Jump to content

இரு இளைஞர்களை காணவில்லை . ஐந்து இராணுவத்தினருக்கு விளக்கமறியல் - 11 இராணுவத்தினருக்கு பிடியாணை


Recommended Posts

இரு இளைஞர்களை காணவில்லை . ஐந்து இராணுவத்தினருக்கு விளக்கமறியல் - 11 இராணுவத்தினருக்கு பிடியாணை

 

இரு இளைஞர்களை காணவில்லை . ஐந்து இராணுவத்தினருக்கு விளக்கமறியல் -  11 இராணுவத்தினருக்கு பிடியாணை




யாழ். அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் காணாமல் போனமைக்கு காரணம் எனும் குற்றசாட்டில் 16 இராணுவத்தினரில் ,  ஐந்து இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளதுடன் ஏனைய 11 பேருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் கடந்த 1998ம ஆண்டு ஜனவரி மாதம் 20 ம் அச்செழு இராணுவத்தினரால் பிடித்து செல்லப்பட்ட பின்னர் காணாமல் போயிருந்தனர்.

அது தொடர்பில் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில்,  குறித்த வழக்கு  நடைபெற்று வந்த வேளை இன்றைய தினம் திங்கட்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு 16 இராணுவத்தினருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டு இருந்தது.

அந்நிலையில் இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதிஸ்கரன் முன்னிலையில் , வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  5 இராணுவத்தினரே மன்றில் முன்னிலையானார்கள் அதனை அடுத்து ஐந்து இராணுவத்தினரையும் எதிர்வரும் 10ம திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகாத ஏனைய 11 பேருக்கும் , நீதிவான்  பிடியாணை பிறப்பித்தார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136373/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

இரு இளைஞர்களை காணவில்லை . ஐந்து இராணுவத்தினருக்கு விளக்கமறியல் - 11 இராணுவத்தினருக்கு பிடியாணை

 

இரு இளைஞர்களை காணவில்லை . ஐந்து இராணுவத்தினருக்கு விளக்கமறியல் -  11 இராணுவத்தினருக்கு பிடியாணை




யாழ். அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் காணாமல் போனமைக்கு காரணம் எனும் குற்றசாட்டில் 16 இராணுவத்தினரில் ,  ஐந்து இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளதுடன் ஏனைய 11 பேருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136373/language/ta-IN/article.aspx

இலங்கையில் சமாதானம் ஒன்றுக்குள் ஒன்றாகப் புகுந்து விரிந்து ஆறாகப் பாய்ந்து ஓடுகின்றது என்பதற்கான சாட்சியாக   இந்தச் செய்தியை எடுத்துக்கொள்ளலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சீ சீ சிங்கள சிறிலங்கா அரசுடன் மல்லுக்கட்டி கதைச்சு எதையாவது செய்யலாமென்றால் வடக்கிலை இருக்கிற அரசு தடுக்குது. உவை சொல்லுறதெல்லாம் பொய். நாங்கள் எங்கடை சட்டத்தை வைச்சே இராணுவத்துக்கெதிரா நடவடிக்கை எடுக்கிறம்தானே; 1998லை நடந்தது 2016 வழக்கு எடுத்தா ஒரு 2026வரைக்கும் நடக்கும் அதுக்க தமிழருக்கு மறதியிருக்கு மறந்திடுவினம். 2009 தானை 2029லை எடுத்தா சாட்சியளே இராயினம் பிறகென்ன? எண்டு சிறிலங்கா எதிர்க்கட்சித்லைவர் புறுபுறுத்க்கொண்டு போறது ஆருக்கும் கேட்குதோ.....................!

Link to comment
Share on other sites

53 minutes ago, nochchi said:

1998லை நடந்தது 2016 வழக்கு எடுத்தா ஒரு 2026வரைக்கும் நடக்கும் அதுக்க தமிழருக்கு மறதியிருக்கு மறந்திடுவினம். 

1998லை நடந்தது 2016 இல் மறக்கவில்லையே? தமிழருக்கு மறதி குறைவு.

 சிறிலங்கா எதிர்க்கட்சித்லைவர் புறுபுறுத்க்கொண்டு போறது ஆருக்கும் கேட்குதோ.....................!

நீங்கள் புறுபுறுத்க்கொண்டு போறது தான் இங்க தெரியுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவ‌ர்க‌ள் இந்த‌ முறை கோப்பை வெல்ல‌ மாட்டின‌ம் இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை தெரிவு செய்தாலும் க‌ர்விய‌ன் மைதான‌த்தில் இவ‌ர்க‌ளால் அடிச்சு ஆட‌ முடியாது வெஸ்சின்டீஸ் மைதான‌ங்க‌ளில் இங்லாந் அணி அதிக‌ம் தோற்று இருக்கு போன‌ வ‌ருட‌மும் 20ஓவ‌ர் தொட‌ரை வெஸ்சின்டீஸ் அணி இவ‌ர்க‌ளை வென்றார்க‌ள்   நாச‌மாய் போன‌ வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு சுனில் ந‌ர‌னை தேர்வு செய்தால் அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌மாய் இருக்கும்..................ஜ‌பிஎல்ல தொட‌க்க‌ வீர‌ராய் இற‌ங்கி ப‌ல‌ விளையாட்டில் அடிச்சு ஆடி அணிக்கு வெற்றிய‌ பெற்று கொடுத்த‌வ‌ர்......................................................
    • அப்படி தான் செய்திகள் சொல்கிறது பையா. ஓட்டங்களை மெதுவாக எடுக்கிறாராம்.
    • கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு மாத‌மும் ஒரு கிழ‌மையும் இருக்கு வீர‌ர்க‌ளுக்கு ஓய்வில்லாம‌ போட்டிய‌ தொட‌ர்ந்து ந‌ட‌த்துகின‌ம் ஜ‌பிஎல் முடிந்த‌ கையோடு வீர‌ர்க‌ள் க‌ர்விய‌ன் தீவை நோக்கி ப‌ய‌ணிக்க‌னும்........................... நியுசிலாந் Bரீம் பாக்கிஸ்தான் சென்று பாக்கிஸ்தானை வென்று விட்டின‌ம் தொட‌ரையும் வென்று விட்டின‌ம்.................சென்னை அணிக்காக‌ விளையாடும் இர‌ண்டு நியுசிலாந் வீரர்க‌ள் இதுவ‌ரை அடிச்சு ஆட‌ வில்லை இவ‌ர்க‌ளுக்கு ப‌தில் பாக்கிஸ்தான் தொட‌ரில் சிற‌ப்பாக‌ விளையாடின‌ வீர‌ர்க‌ளை நியுசிலாந் தேர்வுக்குழு தேர்வு செய்யுக் கூடும் என்று நினைக்கிறேன்.............................  
    • தமிழரசு கட்சியாலேயே அந்த எதிர்ப்பு  மேற்கொள்ளப்பட்டதாகவே நான் கூறியுள்ளேன். அதை வாசிக்க வில்லையா?  அல்லது வாசித்தும்  ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதி உள்ளீர்களா?  இப்போதும் கருத்துக்களை நேர்மையாக எதிர் கொள்ளாமல் தந்தை செல்வாவின் பிரபல்யத்துக்கு  பின்னால் ஒழிய வேண்டிய நிலை.   தந்தை செல்வா இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்து அவர் ஆயுததாரிகளால்  சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் நீங்கள் பிளேட்டை மாத்தி கூறி இருப்பீர்கள். 😂
    • என் inspiration ஆல் இப்படி பல தரவுகளை ஆராய்ந்தமை அதை நான் உட்பட பலருக்கு அறியதந்தமைக்கு நன்றி. என் கட்டுரை வேறு எந்த பலனை தராவிடிலும் - இது ஒன்றே போதும். நான் எப்பவுமே இவற்றை அங்குதான் போய் சாப்பிடுவது.  தவிரவும் கோப்பித்தூள், மிளகாய்தூள், எல்லாம் அங்கே இருந்து நேரடியாக அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.