Jump to content

முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து கலங்கிய சசிகலா! - பணியில் இருந்தே நீக்கப்பட்ட அப்போலோ நர்சுகள்


Recommended Posts

முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து கலங்கிய சசிகலா! - பணியில் இருந்தே நீக்கப்பட்ட அப்போலோ நர்சுகள்

appollo600.jpg

ப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்துவிட்டன. 'மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் அவருடைய  ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்ததற்காக மூன்று பேரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது அப்போலோ நிர்வாகம்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி இரவு உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ' நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக முதல்வர் சிகிச்சை எடுத்து வருகிறார்' என மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்பின்னர், சமூக வலைத்தளங்களில் முதல்வரின் உடல்நலம் குறித்து வதந்திகள் பரவின. ' இவ்வாறு வதந்திகள் பரப்புவோர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என காவல்துறை எச்சரித்தது. நேற்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் முதல்வரை சந்தித்துவிட்டுத் திரும்பினர். ஆனால், இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை அரசு நிர்வாகம் வெளியிடவில்லை. 

என்னதான் நடக்கிறது அப்போலோவில்? 

" மருத்துவமனையில் சி.சி.யு எனப்படும் கிரிட்டிகர் கேர் யூனிட்டில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர். அந்தநேரத்தில் அதே யூனிட்டில் முப்பது பேர் சிகிச்சை எடுத்து வந்தனர். படிப்படியாக அவர்கள் அனைவரும் வேறு பிளாக்குகளுக்கு மாற்றப்பட்டுவிட்டனர். தற்போது இரண்டாம் தளத்தில் முதல்வர் மட்டுமே சிகிச்சை எடுத்து வருகிறார். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை குறைபாடு போன்றவை இயல்பான நிலைக்குத் திரும்பிவிட்டன. தற்போது நுரையீரல் நீர்க்கோர்ப்பு மற்றும் சிறுநீரகத் தொற்று தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர் சிவக்குமார் தலைமையில், கார்டியாலஜி, நுரையீரல் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர்" என விவரித்த கார்டன் ஊழியர் ஒருவர், 

"முதல்வர் எதிர்பார்த்ததைவிட மருத்துவமனையில் அதிக நாட்களைக் கழிப்பதால், சற்றே சோர்வாகவும் ஆதங்கத்திலும் இருக்கிறார். ' 28-ம் தேதியே கார்டன் திரும்பிவிடுவோம்' என நம்பிக்கையாக இருந்தார். ஆனால், இன்னும் சில நாட்கள் அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. அவருக்கான உடைகள் அனைத்தும் கார்டனில் இருந்தே கொண்டு செல்லப்படுகிறது. நேற்று அவருக்காக கொண்டு செல்லப்பட்ட உடையில், ஒரு துண்டு மாறிவந்துவிட்டது. உடனே, கார்டன் பணிப்பெண்ணிடம், ‘இங்கே இருக்கிற நர்சுகள் எவ்வளவு நல்லா வேலை பாக்கறாங்க...உங்களால இதைக் கூட செய்ய முடியாதா?' என்று சலித்துக் கொண்டார். நேற்று முன்தினம் இரவு நன்றாகச் சாப்பிட்டார். மறுநாள் காலையில் எழுந்தபோது, மூச்சுத் திணறலால் மிகவும் அவதிப்பட்டார்.

பக்கத்து அறையில் இருந்த சசிகலாவிடம் நர்சுகள் சென்று தெரிவித்தனர். உடனே, முதல்வர் அறைக்கு வந்த சசிகலா, அவர் படும் சிரமத்தைப் பார்த்து கலங்கிவிட்டார். இயல்பாகவே சசிகலாவுக்கு தலைசுற்றல், கிறுகிறுப்பு அவ்வப்போது வரும். இந்தச் சூழ்நிலையில் அது இன்னும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அறையில் இருந்த நர்சுகள் அவருக்கு முதலுதவி அளித்தனர். அந்த அறையில் சசிகலா மட்டுமே உடனிருக்கிறார். நேற்று அவரிடம் பேசிய முதல்வர், 'என்னால சரியாக தூங்கக் கூட முடியவில்லை' என வேதனைப்பட்டிருக்கிறார். மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறார் முதல்வர். விரைவில் பூரண நலம் பெற்று கார்டன் திரும்புவார்" என்றார் விரிவாக. 

"அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அனைத்தும் உளவுத்துறை கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் என அனைவரது செல்போன் எண்களும் பேச்சுக்களும் ஆராயப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்து எந்தத் தகவலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என விவரித்த காவல்துறை அதிகாரி ஒருவர், "முதல்வரின் உடல்நலன் குறித்த அறிக்கை கணினியில் பதிவேற்றப்படுகிறது. இதற்கான பாஸ்வேர்டு தளத்தின் பொறுப்பாளரிடம் மட்டுமே இருக்கும். மருத்துவர்களைத் தவிர வேறு யாருக்கும் இதைப் பார்ப்பதற்கு அனுமதியில்லை. ஆனால், நேற்று யாரோ ஒருவர் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, முதல்வரின் ஹெல்த் ரிப்போர்ட்டைப் படித்துப் பார்த்துவிட்டார். இப்படிச் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 

' இதைச் செய்தது ஒரு நர்சுதான்' என்பதைக் கண்டுபிடித்துவிட்டோம். 'பாஸ்வேர்டு எப்படித் தெரிந்தது' என தீவிர விசாரணை நடத்தி, இரண்டு நர்சுகள் மற்றும் மருத்துவர்களின் இரண்டு செயலாளர்களை வளையத்தில் கொண்டு வந்தோம். இதற்குக் காரணமான இரண்டு நர்சுகளையும் ஒரு செயலாளரையும் பணியில் இருந்தே நீக்கிவிட்டது அப்போலோ நிர்வாகம். ஒரு மருத்துவரின் செயலாளருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது. எங்களைத் தாண்டி எந்தத் தகவல்களும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறோம். ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் மூன்று நர்சுகள் வீதம் பணியில் இருக்கிறார்கள். அவர்கள் பணிக்கு வந்த பின்னரும் வீட்டுக்குச் சென்ற பின்னரும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்" என்றார் அவர். 

உடல்நலக் குறைவால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் முதல்வர். தலைமைச் செயலக பணிகளும் அப்போலோவிலேயே விவாதிக்கப்படுகின்றன. ' முதல்வர் விரைவில் வீடு திரும்ப வேண்டும்' என தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர் கட்சித் தொண்டர்கள்.

தமிழக முதல்வர் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திப்போம்!

http://www.vikatan.com/news/tamilnadu/68952-apollo-hospital-staffs-terminated-for-checking-chief-minister-report-illegally.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் வாழ்வு நிலையானதென்று நினைத்துத் தனது அதிகார பலத்தினால்..உண்மைகளைத் தற்காலிகமாக மறைக்கக் கூடும்!

ஆனால் காலதேவன் எதற்கும் காத்திருப்பதில்லையே..!

அவனது கரங்கள்...கவிதை எழுதியபடியே...நகர்ந்து கொண்டிருக்கும்!

எங்கு...அரைப்புள்ளி போடுவது....எங்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது அவனுக்கு மட்டும் தான் வெளிச்சம்!

Link to comment
Share on other sites

 

'முதல்வர் நலமாக இருக்கிறார்'

 

18996_thumb.jpg

 

'முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார். மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி, வழக்கமான அரசாங்க வேலைகளை கவனிப்பார். சமூக வலைதளங்களில் முதல்வரின் உடல்நலம் குறித்து வதந்திகளை சிலர் பரப்புகிறார்கள். அவர்களை அவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்'என அ.இ.அ.தி.மு.கவின் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார். அப்போலோ மருத்துவர்களும் முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளனர். சசிகலா இரவு 9.30 மணி அளவில் அப்போலோ மருத்துவமனையில் இருந்து கிளம்பிவிட்டார். அமைச்சர்கள் மருத்துவமனையில்தான் இருக்கிறார்கள். காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.vikatan.com/news/flashnews/18996-jayalalithaa-is-fine-apollo-doctors.art

Link to comment
Share on other sites

முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம்! அப்போலோ மருத்துவமனை அறிக்கை

hospital29.jpg

 

சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.


தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி இரவு சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.


இந்நிலையில் 29ம் தேதி மாலை முதலே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பலவித தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அறிக்கையை 29ம் தேதி இரவு வெளியிட்டது.
அந்த அறிக்கையில், "காய்ச்சல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முதல்வரின் உடல்நிலை குறித்து வீண் வதந்திகளை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், "தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் பூரண உடல்நலத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரிரு தினங்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார். மக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். வீண் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/68986-cm-jayalalithaa-is-fine-says-apollo-hospital-press-release.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரைக்கும் வீட்டையே ஆஸ்பத்திரியாக்கி வைத்தியம் பார்த்தவவை  அப்பலோவுக்கு தூக்கிக்கொண்டு போயிருக்கிறாங்கள் எண்டால் நிலமை சிக்கல் எண்டுதான் நினைக்கிறன்.
இல்லாட்டி......
இவவுக்கு ஏதோ அரசியல் பேரிடி வர காத்திருக்கு எண்டதுதான் அர்த்தம்.

எல்லாம் கருணாநிதிக்கும் சசிகலாவுக்குமே வெளிச்சம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இதுவரைக்கும் வீட்டையே ஆஸ்பத்திரியாக்கி வைத்தியம் பார்த்தவவை  அப்பலோவுக்கு தூக்கிக்கொண்டு போயிருக்கிறாங்கள் எண்டால் நிலமை சிக்கல் எண்டுதான் நினைக்கிறன்.
இல்லாட்டி......
இவவுக்கு ஏதோ அரசியல் பேரிடி வர காத்திருக்கு எண்டதுதான் அர்த்தம்.

எல்லாம் கருணாநிதிக்கும் சசிகலாவுக்குமே வெளிச்சம்.:cool:

விரைவில்... சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர இருக்கின்றது.
அதற்கான... முன் ஏற்பாடுகள் தான், இவை.

Link to comment
Share on other sites

'எப்படி இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா?'  - கெடுபிடிகளால் பரவிய வதந்தி; அப்போலோ அப்டேட்ஸ் 

app30.jpg

ப்போலோ மருத்துவமனையில் 9 நாட்களாகத் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. 'முதல்வர் இருக்கும் தளத்தில் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது' என்கின்றனர் அப்போலோ வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி இரவு உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலையில் இருந்தே, முதல்வரின் உடல்நிலை குறித்த வதந்திகள் வேகமாக பரவின. 'எங்கிருந்து யார் இவற்றை வெளியிடுகிறார்கள்?' எனக் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர் காவல்துறை அதிகாரிகள். அப்போலோ மருத்துவமனை வாசலிலும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். ஒருகட்டத்தில், 'வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் காவல்துறை எச்சரித்தது. அதையும் மீறி வதந்திகள் உலவியதால், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்தே அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், 'மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும் அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் மேலும் சில நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார்' எனத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, முதல்வருடன் 8 நாட்களாக தங்கியிருந்த சசிகலா நேற்று மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தார். கார்டனில் சில வேலைகள் இருப்பதாக உறவினர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்றார். 

sasikala1.jpg'முதல்வர் உடல்நலன் குறித்த வதந்தி ஏன் பரவியது?' என கார்டன் வட்டாரத்தில் விசாரித்தோம். "தொடர்ச்சியான மருந்துகளால் நேற்று முன்தினம் மிகவும் சிரமப்பட்டார். மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தார். அதற்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. நேற்று மதியம் 2 மணியளவில் அவரது உடல்நலனில் சற்று தொய்வு ஏற்பட்டது. கை, கால்களில் அசெளகரியம்  ஏற்பட்டது. அதுவே, முதல்வர் உடல்நலன் குறித்து தவறான வதந்தியாகப் பரவிவிட்டது. முதல்வர் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து ஷிஃப்ட்டுக்கு மூன்று நர்சுகள் பணி அமர்த்தப்பட்டிருந்தனர். காலை, மாலை, இரவு என மூன்று வேளைக்கும் தலா ஒரு நர்ஸ்  மட்டுமே உள்ளே செல்ல முடியும். 

முதல்வரின் அறைக்குள்ளேயே 24 மணி நேரமும் தங்கியிருக்கிறார் டாக்டர் சிவகுமார். முதல்வருக்கு பக்கத்து அறையில் மூன்று நர்சுகள் தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை உள்பட சகல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. அவர்கள் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு வருகிறார்கள். 'முதல்வருக்கு சிகிச்சை முடியும் வரையில், யாரும் ஹாஸ்டலுக்குச் செல்ல வேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதர ஸ்டாஃப் நர்சுகளுக்கு இரண்டாம் மாடிக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் கார்டன் திரும்புவார்" என நம்பிக்கையோடு பேசினார். 

" முதல்வரின் உடல்நலன் குறித்த ரகசிய அறிக்கையை படித்ததற்காக, மருத்துவமனையில் இருந்து இரண்டு நர்சுகள் உள்பட மருத்துவர் ஒருவரின் செயலாளர் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். நேற்று காலை மருத்துவமனை நிர்வாக அதிகாரியிடம் மனு கொடுத்தனர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நர்சுகள். அதில், 'நாங்கள் செய்தது தவறுதான். இனிமேல் இதுபோன்ற தவறுகளைச் செய்ய மாட்டோம். எங்களை மன்னித்துவிடுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தனர். அதற்குப் பதில் அளித்த நிர்வாக அதிகாரி, 'இனி இதுபோன்று ஒருமுறை நடந்தால், கடுமையாக நடவடிக்கை எடுப்போம். உங்களுடைய நர்ஸ் பதிவையே ரத்து செய்துவிடுவோம்' எனச் சொல்லிவிட்டு மெமோ கொடுத்தார். இந்தச் சம்பவத்தை அடுத்து அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள், மௌன விரதத்தையே கடைபிடிக்கின்றனர். 'முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டும்' என அவர்களும் பிரார்த்திக்கின்றனர்" என விவரித்தார் மருத்துவமனை ஊழியர் ஒருவர். 

அண்மையில் திருமணம் முடித்த இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன், சுவிஸ் பயணத்தை முடித்துவிட்டு நேற்று காலை 11 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். முதல்வரின் உடல்நலனை விசாரித்துவிட்டுச் சென்றுவிட்டார். 'அம்மா விரைவில் கார்டனுக்குத் திரும்ப வேண்டும். தலைமைச் செயலக பணிகளை கவனிக்க வேண்டும்' என்ற தொண்டர்களின் பிரார்த்தனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது!

 

http://www.vikatan.com/news/tamilnadu/68994-apollo-updates-on-chief-minister-jayalalithaas-health.art

Link to comment
Share on other sites

அப்போலோவில் முதல்வர் சிகிச்சை எடுக்கும் அறை இதுதான்! #VikatanExclusive

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த எட்டு நாட்களாக அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவர் தங்கியிருக்கும் இரண்டாவது மாடிக்கு, மருத்துவமனையின் மருத்துவர்களும் செவிலியர்களும் அனுமதிக்கப்படவில்லை. முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்.சிவக்குமார் உள்பட ஒருசிலரே அங்கு தங்கியுள்ளனர். முதல்வரின் உடல்நலம் குறித்து எந்தத் தகவல்களும் வெளியில் சென்றுவிடாதபடி, மிகுந்த பாதுகாப்பு வளையத்தை அமைத்திருக்கிறது காவல்துறை. அப்போலோ மருத்துவமனை வரலாற்றிலேயே, இவ்வளவு கெடுபிடிகளை சந்தித்ததில்லை. அதையும் மீறி, முதல்வரின் மெடிக்கல் ரிப்போர்ட்டைப் படித்துப் பார்த்த மூன்று பேர் வேலையைவிட்டே நீக்கப்பட்டுவிட்டனர். இதையடுத்து, நர்சுகளும் மருத்துவர்களும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வருகின்றனர். கடந்த எட்டு நாட்களாக தலைமைச்  செயலகமாகவே மாறிவிட்ட, கிரிட்டிகல் கேர் யூனிட்டின் தற்போதைய நிலை இதுதான்...!

1s.jpg

 

http://www.vikatan.com/news/tamilnadu/69008-jayalalithaas-admit-room-in-apollo-hospital-exclusive-photo.art

அப்போலோவுக்கு விரைந்த லண்டன் மருத்துவக் குழு!  -தீவிரக் கண்காணிப்பில் முதல்வர் ஜெயலலிதா

jsds1.jpg

ப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் மாடியில் உள்ள கிரிட்டிகல் கேர் யூனிட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. ' தற்போது லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் அப்போலோவுக்கு வந்துள்ளனர். தீவிர சிகிச்சை நடந்து வருகிறது' என்கின்றனர் மருத்துவர்கள். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதியில் இருந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர், அடுத்தடுத்த உடல் உபாதைகளால் சிரமத்திற்கு ஆளானார். இதையடுத்து, அப்போலோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ' தற்போது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்தனர். இதுவரையில், டாக்டர் சிவக்குமார் தலைமையில் அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இன்று காலை லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட், அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். தற்போது முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய மருத்துவமனை ஊழியர் ஒருவர், " முதல்வருக்கு நுரையீரல் தொற்று தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை குறைபாடு போன்றவை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. இருப்பினும், சில சிகிச்சை முறைகளுக்கு வெளிநாட்டு மருத்துவர்களின் உதவி தேவைப்பட்டது. இதற்கான, பணிகளில் சசிகலாவின் மன்னார்குடி உறவுகள் இறங்கின. நேரடியாக சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா என பயணித்தவர்கள், மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையைக் கேட்டுள்ளனர். லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட்டின் பணிகள் குறித்து அறிந்துள்ளனர். அவரை அணுகி சென்னைக்கு வரவழைத்துள்ளனர். தீவிர சிகிக்சை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் முதல்வர் நலம் பெற்றுத் திரும்புவார்" என்றார். 

நுரையீரல் தொற்றின் காரணமாக, மூச்சுத் திணறல் உள்பட பலவித சிரங்களுக்கு ஆளாகியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. நேற்று அப்போலோ மருத்துவமனையின் செவிலியர்கள் ஒன்று திரண்டு முதல்வருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். 

முதல்வர் நலம் பெறட்டும்! 

http://www.vikatan.com/news/tamilnadu/69006-london-doctors-team-treats-jayalalithaa.art

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

விரைவில்... சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர இருக்கின்றது.
அதற்கான... முன் ஏற்பாடுகள் தான், இவை.

உண்மையில் இந்த வழக்குதான் காரணமாக இருந்தால், மருத்துவமனையில் அதிகாரிகளை சந்தித்தார்.. கோப்புகளை பார்வையிட்டார் என்று படத்துடன் எடுத்துப் போட்டிருப்பார்கள். :unsure:

Link to comment
Share on other sites

எங்கே போனார் சசிகலா...? அப்போலோ பரபரப்பு

Sasi%20001.png

மிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்போலோவில்  நேற்று மாலை 6 மணி முதல் மருத்துவமனைக்கு அ.தி.மு.க தொண்டர்கள் வரத் தொடங்கினார்கள். அதேபோன்று ஊடகங்களின் வருகையும் அதிகரிக்கத் தொடங்கின. அதோடு, அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் வருகையும் இருந்தது.

அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி மற்றும் தம்பிதுரை எம்.பி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். முன்னாள் அமைச்சர் வளர்மதியும் வந்திருந்தார். காலையில் வந்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வரைப் பார்த்துவிட்டு நள்ளிரவு 12.30 மணிக்குத்தான் கிளம்பிச் சென்றார். அதேபோன்று, காலையில் வந்த தம்பிதுரை நேற்று இரவு 10 மணிக்குத்தான்  கிளம்பிச் சென்றார்.

எங்கே போனார் சசிகலா?

இரவு 9.15 மணியளவில், மிகவும் எளிமையான ரெட் கலர் கார் ஒன்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியது. லைட் எரியாமல் சென்ற அந்த காரில் அமர்ந்திருந்தது சசிகலா என்று செய்தியாளர்கள் பரபரத்தனர். கேமராவுடன் சென்ற ஊடகவியலாளர்களுக்கு முன்சீட்டில் அமர்ந்திருந்தது சசிகலாவே என்று தெரிந்ததும் படத்தை கிளிக் செய்தனர். பின்சீட்டில், இளவரசி போன்று ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். ஒரு வார காலமாக முதல்வருடன் இருந்த சசிகலா, முதன்முதலாக மருத்துவமனையைவிட்டு வெளியே வந்துள்ளார். அவர், போயஸ் கார்டன் சென்றாரா அல்லது வேறு எங்கேனும் சென்றாரா என்பது தெரியவில்லை.


தொண்டர்கள் மனநிலை!

அ.தி.மு.க-வின் சோஷியல் மீடியா குரூப்வாசிகள் வாயிலில் நின்றுகொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வருபவர்களிடம் சென்று, ‘அம்மா எப்படி இருக்கிறார்’ என்பதைக் கேட்கும் அசைவுகளை நம்மால் யூகிக்க முடிந்தது. அதேபோன்று, சில அ.தி.மு.க பெண் உறுப்பினர்கள் மருத்துவமனையின் வாயிலில் கலங்கிய கண்களுடன் காட்சி அளித்தனர். வாயிலின் நடுவில் நின்ற பெண்களை ஒதுங்கி நிற்குமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அதனால், அவர்கள் தங்கள் ஆதங்கத்தை போலீஸாரிடம் வெளிப்படுத்தினர். பின்னர், அவர்களின் மனநிலையை உணர்ந்தவர்களாக போலீஸார் அமைதியாக ஒதுங்கி நின்றனர்.


IMG-20160929-WA0063.jpgமுதல்வரின் உடல்நிலை குறித்து அ.தி.மு.க தொண்டர்கள் கவலை அடைந்தவர்களாக அனைவரும் குரூப் குரூப் ஆக  நின்றுகொண்டிருந்தார்கள். முதல்வரைப் பார்த்துவிட்டு வெளியேவந்த தலைவர்களிடம் விவரம் கேட்டு ஆறுதல் தேடிக்கொண்ட்னர். அங்கிருந்த தொண்டர் ஒருவர், ‘‘அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இங்கேதான் இருக்கிறேன். அவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து கிளம்பும்போதுதான் நானும் வீட்டுக்குச்  செல்வேன்’’ என்றார்.

‘‘அம்மா நிம்மதியா, சந்தோஷமா இருக்காங்க!’’

சசிகலா சென்றபிறகு, இரவு 10 மணியளவில் மருத்துவமனைக்கு வந்தார் முன்னாள் அமைச்சர் வளர்மதி. அவரை, வாயிலில் நின்ற தொண்டர்களும் ஊடகத்தினரும் சூழ்ந்துகொண்டனர். பின்னர், மீடியாவிடம் பேசுவதைத் தவிர்ப்பதற்காகச் சிறிது தூரம் தொண்டர்களுடன் நடந்துசென்றார். மீடியாவினர் போய்விட்டார்களா என்று பார்த்துக்கொண்டே காரின் அருகே சென்றவர்... தொண்டர்களிடம், ‘‘அம்மா நிம்மதியா, சந்தோஷமா ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காங்க. அவுங்களுக்குத் தொந்தரவு கொடுக்காதீங்க. நீங்க கூட்டம் போட்டுக்கிட்டீங்கனு  இவன், 10 பேர்கிட்டச் சொல்வான். அவன், 10 பேர்கிட்டச் சொல்வான்.  தயவுசெஞ்சு கிளம்புங்க. தி.மு.க-காரன் பொய் பிரசாரம் செய்வான். கிளம்புங்க’’ என்றார்.

‘‘அம்மாவை தனியாக விட்டுவிட்டு ‘எங்கே சென்றிருப்பார் சசிகலா?’ ’’ என தொண்டர்களிடம் கேள்வி எழத் தொடங்கியிருக்கிறது?

http://www.vikatan.com/news/politics/69004-what-happened-in-apollo-yesterday.art

Link to comment
Share on other sites

தமிழச்சி மீது வழக்கு பதிவு

 

19094_thumb.jpg

 

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய்யான தகவலை பரப்பியதால் பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சி மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று தனது முகநூல் பக்கத்தில் முதல்வர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பரப்பிய பொய்யான தகவலை தொடர்ந்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே தமிழக தொழில்நுட்ப துறை பிரிவு தொடர்ந்த வழக்கின் பேரில் தமிழச்சி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு 153 கலவரம் தூண்டுதல், 505/1 வெறுப்பை தூண்டுதல், 505/2 வதந்தி பரப்புதல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துரை ஆணையர் எச்சரித்துள்ளார்.

http://www.vikatan.com/news/flashnews/19094-case-registered-against-tamizachi.art

Link to comment
Share on other sites

அப்போலோவில் முதல்வர் சிகிச்சை எடுக்கும் தளம் இதுதானா? (video)

sdhos_vchome.jpg

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 8 நாட்களாக அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவர் தங்கியிருக்கும் இரண்டாவது மாடிக்கு, மருத்துவமனையின் மருத்துவர்களும் செவிலியர்களும் அனுமதிக்கப்படவில்லை. முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்.சிவக்குமார் உள்பட ஒருசிலரே அங்கு தங்கியுள்ளனர். முதல்வரின் உடல்நலம் குறித்து எந்தத் தகவல்களும் வெளியில் சென்றுவிடாதபடி, மிகுந்த பாதுகாப்பு வளையத்தை அமைத்திருக்கிறது காவல்துறை. அப்போலோ மருத்துவமனை வரலாற்றிலேயே, இவ்வளவு கெடுபிடிகளை சந்தித்ததில்லை. அதையும் மீறி, முதல்வரின் மெடிக்கல் ரிப்போர்ட்டைப் படித்துப் பார்த்த மூன்று பேர் வேலையைவிட்டே நீக்கப்பட்டுவிட்டனர்.

 

இதையடுத்து, நர்சுகளும் மருத்துவர்களும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வருகின்றனர். கடந்த எட்டு நாட்களாக தலைமைச்  செயலகமாகவே மாறிவிட்டது கிரிட்டிகல் கேர் யூனிட். முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுக்கும் தளம் இது என்று ஒரு வீடியோ கிடைத்திருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/69008-apollo-hospital-room-where-jayalalithaa-gets-treated.art

Link to comment
Share on other sites

ஜெ.உடல் நிலை ரிப்போர்ட் - கசிய விட்டது யார்...? ஆக்ஷனில் அப்போலோ!

Apollo%20Jayalalitha.png

வியாழக்கிழமை இரவோடு, ஜெயலலிதா அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் முடிந்துவிட்டது. காய்சசல் என்று மருத்துவ நிர்வாகம் முதலில் அறிவித்தது. இரண்டொரு நாளில் வீடு திரும்புவார் என அடுத்து சொல்லப்பட்டது. ஆனால் ஒரு வாரம் கடந்தும் முதல்வரின் உடல்நிலை குறித்து  முழுமையான விவரங்களை வெளியிட அப்போலோ, நிர்வாகம் மறுத்துவிட்டது, ஆட்சியில் உள்ள அரசும் அதை முடக்கிவிட்டது.

கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் உள்ள இரண்டாவது தளம் இன்றும் நிசபத்மாகத் தான் இருந்து வருகிறது. மருத்துவமனையில் ஜெயலலிதா குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தன. இத்தனை நாட்கள் கடந்து ஏன் இப்படி எதிர்மறையான தகவல்கள் வெளியாகி வருகின்றன என்று அப்போலோ மருத்துவமனைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால் “அப்போலோ மருத்துவமனையில் இருந்து தான், முதல்வர் குறித்த எதிர்மறையான தகவல்கள் 29ம் தேதி மதியம் முதல் சென்றுள்ளன.
29ம் தேதி காலை வரை முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. ஆனால் அன்று மாலை முதல் உடல்நிலை கொஞ்சம் மோசமடைந்தது உண்மை தான். மூச்சுத்திணறல் அதிகரித்தது. கட்டுக்குள் இருந்த சர்க்கரை கட்டுபடுத்த முடியாத நிலைக்கு திடீர் என உயர்ந்தது. ஏற்கனவே நுரையீரலில் கிருமி தொற்று இருந்ததால், மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டு வந்தார். அந்த நிலை இன்னும் அதிகரித்து. புதன்கிழமை இரவு முதல் எந்த பேச்சும் இல்லாமல், படுக்கையில் தான் ஜெயலலிதா இருந்து வருகிறார்.

அப்போது பணியில் மூன்று மருத்துவர்களும், வழக்கமாக முதல்வருக்கு என்று நியமிக்கபட்ட செவிலியர்களும் பணியில் இருந்தார்கள். இரவு முழுவதும் இதே நிலை தான் நீடித்தது, நீர்ச்சத்தும் குறைந்துள்ளது. எம்.ஓ.டி.எஸ் என்று மருத்துவ மொழியில் சொல்வார்கள், அதாவது, ஒரு உறுப்பில் ஏற்பட்ட பாதிப்பின் வீரியம் அடுத்த உறுப்பையும் பாதிக்க செய்வது. அது போன்ற ஒரு நிலை தான் வியாழக்கிழமை அன்று இருந்தது.

இந்த தகவல் மருத்துவமனையில் இருந்த மருத்தவர்கள் மூலம் வேறு மருத்துவர்களுக்கு சென்று, மருத்துவர்களிடையே வாட்ஸ் அப் தகவல்களாகவே பரிமாற்றம் அடையத் துவங்கியது. அங்கிருந்து தான் தகவல்கள் பரவியுள்ளன” என்கிறார்கள். 

முதல்வரின் சிகிச்சை முறைகள் குறித்து வெளிநாட்டு மருத்துவர்களுடன் ஆலோசனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து மருத்துவர்களும் இங்கு வந்துளார்கள் என்கிறார்கள். அவர்கள் தான் இனி தொடர்சிகிச்சையில் இறங்க உள்ளார்களாம். மேலும் நேற்று இரவு முதல், அப்போலோவின் மருத்துவர்கள் சிலரை முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும், பணியில் இருந்து விடுவித்துவிட்டார்கள்.  முதல்வரின் உடல்நிலை குறித்து, வெளியே செய்திகள் கசிந்ததால் இந்த நடவடிக்கையை மருத்துவ வட்டாரம் மேற்கொண்டுள்ளதாம்.

http://www.vikatan.com/news/tamilnadu/69011-apollo-admin-take-action-agsinst-those-who-spread-the-health-status-of-jayalalithaa.art

Link to comment
Share on other sites

மேலத்தேய நாடுகளில் அரசாங்கம் ஒரு தனி நபரை நம்பி இயங்குவதில்லை. ஜனாதிபதி நோய்வாய்ப்பட்டால் அது தொடர்பான சகல விபரங்களையும் அறிய வேண்டிய உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அத் தலைவர் தீவிர நோயில் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர் தனக்குப் பதிலாக இன்னொருவரை நியமிப்பார். அப்படி இல்லாவிட்டால் தற்காலிகத் தலைமையை உருவாக்கக் கூடிய பொறிமுறைகளை அந்த நாடுகள் வைத்துள்ளன. இதுவே ஒரு நாட்டையும் அந் நாட்டு மக்களையும் பாதுகாக்கும். நாட்டின் பாதுகாப்பையும் மக்களையும் கைவிட்டு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வைத்தியசாலையில் தலைமறைவாகும் ஒருவர் எல்லா விதத்திலும் ஆழும் தகுதியை இழக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, இணையவன் said:

மேலத்தேய நாடுகளில் அரசாங்கம் ஒரு தனி நபரை நம்பி இயங்குவதில்லை. ஜனாதிபதி நோய்வாய்ப்பட்டால் அது தொடர்பான சகல விபரங்களையும் அறிய வேண்டிய உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அத் தலைவர் தீவிர நோயில் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர் தனக்குப் பதிலாக இன்னொருவரை நியமிப்பார். அப்படி இல்லாவிட்டால் தற்காலிகத் தலைமையை உருவாக்கக் கூடிய பொறிமுறைகளை அந்த நாடுகள் வைத்துள்ளன. இதுவே ஒரு நாட்டையும் அந் நாட்டு மக்களையும் பாதுகாக்கும். நாட்டின் பாதுகாப்பையும் மக்களையும் கைவிட்டு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வைத்தியசாலையில் தலைமறைவாகும் ஒருவர் எல்லா விதத்திலும் ஆழும் தகுதியை இழக்கிறார்.

அது தான்...  மேலத்தேயத்துக்கும், கீழத் தேயத்துக்கும் உள்ள, வித்தியாசம்.
அப்துல் கலாம் கனவு  கண்ட.... இந்தியா முன்னேற... 20  வருசம் இருக்கு என்றால்,  
ஜெயலலிதாவுக்காக.... மண்சோறும், சினிமா நடிகர்களை தெய்வமாக வணங்கி... 
பால்  ஊத்திக் கொண்டு இருக்கும், தமிழ் நாடு  முன்னேற...  இன்னும், 2000 வருசம் வேணும்.

அதற்கிடையில்.... " கங்கை வென்றான், கடாரம் வென்றான்"  என்று, மாமன்னன்   ராஜ ராஜ சோழன்  சொல்லியதை .
வைத்து.... அல்ப, சந்தோசப் பட வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் மேலத்தேயத்துக்கும், கீழத் தேயத்துக்கும் உள்ள, வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இசைக்கலைஞன் said:

உண்மையில் இந்த வழக்குதான் காரணமாக இருந்தால், மருத்துவமனையில் அதிகாரிகளை சந்தித்தார்.. கோப்புகளை பார்வையிட்டார் என்று படத்துடன் எடுத்துப் போட்டிருப்பார்கள். :unsure:

அப்பலோவுக்கு... முன்னாலை, நிக்கிற சனத்தைப் பார்க்க.... tw_cold_sweat:
ஜெயா  அம்மையாருக்கு....  வந்த வருத்தம்,
சரியான... சீரியஸான, வருத்தம் போல கிடக்கு. tw_glasses:
(கொடுப்புக்குள்... சிரிக்கவும். மிக்ஸர்  தின்னும்,  பாவிப் பயலுகள்.... கேஸ் போட்டுடுவாங்கள்.) :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் மந்திரிகள் கூட பெண் முதல்வரை சந்தித்து உடல் நலத்தை பற்றி அறிக்கை கொடுக்க வழியில்லை என்றால்...!!!
வதந்திகளுக்கு முற்றுபுள்ளி இருக்காது :cool:

சில வேளைகளைகளில் அவசரமான இருதய சிகிச்சையாக இருக்கலாம்.
கொஞ்சம் தாக்கு பிடிக்கக்கூடிய பிரச்சனையாக இருந்திருந்தால் அமெரிக்காவிற்கோ  இங்கிலாந்திற்கோ தூக்கி கட்டிக்கொண்டு ஓடியிருப்பார்கள்.:27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பலோ மருத்துவமனை இன்று முதல் அப்பலோ அம்மன் ஆலையம் என்று அழைக்கப்படும்.

CtlOlNsVUAAh0u5.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

பெண் மந்திரிகள் கூட பெண் முதல்வரை சந்தித்து உடல் நலத்தை பற்றி அறிக்கை கொடுக்க வழியில்லை என்றால்...!!!
வதந்திகளுக்கு முற்றுபுள்ளி இருக்காது :cool:

சில வேளைகளைகளில் அவசரமான இருதய சிகிச்சையாக இருக்கலாம்.
கொஞ்சம் தாக்கு பிடிக்கக்கூடிய பிரச்சனையாக இருந்திருந்தால் அமெரிக்காவிற்கோ  இங்கிலாந்திற்கோ தூக்கி கட்டிக்கொண்டு ஓடியிருப்பார்கள்.:27_sunglasses:

குமாரசாமி அண்ணா....  இவர்கள் இருவரும், கடல் கடக்க.. மாட்டார்கள்.  பயம்.
என்ன பயம் என்பதை,  அவர்களின்.... சாதகமும், கடந்த கால  நடவடிக்கைகளும்  தெரிவிக்கும்.
இவர்கள்.... தப்பித்தவறி,  கச்சதீவுக்கும்  வர மாட்டாத,  ஆட்கள்.
அவர்களின்... குறிக்கோள், தமிழனின் தலையில்... சம்பல் அரைப்பது மட்டுமே. 

Link to comment
Share on other sites

சி.சி.யூ. வார்டில் இருந்து மாற்றப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா..!  அப்போலோ அப்டேட்ஸ் 

sagi.jpg

"மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின் விளைவாக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்கின்றது மருத்துவமனை வட்டாரம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 9 நாட்கள் கடந்துவிட்டன. ‘லண்டனிலிருந்து மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க வந்திருக்கிறார்கள்’ என்று நேற்று விகடன் வலைதளத்தில் ‘எக்ஸ்க்ளுசிவ்’ ஆக செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று அப்போலோ மருத்துவர்களின் துணையோடு லண்டன் மருத்துவக் குழுவினர் அளித்த சிகிச்சையின் விளையாக முதல்வரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

போயஸ் கார்டனில் இருந்து காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, மூச்சுத் திணறல் உள்பட பல சிரமங்களுக்கு ஆளானார். இதையடுத்து, நுரையீரல் தொற்று நோய்க்கு சிறப்பு மருத்துவர்களை தேடி வெளிநாடுகளுக்குப் பறந்தனர் சசிகலாவின் உறவுகள். இதையடுத்து, நேற்று மதியம் ஒருமணி அளவில் லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு வரவழைக்கப்பட்டார். முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டன.

இது குறித்து நம்மிடம் பேசிய கார்டன் ஊழியர் ஒருவர், "தொடக்கத்தில் முதல்வர் உடல்நிலையில் இருந்த பலவித சிரமங்களை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் குணப்படுத்தினர். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை குறைபாடு உள்ளிட்டவை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. நுரையீரலில் நோய் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் இரவில் சரியான உறக்கம் இல்லாமல் தவித்தார். தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட மருந்துகளின் விளைவால் முதல்வர் பல சிரமங்களை எதிர்கொண்டார்.  இதையடுத்து, அப்போலோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சையை தொடர்ந்தனர். ஆனாலும் நுரையீரல் தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்ததால் லண்டனின் இருந்து வரவழைக்கப்பட்டார் சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு. நேற்று மதியம் முதல்வருக்கு நடந்த நுரையீரல் தொடர்பான சிறப்பு சிகிச்சையை அடுத்து திட ஆகாராமோ, வாய் வழியாக உணவு எடுத்துக் கொள்வதிலோ சில நாட்களுக்கு சிரமம் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவருக்கு குளுக்கோஸ் மட்டுமே செலுத்தப்படுகிறது. நேற்று சிகிச்சை முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் சி.சி.யூ. வார்டில் (கிரிட்டிக்கல் கேர் யூனிட் )  இருந்து சிறப்புக் கவனிப்பு வழங்கப்படும் எம்.சி.சி.யூ.  (மெடிக்கல் கிரிட்டிக்கல் கேர் யூனிட்)  வார்டுக்கு மாற்றப்பட்டார். முழுக்க கண்ணாடிகள் சூழ்ந்த இந்த அறையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் முதல்வர். இன்னும் ஓரிரு நாள்களில் திட உணவுகளை எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தொடர் சிகிச்சையின் பலனாக இன்னும் சில தினங்களில் முதல்வர் கார்டனுக்கு திரும்புவார்" என்றார் சற்றே நிம்மதியான குரலில்.

"மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இருந்த சூழ்நிலையை காட்டிலும், நேற்று அளிக்கப்பட்ட சிகிச்சை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்னும் ஒருசில தினங்களில் முதல்வர் இயல்பு நிலைக்கு திரும்புவார்" என்கின்றது மருத்துவமனை வட்டாரம். தொண்டர்களின் பிரார்த்தனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

முதல்வர் விரைவில் நலம் பெறட்டும்!

http://www.vikatan.com/news/tamilnadu/69031-jayalalithaa-shifted-from-ccu-ward-apollo-updates.art

Link to comment
Share on other sites

முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டன் மருத்துவர் ஆலோசனைப்படி சிகிச்சை

 

 
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துவிட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து திரும்பும் லண்டன் மருத்துவர் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீல் | படம்: பி.ஜோதி ராமலிங்கம்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துவிட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து திரும்பும் லண்டன் மருத்துவர் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீல் | படம்: பி.ஜோதி ராமலிங்கம்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிக்கொண்டே இருக்கும் சூழலில், அவருக்கு லண்டன் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை வழங்கப்படுகிறது எனத் தெரியவந்துள்ளது.

லண்டன் பிரிட்ஜ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீல், அப்போலோ மருத்துவமனையில் முதல்வருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவக் குழுவுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

முதல்வரின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்.பீல், அவருக்கு அப்போலோ மருத்துவர்கள் சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கி வருகின்றனர் என்றார்.

சர்வதேச அளவில் பெயர் பெற்ற மருத்துவரும், ஆராய்ச்சியாளருமான டாக்டர் பீல் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் தங்கி அப்போலோ மருத்துவமனையில் முதல்வருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவக் குழுவுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார் எனத் தெரிகிறது.

முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையிலாவது, சிகிச்சை பெற்றுவரும் முதல்வரின் புகைப்படத்தை அரசு நிர்வாகம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/முதல்வர்-ஜெயலலிதாவுக்கு-லண்டன்-மருத்துவர்-ஆலோசனைப்படி-சிகிச்சை/article9171435.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடாப்பா இந்தியாவில ஒரு சிறந்த டாக்குத்தர் இல்லையோ?...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய டாக்குத்தர் எல்லாரும் லண்டனிலும் அமெரிக்காவிலும் செட்டிலான படியால் , இப்ப லண்டன் அமெரிக்க டாக்குத்தர்கள் இந்தியாவுக்கு வந்து தொழில் செய்யினம்...! 

 வந்ததுதான் வந்தினம் அப்படியே  அரசு மருத்துவமனைகளில்  இதுபோன்ற வியாதிகளால் அவதி படுபவர்களுக்கு கடைக்கு கண் காட்டிப் போனால் போற வழிக்குப் புண்ணியமாய் போகும்..... செய்வீர்களா ....செய்வீர்களா .....! 

Link to comment
Share on other sites

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமும், அப்பலோ மருத்துவ மனையும், தொடரும் மர்மங்களும்...

 
 

உலகத் தலைவர்கள் சிலருக்கு பின்பற்றிய மொனங்கள் ஜெயாவின் உடல்நலக் குறைவிலும் தொடர்கிறதா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமும், அப்பலோ மருத்துவ மனையும், தொடரும் மர்மங்களும்...

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை இதுவரை யாரும் சந்திக்கவில்லை எனவும் அதற்கான  அனுமதி எவருக்கும் வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


புல்வேறு ஊகங்கள், வதந்திகளிற்கிடையே, நேற்று மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். ஆங்கிருந்து வெளியேறி கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கிருந்து ஒரு செய்திக் குறிப்பு வெளியானது. அதில் 'முதலமைச்சருக்கு சிகிச்சை அழைக்கப்படும் வைத்தியசாலை அறைக்கு ( வோட்டுக்கு சென்று முதல்வரை சந்தித்தார். தன்னை அங்கே அழைத்து போன வைத்தியர்களுக்கு நன்றி!' என பொதுப்படையாகவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.. ஆளுநர் முதல்வரை சந்தித்த படம் ஏன் வெளியாகவில்லை என்ற கேள்விக்கு இதுவரை யாரிடமும் பதில் வழங்கவில்லை.


'முதல்வரின் உடல்நிலை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பியபடியே இருந்தன, இருக்கின்றன. குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி, 'ஏன் ஆளுநர் சென்று பார்க்கவில்லை?' என அறிக்கை விட்டார். அதன் பின்பே ஆளுநர்; மும்பையில் இருந்து சென்னைக்கு சென்றார். அப்பல்லோவுக்குப் போனார். அங்கிருந்த வைத்தியர்களுடன் பேசியிருக்கிறார். அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழுவினருடன்தான் ஆளுநர் பேசினார். முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு ஆளுநர் போகவில்லை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அப்பல்லோ குழும தலைவர் வைத்தியர் பிரதாப் ரெட்டியிடம் தனியறையில் ஆளுநர் ஆலோசனையில் ஈடுபட்டபோது அங்கு சசிகலா சென்றார். 'முதல்வருக்கு என்ன உயரிய சிகிச்சை வேண்டுமானாலும் கொடுங்கள், வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று சிகிச்சையளிக்க வேண்டுமென்று நீங்கள் முடிவு செய்தால் அதற்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது' என சசிகலாவிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆதன் பின் தான் கொண்டு சென்ற பழக்கூடையை சசிகலாவிடமே கொடுத்து புறப்பட்டு சென்றார்.. ஆளுநர்  முதல்வரை பார்க்கவில்லை என வெளியே சொன்னால், அது இன்னும் சிக்கலை உருவாக்கிவிடும் என அப்பலோ மருத்துவமனை கருதியுள்ளது. ஆதன் அடிப்படையில், அப்பல்லோ மருத்துவனை கடந்த ஒருவாரமாக வெளியிடும் செய்தி குறிப்பு போலவே ஆளுநர் மாளிகையில் இருந்தும் செய்தி குறிப்பு வெளியாகி இருக்கிறது' என ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களிலும், காணொலி உரையாடல் ஒன்றிலும் தகவல்கள் வெளியாகி ஒரு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


எது எப்படி இருப்பினும், அப்பலோ மருத்துவ மனையும், முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு துணையாக இருப்போரும் உண்மைகளை மறைக்காது ஆதார பூர்வமாக செய்திகளை வெளியிடும் வரை மர்மங்கள் தொடர்வதனை தவிர்க்க இயலாது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136555/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.