Jump to content

15 மணித்தியாலம் நீர் வழங்காது அடித்து சித்திரவதை. நீதிமன்றில் குடிநீர் கேட்டு அழுகை

Recommended Posts

15 மணித்தியாலம் நீர் வழங்காது அடித்து சித்திரவதை. நீதிமன்றில் குடிநீர் கேட்டு அழுகை

15 மணித்தியாலம் நீர் வழங்காது அடித்து சித்திரவதை. நீதிமன்றில் குடிநீர் கேட்டு அழுகை:-

லண்டனில் இருந்த வந்த நபர் ஒருவரை 15 மணித்தியாலங்களுக்கு மேலாக அருந்த நீர் வழங்காது , உணவு வழங்காது , மலசல கூடம் செல்ல அனுமதிக்காது பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து தெல்லிப்பளை பொலிசார் தாக்கி , சித்திரவதை பண்ணியதாக , மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பாதிக்கப்பட்ட நபர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில்  , தெல்லிப்பளை பொலிசார் திருட்டு சந்தேகத்தில் கைது செய்தோம் என இரு நபர்களை முற்படுத்தினார்கள்.

அதன் போது அவ்வாறு நீதிமன்றில் முற்படுத்திய நபர் ஒருவர்  தம் மீது பொலிசார் பொய் குற்றசாட்டு சுமத்துகின்றார்கள் தன்னை பொலிசார் அடித்து சித்திரவதை புரிந்தார்கள் என நீதிவானிடம் முறையிட்டார்.

அது தொடர்பில் குறித்த நபர் நீதிவானிடம் முறையிடுகையில் ,

லண்டனில் இருந்து வந்துள்ளேன். நேற்று வியாழக்கிழமை , இரவு அளவெட்டியில் உள்ள நண்பனை சந்திப்பதற்காக எனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றேன்.

அவ்வேளை அம்பனை சந்திக்கு அருகில் நின்ற தெல்லிப்பளை பொலிசார் எம்மை மறித்து மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் அனுமதி பத்திரம் , காப்புறுதி பத்திரம் , வரி பத்திரம் ஆகியவறை கேட்டனர்.

அதன் போது தம்பி அவற்றை எடுத்து வரவில்லை மறந்து போய் வீட்டில் விட்டு விட்டு வந்து இருந்தார். அவ்வேளை நான் நிற்கிறேன் தம்பி சென்று அவற்றை எடுத்து வரட்டும் என பொலிசாரிடம் கூறினேன்.  அதற்கு பொலிசார் மறுப்பு தெரிவித்தனர்.

அவ்வேளை தம்பி தனது நண்பர் ஒருவருக்கு தொலை பேசி மூலம் அறிவித்து வீட்டில் இருக்கும் தனது பேர்ஸ்ஸ எடுத்து வருமாறு கூறினார். அந்த நண்பர் அவற்றை எடுத்து வருவதற்கு முன்னர். பொலிசார் எம்மை தூசணத்தால் ஏசினார்கள். உடனே நான் தூசணத்தால் நீங்க பேச முடியாது எதற்காக எங்களை பேசுறீங்க என கேட்டேன்.

அதற்கு பொலிசார் அந்த இடத்தில் வைத்து எம் மீது தாக்குதல் மேற்கொண்டனர். அத்துடன் எம்மை கைது செய்து தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு இரவு 8.25 மணிக்கு கொண்டு சென்றனர்.

பொலிஸ் நிலையத்த்தில் எனக்கு கைவிலங்கு பூட்டி முழங்காலில் என்னை உட்கார வைத்து கை கால்களால் என்னை கடுமையாக தாக்கினார்கள். அதில் ஒரு கட்டத்தில் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் துடித்தேன். என்னை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லுமாறு கதறி அழுதேன்.

அதனை அடுத்து என்னை தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு அழைத்து சென்றனர். அவ்வேளை வைத்தியர் தாக்கினார்களா  என கேட்டால் இல்லை என கூற வேண்டும் என மிரட்டியே என்னை அழைத்து சென்றனர்.

அங்கு வைத்தியர் என்னை பரிசோதித்து விட்டு உடலில் உள்ள காயங்களை கண்டு என்னுடன் தனியாக பேச வேண்டும் என கோரினார்.  அதற்கு பொலிசார் மறுப்பு தெரிவித்து, இவரின் உடலில் காயங்கள் இல்லை என மருத்துவ அறிக்கை தாறுமாறு வைத்தியரிடம் கோரினார்கள்.

அவ்வாறு மருத்துவ அறிக்கை தர முடியாது என வைத்தியர் மறுப்பு தெரிவித்தார். அதனை அடுத்து தாம் யாழ்.போதனா வைத்திய சாலையில் என்னை அனுமதிக்க போறோம் என கூறி பொலிசார் தெல்லிப்பளை வைத்திய சாலையில் இருந்து என்னை அழைத்து சென்றனர்.

வைத்திய சாலையில் இருந்து அழைத்து வந்து தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் அறை ஒன்றினுள் என்னை தடுத்து வைத்தனர். அதன் போது அருந்துவதற்கு நீர் கேட்டேன் தர மறுத்து விட்டார்கள்.

பின்னர் இரவு மீண்டும் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதன் போது நான் வீட்டில் இருந்து மருந்து எடுக்கணும் வீட்டாருக்கு அறிவியுங்கள் என பொலிசாரிடம் கோரினேன். அதற்கு மறுப்பு தெரிவித்து குளிசை ஒன்று தந்து இதனை போடுமாறு மிரட்டினர்.

நான் அந்த குளிசையை போட்டதும் எனக்கு சத்தி வர தொடங்கியது. சத்தி எடுக்க வெளியில் அழைத்து செல்லுமாறு பொலிசாரிடம் கோரிய போது அதற்கும் மறுப்பு தெரிவித்தனர். அதனால் அந்த அறையினுள்ளே சத்தி எடுத்தேன்.

இரவு முழுவதும் அறை முழுவது சத்தி எடுத்தேன். நான் எடுத்த சத்திக்கு மத்தியிலையே படுத்து தூங்கினேன்.

பின்னர் மதியம் என்னையும் தம்பியையும் அழைத்து , இங்கு நடந்த எது பற்றியும் நீதிமன்றில் எதுவும் கூற கூடாது , அவ்வாறு கூறாது விட்டால் இன்றைய தினமே உங்களை பிணையில் செல்ல அனுமதிப்போம். இல்லை எனில் சிறைக்கு அனுப்புவோம் என மிரட்டினார்கள்.

பின்னர் சிங்களத்தில் எழுதிய கடிதம் ஒன்றில் என்னை கையொப்பம் இட சொன்னார்கள். நான் மறுத்த போது என்னை மிரட்டினார்கள். அதனால் நான் "என்னை பொலிசார் சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்".  என ஆங்கிலத்தில் தொடுத்து எழுதினேன். அதனை பொலிசார் எனது கையொப்பம் என நினைத்து எம்மை நீதிமன்றுக்கு அழைத்து வந்துள்ளனர்.

அழைத்து வரும் போதும் ,பொலிஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் எது பற்றியும் நீதிமன்றில் எதுவும் கூற கூடாது என மிரட்டினார்கள். தன் மீது  தாக்குதல் மேற்கொண்டவர்களில் தமிழ் பொலிசாரான நக்கீரன் என்பவரும் , 88141 எனும் பொலிஸ் இலக்கம் உடைய பொலிசாருமே  என நீதிவானிடம் முறையிட்டார்.

குடிக்க நீர் கேட்டு மன்றில் அழுகை.

தனக்கு பொலிசார் 15 மணித்தியாலங்களாக அருந்த நீர் தராதமையால் , தான் மிகுத்த தாகத்தில் உள்ளதாகவும் தனக்கு தண்ணீர் தருமாறும் பாதிக்கப்பட்ட நபர் கண்ணீருடன் நீதிவானிடம் கோரிக்கை விடுத்தார்.

அதனை அடுத்து அந்த நபருக்கு நீர் வழங்கபட்ட போது திறந்த மன்றில் பெருமளவான நீரினை அருந்திக் கொண்டார்.

உடலில் காயங்கள்.

பொலிசார் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த நபரின் கண்கள் சிவந்து வீக்கத்துடன் காணப்பட்டது. அத்துடன் டொச்லைட்டால் அடித்து பிடரியில் வீக்கம் காணப்பட்டது. அதேவளை தாக்குதலுக்கு இலக்கான நபரால் நிற்க முடியாதது கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

வைத்திய பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு.

தாக்குதலுக்கு இலக்கான நபரை தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு சென்று சிக்கிச்சை பெறுமாறும் , குறித்த நபரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் பணித்தார்.

குற்றசாட்டில் இருந்து விடுவிப்பு.

குறித்த இரு நபர்களையும் தெல்லிப்பளை பொலிசார் திருட்டு சந்தேக நபர்கள் என்றே நீதிமன்றில் முற்படுத்தினர். தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அந்நிலையில் நேற்றைய தினம் இவர்கள் இருவரும் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியாமையால் இவர்களை திருட்டு சந்தேகத்தில் கைது செய்து இருந்தோம் என தெரிவித்து இருந்தனர்.

அதனை அடுத்து நீதிவான் இவர்கள் இருவரையும் பார்க்கும் போது திருட்டு சந்தேக நபர்கள் எனும் சந்தேகம் ஏற்படாததால் , இவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கின்றேன் என நீதிவான் கட்டளை பிறப்பித்தார். 

வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விசாரணைக்கு உத்தரவு.

இந்த சம்பவம் தொடர்பில் , உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண பிரதி ;பொலிஸ் மா அதிபருக்கு நீதிவான் உத்தரவு இட்டார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136271/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம் யாழில் தொடர்கிறது.
பாதிக்கப்பட்டவர் 1 கோடிவரை நட்டஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும்.
நல்லாட்சி அரச பயங்கரவாதத்தின் சுயரூபம் மேலும் மேலும் வெளிவருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ, இவர், பிரிட்டிஸ் போலீசோட, எஙகளில் தவறு இவ்லை என்ற நிலையில், விடுற கிரந்தம் விட்டிருப்பார் போல கிடக்குது.

இவர் இலங்கை இரட்டைக் குடியுரிமை இல்லா பிரித்தானியப் பிரசையாயின், பிரித்தானிய தூதரக உதவியுடன் பொலீஸ் தலைமையகம் போவதே நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம் யாழில் தொடர்கிறது.
பாதிக்கப்பட்டவர் 1 கோடிவரை நட்டஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும்.
நல்லாட்சி அரச பயங்கரவாதத்தின் சுயரூபம் மேலும் மேலும் வெளிவருகிறது.

சும்மா எடுத்துக்கு எல்லாம் இனவாதம் பேசத் தேவை இல்லை. 

போலீஸ் என்பது ஒரு மனிதாபிமானம் இல்லா, அதிகாரம் மிக்க பதவி நிலை.

தென் இலங்கையில் மிக மோசமான மனித உரிமைகள் நிகழ்துள்ளன.

இந்தியாவில், தமிழகத்தில் பல மீறல்கள் நிகழ்கின்றன.

இவருக்கு நடந்தது சும்மா ஜுஜுபி ரகம்.

துஸ்ட்டனை கண்டால் தூர விலகு என்பது போல, இவர்களுடன் தேவை இல்லா கதை வழிக்கு போகாமல் அமைதியாக, போய் விட வேண்டும் 

நல்லா வேண்டிக் கட்டுற அளவுக்கு வாய் அடிச்சிருக்கிறார் லண்டன்காரர் என்று தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம் யாழில் தொடர்கிறது.
பாதிக்கப்பட்டவர் 1 கோடிவரை நட்டஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும்.
நல்லாட்சி அரச பயங்கரவாதத்தின் சுயரூபம் மேலும் மேலும் வெளிவருகிறது.

போல் அண்ணே,  அடிச்சவரில்  ஒருவர் தமிழ் பொலிஸ்  எண்டதையும் கவணத்தில் எடுங்கோtw_blush:.  உங்கட  விசுவாசத்துக்கு. அளவே இல்லையா

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

சும்மா எடுத்துக்கு எல்லாம் இனவாதம் பேசத் தேவை இல்லை. 

போலீஸ் என்பது ஒரு மனிதாபிமானம் இல்லா, அதிகாரம் மிக்க பதவி நிலை.

தென் இலங்கையில் மிக மோசமான மனித உரிமைகள் நிகழ்துள்ளன.

இந்தியாவில், தமிழகத்தில் பல மீறல்கள் நிகழ்கின்றன.

இவருக்கு நடந்தது சும்மா ஜுஜுபி ரகம்.

துஸ்ட்டனை கண்டால் தூர விலகு என்பது போல, இவர்களுடன் தேவை இல்லா கதை வழிக்கு போகாமல் அமைதியாக, போய் விட வேண்டும் 

நல்லா வேண்டிக் கட்டுற அளவுக்கு வாய் அடிச்சிருக்கிறார் லண்டன்காரர் என்று தெரிகிறது.

இது இனவாதம் இல்லை.
சிங்கள-பௌத்த இனவாதிகளிடம் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்திடம் இருந்து எமது இனத்தை பாதுகாக்கும் முயற்சி. 

துஷ்டர்களுக்கு எமது மண்ணில் இடமில்லை!
நீதிமன்றமே பொலிஸாரின் அராஜகத்தை அறிந்து அவரை விடுதலை செய்த நிலையில்,
மேலதிக விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில்,
நீதிக்கு போராடாமல்,
நீதி கேட்ட ஒரு வீரமகனிடம் குறைகாணும் கேவலமான புத்தியுள்ளவர்கள் சிலர் எம்மத்தியில் இன்னமும் உண்டு!!! 

42 minutes ago, நந்தன் said:

போல் அண்ணே,  அடிச்சவரில்  ஒருவர் தமிழ் பொலிஸ்  எண்டதையும் கவணத்தில் எடுங்கோtw_blush:.  உங்கட  விசுவாசத்துக்கு. அளவே இல்லையா

பொய் சொல்லி உண்மையை மறைக்க முயலும் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் மீதான உங்கள் விசுவாசம் உலகறிந்ததே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

இது இனவாதம் இல்லை.
சிங்கள-பௌத்த இனவாதிகளிடம் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்திடம் இருந்து எமது இனத்தை பாதுகாக்கும் முயற்சி. 

துஷ்டர்களுக்கு எமது மண்ணில் இடமில்லை!
நீதிமன்றமே பொலிஸாரின் அராஜகத்தை அறிந்து அவரை விடுதலை செய்த நிலையில்,
மேலதிக விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில்,
நீதிக்கு போராடாமல்,
நீதி கேட்ட ஒரு வீரமகனிடம் குறைகாணும் கேவலமான புத்தியுள்ளவர்கள் சிலர் எம்மத்தியில் இன்னமும் உண்டு!!! 

பொய் சொல்லி உண்மையை மறைக்க முயலும் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் மீதான உங்கள் விசுவாசம் உலகறிந்ததே.

ஐ  கண்டுபிடிச்சிட்டாரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தன் said:

ஐ  கண்டுபிடிச்சிட்டாரு

ஏனையா

ஏனையா இப்படி????tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம் யாழில் தொடர்கிறது.
பாதிக்கப்பட்டவர் 1 கோடிவரை நட்டஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும்.
நல்லாட்சி அரச பயங்கரவாதத்தின் சுயரூபம் மேலும் மேலும் வெளிவருகிறது.

இவருக்கு எதை எடுத்தாலும் இனவாதம் ஒன்று மட்டும் தெரிந்தது முதல் பிழை யாரில் அனுமதி பத்திரம் (Drivi. Licen,ye.   Li, insu)கொண்டு செல்லாமல் வாகனத்தை வெளியில் கொண்டு வந்து ஓடியது தவறு 

ஆனால் அந்த பொலிஸார் அவருக்கு அடித்தது குற்றமே அதுவும் தமிழ் பொலிஸார் என்றால் சந்தேகமாக இருக்கிறது விசாரித்த பின்னர் தான் தெரியவரும்

கனபேர் வெளியில் இருந்து வந்தவர்கள் அனுமதி பத்திரம் இன்றி (இலங்கை ) வாகனங்கள் ஓடுகிறார்கள் கேட்டால் காசைக்கொடுத்து சமாளிக்கலாம் என்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, முனிவர் ஜீ said:

கனபேர் வெளியில் இருந்து வந்தவர்கள் அனுமதி பத்திரம் இன்றி (இலங்கை ) வாகனங்கள் ஓடுகிறார்கள் கேட்டால் காசைக்கொடுத்து சமாளிக்கலாம் என்கிறார்கள்

புலம் பெயர் தேசத்தில் இதெல்லாம் சரிவராது

எனவே இதற்கெல்லாம் காசை கொடுப்பார்களா??

அனுமதிப்பத்திரத்தை வேண்டுமென்றே விட்டுவிட்டு சென்று விட்டு எதற்காக பணம் கொடுத்த சமாளிக்கணும்?

இவர்கள் புலம் பெயர் தெசங்களில் எதை படித்தார்கள்?

எதை கடைப்பிடிக்கிறார்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லைசென்சும் இல்லாமல் காசையும் கொடாமல்
ஐ புறம் லண்டன். லண்டன் போலீஸ் நைஸ் போலீஸ். நோ டச்சிங்... ஒன்லி டாக்கிங் என்று எங்கண்ட ஆள் நாலு விடுகை விட்டு தண்ணி, வெண்ணி இல்லாமல் கிடந்திருக்கிறார்...tw_confused:

Link to comment
Share on other sites

இடம், பொருள் ஏவல் அறிந்து போகிற இடங்களுக்கு ஏற்றமாதிரி நடந்துகொண்டால் அடி பின்னமாட்டார்கள்..! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

லைசென்சும் இல்லாமல் காசையும் கொடாமல்
ஐ புறம் லண்டன். லண்டன் போலீஸ் நைஸ் போலீஸ். நோ டச்சிங்... ஒன்லி டாக்கிங் என்று எங்கண்ட ஆள் நாலு விடுகை விட்டு தண்ணி, வெண்ணி இல்லாமல் கிடந்திருக்கிறார்...tw_confused:

அப்படியும் சொல்லமுடியாது நாதா..

நான் சில நாடுகளுக்கு செல்ல விரும்புவதில்லை (இந்தியா உட்பட)

எனக்கு சரிவராது

பிரான்சிலிருந்து பழகிவிட்டதால்

சில பழக்கங்கள் தொற்றிவிட்டன

அவை அதிகம் என்று தெரிந்தாலும் எற்றுக்கொள்ளமுடிவதில்லை

இது பற்றி வேறு  ஒரு திரி திறந்து  பேசலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை என்னவென்றால் வெளிநாட்டில் இருந்து செல்லும் பலர் பெரிய பிலிம் காட்டுறது.அதால வெளியிலிருந்து போறவர்களில் சில தரப்புக்கு கடும் கடுப்பு.இப்படித்தான் நான் ஒரு அலுவலகத்தில் அனுமதி ஒன்று எடுக்க வேண்டி இரந்தது.அங்கு போகமுன் தொலை பேசியில் கதைத்த போது வலு அமைதியாகவும் பண்பாகவும் கதைத்த அந்த உத்தியோகத்தர் நேரில் கண்டவுடன் அடிக்காத குறையாக அவமதித்து அனுமதி தராமல் துரத்தினார்.இத்தனைக்கும் நான் போனது சர்வசாதாரனமாக.அத்துடன் என்னிடம் அனுமதி எடுப்பதக்குத் தேவையான சகலுதும் இருந்தது.இன்னொரு முறை பேருந்தில் மாறி ஏறிவிட்டேன்.வாசிக்கத்தெரியாதவன் எல்லாம் ஏன்டா பஸ்சில் ஏறுகறிங்கள் என்டு சொல்லி இறக்கி விட்டுட்டான்.:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது என்பதற்கப்பால் பொலிஸ் சட்டத்தை தன் எடுத்தது பிழை.

ஆசிரியரே மாணவனை தாக்க முடியாது என்று மேலதிக நீதவான் கூறும் போது பொலிஸ் பொது மகனை எப்படி தாக்க முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன நடந்தது என்பதற்கப்பால் பொலிஸ் சட்டத்தை தன் எடுத்தது பிழை.

ஆசிரியரே மாணவனை தாக்க முடியாது என்று மேலதிக நீதவான் கூறும் போது பொலிஸ் பொது மகனை எப்படி தாக்க முடியும்?

:grin:

நாங்க சிறிலங்கா பொலீசப் பத்தி தான் கதைக்கிறம்.....

நீங்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

:grin:

நாங்க சிறிலங்கா பொலீசப் பத்தி தான் கதைக்கிறம்.....

நீங்கள் ?

முனி நீங்கள் சொல்வது சரி ஆனால் இந்த நிலைமை மாற வேண்டும்.

Link to comment
Share on other sites

1 hour ago, சுவைப்பிரியன் said:

பிரச்சனை என்னவென்றால் வெளிநாட்டில் இருந்து செல்லும் பலர் பெரிய பிலிம் காட்டுறது.அதால வெளியிலிருந்து போறவர்களில் சில தரப்புக்கு கடும் கடுப்பு.இப்படித்தான் நான் ஒரு அலுவலகத்தில் அனுமதி ஒன்று எடுக்க வேண்டி இரந்தது.அங்கு போகமுன் தொலை பேசியில் கதைத்த போது வலு அமைதியாகவும் பண்பாகவும் கதைத்த அந்த உத்தியோகத்தர் நேரில் கண்டவுடன் அடிக்காத குறையாக அவமதித்து அனுமதி தராமல் துரத்தினார்.இத்தனைக்கும் நான் போனது சர்வசாதாரனமாக.அத்துடன் என்னிடம் அனுமதி எடுப்பதக்குத் தேவையான சகலுதும் இருந்தது.இன்னொரு முறை பேருந்தில் மாறி ஏறிவிட்டேன்.வாசிக்கத்தெரியாதவன் எல்லாம் ஏன்டா பஸ்சில் ஏறுகறிங்கள் என்டு சொல்லி இறக்கி விட்டுட்டான்.:unsure:

இதைப் படித்ததும் சுவைப்பிரியன் பேச்சு வாங்கினதையும் மறந்து சிரிப்புதான் வந்தது.. :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

புலம் பெயர் தேசத்தில் இதெல்லாம் சரிவராது

எனவே இதற்கெல்லாம் காசை கொடுப்பார்களா??

அனுமதிப்பத்திரத்தை வேண்டுமென்றே விட்டுவிட்டு சென்று விட்டு எதற்காக பணம் கொடுத்த சமாளிக்கணும்?

இவர்கள் புலம் பெயர் தெசங்களில் எதை படித்தார்கள்?

எதை கடைப்பிடிக்கிறார்கள்???

அதாவது அண்ண விடுமுறையில் நாட்டுக்கு வருபவர்களையே சொல்ல வந்தேன்(ஒருசிலர்) அவர்களுக்கு அவர்கள் இருக்கும் நாட்டு லைசனுசனும் இல்லை இலங்கை லைசனும் இல்லை ஆனால் ஒட்டிக்கொண்டு ஒருத்தன் இருப்பான் அவனும் ஒரு காரணம் . அவர்களை வாகனத்தை செலுத்த சொல்வது பேந்து முட்டி மோதினால் ஆயிரம் லட்சம் கணக்கில் செலவுகள் 

2 hours ago, Nathamuni said:

லைசென்சும் இல்லாமல் காசையும் கொடாமல்
ஐ புறம் லண்டன். லண்டன் போலீஸ் நைஸ் போலீஸ். நோ டச்சிங்... ஒன்லி டாக்கிங் என்று எங்கண்ட ஆள் நாலு விடுகை விட்டு தண்ணி, வெண்ணி இல்லாமல் கிடந்திருக்கிறார்...tw_confused:

............. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மூடவேண்டியதை மூடிக்கொண்டிருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, MEERA said:

 மூடவேண்டியதை மூடிக்கொண்டிருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை

11 hours ago, நவீனன் said:

15 மணித்தியாலம் நீர் வழங்காது அடித்து சித்திரவதை. நீதிமன்றில் குடிநீர் கேட்டு அழுகை

15 மணித்தியாலம் நீர் வழங்காது அடித்து சித்திரவதை. நீதிமன்றில் குடிநீர் கேட்டு அழுகை:-

அதன் போது தம்பி அவற்றை எடுத்து வரவில்லை மறந்து போய் வீட்டில் விட்டு விட்டு வந்து இருந்தார். அவ்வேளை நான் நிற்கிறேன் தம்பி சென்று அவற்றை எடுத்து வரட்டும் என பொலிசாரிடம் கூறினேன்.  அதற்கு பொலிசார் மறுப்பு தெரிவித்தனர்.

அவ்வேளை தம்பி தனது நண்பர் ஒருவருக்கு தொலை பேசி மூலம் அறிவித்து வீட்டில் இருக்கும் தனது பேர்ஸ்ஸ எடுத்து வருமாறு கூறினார். அந்த நண்பர் அவற்றை எடுத்து வருவதற்கு முன்னர். பொலிசார் எம்மை தூசணத்தால் ஏசினார்கள். உடனே நான் தூசணத்தால் நீங்க பேச முடியாது எதற்காக எங்களை பேசுறீங்க என கேட்டேன்.

அதற்கு பொலிசார் அந்த இடத்தில் வைத்து எம் மீது தாக்குதல் மேற்கொண்டனர்

சரியாகத்தானே அவர் பேசுகின்றார்

சட்டத்துக்கு முரணாகவோ

அடம்பிடித்தோ

தான் தப்பித்துக்கொள்ள லஞ்சம் கொடுத்தோ முயலவில்லையே...?

அப்பறம் எப்படி  காவல்த்துறையின் இந்த சட்டமுரணான

அடாவடித்தனங்களை மறைமுகமாக நாம் ஆதரிக்கின்றோம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு புலம்பெயர் தேசத்தில் தூசணத்தால் ஒருவரையும் பேசுவது இல்லையா? 

அந்த நேரத்தில் பொலிசார் தூசணத்தால் பேசியபோது பேசாமல் இருந்திருக்க வேண்டும். 

சிறீலங்காவில் பொலிசாரின் சட்டமுரணான செயற்பாடுகளும் அடாவடித்தனங்களும் வழமை. இதை எதிர்க்க வெளிக்கிட்டால் இழப்பு எமக்கே.

கொலிடேக்கு போனமாம் வந்தமாம் என்று இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

இங்கு புலம்பெயர் தேசத்தில் தூசணத்தால் ஒருவரையும் பேசுவது இல்லையா? 

அந்த நேரத்தில் பொலிசார் தூசணத்தால் பேசியபோது பேசாமல் இருந்திருக்க வேண்டும். 

சிறீலங்காவில் பொலிசாரின் சட்டமுரணான செயற்பாடுகளும் அடாவடித்தனங்களும் வழமை.

இதை எதிர்க்க வெளிக்கிட்டால் இழப்பு எமக்கே.

கொலிடேக்கு போனமாம் வந்தமாம் என்று இருக்க வேண்டும்.

சரியான  வாதமாகப்படவில்லை.....

Link to comment
Share on other sites

12 hours ago, நவீனன் said:

பின்னர் சிங்களத்தில் எழுதிய கடிதம் ஒன்றில் என்னை கையொப்பம் இட சொன்னார்கள். நான் மறுத்த போது என்னை மிரட்டினார்கள். அதனால் நான் "என்னை பொலிசார் சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்".  என ஆங்கிலத்தில் தொடுத்து எழுதினேன். அதனை பொலிசார் எனது கையொப்பம் என நினைத்து எம்மை நீதிமன்றுக்கு அழைத்து வந்துள்ளனர்.

அழைத்து வரும் போதும் ,பொலிஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் எது பற்றியும் நீதிமன்றில் எதுவும் கூற கூடாது என மிரட்டினார்கள். தன் மீது  தாக்குதல் மேற்கொண்டவர்களில் தமிழ் பொலிசாரான நக்கீரன் என்பவரும் , 88141 எனும் பொலிஸ் இலக்கம் உடைய பொலிசாருமே  என நீதிவானிடம் முறையிட்டார்.

மேலே பச்சையில் உள்ளவை பாராட்டப்பட வேண்டிய செயற்பாடுகள். ராஜபக்ஷ காலம் போல என்று இந்த போலிஸ் இன்னமும் நினைத்திருக்க கூடும். நீதிபதிகள் இளம்செழியன் மற்றும் யூட்சென் அரச இயந்திரங்களில் உள்ள குற்றவாளிகளுக்கு பொருத்தமான தீர்ப்புகளை வழங்கியவர்கள். இந்த வழக்கிலும் இதனை எதிர்பார்க்கலாம். இன்றைய அரசு அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தங்கி உள்ள அரசு. இந்த நாடுகள் சட்டத்தை மதிக்கும் அரச நிருவாகத்தை எதிர்பார்க்கிறார்கள். இந்த நாடுகள் இலங்கையில் இருந்து தமது பயனை பெற அரச நிருவாகம் சட்டத்தை மதிக்கும் நிருவாகமாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. 

இந்த லண்டன்வாசி பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர். துணிச்சலும், தன்மானமும், தனது பலம் பற்றிய அறிவும் உள்ளவர். தனது உரிமைகளை போராடி பெறுவது வேதனையானது என்று தெரிந்து இருந்தும் அதனை சாதித்து குற்றவாளிகளான போலிசை கைப்பற்ற உதவி இருக்கிறார். நன்றி நண்பரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Jude said:

அதே...

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.