Jump to content

அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா ஒ.நா.ச.போ. தொடர்


Recommended Posts


அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா ஒ.நா.ச.போ. தொடர்
 

-ச.விமல்

article_1474995196-Inlw2j31eg.jpg

அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர், தென்னாபிரிக்காவில் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த இரு அணிகளும் மோதும் போட்டிகள் எப்பவுமே விறுவிறுப்பாக அமையும். இவர்களுடைய வேகப்பந்து வீச்சு, சகலதுறை வீரர்கள், அதிரடி வீரர்கள் எனப் பல விடயங்கள் எதிர்பார்ப்புடையவையாக அமையும்.

கிரிக்கெட்டில் சொந்த நாட்டு ஆடுகளங்கள், மைதானத்தின் நிலைமைகள், இவற்றை எல்லாம் தாண்டி எந்த நாடாக இருந்தாலும் போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய அணிகள் இவை இரண்டும். தென்னாபிரிக்காவில் வைத்து எட்டுத் தொடர்களில் அவுஸ்திரேலியா அணி மூன்று தொடர்களில் வெற்றி பெற்று ஒரு  தொடரை சமநிலை  செய்துளளது.

தென்னாபிரிக்காவில் வைத்து 38 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இவற்றில் 20 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியும், 17 போட்டிகளில் தென்னாபிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.  இது நல்ல உதாரணம். இரு அணிகளும் சமபல அணிகளாகவே இருந்து வந்துள்ளன.

ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள், 91இல் இரு அணிகளும் விளையாடியுள்ளன. 47 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியும் 40 போட்டிகளில் தென்னாபிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் சமநிலையில் நிறைவைடைந்தன. ஒரு போட்டி கை விடப்பட்டது.

இதனால்தான் இந்த அணிகள் மோதும் போட்டிகள் விறு விறுப்பாக அமைந்து வருகின்றன.  இரு அணியிலும் ஒரே மாதிரியான வீரர்கள் இருப்பார்கள். ஆனால் இரு அணிகளினதும் வேகப்பந்து வீச்சாளர்கள் அதி வேகமாக பந்து வீசும் போது அது மிகுந்த சுவாரஸ்யத்தைத் தரும். அதுவே இந்த அணிகளினது தொடர்களில் முக்கியமானதாக இருக்கும். அவுஸ்திரேலியா அணி சார்பாக மிற்செல் மார்ஷ் இல்லாதது இந்தத் தொடரில் அந்த  சுவாரஷ்யத்தை குறைத்துள்ளளது.

உலக சம்பியனை தங்கள் நாட்டில் எதிர்கொள்கின்றது தென்னாபிரிக்க அணி. தென்னாபிரிக்க அணி அண்மைக்காலங்களில் கொஞ்சம் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தத் தொடரிலும் பல புதிய வீரர்கள் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர். துடுப்பாட்ட இடங்கள் தென்னாபிரிக்கா அணியில் நிரந்தரமாகவுள்ளது.  கடந்த ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில் டுமினியும் சிறப்பாக துடுப்பாடவிலை. கிறிஸ் மொரிஸ் உபாதையடைந்து இருப்பது சகலதுறை வீரருக்கான இடத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. பார்ஹான் பெஹார்டீன் விளையாடுவாரா என்பது சந்தேகமாக இருந்த போதும் சகலதுறை வீரர் ஒருவர் இல்லாமையால் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

சுழற்பந்து வீச்சாளராக இம்ரான் தாஹீர் விளையாடுவார். வேகப்பந்து வீச்சில், டேல் ஸ்டைன் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். கடந்த தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருந்தது. கஜிஸ்கோ ரபடா நிரந்தர இடம் பிடித்த பந்து வீச்சாளர். உபாதை காரணமாக மோர்னி மோர்க்கல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வெய்ன் பார்னல் மேற்கிந்திய முக்கோண தொடரில் சிறப்பாக பந்து வீசாமையால் புதிய வீரர் அன்டிலி பெக்லுவாயோ அறிமுகத்தை மேற்கொள்வார் என நம்பப்படுகின்றது. மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த கறுப்பின வீரர் இவர். இள வயது கிரிக்கெட்டில் கஜிஸ்கோ ரபடா உடன் இணைந்து இவர் விளையாடிய போதும் போதியளவு பிரகாசிக்கவில்லை. ஆனால் உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வரும் இவர் அணியில் இணைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்பப்படுகின்றது.

அத்துடன் அணியில் விளையாடும் 11 பேரில், பருவகாலமொன்றில் சராசரியாக, இரண்டு ஆபிரிக்க கறுப்பின வீரர்கள் விளையாடுவது கட்டாயம் என்ற புதிய விதிமுறைப்படி இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம் என நம்பலாம். தப்ரயாஸ் ஷம்ஸி மேலதிக சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம்பிடித்துளார். டுவைன் பிரிட்டோரிஸ்  வேகப்பந்து வீசும் சகலதுறை வீரராக அணியில் இடம்பிடித்துளார். பெஹார்டீன் பிரகாசிக்க தவறும் நிலையில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். தென்னாபிரிக்காவின் புதிய நிற விதிமுறைப்படி, பருவகாலமொன்றில் சராசரியாக, விளையாடும் 11 வீரர்களில் 5 பேர் மட்டுமே வெள்ளை நிறத்தவர் விளையாடலாம் என்ற காரணத்தினால் வாய்ப்புகள் எவ்வாறு வழங்கபப்டும் என்பதனையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தென்னாபிரிக்க அணி

ஹஷிம் அம்லா, பப் டு பிளெசிஸ், பர்ஹான் பெஹார்டீன், குயின்டன் டி கொக், ஜீன் போல் டுமினி, இம்ரான் தாஹீர், டேவிட் மில்லர், வெய்ன்‌ பார்னல், அன்டிலி பெக்லுவாயோ, கஜிஸ்கோ ரபடா, தப்ரயாஸ் ஷம்ஸி, டேல் ஸ்டெய்ன், டுவைன் பிரிட்டோரிஸ் , ஆரோன் பங்கிசோ, கைல் அபொட்.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வரிசையில் ஷோன் மார்ஷ் உபாதை காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை. இவரின் இடம் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாத போதும் ஜேம்ஸ் போக்னர் உபாதை காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளமை மிகப் பெரிய பாதிப்பே. துடுப்பாட்டம், பந்து வீச்சு என இரு பகுதிகளிலும் பின்னடைவைத் தரும். மார்ஷின் இடத்துக்கு உஸ்மான் கவாஜா அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

பலமான அவுஸ்திரேலிய  அணியின் பந்து வீச்சில் உபாதைகள் ஏற்பட்டுள்ளமை மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுளளது.  நேதன்  கூல்டர்நைல் உபாதையடைந்துள்ளார். ஜோஸ் ஹெசில்வூட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுளள்து. இந்தத் தொடரில், 23 போட்டிகளில் விளையாடியுள்ள  ஜோன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் 10 போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஸ்கொட் போலன்ட் ஆகிய இருவருமே முன்னணி பந்து வீச்சாளர்கள். மூன்றாம் வேகப்பந்து வீச்சாளராக  மிற்செல் மார்ஷ் பந்து வீசுவார். மூன்று புதிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவர் விளையாடும் வாய்ப்பை பெறுவார். அடம் ஸாம்பா சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம்பிடிப்பார். துடுப்பாட்டத்தில் உஸ்மான் கவாஜா, டிரவிஸ் ஹெட் ஆகியோருக்கு இடையில் ஒரு போட்டி இருக்கும். ஆனால் மத்திய வரிசை வீரர் ஒருவர் தேவை என்ற நிலையிலும் ஒரு சுழற் பந்து வீச்சு வீசக்கூடியவர் அணியில் தேவை என்ற நிலையிலும் வாய்ப்புகள் ஹெட்டுக்கே அதிகம் உள்ளன.  

அவுஸ்திரேலிய  அணி

ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோணர், ஜோர்ஜ் பெய்லி, ஆரோன் பின்‌ஞ்ச, ஸ்கொட் போலண்ட், ஜோன் ஹேஸ்டிங்ஸ், ட்ரவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மிற்செல் மார்ஷ், ஜோ  மெனி, கிறிஸ்  ட்ரமைன், மத்தியூ வேட், டேனியல் வொரல், அடம் ஸாம்பா 

இந்தத் தொடரில் அவுஸ்திரேலியா அணி சார்பாக விளையாடும் வீரர்களில் தென்னாபிரிக்காவில்  விளையாடிய அனுபவம் குறைந்த அல்லது இல்லாத வீரர்களே அதிகம் உள்ளனர். தென்னாபிரிக்கா அணியிலும் கூட அதே நிலை தொடர்கின்றது.

இரு அணிகளுக்குமிடையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில் 400 ஓட்டங்களை தாண்டிய துடுப்பாட்ட வீரர்களின் விபரம்

ஜக் கலிஸ்                           26     26         956         82             38.24     77.47       0              10          

ஜொன்டி ரூட்ஸ்                  25      25           841         83*         44.26     87.87      0              7             

ரிக்கி பொன்டிங்                   18       18           758         164        44.58     91.32      2              4             

ஹெர்ஷல் கிப்ஸ்               25         25           746         175       29.84     88.07      2              2             

கிரேமி ஸ்மித்                     17          17           708         119*      44.25     88.16      1              5             

ஸ்டீவ்  வோ                      18           17           645         91         46.07     85.31      0              7             

ஹன்ஷி  குரோஞ்சே        15           14           631         112         52.58     81.00     1              4             

அடம் கில்கிறிஸ்ட்           21           20           594         105         31.26     95.04     1              4             

மைக்கல் பெவன்              14           12           476         103         47.60     81.64     1              3             

மைக்கல் ஹஸி               13           13           450         83*         50.00     88.58      0              3             

ஏ.பி. டீ வில்லியர்ஸ்       10           10           421         84           46.77     91.32      0              3             

(போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதங்கள், அரைச்சதங்கள்)

இரு அணிகளுக்குமிடையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில்  10 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியவர்கள்

ஷோன் பொலக்                       21           21           184.5     783         31           4/32       25.25     4.23        35.7       

ஷேன் வோர்ன்                        20           20           176.1     809         29           4/36       27.89     4.59        36.4       

மக்காயா என்டினி                   16           16           145.3     754         26           6/22       29.00     5.18        33.5       

பிரட் லீ                                     12           12           109.0     601         24           4/45       25.04     5.51        27.2       

ஜக் கலிஸ்                                26           26          168.0     957         21           3/40       45.57     5.69       48.0     

ஜேசன் கிலெஸ்பி                    12            12           113.2     534         20           4/43       26.70     4.71        34.0       

மிற்செல் ஜோன்சன்                 9             9              73.5        363         18           4/34       20.16     4.91        24.6       

கிளென் மக்ராத்                        17           17           150.4     531         18           2/13       29.50     3.52        50.2       

கிறைக் மத்தியூஸ்                    7              7              63.1        238         17           4/10       14.00     3.76        22.2       

டேல் ஸ்டெய்ன்                        8              8              72.1        382         15           4/27       25.46     5.29        28.8       

ரொஜர் டெலிமாக்கஸ்              8              8              71.0        410         14           3/34       29.28     5.77        30.4       

நேதன் பிராக்கன்                       10           10              86.2        450         14           5/67       32.14     5.21        37.0       

எரிக் சிமொன்ஸ்                        7               7              67.4        213         11           2/22       19.36     3.14        36.9

அலன்  டொனால்ட்                    9              9              82.5        390         10           3/67       39.00     4.70        49.7       

போல்  றைபிள்                           12           12           109.0     425         10           2/31       42.50     3.89        65.4       

(வீரர், போட்டிகள், இன்னிங்ஸ், வீசிய ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்து வீச்சு, சராசரி, ஓட்ட சராசரி வேகம் ஸ்ட்ரைக் ரேட்)             

இந்த தொடர் இரு அணிகளது நிலைமைகளையும் பார்க்கும் போது அணிகளை கட்டியெழுப்பும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்க  அணி நான்காமிடத்திலிருந்து இரண்டாமிடத்தை நோக்கி நகர இந்த தொடர் கைகொடுக்கும் என நம்பலாம். அவுஸ்திரேலிய  அணி ஐந்து போட்டிகளில் தோல்விகளை சந்தித்தாலும் முதலிடத்தை இழக்கப் போவதில்லை. தென்னாபிரிக்கா அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் மூன்றாமிடத்தையும், நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொள்ளும். அவுஸ்திரேலியா அணி இந்த தொடர் நிறைவிலும் முதலிடத்தை வைத்திருக்கும். இந்த தொடர் கடந்த காலங்களில் தந்த சுவாரசியத்தை தராத போதும் கடும் போட்டியான ஒரு தொடராக இருக்கும் என்பதில் எந்த சதேகமும் இருகக்காது.

இரு அணிகளுக்குக்குமிடையில் நடைபெற்ற போட்டிகளில் 1000 ஓட்டங்களை தாண்டிய வீரர்கள்

ரிக்கி பொன்டிங் 1995-2011                48           48           1879       164         39.97     83.14     2              13          

ஜக் கலிஸ்        1997-2011                  47           47           1639       104*      36.42     73.82     1              13          

ஜொன்டி ரூட்ஸ்     1992-2002            55           52           1610       83*         40.25     77.92     0              10          

ஸ்டீவ் வோ             1992-2002            47           44           1581       120*      42.72     78.53     2              12          

ஹன்ஸி குரோஞ்சே 1992-1999          39           36           1364       112         47.03     73.05     2              9             

ஹேர்சல் கிப்ஸ்     1997-2009              44           44           1324       175         30.09     83.79     3              3             

ஏ.பி. டீ வில்லியர்ஸ் 2006-2016           26        25           1250       136*      59.52     99.04     1              10          

கரி கேர்ஸ்டன்         1993-2002             39           39           1167       112*      31.54     63.01     2              5

மைக்கல் பெவன்   1994-2002               35           31           1163       106         44.73     76.86     2              7             

அடம் கில்கிறிஸ்ட்  1996-2007              44           42           1127       105         28.17     85.57     2              6             

மார்க் வோ   1993-2002                           42           41           1111       115*      29.23     70.05     2              5             

(போட்டிகள், இனிங்ஸ், ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, ஸ்ரைக் ரேட், சதங்கள், அரைச்சதங்கள்)

 

இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டிகளில் 25 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியவர்கள்

ஷேன் வோர்ன்        1993-2002            45           44           410.4     1718       60           4/29       28.63     4.18       

கிளென் மக்ராத்       1993-2007            41           41           375.5     1380       58           4/24       23.79     3.67       

ஷோன் பொலக்       1997-2007            42           42           371.4     1525       55           5/36       27.72     4.10       

அலன் டொனால்ட் 1992-2002             30           30           267.4     1169       45           4/29       25.97     4.36       

பிரட் லீ             2000-2006                    20           20           184.3     946         40           5/22       23.65     5.12       

மகாயா என்டினி   2000-2009               24           24           215.3     1103       38           6/22       29.02     5.11       

டேல் ஸ்டெய்ன்     2006-2014            20           20           181.1     970         37           4/27       26.21     5.35       

போல் றைபிள்       1993-1999             31           31           265.2     978         34           4/13       28.76     3.68       

ஜக் கலிஸ்    1997-2011                      47           43           286.5     1561       33           3/30       47.30     5.44       

ஜேஸன் கிலெஸ்பி 1996-2002          18           18           172.2     779         29           4/43       26.86     4.52       

மோர்னி மோர்கல் 2009-2016            16           15           139.3     773         27           5/21       28.62     5.54       

மிற்செல்  ஜோன்சன் 2006-2014        17           17           149.4     795         26           4/34       30.57     5.31

(வீரர், விளையாடிய காலம், போட்டிகள், இனிங்ஸ், வீசிய ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்து வீச்சு, சராசரி, ஓட்ட சராசரி வேகம்) 

- See more at: http://www.tamilmirror.lk/182743/அவ-ஸ-த-ர-ல-ய-எத-ர-த-ன-ன-ப-ர-க-க-ஒ-ந-ச-ப-த-டர-#sthash.78VxKMdt.dpuf

 

- See more at: http://www.tamilmirror.lk/182743/அவ-ஸ-த-ர-ல-ய-எத-ர-த-ன-ன-ப-ர-க-க-ஒ-ந-ச-ப-த-டர-#sthash.78VxKMdt.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.