Jump to content

42வது தேசிய விளையாட்டு விழா நாளை யாழில் ஆரம்பம்..!


Recommended Posts

42வது தேசிய விளையாட்டு விழா நாளை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

நாளை மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் 2ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

நாளை ஆரம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாகாண விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராஜா உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அத்துடன், விருந்தினர்களாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன், விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/119173?ref=home

Link to comment
Share on other sites

D0055df.jpg

யாழ்ப்­பாணம் துரை­யப்பா மைதா­னத்தில் முதற்­த­ட­வை­யாக 42ஆவது தேசிய விளை­யாட்டு விழா இன்று கோலா­க­ல­மாக ஆரம்­ப­மா­கின்­றது.

எதிர்­வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி வரையில் நடை­பெறும் இத் தேசிய விழாவின் ஆரம்ப நிகழ்வு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவின் தலை­மையில் இன்று பிற்­பகல் 3 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது.

இவ்­ ஆரம்ப நிகழ்வில் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம், விளை­யாட்­டுத்­துறை பிர­தி­ய­மைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்கி­னேஸ்­வரன், வட­மா­காண கல்வி மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தம்­பி­ராஜா குரு­கு­ல­ராஜா உட்­பட முன்னாள் இந்நாள் வீரர்கள் எனப் பலர் கலந்து கொள்­கின்­றனர்.

1967ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட தேசிய விளை­யாட்டு விழா இம்­முறை விளை­யாட்டின் மூலம் ஐக்­கி­யத்­தையும் இன ஒற்­று­மை­யையும் ஏற்­ப­டுத்­துவோம்" என்ற தொனிப்­பொ­ருளில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க ஆகி­யோரின் கருத்­திட்­டத்­திற்கு அமை­வாக விளை­யாட்­டுத்­துறை அமைச்சு இவ்­வி­ளை­யாட்டு விழாவை முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் பூர்த்தி செய்­துள்­ளது.

தேசிய தீபம்

42ஆவது தேசிய விளை­யாட்டு விழாவின் பிர­தான நிகழ்­வான தேசிய தீபத்தை ஏற்றும் வாய்ப்பு இலங்­கையின் முன்னாள் கால்­பந்­தாட்ட வீர­ரான சூசைப்­பிள்ளை அந்­த­னிப்­பிள்ளை க்ளிபர்ட்டுக்கும் வலைப்­பந்­தாட்ட அணியின் முன்னாள் தலைவி ஜெயந்தி சோம­சே­கரம் டி சில்­வா­வுக்கும் கிட்­டி­யுள்­ளது.

ஜெயந்தி சோம­சே­கரம்

வலைப்­பந்­தாட்ட வீராங்­க­னை­யாக, தலை­வி­யாக, பயிற்­று­ந­ராக, நிர்­வா­கி­யாக சிறந்த மெய்­வல்­லு­ந­ராக பிர­கா­சித்த இவர் வேம்­படி மகளிர் கல்­லூ­ரியின் பழைய மாண­வி­யாவார்.

இவர் இலங்கை வலை­ப்பந்­தாட்டம் மற்றும் மகளிர் கூடை­பந்­தாட்ட அணி­களில் இடம்­பெற்­றி­ருந்­த­தோடு வலை­ப்பந்­தாட்ட அணிக்கும் தலைமை தாங்­கி­யி­ருந்தார். தற்­போது ஹட்டன் நெஷனல் வங்­கியில் கிளை முகா­மை­யா­ள­ராக கட­மை­யாற்றும் இவர் வர்த்­தக வலைப்­பந்­தாட்ட சங்­கத்தின் தலை­வி­யாக செயற்­பட்டு வரு­கின்றார்.

சூசைப்­பிள்ளை

அந்­த­னிப்­பிள்ளை

யாழ். சென்ட் ஜோன்ஸ் கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரான இவர் 1969 ஆம் ஆண்டு இலங்கை பாட­சா­லைகள் அணி­யிலும் 1972 ஆம் ஆண்டு தேசிய அணி­யிலும் இடம்­பெற்­ற­துடன் கல்­லூ­ரியின் அதி உயர் ஜொனியன் ஈகிள் விருதை 1972 ஆம் ஆண்டு முத­லா­ம­வ­ராக வென்­றெ­டுத்­த­வ­ராவார். கலைத்­துறை பட்­ட­தா­ரி­யான இவர் இக்­கல்­லூ­ரியில் உதவி அதி­ப­ரா­கவும் கட­மை­யாற்­றி­யி­ருந்தார்.

கால்­பந்­தாட்டத்தில் யாழ். மாவட்­டத்தில் அதி சிறந்த வீர­ராக விளங்­கிய இவர் சி" பிரிவு பயிற்­றுநர் சான்­றி­த­ழைக்­கொண்­டுள்ளார். தனது கல்­லூரி, மாவட்ட கழ­கங்கள் மற்றும் பல்­க­லைக்­க­ழக அணிகள் என பல­வற்­றுக்கு பயிற்­று­ந­ராக செயற்­பட்ட இவர் யாழ். கால்­பந்­தாட்ட லீக்கின் தலை­வ­ராக பதவி வகித்­தி­ருந்தார். அத்­தோடு முதல்­தர நடு­வ­ரா­கவும் செயற்­பட்­டி­ருந்தார்.

இம்­முறை

இது­வரை 25 வகை­யான விளை­யாட்டுப் போட்­டி­களே நடை­பெற்று வந்­தி­ருந்த நிலையில் இம்­முறை புதி­தாக எட்டு வகை­யான விளை­யாட்டுப் போட்­டிகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு நடத்­தப்­படவுள்ளன. மெய்­வல்­லுநர் போட்­டி­க­ளுடன் கயி­றி­ழுத்தல், கூடைப்பந் தாட்டம், கடற்­கரை கபடி, கால்­பந்­தாட்டம், உள்­ளிட்­டங்­க­லாக மொத்­த­மாக 33 வகை­யான போட்­டிகள் இம்­முறை இடம்­பெ­ற­வுள்­ள­தோடு 1700 மெய்­வல்­லு­நர்கள் பங்­கு­பற்­ற­வுள்­ளனர். அத்­துடன் 900 உத்­தி­யோ­கத்­தர்­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

பூர்த்தி

இதே­வேளை, 42ஆவது தேசிய விளை­யாட்டு விழாவை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக 9 மாகா­ணங்­க­ளையும் சேர்ந்த போட்­டி­யா­ளர்கள் தங்­கு­வ­தற்­காக ஐந்து பாட­சா­லை­களில் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. அதே­போன்று நடு­வர்கள் மற்றும் ஏனைய உத்­தி­யோ­கத்­தர்­களும் களத்தில் செயற்­ப­டு­வ­தற்கு தயா­ரா­க­வி­ருக்­கின்­றனர்.

மேலும் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்தில் அனைத்து தயார்ப்­ப­டுத்­தல்­களும் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ள­தோடு, கிளி­நொச்சி மாவட்­டத்­திலும் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

நிறைவு விழா

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள தேசிய விளை­யாட்டு விழா நிறைவு விழாவில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் ஆகியோர் பங்­கேற்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://www.virakesari.lk/article/11873

Link to comment
Share on other sites

42ஆவது தேசிய விளையாட்டுவிழா யாழில் கோலாகல ஆரம்பம்
42ஆவது தேசிய விளையாட்டுவிழா யாழில் கோலாகல ஆரம்பம்
யாழ் துரையப்பா மைதானத்தில் முதற்தடவையாக 42ஆவது தேசிய விளையாட்டு விழா சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கோலாகலமாக ஆரம்பமாகின.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி வரை இத் தேசிய விளையாட்டு  விழா  நடைபெறும்  
 
இன்றைய ஆரம்ப நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நல்லிணக்க அமைச்சர்மனோகணேசன்,நாடாளுமன்றஉறுப்பினர்களானசுமந்திரன், மாவை. சேனாதிராசா, சரவணபவன்,அங்கஜன், வடமாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தமபிராஜாகுருகுலராஜா,வடமாகாணஅவைத்தலைவர்சி.வி.கே.சிவஞானம்,வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் தவராசா,மாகாணசபை உறுப்பினர்களான பரஞ்சோதி ஆர்னோ ல்ட்,மற்றும் வடமாகாணஆளுனர் றெஜினோல்டகுரே உட்பட முன்னாள் இந்நாள் வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
14518583_1149176275195896_774816287_n.jpg
1967ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய விளையாட்டு விழா இம்முறை விளையாட்டின் மூலம் ஐக்கியத்தையும் இன ஒற்றுமையையும் ஏற்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது.
14501861_1149206815192842_111068610_n.jpg
42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் பிரதான நிகழ்வான தேசிய தீபத்தை இலங்கையின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான சூசைப்பிள்ளை அந்தனிப்பிள்ளை க்ளிபர்ட் வலைப்பந்தா ட்ட அணியின் முன்னாள் தலைவி ஜெயந்தி சோமசேகரம் டி சில்வா ஆகியோர் ஏற்றி வைத்த னர்.
14527625_1149206808526176_4836796_n.jpg
இதுவரை 25 வகையான விளையாட்டுப் போட்டிகளே நடைபெற்று வந்திருந்த நிலையில் இம்முறை புதிதாக எட்டு வகையான விளையாட்டுப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடத்தப்படவுள்ளன.
14527528_1149206778526179_1635197526_n.jpg
மெய்வல்லுநர் போட்டிளுடன் கயிறிழுத்தல், கூடைப்பந்தாட்டம், கடற்கரை கபடி, கால்பந்தா ட்டம், உள்ளிட்டங்கலாக மொத்தமாக 33 வகையான போட்டிகள் இம்முறை இடம்பெற வுள்ளதோடு 1700 மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ளனர். அத்துடன் 900 உத்தியோகத்தர்க ளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
14528200_1149176035195920_1396983276_n.jpg
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழா நிறைவு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
14542611_1149176188529238_1117292484_n.jpg

http://onlineuthayan.com/news/18293

Link to comment
Share on other sites

இண்டைக்கு இரண்டு தடவை போய் பாத்தன் - விளையாட்டை காணவில்லை பேசியே கழுத்தறுக்கிறாங்கள். நாளைக்கு சரிவராது, சனிக்கிழமை பாப்பம்.

Link to comment
Share on other sites

42 வது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்; விக்னேஸ்வரன் புறக்கணிப்பு

42 வது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்; விக்னேஸ்வரன் புறக்கணிப்பு

 

42 வது தேசிய விளையாட்டு விழா யாழில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய விளையாட்டு விழா முதன்முறையாக யாழில் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ் விழாவினை விளையாட்டு அமைச்சும், விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இவ்விளையாட்டு விழாவினை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, 9 மாகாண விளையாட்டு வீரர்களும் தமது மாகாண கொடிகளை கைகளில் ஏந்தியவாறு அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பு மரியாதையினையும் பிரதம விருந்தினர் உட்பட கௌரவ விருந்தினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

அதன்பின்னர் வடமாகாண விளையாட்டுத்துறை பொறுப்பாளர்கள் தீபத்தினை ஏந்தியவாறு ஒலிம்பிக் சுடரினை ஏற்றி வைத்தனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ம.சுமந்திரன், ஈ.சரணவபவன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதேவேளை இந்த தேசிய விளையாட்டு விழாவினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் புறக்கணித்தார்.

நாட்டின் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சமத்துவம், ஒருமைப்பாடு என்னும் தொணிப் பொருளில் 42வது தேசிய விளையாட்டு விழா இடம்பெறுகின்றது.

http://tamil.adaderana.lk/news.php?nid=84053

Link to comment
Share on other sites

யாழில் கோலாகலமாக ஆரம்பமானது 42 ஆவது தேசிய விளையாட்டு விழா 

Published by Priyatharshan on 2016-09-30 11:23:45

தேசியக் கொடியை ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க ஏந்திவர தேசிய விளையாட்டு விழா தீபத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயந்தி மற்றும் அன்தனிப் பிள்ளை ஆகியோர் ஏற்றிவைக்க யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில கோலாகமாக ஆரம்பமானது 42ஆவது தேசிய விளையாட்டு விழா.

14494831_1639966959635351_89396365476896

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக யாழ். மண்ணில் நடத்தப்படும்  இவ்விழா நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வு பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமானது. 

அணிவகுப்பு

தேசிய கீதத்தின் பின்னணி இசை ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து வீர வீராங்கனைகளின் அணிவகுப்பு ஆரம்பமானது. மேல்,கிழக்கு, மத்திய, தென், வடமேல், ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடக்கு ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள்  அணிவகுத்து வர சபாநாயகர் கருஜயசூரிய 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஏட்டினை வாசித்து விழாவை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைப்பதாக அறிவித்தார். 

கொடியேற்றல்

தொடர்ந்து சம்பிரதாய பூர்வமாக ஏழு வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு வண்ண வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. வடக்கு வானே வண்ணமயமாக காட்சியளிக்க தேசிய விளையாட்டு விழாவின் உத்தியோக பூர்வ கொடி மேல் மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் வடமாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளரிடம் கையளிக்கவும் அவர் அதை இலங்கை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளரிடம் சமர்ப்பித்த பின்னர் ஏற்றி வைக்கப்பட்டது. 

தேசிய தீபம்

அதனைத்தொடர்ந்து தேசிய  தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் வட மாகாணத்தின் முன்னாள் சிரேஷ்ட வீரரான எஸ்.அன்தனிப் பிள்ளை மற்றும் முன்னாள் சிரேஷ்ட வீராங்கனை ஜெயந்தி சோமசுந்தரம் ஆகியோர் தீப்பந்தத்தை ஏந்தியவாறு மைதானத்தை  வலம்வந்து ஜோதியை ஏற்றி வைக்கவும் அனைத்து வீர வீராங்கனைகளும் கரகோஷம் எழுப்பினர். 

எரிய தாமதமான தீபம்

தேசிய தீபம் ஏற்றப்பட்டும் சற்று நேரம் தாமதித்தே எரியத் தொடங்கியது. தொழில்நுட்ப கோளாறின் காரணமாக சற்று தாமதமாகியே எரிய ஆரம்பித்தது. அதனையடுத்து போட்டியில் கலந்து கொள்ளும் வீர வீராங்கனைகள் மற்றும் நடுவர்களின் சத்தியப்பிரமாணம் இடம் பெற்றது.

அதிதிகளின் உரைகளும் கலாசார நிகழ்வும் 

அதனையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்களான மனோ கணேசன், தயாசிறி ஜயசேகர, பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹாரீஸ், மாகாண அமைச்சர் குருகுலராஜா ஆகியோரின் முக்கிய உரைகள் இடம்பெற்றன. தொடர்ந்து பாரம்பரிய கலை கலாசார  நிகழ்வுகள் இடம்பெற்றதையடுத்து ஆரம்ப நிகழ்வு செவ்வனே நிறைவடைந்தது. 

இவ்வாரம்ப நிகழ்வில்  தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹாரீஸ், வட மாகாண  கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் குருகுலராஜா  பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன்,  வடமாகாண தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் உட்பட பலர் பங்கேற்றனர்.

14469440_1639967489635298_18490829481088

14495293_1639967096302004_75955470781804

14519881_1639966999635347_25713884120383

14449850_1639966879635359_84649646550346

14448930_1639967049635342_63817149566664

14446094_1639967452968635_75803015709501

14441224_1639967379635309_29150658474718

14432990_1639966942968686_75380529945208

14358663_1639967432968637_61558037292193

http://www.virakesari.lk/article/11917

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கொன்னும் குறைச்சலில்ல. சிங்கப்பூர் கூட ஒலிம்பிக்கில பதக்கம் வெல்லுது.. உந்த நாடு.. பரா ஒலிம்பிக்கில் மட்டும் ஒரு வெண்கலம்..! முன்னேற இடமுள்ளது. :104_point_left:

Link to comment
Share on other sites

தேசிய விளையாட்டு விழா ஆரம்ப நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் விக்னேஸ்வரன் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என அரச தரப்பு தெரிவித்துள்ளது.


இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக சபாநாயகர் கரு ஜயசூரிய பங்கேற்றிருந்ததுடன் வட மாகாணசபையின் தவிசாளர் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் சிலர்  பங்கேற்றிருந்தனர்.


விக்னேஸ்வரன் இந்த நிகழ்வில் பங்கேற்காமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நிலவி வரும் முரண்பாட்டினை வெளிக்காட்டுவதாக அமைகிறதென கொழும்புச்செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. 
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136501/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.