Jump to content

காஷ்மீரில் இந்திய ராணுவம் வியூகத் தாக்குதல்: கட்டுப்பாட்டு எல்லையில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு


Recommended Posts

காஷ்மீரில் இந்திய ராணுவம் வியூகத் தாக்குதல்: கட்டுப்பாட்டு எல்லையில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு

 

 
ஜெனரல் ரன்பீர் சிங் (இடது), இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் (வலது).
ஜெனரல் ரன்பீர் சிங் (இடது), இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் (வலது).

காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது .

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் தங்களது இரண்டு ராணுவ வீர்ர்கள் பலியானதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

புதன் இரவு நடத்திய இந்தத் தாக்குதல் குறித்து ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஊடகங்களிடம் தெரிவிக்கும்போது, “கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே தீவிரவாதக் குழுக்கள் முகாமிட்டிருப்பதாக வந்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இந்திய ராணுவம் வியூக ரீதியான சில தாக்குதல்களை அப்பகுதியில் மேற்கொண்டது.

அதாவது நாட்டிற்குள் நுழைந்து நம் மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலை இவர்கள் ஏற்படுத்தல் கூடாது என்பதை கருத்தில் கொண்டே இந்தத் தாக்குதலை நடத்தினோம். இதில் பயங்கரவாதக் குழுக்களுக்கும், அதனை ஆதரித்தவர்களுக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய தாக்குதலைத் தொடரத் திட்டமில்லை. ஆனால் தேவைப்பட்டால் தீவிரவாத எழுச்சியை முறியடிக்க ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பிலும் பேசி எங்கள் கவலைகளை தெரிவித்தோம். இப்பகுதியில் அமைதியையும் சமாதானத்தையும் பேணுவதே எங்கள் நோக்கம். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே தீவிரவாதிகள் நடமாட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

காங்கிரஸ் பாராட்டு

இந்த நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் அதிரடியாக வியூகம் வகுத்து தாக்குதல் நடத்தியுள்ளதற்கு ராணுவத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். | விரிவாக வாசிக்க > எல்லையில் தாக்குதல் வியூகம்: பிரதமர், ராணுவத்துக்கு பாஜக, காங்கிரஸ் பாராட்டு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம்:

துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்.

அண்டை நாடுகளுடன் அமைதியான உறவு பேண வேண்டும் என்ற எங்கள் கொள்கையை பலவீனமாக கருதிவிட வேண்டாம், எங்கள் ராணுவத்தினர் எங்கள் பகுதியைக் காக்க போதிய வலுவும் திறமையும் உடையவர்கள். பாகிஸ்தான் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்த ஒரு தீய முயற்சியையும் அவர்கள் முறியடிக்கவல்லவர்களே என்று ஷெரிப் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

http://tamil.thehindu.com/india/காஷ்மீரில்-இந்திய-ராணுவம்-வியூகத்-தாக்குதல்-கட்டுப்பாட்டு-எல்லையில்-தீவிரவாத-முகாம்கள்-அழிப்பு/article9162472.ece?homepage=true

Link to comment
Share on other sites

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிர்மூலம்: இந்திய ராணுவம் சாகசம்

 

புதுடில்லி: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா ராணுவ கட்டுப்பாட்டு நடவடிக்கை இயக்குநர் ( டி.ஜி.எம்.ஓ., ) ஜெனரல் ரன்பீர்சிங் இன்று அறிவித்தார். இந்திய - பாக்., எல்லையில் நிலவி வரும் பதட்டமான சூழலில், பிரதமர் மோடி பாதுகாப்பு தொடர்பான உயர் மட்டக்குழுவில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

காஷ்மீர் மாநிலம் யூரியில் ராணுவ முகாம் மீது பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, எல்லையில் இந்திய துருப்புகள் எச்சரிக்கையாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்து மீறுவோரை சுட்டுத்தள்ளுங்கள் என பிரதமர் மோடி நேரிடையாக அறிவுறுத்தினார். கடந்த வாரத்தில் பிரதமர் மோடி முப்படை வீரர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என ஐ.நா.,உரையில் உலக நாடுகளுக்கு சுஷ்மா வேண்டுகோள் விடுத்தார்.

 

இந்நிலையில் பிரதமர் மோடி, பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டத்தை இன்று காலை 11 மணியளவில் கூட்டினார். ஜவஹர்லால் நேரு பவனில் நடந்த இந்த கூட்டத்தில் , உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், மற்றும் ராணுவ தளபதிகள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

இந்த கூட்டத்திற்கு பின்னர் ஜெனரல் ரன்பீர்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:யூரி மற்றும் பூஞ்ச் பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது முதல் ராணுவ நடவடிக்கையை கடுமையாக எடுத்து வருகிறோம். எல்லையில் 20 ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் எல்லையில் 3 முறை பாகிஸ்தான் அத்துமீறலை நடத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தாக்குததை பொறுத்துக்கொள்ள மாட்டோம். பயங்கரவாதத்தை முழுமையாக அழிப்போம். உளவுத்துறை அளித்த தகவலின்படி, பயயங்கரவாதிகள் முகாமிட்டிருந்த பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று இரவு (புதன் கிழமை ) , இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் பலர் கொல்லப்ட்டிருக்கலாம். இதற்கு மேல் முழு விவரங்களை தெரிவிக்க முடியாது. எந்த தாக்குதலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 

* யூரி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி தந்துள்ளது.

* இந்த தாக்குதலில் சிறப்பு படை பயன்படுத்தப்பட்டுள்ளது

* பாகிஸ்தானை சேர்ந்த பலர் கொல்லப்பட்டிருக்கலாம்

* ஏராளமானவர்கள் காயமுற்றிருக்கலாம்

* பயங்கரவாத முகாம் அழிப்பு

* 8 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

* தாக்குதல் குறித்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு தகவல்

* அனைத்து அரசியல் கட்சியினருக்கும் முறையான தகவல் அளிக்கப்பட்டது.

 

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1617361

Link to comment
Share on other sites

பலவீனமாக கருத வேண்டாம்: பதிலடிக்கு நாங்களும் தயார்: ஷெரீப்

 

இஸ்லாமாபாத்: இந்திய ராணுவம் பாக்.,எல்லையில் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியிருப்பதாவது:பாக்., எல்லை பகுதியில் இந்தியா அத்து மீறல் நிகழ்த்தியுள்ளது. 2 பாக்., படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 9 பேர் காயமுற்றுள்ளனர். இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். இதனை ஏற்க முடியாது. இந்திய ராணுவம் கூறுவது போல் பெரும் கொடூர தாக்குதல் ஏதும் இல்லை என எங்களின் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அமைதியாக இருப்பதை எங்களின் பலவீனமாக கருத வேண்டாம். எதையும் சந்திக்க தயார். பாகிஸ்தான் மக்களை காத்திட பதில் தாக்குதல் நடத்த நாங்களும் தயார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாக்., ராணுவம் இது தொடர்பாக கூறுகையில்; இந்தியா தாக்குதல் என்பது பொய். எல்லை தாண்டி இந்திய துருப்புகள் எதுவும் வரவில்லை. எல்லையில் இந்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது என கூறியுள்ளது.


இதற்கிடையில் பாக்., பாதுகாப்பு துறை அமைச்சகத்துடன் பிரதமர் நவாஸ் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1617364

Link to comment
Share on other sites

14463229_903653129766463_883164549053106

:D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமி பாரம் குறையுமா ? ரெல் மீ... ரெல் மீ .. இதெல்லாம் சண்டைய்யா? ஒருத்தனும் சாக மாட்டேன் என்கிறார்கள் .. அட போங்கப்பா .. !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.