Jump to content

புதிய அரசியலமைப்பும் அரசியல் தீர்வும்


Recommended Posts

புதிய அர­சி­ய­ல­மைப்பும் அர­சியல் தீர்வும்
 
showImageInStory?imageid=299573:tn
 
showImageInStory?imageid=299574:tn
 
showImageInStory?imageid=299575:tn
 

புதிய அர­சி­ய­ல­மைப்பின் பூர்­வாங்க வரைவு எதிர்­வரும் நவம்பர் மாதம் வர­வு­–செ­ல­வுத்­திட்டம் மீதான விவாதம் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் என்று அர­சாங்­கத்­த­லை­வர்கள் கூறிக்கொண்டிருக்­கி­றார்கள். அடுத்த வரு­டத்­துக்­கான அர­சாங்­கத்தின் வர­வு­–செ­லவுத் திட்டம் நவம்பர் 10 ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­படும் என்றும் தொடர்ந்து ஒரு­மாத காலத்­துக்கு அதன் மீதான விவாதம் நடை­பெறும் என்றும் ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அவ்­வா­றானால், அர­சி­ய­ல­மைப்பு வரைவு இன்­னமும் 6 வார காலத்­திற்குள் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டாக வேண்டும்.

இவ்­வ­ருட ஆரம்­பத்தில் பாரா­ளு­மன்­றத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சமர்ப்­பித்த புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான பிரே­ர­ணையின் முகப்பு வாச­கத்தில் (Preface) மூன்று முக்­கிய நோக்கங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன. நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஒழித்தல், புதிய தேர்தல் முறையை அறி­முகப்­ப­டுத்தல் மற்றும் தேசியப் பிரச்­சி­னைக்கு அர­சி­ய­ல­மைப்பு வழி­மு­றையின் மூல­மான தீர்வைக் காண்­பது என்­ப­னவே அந்த நோக்கங்­க­ளாகும். ஆனால், கூட்டு எதி­ர­ணி­யினர் என்று தங்­களைக் கூறிக்கொள்ளும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு விசு­வா­ச­மான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்திக் கேட்டுக் கொண்டதன் பிர­காரம் அந்த மூன்று நோக்கங்­க­ளையும் குறிப்­பிட்­டுக்­காட்­டிய பந்தி முகப்பு வாச­கத்தில் இருந்து நீக்­கப்­பட்­டதன் பின்­னரே பிரே­ரணை சபையில் நிறை­வேற்­றப்­பட்­டது. ராஜ­ப­க் ஷ­வுக்கு விசு­வா­ச­மா­ன­வர்கள் மாத்­தி­ர­மல்ல, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு விசு­வா­ச­மாக இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மூத்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் பலரும் (அமைச்­சர்கள் உட்­பட) அந்த பந்­தியை அகற்ற வேண்­டு­மென்ற கோரிக்­கைக்கு ஆத­ர­வா­கவே செயற்­பட்­டார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மூன்று நோக்கங்­க­ளிலும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஒழிப்­பதும் புதிய தேர்தல் முறையை அறி­மு­கப்­ப­டுத்­து­வதும் கூட்டு எதி­ர­ணி­யி­னரின் ஆட்­சே­ப­னைக்­கு­ரி­ய­வை­யாக இருக்க முடி­யாது. தேசி­யப்­பி­ரச்­சி­னைக்கு அர­சி­ய­ல­மைப்பு வழி­மு­றையின் மூல­மான தீர்வைக் காண்­பதை புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான நோக்கங்­களில் ஒன்­றாக பிரே­ர­ணையில் கூறப்­ப­டு­வ­தையே அவர்கள் விரும்­ப­வில்லை என்­பது தெளிவா­னது. அதன் கார­ணத்­தி­னா­லேயே அந்தப் பந்­தியை அகற்­ற­வேண்­டு­மென்­பதில் அவர்கள் பிடி­வா­த­மாக இருந்­தார்கள். அவர்­களின் ஆத­ர­வையும் பெற­வேண்டும் என்ற நிர்ப்­பந்­தத்தால் அர­சாங்­கமும் அதற்கு இணங்கிக் கொண்டது.

புதிய அர­சி­ய­ல­மைப்பின் பல்­வேறு அம்­சங்கள் குறித்தும் ஆராய்ந்து அறிக்­கை­களைச் சமர்ப்­பிப்­ப­தற்­கென்று அர­சி­ய­ல­மைப்புச் சபை­யினால் (Constitutional assembly) நிய­மிக்­கப்­பட்ட 6 பாரா­ளு­மன்ற உப­கு­ழுக்­களில் ஐந்து குழுக்கள் அவற்றின் பணி­களைப் பூர்த்தி செய்­து­விட்­ட­தாக பொதுமக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழுவின் (Public Representations Committee) தலை­வ­ரான மூத்த சட்­ட­வாதி லால் விஜே­நா­யக்க சில தினங்­க­ளுக்கு முன்னர் தெரி­வித்­தி­ருந்தார். அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­துடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்கள் குறித்து பொதுமக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கும் அவர்கள் மத்­தியில் இருந்து யோசனை­களைப் பெறு­வ­தற்­கு­மென்று 19 உறுப்­பி­னர்­களைக் கொண்ட பொதுமக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழுவை பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க நிய­மித்­தி­ருந்தார். சுமார் 6 மாதங்­க­ளாக பொதுமக்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்குப் பிறகு இக்­குழு 200க்கும் அதி­க­மான பக்­கங்­களைக் கொண்ட அறிக்­கையை பிர­த­ம­ரிடம் கைய­ளித்­தது. அர­சி­ய­ல­மைப்பு வரை­யப்­படும் போது மக்கள் தரப்பில் இருந்து முன்­வைக்­கப்­பட்ட யோசனை­களும் அபிப்­பி­ரா­யங்­களும் கருத்­தி­லெ­டுக்­கப்­ப­டு­மென்று லால் விஜே­நா­யக்க கூறி­யி­ருக்­கிறார்.

இலங்­கையின் மூன்­றா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பை வரை­வ­தற்­கான செயன்­மு­றை­களே தற்போது முன்­னெ­டுக்­கப்­பட்­டுக்கொண்டிருக்­கின்­றன. இலங்­கையை ஒரு குடி­ய­ர­சாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­திய 1972 அர­சி­ய­ல­மைப்பும் பிறகு 6 வரு­டங்கள் கழித்து நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­காகக் கொண்டுவ­ரப்­பட்ட 1978 அர­சி­ய­ல­மைப்பும் வரை­யப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக பொதுமக்­களின் கருத்­துக்­களை அறி­வ­தற்­கான எந்­தவொரு செயன்­மு­றையும் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தில்லை. சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான ஐக்­கிய முன்­னணி அர­சாங்­கமும் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சாங்­கமும் அவற்றின் அர­சியல் நிலைப்­பா­டு­க­ளுக்கு இசை­வான முறையில் அந்­தந்த அர­சி­ய­ல­மைப்­புக்­களை உரு­வாக்கிக் கொண்டன. அந்த வகையில் நோக்கும் போது தற்போதைய தேசிய ஐக்­கிய அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­துடன் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரங்கள் தொடர்பில் மக்­க­ளுடன் கலந்­தாலோசனை நடத்­து­வ­தற்கு முன்­னெ­டுத்த செயற்­பா­டுகள் ஒப்­பீட்­ட­ளவில் ஆரோக்கிய­மா­னவை என்­பதில் சந்­தே­க­மில்லை. ஆனால், மக்கள் தரப்பில் இருந்து முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய யோசனைகள் எந்த அள­விற்கு புதிய அர­சி­ய­ல­மைப்பை வரை­ப­வர்­க­ளினால் அக்­க­றை­யுடன் பரி­சீ­ல­னைக்­கெ­டுக்­கப்­பட்டு வரைவில் உள்­வாங்­கப்­படும் என்­பதைப் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும்.

இலங்­கையின் பிர­தான நெருக்­கடி தேசிய இனப்­பி­ரச்­சி­னை­யாகும். அந்­தப்­பி­ரச்­சி­னைக்கு பய­னு­று­தி­யு­டைய அர­சியல் தீர்வொன்றுக்­கான ஏற்­பா­டு­களை உள்­ள­டக்­கி­யி­ராத எந்­தவொரு அர­சி­ய­ல­மைப்பும் அர்த்­த­மற்­ற­தா­கவே போகும். அந்த வகையில் நோக்குகையில் இன்­னமும் 6 வாரங்­க­ளுக்குள் அர­சாங்­கத்­தினால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தாகக் கூறப்­படும் அர­சி­ய­ல­மைப்பு வரைவில் அர­சியல் தீர்வு தொடர்பில் எத்­த­கைய ஏற்­பா­டுகள் உள்­ள­டக்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்பு நாட்டு மக்கள் மத்­தியில் குறிப்­பாக தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­கி­றது. அர­சாங்­கத்­த­லை­வர்கள் ஒரு புறத்தில் அர­சியல் தீர்­வுக்­கான ஏற்­பா­டுகள் தொடர்பில் பொதுப்­ப­டை­யாகக் கருத்­துக்­களைத் தெரி­வித்துக் கொண்டிருக்­கி­றார்­களே தவிர, பிரத்­தி­யே­க­மான எந்த யோசனையும் அவர்­க­ளிடம் இருந்து வெளிப்­ப­ட­வில்லை. மறு­பு­றத்­திலே, அர­சியல் தீர்வு தொடர்பில் உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு வரைவில் அர­சாங்கம் எத்­த­கைய ஏற்­பா­டு­களை உள்­ள­டக்கும் என்­பதைப் பொறுத்­தி­ருந்து பார்த்து அதன் அடிப்­ப­டையில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக பெரும்­பான்­மை­யின மக்கள் மத்­தியில் பிர­சா­ரங்­களை முடுக்­கி­வி­டு­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி ராஜப­க் ஷவின் முகாமும் கடும்போக்கு சிங்­கள பௌத்த தேசி­ய­வாத சக்­தி­களும் காத்­துக்கொண்டிருக்­கின்­றன. அது மாத்­தி­ர­மல்ல, நாட்டுப் பிரி­வி­னையைத் தூண்­டி­விடக் கூடி­ய­தான ஏற்­பா­டு­களை அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைவில் உள்­ள­டக்­கப்போவதாக ஏற்­க­னவே பெரும்­பான்­மை­யின மக்­க­ளுக்கு பூச்­சாண்டி காட்டும் காரி­யங்­க­ளிலும் அச்­சக்திகள் இறங்­கி­யி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை, அவர்கள் தரப்பில் அர­சியல் கட்­சி­க­ளி­னாலும் சிவில் சமூக அமைப்­புக்­க­ளி­னாலும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் யோசனைகள் பொதுவில் அர­சியல் தீர்வு சமஷ்டி அடிப்­ப­டை­யி­லா­ன­தாக அமை­ய­வேண்டும் என்றே வலி­யு­றுத்­து­கின்­றன. ஆனால், தென்­னி­லங்­கையில் பிர­தான அர­சியல் கட்­சி­களும் பொதுவில் சிங்­கள அர­சியல் சமு­தா­யமும் சமஷ்டி என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்­பதை திட்­ட­வட்­ட­மாகக் கூறிக்கொண்டிருக்­கின்­றன. இத்­த­கை­யதொரு பின்­பு­லத்­திலே, தமிழ் மக்­களின் நியா­ய­பூர்­வ­மான அர­சியல் அபி­லா­சை­களைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய அர­சியல் தீர்வொன்றுக்­கான ஏற்­பா­டு­களில் அர­சாங்கம் எந்­த­ள­வுக்கு கவ­னத்தைச் செலுத்தும் என்­பது தொடர்பில் பெரும் சந்­தேகம் எழு­கி­றது. அதி­காரப் பர­வ­லாக்கல் என்று வரும்போது புதிய அர­சி­ய­ல­மைப்பு வரை­விலும் தற்போதைய மாகா­ண­ச­பை­க­ளுக்கு உரிய அதி­கா­ரங்கள் மாத்­திரம் தான் உள்­ள­டக்­கப்­ப­டுமா? அல்­லது அவற்­றுக்­கான அதி­கா­ரங்கள் அதி­க­ரிக்­கப்­ப­டக்­கூ­டிய ஏற்­பா­டுகள் உள்­ள­டக்­கப்­ப­டுமா? ராஜ­ப­க் ஷ அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்­துக்கு அப்பால் செல்­வது குறித்து (13) பேசிய காலமொன்று இருந்­தது. இன்­றைய அர­சாங்கம் அது­பற்­றி­யெல்லாம் பேசு­வ­தில்லை என்­பதும் கவ­னத்­துக்­கு­ரி­யது.

இத்­த­கை­யதொரு பின்­பு­லத்­திலே, அர­சி­யல­மைப்பு வரைவுச் செயற்­பா­டுகள் தொடர்பில் இனப்­பி­ளவின் இரு­ம­ருங்­கிலும் இருக்கும் மக்­களின் ஐயு­ற­வு­களை பிர­தி­ப­லிக்­கக்­கூ­டிய வகையில் வெளிப்­படுத்­தப்­பட்ட இரு கருத்­துக்­களை அவ­தா­னிப்­பது பொருத்­த­மா­ன­தாக இருக்கும்.

சிங்­கள பௌத்த கடும்போக்கு தேசி­ய­வாத அர­சியல் பேசு­கின்ற தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரான விமல் வீர­வன்ச சில தினங்­க­ளுக்கு முன்னர் இலங்­கையின் பௌத்த உயர்­பீ­டங்­களில் ஒன்­றான மல்­வத்தை பீடத்தின் மகா­நா­யக்­க­ரான அதி வண. திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சித்­தார்த்த சுமங்­கள தேரரை சந்­திப்­ப­தற்­காக கண்­டிக்குச் சென்­றி­ருந்தார். அர­சாங்­கத்தின் உத்­தேச புதிய அர­சி­ய­ல­மைப்­பினால் நாட்­டுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­துக்கள் என்று தான் கரு­து­கின்­ற­வற்­றைப்­பற்றி முறை­யி­டு­வ­தற்­கா­கவே அச்­சந்­திப்பு. நாட்டின் ஒற்­றை­யாட்சி அந்­தஸ்­துக்கு குந்­தகம் விளை­விக்கக் கூடி­ய­தாக புதிய அர­சி­ய­ல­மைப்பு அமையும் என்று வீர­வன்ச கூறி­யபோது அதற்கு பதி­ல­ளித்த மகா­நா­யக்கர், நாட்டுப் பிரி­வி­னையைத் தூண்டக் கூடிய எந்­தவொரு யோசனை­யுமே அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­ப­ட­மாட்­டாது என்று தன்­னிடம் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உறு­தி­ய­ளித்­தி­ருப்­ப­தாகக் கூறினார் என்று செய்­திகள் மூலம் அறியக் கூடி­ய­தாக இருக்­கி­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பு வரை­வுக்கு நாட்டு மக்­களின் அங்­கீ­கா­ரத்தைப் பெறு­வ­தற்­காக சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­மென்­பதால் வீணான அச்­சங்­களை வளர்த்­துக்கொள்ளத் தேவை­யில்லை என்றும் மகா­நா­யக்கர் வீர­வன்­ச­வி­டமும் அவ­ருடன் கூடச்­சென்­ற­வர்­க­ளி­டமும் கூறி­யி­ருக்­கிறார். தேசி­யப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு ஏற்­பா­டுகள் என்று வரும் போது சிங்­கள அர­சியல் சமு­தா­யமும் மக்­களும் நாட்­டுக்கு அச்­சு­றுத்­தலைத் தோற்றுவிக்கக் கூடி­யவை என்று அஞ்­சக்­கூ­டிய எந்­தவொரு அம்­சத்­தையும் அர­சாங்கம் உள்­ள­டக்­கப்போவதில்லை என்­பதும் அவ்­வாறு உள்­ள­டக்­கப்­பட்­டாலும் பெரும்­பான்­மை­யின மக்கள் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் அதை ஏற்­றுக்கொள்ளப் போவதில்லை என்­ப­துமே மகா­நா­யக்­கரின் அந்தக் கருத்­துக்கள் மூல­மாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் செய்­தி­யாகும்.

அதே­வேளை, சில தினங்­க­ளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்­டத்தில் சம்­பூரில் இடம்­பெற்ற விவ­சாயக் கண்­காட்­சியொன்றை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றிய தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் எவரும் யாரையும் ஏமாற்றி ஒரு முறை­யான அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க முடி­யாது. யாரி­டமும் யாரும் ஏமாறப் போவதில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூல­மாக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள அர­சியல் தீர்வு மக்­களின் அங்­கீ­கா­ரத்­துக்­காக சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்­பிற்கு சமர்ப்­பிக்­கப்­படும். அந்த அர­சி­ய­ல­மைப்பு மக்­களின் ஆணையைப் பெற்ற பின்னர் தான் நடை­மு­றைக்கு வர­மு­டியும். அதனால், எவரும் யாரையும் ஏமாற்­ற­வேண்டும், ஏமாற்ற முடியும் என்று எண்­ண­வேண்­டிய அவ­சியம் இல்லை, என்று குறிப்­பிட்­டி­ருந்தார். தமிழ் மக்­களை மீண்டும் ஏமாற்­றக்­கூ­டி­ய­தாக அவர்­க­ளினால் ஏற்­றுக்கொள்ள முடி­யா­த­தான அர­சியல் தீர்வு ஏற்­பா­டு­களை புதிய அர­சி­ய­ல­மைப்பு உள்­ள­டக்­கி­யி­ருக்­கு­மானால், தமிழ் மக்கள் அதை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் நிரா­க­ரிப்­பார்கள் என்­பதே தனது அந்த உரையின் மூல­மாக சம்­பந்தன் விடுத்­தி­ருக்கும் செய்­தி­யாகும்.

இம்­மாத ஆரம்­பத்தில் இலங்­கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ- மூனை யாழ்ப்­பா­ணத்தில் சந்­தித்துப் பேசிய சம்­பந்தன், தமிழ் மக்­களின் சுயாட்­சிக்­கான அபி­லா­சை­களைப் பூர்த்தி செய்­யக்­கூ­டி­ய­தாக புதிய அர­சி­ய­ல­மைப்பில் தீர்வைத் தரு­வ­தாக அளித்த வாக்­கு­று­திக்கு ஏற்ற முறையில் அர­சாங்கம் செயற்­படத் தவ­றினால், தமிழ் மக்கள் வாழு­கின்ற பிராந்­தி­யங்­களை ஆட்­சி­செய்ய முடி­யாத நிலை­மையை ஏற்­ப­டுத்­துவோம் என்று கடுந்தொனியில் குறிப்­பிட்­டி­ருந்தார். அர­சி­ய­ல­மைப்பு வழி முறை­களின் ஊடாக அர­சியல் தீர்­வைக்­காண்­ப­தற்­காக மேற்கொள்ளப்­படக் கூடிய முயற்­சி­களைப் பொறுத்­த­வரை, அரசாங்கத் தலைவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக தாங்கள் நடந்து கொள்வதும் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டியதும் அவசியமானது என்று தொடர்ச்சியாக கூறிவருகின்ற சம்பந்தன், அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் தங்களை மீண்டும் ஏமாற்றக்கூடுமே? என்ற ஒரு ஐயுறவை உள்ளூரக் கொண்டிருக்காவிட்டால், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் முன்னால் அத்தகைய எச்சரிக்கையை விடுத்திருக்கமாட்டார்.

எது எவ்வாறிருந்தாலும், இத்தடவை அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தேசிய இனப்பிரச்சினைக்கு பயனுறுதி­யுடைய அரசியல் தீர்வு ஒன்றைத் தரக்கூடிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்படாவிட்டால், தங்களது நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைக் கருத்தில் எடுக்காத எந்தவொரு புதிய அரசியலமைப்பையும் நடைமுறைக்குக் கொண்டுவர முடியாத வகையில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்கள் தடுக்க முடியும். அதற்கு தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டியது மிகமிக அவசியமானதாகும். அவர்களை அதற்குத் தயார்ப்படுத்துவதற்கு அவர்களின் தலைமைத்துவங்கள் அரசியல் துணிவாற்றலைக் கொண்டிருக்கவேண்டும். சிறு­பான்­மை­யி­னங்­களைச் சேர்ந்த மக்­களின் நியா­ய­பூர்­வ­மான அர­சியல் அபி­லா­சை­களை ஓர­ள­வுக்­கேனும் நிறை­வேற்­றக்­கூ­டிய ஏற்­பா­டுகள் இல்­லாத பட்­சத்தில் இனிமேல் எந்­த­வொரு அர­சி­ய­ல­மைப்­பையும் நாட்டில் நிறை­வேற்­றவோ நடை­முறைப்­ப­டுத்­தவோ முடி­யாது என்று பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கும் அவர்­களின் அர­சியல் தலை­மை­க­ளுக்கும் உணர்த்­து­வ­தற்கு தமிழ்­பேசும் மக்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கக்­கூ­டிய ஒரு அருமையான வாய்ப்பாக உத்தேச சர்வஜன வாக்கெடுப்பை நோக்கலாம்.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=27/09/2016

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.