Jump to content

நியூசிலாந்திடம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகமுள்ளன : பிரதமர்


Recommended Posts

நியூசிலாந்திடம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகமுள்ளன : பிரதமர்

 

நியூசிலாந்தின் அரசியல் முறைமையில் இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகம் காணப்படுகின்றதென பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

1475292381863__2_.jpg

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  நேற்று வெள்ளிக்கிழமை நியூஸிலாந்தை சென்றடைந்தார்.

அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட அரசதலைவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பு திருத்தம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

14440998_10154500818590429_9034503876993

அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையையடுத்து இரு நாட்டு தலைவர்களும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

1475292381863__1_.jpg

இது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

 

இலங்கையின் அரசியலமைப்பு மாற்றத்திற்குள் நியூசிலந்தின் அரசியல் முறைமைகளை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். 

நியூசிலாந்தின் அரசியல் முறைமையில் இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகம் காணப்படுகின்றன.

குறிப்பாக நியூசிலாந்தின் கலப்பு உறுப்பினர் விகிதாசார தேர்தல் முறை  தொடர்பில் உள்நாட்டு பாராளுமன்றத்தில் கூடிய கவனம் செலுத்தப்படும்.

1475292381863.jpg

அதேபோன்று இரு நாட்டு சுற்றுலாத்துறை, ஏற்றுமதி மற்றும் பால்மா இறக்குமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதென அவர் மேலும் தெரிவித்தார்.

eight_col_anjelle.jpg

இதேவேளை, அங்குள்ள மிருகக் காட்சிசாலைக்கு விஜயம் செய்த பிரதமர்,  கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு பரிசளிக்கப்பட்ட  அஞ்சலி என்ற யானைக்குட்டியையும் பிரதமர் பார்வையிட்டார். 

http://www.virakesari.lk/article/11945

Link to comment
Share on other sites

முன்பு சந்திரிகா அம்மையார் சனாதிபதியாக இருந்தபோது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவின், பிக்குகளும் அடங்கிய  குழுவொன்று, யேர்மானியரின் ஆட்சிமுறைமை பற்றி அறிந்துவருவதற்கு மூனிச் நகருக்கு வந்திருந்தது. அந்தக் குழு இங்குள்ள ஆட்சிமுறைபற்றிக் கற்கக் கசடறக் கற்றுக்கொண்டு சிறீலங்கா திரும்பியிருந்தது. 

சாதி வேற்றுமை ஏதுமின்றி ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள், பிறந்த மண்ணுக்கு வந்ததும் அங்கு சாதிவேற்றுமை உட்புகுந்து விடுவதுபோன்று.... பிரதமர் ரணில் அனுப்பிய குழுவும் சிறீலங்கா வந்ததும், இன வேற்றுமை உட்புகுந்து கற்றவை அனைத்தையும் மறக்கச் செய்தது. 

நியூசிலாந்தில் அரசியல் முறைமைகளைக் கற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்கவும், சிறீலங்கா திரும்பியதும் நிலமை என்னாகுமோ...??:unsure::unsure:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்திலிருந்த இந்தியாவில் கற்றவற்றையே அமுல் படுத்தமுடியல்ல இதுல நீயுசிலாந்தில கற்று அமுல்படுத்த விடிச்சிடும்....:rolleyes:

Link to comment
Share on other sites

பேசுறது எல்லாம் நல்ல வக்கணையாத்தான் பேசுவினம்.. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே சுவிஸ்,அயர்லாந்து அரசியல் அமைப்பையும் ஆராஞ்சிங்கெண்டா இன்னும் ஒரு அஞ்சாறு வருசம் இழுக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 புத்தரின் போதனையே போதும் அமைதியான நாட்டை  உருவாக்க. காவியை சுத்திகொண்டு கொழுத்தாடு பிடிச்சுக்கொண்டு, ஊரை ஏமாத்த ஓசிப்ணத்தில் ஊர் சுத்த வேண்டியதுதான். இப்ப எத்தினை நாடு சுத்திப்போட்டினம்   ஒரு நாட்டு அரசியலும் சரிப்பட்டு வரேல. இவையிட்ட ஏதாவது திட்டமோ, எண்ணமோ இருந்தார்த்தானே ஆராயுறதுக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.