Jump to content

எழுகதமிழ் இனவாதசெயல்-அரசாங்கம்


Recommended Posts

எழுகதமிழ் இனவாதசெயல்-அரசாங்கம்
 
 
எழுகதமிழ் இனவாதசெயல்-அரசாங்கம்
தமிழ் மக்கள் பேரவையினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணி யானது முற்றிலும் இனவாதச் செயலாகும் என்று குற்றம் சாட்டியுள்ள ஊடகத்துறை பிரதிய மைச்சர் கருணாரட்ன பரணவித்தாரன, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னே ஸ்வரனின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நல்லிணக்க முயற்சிகளையே பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
 
வடக்கு முதலமைச்சர் கூறுவதுபோன்று வடக்கில் எந்தவொரு புதிய பௌத்த விகாரை களோ, சிங்களக் குடியேற்றங்களோ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பிரதியமைச்சர் கூறினார்.
 
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் உரையாற்றிய வடமாகாண முதல மைச்சர் விக்னேஸ்வரன், வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் போன்ற வலியு றுத்தல்களை விடுத்ததோடு புத்தர் சிலைகள் அமைப்பிற்கு எதிராகவும் குரல் கொடுத்தி ருந்தார்.
 
இந்த நிலையில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் ஊடகத்துறை பிரதியமைச்சர் எழுக தமிழ் பேரணி தொட ர்பில் தனது கருத்துக்களை ஊடகங்களிடம் வெளியிட்டார்.
 
‘யாழ்ப்பாணத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் போராட்டம் தொடர்பில் நாம் கவலை அடைகின்றோம். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு அடிப்படைக் காரணமாக கூறப்ப டுபவை மிகவும் போலியானவைகளாகும். வடக்கில் எவ்வித சட்டவிரோத குடியேற்ற ங்களையும் அரசாங்கம் செய்யவில்லை. 
 
மாறாக வடக்கு மக்களுக்கு உரிமையான காணிகளை மீளக் கையளிக்கும் பணிகளே இடம்பெற்று வருகின்றன. தமிழ் மக்களை சிறைக் கைதிகளாக கைது செய்து வைத்திருக்க வில்லை. தமிழீழ விடுதலை புலிகளில் இருந்தவர்களே கைது செய்யப்பட்டதோடு இவர்க ளில் அதிகமானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வழக்கு பதிவு செய்ய ப்பட்டுள்ளது. இன்னும் சிலர் இருக்கின்றார்கள் அவர்களுக்கும் எதிர்வரும் காலங்க ளில் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும்
 
.அதேபோல வடக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதாக கூறுகின்றார்கள். எனினும் அப்படி ஒன்றும் அங்கு இடம்பெறவில்லை. அங்கு ஏற்கனவே இருந்தவை தான் தற்போதும் இருக்கின்றன. தெற்கிலும் இந்து கோவில்கள் இருக்கின்றன. வடக்கில் புதிதாக அமைக்கப்பட வில்லை என்பதுபோல அங்கு புதிய சிங்களக் குடியேற்றங்களோ, சிங்களக் கிராமங்களோ அமைக்கப்படவும் இல்லை.
 
இந்நாட்டில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற நல்லிணக்க முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்தவே இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றை வடக்கில் செய்தாலும், தெற்கில் செய்தாலும் இனவாதம் இனவாதமே ஆகும். அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். இந்த இன வாதத்திற்குள் சிக்கி நல்லிணக்க முயற்சிகளுக்கு முட்டுக்கடை இடவேண்டாம் என்பதை நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

http://onlineuthayan.com/news/18134

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் நல்லிணக்கம் எண்ட சொல்லோட சர்வதேசத்தையும் ஏமாற்றி, தமிழரையும் அடிமையாக்கி காலங் கடத்தலாம் எண்டு கனவு கண்டிருப்பீங்கள். முதலமைச்சரோ, சொன்னதை செய் எண்டு நிக்கிறார். வழமைபோல உங்கட இனவாதத்தை எங்கட நீதியான போராடத்துக்குள் திணிக்கிறீர்கள். அதுக்கு எங்கடையளும்  ஒத்தூதுகள். நாங்கள் எங்களது இறந்தவர்களை நினைவு கூர்ந்தால் அது உங்களுக்கு  இனவாதம், எங்களுக்கு நேர்ந்த அநியாயத்தை தட்டிக் கேட்டால் அது உங்களுக்கு இனவாதம். அதிலேயே பிறந்து, அதிலேயே ஊறிப்போன உங்களிடம் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.