Jump to content

Recommended Posts

கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் முன்னர் விடுதலைப்புலிகள் சமாதான செயலகத்தை வைத்திருந்தனர். தற்போது இராணுவத்தினர் போர்த் தளபாடங்களுடன் நிற்கின்றனர். பொதுமக்கள் வீதியில் விழித்திருக்கின்றனர்.

பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஐந்தாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 17ம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக குறித்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதனடிப்படையில் இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப்பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். அது இன்னமும் நடைமுறையாகவில்லை.

முன்னர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த பிரித்தானியாவில் இருந்து விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் இதே பரவிபாஞ்சனில் இருந்த விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்திற்கு சென்றார்.

ஆனால் இக்காலத்தில் பொதுமக்களின் போரட்டங்களுக்கு மதிப்பளித்து பாதுகாப்பு செயலாளர் ஏன் அங்கு செல்லவில்லை? அது மட்டுமல்ல நாட்டின் எதிர்க்கட்சி தலைவரின் பேச்சுக்கு அவர் ஏன் மதிப்பளிக்கவில்லை?

இவ்வாறே கடந்த கால அரசாங்கங்களும் உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளும் பேச்சுவார்த்தைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாகவே இருந்தது இருக்கின்றது.

இதனால் தான் நாட்டில் மறக்க முடியாத கெடூர சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் தற்பொழுது பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை மேற்கொள்வதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பரவிப்பாஞ்சானில் 5வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

http://www.tamilwin.com/politics/01/116426

Link to comment
Share on other sites

எதிர்கட்சி தலைவா் அளித்த வாக்குறுதி பொய் : இரவு பகலாக தொடரும் போராட்டம்!

கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் வரை மேற்கொண்டு வருகின்ற கவனயீா்ப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளாக இரவு பகலாக இடம்பெற்று வருகிறது.

இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பரவிபாஞ்சான் பிரதேச மக்கள் கடந்த மாதம் பல நாட்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த மாதம் 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக தொடர்புகொண்டதை அடுத்து இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதியளித்தவாறு காலக்கெடு நிறைவடைந்து பல நாட்கள் கடந்த நிலையில் பரவிபாஞ்சானில் சுமார் மூன்றரை ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பரவிபாஞ்சான் மக்கள் தங்களுடைய அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி மீண்டும் தங்களுடைய கவனயீா்ப்பு போராட்டத்தை ஜந்து நாட்களாக இரவு பலகலாக தொடா்கின்றனா்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இன்னும் பதினைந்து பேருக்குச் சொந்தமான பத்து ஏக்கா் காணி விடுவிக்கப்பட வேண்டும் எனவே அந்தக் காணிகளும் விடுவிக்கப்படும் வரை நாம் தொடா்ந்தும் இரவு பகலாக எமது கவனயீா்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

மேலும், எதிர் கட்சி தலைவா் அளித்த வாக்குறுதியின் படி நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை எங்களுக்கு வாக்குறுதிகளும் உறுதிமொழிகளும் வருகின்றனவே தவிர நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இல்லை நாங்கள் ஜந்தாவது நாளாக தொடா்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றோம்.

ஆனால் இன்று காலை வரை அரசியல் தரப்புகளும் சரி அரச அதிகாரிகளும் சரி எங்களை வந்து பார்த்து ஒரு வார்த்தையேனும் கூறவில்லை எனவே எங்களின் காணிகளை நாங்களே போராடி பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் எனவும் மக்கள் தெரிவித்தனா்.

http://www.tamilwin.com/community/01/116430

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.