Jump to content

இந்தியன் சூப்பர் லீக் – 3: கோப்பையை வெல்லப்போவது யார்? #ISL


Recommended Posts

இந்தியன் சூப்பர் லீக் – 3: கோப்பையை வெல்லப்போவது யார்? #ISL

ஐ.பி.எல் தொடருக்கு நிகராக பிரபலமடைந்து வெற்றிகரமாக மூன்றாவது சீசனில் காலெடுத்து வைக்கப்போகிறது ஐ.எஸ்.எல். வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி மூன்றாவது சீசனை வெல்ல அனைத்து அணிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. சென்னை அணியைத் தவிர்த்து மற்ற ஏழு அணிகளிலும் பயிற்சியாளர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 

மெண்டோசா, எலானோ போன்ற சில முன்னனி வெளிநாட்டு வீரர்கள் இந்த சீசனில் இல்லை. ஆனாலும் டீகோ ஃபோர்லான், ஆரோன் ஹூக்ஸ் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்கள் புதிதாய் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். பல வீரர்களும் கடந்த முறை விளையாடிய அணிகளிலிருந்து வேறு அணிக்கு மாறியுள்ளன. 

அதுமட்டுமின்றி ஐரோப்பிய அணிகளைப் போல நம் அணிகளும் வெளிநாட்டில் பயிற்சி முகாம் நடத்தியுள்ளன. ஒட்டுமொத்தத்தில் முதல் சீசனைப் போலவே இந்த சீசனும் புத்தம்புது பொலிவுடனே நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். கொல்கத்தா, சென்னை அணிகளைத் தொடர்ந்து சாம்பியன் ஆகப்போகும் அந்த அணி எது? 8 அணிகளுக்கும் சாம்பியன் ஆவதற்கான வாய்ப்பு எப்படியுள்ளது. தினமும் இரண்டு அணிகள் வீதம் ஐ.எஸ்.எல் அணிகளைப் பற்றி அலசுவோம்…..

இந்தியன் சூப்பர் லீக்

 

அட்லெடிகோ டி கொல்கத்தா
கொல்கத்தா இளவரசர் கங்குலி சக உரிமையாளராக உள்ள இந்த அணியை இண்டோ - ஸ்பெயின் அணி என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியின் பயிற்சியாளராக இருந்த ஆன்டோனியோ ஹபாஸ் ஊதியப் பிரச்சனை காரணமாக புனே அணிக்கு மாறிவிட மீண்டும் ஸ்பெயினில் இருந்தே பயிற்சியாளரை இறக்கியுள்ளனர். ஐ.எஸ்.எல் லின் முதல் சாம்பியன் என்னும் பெருமைக்குறிய கொல்கத்தா அணியை இம்முறை ஜோஸ் மொலினோ வழிநடத்தப்போகிறார்.

unnamed%20%283%29.jpg

 கடந்த சீசனில் முதல் போட்டியிலேயே காயமடைந்து வெளியேறிய ஹெல்டர் போஸ்டிகா இம்முறையும் மார்க்கீ பிளேயராக நீடிக்கிறார். போர்ச்சுகல் அணிக்காக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டா உடன் விளையாடிய அனுபவம் பெற்ற போஸ்டிகா அணிக்கு மிகப்பெரிய பலம். அதுமட்டுமல்லாமல் கடந்த சீசனில் 11 கோல்கள் அடித்து அசத்திய இயான் ஹியூம், போஸ்டிகாவுடன் இணைந்து எதிரணியை துவம்சம் செய்யவல்லவர். கேப்டன் போர்ஜா ஃபெர்னாண்டஸ், சமீங் டௌடி, ஜாவி லாரா, ரால்டே ஆகியோர் உள்ளடங்கிய கொல்கத்தா அணியின் நடுகளம் போல வேறு எந்த அணியும் மிட்ஃபீல்டில் பலமாக இல்லை. இவர்களோடு சேர்த்து ஸ்காட்லாந்து லீக்கில் பட்டையைக் கிளப்பிய ஸ்டீவன் பியர்சனையும் ஒப்பந்தம் செய்து மாஸ் காட்டுகிறது கொல்கத்தா.

  கடந்த சீசனில் வெறும் வெளிநாட்டு வீரர்களையே நம்பியிருந்தனர். ஆனால், இந்த முறை பிரபீர் தாஸ், லால்தலுமுனா போன்ற பல இந்திய வீரர்களையும் இறக்கியுள்ளது. அதனால் அணியின் பலம் கூடியிருக்கிறது. கோல்கீப்பர் மஜும்தாரும்  அணிக்கு வலு சேர்க்கிறார். ஆனால் கொல்கத்தா அணிக்கு தடுப்பாட்டம்தான் பிரச்னை. கடந்த இரண்டு சீசன்களில் குறைவான கோல்கள் விட்டுக்கொடுத்த அணி கொல்கத்தாதான். ஆனால் பல வீரர்கள் மாறிவிட்டதால் பின்களம் சற்று பலம் குறைந்துள்ளது. அர்னாப் மொண்டால், டிரி ஆகியோர் தவிர்த்து வேறு எவரும் அனுபவசாலிகளாக இல்லாதது சற்று பின்னடைவு.  இந்திய நட்சத்திரங்கள் இசுமி, ரினோ ஆன்டோ ஆகியோர் அணி மாறியுள்ளதும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. பின்களத்திலுள்ள பிரச்சனைகளை சரிசெய்து, புதிய பயிற்சியாளரின் வழிமுறைகளுக்கு சரியான முறையில் தங்களை தயார்படுத்திக்கொண்டால் நிச்சயம் இந்த வங்கப்புலிகள் சீறும்! கோப்பைய மீண்டும் வெல்ல கொல்கத்தா அணிக்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

பயிற்சியாளர்: ஜோஸ் மொலினோ
கேப்டன்     : போர்ஜா ஃபெர்னான்டஸ்
மார்க்கீ பிளேயர் : ஹெல்டர் போஸ்டிகா
வெளிநாட்டு நட்சத்திரங்கள் : போஸ்டிகா, ஹியூம், பியர்சன், டௌடி
இந்திய நம்பிக்கைகள் : ரால்டே, அர்னாப் மொண்டால், மஜும்தார்

கேரளா பிளாஸ்டர்ஸ்
        மற்றொரு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் அணி. முதல் சீசனில் ரன்னராக வந்த இந்த அணி, இரண்டாவது சீசனில் சொதப்பி, கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டது. கோல் அடிப்பதிலும் தடுமாறி, எதிரணியின் கோல் முயற்சிகளையும் தடுக்க முடியாமல் திணறி, பயிற்சியாளரைப் பாதியில் மாற்றி அப்பப்பா…ஆனால் இந்த முறை வெகுண்டெழ வேண்டுமென்ற நோக்கில் பல மாற்றங்களை செய்துள்ளது அணி நிர்வாகம். பிரீமியர் லீக்கின் முன்னனி அணியான மான்செஸ்டர் சிட்டி அணயின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீவ் காபெல் தான் கேரளா அணியின் தற்போதைய பயிற்சியாளர்.

unnamed%20%282%29.jpg

 2016 யூரோ தொடரில் அயர்லாந்து அணிக்காக விளையாடிய ஆரோன் ஹூக்சை மார்கியூ பிளேயராகவும், இந்திய அணியின் முன்னனி வீரர் ரினோ ஆன்டோவையும் ஒப்பந்தம் செய்து தங்கள் அணியின் தடுப்பாட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளளனர். 
ஐ.எஸ்.எல் தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்த இரண்டாவது இந்தியரான ஹவோகிப்பும் இம்முறை கேரளாவின் மஞ்சள் உடையில்தான் கலக்கப்போகிறார். 2014 ஐ-லீக் தொடரில் அதிக கோலடித்த வீரர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் கடைசி 9 போட்டிகளில் 6 கோல்களும் 3 அசிஸ்டுகளும் செய்து கலக்கிய ஆன்டோனியோ ஜெர்மன்தான் இம்முறை அணியின் முதுகெலும்பாக இருப்பார். லெஃப்ட் விங்கில் ஆடக்கூடிய சிறந்த தடுப்பாட்டக்காரர் எவரும் இல்லாதது மிகப்பெரிய மைனஸ். நடுகளம் மிகவும் பலவீனமாகவே காணப்படுகிறது. அதனால் முன்களத்திற்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகமே. 

வினீத், ஆன்டோ ஆகியோர் ஏ.எஃப்.சி கோப்பை அரையிறுதியில் பெங்களூரு அணிக்காக விளையாட இருப்பதால் கேரளா அனியின் முதல் 4 போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள். இது பிளாஸ்டர்சுக்கு மேலும் பின்னடைவு. சென்ற ஆண்டை விட இம்முறை தடுப்பாட்டம் பலமடைந்தாலும், எதிரணியின் அரணை உடைத்து கோல் அடிப்பதில் தேர்ந்து விளங்கினால் மட்டுமே கேரளா அணி எதிரணியை பிளாஸ்ட் செய்ய முடியும். 

அனைத்தையும் விட கேரளா அணி கடந்த சீசனில் இழந்தது தங்கள் முதல் சீசன் கேப்டன் டேவிட் ஜேம்சின் தலைமையைத்தான். அவரது அபார தலைமையும் வழிநடத்தலும்தான் அணியை முதல் சீசனில் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது. அந்தக் குறையை ஹியூக்ஸ் போக்கினால் முன்னேற்றம் காணலாம். அரையிறுதி வாய்ப்பு 50-50 தான்!

பயிற்சியாளர் : ஸ்டீவன் காபெல்லோ
கேப்டன் & மார்க்கீ பிளேயர் : ஆரோன் ஹியூக்ஸ்
வெளிநாட்டு நட்சத்திரங்கள் : ஆன்டோனியோ ஜெர்மன், ஜோசு குரியாஸ்,  ஹெங்பெர்ட்
இந்திய நம்பிக்கைகள் : முகமது ரஃபி, ஜிங்டன், ஹவோகிப், ரினோ ஆன்டோ 

http://www.vikatan.com/news/sports/68956-who-will-win-isl-this-season.art

Link to comment
Share on other sites

பிரியர்கள் அல்ல... கால்பந்து வெறியர்கள் நிறைந்த கோவா..! #LetsFootball

இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து தொடரின் மூன்றாவது சீசன் நாளை தொடங்குகிறது. ஐஎஸ்எல் வரவால் இந்தியாவில் கால்பந்து கலாசாரம் வேகமாக பரவி வருகிறது என்பதால், முந்தைய சீசன்களை விட இந்த சீசன் பரப்பரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா, கேரளா அணிகளின் பலம், பலவீனம் பற்றி நேற்று அலசினோம். இன்று கோவா அணி, புனே அணிகளின் நிலவரம். 

FC கோவா

goa.png


        இயக்குநர் ராம் பாணியில் சொன்னால், “கிரிக்கெட் மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தியாவின் வரைபடத்திலிருந்து களவாடப்பட்டு, கால்பந்தின் சொர்க்கமான ஐரோப்பாவோடு இணைக்கப்பட்ட, மெஸ்ஸி ரசிகர்களும், ரொனால்டோ வெறியர்களும் வாழும் ஊர்” தான் கோவா. அவர்களுக்காகத்தான் கடந்த சீசனின் இறுதிப் போட்டி மிகச்சிறிய மைதானமாய் இருந்தாலும் கோவாவில் நடத்தப்பட்டது. அந்த ரசிகர்களுக்காக இம்முறை கோப்பை வென்று தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கோவா அணி. 

        இரண்டு சீசன்களிலும் புள்ளிப்பட்டியலில் டாப் இரண்டு இடங்களுக்குள் வந்த கோவா அணியால் கோப்பையைத்தான் வெல்ல முடியவில்லை. கடந்த சீசன் ஃபைனலில் கடைசி 10 நிமிடம் வரை கோப்பை கோவாவின் கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருந்தது.  ஆனால் சென்னை அணியின் மேஜிக்கால் அது மீண்டும் எட்டாக் கனியானது. இரண்டு முறை தவறவிட்ட கோப்பையை இம்முறை கைப்பற்றியே தீருவது என்ற வைராக்கியத்தோடு இருக்கிறார் பயிற்சியாளர் ஜிகோ.

        தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கோவா அணியை வழிநடத்தப்போகும் பிரேசிலைச் சார்ந்த ஜிகோ, இம்முறையும் பலமான அணியையே களமிறக்கப் போகிறார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் லூசியோ தான் மார்க்கீ பிளேயர். கோவா அணியைப் பொறுத்தவரையில் முழுதும் பிரேசில் வீரர்களே. 10 வெளிநாட்டவர்களில் 8 பேர் அந்நாட்டவரே. அதனால் ஜிகோவிற்கு அவர்களை ஒருங்கிணைப்பது மிகவும் எளிது. இரண்டாவது சீசனில் கோவா தான் அதிக கோல்கள் அடித்த அணி. அவர்களின் முன்களம் அவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தது. இம்முறையும் ரீனால்டோ, ஜூலியோ சீசர் போன்ற வீரர்கள் கோவாவிற்கு பலமாய் அமைந்துள்ளனர். ஆனால் கடந்த சீசனில் அசத்திய ஹவோகிப், டூடு உள்ளிட்ட சில முன்னனி இந்திய வீரர்களை அந்த அணி தக்கவைத்துக்கொள்ள தவறிவிட்டது.

      கடந்த சீசன் ஃபைனல் முடிந்ததும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோவா உரிமையாளர்களுக்கு தடை இருந்தது. அதனால் வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் கோவா அணிக்கு சில நாட்கள் பிரச்சனை இருந்தது. ஆனாலும் அதையெல்லாம் சரிசெய்து முன்னணி இந்திய வீரர் ராபின் சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த முறை டெல்லி அணி அரையிறுதி வரை செல்லக் காரணமாய் அமைந்த ராபின் சிங் கோவா அணிக்கு மிகப்பெரிய பிளஸ். ரோமியோ ஃபெர்னாண்டெஸ், மந்தர் ராவ் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டுள்ளதால் கோவாவின் நடுகளமும் பிரமிக்க வைக்கிறது. ஸ்பெயினின் ஜோஃப்ரே அவர்களின் நடுகளத்திற்கு வேகமும் அனுபவமும் கூட்டுகிறார்.

        கோவா அணியின் பலம் பலவீனம் இரண்டும் இம்முறை அவர்களின் தடுப்பாட்டம்தான். உலக அரங்கில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் – லூசியோ, சப்ரோசோ, டென்சில் ஃபிரான்கோ போன்றோர் எதிரணிக்கு அரணாய் விளங்குவர். ஆனால் வெளிநாட்டு வீரர்களெல்லாம் 30 வயதுக்கும் அதிகமானவர்கள் என்பதால் 90 நிமிடங்களும் அவர்களால் எதிரணி வீரர்களுக்கு ஈடு கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமின்றி போட்டிகள் அனைத்தும் 2-3 நாள் இடைவெளியிலேயே நடப்பதால் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுமளவிற்கு அவர்களது உடல் ஒத்துழைக்குமா என்பதும் மிகப்பெரிய சந்தேகம். கோல்கீப்பிங்கைப் பொறுத்தவரையில் கடந்த சீசனில் கலக்கிய கட்டிமானியைத் தான் இப்போதும் நம்பியுள்ளது. அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்கள் இல்லாதது சற்று பின்னடைவுதான். கடந்த சீசனில் 8 அசிஸ்டுகள் செய்து அசிஸ்ட் கிங்காக விளங்கிய லியோ மௌராவை கோவா அணி ரொம்பவே மிஸ் செய்யும்.

இதுபோன்ற சில பலவீனங்கள் தென்பட்டாலும் மொத்தமாகப் பார்க்கும்போது கடந்த இரண்டு சீசன்களைப் போல இந்த சீசனிலும் கோவா அணி பலமானதாகவே காணப்படுகிறது. “சிறப்பாக விளையாடுவதற்குத் தகுந்த வாய்ப்பும், தொலைநோக்கு எண்ணம் கொண்ட உரிமையாளர்களும் இருக்கும்போது, நமது செயல்பாடு பல மடங்கு அதிகரிக்கும். கால்பந்தைப் பொறுத்தவரையில் முடிவுகளே முக்கியம். கடந்த இரண்டு சீசன்களில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளது. இந்தப் புதிய சீசனிலும் நல்ல முடிவுகள் கிடைக்கும்” என்று கூறும் ஜிகோ, தனது அணியை ‘பிரீ-சீசன்’ பயிற்சிக்கு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள தனது அகாடமியில் வைத்து டிரில் கொடுத்துள்ளார்.
கோவா அணியின் மிகப்பெரிய பலமே, அவர்களின் நிலைத்தன்மை தான். அதனை இம்முறையும் தொடரும்பட்சத்தில் அணியின் சக உரிமையாளர் விராத் கோலியின் கர்ஜனையோடு கோப்பையை முத்தமிடலாம்!

giga.png

 

பயிற்சியாளர் : ஜிகோ
கேப்டன் & மார்க்கீ பிளேயர் : லூசியோ
வெளிநாட்டு நட்சத்திரங்கள் : ரீனால்டோ, ஜெஃப்ரே, சப்ரோசா, லூசியோ
இந்திய நம்பிக்கைகள் : ராபின் சிங், கட்டிமானி, ரோமியோ ஃபெர்னாண்டெஸ்,  மந்தர் ராவ் தேசாய்.



புனே சிட்டி FC

pune.png


        ஐ.எஸ்.எல் கோப்பையை முதல் முதலாய் முத்தமிட்ட மானேஜரான ஆன்டோனியோ ஹபாஸ் இப்போது கோப்பையை புனேவிற்கு கடத்தும் முனைப்பில் முறுக்கிக்கொண்டு நிற்கிறார். ஐ.எஸ்.எல்லின் வெற்றிகரமான பயிற்சியாளர்களுள் ஒருவரான ஹபாஸ், இரண்டு சீசனிலும் 6வது மற்றும் 7வது இடம் என சொதப்பிய புனேவை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசன்களைப் போல் அல்லாமல், ஐ.எஸ்.எல் தொடரில் சாதித்துக் காட்டிய வீரர்களையெல்லாம் வளைத்துப் போட்டுள்ளது புனே. “வீரர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து சரிசெய்து, அவர்களின் உடலைப்பற்றி அவர்களை உணரச்செய்துள்ளோம். வீரர்களின் உடல்திடம் தான் மிக முக்கியம்” என்று கூறிய ஹபாஸ் ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து பார்த்து செயல்பட்டு வருகிறார். 

        ஒவ்வொரு பொசிஷனுக்கும் தேவையான தகுதியான வீரர்களை ஒப்பந்தம் செய்தார் ஹபாஸ். ஆனால் சீசன் தொடங்காத நிலையிலேயே அவ்வணிக்குப் பேரடி விழுந்துள்ளது. மார்க்கீ பிளேயராக ஒப்பந்தம் செய்யப்பட்ட குட்ஜோன்சனும் தடுப்பாட்டக்காரர் பிகேவும் காயத்தால் இப்போது தொடரிலிருந்து வெளியேறிவிட்டனர். தொடர் தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் அவர்களுக்கு இணையான மாற்று கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 2016 யூரோ கோப்பைத் தொடரில் ஐஸ்லாந்து அணிக்காக விளையாடிய குட்ஜோன்சன் தான் இவ்வாண்டு புனேவின் துருப்புச்சீட்டாய் கருதப்பட்டார். இந்நிலையில் அவரக்கு ஏற்பட்ட காயம் அணிக்கு நிச்சயம் பேரிழப்பு தான்.

        முதல் சீசனில் கொல்கத்தா அணிக்காகவும், போன சீசனில் சென்னை அணிக்காகவும் விளையாடி, இரண்டு தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய கோல்கீப்பர் எடல் இவ்வருடம் புனேவுக்காக விளையாடப்போகிறார். இந்த சீசனிலும் இவர் கோப்பையை வெல்லும்பட்சத்தில், உலக வரலாற்றிலேயே முதன் முதலாக மூன்று வேறு அணிகளுக்காக தொடர்ந்து மூன்று கோப்பையை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். அவரது அதிர்ஷ்டம் புனே அணிக்குக் கைகொடுத்தால் நிச்சயம் சரித்திரம் படைக்கலாம்.

புனேயில் தமிழக வீரர்: 
புனே அணியில் இருக்கும் கவனிக்கத்தக்க மற்றொரு வீரர் ராவணன். திருச்சியைச் சேர்ந்த இவரை, தொடர்ந்து மூன்று சீசன்களாக புனே அணி தக்க வைத்துள்ளது. அதைவிட, எல்லா போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் தவறாது இடம்பெற்று விடுவார் சென்டர் பேக் ராவணன். இதுவே அவரது பெருமைக்கு ஒரு சான்று. இந்தமுறையும் அவர் எதிரணியின் ஸ்ட்ரைக்கர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என நம்பலாம். 

    கடந்த ஆண்டு கோவா அணிக்காகக் கலக்கிய ஜொனாதன் லுக்கா, கொல்கத்தாவின் நம்பிக்கை நாயகன் அராடா இசுமி, சிறந்த இடது விங் தடுப்பாட்டக்காரரான நாராயன் தாஸ், புரூனோ அரியாஸ், ஆகஸ்டின் ஃபெர்னாண்டெஸ் என ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே இம்போர்ட் செய்திருக்கிறார் பயிற்சியாளர் ஹபாஸ். இளம் நாயகர்களோடு சேர்ந்து அனுபவமிக்க முன்னாள் பார்சிலோனா அணி வீரர்களான டடோ, பிடு ஆகியோரையும் புனே அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் அவ்வணி அனைத்துத் துறைகளிலும் பலம் பொருந்திய அணியாகவே காணப்படுகிறது. முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டு தொடரிலிருந்து வெளியேறிய குட்ஜோன்சனுக்குப் பதிலாக சிறந்த முன்கள வீரரை அவர்கள் தேடிப்பிடிக்க வேண்டும். இல்லையேல் அவர்களது முன்களம் திக்குத் தெரியாமல் போய்விடும். அணியை பெரிதும் பாதித்துவிடும். இதுமட்டுமே தற்போதைக்குப் புனே அணியின் மிகப்பெரிய பிரச்சனை. அதை சரிசெய்தால் அரையிறுதி வாய்ப்பு நிச்சயம். கோப்பை பற்றிய கனவும் கூட பலிக்கலாம்!

puneca.png

 

பயிற்சியாளர் : ஆன்டோனியோ ஹபாஸ்
வெளிநாட்டு நட்சத்திரங்கள் : எடல், லுக்கா, பிடு, டடோ
இந்திய நம்பிக்கைகள் : லிங்டாக். இசுமி, சஞ்சு பிரதான், ஆகஸ்டின் ஃபெர்னாண்டெஸ்

http://www.vikatan.com/news/sports/68996-football-fanatics-goa.art

Link to comment
Share on other sites

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து சீசன் 3: கவுகாத்தியில் இன்று கோலாகல தொடக்கம்

Date: 2016-10-01@ 01:13:27

Daily_News_497967004777.jpg

கவுகாத்தி: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) சீசன் 3 கால்பந்து போட்டித் தொடர், பாலிவுட் நட்சத்திரங்களின் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கவுகாத்தியில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.  ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கடந்த 2014ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. முதல் சீசனில் அத்லெடிகோ டி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கடந்த ஆண்டு நடந்த 2வது சீசனில் சென்னையின் எப்சி அணி இறுதிப் போட்டியில் கோவா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.  இந்நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐஎஸ்எல் சீசன் 3 தொடர், கவுகாத்தி இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் பாலிவுட் நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது.

இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் அலியாபட், ஜாக்குலின் பெர்ணான்டஸ், வருண் தவான் மற்றும் 500 கலைஞர்கள் சேர்ந்து நடத்தும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர், நடிகரும் சென்னையின் எப்சி அணியின் உரிமையாளருமான அபிஷேக் பச்சன் உள்பட ஏராளமானோர் தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.  ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.  மொத்தம் 79 நாட்களில் 61 போட்டிகள் நடைபெறுகிறது. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது.

இன்று மாலை 7 மணிக்கு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி - கேரளா பிளேஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் சென்னையின் எப்சி அணி தனது முதல் ஆட்டத்தில், முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அத்லெடிகோ டி கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் நாளை எதிர்கொள்கிறது.

http://www.dinakaran.com/News_detail.asp?Nid=249368

Link to comment
Share on other sites

கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் மூன்றாவது சீசன், கவுகாத்தியில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் நார்த்ஈஸ்ட், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள அணிகளின் பலம், பலவீனம் குறித்து அலசி வருகிறோம். அந்த வரிசையில் இன்று, மும்பை, நார்த் ஈஸ்ட் யுனைடட், டெல்லி டைனமோஸ் அணிகள் பற்றிய விவரம்.

இந்த மூன்று அணிகளுமே இதுவரை ஐ.எஸ்.எல் ஃபைனலுக்குள் நுழைந்ததில்லை. டெல்லி அணி மட்டுமே அரையிறுதி வரை சென்றுள்ளது. பல மாற்றங்களுடன் களம் காணும் இவ்வணிகளுக்கு இந்தத் தொடரை வெல்ல எந்த அளவிற்கு வாய்ப்பு உள்ளது? 


மும்பை சிட்டி FC

mum.png


ஐ.பி.எல்லிற்கு ஆர்.சி.பி என்றால் ஐ.எஸ்.எல்லிற்கு மும்பை அணி. பெரிய பெரிய நட்சத்திரங்கள் அணிவகுத்து நிற்பார்கள், தொடருக்கு முன்பாக அந்த அணிதான் பலமாக அணியாக தெரியும். ஆனால் கடைசியில் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே. முதலிரண்டு சீசன்களில் ஜுன்பெர்க், அனெல்கா போன்ற மாபெரும் வீரர்களை மார்க்கீ வீரர்களாகக் கொண்டிருந்த மும்பை அணி இம்முறை மேலும் ஒருபடி மேலே போய் உருகுவே ஜாம்பவான் டீகோ ஃபோர்லானை ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னாள் மார்க்கீ பிளேயர்களால் மும்பை அணியின் வெற்றிக்கு அணு அளவும் பலன் இல்லை. எனவே ஃபோர்லான் மீது தொடக்கத்திலேயே பிரஷர் எகிறியுள்ளது. 

2010 ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல்கள் (5) அடித்தது மட்டுமல்லாமல் சிறந்த வீரருக்கான ‘கோல்டன் பால்’ விருதையும் வென்று அசத்தியவர் ஃபோர்லான். புகழ்பெற்ற அணிகளான மான்செஸ்டர் யுனைடட் மற்றும் அத்லெடிகோ மாட்ரிட் போன்ற அணிகளுக்காக விளையாடியவர். கோல் கம்பத்திற்கு வெகுதொலைவிலிருந்து கோல் அடிப்பதில் வல்லவர். அவரது வருகை மும்பை அணிக்கு மட்டுமல்ல, இந்தத் தொடருக்கே ஒரு மிகப்பெரிய பிளஸ்.

ஃபோர்லானோடு சேர்ந்து முன்களத்தில் கலக்கக் காத்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. கடந்த சீசனில் ஹாட்ரிக் அடித்து அசத்திய சேத்ரி இம்முறையும் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம். அனுபவம் வாய்ந்த ஃபோர்லான் சேத்ரி கூட்டணி நிச்சயம் எதிரணிக்கு சிம்மசொப்பனமாய் விளங்கும். ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகும். AFC கோப்பை கால்பந்துத் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் சேத்ரி அணியோடு இணைவதற்கு ஓரிரு வாரங்கள் ஆகும். அதுவரை மும்பை அணி எதிரணிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதுதான் கேள்வியே. 

கடந்த சீசனில் தங்கள் அணிக்கு எதிராக ஹாட்ரிக் அடித்து அலறவைத்த இந்திய வீரர் ஹவோகிப்பை அலேக்காக அள்ளி வந்த்விட்டது மும்பை அணி. மேலும் கோல்கீப்பிங்கில் அசத்திய அம்ரிந்தர் சிங், ஜாகிசந்த் சிங், லால்ரிமுவானா போன்ற திறமையான இந்திய வீரர்களைக் கொண்டுள்ள மும்பை அணி, தங்களின் மோசமான பயணத்திற்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மிட் ஃபீல்டில் அசத்தும் சோனி நார்டே ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைக்க வல்லவர். அதுவும் மும்பை அணிக்கு மிகப்பெரிய பலம்.

மும்பையைப் பொறுத்தவரையில் அவர்களின் தலைவலியெல்லாம் தடுப்பாட்டம் தான். ஃபகுண்டா கர்டோசா, வால்டர் இபினெஸ் தவிர்த்து பெரும்பாலானோர் அனுபவம் இல்லாதவர்களே. கோல்கீப்பர்களும் இளம் வீரர்களாக இருப்பதால் தடுப்பாட்டக்காரர்களை எந்தளவு அவர்களால் ஒருங்கிணைக்க முடியும் என்பது சந்தேகம்தான். அதை சரிசெய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்போடும், மும்பை அணியை அரையிறுதிக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற கனவோடும் பயிற்சியாளராய்ப் பொறுப்பேற்றுள்ளார் அலெக்சாண்டர் கிமாரஸ்.

 துபாயில் அணியின் பயிற்சியை முடித்து வந்திருக்கும் கிமாரஸ், “அந்தக் கடும் வெயிலில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தேவையான நேரத்தில் தேவையான பங்களிப்பை அளித்தனர். அவர்களோடு இங்கு 35 நாட்களாய் இருக்கிறேன். இது அணியோடு ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது” என்று தனது அணியைப் பற்றி பாசிடிவாகவே பேசியுள்ளார். அதற்கேற்ப பயிற்சியில் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காமல் திரும்பியுள்ளது முப்மை அணி. இதே ஃபார்மை தக்கவைத்தால் நிச்சயம் அரையிறுதிக்குள் நுழையலாம்.

mum1.png


பயிற்சியாளர் : அலெக்சாண்டர் கிமாரஸ்
மார்க்கீ பிளேயர் : டீகோ ஃபோர்லான்
வெளிநாட்டு நட்சத்திரங்கள் : ஃபோர்லான், சோனி நார்டே, சாங்கோய்
இந்திய நம்பிக்கைகள் : சேத்ரி, ஹவோகிப், அம்ரிந்தர் சிங், ஜாகிசந்த் சிங்



நார்த் ஈஸ்ட் யுனைடட்

ne.png


மும்பை ஆர்.சி.பி என்றால், நார்த் ஈஸ்ட் அணி ஐ.எஸ்.எல்லின் ராஜஸ்தான் ராயல்சாக இருந்து வந்தது. அசாமின் கவுகாத்தியை மையமாகக் கொண்டிருந்தாலும், வடகிழக்கு இந்தியாவின் ஆறு மாநிலங்களக்குமே தாங்கள் பிரதிநிதிகள் என்று கூறினார் அணியின் உரிமையாளரான நடிகர் ஜான் ஆபிரகாம். அதுமட்டுமின்றி அந்த ஆறு மாநிலங்களைச் சார்ந்த இளம் வீரர்களுக்கே அணியில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது. ஆனாலும் கடந்த இரண்டு சீசன்களிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால் அணி வீரர்களை மட்டுமல்லாது தங்கள் ஃபார்முலாவையும் சேர்ந்து மாற்றியுள்ளனர். கடந்த சீசனில் விளையாடிய 6 வீரர்களை மட்டுமே இவர்கள் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

நெலோ வெங்கடே எனும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளரை நியமித்து தங்கள் மாற்றத்தைத் தொடங்கியது அவ்வணி. ‘புரொஃபசர் என்று பயிற்சியாளர் வட்டத்தில் அழைக்கப்படும் இவர் அணியின் பாதையை மாற்றுவதற்கு சரியான சாய்ஸ். இந்திய அணியின் கோல்கீப்பரும், ‘ஸ்பைடர் மேன்’ என்று கால்பந்து உலகால் வர்ணிக்கப்படும் சுப்ரதா ராயையும் ஒப்பந்தம் செய்துள்ளது நார்த் ஈஸ்ட். நடுகளத்தில் அரணாய் விளங்கக்கூடிய டிடியர் சகோராவை கோவா அணியிலிருந்து மார்க்கீ பிளேயராக ஒப்பந்தம் செய்துள்ளனர். அவரோடு மிட் ஃபீல்டில் கலக்க மோகன் பாகன் அணியின் துணைக்கேப்டன் காட்சுமி யுசாவும் காத்துக்கொண்டிருக்கிறார். 

முன்களத்தில் நார்த் ஈஸ்டின் நம்பிக்கை நாயகனான இளம் வீரர் நிகோலஸ் வெலசையே அணி இம்முறையும் சார்ந்துள்ளது. அவரோடு இணைந்து கோல்களை அடுக்க, உருகுவேயின் அல்ஃபாரோ, சாஷா அனேஃப் இணையையும் இணைத்துள்ளனர். நிர்மல் சேத்ரி, சௌவிக் கோஷ், குருங் போன்ற இளைஞர்கள் அசத்தக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை வழிநடத்தும் வகையில் தடுப்பாட்டத்தில் ஒரு பெரும் புள்ளி இல்லை. இது நார்த் ஈஸ்ட் அணிக்கு பின்னடைவாக அமையலாம். 

அணியின் கோர் முற்றிலுமாக மாற்றப்பட்டுவிட்டது. அனைவரும் தரமான வீரர்கள் என்றாலும், மேட்ச் வின்னர் என்று சொல்லுமளவிற்கு பெரிய வீரர் யாரும் இல்லை. புதிய பயிற்சியாளர், புதிய வீரர்கள் செட் ஆவதற்கு எப்படியும் சில காலம் ஆகும். இவையெல்லாம் ஸ்ட்ரைக் ஆனால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும்.


பயிற்சியாளர் : நெலோ வெங்கடே
மார்க்கீ பிளேயர் : டிடியர் சகோரா
வெளிநாட்டு நட்சத்திரங்கள் : வெலெஸ், அல்ஃபாரோ, யூசா
இந்திய நம்பிக்கைகள் : சுப்ரதா ராய், குருங், ஃபனாய்



டெல்லி டைனமோஸ்

delhi.png


பார்சிலோனா அணிக்காக விளையாடியவரான 39 வயது சம்ப்ரோட்டாவை ராபர்டோ கார்லோசின் இடத்தில் உட்கார வைத்துள்ளது டைனமோஸ் அணி. கடந்த சீசன் அரையிறுதியில் கோவா அணியிடம் தோற்று ஃபைனல் வாய்ப்பை இழந்த அணி, இம்முறை சீரமைக்கப்பட்டு புதிய தோற்றத்தோடு களம் காண்கிறது. அணியிலிருக்கும் 25 வீரர்களில் 14 பேர் ஐ.எஸ்.எல் தொடருக்குப் புதியவர்கள். இத்தொடரில் விளையாடிய பரீட்சையம் இல்லாத வீரர்களை வைத்துக்கொண்டு டெல்லி அணி எப்படி கரை சேரப்போகிறது என்பதுதான் கேள்வியே.

இரண்டாவது சீசனில் 8 அசிஸ்டுகள் செய்து அசத்திய மலௌடா தான் டெல்லி அணியின் மார்க்கீ பிளேயர். செல்சி அணிக்கு விளையாடிய இவர், ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள வல்லவர். இவர் மட்டுமல்லாது தேவ்தாஸ், பெலிசாரி, சௌவிக் என அசத்தலான நடுகளம் அணிக்கு மிகப்பெரிய பலம். பிரேசிலைச் சேர்ந்தவரான பெலிசாரி, முதலிரு சீசன்களில் சென்னை அணிக்காக விளையாடி 7 கோல்கள் அடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘டெல்லியின் நம்பிக்கை’ ரிச்சார்ட் கட்சேவோடு இணைந்து கலக்க, செனிகலின் இளம் வீரர் பட்சி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் இந்தியாவின் ஸ்டார் பிளேயர் ராபின் சிங் அணியிலிருந்து வெளியேறியிருப்பது அணிக்குப் பெரும் இழப்பு. இந்திய வீரர் அர்ஜுன் டூடுவும் அவ்வப்போது அணிக்குக் கைகொடுக்கலாம். 

தடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் பிற அணிகளைப் போல் பலவீனமாக இல்லாமல் சற்று பலமாகவே உள்ளது டெல்லியின் பின்களம். இத்தொடரின் ஸ்டார் கோல்கீப்பரான டோனி டப்லஸ் எதிரணிக்கு நிச்சயம் குடைச்சல் தருவார். ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி லா லிகா மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களை வென்றவரான தடுப்பாட்டக்காரர் ரசோ அவ்வணிக்கு அனுபவம் சேர்க்கிறார். அவரோடு இணைந்து கலக்கக் காத்திருக்கிறார் இந்தியாவின் அனாஸ் எடதொடாகியா. இவர்கள் இணை டெல்லியின் பின்களத்திற்கு மிகப்பெரிய பலம். அவர்களோடு சேர்ந்து கானாவின் டேவிட் ஏடி, சிங்லென்சனா ஆகியோரும் தடுப்பாட்டத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றனர்.
டெல்லி அணியைப் பொறுத்தவரை இந்த சீசனில் கலக்கத் தேவையான திறமைகளைக் கொண்ட அணியாகத்தான் தெரிகிறது. ஆனால் அவர்களின் ‘கன்சிஸ்டென்சி’ தான் அவர்களது தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகிறது. முன்களம் மற்ற அணிகளை விடவும் சற்றே பலவீனமாகத் தெரிகிறது. அந்த அணியின் ஸ்ட்ரைக்கர்கள் ஃபார்மில் இருந்தால் நிச்சயம் அவர்கள் வெற்றிகளைக் குவிப்பார்கள். அதுமட்டுமின்றி மார்க்கீ வீரர் மலௌடாவையே மிகவும் சார்ந்திருப்பது அணிக்கு நெகடிவாக அமைந்துவிடும். அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

del1.png

 


பயிற்சியாளர் : சம்ப்ரொட்டா
மார்க்கீ பிளேயர் : மலௌடா
வெளிநாட்டு நட்சத்திரங்கள் : ரோசா, கட்சே, பெலிசாரி, மலௌடா
இந்திய நம்பிக்கைகள் : எடதொடிகா, தேவ்தாஸ், சௌவிக் சக்ரபோர்டி, டூடு

http://www.vikatan.com/news/sports/69047-this-is-football-timeisl-starts.art

Link to comment
Share on other sites

கோப்பையை தக்கவைப்பார்களா ‘சூப்பர் மச்சான்ஸ்’!

fc2.jpg  

 

 “ உலகமே நாங்க காலினு நினைச்சுது, ஆனா நாங்க ஒன்னா நின்னோம். ஃபைனல்ஸ் ஆடுறதுக்கு முன்னாடியே சாம்பியன் ஆனோம்” – கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள சோகத்தையும், அதற்கிடையே சென்னையின் FC கோப்பை வென்ற மகிழ்ச்சியான நினைவையும் நம் மனதிற்குள் கடத்துகிறது சென்னை அணியின் புரோமோ வீடியோ. மகிழ்ச்சி என்னும் உணர்வு மறையாமல் இருக்க வேண்டுமே. அதற்கு சென்னை அணி மீண்டும் மகுடம் சூட வேண்டுமே. நடக்குமா?
 
    “கோப்பையை வெல்வதைவிட, அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் மிகவும் கடினம் என்று நான் அறிவேன். கடந்த ஆண்டு மக்கள் வெள்ளத்தால் அவதிப்பட்ட நிலையில் கோப்பையை வென்றோம். அது அவர்களின் துயரைத் துடைத்திருக்காது. ஆனாலும் அது அவர்களுக்காகத்தான். இம்முறையும் அவர்களுக்காக இம்முறையும் வெல்வோம்” என்று நம்பிக்கை விதைக்கிறார் அணியின் பயிற்சியாளர் மார்கோ மடரசி. 

எலானோ, மெண்டோசா இல்லை!

    சென்னை அணியின் மிகப்பெரிய பலமாய், அவர்களின் வெற்றிக்கு மாபெரும் உந்து சக்தியாய் விளங்கிய இருவர் மெண்டோசா மற்றும் எலானோ. அணியின் மார்க்கீ பிளேயராகவும் கேப்டனாகவும் இருந்து அசத்திய எலானோ இம்முறை ஐ.எஸ்.எல் தொடரில் பங்கேற்கவில்லை. முதல் சீசனில் 8 கோல்கள் அடித்து ‘கோல்டன் பூட்’ விருதை வென்று அசத்தினார். இரண்டாவது சீசனில் எலானோவின் ரோலை மெண்டோசா செய்து முடித்தார். 2015 சீசனில் 13 கோல்கள் அடித்து தங்கக் காலணி விருதை வென்றதோடு மட்டுமல்லாமல், அணி கோப்பை வெல்லவும் மிகப்பெரிய காரணமாய் அமைந்தார். அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் தொடரில் விளையாடி வருவதால் அவரும் இவ்வருடம் பங்கேற்கவில்லை. இந்த இரு பெரும் தலைகள் இல்லாமல் சென்னை அணி எப்படி ஜொலிக்கும்? இதுதான் அனைவரின் கேள்வியும்.

fc6.jpg

 

ஆரோக்கியமான மாற்றம் 

    இதை ஒரு வகையில் பாசிடிவாகவும் எடுத்துக்கொள்ளலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் ஐ.பி.எல்லின் கில்லி. தொடக்கத்தில் வெறுமனே ஹஸ்ஸி, அல்பீ, முரளி ஆகியோரை நம்பியிருந்த சமயம் சிறப்பாய் செயல்பட்ட போதும், அதுவும் ஒரு சாதாரன அணியாகவே பார்க்கப்பட்டது. எப்போது ரெய்னா, விஜய், அஷ்வின், ஜடேஜா, மோகித் என்று இந்தியர்களை மையமாக வைத்து செயல்படத் தொடங்கியதோ அப்போதுதான் மாபெரும் அணியாக உருவெடுத்தது. அப்படியான மாற்றத்தைத் தான் இப்போது சென்னையின் FC யில் பார்க்க முடிகிறது. இம்முறை அணியின் ‘கோர்’-ஆக விளங்குவது, ஜீஜே, தோய் சிங், பல்ஜித் சன்னி, மோகன் ராஜ், தனபால் கனேஷ் ஆகியோர் தான். இனி சென்னையின் FC ‘ஒன் மேன் டீம்’ கிடையாது. ஃபாரின் வீரர்களை மட்டுமே நம்பிக் களம் காணும் அணி கிடையாது. இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் மட்டுமின்றி, அடையாளம் தெரியாத 3 U-19 வீரர்களையும் அணியில் இணைத்துள்ளார் பயிற்சியாளர் மடரசி. சென்னை அணிக்கு மட்டுமல்லாமல் இந்திய கால்பந்திற்கும் இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.

    சூப்பர் கிங்ஸ்னா நம்ம பார்வை எப்பவுமே ரெய்னா, தோனி, அஷ்வின், மெக்குல்லம் மாதிரி சில பேர் மேல தான் இருக்கும். அப்படி சூப்பர் மச்சான்ஸ் டீம்ல யார் மீதெல்லாம் நாம கண்ணு வைக்கனும். ( கண்ணு வச்சுடாதீங்க…நம்ம பயக பெர்ஃபார்ம் பண்ணனும்ல..!)

ஜீஜே லால்பெக்லுவா

fc5.jpg

 

    இனி சென்னை அணிக்கு எல்லாமுமாக இருக்கப் போவது இந்த 25 வயது மிசோரம் இளைஞன் தான். இந்த வருடம் அவரது வாழ்வில் மறக்க முடியாததாகவே இருக்கும். இந்திய அணிக்காக கடைசி 7 போட்டிகளில் 7 கோல்கள் அடித்து பட்டையைக் கிளப்பிவருகிறார் ஜீஜே. கடந்த ஐ.எஸ்.எல் சீசனில் 6 கோல் அடித்த ஜீஜே தான், ஐ.எஸ்.எல் வரலாற்றில் அதிக கோல்கள் (10) அடித்த இந்திய வீரராவார். மெண்டோசாவும், எலானோவும் இல்லாத இடத்தில், இப்போது அணியின் முதுகுலெம்பு இவர்தான். இவர் மீது மடரசியும் அதீத நம்பிக்கை வைத்துள்ளார். அந்த நம்பிக்கையை ஜீஜே நிச்சயம் பொய்யாக்க மாட்டார். 

பெர்னார்ட் மெண்டி

fc4.jpg

 

    சென்னை அணியின் சுவர். சாதாரன சுவர் அல்ல. இதுவொரு பிரெஞ்சுப் பெருஞ்சுவர். 2015 சீசனில் குறைவான கோல்கள் அடித்த அணி சென்னை தான். அதற்கு மிகமுக்கிய காரணம் மெண்டி. அணியின் பின்களத்தை ஒருங்கிணைத்தது மட்டுமின்றி எலானோ இல்லாத நேரங்களில் கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழிநடத்தினார் இந்த முன்னாள் பி.எஸ்.ஜி அணி வீரர். ஐரோப்பிய கால்பந்துத் தொடர்களில் விளையாடிய அனுபவம் இருப்பதால், எதிரணி வீரர்களை எளிதில் மடக்கவிடுகிறார். அதுமட்டுமின்றி ஐ.எஸ்.எல் தொடரில் 3 கோல்களும் அடித்து அசத்தியுள்ளார். எதிரணி வீரர்கள் சென்னையின் கோல்கம்பத்தை நெருங்க வேண்டுமானால் மெண்டியைத் தாண்டியாக வேண்டும்.

ஜான் ஆர்னே ரீசே

 

fc7.jpg

    டெல்லி அணியிலிருந்து இப்போது சென்னை அணியின் மார்க்கீ பிளேயர் ஆகியிருக்கிறார் ரீசே. கிளப் போட்டிகள், சர்வதேசப் போட்டிகள் என இதுவரை சுமார் 650 போட்டிகளில் விளையாடிய அனுபவசாலி. லிவர்பூல், ரோமா உள்ளிட்ட முன்னனி அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கடந்த சீசனில் டெல்லி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற முக்கியக் காரணமாகவும் விளங்கினார். இளைஞர்கள் நிறைந்த சென்னை அணிக்கு அவரின் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். தடுப்பாட்டத்தில் இடதுபுறம் ஆடும் ரீசே மெண்டியோடு இணைந்து மாபெரும் அரணை உருவாக்கப்போகிறார்.

தனபால் கனேசன்

fc3.jpg

 

    சென்னையைச் சேர்ந்தவரான தனபால் கனேசன் பெரிய நட்சத்திரம் கிடையாது. ஆனால் நட்சத்திரமாய் ஜொலிக்கப் போவது நிச்சயம். 22 வயதுதான். இந்திய அணிக்காக 5 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியாற்று. இப்போது ஐ.எஸ்.எல் தொடரில் சர்வதேச வீரர்களோடு சேர்ந்து விளையாடும் அற்புத வாய்ப்பு. இனி தனபாலின் கால்பந்து வாழ்க்கை ஜெட் போல் உயரப்போகிறது. கால்பந்தில் மிகவும் கடினமான பொசிஷன் எதுவென்றால் ‘டிஃபன்சிவ் மிட்ஃபீல்டு’ தான். தடுப்பாட்டக்காரர் முதல் ஃபார்வார்டு வரை அனைத்து வீரர்களையும் கனெக்ட் செய்ய வேண்டும். ஒரு மெஷின் போல இரு கோல்கம்பங்கள் இடையே ஓடிக்கொண்டிருக்க வேண்டும். இந்த பொசிஷனில் விளையாடும் வீரர்கள், ‘கம்ப்ளீட் ஃபுட்பாலர்’களாக என்றும் புகழப்படுவார்கள். மெகலாலே, பிர்லோ, ராய் கீன், பேட்ரிக் வியரா என இவ்வகை வீரர்களைக் காண்பது அரிது. அந்த வகையில் உலக அரங்கில் தனபால் காலடி எடுத்து வைக்க இந்த ஐ.எஸ்.எல் ஒரு வாய்ப்பாய் இருக்கும் என்று நம்புவோம்.

நல்லப்பன் மோகன்ராஜ்

fc1.jpg

 

    கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு தமிழன். போன சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய மோகன்ராஜ் நாமக்கலைச் சேந்தவர். அணியின் மார்க்கீ வீரர் ரீசே விளையாடும் அதே ‘லெஃப்ட் பேக்’ பொசிஷன். அதனால் வாய்ப்புகள் மங்கக்கூடும். ஆனால் ரீசே நடுகளத்திலும் விளையாடக்கூடியவர் என்பதால் மோகன்ராஜுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம். மேலும் சில சமயங்களில் மடரசி மார்க்கீ வீரர்களை பெஞ்சில் அமர வைத்ததுண்டு. எலானோவையே பல போட்டிகளில் அமர வைத்தார். ரீசேவுக்கும் அவர் ஓய்வு கொடுக்க நினைத்தால் மோகன்ராஜ் இன்னும் அதிக வாய்ப்புகள் பெறலாம். இந்திய அணிக்காக 4 போட்டிகளில் விளையாடிய மோகன்ராஜ், தமிழர்களின் பெருமையை நிலைநாட்ட வேண்டும்.

    இது டிரெய்லர் மட்டும் தான். மெயின் பிக்சர் இன்னும் நீளும். கோல்கீப்பர் எடர், நம்பிக்கைக்குறிய மெஹ்ராஜுதீன் வடூ ஆகியோர் தடுப்பாட்டத்திற்கு மேலுமொரு வைரக்கற்கள். ஜெயேஷ் ரானே, டேவிட் சக்கி, டூடு ஒமாக்பேமி ஆகியோர் கொண்ட முன்களம் எந்த எதிரணியையும் போட்டுப் புரட்டியெடுத்துவிடும். மேனுவேல் பிலாசி, பெலுசோ போன்ற வெளிநாட்டு வீரர்கள் தங்கள் அறிமுக தொடரில் முத்திரை பதிக்கக் காத்திருக்கிறார்கள்.

    சென்னை அணியைப் பொறுத்தவரையில் மிகப்பிரகாசமாய் தெரியும் சூரியன் ஏதும் இல்லை. ஆனால் அருகில் சென்று பார்த்தால் சுட்டெரிக்கும் சிறிய வால் நட்சத்திரங்கள் ஏராளமாக உள்ளன. கோப்பையை தக்கவைப்பது என்பது மிகப்பெரிய சவால் தான். ஆனால் சென்னை என்ற பெயர் கொண்ட ஒரு அணிக்கு அதுவொன்றும் பெரிய விஷயமல்ல. லெட்ஸ் ஃபுட்பால் வித் சூப்பர் மச்சான்ஸ்!
        

http://www.vikatan.com/news/sports/69069-will-chennai-team-retain-their-cup-isl.art

Link to comment
Share on other sites

கோவா தோல்வி

 

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று குவாஹாட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்- எப்சி கோவா அணிகள் மோதின. 20 மற்றும் 62-வது நிமிடங்களில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி வீரர் எமிலி யானோ அல்பாரோ கோல்கள் அடித்து அசத்தினார்.

கடைசி வரை கோவா அணியால் பதிலடி கொடுக்க முடியாமல் போனதால் அந்த அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

http://tamil.thehindu.com/sports/கோவா-தோல்வி/article9187295.ece

Link to comment
Share on other sites

ஏமாற்றிய சென்னை...சொல்லி அடித்த டில்லி! #ISLupdates

chennnaii.jpg

 

பிரேசிலைச் சேர்ந்த மார்செலோ முதல் பாதியிலேயே இரண்டு கோல்கள் அடித்து அசத்த, சென்னையின் எப்.சி.யை அதன் சொந்த மண்ணில் 3-1 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தியது டில்லி டைனமோஸ் அணி.

 

சென்னை நேரு மைதானத்தில்  வியாழக்கிழமை நடந்த இந்தியன் சூப்பர் லீக்  தொடரின் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. மற்றும் டில்லி டைனமோஸ் அணிகள் மோதின. இந்த சீசனின் முதல் போட்டி என்பதால் மைதானத்தில் 21, 587 ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

 

லெஃப்ட் பேக்கில் மோகன்ராஜ், ரைட் பேக்கில் வாடூ, சென்டர் டிஃபன்ஸில் பெர்னார்டு மெண்டி மற்றும் மார்க்கீ வீரர் ஜான் ரிசீ என சென்னை அணியின் பின்களம் வலுவாக இருந்தது. ஜேஜே, டூடூ ஸ்ட்ரைக்கர்களாக களமிறங்கினர்.

 

21வது நிமிடத்தில் ஜெயஷ் ராணேவுக்கு ஓபன் நெட்டில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கோலாக மாறவில்லை. ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் டில்லி முன்கள வீரருடன் சென்னை கோல்கீப்பர் டுவைன் கெர் மோதலில் ஈடுபட்டதால், டில்லி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பிரேசிலைச் சேர்ந்த மார்செலோ பெரீரா நேர்த்தியாக இடதுகால் மூலம் சிரமமே இன்றி கோல் அடித்தார். இதனால் டில்லி 1 - 0 என முன்னிலை பெற்றது. சென்னை ரசிர்கள் விக்கித்து நின்றனர்.

 

அடுத்த சிறிது நேரத்தில் சென்னை பதிலடி கொடுத்தது.  32வது நிமிடத்தில் சென்னை வீரர் ஜெஜே பொனால்டி கொடுத்த பாஸை நட்சத்திர வீரர் டூடு டில்லி டிஃபண்டருக்கு போக்கு காட்டி கோல் அடித்தார். ஆட்டம் 1 - 1 என சமநிலை அடைந்தது. பதிலடி கொடுத்த உற்சாகத்தில் சென்னை ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.ஆனால், அந்த ஆர்ப்பரிப்பு அடங்குவதற்குள் டில்லி அணி மீண்டும் ஒரு கோல் அடித்து சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்தது.

 

ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் நடுகளத்தில் இருந்து ரிச்சர்ட் கட்ஸே கொடுத்த பாஸை, அதே வேகத்தில் நொடியும் தாமதிக்காது கோல் கீப்பரை ஏமாற்றி  கோல் அடித்தார் மார்செலோ. இது அவரது இரண்டாவது கோல். இது முழுக்க முழுக்க சென்னையின் சென்ட்ரல் டிஃபன்டர்கள் செய்த தவறால் நேர்ந்த கோல். இருப்பினும் அடுத்த நிமிடமே மென்டி மீண்டும் ஒரு தவறு செய்ய, டில்லி அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை சென்னை கோல் கீப்பர் உஷாராகி அதைத் தடுத்து விட்டார்.

 

முதல் பாதியில் அதிக கோல் வாய்ப்புகளை உருவாக்கியதால் டில்லியின் கையே ஓங்கி இருந்தது. இதனால், இடைவேளையின்போது டில்லி 2 -  1 என முன்னிலை பெற்றது.

 

இரண்டாவது பாதியில் சென்னை அணி தாக்குதல் ஆட்டத்தை துரிதப்படுத்தி இருந்து. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் டில்லி வீரர் அனஸ் காயமடைந்து வெளியேற,அவருக்குப் பதிலாக கிம் கிமா களம்புகுந்தார். 51வது நிமிடத்தில் சென்னை வீரர் ரபேல் அகஸ்டோ டில்லி வீரர் மெமோவை கீழே தள்ளி விட்டதால் மஞ்சள் அட்டை பெற்றார்.

 

டில்லி அணி ஏற்கனவே முன்னிலை பெற்றிருந்ததால், கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது சென்னை அணி. ஆனால் அதற்கான வாய்ப்பே அமையவில்லை. அதற்கு நேர்மாறாக 84வது நிமிடத்தில் லெப்ட் விங் திசையில் இருந்து வந்த கிராஸை அலட்டாமல் தலையில் முட்டி கோல் அடித்தார் டில்லி வீரர் . இதனால் டில்லி 3- 1 என முன்னிலை பெற்றது. சென்னை அணியின் பயிற்சியாளர் மார்கோ மடராஸி மட்டுமல்லாது மைதானத்தில் இருந்து ஒட்டுமொத்த ரசிர்களும் அதிருப்தி அடைந்தனர்.

 

ஆட்டம் முடிய 2 நிமிடங்களே இருந்தபோது ரைட் விங் பகுதியில் இருந்து டூடூ நேர்த்தியாக கொடுத்த பாஸை, கலெக்ட் செய்து கோல் அடிக்க ஆளில்லாததால் சென்னை அணியின் கோல் வாய்ப்பு நழுவியது. இரண்டாவது பாதியில் கடைசி வரை சென்னையால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், சொந்த மண்ணில் முதல் தோல்வியைத் தழுவியது. ஆட்ட நேர முடிவில் 3- 1 என்ற கோல் கணக்கில் டில்லி வெற்றி பெற்றது.

http://www.vikatan.com/news/sports/69235-delhi-wins-first-match-in-isl.art

Link to comment
Share on other sites

'லைக்ஸ் மழை பொழியுது ப்ரோ!' #ஐ.எஸ்.எல் தமிழர்கள்


கிரிக்கெட்டுக்கு அடுத்த இடம் இந்தியாவில் கால்பந்துக்குதான். சூடுபிடித்திருக்கிறது ஐ.எஸ்.எல். அதில் விளையாடும் தமிழக வீரர்கள் மூவரை சந்தித்தோம்.

ராவணன்: 

rav.jpg


”எங்க தாத்தா தி.க.ல இருந்தாரு. வீரமணிதான் எனக்கு பேர் வச்சாரு’ என படபடவென பேசும் ராவணன், ஐஎஸ்எல் தொடரில், புனே சிட்டி எப்.சி. அணியின் தவிர்க்க முடியாத வீரர். 

''இந்தியன் பேங்க்ல கிடைச்ச வேலையை 20 வயசுலயே ரிசைன் பண்ணிட்டு, ஃபுட்பால்தான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன். இன்னிக்கி வரைக்கும் எந்த குறையும் இல்லை. கிரிக்கெட் பிளேயர்ஸ் மாதிரி நாங்களும் ஃபிளைட்ல போறோம், ஸ்டார் ஹோட்டல்ல தங்குறோம், ஃபாரின் ட்ரிப் அடிக்கிறோம். அஃப்கோர்ஸ்... நல்லாவே சம்பாதிக்கிறோம்'' என உற்சாகமாக தொடங்கினார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பறை ராவணன் சொந்த ஊர். திருச்சி பிஷப் ஹெர்பர் பள்ளியில் படிக்கும்போது கால்பந்து மீது காதல். அந்த காதலுக்காக கையில் கிடைத்த இந்தியன் வங்கி வேலையை உதறிவிட்டு, கோவா மற்றும் கொல்கத்தாவில் டெம்போ, சர்ச்சில் பிரதர்ஸ், மோகன் பகான், மகேந்திரா சிட்டி எப்.சி. என ஐ-லீக் கிளப்களில் ஃபுட்பால் விளையாடத் தொடங்கி விட்டார். சந்தோஷ் டிராபிக்கான தமிழக அணியில் இடம்பெற்றிருந்த ராவணன், இந்திய அணியின் ஜெர்ஸி அணிந்து, ‛ஜனகண மண’ பாடியதை இன்னும் பெருமையாக சொல்கிறார்.

முதல் ஐஎஸ்எல் சீசனில் புனே எப்.சி. அணி ராவணனை கொத்திச் சென்றது. இன்றுவரை அவரை விடவே இல்லை. ஐ-லீக் போட்டிகளின் மூலம் போதுமான சம்பாத்யம் கிடைத்து விட்டது என்றாலும் ஐஎஸ்எல்தான் அவருக்கு அடையாளம் கொடுத்தது. இதை அவர் மறுக்கவும் இல்லை. ”பத்து வருஷமா ஃபுட்பால் ஆடுறேன். இந்தியன் டீம்ல 5 வருஷம் இருந்தேன். யாருக்குமே என்னைத் தெரியாது. ஐஎஸ்எல்ல ஆடுறதால, யார் யாரோ விசாரிக்கிறாங்க. சோசியல் மீடியாவுல லைக்ஸ் அள்ளுது. ஃபுட்பால் ஆடுனா என்ன கிடைக்கும்னு கண்டுக்காம இருந்த சொந்த பந்தம் இப்ப ரொம்ப நெருக்கமாயிடுச்சு. ஃபுட்பால் பிளேயரா செம ஹேப்பி’’ என ஐஎஸ்எல் புராணம் பாடினார்.

 

மோகன்ராஜ்: 

moh.JPG


எப்போது ஃபோன் செய்தாலும் அடுத்த நொடியே அட்டென் பண்ணும் மோகன்ராஜ், ஐஎஸ்எல் தொடங்கியதும் செம பிஸி. 'ப்ரோ நீங்க ஒரு வார்த்தை மீடியா மேனேஜர்ட்ட பெர்மிஷன் கேட்ருங்க. இல்லைன்னா எனக்கு சிக்கல் வரும்’ என்கிறார் கிரிக்கெட் வீரர்களைப் போல. ராவணன் சொன்னதைப் போல, ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் வீரர்களை கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது ஐஎஸ்எல் நிர்வாகம்.

முதல் இரண்டு சீசன்கள் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியின் லெஃப்ட் பேக் ஏரியாவில் ரவுண்டு கட்டி நின்ற மோகன்ராஜ் நல்லப்பன், இப்போது சென்னையின் எப்.சி. அணியில். இதற்கான அறிவிப்பு வெளியான மேடையில் மோகன்ராஜ் சொன்னது செம ரொமான்டிக். ''என்ன சொல்றது... முதல் காதலியை கல்யாணம் பண்ண மாதிரி சந்தோஷமா இருக்கு’’

இடது காலில் பவர்ஃபுல்லாக ஷாட் அடிப்பதில் வல்லவர்; சிறந்த லெஃப்ட் பேக் என பெயரெடுத்தவர்; சந்தோஷ் டிராபி தொடரில் தமிழக அணிக்காக விளையாடியதை பெருமையாக கருதுபவரான மோகன்ராஜ், நாமக்கல் மாவட்டத்தில் பிறந்து, சென்னை நேரு மைதானத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் கால்பந்துக்கான பால பாடம் பயின்றவர், பத்த ஆண்டுகளுக்குப் பின் அதே மைதானத்தில் 30 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடி வருகிறார். இதை மனதில் வைத்துத்தான் முதல் காதலி, திருமணம் என உருகினார்.


''ஏஜ் குரூப் போட்டி எதற்குமே நான் செலக்ட் ஆகவில்லை. திடீரென இந்திய ஜூனியர் அணிக்கு தேர்வானேன். கொல்கத்தா சென்று மோகன் பகான் அணியில் 5 ஆண்டுகள் விளையாடியபோதுதான் கம்ப்ளீட் ஃபுட்பால் பிளேயராக மாறினேன்’’ என்று சொல்லும் மோகன்ராஜ், கோவாவில் ஸ்போர்டிங் கிளப் அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடிய அனுபவம் நிறைந்தவர்.

''கூட ஒரு வருஷம் ஃபுட்பால் விளையாடலாம்னு நினைச்சு, நைன்த் படிக்கிறப்போ, எக்ஸாம் எழுதாம மட்டம் போட்டு, கிரவுண்ட்ல போயி தூாங்கிட்டேன். எனக்கு ஃபுட்பால்தான் எல்லாமே. கால்பந்து இல்லைன்னா நான் இல்லை. ரொம்ப நாள் கழிச்சு சொந்த மண்ல ஆடுறது சந்தோஷமா இருக்கு. அப்படியே இந்த சீசனும் சென்னையின் எப்சி சாம்பியன் பட்டம் ஜெயிக்கனும். இதுதான் இப்போதைய இலக்கு’’ என கண் சிமிட்டுகிறார்.

 

தனபால் கணேஷ்:

Dhanapal%20ganesh%20%284%29.JPG


கடந்த சீசனில் சென்னையின் எப்.சி சாம்பியன் பட்டம் வென்ற மறுநாள் சென்னை நேரு மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம். அணியின் ஓனர்கள் வீதா தானி, அபிசேக் பச்சன் என ஆளாளுக்கு ‛லோக்கல் பிளேயர் ஃபர்ஸ்ட், லோக்கல் பிளேயர் ஃபர்ஸ்ட்’ என, ஒரு உள்ளூர் வீரனுக்கு முதல் மரியாதை வழங்கினர். ஆம், ஆடாமலேயே ஜெயித்திருந்தார் தனபால் கணேஷ்.

மெட்ராஸ்’ படத்தில் வருவதைப் போல, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகும் கனவோடு வியாசர்பாடி மைதானத்தில் சுற்றித் திரிந்தவர்களில் ஒருவர் கணேஷ். ‛சின்ன வயசுல இருந்தே ஃபுட்பால்னா ரொம்ப பிடிக்கும் . நெய்வேலி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல்ல இருந்தப்ப, முன்னாள் வீரர் ராமன் விஜயன் பேசிய பேச்சு செம இன்ஸ்பிரேசன். அதுல இருந்து ஃபுட்பால் பிளேயர் ஆகனும்னு முடிவு பண்ணிட்டேன்’ என சொல்லும் கணேஷ், உலக கோப்பை தகுதிச்சுற்றுக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.
சென்னை அணியில் இடம்பெற்றிருக்கும் முதல் சென்னை வீரர் என தனபால் கணேஷ் மீது கடந்த சீசனில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு. ‛முதல்முறையா அம்மா, அப்பா முன்னாடி ஆடப் போறதை நினைச்சா சிலிர்ப்பா இருக்கு’ எனச் சொன்னவருக்கு, காயத்தின் வடிவில் வந்தது வினை. இந்திய அணியில் இருந்தபோது பயிற்சியின்போது காலில் ஏற்பட்ட அடி, கடந்த ஐஎஸ்எல் சீசன் முழுவதும் அவரை கிரவுண்டில் அடியெடுத்து வைக்காமல் செய்து விட்டது. 

போன வருஷம் அடிபட்டு, ஆட முடியாம போனது கூட வலிக்கலை. நான் ஃபுட்பால் விளையாடுறதை எங்க அம்மா நேர்ல பாத்ததே இல்லை. அதுக்கு வாய்ப்பு கிடைச்சும் கடைசி நேரத்துல மிஸ் ஆயிடுச்சு. அதான் வருத்தமா இருந்துச்சு. இந்தமுறை ஃபிட்டா இருக்கேன். ஒரு கலக்கு கலக்கிரலாம்’’ என கட்டை விரலை உயர்த்திப் பிடித்தார் கணேஷ்.

http://www.vikatan.com/news/sports/69396-isl-football-players-from-tamilnadu.art

Link to comment
Share on other sites

சொந்த மண்ணில் சென்னை முதல் வெற்றி #ISL

 

_21457.jpg

 

 

கோவா அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல். லீக் போட்டியில், அரை மணி நேரத்திலேயே 2 கோல் அடித்ததால், 2-0 என வெற்றி பெற்றது  சென்னையின் எஃப்.சி. இது சென்னை சொந்த மண்ணில் பதிவு செய்த முதல் வெற்றி. சென்னை நேரு மைதானத்தில் 18,213 ரசிகர்கள் முன்னிலையில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்.சி, கோவா அணிகள் மோதின.

சொந்த மண்ணில் நடந்த கடந்த போட்டியில் தோல்வியடைந்ததால் அணியில் மானாவரியாக மாற்றம் செய்திருந்தார் சென்னை கோச் மார்கோ மடாரசி. அனுபவ வீரர்களான மெண்டி, மோகன்ராஜ், ஜெஜே பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. மடாரசியின் இந்த மாற்றம் சரியென்பதை நிரூபிக்கும் வகையில் 15வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது சென்னை. லெஃப்ட் விங் திசையில் இருந்து ரஃபேல் அகஸ்டோ செட் செய்து கொடுத்ததை கோவா பின்களத்துக்கு போக்கு காட்டி அற்புதமாக கோல் அடித்தார் ஹான்ஸ் முல்டர். அரங்கம் ஆர்ப்பரிக்க, சென்னை 1-0 என முன்னிலை பெற்றது.

அடுத்த சிறிது நேரத்தில் சென்னை அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றிருந்த ரைட் பேக் மெஹ்ரஜூதின் வாடூ யதார்த்தமாக இலக்கை நோக்கி அடித்த ஷாட், கோவா பின்கள வீரர் ரஃபேல் டுமாஸ் தலையில் பட்டு வலைக்குள் புகுந்த்து. ஆக, 26வது நிமித்திலேயே ஆட்டத்தின் முடிவு தீர்மானிக்கப்பட்டு விட்டது. இது கோல் என்பதை வாடூவால் நம்ப முடியவில்லை. சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஓடி வந்து பெஞ்சில் இருந்த வீரர்களை கட்டி அணைத்தார். அரை மணி நேரத்திற்குள் 2 கோல்களுடன் சென்னை முன்னிலை பெற்றது. மடாரசி மட்டுமல்லாது ஒட்டுமொத்த அரங்கமும் ஹேப்பி. இடைப்பட்ட நேரத்தில் கோவா இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை. முதல் பாதி முடிவில் சென்னை 2-0 என கெத்தாக முன்னிலை பெற்றது. இந்த டெம்போவை அப்படியே மெயின்டன் செய்தால் போதும் என்ற மனநிலையில் இரண்டாவது பாதியில் சென்னை களம்புகுந்தது. கோவா தரப்பில் நிலைமை தலைகீழ். இரண்டாவது பாதியிலும் சென்னையின் கையே ஓங்கியிருந்தது. 57வது நிமிடத்தில் டேவிட் சூச்சிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் கோவா அணிக்கு கிடைத்த வாய்ப்புகளை சென்னை டிஃபண்டர்ஸ் உடனடியாக கிளியர் செய்தனர். ஒரு கட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சிக்காததால் ஆட்டம் டல்லானது. இருந்தாலும் 77வது நிமிடத்தில் ரஃபேல் அகஸ்டோ கொடுத்த பாஸை டூடூ, முல்டருக்கு கொடுக்க, அவர் பக்காவாக ரைட் விங்கில் இருந்த பல்ஜித் சஹ்னிக்கு செட் செய்தார். ஆனால், அவர் அதை வலைக்கு வெளியே அடித்து வீணடித்தார். ஒரு சான்ஸ் கிரியேட் செய்த விதத்துக்காக கைதட்டி அப்ரிசியேட் செய்தனர் சென்னை ரசிகர்கள். ஆனால் கோவா தரப்பில் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் சென்னை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கடந்த சீசன் ஃபைனலில் தங்கள் மண்ணில் சென்னையிடம் தோல்வியடைந்ததற்கு பழி தீர்க்க நினைத்த கோவா அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதேநேரத்தில் ஒரு வழியாக சென்னை சொந்த மண்ணில் வெற்றி முத்திரையைப் பதித்தது.

http://www.vikatan.com/news/sports/69563-chennai-outplays-goa-and-wins-it-in-style.art

Link to comment
Share on other sites

கேரள அணிக்கு முதல் வெற்றி

 

 

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று கொச்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி-மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் எதும் அடிக்கப்படவில்லை. கேரள அணி பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் அந்த அணியின் கோல் அடிக்கும் பல முயற்சிகளுக்கு மும்பை கோல்கீப்பர் ரோபர்ட்டா முட்டுக்கட்டை போட்டார்.

45-வது நிமிடத்தில் கேரள அணியின் அஸ்ராக் கொடுத்த கிராஸை கோல்கம்பத்தின் அருகே நின்ற நட்சத்திர வீரர் முகமது ராபி தலையால் முட்டினார். ஆனால் பந்து கோல்கம்பத்தின் மேலே சென்று ஏமாற்றம் அளித்தது.

58-வது நிமிடத்தில் கேரளா முதல் கோலை அடித்தது. அந்த அணியின் மைக்கேல் சோப்ரா இந்த கோலை அடித்தார். முகமது ராபியிடம் இருந்து பந்தை பெற்ற பெல்போர்ட் இலக்கை நோக்கி உதைத்தார். அப்போது கோல்கம்பத்தின் அருகே இருந்த மைக்கேல் சோப்ரா லாவகமாக அதை கோலாக மாற்றினார். இதனால் கேரளா முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது.

69-வது நிமிடத்தில் மும்பை வீரர் நார்டி பந்தை அருமையாக கடத்தி சென்று இலக்கை நோக்கி தள்ளிவிட்டார். அப்போது கோல்கீப்பர் இல்லாத நிலையில் கேரள வீரர் ஆரோன் ஹியூஸ் பந்தை கோல் விழாமல் தடுத்துவிட்டார். இதனால் மும்பை வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன் பின்னர் கடைசி வரை போராடியும் மும்பை அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

முடிவில் கேரளா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் அந்த அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். கேரள அணி 4 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு டிரா கண்டுள்ளது. இரு ஆட்டத்தில் தோல்வியை சந்தித்திருந்தது.

ஐஎஸ்எல் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்-டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன.

http://tamil.thehindu.com/sports/கேரள-அணிக்கு-முதல்-வெற்றி/article9223781.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.