன்றாக எடுத்து வந்து அலுவலகத்தில் சேர்ர்த்து டெக்னீசியன்களை கூப்பிட்டு ஒரு அமர்வை வைத்து எனது ஐடியாவை சொன்னேன் அதாவது ஆப்பிளின் பரிணாம வளர்ச்சி ( Evolution of Apple) என்ற தீமிலே அரங்கம் அமைய வேண்டும் அதற்கான வேலையை செம்மையாக செய்ய வேண்டும் என சொல்லி விட்டேன். எனது டெக்னீசியன் குழுவில் இரு மலையாளிகள் ஒரு தமிழன் ஒரு ஃபாலஸ்தீனியன் (தின்று கொண்டே இருப்பான் அதனால்தான் தீனியன்) ஒரு எகிப்தியன் ஒரு பாகி ஒரு வடக்கத்தியன்

எல்லோருக்கும் முகம் சரியில்லை தமிழனும் மலையாளியும் முதலில் களமிறங்கினார்கள். பழைய ஆப்பிள் கணினியை செப்பனிட என்னவேணும் என ஆராய்ந்து பொருள்கள் வாங்க கிளம்பிவிட்டார்கள்.

இரவு பகலாக உழைத்து நான் எதிர்பார்த்த விதமே பழைய ஆப்பிள் கணினிகளை (Apple 1 Apple II ,IIG Apple Lisa (ஸ்டீவ் ஜாபின் மகள் பெயர் லிசா ) , Apple Profile)  சரிக் கொணர்ந்து விட்டார்கள். அரங்கம் நிர்மானிக்க வேண்டிய வேலை. அதையும் சரி செய்து விட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு அரங்கம் திறப்பு விழாவை எதிர் பார்த்திருந்தோம். உள்ளூர் ஷேக்கை விட cupertino விலிருந்து வரப்போகும் ஸ்டீவ் ஜாபையே அதிகம் எதிர்பார்த்திருந்தோம். அமெரிக்காவிலிருந்து வரும் ஆப்பிள் நிறுவனரை வரவேற்க கோட்டு சூட்டு அணிந்து நின்றோம்.அமெரிக்காவிலிருந்து ஸ்டீவ் வருகிறார் அவரும் கோட்டு சூட்டு அணிந்துதான் வருவார் என்ற யூகம்

வழக்கும் போல ஷேக் வந்தார், எங்கள் அரபியின் மூக்கோடு மூக்கை உரசிவிட்டு எங்களுக்கும் ஹாய் சொல்லி விட்டு சென்றார். அடுத்து ஸ்டீவ், வந்தார் கோட்டு சூட்டோடு வருவார் என எதிர்பார்த்திருந்த எங்களுக்கு மடிந்து மக்கிப்போன ஒரு டெனிம் ஜீன்சும் கருப்பு ஆப்பிள் டீ ஷர்ட்டுமாக அரங்கத்தில் நுழைந்து பார்த்தார்.

very nice and good, but this is not the way to exhibit Apple’s evolution என்றார். நான் ஆப்பிள் 1 கீழே வைத்து படிப்படியாக அதன் வளர்ச்சியை மேலே மேலே கொண்டு போய் கடைசியில் G3  எந்திரத்தில் முடித்திருந்தேன். மேலே பழைய ஆப்பிளை வைத்து கிழே கடைசியில் G3 யில் முடித்திருக்க வேண்டுமாம். அவர் சொன்னதும் சரிதான் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என மனிதனின் பரிணாம வளர்ச்சியை காட்டும் போது முதலில் குரங்கை காட்டி படிப்படியாக கடைசியில் தானே மனிதன் வருவான். நான் உல்டாவாக செய்து விட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டு செய்தும் தவறாகப் போய்விட்டதே என ஒரு மன உளைச்சல். அந்த உளைச்சல் அன்றிரவே சரியாகி விட்டது. 

Mac ED என ஒரு குட்டி கணினியை எடுத்து உள்ளே இருந்த அதன் குடல் குந்தானி எல்லாவற்றையும் உருவி விட்டு வெறும் கூட்டை (shell) ஐ வைத்து , பார்வையாளார்கள் தங்கள் பிசினெஸ் கார்டை போடும் விதமாக Please drop your business card என எழுதி வைத்திருந்தேன். அதில் ஸ்டீவ் தனது கார்டை டிராப் செய்து விட்டு see you later என விடை பெற்று சென்று விட்டார்.

அன்றிரவு ஸ்டீவ் க்கு UAE யின் மெயின் டீலரான Arab Business Machine இண்டர் காண்டினெண்டல் ஓட்டலில் மிடில் ஈஸ்ட் டீலர்களுக்கும் ஸ்டீவிற்கும் விருந்து ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் ஸ்டீவ் Apples main task is innovation and imagination, that innovation and imagination exhibited by one of the UAE dealer by the way of Apple’s evolution  என்றார்.

இது ஸ்டீவிடம் நான் வாங்கிய ஷொட்டு (Pat) அதே சமயம் மற்றோரு தருணத்தில் அவரிடம் குட்டும் வாங்கியிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் அது..

ஒருநாள் காலை எனது ஆப்பிள் ஷோரூமில் அன்றைய தினம் Ingram MicroD  நிறுவனத்திலிருந்து வந்திருந்த மக்கிண்டோஷ் தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர்கள் அடங்கிய பார்சலை திறந்து சரி பார்த்துக் கொண்டிருந்தேன். நுழைவாயிலில் ஒரு நெடிய உருவம் நுழைந்து மக்கிண்டோஷ் கணினிகளை பார்த்துக் கொண்டிருந்தது. பின் என்னிடமே வந்து எங்கே முதிர் (மேனேஜர்) என அரபியில் கேட்டது  நாந்தேன் என்ன வேண்டும் என அரபியிலேயே பதில் சொன்னேன். அந்த மனிதர் பேசிய அரபி சற்று வித்தியாசமாக இருந்தது. நாம் சென்னைத்தமிழ், நெல்லைத்தமிழ், மதுரைத்தமிழ், தஞ்சைத்தமிழ் என்பது போல அங்கெ அரபியர்கள் பேசும் அரபி வழக்கை வைத்தே அவன் எந்த அரபு நாட்டிலிருந்து வந்திருக்கிறான் என கண்டு பிடித்து விடலாம். எ.கா ஒரு பொருளை காட்டி

ரஃபீக் ஹாதா கம் (அமீரக வாசி ) இதன் விலை என்ன
யா ஷேக் ச்சம் ஹாதா (சவூதி )
மாஅல்லிம் கத்தேஷ் ஹாதா (ஜோர்டான்/பலஸ்தினி)
போல்லகே கம் கினி ஹாதா (எகிப்தியன்)

ஆனால் வந்திருந்தவனின் அரபி வித்தியாசமாக இருந்தது. மேலே எனது ஆபிசுக்கு அழைத்துச் சென்று நான் அரபி மொழியைக் கொல்ல அவன் ஆங்கிலத்தை கொத்தி கீமா போட ஒன்றும் விளங்கவில்லை. பாதி புரிந்தது லிப்யாவிலிலிருந்து வந்திருக்கிறான்  மக்கிண்டோஷ் ஜி3 கணிணி வாங்க கைப்பையிலிருந்து கட்டு கட்டாக அமெரிக்க டாலரையும் எடுத்து காட்டினான். பட்சி ஒன்று மூளையில் படபடத்து, நீ தலையிடாதெ உன் முதலாளியை கூப்பிடு நீ ஒதுங்கிக் கொள் என்றது. முதலாளிக்கு போன் செய்தேன் ஆளை விடாதே சுலைமானி சாண்ட்விச் கொடுத்து ஆளை அமுக்கிவை அரைமணி நேரத்தில் நான் அங்கிருப்பேன் என்றார் முதலாளி. சரியாக இருபது நிமிடத்தில் எங்கள் அரபி வந்து விட்டான். வழக்கம் போல இருவரும் மூக்கோடு மூக்கை உரசி கட்டித் தழுவி குசலம் விசாரித்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

சங்கதி இதுதான் வந்திருந்தவன் துனிசியாக்காரன். லிப்யாவின் கத்தாபி அரசிற்கு கணினி வாங்க வந்திருக்கிறான் (அதான் அரபி வித்தியாசமாக இருந்தது) டீலை முடித்து விட்டான் எங்கள் அரபி. மொத்தம் 120 ஜி3 கணினி. அதுவும் கத்தாபியின் மிலிட்டரிக்கு .

வேண்டாம் இந்த டீல் சரியாக வராது என்றேன்.

மக்கிண்டோஷ் டீலர்ஷிப்பின் முக்கியமான சட்டம். ஆப்பிள் தயாரிப்புகள் எதுவும் ஈரான்,ஈராக்,கொரியா,லிப்யா,கியுபா நாடுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது. மீறிச் செய்தால் டீலர்ஷிப் கேன்சலாகிவிடும் என்ற சட்டம். அதில் கையெழுத்து போட்டால்தான் டீலர்ஷிப் கிடைக்கும். அதை நினைவூட்டினேன். அதையெல்லாம் நான் சரி செய்து கொள்கிறேன். நீ உன் வேலையைப் பார் என்றான்.

முதலில் 40 ஜி3 கணினிக்கு ஆர்டர் செய்தேன். எப்போதும் 10 கணினிக்கு ஆர்டர் செய்யும் எங்களிடமிருந்து 40 கணீனிக்கு ஆர்டர் வந்த போதே மெயின் டீலர் உஷாராகி விட்டான். ஏன் எதற்கு என்ற கேள்வியோடு 40 கணினி வாங்குபவர்களின் database வேண்டும் என்றான். ஏற்கனவே வாங்கியிருந்தவர்களின் முகவரியோடு, காலித் பின் வலீத் ரோட்டில் இருந்த டீக்கடை,ஷவர்மா கடை,தையல் கடை என இஷ்டத்திற்கு தகவலை அளித்து விட்டு 40 ஜி3 யை கொண்டு வந்து சேர்த்தேன். அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் 40 ஜி3 க்கு ஆர்டர் செய்தேன். மெயின் டீலர் தரமாட்டேன் என அடம் பிடித்தான். காரணம் எங்களிடம் வந்த லிபியாக்காரன் மெயின் டீலரிடமும் போய் சுலைமானி குடித்திருப்பான் போல. நீ லிப்யாவிற்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறாய். ஆப்பிள் சட்டபடி அது தவறு. உனது ஏஜன்சியை ஏன் ரத்து செய்யக் கூடாது என நோட்டீஸ் விட்டான்.

எனது அரபி நேராக மெயின் டீலரிடம் சென்றான். நான் மண்ணின் மைந்தன் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று சண்டை போட்டு வந்து விட்டான் ( மெயின் டீலர் லெப்னானைச் சேர்ந்தவன்) லிப்யாக்காரனிடம் கை நீட்டி மொத்த பணத்தையும் அட்வான்சாக வாங்கி விட்டோம்.என்ன செய்வது. GCC நாடுகள் அனைத்திலும் கேட்டுப் பார்த்தோம். ஒன்றும் நடக்கவில்லை. no chance of selling beyond our territory என முகத்தில் அறைந்தாற் போல சொல்லி விட்டார்கள். வேறு வழி grey marketing,

எந்த நாட்டில் லிபியாவிற்கு விற்கக் கூடாதென்றானோ அவன் நாட்டிலேயே ஜி3 வாங்குவதென முடிவு கட்டி அமெரிக்காவில் உள்ள சில ஆப்பிள் ஸ்டோரிடம் கேட்டோம். முதலில் அவன் கேட்ட கேள்வி துபாய் எங்கிருக்கிறது, சவூதி அரேபியாவிலா என்றான். அடங் கொய்யாலெ என அவனுக்கு படம் வரைந்து பாகங்களைக் குறி என்பது போல துபாய் மேப்பை விளக்கினேன். அடுத்து பேமெண்ட், LC எடுத்து தருகிறேன் என்ற என்னிடம் அப்படி என்றால் என்ன என்று ஒரு கேள்வியைக் கேட்டான். அமெரிக்கனுக்கு தெரிந்ததெல்லாம் கிரெடிட் கார்ட் அல்லது வயர் ட்ரான்ஸ்ஃபர் மட்டுமே.

இப்படி பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, சில லோக்கல் ஈரானியர்கள் வந்து நீ அமெரிக்காவில் ஜி3 வாங்கப் போகிறாயா அப்படி என்றால் எங்களிடம் பணத்தை கட்டி விடு, நாங்களே கம்ப்யூட்டரை வரவழைத்து துபாய் ஏர்போர்ட்டில் தருகிறோம் என்றார்கள். இதென்னடா அமெரிக்காவில் போன் செய்து கம்ப்யூட்டர் கேட்டால் துபாயில் பதில் தருகிறான். ஏதேனும் தாவூத் இப்ராஹிம் வேலையா என ஆச்சரியப் பட்டு அரபியிடம் சொல்லி விட்டேன்.

பிறகென்ன மீண்டும் மூக்கோடு மூக்கு உரசி, சுலைமானி குடித்து ஒரே வாரத்தில் ஈரானியர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தான் அரபி.  மீதமுள்ள 80 ஜி3 கணினியையும் 10 நாளில் கொண்டு வந்து சேர்த்தேன். விசாரித்ததில் கிடைத்த தகவல், அமெரிகாவில் ஆப்பிள் ஸ்டோர் வைத்து நடத்துபவர்கள் பெரும்பான்மையினர் ஈரானியர்கள் ஆனால் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாம்.

கம்ப்யூட்டர் வந்த அன்று, மீண்டும் சண்டை செய்தான் மெயின் டீலர் இது grey marketing கஸ்டம்சை விட்டு பொருள்கள் வெளியே வரக் கூடாதென தடை வாங்கி விட்டான். ஏர்போர்ட் கஸ்டம்சில் இருந்து அரபிக்கு போன் செய்தேன். அங்கே ஏர்போர்ட் மேனேஜர் பெயரை மட்டும் சொல் அரை மணி நேரத்தில் பொருள்களை வெளியே கொண்டு வந்து விடுகிறேன் என்றான். அதை செய்தும் காட்டினான்.

ஜாம் ஜாமென்று இரு கண்டெய்னர்களில் கணினி, மானிட்டர், கீபோர்டு என லிப்யாவிற்கு ஏற்றுமதி செய்தேன்.

யே ட்ரைலர் ஹை மெயின் பிக்ச்சர் பாக்க்கி ஹே தோஸ்த்

எங்கள் ஒப்பந்தப்படி ஜி3 சப்ளை மட்டுமல்ல , லிபியா வரை சென்று அதை இன்ஸ்ட்டால் செய்து, நெட் ஒர்க்கிங் வரை செய்து கொடுப்பதுதான் ஒப்பந்தம். கம்ப்யூட்டர் வாங்கி சப்ளை செய்வதில் தாமதம், லிபியா செல்வதற்கு ஒரு இந்தியனின் பாஸ்போர்ட், ஒரு ஃபலஸ்தினியன் பாஸ்போர்ட் இரண்டையும் கொடுத்து விசாவிற்கு அப்ளை செய்திருந்தேன். இந்திய பாஸ்போர்ட்டுக்கு உடனே விசா கிடைத்து விட்டது, பலஸ்தினியனுக்கு விசா கிடைக்கவில்லை. லிப்யா செல்வதற்கு வேறு யாரும் தயாராக இல்லை. இதற்கிடையில் லிப்யாவிலிருந்து ஃபோனுக்கு மேல் ஃபோன் தாமதமாகிறது. உடனே விரைந்து வந்து எல்லா கம்ப்யூட்டரையும் இயக்கத்திற்கு உள்ளாக்கு, மேலும் ஜி3 ஆர்டர் செய்ய வேண்டும் என்றார்கள். விசா பிரச்சினையை சொன்னேன். லிப்யாவிலிருந்து பதில் வந்தது, ஃபலஸ்தினியக்கு ஆன் அரைவல் விசா தருகிறோம் உடனே புறப்பட்டு வரச்சொல் என.

இதற்கிடையில் லிப்யா மிலிட்டரியில் உல்ள ஒரு வெளங்காவெட்டி,  அமெரிக்காவில் படித்தவனாம் எனக்குரிய ஜி3 யை கொடு நான் முன்பே ஜி3 யை பாவித்திருக்கிறேன் என்ற அந்தப் பாவி, ஜி3 யை எடுத்து இன்ஸ்டால் செய்திருக்கிறான். arabic enabled  செய்யத் தெரியாமல் முழித்துவிட்டு ,  கடைசியில் லிப்யாவிலிருந்து மக்கிண்டோஷ் தலைமையகத்திற்கு (cupertino) மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறான் , எப்படி அரபிக் OS  இன்ஸ்டால் செய்வதென்று, பிரமித்துப் போன ஆப்பிள் தலைமையகம், உனது ஜி3 யின் பார்ட் நம்பரை அனுப்பு என்று பதில் அனுப்பியிருக்கிறது. திருவாளர் உடனே உதவி கிடைக்கப் போகிறது என்ற உற்சாகத்தில் நம்பரை அனுப்பியிருக்கிறார். நம்பரை வைத்து கண்டு பிடித்து விட்டார்கள். அந்த ஜி3 அமீரகத்திற்கு அனுப்பப் பட்டதென. அவ்வளவுதான் மெயின் டீலரை கிழி கிழி (நன்றி கலா மாஸ்டர்) என கிழித்து விட்டார்கள். அது மட்டுமல்ல AMME (African,Mediteranian & Middle East) ரீஜினல் ஆபிஸ் டென்மார்க்கில் உள்ளது அங்கிருந்து இருவர் நேரடியாக துபாய் வந்து விட்டார்கள். விசாரனைக்காக,

விசாரனை துவங்கியது, என் முதலாளி நீயே சமாளித்துக் கொள் நான் வர முடியாது என்று ஜகா வாங்கி விட்டான். நல்லவேளை நாங்கள் அனுப்பிய கம்ப்யூட்டர் அனைத்திற்கும் invoice ஜோர்டானில் உள்ள ஒரு கம்பெனியின் முகவரிக்கு bill செய்திருந்தேன். சத்தியம் செய்து விட்டேன், நாங்கள் விற்பனை செய்தது  ஜோர்டானுக்குத்தான், அங்கிருந்து அவர்கள் லிப்யாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள், எங்களுக்கு தெரியானல் என சொல்லி விட்டேன். அவர்கள் நம்பவில்லை என்பது அவர்களின் முகத்திலிருந்து தெரிந்தது. மெயின் டீலரும் எங்களை போட்டுக் கொடுத்து விட்டான். இது முதல் தடவை என்பதால் உங்கள் டீலர்ஷிப்பை ரத்து செய்யவில்லை, ஆனால் இனிமேல் உங்களுக்கு ஜி3 ஜி4 கணினி ஆறு மாதத்திற்கு சப்ளை கிடையாதென எழுதிக் கொடுத்துவிட்டு போய்விட்டான். அடுத்த வாரமே ஸ்டீவிடமிருந்து, ஒரு கண்டனக் கடிதம் வந்து விட்டது.

இப்படியெல்லாம் ஆப்பிளை வளர்த்த ஸ்டீவ் ஜாப் இன்று நம்மிடையே இல்லை. ஆப்பிள் ஸ்டிக்கரை பார்த்துவிட்டு என் மகள் (அப்போது 5 வயது) துபாயில் இருந்த போது கேட்ட கேள்வி டாடி ஆப்பிளை கடித்தது யார் ? நானும் விளையாட்டாக நண்டு கடித்து விட்டது என்பேன். அது இப்போது உண்மையாகி விட்டது நண்டு(cancer) கடித்ததால் ஸ்டீவ் ஜாப் நம்மிடையே இல்லை. creative man attacked by (pan)creatic cancer .  May his soul rest in peace.

மீள் பதிவு

Source - Facebook 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அபராஜிதன் said:

 

1992ம் ஆண்டு GITEX என அழைக்கப்படும் Gulf Information & Technology Exhibition உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். அமீர்கத்திற்கு ஆப்பிள் டீலராக இருந்ததால் வருடா வருடம் எங்களுக்கு அந்த எக்ஸ்போவில் அரங்கம் அமைத்துக் கொள்ள முன்னுரிமை தரப்படும்.... 

Meet-imobdev-team-at-Gitex-2016-Dubai.jp     2719016513814606.jpg

இந்த மாதம் அக்டோபர் 16 முதல் 20 வரை ஜிடெக்ஸ்(GITEX) நடைபெற இருக்கிறது.. எங்கள் நிறுவனத்திற்கு மென்பொருள் விற்கும் நிறுவனத்திடமிருந்து சிறப்பு அழைப்பிதழும் எனக்கு வந்திருக்கிறது..

அந்த ஆப்பிள் அரபிக்கடை இம்முறையும் கடை விரித்திருந்தால் அறியத்தரவும்..:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.