Jump to content

இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக 60 நாடுகளில் 4,500 தியேட்டர்களில் ரிலீஸாகும் டோணி


Recommended Posts

இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக 60 நாடுகளில் 4,500 தியேட்டர்களில் ரிலீஸாகும் டோணி

 

மும்பை: கிரிக்கெட் வீரர் டோணி பற்றிய படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி 60 நாடுகளில் 4 ஆயிரத்து 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பாலிவுட் படம் எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி. இந்த படம் வரும் 30ம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

பட ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் சிஇஓ விஜய் சிங் கூறியிருப்பதாவது,  

26-1474867874-dhoni-untold-story2334.jpg

 டோணி இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக தியேட்டர்களில் ரிலீஸாகும் படம் எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி. மேலும் தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்ட ஒரு இந்தி படம் அதிக தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறை ஆகும்.

26-1474867880-untold-storu45.jpg

60 நாடுகள் டோணி படத்திற்கு உலக அளவில் கிராக்கி அதிகம் உள்ளதால் அதை 60 நாடுகளில் வெளியிடுகிறோம்.

26-1474867892-untitled-26-16-1474026710.jpg

இந்த படம் மொத்தம் 4 ஆயிரத்து 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. மராத்தி டோணி படத்தை உலக அளவில் அதிக தியேட்டர்களில் குறிப்பிட்ட நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டி உள்ளதால் அதை மராத்தி மற்றும் பஞ்சாபியில் டப் செய்து வெளியிடும் பணி தற்போதைக்கு நடக்காது என்று சிங் தெரிவித்துள்ளார்.

26-1474867886-dhoni-untold-story.jpg

விளம்பரம் நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இந்த படத்தை ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட்டுடன் சேர்ந்து டோணியும் விளம்பரப்படுத்தி வருகிறார். சுஷாந்த் படத்தில் டோணியாகவே வாழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

Read more at: http://tamil.filmibeat.com/news/ms-dhoni-biopic-release-4-500-screens-across-60-countries-042427.html

Link to comment
Share on other sites

தோனியால் வெளியேற்றப்பட்ட 3 வீரர்கள் யார்? சர்ச்சையை ஏற்படுத்தும் படம்!

 

 
dhoni_movie


இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே.

இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் வெளியான ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவினரிடம், இந்த மூன்று வீரர்களும் ஒருநாள் அணிக்குப் பொருத்தமாக இல்லை என்று தோனி சொல்வது
போல ஒரு காட்சி உள்ளது. உன்னை வளர்த்துவிட்ட வீரரை அணியிலிருந்து நீக்குகிறாயா என்று கேள்வி கேட்ட தேர்வுக்குழு உறுப்பினரிடம், நாமெல்லாம் நாட்டுக்காகப் பணியாற்றுகிறோம் என்று தோனி பதிலளிப்பது போலவும்
 உள்ளது. 

இதனையடுத்து அந்த 3 வீரர்களின் பெயர்கள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மூத்த வீரர்களை அந்தக் காட்சி குறிப்பிடுகிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 

இதுகுறித்து இயக்குநர் நீரஜ் பாண்டே பேட்டியளித்ததாவது:

 அந்தக் காட்சி படத்தில் உள்ளது. அதேசமயம் அந்த 3 வீரர்களின் பெயர்களைச் சொல்லவேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். அந்த 3 வீரர்கள் மீதான மரியாதைக்காகவும் பெயர்கள் குறிப்பிடப்பட்டால் அது தவறாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாலும் அதைத் தவிர்த்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி, செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

சினிமாவிலும் ஹெலிகாப்டர் சிக்ஸ் அடித்திருக்கிறாரா தோனி?! #எம்.எஸ்.தோனி? விமர்சனம் M.S.Dhoni: Untold story விமர்சனம்

msd.png

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா முழுவதும் இன்று ரிலீஸாகியிருக்கிறது எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி. ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பில், நீரஜ் பாண்டே இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்து  வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ ஒருவரின் படத்துக்கு கிடைக்கும் ஆர்ப்பாட்டமும், உற்சாகமும் தோனிக்கும் கிடைத்திருக்கிறது.

பம்ப் ஆபரேட்டர் வேலை, சிறிய அப்பார்ட்மெண்ட் வீடு, அன்பான குழந்தைகள் என மகிழ்ச்சியாக  வாழ்ந்து வருகிறார் பான் சிங். நன்றாக படிக்க வேண்டும், என்னைப் போல பம்ப் ஆபரேட்டர் வேலை பார்க்க கூடாது என தோனிக்கு சிறிய வயதிலேயே அறிவுரை சொல்கிறார். தோனிக்கு விளையாட்டு என்றால் ரொம்ப இஷ்டம். பள்ளியில் கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பிங்கில் கலக்குவதை பார்த்த பள்ளி பயிற்சியாளர் பானர்ஜி தோனியை கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் செய்ய சொல்கிறார். அங்கிருந்து தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையும், படத்தின் கதையும் ஆரம்பிக்கிறது.

கிரிக்கெட்  ஆட வந்த பிறகு, கூச் பீகார் டிராபி, துலீப் டிராஃபி என அடுத்தடுத்து பெரிய பெரிய டோர்னமெண்ட்களில் ஆடும் அளவுக்கு விறு விறுவென வளர்கிறார் தோனி. முக்கியமான முதல் தர போட்டிகள் அனைத்தையும் சிறு சிறு அத்தியாயமாக கடத்துகிறார் இயக்குநர் நீரஜ் பாண்டே. தோனி ஆட வந்தால் எதிரணி மிரள்வதும், பந்துகள் பறந்து தொலைவதும், ஆட்டத்தை பார்க்க பள்ளி மாணவர்கள் கூடுவதுமாக திரைக்கதை நகர்கிறது. தியேட்டரும் அதிர்கிறது. 

ஒரு கட்டத்தில் ரயில்வே அணிக்கு ஆட வாய்ப்பு கிடைக்கிறது ரெயில்வேயில் வேலை போனஸ். அப்பாவுக்காக வேலைக்குச் செல்கிறார் தோனி. ஆனால்  வேலை அவருக்கு பிடிக்காமல் போக, ராஜினாமா செய்து விடுகிறார். அதன் பின்னர் தோனி எப்படி இந்திய அணிக்குள் நுழைந்தார், தோனியின் முதல் காதல் என்ன ஆனது? சாக்ஷியை கரம் பிடித்தது எப்படி? கேப்டனாக என்னவெல்லாம் செய்தார் என்பதை மூன்று மணி நேரம் பத்து நிமிட திரைப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். 

msd2.png

 

இளைமைக்கால தோனியை கண் முன் கொண்டு வந்ததில் செம ஸ்கோர் செய்கிறார் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட். தோனியின் முன்னாள் காதலியாக வரும் பிரியங்காவின் கதாப்பாத்திரத்தில் 'டைரிமில்க்'  திஷா படானி நடித்திருக்கிறார். தோனி- பிரியங்கா காதல் அத்தியாயம் கொஞ்ச நேரமே வந்தாலும் ’கொஞ்சல்’ நேரமது. ஹெலிகாப்டர் ஷாட் ஆட நண்பனிடம் இருந்து தோனி கற்றுக்கொள்ளும் காட்சி கியூட். ' அந்த கரக்பூர்ல ஜாப் செக்யூரிட்டில மாட்டிக்கிட்டா அதுக்கப்பறம் என்னால இதுவே செய்ய முடியாதுப்பா'  , “லைஃபும் கிரிக்கெட் மாதிரிதான். எல்லா பாலும் அடிக்கற மாதிரி வராது” போல சில இடங்களில் ஃப்ரீ ஹிட் அடிக்கின்றன வசனங்கள். மற்ற இடங்களில் எல்லாம் டாட் பால் கணக்காக போகின்றன

வழக்கமாக பயோகிராபி படங்களில் மிஸ் ஆகும் காமெடி, தோனியில் கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ரயில்வே குவார்ட்டர்ஸில் தோனியின் அறையை சுற்றிக்காட்டும் அந்த ரூம் மேட் மெர்சல் சாய்ஸ்!

தோனி போதாதா? கூடவே சச்சின், யுவராஜும் இருக்கிறார்களே... அது போதும் என  முடிவு செய்திருக்கிறார் இயக்குனர். நேர்கோட்டுக்கதையாக இருந்தாலும் தோனி இன்னிங்கிஸ் போல கடைசி சில நிமிடங்களில் மட்டும் தான் விறுவிறுவென திரைக்கதை நகர்கிறது. எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி என படத்தின் பெயரை பார்த்து  தோனியின் வாழ்க்கை குறித்து சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்த்து போனால்  தோனியின் விக்கிப்பீடியாவுக்கு விஷுவல் வடிவம் தந்திருக்கிறார் நீரஜ். அன்டோல்ட் எங்கப்பா..........

அஸார் படத்துக்கு வந்த விமர்சனங்களை பார்த்து உஷாராகி விட்டாரோ என்னவோ, ஆட்டோ பயகிராஃபி திரைப்படம்  எடுக்கிறேன் என சொல்லிவ்ட்டு யாருக்கும்  வலிக்காமல், மருந்துக்கு கூட எந்த வித உள் அரசியல்கள், கான்ட்ரவெர்ஸி எதையும் டச் பண்ணாமல் சென்றிருக்கிறார்கள். தோனிக்கு நரேந்திர சிங் தோனி என்ற அண்ணன் உண்டு. பாஜகவில் இருந்து  பிற்பாடு முலாயம் சிங் யாதவை சந்தித்து சமாஜ்வாடியில் இணைந்த அந்த அரசியல்வாதி அண்ணன் கேரக்டரே திரைப்படத்தில் இல்லை . 

யுவராஜ் அப்பா உடனான தகராறு வரலாறு, சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசனுடனான நெருக்கம், மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகள், லட்சுமிராயின் கிசுகிசு உட்பட அத்தனையையும்  கதை, திரைக்கதை  எழுதும்போது சாய்ஸில் விட்டுவிட்டார்  நீரஜ் பாண்டே.

 

 

சாக்‌ஷி, யுவராஜ் சிங் எல்லாம் உண்மையிலே நடித்திருக்கிறார்களா என நினைக்க வைக்கும் செம காஸ்டிங். எங்கப்பா பிடிச்சீங்க?

2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் மொத்த பரபரப்பையும் பத்து நிமிட காட்சியாக திரையில் கொண்டு வந்த விதம் 'வாவ்'. தோனி இறங்கி அடித்த அந்த சிக்ஸரில் அத்தனை ரசிகர்களும் டைம் டிராவல் செய்து  ஏப்ரல் 2,2011க்குச் சென்று ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இந்தியாவுக்கு கேப்டனாகி உலகையே திரும்பி பார்க்க வைத்த தோனியின் சரித்திர அத்தியாயத்தை  இளைஞர்களுக்கு மோட்டிவேட்டிவாக போட்டுக் காட்டியதில் இயக்குனர்  நீரஜ் ஜெயித்திருக்கிறார்.  

முழுமையான தோனியின் வரலாறு சொல்லப்பட வில்லை என்றாலும். சுஷாந்த் சிங் ராஜ்புட் திரைப்படத்தில் சிக்ஸ் அடிக்கும் போதெல்லாம் தோனியே சிக்ஸ் விளாசியது போல தியேட்டரை விசில்களாலும், கரகோஷங்களாலும் தகர்க்கிறார்கள் ரசிகர்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் உடையில் வரும் அந்த ஒரு காட்சி கபாலியின் ‘மகிழ்ச்சி’க்கு சமமாக ரசிகர்களை கொண்டாட வைக்கிறது. 

பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், ஸ்டேடியம் கூட்டத்தின் உணர்வை பின்னணியில் கொண்டு வந்ததில் அசத்தியிருக்கிறார்கள். ஹெச்.டி.யில் மேட்ச் பார்க்கும் அளவுக்கு துல்லியமான ஒளிப்பதிவு (சுதீர் பல்சானே)

 

சொல்லப்படாத விஷயங்களை தவிர்த்து விட்டால் தோனி திரைப்படம், தோனியின் வெறித்தன ரசிகர்களுக்கு இன்னொரு மாஸ் ஹெலிகாப்டர் ஷாட் விருந்து. 

http://www.vikatan.com/cinema/movie-review/69003-msdhoni-untold-story-movie-review.art

Link to comment
Share on other sites

”ஒரு நாளைக்கு 200 ஹெலிகாப்டர் ஷாட்ஸ்..!'' - ரீல் ’தோனி’ சுஷாந்த் சிங் ராஜ்புத் பேட்டி #Exclusive

IMG_0768.jpg       


" இரண்டு வருட காலம் தோனியாகவே நடந்து, தோனியாகவே பேசிப் பழகி, சிரித்து, அழுது வாழ்ந்து... திடீரென, நான் தோனியில்லை... சுஷாந்த் என்று உணர்வது கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது" என்று பொறுமையாகப் பேச்சை ஆரம்பிக்கிறார்  "எம்.எஸ். தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி" படத்தின் கதாநாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புட். 

கூல் கேப்டனாக நடித்ததாலோ என்னவோ, சுஷாந்தும் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் ரொம்ப கூலாகவே இருக்கிறார். அவருடன் ஒரு "ஹாட் டீ" சிட் சாட்...


தோனியாக நடிப்பது எவ்வளவு கடினமாக அல்லது எளிதாக இருந்தது ?
" அவரைப் போல் கேமரா முன்பு நடிப்பது என்பது எளிது தான். ஆனால், அவரின் உணர்வு ஓட்டங்களைப் புரிந்துக் கொள்வது தான் மிக மிகக் கடினமான ஒன்று. வாழ்வின் பல தருணங்களில் அவர் எடுத்த முடிவுகளும், பல சூழல்களில் அவரின் செயல்பாடுகளும் சாதாரண மனிதர்களைப் போன்றதாக இல்லை. அதைப் புரிந்துக் கொள்ளத் தான் அதிக சிரமப்பட்டேன். ஏனென்றால், கேமரா முன்பு நான் தோனியாக நடிப்பதைவிட தோனியாக வாழ வேண்டிய அவசியம் இருந்தது. ஏனென்றால், தோனியின் வாழ்க்கைப்  பயணம் என்பது அத்தனை ஆழமான உணர்வுகளைக் கொண்டது. "

 தோனியை சந்தித்த அனுபவம்?
" படத்தில் கமிட் ஆனதுமே முதல் 4 மாதங்கள் தோனியின் வீடியோக்களைக் பார்ப்பது, ஆடியோக்களை கேட்பது என்றே இருந்தேன். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான மணி நேரங்களை இதில் செலவிட்டேன்.படத்திற்காக தோனியை மூன்று முறை சந்தித்தேன். முதன்முறைப் பார்த்த போது, பொதுவாக அவரின் வாழ்க்கைக் குறித்து கேட்டறிந்தேன். இரண்டாவது தடவை சந்திக்கும் போது கிட்டத்தட்ட 250 கேள்விகளை அவரிடம் நான் கேட்டேன். அது அத்தனையும் அனுமானமான, கற்பனையான கேள்விகள். அந்த கேள்விகளுக்கு அவர் எப்படி ரியாக்ட் செய்தார் என்பதை உன்னிப்பாக கவனித்தேன். உதாரணத்திற்கு, கோபப்படும் போது அவர் முகம் எப்படி மாறுகிறது, பயப்படும் போது... என முக பாவனைகளைப் படித்தேன். ஏனென்றால், அவ்வளவு லேசில் ஒரு விஷயத்திற்கு அவர் ரியாக்ட் செய்திட மாட்டார். மூன்றாவது முறை ஸ்கிரிப்ட் சம்பந்தமான விஷயங்களுக்காக சந்தித்தேன். "


யாரும் அதிகம் நெருங்கிடாத தோனியிடம் நெருக்கமாக பழகியுள்ளீர்கள். அவரிடம் உங்களுக்குப் பிடித்த , பிடிக்காத விஷயம்?
" தன்னுடைய நம்பிக்கைகள் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை. அடுத்து அவரின் பயமின்மை. அவருக்கு எதிர்காலம் குறித்த பயமோ, கடந்த காலம் குறித்த கவலைகளோ கிடையாது. இந்த நொடிக்காக வாழ்பவர் அவர். நம்மில் எத்தனையோ பேர் அதற்காகத் தான் போராடிக் கொண்டிருக்கிறோம். "நொடிகளுக்குள் வாழ்வது" ...அது தோனிக்கு மிக எளிதாகக் கைக்கூடும் . அவரிடம் பிடிக்காத விஷயம்... என்று ஏதுமில்லை. ஆனால், அவர் எப்படி என்றால் தனக்கென சில "சரி"களையும், "தவறு"களையும் வடிவமைத்து வைத்துள்ளார். அதற்கிடையிலான யாருடைய விமர்சனங்களையும் அவர் கண்டு கொள்ள மாட்டார். தோனி ஒரு புரியாத புதிர்..." 


தோனியின் ஸ்பெஷல் ஹெலிகாப்டர் ஷாட்டை, அவரைப் போலவே அடித்துள்ளீர்கள்... அது எப்படி சாத்தியமானது?
"ஓஓ... அது ஒரு நீண்ட நெடிய போராட்டம். நான் ஒரு தீவிரமான கிரிக்கெட் ரசிகனாக இருந்தாலும், வீரர்களின் விளையாட்டை அத்தனை உன்னிப்பாக கவனித்ததில்லை. ஹெலிகாப்டர் ஷாட்டிற்காக எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் என் கிரிக்கெட் கோச்சிற்குத் தான் சமர்ப்பணம். ஒரு நாளைக்கு 7 மணிநேரம் என  4 மாதங்கள் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டேன். ஒரு நாளைக்குக் குறைந்தது இருநூறு முறையாவது ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பேன். இரவில் வீட்டிற்குப் போனால், எனக்கு முதுகு இருக்கிறதா என்ற சந்தேகமே வந்துவிடும்!!!" 

Sushant-Singh-Rajput-as-MS-Dhoni-Picture

படம் குறித்து இதுவரை கிடைத்த பாராட்டுக்களிலேயே மறக்க முடியாதது?
"படம் பார்த்து பலர் பாராட்டினாலும்,  அதன் தயாரிப்பின் போதே கிடைத்த இரண்டு பாராட்டுக்கள் முக்கியமானவை. ஒன்று படத்திற்காக நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வீடியோவை தோனியிடம் என் மொபைலில் காட்டினேன். அவர் பொதுவாக எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதிகம் ரியாக்ட் செய்ய மாட்டார். என் வீடியோவைப் பார்த்த போது ஒரு நொடி அவர் புருவம் உயர்ந்தது, சிறிதாகப் புன்னகைத்தார். பின்பு, "மேஜிக் மாதிரி இருக்கு... நான் இங்கிருக்கேன்... அதில் விளையாடுவது யார்?" என்று கேட்டார்!!
"அடுத்தப் பாராட்டும் மறக்கவே முடியாத ஒன்று... நான் பயிற்சி செய்யும் இடத்திற்கு அருகில் அர்ஜுன் என்ற பையனும் பயிற்சியில் இருந்தான். அவரின் அப்பாவும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். நான் பல மாதங்களாக தொடர்ந்து பயிற்சி செய்வதைப் பார்த்து, அர்ஜுனின் அப்பா என் கோச்சிடம் இந்தப் பையன் எந்த டீமைச் சேர்ந்தவன், நன்றாக விளையாடுகிறானே என்று கேட்டுள்ளார். பின்பு, நான் நடிகன் என்பதை என் கோச் சொன்னதும், அவர் என்னை அழைத்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அவர்... சச்சின் தெண்டுல்கர்..."


கேப்டனின் காதல் பக்கங்கள் குறித்து... எங்க தமிழ் சினிமா நடிகை ஒருத்தர் கூட...
சிரித்தபடியே கேள்வியை இடைமறித்து..." தோனி ரொம்ப ரொமாண்டிக்கான ஆள் தான். ஆனால், அது அவரிடம் அதிகம் நெருங்கிப் பழகுபவர்களுக்கு மட்டுமே தெரியும். படத்தில் அவரின் காதல் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன... மற்றதைப் படத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்..." என்றபடியே கைகுலுக்கி நமக்கு விடைகொடுத்தார்.

பேட்டியின் தொடக்கத்தில் அவர் டேபிளில் "ஹாட்"ஆக இருந்த டீ, இப்பொழுது "கூல்" ஆகியிருந்தது. !!!!

 

IMG_0815.jpg

சுஷாந்த் சீக்ரெட்ஸ்:

1. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் (1984 - 1993) கிரண் மோரே தான் சுஷாந்திற்கான கிரிக்கெட் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
2. பாலிவுட்டில் அறிமுகம் ஆவதற்கு முன்பே சுஷாந்தை, இயக்குநர் மணிரத்னம் சென்னைக்கு அழைத்து அவரின் படத்திற்கு ஆடிஷன் செய்துள்ளார். ஆனால், அவர் தேர்வு செய்யப்படவில்லை.
3. பிஹார் மாநிலத்தின் பாட்னாவில் பிறந்து, எஞ்சினியரிங் படிப்பைப் பாதியில் நிறுத்தி... தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், சீரியல் என பல தடைகளைக் கடந்து இன்று தோனியாக அவர் நடித்துள்ளார். 
4. தோனிக்கு மிகவும் பிடித்தது பழைய யமஹா ஆர்.டி. பைக் தான் . டெல்லியில் தோனியும், சுஷாந்தும் ஆளுக்கொரு ஆர்.டியில் சுற்றிக் கொண்டிருந்தனராம். பின்பு, ரசிகர்கள் கண்டுபிடித்து கூட்டம் நெருக்கி அடிக்க... ரீல் தோனியும், ரியல் தோனியும் அங்கிருந்து தெறித்திருக்கிறார்கள். 
5. கதை உரிமைக்கு தோனிக்கு கொடுக்கப்பட்ட தொகையோடு சேர்த்து படத்தின் பட்ஜெட் 80 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/69054-sushant-singh-rajput---ms-dhoni-the-untold-story.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.