Jump to content

நாடகர், ஊடகர், ஏடகர்: பவளவிழா காணும் தாசிசியஸ் எனும் பேராளுமை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாடகர், ஊடகர், ஏடகர்: பவளவிழா காணும் தாசிசியஸ் எனும் பேராளுமை!

கலாநிதி சர்வேந்திரா

நாடகர், ஊடகர், ஏடகர்: பவளவிழா காணும் தாசிசியஸ் எனும் பேராளுமை!
 

 

தாசிசியஸ் மாஸ்டர் தனது 75வது அகவையை இவ் ஆண்டில் (2016) நிறைவு செய்திருக்கிறார். இதனையொட்டி எதிர்வரும் 17.09.2016 அன்று இலண்டன் மாநகரில் பவளவிழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம் சமகாலத்தில் கண்ட ஈழத் தமிழர் தேசத்தின் மிகப்பெரும் ஆளுமைகளில் தாசிசியஸ் மாஸ்டர் முக்கியமானதொருவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அவரது வாழ்க்கையே இதற்கான சாட்சியமாக இருந்து வந்திருக்கிறது. ஒரு நாடகராக, ஊடகராக, ஏடகராக ஈழ தேசத்தின் வரலாற்றில் அவர் தன்னை நிலை நிறுத்தியுள்ளார். அவரது பல்பரிமாண ஆற்றலின் ஊடாக தமிழர் சமூகத்தின் பேராளுமைகளில் ஒன்றாக அவர் பரிமாணம் எடுத்துள்ளார்.

ஒரு சமூகத்தில் பேராளுமைகள் தோன்றுவது என்பது தற்செயலாக நடப்பதொன்றல்ல. சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் அந்த சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களையும் தேவைகளையும் சார்ந்து ஒரு சமூகமயமாதல் போக்கில்தான் போர்க்குணமுள்ளவர்கள் வளர்ந்து பேராளுமைகளாக எழுச்சி கொள்கிறார்கள். இங்கு போர்க்குணம் என்பது சமூக அடுக்கில் இருக்கக்கூடிய பல்வேறு தடைகளையும் தாண்டி, தகர்த்து தமது இலக்கில் முன்னோக்கிச் செல்லக்கூடிய உறுதியையும் அதற்குத் தேவைப்படும் உழைப்பையும் குறித்து நிற்கிறது. அரசியல், அதிகாரத்துடன் தொடர்புபட்டிருப்பதால் அரசியல்துறையில் தோற்றம் பெறும் பேராளுமைகள் ஒரு சமூகத்தின் வரலாற்றில் கூடுதல் கவனம் பெறுவார்கள். வரலாற்று ஏடுகளிலும் முக்கிய இடம் பிடிப்பார்கள். ஆனால் துறைசார் வரலாறு எழுதப்படும் போது அரசியல் தவிர்ந்த ஏனைய துறைகளில் பேராளுமையாக எழுச்சி கண்டவர்கள் அவ்வவ் துறைகளின் வரலாற்றுப் பக்கங்களை நிரப்புவர். தாசிசியஸ் மாஸ்டரும் இத்தகைய துறைசார் பேராளுமைகளில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறார்.

ஈழ தேசத்தின் அரங்க வரலாற்றை எழுத முற்படுவோர் எவரும் அதில் தாசிசியஸ் மாஸ்டரின் பாத்திரத்தைத் தவிர்த்து எழுதவே முடியாது. இதேபோல் புலம் பெயர் தமிழ் மக்களின் அரங்க வரலாற்றிலும் அவருக்கு முக்கிய பாத்திரம் உண்டு. தாசிசியஸ் என்ற நாடகருக்கு பல்பெரும் பரிமாணங்கள் உண்டு. நல்லதொரு நாடக நெறியாளராக, எழுத்துரு ஆசிரியராக, நடிகராக, அரங்கப் பயிற்சியாளராக, பாரம்பரிய ஆட்டங்கள், பாடல்கள் தெரிந்த, அதனை அரங்கினுள் பயன்படுத்தும் பெரும் நடன இசைக் கலைஞனாக - இவ்வாறு பல்பெரும் தளங்களில் அரங்கவெளிதனில் அவர் விசுவரூபம் எடுத்து நின்றதை நாம் நம் சமகாலத்திலேயே காணும் சாட்சிகளாக இருந்தோம். தாசிசியஸ் மாஸ்டர் அரங்கக் களத்தினுள் இறங்கி விட்டாலே தவம் செய்வது போன்றதொரு ஈடுபாட்டுடனேயே அவர் இயங்குவார். அவர் உலவும் இடம் எங்கும் உயிர்ப்பு இருக்கும். அவரது மூச்சுக் காற்றில் இருந்து பெரும் சக்தி வெளிப்படும். அவரது உடல், குரல், இயக்கம் அனைத்துமே அரங்காடிகள் அனைவரையும் உத்வேத்துடன் இயக்கும். 

தாசிசியஸ் மாஸ்டரின் அடுத்த பரிமாணமும் பாத்திரமும் ஊடகத் தளத்தில் நிகழ்கிறது. ஊடகராக அவர் பி.பி.சி தமிழ்ஓசை ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்தார். பி.பி.சி யில் ஆய்வாளராகவும் அவர் பணியாற்றியவர். ஊடகத்தளத்தில் இவரது வரலாற்று முக்கியத்துவம் மிக்க பங்களிப்பு ஐ.பி.சி (IBC) – தமிழ் வனொலியினை இவர் முன்னின்று உருவாக்கியதுடன் ஆரம்பித்தது எனலாம். சிறிலங்கா அரசின் இனக்கருவறுப்புத் தாக்குதல்கள் (இது நான் தாசிசியஸ் மாஸ்டரிடம் இருந்து பெற்றுக் கொண்ட சொற்பதம்) உச்சம் அடைந்திருந்த காலத்தில் IBC தமிழ் வானொலி தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து, உணர்வுகளைப் பாதுகாத்துப் பேணக்கூடிய வகையில் தனது ஒலிபரப்பினை மேற்கொண்டிருந்தது. 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி' என ஐபிசி ஒலித்தமை தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்துக்கும் போராளிகளின் செயற்பாடுகளுக்கும் உத்வேகம் தருவதாக அமைந்திருந்தது. களமுனையில் நின்ற போராளிகளும் சிறிலங்கா அரசின் கடுமையான ஒழுக்குமுறைக்குள் வாழ்ந்து வந்த மக்களும் IBC தமிழை தமது உற்ற உறவாகக் கருதினர். IBC தமிழ், தாயக மக்களால் மட்டுமல்ல புலம் பெயர் தமிழ் மக்களாலும் விரும்பப்படும் ஒரு வானாலியாக விளங்கியது. IBC தமிழின் இவ் வெற்றிக்குத் தாசிசியஸ் மாஸ்டரே முன்மைமைக் காரணமாக இருந்தார்.

தாசிசியஸ் மாஸ்டரின் அடுத்து பரிமாணம் கல்வித்துறை சார்ந்தது. ஆசிரியராக இவர் ஆற்றிய பணி தமிழ் மாணவர்களுக்கு மட்டுமல்ல, நைஜீரியா மாணவர்களுக்கும் கல்விவளம் சேர்த்தது. புலம் பெயர் தமிழ் சிறார்களின் தமிழ் மொழிக்கல்விக்கு ஏடகராக தாசிசியஸ் மாஸ்டர் வழங்கிய பங்களிப்பு மிகவும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாகும். புலம் பெயர் தமிழ் மாணவர்களின் தமிழ்க் கல்வியினை செழுமைப்படுத்தும் நோக்குடன் பேராசிரியர்கள் பலர் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டதொரு புதிய பாடத்திட்டத்துக்கும் புதிய தமிழ்மொழிக் கல்வி நூலாக்கத்துக்கும் தாசிசியஸ் மாஸ்டர் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தார். புலம் பெயர் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் இவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. புலம் பெயர் சூழலில் தமிழ் மொழி கற்பிக்கும் போது உச்சரிப்பு மிகவும் முக்கியம் பெறும். ஆசிரியர்கள் சொற்களை மிகத் துல்லியமாக உச்சரிக்காது விடின் பிள்ளைகளுக்கு சொற்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை உணர்ந்து கொள்வதில் மிகச் சிரமம் ஏற்படும். இவ் விடயத்தில் தாசிசியஸ் மாஸ்டரின் மிகத் துல்லியமான தமிழ் உச்சரிப்பு பயிற்சிகளின் போது ஆசிரியர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

தாசிசியஸ் மாஸ்டர் நாடகர், ஊடகர், ஏடகர் போன்ற பரிமாணங்களில் நிகழ்த்திய சாதனைகள் போன்று மொழிபெயர்ப்புத் துறையிலும் மிகுந்த ஆற்றல் கொண்டவராக இருந்தார். விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகராகவும் இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மனைவி திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய Will to Freedom என்ற நூல் தமிழில் «சுதந்திர வேட்கை» என்ற பெயரில் வெளியாகியிருந்தது. இந் நூலின் மிகப் பெரும் பகுதியைத் தமிழில் தாசிசியஸ் மாஸ்டரே மொழி பெயர்த்திருந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் மிக அழகாக எழுதக்கூடிய ஆற்றல் கொண்டிருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களை மொழிபெயர்ப்பில் திருப்திப்படுத்துவது என்பது இலகுவானதொரு விடயமல்ல. இந் நூலின் மொழிபெயர்ப்பின் ஊடாகத் தாசிசியஸ் மாஸ்டர் தனது மொழிபெயர்ப்புத் திறமையை அழகாக வெளிப்படுத்தியிருந்தார்.

ஒருவர் தாம் வாழும் சமூகத்தால் பெரிதும் மதிக்கப்படுவது என்பது அவரது தொழில்சார் சாதனைகளால், அவரது திறமைகளால் மட்டும் தீர்மானிக்கப்பட்டு விடுவதில்லை. அவர் சமூகம் சார்ந்து எத்தகைய மதிப்பீடுகளைக் கொண்டிருக்கிறார் என்பதும், அவரது அறநெறிகள் எத்தகையதாக இருக்கிறது என்பதுவும், அவர் தான் வாழும் சமூகத்துக்கும் உலக சமுதாயத்துக்கும் எத்தகயை பங்களிப்பை வழங்கியிருக்கிறார் என்பதுவும் ஒரு மனிதரை மதிப்பீடு செய்வதில் முக்கிய கவனத்தைப் பெறுபவையாக இருக்கும்.  தாசிசியஸ் மாஸ்டரை ஈழத்தின் பெரும் ஆளுமைகளில் ஒன்றாக மதிக்கப்படுவதற்கு அவரது திறமைகள் மட்டுமல்ல அவரது வாழ்க்கையும் அவரது சமூகம் சார்ந்த நிலைப்பாடும் ஒரு முக்கிய காரணம். நைஜீரியாவில் தனது மனைவிக்கு தீ விபத்து ஏற்பட்டபோது தனது உயிரைக் கொடுத்தாவது அவரைப் பாதுகாப்பேன் எனும் வகையில்தான் இவரது செயற்பாடு இருந்தது.

தாசிசியஸ் மாஸ்டர் மனித நேயம் மிக்கவர். மற்றவர் துயரத்தை தனது துயரமாக உணர்பவர். சமூகம் சாரந்து எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம்தான் தன்னை இணைத்துக் கொண்டவர். ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை உரத்து எழுப்பியவர். அவர் நாடகராக, ஊடகராக, ஏடகராக இயங்கிய அனைத்துத் தளத்திலும் அவர் இந்நிலைப்பாட்டை உறுதியாக எடுத்திருந்தவர். 1960களில் இடம் பெற்ற சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சமூகநீதிக்கான போராட்டத்திலும், சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கருவறுப்பு நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்திலும் தன்னைப் போராட்டத்தின் பக்கம் உறுதியாக இணைத்து நின்றவர். மக்களோடு நின்றதொரு மாபெரும் கலைஞனை, ஒரு பேராளுமையை மதிப்பளிப்பற்கு எமக்குக் கிடைத்த வாய்ப்பு மிகவும் மகிழ்வைத் தருகிறது. அவரது பவளவிழா மிகவும் சிறப்பாக நடைபெற எமது வாழ்த்துகள்!

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=2194eef4-49a4-4aa4-a37c-dd2b5d215d9e

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நான் கலந்து பாடுங்கால்.. (தாஸீசியசுடனான எனது அனுபவங்களை மீட்டல்) பேராசிரியர். சி.மௌனகுரு:

18 செப்டம்பர் 2016
Bookmark and Share
 

 

நான் கலந்து பாடுங்கால்.. (தாஸீசியசுடனான எனது அனுபவங்களை மீட்டல்) பேராசிரியர். சி.மௌனகுரு:


வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே
தேன் கலந்து  பால் கலந்து செழும் கனித் தீம் சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
                     --இராமலிங்க சுவாமிகள்-- 

தாஸீயசுடனான அனுபவத்தை என் அனுபவங்களோடு கலந்து கூறுவது இராமலிங்க சுவாமிகள் கூறுவதுபோல ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கும் ஒன்றாகும்

தாஸீசியசை எப்போது சந்தித்தேன் சரியாக ஞாபகம் இல்லை
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் நாங்கள் படித்துக்கொண்டிருந்த காலத்தில் .(1960-1965) ஆங்கிலத் துறை ஆங்கில நாடகங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது, தமிழ்த்துறை தமிழ் நாடகங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. சிங்களத் துறை சிங்கள நாடகங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது.

ஆங்கிலத் துறையில் அஸ்லி கல்ப்பே, மக்கின்டயர் திருக்கந்தையா போன்றவர்களும் தமிழ்த் துறையில் வித்தியானந்தன், சிவத்தம்பி, கைலாசபதி போன்றோரும் சிங்களத் துறையில் சரத்சந்திரா போன்றோரும் நாடக வளர்ச்சியில் பெரும்  பணியாற்றிக் கொண்டிருந்த காலங்கள் அவை நாடகத்தைக் காத்திரமானதொரு கலையாக ஆக்கபேராதனைப்  பல்கலைக் கழகம் முன்னின்ற காலம் அது எனலாம் தாஸீசியஸ் தன் தொடர்புகளை ஆங்கிலத் துறையில் அஸ்லிகல்பே, மக்கின்ரேயர் ஆகியோருடன் வைத்திருந்தார். கூத்தை தமிழர் அரங்காக முன்னெடுத்த வித்தியானந்தன் பக்கம் அவர் வரவில்லை ஆனால் தனது பேட்டி ஒன்றில் தாஸீசியஸ் கூத்துபக்கம் வந்த தன்னை வித்தியானந்தனே “நீர் இங்கு வருவதைவிட மக்கின்ரேயரிடம் இருப்பது நன்று அது தமிழ் நாடக வளர்ச்சிக்கு உதவும்” எனக் கூறி அனுப்பியதாகக் குறிப்பிட்டிருக்கிறார் வித்தியானந்தனும் தாஸீசியஸ் பற்றி எங்களிடம் எதுவும் கூறவில்லை இப்படியாகப் பல்கலைக் கழகத்தில் படித்த காலங்களில் நானும் தாஸீசியசும் ஒருவரை ஒருவர் நெருங்கும் வாய்ப்புகள் ஏற்படவில்லை.

தாஸீசியஸின் சந்திப்பு
-----------------------------------------------
என் ஞாபகத்திற்கெட்டிய வகையில் தாஸீசியஸ் எனக்கு அறிமுகமான காலமாக நினைவில் இருப்பது 1969 ஆண்டு கொழும்பு லும்பினி அரங்கில் எனது நாடகமான சங்காரம் மேடையேறிய பொழுதுதான். நாடகம் முடிய தாஸீசியஸ் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டதும் எனது குழுவினரைத் தேடித் தேடிச் சென்று பாராட்டியதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.அதில் நடித்த அனைவரும் மட்டக்களப்பின் கிராமப் புற இளைஞர்கள்..கொழும்புக்கு முதல்தடவை வந்தவர்கள். .தாஸீசியஸின் பாராட்டுகள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் தந்தன.தாஸீசியஸ் நாடக உலகில் நன்கு அறியப,வெளிநாட்டில் இருந்தபோது அவருக்கு நான் எழுதிய கடிதம் ஒன்றுக்கு மிக உணர்ச்சி பூர்வமாக தாஸீசியஸ் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.அதில்இலங்கையில் நாங்கள் ஒன்றாக பணிபுரிந்த காலங்களை நினைவு கூர்ந்த தாஸீசியஸ் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தா.


 “ மௌ, இதுவரை நான் உம்மிடம் கூறாத ஒரு விடயத்தை இப்போது கூறுகிறேன்.உமது சங்காரம் பார்த்த அருட்டுணர்வில்  மக்கின்ரயரும், அய்ராங்கனி சேரசிங்க, ஹென்றி ஜெயசேனா ஆகியோர் நடத்திய பயிற்சிப்பட்டறையில் சங்கு பித்தளை என்ற விளயாட்டில் நான் எனக்குத் தெரிந்த  சிலவற்றைச் செய்து காட்டியதும், அவர்கள் இவனிடம் எதோ இருக்கிறது என என்னைக் கண்டுகொண்டதும்,பின்னால் என் நாடகங்களில் கூத்து ஆட்டங்களையும் பாடல்களையும் புகுத்தி நான் நாடகம் செய்ததும் உனது சங்காரம் தந்த அருட்டுணர்வு என்பதையும் என் நாடக முயற்சி எங்கு செல்ல வேண்டும் என்பதற்கான கீதோபதேசமாக உனது சங்காரம் இருந்தது என்பதையும் நான் இது வரை உனக்குச் சொல்லவில்லை என்றால் என்னை மன்னித்துவிடு” அவர் எழுதிய வரிகள் எனக்குப் பெரும் ஆச்சரியத்தையும் ,வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதுடன் தாஸீசியஸ் மீது பெரும் மதிப்பையும் ஏற்படுத்தியது. இக்கடிதத்தை அவர் எனக்கு  எழுதிய காலம் அவ்ர் நாடக உலகில் மிக உச்சதில் நின்ற காலம்.அத்தகைய ஒரு பெயர்  பெற்ற பெரு நாடகன் மனம் திறந்து எந்த பந்தாவுமின்றி இப்படி எழுதியமையே அவ்ர் மீது எனக்குமதிப்புஏற்படக் காரணமாகும்

1970களில் இலங்கைத் தமிழ் நாடக உலகு
_________________________________________________
1970 கள் இலங்கைத் தமிழ் நாடக உலகில் இராசயன மாற்றங்கள் நிகழ்ந்த காலங்களாகும்.வழமையான பழைய பாணியில் நாடகங்கள் போட்டுகொண்டிருக்கும் மரபுவழி நாடககக்குழுக்குள் தம் வேலையை  வழமையாச் செய்துகொண்டிருக்கபுதிய தலைமுறை தமிழ் நாடகத்தைப் புதிய திசைகளுக்கு இட்டுச் செல்லும் வழியில் செல்ல ஆரம்பிக்கின்றது.


இப்புதிய தலைமுறை கைலாசபதி,சிவத்தம்பி தலமையில் ஒரு குழுவாகவும்  அவர்களுக்கு மாறானோர் தலமையில்  இன்னொரு  குழுவாகவும்  கலை இலக்கிய உலகில் இயங்கலாயினர் நான் முதற் குழுவுக்குள் அகப்பட்டுக் கொண்டேன் தாஸீசியஸ் இரண்டாம் குழுவுக்குள் அகப்பட்டுக்கொண்டார்.


முதற் குழுவினர் முருகையனைசிறந்த நாடக ஆசிரியராக்கி அவரது நாடகங்களை முதன்மைப்படுத்தி எழுதினர் மற்றக் குழுவினர் மஹாகவியை முதன்மைப் படுத்தினர் முருகையனின் கடூழியம் சுந்தரலிங்கத்தின் நெறியாள்கையில் மேடையேறியது. அதுவே தமிழில் ஒயிலாக்க நாடகத்தின் முன்னோடி நாடகம் என ஒரு சாராரால் கூறப்பட்டது. மஹாகவியின் புதியதொரு வீடு தாஸீசியசின் நெறியாள்கையில் மேடையேறியது அதுவே தமிழில் ஒயிலாக்க நாடகத்தின் முன்னோடி என மறு சாராரால் கூறப்பட்டது ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள் தமிழ் நாடக உலகு இரண்டுபட்டிருந்தமை தமிழ் நாடக வளர்ச்சிக்கு அன்று பெரும் துணை புரிந்தது அப்போது மஹாகவி மட்டக்களப்பில் கச்ச்சேரிக்கு அலுவலக உதவியாளராக (OA) நியமனம் பெர்று வந்திருந்தார் என் நெருங்கிய நண்பருமானார்.


அப்போது அவரின் புதியதொரு வீடு நாடகத்தைக் கொழும்பில் தாஸீசியஸ் தயாரித்துக் கொண்டிருந்தார். அதற்கான பாடல்களைத் தாஸீசியசின் வேண்டு கோளுக்கிணங்க  மஹாகவி எழுதிக்கொண்டிருந்தார். அபோதுதான் மஹாகவி தாஸீசியஸ் பற்றி எனக்கு விஸ்தாரமாக விளக்கினார். தாஸீசியஸின் கெட்டித்டித்தனம் பற்றியும் நடக உருவாக்கத்தில் தாஸீசியசின் பங்களிப்பையும் அவர் என்னிடம் வெகுவாகச் சிலாகித்தார்
ஒரு நாடக சிருஸ்டிகர்த்தாவும், இலக்கிய சிருஸ்டி கர்த்தாவும் இணைந்து உருவாக்கிய படைப்பே புதியதொரு வீடு நாடகம் தாஸீசியசின் திறமைகளை இப்படித்தான் மஹாகவிமூலம் இரண்டாம் நிலைத் தரவாக அறிந்து கொண்டேன் கொழும்பு பொரளையில் மேடையேறிய புதியதொரு வீட்டைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. கடூழியம் பேசப்பட்டளவு சிலரால் புதியதொரு வீடு பேசப்படவில்லை.அது பற்றி தாஸிசியசுக்கு மிகுந்த மனத் தாக்கம் இன்றுவரையுண்டு பல்கலைக் கழகத்தில் எனது உடன் மாணாக்கரயிருந்த  முத்துலிங்கம் தாஸீசியஸ் பற்றியும் அவர் திறமைகள் பற்றியும் என்னிடம் அடிக்கடி கூறுவான்.அவன் தாஸீயுடன் இணைந்து நாடகம் செய்து கொண்டிருந்தான். கோடையில் சாமியாராக நடித்தவரும் அவரே.

கோடையும் தாஸிஸியசும்
_____________________________________
1971 இல் மட்டக்களப்பு பிரதேச கலைவிழாவுக்கு கோடையை மேடையிடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது மட்டக்களப்புக்குக் கோடை வந்தது.தாஸீசியஸும் வந்தார்.பலத்த வரவேற்பை அது பெற்றது.. மிக நேர்தியான தயாரிப்பு அது..என்னை மிகுந்த பிரமிப்பில் ஆழ்த்திய நாடகம், கோடை. ஒரு இலக்கிய வாதியானமஹாகவியின் பேச்சோசைப் பண்பு மிக்க ஒரு  படைப்பான பா நாடகம் தாஸீசியஸ் எனும் நாடகக் கலைஞனால்கைபட்டு இன்னொரு படைப்பாக அரங்கில் காட்சி தந்தது தாசீசியசின் திறமையினை அது நன்கு புலப்படுத்தியது/. அவரை ஆரத் தழுவி நான் பாராட்டினேனஅதில் பல விடயங்களை நான் கற்றுக் கொண்டேன் .”தாஸீ என் நாடகம் எங்கு செல்ல வேண்டும் என்பதனையும் நாடகத்தை நேர்த்தியாக எவ்வாறு தயாரிக்க வேண்டும், என்பதனையும் சொன்ன கீதோபதேசமாக உன் கோடை இருந்தது என்பதை இதுவரை நான் உன்னிடம் சொல்ல வில்லை என்றால் என்னை  மன்னித்துக் கொள்” எனது கூத்து நாடகம் அவரைக் கவர்ந்தது.அவர் யதார்த்த நாடகம் என்னைக் கவர்ந்தது.ஒருவரில் இருந்து ஒருவர் கற்றோம். பெற்றோம் இந்தக் கற்றலும் பெற்றலும் இணைதலும் அவர் நாட்டை விட்டுச் செல்லும் வரை தொடர்ந்து நடந்தது அவருக்கு எப்படியோ, நான் கற்றுக் கொண்டேன் பின்னாளில் கூத்திலிருந்து நவீனம் நோக்கி நான் நகர்ந்தேன். நவீனத்திலிருந்து கூத்தை நோக்கி அவர் நகர்ந்தார். இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்கும் காலம் வந்தது.அதுவே கந்தன் கருணை.அது பற்றிப் பின்னர் கூறுவேன் 1972 தொடக்கம்1972 வரை நான் கொழும்பில் வாழ்ந்த காலங்களில்தான் தாஸீசியசை நன்றாக அறியும் வாய்ப்புக் கிடைத்தது.


அக்காலத்தில் நா..சுந்தரலிங்கம் கொழும்பில் ஒரு பெரிய தமிழ் நாடக ஆழுமையாகத் திகழ்ந்தார்.அயல் நாட்டு நிபுணர்களின் நாடகப்யிற்சிப்பட்டறைகளில் கலந்து கொண்ட அவர் பிரபல சிங்கள நாடக நெறியாளர்களின் நண்பராக இருந்ததுடன் அவர்களின் பயிற்சிப்பட்டறைகளில் கலந்து கொண்டதன் மூலமும் தன் நாடகத் திறனை வளர்த்துக்கொண்டிருந்தார்.\அவர் தாஸீசியசின் திறன்களை நன்கு அறிந்திருந்தார்.


அவர் தனது இரண்டு நாடகங்களில் தாஸீசியசை நடிக்க வைத்தார்.ஒன்று அவரே எழுதிய அபத்த நாடகச் சாயல் கொண்ட அபசுரம் எனும் நாடகம்,மற்றொன்று அவரே எழுதிய ஒயிலாக்க நாடகமான விழிப்பு



அபசுரத்தில் தாஸீசியஸ்
______________________________________
சுந்தரலிங்கத்தின் நெறியாள்கையில் நடந்த அபசுரம் நாடகத்தை கொழும்பில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.அதில் பொதுவராக தாஸீசியஸ் தோன்றினார்
அரசியல் வாதிகளாலும்,புத்திஜீவிகளினாலும்,போலிச் சாமியார்களினாலும்தான் ஏமாற்றப்படுகிறேன் என்று அறியாமலே ஏமாற்றப்படும் அப்பாவிப் பொதுவர் பாத்திரம்
ஏமாற்றத்துக்குள்ளாகும் அப்பாவிப் பொது மக்களின் குறியீட்டுப்பாத்திரம் அது. ஒரே நேரத்தில் பொதுக் குறியீடாகவும், தனிக் குணாதிசயமுடையதாகவும் தோற்றம் காட்டும் அப் பாத்திரம்  நடிப்பதற்கு மிகக் கஸ்டமானதொரு பாத்திரம் சுந்தரலிங்கம் நெறியாள்கை,தாஸீசியஸ் நடிப்பு.இருவரின் இணைப்பில் அப்பாத்திரம் உருவானாலும் தாஸீசியஸ் அப்பாத்திரதிற்குத் தனது. நடிப்பினால் ஒரு புதுப்பரிமாணம் அளித்தார் நாடகம் தொடக்கம் முடியும் வரை அப்பாத்திரம் நிற்கும் நிலை அசைவுகள்,முகபாவம்,பேசும் தொனி என்பவற்றால் இதனை அவர் செய்தார்.


தாஸீசியஸ் நேரில் பார்த்தல் கம்பீரமாக இருப்பார்.பேச்சு, பேசும் முறை,குரலில் எல்லாம் அக்கம்பீரம் நிறைந்திருக்கும்இப்பாத்திரம் தாஸீசியஸின் இயல்புக்கு நேர் எதிரானது.நாடகம் முழுதும் முகத்தையும்,உடலையும்,அங்க சேஸ்டைகளையும் அப்பாவித்தனமாக வைத்திருக்க வேண்டும்.தாஸீசியஸின் அந்த அப்பாவித்தனமான முகமும் பார்வையும்,உடல் அசைவுகளும் இப்போதும் பசுமையாக ஞாபகம் வருகின்றன.ஒரு சிறந்த நடிகனால் பாத்திரம் உயிர் பெறுகின்றது என்பதுடன் அந் நடிகன்  நடிப்புக்கும் புது இலக்கணம் தந்து விடுகின்றான் தாஸீசியஸ் அன்று அதனைச் செய்தார் .பத்தண்ணாவும் சிவானந்தனும் அரசியல் வாதிகளான அருளராகவும், தியாகராகவும் வந்தனர். பேரா.சண்முகரத்தினம் விஞ்ஞானியாக வந்தார்..தமிழுக்கு அபசுரம்  ஒரு புதுமை வரவு;புதிய வரவு.. தமிழ் நாடக உலகிலும் நடிப்பிலே அது ஒரு புதுமை,புதிய வரவு ஒரு சிறந்த நடிகனை இலங்கைத் தமிழ் நாடக உலகு கண்டுகொண்டது நான் தாஸீயஸின் நடிப்பின் தாசனானேன்


விழிப்பில் தாஸீசியஸ்
___________________________________
சுந்தரலிங்கத்தின் நெறியாள்கையில் தாஸீசியஸ் நடித்த இன்னுமோர் நாடகம் விழிப்பு.அது சுந்தரலிஙம் எழுதி நெறியாள்கை செய்த நாடகம்.வேலையில்லாப் பிரச்சனைதான் நாடகத்தின் கரு.வேலையற்ற பட்டதாரிகளுள் ஒருவனான சந்திரன் தனது விடிவுக்கு தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து போராடப் புறப்படுகிறான்.இதில் சந்திரனாக சுந்தரலிங்கம் நடித்தார்,சந்திரனின் தகப்பனாக தாஸீசியஸ் நடித்திருந்தார்
சந்திரனின் தகப்பன் தன் மகனுக்கு வேலை கேட்டு ஒவ்வொருவரிடமும் செல்கின்றார் அனைவரும் கையை விரிக்கின்றனர் உத்தியோகம் பர்ப்பதை விடக்  கமம் செய்யலாம் என ஆலோசனைகள் வேறு கூறுகின்றனர்.ஆத்திரமுற்ற அவர் நடந்த படி தன் ஆத்திரத்தைக் கதை மூலம் கொட்டித் தீர்க்கிறார். இது ஒரு தனிக்காட்சியாக அந் நாடகத்தில் இடம் பெறுகிறது தாஸீசியசின் அற்புதமான நடிப்பினை நேரில் காணும் சந்தர்ப்பத்தை அந் நாடகம் தந்தது.உடல் நிலை உடல் அசைவு,முகபாவம் ஏற்ற இறக்கம் மிக்க பேச்சு முறை.குரலை உணர்வுகட்கு ஏற்கப் பயன் படுத்தும் முறை என்பன தாஸீசியசை முதிர்ந்த ஒரு நடிகனாகக் காட்டியது தேசிய நாடகப் போட்டிக்கு வந்த நாடகங்களுள் ஒன்று அது. அதில் நடுவர்களுள் ஒருவராகப் பணிபுரியும் வாய்ப்பும் எனக்கு கிடைத்திருந்தது’ நாடகம் சிறந்த நாடகம் எனத் தெரிவு செய்யப்பட்டது..சுந்தரலிங்கத்திற்கு சிறந்த நெறியாளருக்கான விருது கிடைத்தது, தாஸீசியசுக்கு மிகச் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது தமிழ் நாடக உலகில் தாஸீசியஸ் மேடை நாடக நடிக நட்ஸத்ரமானார் இதைத்தொடர்ந்து தாஸீசியஸ் நெறியா:ள்கை செய்த இரண்டு நாடகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கொழும்பில் எனக்குக் கிடைத்தது




தாஸ்சியஸ் ஆரம்பகாலத்தில் நெறியாள்கை செய்த நாடகங்கள்
____________________
தஸீசியஸ் ஆரம்பத்தில் இரண்டு நாடகங்கலை நெறியாள்கை செய்தாரஒன்று இ.சிவானந்தன் எழுதிய காலம் சிவக்கிறது,மற்றது அலக்ஸி அபுசேவ்எழுதிய   அது ஈர்க்குட்ஸில் நடந்தது (IT HAPPENS IN IIRDKUDS) எனும் ஒரு ரஸ்ய மொழிபெயர்ப்பு நாடகம் சிவானந்தனின் நாடகம் ஒரு ஒயிலாக்க  நாடகம் பிரதி கிளிநொச்சி விவசாயிகளின் வாழ்க்கை அவலங்களையும், அவர்களது எழுச்சியினையும் காட்டும் நாடகம் அதுகொழும்பு .இஸபதானக் கல்லூரி  உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு முறையான நாடகப் பயிற்சி கொடுத்து ஒரு அருமையான பாடசாலை நாடகமாக தாஸீசியஸ் அதனை உருவாக்கியிருந்தார் .


கிளிநொச்சி மண்ணில் விவசாயிகள் உன்டாக்கிய கத்தரிக்காயும் தக்களிக்காயும் உயிபெற்றுப் பாத்திரங்களாகி மேடையில் அசைந்தன ,ஆடின பாடின, நடித்தன. தாஸீசியஸின் கற்பனையை நான் அதில் கண்டு வியந்தேன், ரசித்தேன் ஈர்க்குட்ஸில்நடந்தது (IT HAPPENS IN IIRDKUDS{ எனும் நாடகம் ஞானம் லம்பட்டினால் மொழி பெயர்க்கப்பட்டது. அவர் அதற்கு இட்ட பெடர் பிச்சை வேண்டாம்  என்பதாகும்.ஒரு மொழிபெயர்ப்பு நாடகத்தை எப்படித் தயாரிக்க வேண்டும்.எப்படி நெறியாள்கை செய்யவேண்டும் என்பதற்கு இலக்கணமாக அமைந்த நாடகம் அது..அதில் பாலேந்திரா நடித்திருந்தார்.கட்டுப்பெத்தப் பல்கலைக்கழக மாணவர்கள் அதில் நடித்திருந்தனர்.பாலேந்திரா அப்போது அங்கு படித்துக்கொண்டிருந்தார்.அதில் ஒரு காட்சி இருவர் படுக்கையில் படுக்கும் காட்சி.ஒரு பெட்  சீற்றை இருவர் செங்குத்தாகப் பிடித்துக்கொண்டிருக்க அதன் முன்னால் நின்றபடி இரு பாத்திரங்கள் பேசும்.அது கட்டிலில் மேல் இரு பாத்திரங்கள் படுத்தபடி உரையாடுவது போன்ற மாயத் தோற்றமொன்றை ஏற்படுத்தும்.அது தாஸீசியசின் கற்பனை.
அன்று அந்த்க் கற்பனையும் காட்சியும் பலராலும் சிலாகித்துப் பேசப் பட்டன..இது நடந்து 40 வருடங்களுக்குப்பின் 2014 இல் பராக்கிரம நெரியெல்லயின் மெடிக்கரத்த எனும் நாடகம் பார்த்தேன் இதே உத்தியை அவர் அந்நாடகத்தில் பயன் படுத்தியிருந்தார்.அதனைப் பார்த்து எனது மாணவர்கள் பலர் ஆஹா என வியந்தனர் நான் பராக்கிரமவிடமும் என்மாணவர்களிடமும்  “இவ்வுத்தி எமது முன்னோனான நாடக ஆசிரியர் தாஸீசியஸினால் 1973 இல் மேடையிற் கொணரப்பட்டுவிட்டது” என்ற செய்தியைக் கூறினேன் அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டனர் ஆம் ஒரு காலத்தில் தமிழ் நாடக மேடை பிறரை ஆச்சரியப்பட வைத்தது.


சோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லையாயினும் அதில் வரும் கிரக சேர்க்கை எனும் சொர்றொடர் எனக்கு மிகவும் பிடிக்கும்.கிரகசேர்க்கை என்பது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரகங்கள் பல ஒரு கோட்டில் அல்லது சில நிலைகளில் வருவதாகும்.அவ்வண்ணம் சேரும்போது நல்ல பல காரியங்கள் உலகத்தில் நடக்கும் எனச் சோதிடர் கூறுவர்.தமிழ் நாடக உலகில் இப்படிப்பபல கிரக சேர்க்கைககள் நடைபெற்றுள்ளன.

கிரக சேர்க்கையாக உருவான நடிகர் ஒன்றியம்

1970 களின் முற்பகுதியில் இலங்கைத் தமிழ் நாடக உலகில் இக்கிரகசேர்க்கை இடம் பெற்றது.அதாவது நாடக உலகின் பல கிரகங்கள் ஒன்று திரண்டன. அன்று பல நாடகக் குழுக்கள்  இருந்ததாயினும் பின்வரும் நாடகக் குழுக்கள் முக்கியமானவை. அவையாவன தாஸீசியசும் அவர் நண்பர்களும் சேர்ந்து வைத்திருந்த  கூத்தாடிகள் நாடகக் குழு
சுந்தரலிங்கமும் அவர்நண்பர்களும் சேர்ந்துவைத்திருந்த எங்கள் குழு  நாடகக் குழுபத்தண்ணாவும் அவர்குழுவினரும்,சேர்ந்து வைத்திருந்த நெல்லியடி அம்பலத்தாடிகள் நாடகக் குழு. பாலேந்திராவும் அவர்  குழுவினரும் வைத்திருந்த கட்டுப்பெத்தை வளாக நாடகக் குழு ,மௌனகுருவும் அவர் குழுவினரும் சேர்ந்து  வைத்திருந்த மட்டக்களப்பு நாடக சபா நாடகக் குழு ,  இவர்கள் அனைவரும் சினிமாத்தனமான நாடகங்களில் இருந்து விடுபட்டு இலங்கைத்தமிழ் நாடக உலகில் நாடகத்தைக் காத்திரமான ஒருகலைவடிவமாகவும் மக்களுக்குப் பயன்தரும் கலை வடிவமாகவும் ஆக்கும் முயற்சிகளில் தாம் தாம் வாழ்ந்த இடங்களில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.


அதிஸ்டவசமாக இவர்கள் அனைவரும் கொழும்பில் வாழும் சந்தர்ப்பம் 1970களின் முற்பகுதியில் வாய்த்தது.அனைவரும் இணைந்து ஒரு ஒன்றியமாகி நாடகங்கள் செய்தல்,அவற்றை மாதம்தோறும் மக்களுக்கு எடுத்துச் செல்லல் அத்தோடு,  ஒரு காத்திரமான ஒரு ரசிகர் அவையை உருவாக்குதல்,காத்திரமான பார்வையாளர் காத்திரமான நாடகங்கள் என்ற இணைப்பின் மூலம் தமிழ் நாடகங்களை  உலகத்தரத்துக்கு எடுத்துச் செல்லல்   என்ற சிந்தனை சிலர் மத்தியுள் உருவனது.இந்தச் சிந்தனையின் மூலபிதா யார் எனத் தெரியவில்லை.அந்தச் சிந்தனையின் மூலபிதாக்கள் உண்மையில் வணக்கத்திற்குரியவர்கள் கருத்தியல் வேற்றுமைகளால் தனித்தனிக் கிரகங்களாகப்  பிரிந்து கிடந்த  காத்திரமான நாடகக்காரர்கள்  காத்திரமான நாடகம்,அதற்கு மக்களைப் பயிற்றுவித்தல் என்ற கோட்பாட்டில் ஒன்றிணைந்தனர். இதுதான் நான் சொன்ன அன்றைய கிரக சேர்க்கை கொழும்பில் இந் நாடகக்காரர்களையும் நாடகக் குழுக்களையும் ஒன்றிணைத்து நடிகர் ஒன்றியம் உருவானது.அனைவரும் முக்கிய பதவிகளை மனமுவந்து ஏற்றோம் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தோம் புதியதொரு வீட்டைத் தாஸீசியஸ் நெறியாள்கை செய்தார்.சுந்தரலிங்கம் சிவானந்தன்,நான், முத்துலிங்கம், பத்தண்ணா அகியோர் அதி நடித்தோம்.சுந்தரலிங்கம்தான் நாடகத்தின் கதாநாயகன் மாசிலனாக நடித்தார்.இப்போது தாஸீசியஸின் நெறியாள்கையில் சுந்தரலிங்கம்
பிரிந்துகிடந்த கிரகங்கள் ஒன்றான கதை இது

மீண்டும் புதியதொரு வீடும் தாஸீசியசும்
_________________________________________________
புதியதொரு வீட்டில் எனக்கு எடுத்துரைஞர் பாத்திரம்.புதியதொரு வீடு ஒத்திகைகளும் தாஸீசியஸ் அவற்றை ஒழுங்ககமைத்த முறையும் புதியதொரு வீட்டைப் பழக்கிய முறையும்,அனைத்துத்  திறமையாளர்களயும் அவரவர் திறன் அறிந்து பயன் படுத்திய விதமும் அவரது ஆளுமையின் வெளிப்பாடுகளாக எனக்கு காட்சி தந்தன.


எடுதுரைஞர்களாக  நானும், இ.சிவானந்தனும்,(முருகையனின் தம்பி) பத்தண்ணாவும், முத்துலிங்கமும், பத்மனாதனும்(சிறந்த நடிகரான இவர் பத்திராஜா நெறியாள்கை செய்த பொன்மணி திரைப்படத்தில் நடித்தவர்) நடித்தோம். பத்தண்ணாவுக்க்கும், பத்மனாதனுக்கும் உயர்ந்த குரல் வளம் உச்ச ஸ்தாயியில்தான் இருவரும் பாடுவர். பத்தண்ணாவின் குரல் மெல்லிதானது.பத்மானாதன் குரல் கனமானது. இரு குரல்களும் அருமையானவை நான் பெரிதாக அவர்களுக்கு ஏற்பப் பாட மாட்டேன்.ஆனால் என் பாடலில் சொற்சுத்தமும்.தெளிவும் ,உணர்ச்சிபாவங்களும் நிறைய இருக்கும். சிவானந்தனுக்கு பாடல்வராது.அவரின் மூலதனம் ஆர்வம் மட்டுமே. முத்துலிங்கமும் நன்றாகப் பாடுவர்.சன்னக் குரல் அவரது இந்த 5 பேரையும் அவரவர்களின் கெட்டித்தனங்களையும், பலகீனங்களையும் புரிந்து கொண்டு அவர்களை அவர்களின் முழுத்திறமைகளையும் வெளிப்படுத்தும் முறையில் தாஸீசியஸ் கையாண்ட விதம் அவரை ஒரு ஆளுமை மிக்க நெறியாளராக எனக்குக் காட்டியது. அற்றல் மிக்கவர்களை ஒரு நாடக நெறியாளன் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை நான் தாசீசியசிடமிருந்து கற்றுக் கொண்டேனஎன்னை அவர் புதியதொரு வீட்டில் நெறியாண்ட முறைக்கு ஒர் உதராணம் இது

கோடை கொடும்பனி மழைகுளிரை அஞ்சிக் கோடிப்புறத்தினில் ஒடுங்கி விடலாமோ? ஆடை களைந்து தலை மீதினில் அணிந்தோம் ஆழக்கடல் தயிர்  எனக் கடைய வந்தோம் என்ற வரிகளை நான் தக தகிட தக தகிட தக தகிட தக தீம்  எனும் ஜதிகளுக்கு அமைய சொல்லி நடிக்க வேண்டும்.தாஸீசியஸ் என்னிடம்  “மௌ வடமோடிக் கூத்து அசைவுகளை அடித்தளமாகக் கொள்ளுங்கள்,உடல் அசைவுக்கு பிரதான பங்களியுங்கள்.  நடிப்பை உடல் முழுதும் கொண்டு வாருங்கள்”  என்று ஒரு ஆற்றுப்படை குறிப்புத் தந்தார்.எற்கனவே எனது கூத்து நடிப்பை பல மேடைகளில் கண்டிருந்தவர் அவர் அவரது வ்ழிகாட்டற் குறிப்புகளை உள்வாங்கி நான் ஒத்திகையில் ஈடுபட்டேன் ஒத்திகைகளில் என் ஆற்றுகையினில் திருப்தி  தெரிவித்தார்.


மேடையேற்றத்தன்று எனதுதலையில் அணிய எனக்கொரு அழ்கான விக்கும் தந்தார். அதனை அணிந்ததும் என் தோற்றமே மாறி விட்டிருந்தது அன்று அப்பகுதி சிறப்பாக வந்தது. நாடகம் முடிய என்னிடம் ஓடி வந்த வந்து முகம் மலர மலர “மௌ சிறப்பாக அப்பகுதியினைச் செய்தீர்கள்” எனப்பாராட்டியதுடன்  “செம்மீன் விஜயன் மாதிரி இருந்தீர்கள்”  என்று சொன்னமை இன்றும் காதில் ஒலிக்கிறது புதியதொரு வீடு ஒத்திகை எனக்கு இன்னுமோர் புது அனுபவம் சுந்தரலிங்கமும், தாஸீசியசும் இணைந்து  செயற்பட்ட விதத்தினை அருகிலிருந்து அவதானித்தேன். இரண்டும் நாடக உலகில் இரு பெரும் ஆழுமைகள்.ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு,ஒருவர் திறமையை இன்னொருவர் மதித்து நட்போடு செயற்பட்ட விதத்தை அவதானித்தேன் 1989 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதியதொரு வீட்டை குழந்தை சண்முகலிங்கத்துடன் இணைந்து தயாரிக்கவும், நெறியாள்கை செய்யவும் இந்த அனுபவங்கள் எனக்குப் பெரிது உதவின.


நடிகர் ஒன்றியம் ஒரு கம்யூன் போல இயங்கிச் செயற் பட்ட காலத்தில் தாஸிசியஸ் நடிகர் ஒன்றியத்திற்காக நெறியாள்கை செய்த  நாடகம் தான் கந்த கருணை


கந்தன்கருணை உருவாக்கமும்தாஸீசியசும்
________________________________________________
இந்தநாடக உருவாக்கம் அற்புதமான ஒருஅனுபவம். மறக்கமுடியாத காலங்கள் அவை. அதிலே கந்தனாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.ஏறத்தாழ 30 வருட காலத்திற்கு முந்திய அந்த இளவயது நிகழ்வுகளை மீண்டும்அசை போடுவது மனதுக்கு மகிழ்ச்சி தரும் செயல் மாத்திரமன்றி உளத்திற்கு உற்சாகமும் வலிமையும் தரும் செயலுமாகும். அத்தோடு இளம்தலை முறை நாடகக் கலை நடிகர்கட்கு பழைய செய்திகள் பலவற்றைத் தரும் முயற்சியுமாகும்.

கந்தன் கருணைக்கு ஏற்கனவே இருநாடக எழுத்துருகள் இருந்தன. ஒன்று என். கே. ரகுநாதன் எழுதிய உரையாடலில் அமைந்த ஒரு நாடக எழுத்துரு. மற்றது நெல்லியடி அம்பலத்தடிகள் தாம் நடிப்பதற்கு என்.கே.ரகுநாதனின் எழுத்துருவை அடிப்படையாகக் கொண்டு காத்தான் கூத்துப் பாணியில் உருவாகியபாடல்களில் அமைந்தஎழுத்துரு. தாசிசியஸ் இரண்டாவது பிரதியை அடிப்படையாக வைத்தே அதற்கு மேடை வடிவம் கொடுத்தார்.


ஆற்றல் வாய்ந்த நெறியாளன் எழுத்துருவை அப்படியே ஒப்புவிப்பவன் அல்ல. எழுத்துரு ஒரு சிருஷ்டியாயின் எழுத்துருவின் அவைக் காற்றுவடிவம் இன்னுமொரு சிருஷ்டியாகும். ஆற்றல் வாய்ந்த நெறியாளனான தாசிசியஸ்யின் நெறியாள்கையில் கந்தன் கருணை எழுத்துரு இன்னொருவடிவம் பெற்றது.


தாசிசியஸ் நவீன நாடகநெறிமுறைகளை நன்கு அறிந்த ஓர் நெறியாளன். மக்கின்ரடயரிடமும் ஜராங்கனி சேரசிங்காவிடமும் பயிற்சி பெற்றவர். நவீன சிங்கள நாடகக் கலைஞர்களுடன் தொடர்பு கொண்டவர். ஆங்கில நாடக ஈடுபாடு மிக்கவர். மரபுவழிக் கூத்தில் சிறப்பாக யாழ்ப்பாணக் கூத்தில்அபிமானமும், காதலும், பாண்டித்தியமும் உடையவர். நாடக உலகில் நல்ல பல நாடகங்களை மேடையேற்றி நல்ல பெயர் பெற்றிருந்தார். மரபு வழிக் காத்தான் கூத்தினுக்குள் புதிய கருவை நெல்லியடி அம்பலத்தடிகள் புகுத்தி கந்தன் கருணையை உருவாக்க அதனை நவீன நாடக வடிவத்துக்குள் கொண்டுவந்தார். தாசிசியஸ் அவர் பழைய நாடகத்தை விட பலமாற்றங்களைச் செய்தார்.


பழைய கந்தன் கருணைசுண்டிப்பாக ஆட்களை இனம்காட்டியது. தாசிசியஸ் அதை மாற்றி மனிதப் பொதுமைப்படுத்தினார். கோயிற் போராட்டத்தை சண்டியர்களுக்கும் பக்தர்களுக்கும் நடக்கும் போராட்ட மாக்கினார். கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைவதை மறித்துஅடாவடித்தனமும், பலாத்காரமும், அடக்கு முறையும் பாவிப் போர் சண்டியர்கள். கோயிலுக்குள் நுழையப் போராடும் மக்கள் பக்தர்கள். முருகன் பக்தர்களிடம்தான் இறுதியில் தனது சக்திவேலைக் கொடுக்கிறார்.

மேடைஅசைவுகள்
_________________________________
மேடை அசைவுகளில் அவர் செய்த மாற்றங்கள் பிரமாதமானவை. முருகனும் நாரதரும் மேடையில் ஒருமூலைக் கோடிலிருந்து இன்னொரு மூலைக்கோட்டுக்கு அசையும்முறைமை, பக்தர்களும்சண்டியர்களும் மோதும் இடங்கள் ஆட்டக் கோலங்கள் கந்தன் நாரதர் சண்டியர்களின் மேடை அசைவுகள் என்பன கணக்காகத் திட்டமிடப்பட்டன.


திரையை அடிக்கடி திறந்து மூடாது ஒரே காட்சியில் அனைத்து நிகழ்வுகளையும் மேடைக்குள் கொணர்ந்தார். (பழைய கந்தன் கருணை அடிக்கடி திரை திறந்து மூடிய நாடகமாகும்.) நெல்லியடி அம்பலத்தடிகளின் கூத்துகாத்தான் கூத்து மெட்டில் மாத்திரமே அமைந்திருந்தது. தனது புதியகந்தன் கருணையில் அவர்ஏனைய இசைகளையும் இணைத்தார். பழைய கந்தன் கருணை துள்ளு நடையில் மாத்திரம் அமைய தாசிசியஸ் தாம் தயாரித்த கந்தன் கருணையில் மட்டக்களப்பில் வடமோடி ஆட்டமுறைகள், கண்டிய நடன அசைவுகள் யாழ்ப்பாண கிறிஸ்தவக் கூத்து அபிநங்கள் என்பவற்றைப் புகுத்தி அதனை ஈழத்துத் தமிழ்க் கூத்துச் சாயலுடையதாக்கினார்.


அனைத்துத் திறமைகளையும் ஒன்றிணைத்தமை தாசிசியஸ்யின் தனித்திறமை. கந்தன் கருணையில் கந்தனாக என்னை நடிக்கம் படிதாசிசியஸ் கேட்டுக் கொண்டார். அது தாசிசியஸ்யின் தனி முடிவானாலும் அதில் சுந்தரலிங்கம் சிவானந்தன், இளையபத்மநாதன், கந்தசுவாமி ஆகியோரின் ஆலோசனைகளும் அடங்கியிருந்தன.


இளைய பத்மநாதன் பக்தர்களின் தலைவர். நாடகத்தில் அவரொரு முக்கிய போராளி. மறைந்த ந.சிவராஜாஅசுரர்களுள் முக்கியதலைவர். திவ்வியராஜா (இன்றுக னடாவில் இருக்கிறார்.) பக்தர்களில்ஒருவர். பாலேந்திரா (அவைக்காற்றுக் கலைக்கழக ஸ்தாபகர் லண்டன்)  பக்தர்களுள் ஒருவர் மறைந்த இ.சிவானந்தன். பக்தர்களில் ஒருவர் முத்துலிங்கம்.(ஆங்கில ஆசிரியர் மாலைதீவு) நாரதர். இவர்கள்தான் இப்போதைக்க ஞாபகத்திற்கு வருகிறார்கள்.

நாடகஒத்திகைகள்
________________________________
நாடக ஒத்திகை வெள்ளவத்தைசீ. அவனியூ விலுள்ள ஒரு வீட்டிலும்,  நான் வெள்ளவத்தை பாமன் கடையில் தங்கியிருந்து பி.பி.ஸி. சுந்தரலிங்கத்து வீட்டு மொட்டைமாடியிலும் நடைபெறும். ஒத்திகைக்கு அனைவரும் கூடுவோம்.
தாசிசியஸ் மேடை அசைவுகளைப் படம்கீறி விளக்குவார். அவர் கற்பனைக்குள் இருக்கும் கந்தன் கருனையை நாம் புரிந்து கொள்வோம்.


சுந்தரலிங்கம், சிவானந்தன், இளையபத்மநாதன், முத்துலிங்கம் நான் கூறும் ஆலலோசனைகளை தாசிசியஸ் உள்வாங்கிக் கொள்வார். தாசிசியஸ் தலைமை தாங்க ஒரு கூட்டுப் பொறுப்புடன் கூட்டுத் தயாரிப் பாககந்தன் கருணை உருவாகிக் கொண்டுவந்தது.


நடிகர்கட்கு வடமோடி ஆட்டங்கள் பழக்கும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது. காத்தான் கூத்துப் பாடல் பழக்கும் பொறுப்பு இளையபத்மநாதனிடம் விடப்பட்டது. தான் கற்ற ஓரிரு கண்டிய நடன அசைவுகளை முத்துலிங்கமும், தாசீசியஸும் பயிற்றுவித்தார்கள். ஒரு மாதகாலத்திற்கு மேல் கடுமையான பயிற்சி தனிப்பட்ட முறையில் சிவானந்தனும் பாலேந்திராவும் இளைய பத்மநாதனும் இன்னும் சில இளைஞர்களும் வெள்ளவத்தையில் பாமன்கடையில் நான் வசித்த வீட்டில் வந்து ஆட்டம் பழகினர்.தாசிசியஸும்இவர்களுடன் சேர்ந்து வடமோடி ஆடத்தை என்னிடம் பழகினார்.தாஸிசியஸின் உடல் எதற்கும் வளைந்து கொடுக்கும் இயல்பினது.நாடகப் பயிற்சிகள் மூலம் சக்தி மிக்க ஒரு உடலை (Sound body) வைத்திருந்தார். அதனை பேணி வளர்த்தும் வந்தார்.


வடமோடி ஆட்ட முறைகளை எமது வீட்டுக்குவந்து பிரத்தியேகமாக அவர் பழகியதாகவும் ஞாபகம். எங்கும் எவரிடமும் கற்றுக் கொள்ளும் பேராண்மை அவரிடம் இருந்தது

பெண்களின்பங்களிப்பு
__________________________
___________
இவ்விடத்தில் இதனைச் சொல்வது மிக அவசியம் என நினைக்கிரேன் அதுதான் பெண்களின் பங்களிப்பு.


அற்புதமான காலங்கள் அவை. கொள்கை ஒருமையும் முற்போக்கு எண்ணமும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் துணிவும் கொண்ட திறன் மிகுந்த ஓர் இளைஞர், இளைஞிகுழாம் ஒன்றிணைந்து ஈழத்துத்தமிழ் நாடக உலகை தம் தோள்களிலே சுமந்தகாலம்அது.


தாசிசியஸின் மனைவி விமலா (இப்போது லண்டனில்) கந்தசுவாமியின் மனைவி பார்வதி (இப்போது கனடாவில்;) சிவாநந்தத்தின் மனைவி முத்தாச்சி.(இப்போது வன்னியில்) எனதுதுனை வியார் சித்திரலேகா. (இப்போது மட்டக்களப்பில்) இன்னும்ஜெஸி, (தாசிசியஸின்தங்கை) பெயர் ஞாபகம் வராத பல பெண்கள். இந்நாடக இயக்கத்தில் இணைந்திருந்தனர். ஆலோசனைகள் வழங்கினார். பக்கபலமாக நின்றனர். விமர்சனம் செய்தனர். உற்சாகம் ஊட்டினர். நாடகக் கொம்யூனாக நாம் வாழ்ந்த காலமது. அப்போது அனைவரும் இளம்வயதினர். அனைவரும்மணமானபுதுத்தம்பதிகள்.


பார்வதியும் முத்தாச்சியும் விமலாவும் கொண்டுவரும் பலகாரங்கள், சாப்பாடுகள், குளிர்பானங்கள் நடிகர்கட்கு பெரும் உற்சாகம் அளிக்கும். தாஸீசின் மனைவியார் விமலா சிரமமெடுத்துத் தயாரித்து வரும் நூடில்ஸ்சை சுவையாகச் சாப்பிடுவது போலச் சாப்பிட்டு பிறகு அவரைக் கிண்டல் பண்ணுவோம்.அவர் எங்களோடு செல்லமாகக் கோபித்துக் கொள்வார்
ஒரு நாடகக் கம்பனிதான் அது


வடமோடிக் ;கூத்தாட்டதிற்குஒத்துழைக்காதஉடம்புகள்
 

வடமோடிக் கூத்தினை நடிகர்கள் அனைவருக்கும் பழக்க நான் எடுத்தகடும் முயற்சிகள் இப்போது ஞாபகத்திற்கு வருகின்றன. ஆடுவதற்கு உடம்பு ஒத்துழைக்காத சிலருக்கு ஆட்டம் கற்பிக்க வேண்டியிருந்தது. ஆட்டத்தை தன்வயப்படுத்த சிவானந்தன் எடுத்த அரும் முயற்சிகளை பகிடியுடனும் வியப்புடனும் நாம்பார்த்தோம். நா.சுந்தரலிங்கத்தின் கிண்டல்களும் பகிடிகளும் சிரிப்பொலிகிளப்பும். மகிழ்ச்சி கரமான சூழ்நிலையில் நாடகம் உருவாகியது. கந்தன் தெய்வயானையும் தேவ உலகில்இருத்தல் நாரதர்வருகை பின்னர் நாரதர்கந்தனுடன் வான வீதிவழியாக இலங்கைவரல் மாவிட்டபுரக் கோயிலுக்கு முன்பக்தர்கள்நிற்றல். காவடியாட்டம். பக்தர்கள்அசுரர்கள் உரையாடல் கந்தன்நாரதர் உரையாடல் கந்தனை அசுரர்கள்தடுத்தல். பின்கந்தன் உக்கிரமான ஓர் ஊழித் தாண்டவம் ஆடி சக்தி வேலை பக்தர்களிடம் தருதல் என்றவகையில் தாசிசியஸ் நாடகத்தைஅமைத்திருந்தார்.


தாசீசியஸுடன் வேலை செய்வது நல்ல அனுபவமாகவிருந்தது. ஏற்கனவே பேராசிரியர்களான வித்தியானந்தன், சிவத்தம்பி, கைலாசபதி ஆகியோரின் கீழ் நாடகப்பயிற்சிகளைப் பெற்றும் இணைந்தும் தனியாகவும் நாடகங்களைத் தயாரித்த எனக்கு தாசீசியஸியின் முறைமை புதுமையாகவும் வித்தியாசமாகவும் தெரிந்தது. மரபுவழி நாடகமொன்றை எவ்வாறு நவீனமாக மேடையில் அளிக்கை செய்யலாம் என்பதை நான் தாசிசியிடம் கற்றுக் கொண்டேன். நான்தாஸீசியசிடம் கற்றவை அதிகம் தாஸீசியஸ் அபாரமான கற்பனைத்திறன் வாய்ந்தவர். அவர், படீர்படீர் என கற்பனை பண்ணுவார். மாற்றிமாற்றி அசைவுகளை அமைப்பார். அது அவருடன் கூட வேலை செய்பவர்களுக்குச் சிரமம் தரினும் ஒரு கலைஞனின் குணாம்சம் அது.


ஒன்றை உருவாக்கும் போது எழுதி அழித்து எழுதி அழித்து திருப்திவரும் வரை எழுதி அழித்து முழுமை காணும் வரை உழைப்பதுதான் உண்மைக்கலைஞனின் இயல்பு. அக்கலைஞனின் முயற்சியினை நான் தாஸீசியஸ்யிடம் கண்டேன்.

இளைய பத்மநாதன் அழகாகப்பாடுவார். உச்சக்குரல் அவரது வடமோடி ஆட்டத்தை நான் பழக்குகையில் அதனை உள்வாங்கி அவர் அசைந்து வருவதும் தாசிசியஸ் வடமோடி ஆட்டத்தை உள்வாங்கி ஆடி வருவதும் மிக அழகாக இருக்கும். பத்தண்ணாவின் குரலை நாம் அனைவரும் ரசிப்போம். எனது ஆட்டத்தை அவர்கள் வியப்பார்கள். இவ்வண்ணம் அனைவரும் தம்மிடம் இருந்த திறமைகளை ஆளுக்கு ஆள் முழு நிறைவோடும், மகிழ்வோடும் பகிர்ந்தும் மற்றவரிடமிருந்து எடுத்தும் வளர்ந்த காலங்கள் அவை.


தாசிசியஸ் என்னிடம் “மௌனகுரு நாடகம் படிப்படியாக உச்சம் நோக்கிச் செல்கிறது. உச்சத்தின் உச்சமாக கந்தனின் ஊழித்தாண்டவம் அமைய வேண்டும். ஊழித்தாண்டவத்தின்உச்சத்தில் வேகமான ஆட்ட முடிவில் வேலாயுதத்தை போராடும் பக்தர்களின் கையில் கந்தன் கொடுத்து அவர்களைப் போராடப் பண்ணும் உணர்ச்சியைக் கொடுக்க வேண்டும் அதன் உச்சமாக ஆயுதம் கையில் ஏந்திய மக்கள் மக்கள் முழு உணர்வுடன் கொடுமைகளின் குறியீடாக அடைத்துக் கிடக்கும் கோயிற்கதவுகளை உடைத்து ஆயுதபாணியாக செல்ல வேண்டுமென்று நாடகத்தினுடைய தனது நோக்கத்தையும் நாடகக்கட்டமைப்பையும் எனக்குவிளக்கி அந்தநடன அமைப்பை உருவாக்கும் பொறுப்பை என்சுதந்திரத்திற்கே விட்டிருந்தார்.

கந்தனின்உக்கிரதாண்டவம்
_________________________________________
இரண்டுநாள்சிந்தனை - இரண்டு நாள்பயிற்சி எடுத்த பின்னர் தத்தகிடதத் தகிடதத்தகிட தீம்தீம் என்றதாளக் கட்டுடன் அமைந்த பொடியடி, நாலடி, எட்டடி, பாய்ச்சல் என்ற வடமோடி ஆட்ட முறைகளைத் தொகுத்து நான் உருவாக்கிய கந்தனின் ஊழித்தாண்டவ ஆட்டத்தை நான் தாசிசியஸுக்கு ஆடிக்காட்டிய போது தாசிசியஸ் என்னைப்பார்த்த அந்த திருப்தியான பார்வை தாசிக்கேயுரிய ஒருசிரிப்பு. அந்த ஆட்டத்தில் தாசிசியஸ் தோய்ந்து நின்ற விதம் இப்போதும் ஞாபகத்தில்இருக்கிறது.


நாடகம் மேடையேறிய போதெல்லாம் இக்கடை சிக்காட் சிகர கோஷம் பெற்றது. நாடகத்தில் அக்கடைசிக்காட்சி மிக உச்சமாகயிருந்ததாக நாடகம் பார்த்தபலர் அபிப்பிராயப்பட்டனர்.

நாம் உருவாக்கிய அந்த ஆட்டம் நாடகத்தின் உச்சத்திற்கு உதவியதாயினும் தாசிசியஸியின் திட்டமும் கற்பனையும் தான் அந்த ஆட்டத்திற்கு அடித்தளமாகும். தஸிசியஸ் போட்டுத்தந்த தடங்களின்வழி சென்றுதான் அந்த நாட்டியத்தை நான் உருவாக்கியிருந்தேன்.


தாசிசியஸியிடம் நிறைந்த கற்பனை இருந்தது. ஆனால் அதனை வெளிக் கொணரத் திறன் வாய்ந்த கலைஞர்கள் இன்மைதான் அன்றைய துயரம். தாசிசியஸுக்கு மாத்திரமல்ல பிரச்சினை .அன்றைய சிறந்த தமிழ் நாடகத் தயாரிப்பாளர் அனைவரும் இப்பிரச்சினையை முகம் கொண்டனர். தொழிற் தேர்ச்சியும் திறமைமிக்கதாக நமது சிங்களச் சகோதரக் கலைஞர் இருக்க நாமோ அமெச்சூராக அன்றியிருந்தோம். இதனாலேதான் தமக்கு ஒரு மாத கடும் பயிற்சி தேவைப்பட்டது.

விக்கிரகம் இல்லாத கோயிலும் கோயில் இல்லாத விக்கிரகமும் பயிற்சி அற்றோராகவும், வசதி அற்றோராகவும் அரச ஆதரவு அற்றோராகவும் ஆனால் கருத்துபலமும் சமூக நோக்கும் மிக்கோராகவும் நாமிருந்தோம். ந்மது சகோதர இனத்தினராக அவர்கள் கருத்துச் செழுமை அதிகம் இல்லாதவராகவும் பயிற்சி உடையராயும்அரச ஆதரவும் ஊக்குவிப்பும், நாடகக் கலையை வெளிநாடுகளிலும் உள் நாட்டில் வெளிநாட்டு நிபுணர்களிடமும் பழகும் வாய்ப்புப் பெற்றவர்களாகவும் இருந்தார்கள். பேராசிரியர் சிவத்தம்பி கூறியபோல “எமதுநாடகம்  கோயில் இல்லாத விக்கிரகம் போலிருந்தது. அவர்களது நாடகம் விக்கிரகம் இல்லாத கோயில் போலிருந்தது” எங்களிடம் விக்கிரகம் இருந்தமைக்குக் காரணம் நாடகத்தை நாம் சமூக மாற்றத்திற்குரிய தொரு சக்தியாகவளர்த்து எடுத்தமைதான். அதுவே எங்களது வலிமையாக இருந்தது. சிறந்த நாடகம் தயாரிக்க சரியான நாடகப் பிரதிகள் இல்லை என்று கூறிய அவர்கள் பிற நாட்டு நாடகங்களைத் தழுவலாக்கம் செய்து மேடையிட்டார்ள் நாமோ எந்தவித உதவியுமின்றிதவறுகள் விட்டு மீண்டும் மீண்டும் தனித்து நின்றியங்கி எமக்கான நாடகத்தை உருவாக்க முயன்றோம்.


ஒருவார்த்தையில் கூறுவதானால் அவர்கள் பிறர் தயவில் நின்றனர்.நாமோ சொந்தக் காலில் நின்றோம்.இதில் எது சரி எது பிழை என நான் முடிவு கூறவோ வாதிடவோ வரவில்லை. இதனால் இரு சாராரும் இதற்கான சாதக பாதகங்களைப் பெற்றுக்கொண்டோம்,இலங்கையின் இரு முக்கிய இனத்தினரின் நாடகப் போக்குகளை இவையும் நிர்ணயித்தன.

கந்தன் கருணை ஒளியமைப்பும் ,இசையமைப்பும்
____________________________________________
நவீனநாடகம்என்றவகையில் கந்தன் கருணையில் நவீனஒளியமைப்பு, இசையமைப்பு, ஒப்பனை என்பனவற்றிலும் அதிககவனம் செலுத்தப்பட்டது.

கந்தன் கருணையில் சண்டியர்கள் பக்தர்கள்மோதலில் பறையும் உடுக்கும் மாறி மாறிப் பயன்படுத்தப்பட்டன. மிருதங்கம்,;தபேலா,வயலின், ஆர்மோனியம், டோல்கி என்பன பயன்படுத்தப்பட்டன. பாட்டின் சுவையும் இடமும் அறிந்து இவை பயன் படுத்தப்பட்டன.  இவையாவும் தாஸீசியசின் ஏற்பாடுகளே இசை ஒத்திகையைப் பல நாட்கள் செய்தோம் ஒளி அமைக்கும் பொறுப்பை சுந்தரலிங்கம் ஏற்றுக் கொண்டார் எனநினைக்கிறேன், ஏன் இதில் சுந்தரலிங்கம் நடிக்கவரவில்லை என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.  ஆட்டமும்பாட்டும் சுந்தரலிங்கத்திற்கு வராது. நடிப்புநன்குவரும்..  ஓரிரு நாட்கள் என்னிடம் வந்து வடமோடி ஆட்டம் பழகிய சுந்தரலிங்கம் என்னிடம்வந்து “எனக்குஉதுசரிவராது” என்று சொன்னமைதான் ஞாபகத்துக்கு வருகிறது கந்தன் கருணையின் ஒளியமைப்பு தாஸீசியசின்  ஆலோசனையின் கீழ்த்தான் செய்யப்பட்டது சுந்தரலிங்கமும். ஒரு நெறியாளரானமையினால் நெறியாளரின் தன்மைகளையும் அதிகாரங்களையும் அவர் அறிந்திருந்தார். நாடக ஓட்டத்திற்கு இயைய ஒளியமைப்பு இணைந்திருந்தது. உணர்வுகளைத் துலக்கமாக காட்ட நிழலொளிகள் பயன்படுத்தப்பட்டன. பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் துல்லியமாகக் காட்ட ஒளிப்பொட்டுக்கள் பயன்படுத்தப்பட்டன.


பகதர் சண்டியர் மோதல்களைக் காட்டவும் கந்தனின் கோபத்தையும் உக்கிர தாண்டவத்தையும் காட்ட சைக்கிலோறாமாவில் சிவப்புப் பரப்பொளி பயன்படுத்தப்பட்டதோடு முக்கியமான அசைவுகளில் கந்தனுக்குப் பொட்டொளியும் போடப்பட்டது. ஒளியால் மேடையில் ஓவியம் தீட்டினார் சுந்தரலிங்கம்,மிகப் பின்னாளில் நாடக மேடையில் ஒளி நிபுணராகவும் புதிய ஒளி வித்தைகளைக் கண்டு பிடித்தவராகவும் கருதப்படும் அடோல்ப் அப்பியா பற்றி அறிய வந்த காலங்களில் சுந்தரலிங்கமும் தாஸீசியசும் இணைந்து அமைத்த கந்தன் கருணை ஒளியூட்டலின் தாற்பரியங்களைப் புரிந்து கொண்டேன் இவற்றையெல்லாம் ஒளிப்படமாகப் பிடித்து வைக்கும் வாய்ப்புகள் எமக்கு அன்று கிடைக்கவில்லை
நாம் இழந்தவை அதிகம் எத்தனை பெரும் துயரம்?

தாசிசியஸின் கந்தன் கருணை நெறியாள்கை


தாசிசியஸ் நாடகத்தையும் நிகழ்வுகளையும் அமைத்தவிதம் அற்புதமாகவிருந்தது.(அவைதனியாக எழுதப்பட வேண்டியவை.) கந்தனும் நாரதரும் தேவயுலகில் இருந்து புறப்பட்டு வானவீதி வழியாக யாழ்ப்பாணம் நோக்கிச் செல்வோமே– நாங்கள் யாருக்கும்அஞ்சமாட்டோமே என்று பாடியபடி செல்லும்பாடலும் தன்னுடைய பெயர் கந்தன் என்று கூறி வானுலகில் இருந்து வந்த கந்தனும் நாரதரும் கோவிலுக்குள் நுழைய முயன்றதும்சண்டியர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டுநின்று கந்தனாம்கந்தன் - இவன் எங்கத்தைக்கந்தன் என்று பாடிப்பாடி ஆடும் காட்சியும், இறுதிக்காட்சியில் மேடை முழுவதும் சுழன்று ஆடியபடி அதே வேகத்தில் வந்து கந்தன் தந்துவிட்டேன் நான்தந்து விட்டேன் - அன்னை தந்த சக்தி வேலைத்தந்து  விட்டேன். என்று உச்சாடனத் தொனியில் கூறிவேலை பக்தரிடம் கொடுப்பதும் தாசிசிஸியஸ் காட்சிகளைச் சுவைபட அமைத்தமைக்குச் சில உதாரணங்கள் இப்பாடல்களும் காட்சிகளும் இந்நாடகத்தை பார்த்தவர்களின் வாயிலும் மனதிலும் நீண் டநாட்கள் இருந்ததாகபின்னர் அறிய முடிந்தது.

ஒத்திகையில் ஒருபோதும் தாஸிசியஸ் உட்கார்ந்து கட்டளையிடுபவராக அன்றி நடிகர்களுடன் ஒத்திகை மேடைகளில் தானும் இணைபவராக இருந்தார்.அது நடிகர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளித்ததாயினும் தாஸிசியஸைப் போலச் செய்ய அதாவது தாஸீசியஸை இமிற்ரேட் பண்ண தொடங்கினார்கள் தாஸீசியஸ் அவற்றை ஒரு போதும் அனுமதித்ததில்லை. “மேடையில் எல்லோரும் என்னைப்போலச் செய்யக் கூடாது உங்களைப் போலச் செய்யுங்கள்” என அவர்களை அவர் வழிப்படுத்தினார்.

கந்தன்கருணைமேடையேற்றங்கள்
______________________________________________
இக்கந்தன் கருணையை நடிகர் ஒன்றியம் பம்பலப்பிட்டி சரஸ்வதி அரங்கிலும் பேராதனைப் பல்கலைக்கழக திறந்த வெளியரங்கிலும் மேடையிட்டது. அங்கெல்லாம் பலத்த வரவேற்பை பொதுமக்களிடம் இந்நாடகம் பெற்றது. புதிய பல நண்பர்கள் அறிமுகமாகினர்.


நடிகர் ஒன்றியத்தின் கந்தன் கருணையை பார்க்க நெல்லியடி யாழ்ப்பாணப் பகுதிகளிலிருந்து பலர் கொழும்பு வந்திருந்தனர். அதில் பலர் பழைய கந்தன் கருணையி நடித்தவர்கள் நாடகத்தை ரசித்த அவர்கள் இக்கந்தன் கருணையில் அழகியற்தன்மை அதிகம் இருந்ததாக விமர்சனம் வைத்தனர்.


கலைஎன்பதில்அழகுஇருப்பதுமிகஅவசியமானஒன்றுதானே.
ஆம் தாஸீயஸ் நெறியாள்கை செய்த கந்தன் கருணையில் நாடக அழ்கியல் மிகுந்திருந்தது

பொறுத்தது போதும்
____________________________________
இலங்கயில் தாஸீசியஸின் தேர்ச்சி மிக்க படைப்புகளில் .(master piece} பிரதானமானதுபொறுத்தது போதும் இது தாஸீசியஸ் தானே எழுதி, நெறியாள்கை செய்த நாடகம் ஆகும்.கோடை போன்ற யதார்த்த நாடகங்களையும், புதியதொரு வீடு,,காலம் சிவக்கிறது போன்ற ஒயிலாக்க நாடகங்களையும்,பிச்சை வேண்டாம் போன்ற மொழி பெயர்ப்பு நாடகங்களையும்,யாழ்ப்பாண மரபு வழிக் காத்தான் கூத்துப் பாணியிலமைந்த . கந்தன் கருணை போன்ற மரபு வழி தழுவிய நாடகங்களயும் நெறியாள்கை செய்து மிகுந்தஅனுபவம் பெற்ற  தாஸீசியஸ்,  நடிப்பிலும்  தேர்ச்சிமிக்கவரா யிருந்ததுடன் உலக நடிப்புக் கோட்பாடுகளையும் அறிந்திருந்தார் அதனால்தான் அபசுரத்துள் அவரால் அபத்த பாணி நடிப்பை அறிமுகம் செய்ய முடிந்தது.

நாடகப் பயிற்சிப்பட்டறைகளை நடத்தி வந்த அவர் தன் நடிப்புக் கோட்பாடுகளை பரீட்சிக்கும் இடமாகவும் பட்டறைகளைப் பயன் படுத்தி வந்தார். இலங்கைத் தமிழருக்கான ஒரு தேசிய அரங்கை உருவாக்குதல் அவரது நோக்கமாக இருந்திருக்கலாம். இந்தக் கோட்பாட்டுடன்  அன்று தமிழர்களுட் சிலர் நாடக முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டுமிருந்தனர். . இலங்கையில் எம் தமிழ் மக்களின் இன்னல் கண்டு மனம் கொதித்த கலைஞர்களுள் ஒருவர் தாஸீசியஸ்.


.சிங்கள நாடகங்களுக்குச் சமாந்திரமாகத் தமிழ் நாடகம் மிளிர வேண்டும்,ஏன் அதைவிடப் பல படிகள் கூட மிளிர வேண்டும் என அவாவுற்ற தாஸீஸியஸ் அதற்கான செழுமையான அடிப்படையாக, நமது நாடக மரபின் வேர்கள்  நமது கூத்துக்களில் உறைந்து கிடக்கிறது என உணர்ந்துஅக்கூத்து மரபை  ஆழ்ந்து கற்கப் புறப்பட்டார், அப்பயணம் அவரை இன்னொரு திசைக்கு எடுத்துச் சென்றது
இக்கூத்து மரபைத் தேடிகிராம கிராமமாக அலைந்து அவற்றைத் தொகுத்து, அன்றைய இலங்கை வானொலியில் ஒலிபரப்பினார். மன்னருக்கு அவர் செய்த விஜயங்களையும் அந்த அனுபவங்களையும் என்னிடம் பகிர்ந்த தாஸீசியஸ்
 ‘’மன்னார் பற்றி வித்தியர் (பேராசிரியர் வித்தியானந்தனை எமது மட்டத்துள் இப்படித்தான் அன்று அழைப்போம்) சொன்ன பல விடயங்கள் மறு வாசிப்பிற்குறியவை மௌ”
என்று ஒரு நாள் என்னிடம் கூறினார். அவர் இளமையிலேயே யாழ்ப்பாண கூத்துமரபை நன்கு  அறிந்திருந்தார்.. பிற்காலத்தில் ஈழத்துக் கூத்துகள் அனைத்தையும்.அறியும் முயற்சிகளில் தீவிரமாக ஏற்று கொண்டுமிருந்தார். கந்தன் கருணை நாடகம் மூலம் காத்தான் கூத்து மரபையும் அறிந்து கொண்டார்.எம் மூலம் மட்டக்களப்பு வடமோடிமரபை அறிந்து கொண்டார்,தானாகத் தேடி முல்லைத்தீவுக் கோவலன் கூத்து மரபு,,மன்னார்க் கூத்து முறைகளையும் அறிந்தார்.


இதன் பின்னர் உருவானதுதான் பொறுத்தது போதும். தன்சிந்தனைகளயும்,நாடகக் கோட்பாடுகளயும், தேடலையும் வெளிப்படுத்தும் ஒரு நாடகப்பிரதியை அவர் தேடி அலைந்திருக்க வேண்டும் அப்படி ஒரு பிரதி கிடைக்காத போது தாஸீசியஸ் தானே எழுதிய நாடகப்பிரதிதான் பொறுத்தது போதும்

மஹாகவியின் புதியதொரு வீடு நாடகமும் மீனவ வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டதுதான். அப்பாத்திரங்கள் தமக்கு ஏற்படும் துன்பங்களை வாழ்ந்தே கடக்கின்றன.அவை போராட்ட குணங்கள் கொண்டவை அல்ல என்றொரு விமர்சனம் அந் நாடகம் பற்றி இருந்தது. அவற்றை எதிர் கொண்ட தாஸீசியஸ் அவ்விமர்சனகளுக்குப் பதில் தரும் முகமாக எழுதிய நாடகம் போல பொறுத்தது போதும் அமைந்துள்ளது. இந்நாடகத்தில் மீனவர் பாத்திரங்கள்தமக்கு ஏற்படும் துன்பங்களை வாழ்ந்தே கடக்காமல் தமது உரிமைகளுக்காக போர்க்குரல் எழுப்புகின்றன.அதிகாரத்தை எதிர்த்துப் போராடுகின்றன இந் நாடகத்தில் யதார்த்தம், கூத்து, காவியப் பண்பு என்பனவற்றுடன் மேயர் ஹோல்டின் உடற் பொறிமுறை நடிப்பையும்(Bio Mechanic Acting) தழுவிச் சென்றது. ஈழத்துத் தமிழ் நாடக உலகுக்கு பொறுத்தது போதும் ஒரு புது வரவு மாத்திரமன்று முன்னோடி நாடகமுமாகியது,


ஒரு வகையில் இதனை நான் கீழைத்தேயப் பண்புகள் நிரம்பிய ஒரு முழுமை அரங்கு(Total Theatre )என்பேன்.


இந் நாடகத்தை அவர் 1970 களின் பிற்பகுதியில் கொழும்பிலும்,1980 களில் யழ்ப்பாணத்திலும்,புலம்பெயந்த பின் லண்டனிலும் தயாரித்தார்..தமிழகத்தில் நாராய் நாராய் நாடகப் பயணத்தின்போது. யாழ்ப்பாண நடிகர்களையும் புலம் பெயர் நடிகர்களையும் கொண்டு இதனை மேடையேர்றினார்
.”பொறுத்து போதும் தாஸீசியஸ்” என்ற பெயரை நாடக உலகில் இது அவருக்குப் பெற்றுத்தந்தது
பொறுத்தது போதும் நாடகம்  ஜனாதிபதி விருது பெற்றுப் பல பரிசில்களையும் பெற்றது


நாடக அரங்கக் கல்லூரியும் தாஸீசியசும்:


1980 களில் குழந்தை சண்முகலிங்கம் யாழ்ப்பாண நாடக அரங்கக் கல்லூரியை அரம்பிக்கின்றார். தாஸீசியசை நம்பித்தான் அதனை தான் ஆரம்பித்ததாகப் பின்னொரு காலத்தில் சண்முகலிஙம் என்னிடம் கூறியுமுள்ளார், .நாடகத்திற்கொரு கல்லூரியா? என யாழ்ப்பாண நாடக வ்ல்லுனர்கள் எனக் கருதப்பட்டோர் புருவமுயர்த்திய காலம் அது.


அரங்கக் கல்லூரி நாடகப் பயிற்சிப்பட்டறையில் கலைப்பேரரசு பொன்னுத்துரை, அரசையா, யாழ்ப்பாணச் சுந்தரலிங்கம், லோகனாதன், பிரான்சிஸ் ஜெனம், பேர்மினஸ், தேவராஜா போன்ற பெயர் பெற்ற வயது சென்ற பழம் பெரும் நாடக நடிகர்களும் இணைந்து நாடகப் பயிற்சி பெற்றனர்.


உடல் தளர்வுப் பயிற்சி,அவதானப் பயிற்சி,கற்பனைப் பயிற்சி, குரற்பயிற்சி, நடிப்புப் பயிற்சி எனபன தனக்கு புதுமையாக இருந்ததுடன் தன்னுடைய நாடக அறிவையும் திறனையும் வளர்க்கப் பேருதவியாகவும் இருந்தன எனக் கலைப்பேரரசு என்று அழைக்கப்பட்ட பொன்னுத்துரை என்னிடம் கூறியுள்ளார். தாஸீசியஸிலும் பல மடங்கு வயது குறைந்த இவர்கள் தாஸீசியசிடம் மாணவ நிலை நின்று பயிற்சி பெற்றனர்.அப்போது நான் அரங்கக் கல்லூரியுடன்  பெரிதான தொடர்பு கொண்டிருக்கவில்லை.யாழ் பல்கலைக் கழகத்தை மையமாக கொண்டு நான் நாடகங்களைச் செய்து கொண்டிருந்ததுடன் அவைக்காற்றுக் கலைக்  கழகத்துடன்  இணைந்து     பணியாற்றிக்    கொண்டுமிருந்தேன். அவைகாற்றுக் கலைக் கழகத்தில் ஆரம்பத்தில் பாலேந்திரா, நிர்மலா, நித்தியானந்தன், ஏ.ஜே.கனகரத்தினா, நுஹ்மான், சித்திரலேகா, நான் ஆகியோர் அங்கம் வகித்தோம். எனது இரு நாடகங்களான அதிமானிடன், தலைவர் ஆகியன அவைக்காற்றுக் கலைக் கழகத்திற்காகத் தயாரிக்கப்பட்டு வீரசிங்கம் அரங்கில் மேடையேறின..


நாடக அரங்கக் கல்லூரியும் அவைகாற்றுக் கலைக் கழகமும் தனித் தனியாக இயங்கின. அவைக்கார்றுக் கழகம் மொழிபெயர்ப்பு, பிறமொழி தழுவல் நாடகங்களில் கவனம் செலுத்தியது. நாடக அரங்கக் கல்லூரி.சுய ஆக்க நாடகங்களில் கவனம் செலுத்தியது.


தாஸீசியஸ் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சனி, ஞாயிறுகளில் நாடகப் பயிற்சிபட்டறைகள் நடத்திவிட்டு ஞாயிறு மாலை புறப்பட்டுக் கொழும்பு செல்வதை வழமையாகக் கொண்டிருந்தார். இந்த நாட்களில் நாடக அரங்கக் கல்லூரி தனது அங்கத்தவர்களுக்கு நாடகப் பயிற்சி அளித்ததுடன் பாடசாலை மாணவர்களுக்கும் நாடகப் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தியது.


அச்சமயம் நான் பலகலைக் கழகதிற்காகப் புதியதொரு வீட்டையும் தயரித்துக் கொண்டிருந்தேன். சிதம்பரனாதன் கண்டுபிடிக்கப்பட்ட காலம் அது, சிதம்பரனாதன் நாடகத்துள் வந்தமை ஒரு தனிக்கதை, அவர் நான் தயாரித்த புதியதொரு வீட்டில் பிரதான பாத்திரமான மாசிலன் பாத்திரம் ஏற்றிருந்தார். பாலசுகுமார் அதில் எடுத்துரைஞர் பாத்திரம் ஏற்றிருந்தார்.. தாஸீசியஸை நான் எனது மணவர்களின் பயிற்சியைப் பார்க்குமாறு அழைத்திருந்தேன். அவர் பல்கலைக்கழகம் வந்து நாடக ஒத்திகை பார்த்ததுடன் மாணவர்களுக்குச் சில பயிற்சிகளையும் அளித்துச் சென்றார்.


என்மாணவர்கள் சிலரை நாடக அரங்கக் கல்லூரியில் தாஸீசியசிடம் நாடகப் பயிற்சி பெற அனுப்பியும் வைத்தேன். அப்படி நான் அனுப்பியவர்களுள் ஒருவரே சிதம்பரனாதன். தாஸீசியசின் பட்டறைகள் சிதம்பரனாதனை மேலும் புடம் போட்டன.


1980 களில் அர்ங்கக் கல்லூரி வீரசிங்கம் மண்டபத்தில் மேடையிட்ட கூடிவிளையாடு பாப்பா, கோடை, கந்தன் கருணை, பொறுத்தது போதும் முதலான நாடகங்களுக்கெல்லம் பின்னின்று இயக்கிய பிரதான சக்தி தஸீசியஸே. என்னை நாடக அரங்கக் கல்லூரிக்குள் உள் வாங்கும்படி குழந்தை சண்முகலிங்கத்துக்கு ஆலோசனை கூறியவர் தஸீசியஸே அதனை குழந்தை சண்முகலிங்கம் தனது ஒரு கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.


“கொழும்பில் நாடக டிப்ளோமா முடித்த கையோடு நாடக அரங்கக் கல்லூரியை ஆரம்பிக்கும் வாய்ப்புக் கிட்டியது.23.01.1978 இல் அதனை ஆரம்பித்தோம். நண்பர் தாஸீசியசை நம்பித்தான் கல்லூரியை ஆரம்பித்தோம். அவரும் கல்லூரிக்காக நிறைய உழைத்தார். 1980 இல் அவர் அவர் வெளிநாடு செல்லத் தீர்மானித்து வெளியேறினார். வெளியேறுவதற்கு முன்னர் அவர் கூறினார்.


”மௌனகுருவைக் கேளுங்கோ,வற்புறுத்திக் கேளுங்கோ அவன் வருவானென்டால் எவ்வளவோ நல்லது. நீங்கள் கேட்டால் அவன் கட்டாயம் வருவான்.ஓம் கேளுங்கோ” என்றார்.நாங்கள் மௌனகுருவிடம் சென்றோம் எம்முடன் சேர்ந்து பணி புரிய வருமாறு அழைத்தோம்.அபசுரம் நாடக நெறியாள்கையைப் பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொண்டோம்.அவர் ஒப்புக் கொண்டார்.அன்றுமுதல் எங்கள் உறவு நெருக்கமானது. அவருடனான எமது நாடகப் பணி நீண்டகாலம் தொடர்கிறது அவரோடு இணைந்து பணி புரிந்த காலம் இன்றும் இனிக்கிறது. என்றும் இனிக்கும்.”மீள நினைந்திடும் போதெல்லாம் ஆனந்தமாகவே இருக்கும்.” ஆம் என்னை நாடக அரங்கக் கல்லூரிக்குள் இழுத்துவிட்டவர் நண்பர் தாஸீசியஸ்.இதற்காக நான் அவருக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளேன்.


அங்கு சென்றபின் எனக்கு யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்துக்கு அப்பால் மனித உறவுகள் கிடைத்தன,. எனது யாழ்ப்பாண நாடக வாழ்வு அர்த்தமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக மாறியது. .நாடக அரங்கக் கல்லூரியினர் எனது
நெருக்கமான உறவுகள் ஆயினர். முக்கியமாக எனது பெரும் கனவான சங்காரத்தைப் புதுப் பொலிவோடு வீரசிங்கம் மண்டபத்தில் மேடையிடும் மகாத்தான வாய்ப்புக் கிட்டியது. யாழ்ப்பாண வெளி உலகு எனக்கு அறிமுகமாகியது  மிக நெருக்கமான ஆத்மார்த்த உறவுகள் பல பெற்றேன் தாஸீ யான் இதற்கிலனோர் கைம்மாறே பின்னாளில் தாஸீசியஸ் லண்டனிலும் சுவிஸிலும் நாடக உலகில்புரிந்த பெரும் சாதனைகளை அறிந்து மிக மகிழ்ந்தேன். அவர் திறமையினை இனம் கண்டு அவருக்கு கனடாவில் 2006 இல் வாழ்நாள் சாதனையாளர் இயல் விருது வழங்கப்பட்டது.


மலை வானை நோக்கி வளர்ந்து மேகத்தோடு உறவாடினாலும் அதன் கால்கள் மன்ணிலேதான் ஊன்றி நிற்கின்றன. புலம்பெயர்ந்தோர்கள் புலத்தில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் அவர்களது உள்ளமும் உணர்வுகளும் பிறந்த மண்னைச் சுற்றிச் சுற்றியே அலைகின்றன  தமிழகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் கிடைத்த மதிப்பும் பேரும் தன் பிறந்த மண்ணில் தனக்குக் கிடைக்கவில்லையே என்ற பெரும் ஆதங்கம் தாஸீசியஸ் மனதில் என்றும் உண்டு தனது எழுத்தில் தாஸீசியஸ் பின் வருமாறு குறிப்பிடுகிறார் “ விமர்சகர்களால் தாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டவன் நான்.  .பிற்காலத்தில் அவர்கள் அதை உணரும் நேரத்தில்நான் அங்கிருந்து புறப்பட்டு லண்டனுக்கு வந்துவிட்டேன்.ஈழத்தைப் பொறுத்தவரை நான் புதைக்கப்பட்டவன்’’


மனம் மிக வருந்தி, அர்ப்பணம் மிக்க ஒரு மாபெரும் கலைஞன் கூறும் வார்த்தைகள் இவை அப்படியன்று. தாஸீயஸின் நாடக பாணி இங்கு தொடர்கிறது.அவரிடம் பயின்றோர் அதனை முன்னெடுக்கின்றனர். பாடசாலைகளிலும் பல்கலைக் கழகங்களிலும் நாடகம் அரங்கியலை ஒரு பாடமாகப் படிக்கும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் தாஸீசியசையும் அவர் நாடகப் பணிகளையும் நன்கு அறிந்துள்ளனர். பல்கலைக் கழகங்களில் தாஸீசியஸ் பற்றி, அவர் நாடகப் பணிகள் பற்றி அவரது நாடக ஆக்கங்கள் பற்றி ஆய்வுகள் நடைபெறுகின்றன. அவை பெரும் கட்டுரை வடிவிலும் வந்துள்ளன தாஸீசியஸ் கூறுவது போல அவர் இங்கு புதைக்கப் படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார்
விதையிலிருந்து விருட்சங்கள் எழும்
28.02.2016
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136095/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.