Jump to content

ஜனாதிபதி வேட்பாளராக வெளியேறியபோது என்னிடம் 1 ரூபா காசு கூட இருக்கவில்லை


Recommended Posts

 

ஜனாதிபதி வேட்பாளராக வெளியேறியபோது  என்னிடம் 1 ரூபா காசு கூட இருக்கவில்லை

 

 

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மலித் ஜய­தி­லக்க எழு­திய "நான் கண்ட ஜன­வரி 08" நூல் வெளியீட்டு விழாவில் உங்­க­ளுடன் இணைந்­து­கொள்ளக் கிடைத்­த­மை­பற்றி மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். ஜன­வரி 08ஆம் திக­தியை அவர் பார்த்த விதத்­தினை மலித் எழு­தி­யுள்ளார். இங்­குள்ள நீங்கள் ஜன­வரி 08ஆம் திக­தியை ஒவ்­வொரு கோணத்தில் பார்த்­தி­ருப்­பீர்கள். சில தினங்­க­ளுக்கு முன்னர் இந்த நூல் எனக்கு கிடைக்­கப்­பெற்­றது. பின்னர் நான் அடிக்­கடி நூலின் உள்­ள­டக்­கத்தை வாசித்தேன்.

எமது நாட்டில் அர­சியல் விமர்­ச­கர்கள், எழுத்­தா­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் உள்­ளனர். அவர்­களுள் ஜன­வரி 08ஆம் திக­தியை யதார்த்­த­மாகப் பார்த்த, அதைப்­பற்றி எழு­திய நூற்றுக் கணக்­கா­னோரில், சரி­யான முறையில் எழு­தியோர் விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய ஒரு சிலரே ஆவர். எழுத முடி­யு­மா­ன­வர்கள் உண்­மையை அறி­வார்கள். பெரும்­பா­லா­னோ­ருக்கு அது­பற்றி தெரியும். ஆயினும் சமூக நீதி, சுதந்­திரம், ஜன­நா­யகம், சட்டம், மனி­தா­பி­மானம், ஊழல், மோசடி ஆகி­ய­ன­பற்றி ஜன­வரி 08ஆம் திக­திக்கு முன்னர் அறிந்­தி­ருந்­த­வர்கள் தான் அறிந்து வைத்­தி­ருந்த உண்­மை­களை எழு­து­வ­தற்கு இய­லாது போன­மை­பற்றி நான் கவ­லை­ய­டை­கிறேன்.

மலித்தின் இந்த நூலை வாசித்­த­வுடன் எழுத முடி­யு­மான தைரி­ய­முள்ள ஒருவர் வெளிக்­கி­ழம்­பி­யுள்ளார் என நான் நினைத்தேன். எழுத முடி­யு­மா­ன­வர்கள் ஏன் எழு­து­வ­தில்லை என நான் அறிவேன். சிலர் எழு­து­வ­தற்கு பயப்­ப­டு­கி­றார்கள். ஒரு­சி­லரின் வாயில் கொழுக்­கட்டை, ஒரு சிலர் போதைப்­பெ­ருட்­களை உண்­ட­வர்கள். ஆகவே ஜன­வரி 08ஆம் திக­தி மாற்றம் பற்றி அறிந்து வைத்­துள்ள உண்­மையை அறிந்த சரி­யா­ன­வற்றை புரிந்து வைத்­துள்ள ஒரு ­சி­லரால் எழு­து­வ­தற்கு முடி­ய­வில்லை. இது­வரை 10 பேருக்கும் குறை­வா­ன­வர்­களே எழு­து­தி­யுள்­ளார்கள். ஒரு சில புத்­த­கங்கள் மாத்­திரம் வெளியா­கி­யுள்­ளன.

ஆயினும் பெரும்­பா­லா­னவை இன்­னமும் மறைந்­துள்­ளது. நீங்கள் உங்கள் அர்ப்­ப­ணிப்­பினை ஜன­வரி 08ஆம் திகதி நூலின் மூலம் வெளிக்­காட்­டி­யமை தொடர்­பாக நான் நன்றி தெரி­விக்­கின்றேன்.

இவ்­வா­றான நூல்­களை தொடர்ந்தும் எழு­து­வ­தற்­கு­ரிய தைரியம், பலம், அதிர்ஷ்டம் உங்­களை வந்­த­டைய வேண்­டு­மென நான் வாழ்த்­து­கிறேன்.

ஜன­வரி 08ஆம் திகதி பற்றி எழு­தப்­பட்ட ஒரு சில விட­யங்­களைப் பார்க்­கின்­ற­போது ஜன­வரி 08ஆம் திக­தியின் உரி­மை­யினை தன­தாக்­கிக்­கொள்­வ­தற்கு எவ்­வ­ளவு தூரம் ஒரு சிலர் முயற்­சிக்­கின்­றார்கள் என எனக்கு எண்ணத் தோன்­று­கி­றது. ஜன­வரி 08 அர­சியல் பிறப்­பா­னது எவ்­வ­ளவு தூரம் ஆழ­மா­னது, எவ்­வ­ளவு தூரம் ஆய்வு செய்­யப்­பட வேண்­டி­யது, என்­பது எவ்­வ­ளவு சிக்கல் நிறைந்­தது என்­ப­தனை பலரும் நன்கு அறி­வார்கள். இவ்­வி­டத்தில் இன்று மாது­ளு­வாவே சோபித்த தேரர் இருந்­தி­ருந்தால் எவ்­வ­ளவு நன்­றாக இருந்­தி­ருக்கும். 78ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பின் மூலம் ஜே.ஆர்.ஜய­வர்­தன அவர்கள் ஜனா­தி­பதி முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்தி 1982ல் நடத்­திய முத­லா­வது ஜனா­தி­பதி தேர்தல் தொடக்கம் 2015 ஜன­வரி 08 திகதி ஜனா­தி­பதி தேர்தல் வரை பொது அபேட்­சகர் ஒரு­வரை முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தற்­கான குரல் இந்த நாட்டில் எழுப்­பப்­பட்டு வந்­தது. இக்­குரல் 2015க்கு முன்னர் இடம்­பெற்ற 5 தேர்­தல்­க­ளிலும் ஒலித்­தது. ஆயினும் நான் அறிந்த வகையில் உண்­மை­யி­லேயே பொது அபேட்­ச­கரை முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தற்­கான குரல் 2015 ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பான அறி­விப்பு வெளியா­கி­ய­வுடன் மாது­ளு­வாவே சோபித்த தேரரின் தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விரி­வான வேலைத்­திட்­டத்தின் ஊடா­கவே செயற்­படத் தொடங்­கி­யது.

இதற்கு முன்னர் இடம்­பெற்ற எந்­த­வொரு ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் பொது அபேட்­சகர் ஒரு­வரை முன்­னி­றுத்­து­வ­தற்கு பொது அபேட்­சகர் பற்றி கதைத்த எவ­ராலும் முடி­ய­வில்லை. ஆக­வேதான் அர­சியல் கட்­சிகள், சிவில் அமைப்­புக்கள், தொழிற்­சங்­கங்கள் உள்­ளிட்ட மொத்தம் 49 அமைப்­புக்கள் கையொப்­ப­மிட்ட இணக்­கப்­பாட்­டிற்கு எனது வாழ்­நாளில் நான் ஒரு­போதும் கண்­டி­ராத மக்­களின் ஆசீர்­வா­தமும் ஆத­ரவும் கிடைக்­கப்­பெற்­றது. 2014 நவம்பர் 21ஆம் திகதி அப்­போது இருந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வெளியே வந்­த­போது, என்­னிடம் ஒரு ரூபாய் காசு­கூட இருக்­க­வில்லை. இதற்கு முன்னர் இடம்­பெற்ற 5 ஜனா­தி­பதித் தேர்­தல்­களை பார்க்­கும்­போது ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­க­ளதும் வேட்­பா­ளர்கள் எவ்­வ­ளவு கால­மாக தேர்­த­லுக்கு தயா­ரா­னார்கள், திட்­ட­மிட்­டார்கள்? நிதி சேக­ரித்­தார்கள்? ஒழுங்­க­மைத்­தார்கள்? ஆயினும் ஜன­வரி 08ஆம் திக­தி மாற்­றத்­திற்­காக அவ்­வா­றான எந்­த­வொன்­றுக்கும் அவ்­வ­ளவு காலம் செல்­ல­வில்லை. நாட்டு மக்­களே அதற்கு தலைமை தாங்­கி­னார்கள். புத்­தி­ஜீ­விகள், இளை­ஞர்கள் உள்­ளிட்ட பொது­மக்­களே தேர்தல் நட­வ­டிக்­கை­களை முகா­மைத்­துவம் செய்­தார்கள். சமூக வலைத்­த­ளங்­களும் ஏனைய அனைத்து ஊட­கங்­களும் கலந்­து­ரை­யா­டல்கள், விவா­தங்கள் மூலம் ஒத்­து­ழைப்பு வழங்­கி­னார்கள். சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­ப­ட­வில்லை, பதா­கைகள் நிறு­வப்­ப­ட­வில்லை.

ஆயினும் நான் அப்­போ­தி­ருந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளியேற முன்னர் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் நான் ஈடு­பட்­ட­மையால் 2013ஆம் ஆண்­டி­லி­ருந்தே எனது பிர­தி­வாதி வேட்­பாளர் தேர்­த­லுக்கு தயா­ரா­னதை நான் அறிவேன். இந்­ந­ட­வ­டிக்­கை­க­ளுக்கும் ஆரம்ப ஏற்­பாட்டு பணி­க­ளுக்கும் குழுக்கள் உரு­வாக்­கப்­பட்­டது. முன்­னைய அர­சாங்­கத்தில் என்­னுடன் பணி­யாற்­றிய அமைச்­சர்கள் இங்கு அமர்ந்­துள்­ளனர். இங்­குள்ள எந்­த­வொரு அமைச்­சரும் அக்­கு­ழுக்­களில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. சுசில் பிரேம ஜயந்த அமைச்சர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் செய­லா­ள­ராக இருந்­த­போது நான் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­லா­ள­ராக இருந்தேன். நம் இரு­வருள் ஒரு­வ­ரேனும் அக்­கு­ழுக்­களில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வி­டத்தில் டி.யு.குண­சே­கர அவர்கள் உள்ளார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் சகோ­தரக் கட்­சி­களைச் சேர்ந்த எந்­த­வொரு தலை­வரோ பிர­தி­நி­தியோ இக்­கு­ழுக்­களில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. இக்­கு­ழுக்­களில் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்­திலும் அதற்கு வெளியிலும் உள்ள உத்­தி­யோ­கத்­தர்கள் இர­க­சி­ய­மான முறையில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். அதன் நட­வ­டிக்­கைகள் மிகவும் இர­க­சி­ய­மான முறை­யி­லேயே நடை­பெற்­றது.

அர­சாங்கம் நடத்­தி­ய­துபோல், அர­சாங்கம் நடத்த முற்­பட்­ட­துபோல் தேர்­த­லையும் அமைச்­சர்­க­ளின்றி நடத்த முற்­பட்­டனர். 2014ஆம் ஆண்டு வரவு – செல­வுத்­திட்­டத்தில் மாவட்ட அபி­வி­ருத்­திக்கு கிடைக்­கப்­பெற்ற ஒதுக்­கீ­டா­னது அதற்கு முன்­னைய ஆண்­டை­விட அதி­க­மா­ன­தாகும். முற்று முழு­தாக தேர்­தலை இலக்கு வைத்து அர­சாங்கம் நடத்­தி­ய­தா­லேயே அவ்­வாறு நடந்­தது. அப்­போது இருந்த பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் இலங்­கையின் அனைத்து மாவட்­டங்­க­ளுக்கும் சென்று அந்த மாவட்­டத்தில் அவ­ரது கூட்­டங்­க­ளுக்கு ஆட்­களை வர­வ­ழைத்தார். கொழும்பில் இருந்து கூடா­ரங்கள் அனுப்­பப்­பட்­டன. கதி­ரைகள் அனுப்­பப்­பட்­டன. ஒலி­பெ­ருக்கி இயந்­தி­ரங்கள் அனுப்­பப்­பட்­டன. உணவு வகை­க­ளுக்கும் பணம் அனுப்­பப்­பட்­டது. இந்­நி­கழ்ச்­சி­களில் மக்­களை பங்­கு­பற்றச் செய்­யு­மாறு எந்­த­வொரு மாவட்ட அமைச்­ச­ருக்கோ பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கோ அறி­வு­றுத்­தப்­ப­ட­வில்லை. குறித்த மாவட்­டங்­களின் மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கு இது­பற்றி விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது. மக்­களை ஒன்று திரட்­டு­வ­தற்­கான பொறுப்பு பிர­தேச செய­லா­ளர்கள், சமுர்த்தி உத்­தி­யோ­கத்­தர்கள், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் செயற்­திட்ட உத்­தி­யோ­கத்­தர்­க­ளி­டமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அப்­போ­தைய ஆண்டில் அமைச்­ச­ர­வையில் அங்கம் வகித்த மாவட்ட தலை­வர்கள், அவர் சென்ற மாவட்ட கூட்­டங்­களில் கலந்­து­கொள்­ள­வில்லை. என்னை தூர விரட்­டி­ய­போதும் நான் பொலன்­ன­று­வையில் நடத்­தப்­பட்ட கூட்­டங்­க­ளுக்குச் சென்றேன்.

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சினால் ஆரம்­பிக்­கப்­பட்ட நிகழ்ச்­சித்­திட்­டங்­களே இலங்­கையின் அனைத்து மாவட்­டங்­க­ளி­னதும் நிகழ்ச்சி நிர­லாக அமைந்­தது. இதில் நான்கு விட­யங்கள் மாத்­திரம் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. மத அனுஷ்­டானம், மாவட்ட செய­லா­ளரின் வர­வேற்­புரை, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சரின் உரை மற்றும் மாவட்ட தலை­வ­ரிடம் மாவட்­டத்­திற்­கு­ரிய நிதி­யினை வழங்­குதல் ஆகிய விட­யங்­களே அவை­யாகும். பொலன்­ன­று­வையில் நடை­பெற்ற கூட்­டத்தில் ஏழா­யி­ரத்­திற்கும் மேற்­பட்டோர் கலந்­து­கொண்­டனர்.

எல்லா மாவட்­டங்­க­ளிலும் இவ்­வா­றுதான். பொலன்­ன­றுவை என்­பது சிறி­ய­தொரு மாவட்­ட­மாகும். இம்­மா­வட்­டத்தின் இன விகி­தா­சா­ரத்­திற்­கேற்ப மாவட்­டங்­களின் மக்கள் தொகை மாறு­பட்­டது. பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் சமு­க­ம­ளித்­தி­ருந்­தனர். மாவட்ட செய­லாளர் வர­வேற்­புரை நிகழ்த்­தி­யதன் பின்னர் சுமார் 45 நிமி­டங்கள் அல்­லது ஒரு மணித்­தி­யாலம் அனைத்து மாவட்­டங்­க­ளிலும் அமைச்­சரின் உரை இடம்­பெற்­றது. கூடி­யி­ருந்த மக்கள் முன்­னி­லையில் கடித உறை ஒன்று வழங்­கப்­படும். அக்­க­டித உறையினுள் காசோலை காணப்­பட மாட்­டாது. 2014ஆம் ஆண்டின் ஆரம்­பத்தில், 2014ல் கிடைக்­கப்­பெற்ற பணம், தேர்தல் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட விதம், 2013ல் குழுக்­களை ஆரம்­பித்து வெவ்­வே­றாக முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்­களின் பின்னர் 2014ஆம் ஆண்டு தேர்தல் ஆரம்­பிக்­கப்­பட்ட விதம் ஆகி­ய­வையே அங்கு குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அப்­போ­துதான் அர­சாங்கம் எங்கே செல்­கின்­றது என நான் புரிந்­து­கொண்டேன். அப்­போது இருந்த தலை­மை­யுடன் இணைந்து மீண்டும் ஒரு முறை அர­சாங்கம் அமைப்­ப­தற்­கான தேர்­தலில் ஈடு­படப் போவ­தில்லை என்ற தீர்­மா­னத்தை 2011 ஆகஸ்ட் மாதம் நான் எடுத்தேன். ஆளுங் கட்­சியின் அனை­வ­ரையும் அழைத்து இங்கு அண்­மையில் அமைந்­துள்ள மத்­திய வங்­கியின் கேட்போர் கூடத்தில் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் விசேட கூட்டம் ஒன்று நடத்­தப்­பட்­டது. அதில் ஆளுங் கட்­சியின் 99 வீத­மானோர் கலந்­து­கொண்­டனர்.

முன்னாள் ஜனா­தி­பதி இதில் கலந்­து­கொள்­ள­வில்லை. முன்னாள் பிர­தமர் தி.மு.ஜய­ரட்ன அவர்கள், பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதித் தலை­வர்கள், நிமல் சிறி­பால டி சில்வா ஆகியோர் உள்­ளிட்டோர் கலந்து கொண்­டி­ருந்­தனர். என்­னிடம் தலைமை தாங்கும் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தது. அக்­கூட்­டத்தில் ஒரு அமைச்சர் வீதி­களை அமைக்­கின்ற போது பாரி­ய­ளவில் ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன எனக் குறிப்­பிட்டார்.

இந்த ஊழல் மோச­டிகள் குறித்து ஆங்­காங்கே பொது­மக்­களும் ஊட­கங்­களும் எதிர்­கட்­சி­யி­னரும் பேசிக்­கொள்­கின்­றனர். தயா­சிறி ஜய­சே­கர அவர்கள் பாரா­ளு­மன்­றத்தில் கொழும்பு கட்­டு­நா­யக்க வீதியின் ஒரு கிலோ மீட்­ட­ருக்குச் செல­வான செலவைக் குறிப்­பிட்­டது எனக்கு இன்­றுபோல் நினைவில் உள்­ளது. இது அர­சாங்­கத்­திற்கு நல்­ல­தல்ல. இப்­படி ஊழல் மோச­டிகள் இடம்­பெ­று­வது நல்­ல­தல்ல. இது­பற்றி மேலும் மேலும் பேசப்­பட்­டது.

அது அவ்­வ­ளவு தான் அடுத்­தநாள் காலை 9 மணிக்கு எனக்கு அலரி மாளி­கையில் இருந்து ஒரு தொலை­பேசி அழைப்பு வந்­தது. அர­சாங்க கட்­டளை என்­பதால் நான் அவ­ச­ர­மாகச் சென்றேன். அங்கு எனது முன்னாள் தலைவர் என்னை முன்­னெப்­போ­து­மில்­லாத வகையில் பார்க்­க­லானார். நேற்று ஊழல் மோச­டிகள் குறித்து பேசி­னிர்­கள்­தானே என்று என்­னிடம் கேட்டார். நான் ஆம் இந்த வீதி­களை அமைக்­கின்­ற­போது ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தாக மத்­திய வங்­கியின் கூட்­டங்­க­ளின்­போது பேசப்­பட்­டுள்­ள­து­தானே என்றேன். நான் சற்று யோசித்தே அதைக் குறிப்­பிட்டேன். ஆம் அப்­ப­டிப்­பே­சி­யது எனக்கு நினை­வி­ருக்­கி­றது. கட்­சியின் செய­லாளர் அமைச்­ச­ர­வையின் ஒரு அமைச்சர் அர­சாங்­கத்­திற்­குள்­ளி­ருந்தே ஊழல் மோச­டிகள் குறித்து பேச­மு­டி­யுமா?.

உண்­மையில் அது­பற்றி நான் பேச­வில்லை. வேறு ஒரு அமைச்­சரே அது பற்றி பேசி­யி­ருந்தார். நான் அது­பற்றிப் பேசு­ம­ள­விற்கு முட்டாள் அல்ல. அந்த நேரத்தில் நான் பேசி­யி­ருந்தால் என்ன நடந்­தி­ருக்கும் என்­பது எனக்குத் தெரியும்.

அப்­ப­டிப்­பே­சப்­பட்­ட­தாக நான் அறி­கிறேன். என்ன அர­சாங்­கத்­திற்­குள்­ளி­ருந்தே ஊழல் மோச­டிகள் குறித்­துப்­பேசி வேறு ஒரு பயணம் செல்ல உத்­தே­சமா? அப்­போது நிதி அமைச்சின் செய­லாளர் பி.பீ. ஜய­சுந்­தர எங்­கி­ருந்தோ அங்­கு ­வந்தார். பீ.பி. ஜய­சுந்­தர எனக்கு நெருக்­க­மா­னவர். நாம் என்­னதான் பிரச்­சி­னைகள் குறித்துப் பேசி­னாலும் அமைச்சுப் பொறுப்பை வகிக்­கின்­ற­போது எனது பொலன்­ன­றுவை அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்கு எனக்கு நிதி உத­வி­களைச் செய்­துள்ளார். நிதியைக் கேட்­கின்­ற­போது எனக்குத் தராமல் இருந்­த­தில்லை. அமைச்சின் பணி­களில் பொலன்­ன­று­வையில் எனக்கு அதிகம் உத­வி­யுள்ளார். பி.பீ. ஜய­சுந்­தர அவர்­க­ளிடம் இவர் நேற்று கூட்­டத்­தின்­போது ஊழல் மோச­டிகள் குறித்து பேசு­கின்­ற­போது பி.பீ. யும் இருந்­தீர்கள் தானே எனக் கேட்டார். பி. பீ. ஜய­சுந்­தர அவர்கள் சிரித்­த­வாறு எனக்கு அவ்­வ­ளவு ஞாபகம் இல்லை எனக்­கு­றிப்­பிட்டார். இங்கு ஏதோ நடக்­கப்­போ­கின்­றது என விளங்­கி­யது. இல்லை இவர் வேறு ஒரு பயணம் செல்­வ­தற்கு தயா­ரா­வ­தாக பேசப்­ப­டு­கி­றது என்றார். இதற்கு நான் எப்­ப­டித்தான் பதில் அளித்­தாலும் இங்கு ஒரு மோச­மான நிலை உரு­வாகும் என்­பது எனக்கு விளங்­கி­யது. எனவே நான் 2014 நவம்பர் 21 ஆம் திக­தியைப் போன்று எனது மூளையைப் பாவித்து பின்­நோக்கிச் சென்றேன். சென்று நான் வேறு ஒரு பயணம் செல்­லப்­போ­கிறேன் என்று அன்­றுதான் முடிவு செய்தேன். அந்தப் பயணம் தான் இது. அத்­த­கைய பல விட­யங்­களை எனக்குச் சொல்ல முடியும். என்­றாலும் நான் அவற்றைச் சொல்­லப்­போ­வ­தில்லை.

எனவே நான் மலித்­தி­னது முயற்­சியை பெரிதும் மதிக்­கிறேன். ஜன­வரி 08 ஆம் திக­தி­பற்றி பேசு­வ­தைப்­போன்று ஜன­வரி 08 ஆம் திக­திக்கு முன்­பி­ருந்­ததைப் பற்றிப் பேசு­வதைப் போன்று ஜன­வரி 08 க்குப் பின்னர் 2015 ஆம் ஆண்டு குறித்துப் பேசு­வதும் முக்­கி­ய­மா­னது என நான் நம்­பு­கிறேன்.

நாம் பாட­சாலை செல்­கின்ற காலங்­களில் பெற்றோர் தங்­க­ளது பிள்­ளை­களை ஆரம்ப வகுப்­பு­க­ளுக்கு கொண்­டுபோய் சேர்ப்பர். பிள்­ளை­களை பாட­சா­லைக்கு பொறுப்­ப­ளித்­ததன் பின்னர் பெற்றோர் மறு­படி பாட­சா­லைக்குச் செல்­வ­தில்லை. பிள்ளை சாதா­ரண தரம், உயர்­தரம் சித்­தி­ய­டைந்து அல்­லது சித்­தி­ய­டை­யாது வரும்­வரை பாட­சா­லைக்கே செல்­லாத பெற்­றோரும் உள்­ளனர். பாட­சா­லைக்குப் பொறுப்­ப­ளித்­ததன் கரா­ர­ண­மாக அவர்கள் கல்வி கற்பர் என எண்­ணு­கின்ற பெற்­றோரும் உள்­ளனர். பிள்­ளைகள் எங்கு செல்­கி­றார்கள் கல்வி கற்­கி­றார்­களா? தவணைப் பரீட்­சை­களின் பெறு­பே­றுகள் என்ன? என பெற்­றோர்கள் தேடிப்­பார்ப்­ப­தில்லை. முன்­ன­ரைப்­பார்க்­கிலும் தற்­போது அந்த நிலைமை சீர­டைந்­துள்­ளது. சாதா­ரண தர பரீட்­சையில் சித்­தி­ய­டைந்தால் பெற்­றோர் எங்­க­ளு­டைய பிள்­ளைகள் நன்­றாகச் சித்­தி­ய­டைந்­துள்­ளனர் என சொல்­வார்கள். உயர்­த­ரத்தில் சித்திய­டைந்து பல்­க­லைக்­க­ழ­கத்­திற்குத் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­ற­போது எனது பிள்ளை பல்க­லைக்­க­ழ­கத்­திற்குத் தெரி­வா­கி­யுள்ளார் என சொல்­வார்கள்.

என்­றாலும் பிள்­ளைகள் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்­தி­ருப்­பது பெற்­றோரின் முயற்­சியில் அல்ல. தாய் தந்­தை­யினர் பிள்­ளைக்கு உணவு அளித்­தது, பரா­ம­ரித்து வளர்த்­தது உண்மை. என்­றாலும் பிள்­ளைகள் அவர்­க­ளது சொந்த முயற்­சியால் பரீட்­சை­களில் சித்­தி­ய­டை­கின்­றனர்.

அதே­போன்று ஜன­வரி 08 ஆம் திக­திய வெற்­றிக்கு முன்­னின்­ற­வர்­களும் இந்த ஜன­வரி 08 ஆம் திகதி வெற்றிப் பரீட்­சையில் சித்­தி­ய­டையச் சொல்லி என்­னிடம் மாத்­திரம் பொறுப்­ப­ளித்­து­வி­டு­வது பொருத்­த­மா­ன­தல்ல. அப்­பெ­று­பே­று­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அதே­போன்று அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­வது அவ்­வெற்­றியைப் பெற்­றுத்­தந்த எல்­லோ­ரு­டை­யவும் பொறுப்பும் கட­மை­யு­மாகும். சில விட­யங்­களை சரி­யாகப் பார்க்­கா­மை­யி­னா­லேயே விமர்­ச­னங்கள் எழு­கின்­றன. ஒரு அர­சாங்­கத்தை முன்­னெ­டுக்­கின்­ற­போது உள்­ளார்ந்த ரீதி­யிலும் வெளியில் இருந்தும் எழும் சவால்கள் குறித்து சரி­யான தெளிவில்­லாத கார­ணத்­தினால் அந்த அர­சாங்­கத்தைத் தெரிவு செய்­த­வர்­களே அதனை விமர்­சிக்­கின்ற நிலைமை உள்­ளது. எல்லா அர­சாங்­கங்­க­ளி­னதும் நிலை இதுதான். இந்த நிலை­மை­க­ளுடன் இந்தப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பது எவ்­வாறு? இவற்­றுக்கு முகங்­கொ­டுப்­பது எவ்­வாறு? இது தொடர்பில் எமது பொறுப்­புக்­களும் கட­மை­களும் என்ன ? என நாம் எல்­லோரும் விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

அர­சாங்­கத்தை ஆட்­சிக்குக் கொண்­டு­வந்­த­வர்­களைப் போன்று அர­சாங்­கத்தை ஆட்­சிக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கா­த­வர்­களும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஸ்ரீ சுதந்­திரக் கட்­சி­யுடன் உள்ள அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­களும் இணக்க அர­சாங்கம் என்­ற­வ­கையில் எமக்கு முன்னால் இருக்கும் சவால்கள் மற்றும் பிரச்­சி­னைகள் தொடர்பில் நாட்­டுக்­கா­கவும் நாட்டு மக்­க­ளுக்­கா­கவும் ஒரு கூட்டுப் பொறுப்பை மேற்­கொள்ள வேண்­டு­மென நான் நினைக்­கிறேன். நாம் எமது கட­மைகள் பொறுப்­புக்கள் தொடர்­பிலும் சரி­யான தெளிவுக்கு வர வேண்டும். இந்த அர­சாங்­கத்­திற்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்­களை முன்வைக்கின்றவர்கள், எனக்கெதிராகக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றவர்கள்.

என்னைப் பற்றி விமர்­சிக்­கின்­ற­வர்­க­ளிடம் 2015 ஜன­வரி 08 ஆம் இந்த மாற்றம் நிகழ்ந்­தி­ருக்­கா­விட்டால் இந்த நாட்டின் நிலைமை எத்­த­கை­ய­தாக இருந்­தி­ருக்கும் என நான் கேட்­க­வி­ரும்­பு­கிறேன். பாரிய பொரு­ளா­தார பிரச்­சினை மற்றும் சர்­வ­தேச ரீதி­யாக எழுந்­துள்ள நிலை­மைகள் அவற்­றுக்கு முகங்­கொ­டுக்­கின்­ற­போது நாம் எடுக்­கின்ற நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­ற­வர்­க­ளுக்கு அத்­த­கைய விமர்­ச­னங்­களை முன்­வைப்­பதைப் போன்று 9 இலட்சம் கோடி கடன் பிரச்­சி­னைக்கு என்ன தீர்வு என கூறு­மாறும் யுஎன்­எச்­ஆர்சி (UNHRC) முன்­மொ­ழி­வுகள் தொடர்­பாக நாம் பின்­பற்றும் நிகழ்ச்­சித்­திட்­டங்­களை கடு­மை­யாக விமர்­சிக்­கின்­ற­வர்கள் தங்­க­ளி­ட­முள்ள நிகழ்ச்­சித்­திட்டம் என்­ன­வென கூற­வேண்­டு­மென நான் கேட்­கிறேன். யுஎன்­எச்­ஆர்சி முன்­மொ­ழி­வு­களை விமர்­சிக்­கின்­ற­வர்கள் நாம் அதிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் அல்லது அதனை நிராகரிக்க வேண்டுமென்றா கூறுகின்றனர்.

நாம் அதற்­கான தீர்­வு­களைக் கண்­ட­றிய வேண்டும். அவற்­றி­லுள்ள குறை­பா­டு­களை சரி­செய்ய வேண்டும். எடுக்­கின்ற தீர்­மா­னங்­களை சரி­யா­கவும் உறு­தி­யா­கவும் எடுக்க வேண்டும். என்­றாலும் ஒரு நிகழ்ச்­சித்­திட்டம் இல்­லாமல் ஒரு தீர்வு இல்­லாமல் விமர்­ச­னங்­க­ளையும் குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் முன்­வைக்­கின்­ற­வர்­களை நான் வெறு­மை­யா­ன­வர்­க­ளா­கவே பார்க்­கிறேன்.

மலித்­தி­னு­டைய திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­பதில் நான் பெரிதும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். 2014 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி நான் வெளியே­று­கின்­ற­போது சில அமைச்­சர்­களும் வெளியே­றி­ய­தைப்­போன்று பல நிறு­வ­னங்­களில் பத­வி­களில் இருந்­த­வர்­களும் விலகிச் சென்­றனர். மலித் அன்று ஒரு அமைச்சின் தவி­சா­ள­ராக இருந்தார். மலித் பதவி விலகி என்­னோடு வந்து சேர்ந்தார். மலித் ஒரு திற­மை­யான ஒரு இளைஞர் என்­ப­தோடு, அவ­ரது படைப்பாற்றல் மென்மேலும் பலம்பெற வேண்டுமென வாழ்த்தி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=17/09/2016

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.