Jump to content

சாவல்களை எதிர்கொள்ளும் இருதரப்புக்கள்


Recommended Posts

 
showImageInStory?imageid=298797:mr
 
 
 
showImageInStory?imageid=298795:tn
 
showImageInStory?imageid=298796:tn
 

 

 

 

அர­சியல் சாச­னத்தில் உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்ள அதி­கா­ரப்­ப­கிர்வு சம்­பந்­த­மாக பல்­வேறு ஆய்­வு­க­ளையும் கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் முக்­கிய சந்­திப்­புக்­க­ளையும் இவ்­வாரம் தொடர்ந்து அடுத்த வாரமும் மேற்­கொள்­ள­வுள்ளோம் என்ற தக­வலைத் தெரி­வித்­தி­ருந்தார் எதிர்க்­கட்சித் தலை­வ­ரான இரா.சம்­பந்தன்.

ஒக்­டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்­களும் இலங்கை அர­சியல் வர­லாற்றில் முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு அர­சியல் பரு­வ­கா­ல­மாக இருக்கப் போகி­றது என்­பதை அவர் கூறிய தக­வல்­க­ளி­லி­ருந்து தெரிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகி­ய­வற்றின் முடி­வு­களும் அதனைத் தொடர்ந்து ஏற்­பட்ட ஆட்சி மாற்­றங்­களை பின்­ன­ணி­யாகக் கொண்டு இரா.சம்­பந்தன் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு வாக்­கு­று­தியை நல்­கி­யி­ருந்தார். 2016 ஆம் ஆண்­டுக்கு முன் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை பெற்றே தீருவோம். தவறும் பட்­சத்தில் வர­லாற்றில் எந்­த­வொரு சூழ்­நி­லை­யிலும் அதைப் பெறு­வது என்­பது நினைத்துப் பார்க்க முடி­யாத காரி­ய­மாகப் போய் விடு­மென அடித்து, உறு­தி­ப­டவும் கூறி­யி­ருந்தார். தீர்க்க தரி­ச­னத்­து­டனும் பேசி­யி­ருந்தார்.

அர­சியல் தீர்வை இலங்கை அர­சாங்கம் விரைவில் முன்­வைக்க வேண்டும். கால­தா­ம­தத்தை தவிர்த்துக் கொள்­ள­வேண்டும். ஏமாற்றுப் போக்­குக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டு­மெ­னவும், எச்­ச­ரித்­தி­ருந்தார். சம்­பந்தன் இவ்­வ­ர­சாங்­கத்தின் மீதும், அதற்கு தலைமை தாங்கும் தலை­வர்கள் மீதும் கொண்­டி­ருக்கும் ஆழ­மான நம்­பிக்­கைகள், இவ்­வா­றான உத்­த­ர­வா­தங்­களை தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கி­ய­தற்கு அடி­பூண்ட கார­ணங்­க­ளாக இருக்­கலாம்.

நயம், பயம் என்ற யுக்­தி­க­ளுக்கு அமைய சில சந்­தர்ப்­பங்­களில் தலைவர் சம்­பந்தன் அர­சாங்­கத்தை எச்­ச­ரித்த போக்­கு­களும் இடை­யி­டையே இடம்­பெற்­றுள்­ளன.

தமிழ் மக்­க­ளு­டைய நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண­வேண்­டு­மென்ற புதிய அர­சாங்­கத்தின் அர்ப்­ப­ணிப்­பான நோக்கம் இரா.சம்­பந்­த­னு­டைய இடை­ய­றாத ஜன­நா­ய­கமும் தார்­மீ­கமும் கலந்த முயற்­சிகள். இத்­துடன் சர்­வ­தேச அளவில் இலங்கை அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­படும் மறை­முக அழுத்­தங்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு அர­சியல் தீர்­வொன்றை முன்­வைக்க வேண்­டிய கட்­டாய நிலைக்குத் தள்ளிக் கொண்­டு­வந்து விட்­டி­ருக்­கி­றது.

இதன் முறை­சார்ந்த உபா­ய­மா­கவே அர­சியல் சாசன உரு­வாக்க முயற்­சி­க­ளாகும் எந்­த­வொரு உரி­மை­க­ளையும் சாசன வடிவில் பெறு­வதன் மூலமே, நிலை­யான நீடித்த, நீடித்து நிற்கக் கூடிய பெறு­மானம் கொண்­ட­வை­யாக இருக்க முடி­யு­மென்­பது சம்­பந்­தனின் நம்­பிக்­கை­யா­கவும் இருக்­கி­றது.

இவற்­றுக்­கான முயற்­சி­க­ளா­கவே அர­சியல் சாசன உரு­வாக்கம் தீவி­ரப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. சாசன உரு­வாக்கம் விரை­வுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு அரச தரப்பில் பல கார­ணங்கள் பின்­ன­ணி­யாக இருக்­கலாம். அதே­வேளை தீர்வு விரைவு பெற வேண்­டு­மென்ற கோரிக்­கையை, த.தே.கூட்­ட­மைப்பும் மற்றும் தமிழ்த்­த­ரப்­பி­னரும் முன் வைப்­ப­தற்கு அவர்­களின் பின்­பு­லத்தில் வேறு கார­ணிகள் இருக்­கலாம்.

இவ்­வ­ருட இறு­திக்குள், அர­சியல் சாசனம் கொண்­டு­வ­ரப்­படும் என்ற உத்­த­ர­வாதம் சார்ந்த விட­யத்தில் பல விமர்­ச­னங்­களும், கண்­ட­னங்­களும் அதி­ருப்­தி­களும் நக்கல் நயங்­களும் முன்­வைக்­கப்­பட்டு வரு­வதை நாளாந்தம் கேட்டுக் கொண்­டி­ருக்­கிறோம். பொது­வா­கவே ஒரு தலை­மைத்­து­வத்தின் கீழ் கருத்­தியல் ரீதி­யா­கவோ, கொள்கை ரீதி­யா­கவோ, அணு­கு­முறை சார்ந்தோ அல்­லது அக் குறிக்­கோளை நோக்கி முன்­னே­று­வ­தற்கோ நாம் ஒன்­று­பட்­ட­வர்­க­ளாக எப்­பொ­ழுதும் இருந்­த­தில்­லை­யென்­பதை பல்­வேறு வர­லாற்றுப் பட்­ட­யங்கள் எமக்கு நிரூ­பித்­துக்­காட்­டி­யுள்­ளன.

சுதந்­தி­ரத்­துக்குப் பின் உள்ள காலத்தில் கட்­சி­களை உரு­வாக்­கு­வ­திலும் சரி, பின்னே ஈழப்போர் நிகழ்ந்த காலத்­திலும் கூட, இந்த குணாம்­சங்­களைக் கண்­டி­ருக்­கிறோம். முள்­ளி­வாய்க்கால் முடி­வு­களின் பின்பும் கூட, நாம் கற்றுக் கொண்ட பாடங்­களை மறந்து விட்டோம்.

இப்­பொ­ழுது உள்ள தேவை. போரோ, ஆயு­தமோ, மோதல்­களோ, முரண்­பா­டு­களோ அல்ல. இனத்­துவம் சார்ந்த ஒற்­று­மை­யொன்றின் மூலமே எமது இலக்கை, அடைய முடியும். தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்குத் தீர்­வைக்­காண முடியும் என்­பது மிகக் கவ­ன­மாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­ற­போதும் அவை கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாத குழப்ப நிலையே காணப்­ப­டு­கி­றது.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைக் காணும் பட்­ட­ய­மாக புதிய அர­சியல் சாசனம் எதிர்­பார்க்­கப்­ப­டு­வது ஒரு ­பு­ற­மா­கவும் கூறப்­பட்­டு­வ­ரு­வது மறு­பு­ற­மா­கவும் இருக்­கின்ற நிலையில் இச்­சா­ச­னத்தை உரு­வாக்கம் செய்­வ­திலும் அதை நடை­மு­றைக்கு கொண்டு வரு­வ­திலும் அரச தரப்­பினர் எதிர்­கொள்ளும் சவால்கள் ஒரு­வி­த­மா­கவும் தமிழ்த்­த­ரப்­பினர் முகங்­கொ­டுக்­க­வுள்ள பிரச்­சி­னைகள் வேறு வேறு வித­மா­கவும் காணப்­ப­டு­கி­ன்றன.

அர­சாங்­க­மா­னது அர­சியல் சாச­ன­மொன்றை உரு­வாக்கி தமி­ழீ­ழத்­துக்­கான ஆட்சி வழியைத் திறந்து விடப்­போ­கின்­து, ஆயுத பலத்­தினால் பெற­மு­டி­யாத உரி­மையை தமிழ் மக்கள் அர­சியல் சாச­னத்­தி­னூ­டாக பெறும் வழியை இந்த அர­சாங்கம் மேற்­கொண்­டு­வ­ரு­கி­றது, இலங்­கைக்கு எந்­த­வொரு அர­சியல் சாச­னமும் தேவை­யற்­றது, இச்­சா­ச­னத்தை உரு­வாக்­கு­வதன் மூலம் நாட்டை இரு நாடாக்கப் போகி­றார்கள், என இன­வா­தி­களும் பேரி­ன­வாதத் தலை­வர்­களும் தமிழ் விரோத சக்­தி­களும் தீவி­ர­வாத பிர­சாரம் செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள். அண்­மையில் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச இன­வாத நெருப்பை இவ்­வாறு கொட்­டி­யி­ருந்தார்.

யுத்­தத்தின் மூலம் பெறப்­பட முடி­யாத சமஷ்டி வடி­வி­லான ஆட்­சி­மு­றை­மையை புதிய அர­சியல் அமைப்­பி­னூ­டாக, தமி­ழர்கள் பெற முயற்­சிக்­கின்­றார்கள். தமி­ழர்­க­ளுக்­கான பிராந்­திய சமஷ்­டியை விரும்பும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவும் புலம் பெயர் அமைப்­புக்­க­ளுடன் இணைந்து புதிய அர­சியல் அமைப்பை உண்­டாக்கி விட்­டார்கள் என தீவி­ர­மான இன­வாதக் கருத்தை கொட்­டி­யி­ருக்­கிறார்.

இக்­க­ருத்­துக்கள், விஷப் பிர­சா­ரங்கள் சிங்­கள மக்கள் மத்­தியில் விஷ விதைகள் போல் முளைக்க ஆரம்­பித்­துள்­ளன என்ற உண்­மையை, அண்மைக் காலத்தில் உரு­வா­கி­வரும் இன­வாதக் குழுக்கள், அமைப்­புக்கள் மூலம் அறிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கி­றது. என்­னதான் நல்­லாட்சி அர­சாங்கம் நல்­லி­ணக்கம், சமா­தானம், புரிந்­து­ணர்வு என்று கூறி­வந்­தாலும் இந்த இனத்­து­வேச கொம்­பர்­களின் சவால்­க­ளுக்கும் எதிர்ப்­புக்­க­ளுக்கும் எவ்­வாறு தாக்­குப்­பி­டிக்கப் போகின்­றது. தாம் எண்­ணி­யதை எவ்­வாறு அரச தரப்­பினர் சாதித்து காட்டப் போகி­றார்கள் என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்­டி­யுள்­ளது.

இது உள்­நாட்டில் சவா­லான விட­யங்­க­ளாகக் காணப்­ப­டு­கின்ற அதே­வேளை நல்­லாட்சி அர­சாங்கம் சர்­வ­தேச சமூக அள­விலும் தனது நல்­லெண்­ணத்­தையும் எதிர்­பார்ப்­பையும் நிலை­நி­றுத்திக் கொள்­வ­தற்கு பல காரி­யங்­க­ளையும் செயல் முன்­னேற்­றங்­க­ளையும் காட்ட வேண்­டி­யது என்­பது தவிர்க்க முடி­யா­ததே.

ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையின் 33 ஆவது அமர்வு உள்­ளிட்ட நிகழ்­வு­களின் போது பதி­ல­ளிப்­ப­தற்­கான விட­யங்­க­ளாக, காணா­மல்­போனோர் பற்­றிய அலு­வ­லக உரு­வாக்க சட்­ட­மூ­லத்தை பயன்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் அர­சாங்கம் இதற்கு சமாந்­த­ர­மாக அர­சியல் சாசன முன்­னெ­டுப்­புக்கள் தொடர்­பான முன்­னேற்­றங்­க­ளையும் மறை­மு­க­மாக கூறிக்­கொண்­டி­ருக்­கி­றது என்­பது பல்­வே­று­பட்ட சம்­ப­வங்கள் மூலம் எடுத்துக் காட்­டப்­ப­டு­கி­றது.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது அமர்வில் மனித உரி­மை­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னி­கர்கள் எழுத்து மூல அறிக்கை மற்றும் கடந்த மே மாதம் இலங்­கைக்கு கூட்­டாக கள விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்த நீதி­ப­திகள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள், விசேட அறிக்­கை­யா­ளர்கள் ஆகி­யோரின் அறிக்­கைகள் ஆகி­யவை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் 34 ஆவது அமர்வில் வரும் விட­யங்­க­ளுக்கு பதில் அளிப்­ப­தற்­கான கார­ணி­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்ளும் வகையில் உண்மை, நீதி, நல்­லி­ணக்கம் மற்றும் மீள் நிக­ழாமை சட்­ட­மூ­லத்தை மிக விரைவில் கொண்­டு­வ­ரக்­கூ­டிய சாத்­தி­ய­மான நிலையில் இதற்கு இணை­கூட்டும் வகையில் அர­சியல் சாச­னத்­தையும் கொண்­டு­வரும் முயற்­சி­களில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வரு­வதை அவ­தா­னிக்­கலாம்.

இதன் முனைப்­பா­கவே அண்­மையில் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­காக தற்­போ­தைய நிலையில் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முன்­னோக்கி செல்ல வேண்­டு­மென தெரி­வித்­தி­ருந்தார்.

அர­சியல் சூழ்­நி­லை­களின் அடிப்­ப­டையில் அனு­மா­னித்துப் பார்க்­கின்­ற­போது, அர­சியல் சாச­னத்­தி­ருத்தம் ஒன்று கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மென்­பதில் இணைக்­கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக்­கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகி­யன ஒன்­றி­ணைந்து செயற்­பட முனை­கின்­ற­போதும் ஏற்­ப­டக்­கூ­டிய முரண்­பா­டுகள், சவால்கள், எதிர்க்­கா­ர­ணி­களின் விமர்­ச­னங்கள், பிர­சா­ரங்கள் அர­சாங்­கத்­துக்கு தளம்பல் நிலையை உண்டு பண்ணிக் கொண்­டி­ருக்­கி­றது என்­பது ஊகிக்கக் கூடிய ஒரு விட­ய­மா­கவும் இர­க­சி­ய­மா­க­வுமே காணப்­ப­டு­கி­றது.

இனி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, அதற்கு சவால் நிலைப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் ஏனைய தரப்­பினர், இவற்­றுக்கு வெளியே உள்ள சிறு­பான்மைக் கட்­சிகள் குறிப்­பாக தமிழ்­பேசும் மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சிறு­பான்மைக் கட்­சிகள், அர­சியல் தீர்வு விட­யத்தில் எத்­த­கைய உடன்­பா­டு­க­ளுக்கும் இணக்க நிலை­க­ளுக்கும் வர­வேண்­டு­மென்­பதில் பல்­வேறு முரண்­பா­டு­களும் கருத்­தியல் விரி­சல்­களும் காணப்­ப­டு­கின்­றன.

முதலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலை பற்றி சிறிது நோக்­கு­வோ­மாயின் தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்குத் அர­சியல் தீர்­வொன்று கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மாயின் அவர்கள் இரு விட­யங்­களை வலி­யு­றுத்தி வரு­கின்­றார்கள் ஒன்று, சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அர­சியல் தீர்வு, இரண்­டா­வது விடயம் வட­கி­ழக்கு இணைப்பு முறை­யி­லான அதி­காரப் பகிர்வு.

இணைந்த வட­கி­ழக்கில் இறை­மையின் அடிப்­ப­டையில் பகி­ரப்­ப­டு­கின்ற அரச அதி­கா­ரங்­களின் மூல­மான தீர்வு வேண்­மென த.தே.கூ. அமைப்­பா­னது நீண்ட கால­மா­கவே வலி­யு­றுத்தி வரு­கின்­றது. இன்னும் தொலைவில் போய்ப்­பார்ப்­போ­மானால் தந்தை செல்வா காலத்­தி­லி­ருந்து இது முன்­கொண்டு செல்­லப்­ப­டு­கின்ற விட­ய­மாகும்.

சமஷ்­டி­யென்ற சொற்­பி­ர­யோகம் சிங்­கள மக்­களைப் பொறுத்­த­வரை அது ஒரு சிம்ம சொப்­ப­ன­மா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது. விவ­ரிக்­கப்­பட்டும் கொண்­டி­ருக்­கி­றது. நாடு பிள­வு­ப­டு­வ­தற்­கான உபாயம், தமிழ் ஈழம் உரு­வா­கு­வ­தற்­கான திற­வுகோல் என்ற கடு­மை­யான பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இதை முறி­ய­டிப்­ப­தற்­கான உபா­யங்­களை தமிழ்த் தரப்­பினர் குறிப்­பி­டக்­கூ­டிய அள­வுக்கு செய்ய முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்­லை­யென்ற குற்­றச்­சாட்­டுகள் தொடர்ந்து புத்­தி­ஜீ­வி­க­ளாலும் முற்­போக்கு சிந்­தனை கொண்­ட­வர்­க­ளாலும் முன்­வைக்­கப்­பட்டே வரு­கின்­றன.

இது விட­யத்தில் அர­சாங்கத் தரப்­பினர் தம்­மக்­க­ளுக்கோ பேரினச் சமூ­கத்­துக்கோ வேண்­டிய தெளி­வு­ப­டுத்­தல்­களைச் செய்­ய­வில்­லை­யென்­பதும் உண்மை. அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை கழு­வின மீனில் நழு­வின மீன்போல் பாவனை பண்ணப் பார்க்­கின்­றதே தவிர, தெளி­வான, உறு­தி­யான முடி­வு­களை எடுத்து அதை மக்கள் முன் வைப்­ப­தற்கோ, அடித்துக் கூறு­வ­தற்கோ தயக்கம் காட்டி வரு­கின்­றது என்­பது கூட்­ட­மைப்­பினர் அறி­யாத ஒரு ரக­சி­ய­மல்ல.

முப்­பது ஆண்­டு­கால யுத்­தத்தை எதிர்­கொண்டோம். இணக்­கப்­பாட்டு அர­சி­ய­லி­னூ­டாக, நிரந்­தர தீர்வை நோக்கி செல்­வதே எமது நோக்­க­மாக உள்­ளது. அதற்­காக மூவி­னங்­களும் ஏற்­றுக்­கொள்ளும் வகையில் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் கருத்­தொன்றை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இதே­வேளை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அதி­கா­ரப்­ப­கிர்­வுக்குத் தயா­ரா­க­வுள்ளோம். சக­ல­ரையும் ஒன்று இணை­யு­மாறு அறை­கூவல் விடுத்­தி­ருப்­ப­துடன் 13 ஆவது திருத்­தச்­சட்ட அடிப்­ப­டையில் முன்­னோக்கி செல்ல வேண்­டு­மெனக் கூறி­வ­ரு­கிறார். இவற்­றுக்­கி­டை­யே­யுள்ள சூட்­சும நிலைகள் எவ்­வாறு எப்­போது தெளி­வு­ப­டுத்­தப்­ப­டப்­போ­கி­றன என்­பதும் தமி­ழர்கள் இன்னும் புரிந்­து­கொள்­ளாத நிலையே காணப்­ப­டு­கி­றது.

அண்­மையில் சம்­பூரில் ஒரு நிகழ்வில் உரை­யாற்­றிய, எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன். இவ்­வாறு ஒரு கருத்தைக் கூறி­யி­ருந்தார். எவரும் எவ­ரையும் ஏமாற்ற முடி­யாது. யாரும் யாரி­டமும் ஏமா­றப்­போ­வ­தில்லை எவரும் எவ­ரையும் ஏமாற்­று­வதன் மூல­மாக ஒரு திருப்­தி­யான, நியா­ய­மான, நிதா­ன­மான அர­சியல் தீர்வை உரு­வாக்க முடி­யாது.

உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள அர­சியல் தீர்வு சர்­வ­சன வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்டு மக்­களின் ஆணையைப் பெற்­ற­பின்பே அது அமு­லுக்கு வரு­மெனக் கூறி­யி­ருந்தார். இரா.சம்­பந்தன் திறந்த மன­துடன் பகி­ரங்­க­மாக ஜன­நா­யகப் பண்­பு­க­ளுடன் கூறி­யி­ருக்கும் இவ்­வி­ட­ய­மா­னது எந்­த­ள­வுக்கு பேரின சமூகம் ஏற்­றுக்­கொண்டு சாச­னத்­துக்கு பல­மான ஆத­ரவை நல்கப் போகின்­றது என்­பது பற்­றிய சந்­தே­கங்­களும் அபிப்­பி­ரா­யங்­களும் தமிழ் மக்கள் மத்­தியில் உள்­ளூர இருந்து கொண்­டுதான் இருக்­கி­றது.

பாராளுமன்றத்தில் மேற்படி அரசியல் சாசனம் அதிலும் குறிப்பாக அரசியல் தீர்வை உள்ளடக்கமாகக் கொண்ட அரசியல் சாசனமானது அரசாங்கத்தின் தீவிர முயற்சியினால் மூன்றில் இரண்டு பெரும் பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டாலும் மக்கள் ஆணையென்ற சர்வசன வாக்கெடுப்பில் அதன் நிலைமைகள் என்னவாகுமென்பதில் தமிழ் மக்களுக் கும் அவர்கள் சார்ந்த தலைமைகளுக்கும் சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதில் ராஜ தந்திரமான மற்றும் தேசிய நுட்பமான உத்திகளைக் கையாளும் ஆழமான பொறுப்பு கூட்டமைப்பிடமேயுள்ளது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.

வடகிழக்கு இணைப்பு என்ற விவகாரம் இன் றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் தவிர்ந்த ஏனை யோரால் கடுமையாக விமர்சிக்கப்படும் விவகார மாக மாறியுள்ளது. அண்மையில் ஒரு இனம் சார்ந்த அமைப்பினர் இவ்வாறானதொரு துவேஷ அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்கள். வட கிழக்கு இணைக்கப்படுமாயின் காவேரிப் பிரச்சினை யில் தமிழர்களுக்கு நேர்ந்த கதி இலங்கையிலும் இடம்பெறுமென இனத்துவஷேத்தை அந்த மதம் சார்ந்த அமைப்பு கக்கியிருந்தது. இத்தகைய இனத் துவேஷம் சார்ந்த கருத்துக்களைக் கொட்டாமல் அடக்கி வாசிப்பது பொதுவாகவே எல்லா சமூகத் துக்கும் நன்மை தரும் விடயமாகும். கற்றுக் கொண்ட பாடங்களை மீள் நினைப்பு செய்வதன் மூலமே அதையுணர முடியும்.

அண்மையில் ஒரு தமிழ்த் தலைவர் கூறியதுபோல் இவ்வருட இறுதிக்குள் அரசியல் தீர்வொன்று கிடைக்கப் பெறவில்லையாயின் அது இராஜதந்திரத் தோல்வியாகவே அமையுமெனக் கூறியதுபோல் அரசு எதை நோக்கி நகரப் போகிறது என்பதைப் பொறுத்தே நல்லாட்சியின் உத்தம நோக்கை எல்லா இனமக்களும் அனுபவிக்க முடியும்.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=24/09/2016

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.