Jump to content

இந்திய கிரிக்கெட் அணி அடுத்து விளையாடும் டெஸ்ட்-ஒருநாள் தொடர்கள்!


Recommended Posts

இந்திய கிரிக்கெட் அணி அடுத்து விளையாடும் டெஸ்ட்-ஒருநாள் தொடர்கள்!

 

 
  • kohli11.jpg

இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள் அணி. முதல் போட்டியில் அந்த அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆவது போட்டி மழையால் கைவிடப்பட்டதால், மேற்கிந்தியத் தீவுகள் தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வருடம் இந்தியாவில் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளன.

நியூசிலாந்து தொடர்

இந்தியாவுடனான 3 டெஸ்ட் ஆட்டங்கள், 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்து அணி செப்டம்பரில் இந்தியா வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி, செப்டம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 12-ம் தேதி மூன்று டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. அதற்குப் பிறகு அக்டோபர் 16 முதல் 29 வரை 5 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன.

தொடர் அட்டவணை

1வது டெஸ்ட்: செப் 22 முதல் 26 வரை கான்பூர்

2வது டெஸ்ட்: செப் 30 முதல் அக் 4 வரை இந்தூர்

3வது டெஸ்ட்: அக் 8 முதல் 12 வரை கொல்கத்தா

1வது ஒருநாள்: அக் 16 தர்மசாலா

2வது ஒருநாள்: அக் 19 தில்லி

3வது ஒருநாள்: அக் 23 மொஹாலி

4வது ஒருநாள்: அக் 26 ராஞ்சி

5வது ஒருநாள்: அக் 29 விசாகப்பட்டினம்

இங்கிலாந்து தொடர்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 9 முதல் பிப்ரவரி 1 வரை நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டிலும், 2-ஆவது டெஸ்ட் போட்டி குஜராத்திலும் நடைபெறவுள்ளன. இந்த மைதானங்களில் டெஸ்ட் போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். 3-ஆவது டெஸ்ட் போட்டி மொஹாலியிலும், 4-ஆவது டெஸ்ட் மும்பையிலும், 5-ஆவது டெஸ்ட் சென்னையிலும் நடைபெறவுள்ளன. இதில் பகலிரவு டெஸ்ட் போட்டி எதுவும் கிடையாது. அனைத்து போட்டிகளும் காலை 9.30 மணிக்குத் தொடங்குகின்றன.

இதன்பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இங்கிலாந்து அணியினர் நாடு செல்கின்றனர். அதைத் தொடர்ந்து ஜனவரி 15 முதல் 22 வரை ஒரு நாள் தொடரும், ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை டி20 தொடரும் நடைபெறவுள்ளன. ஒரு நாள் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும், டி20 போட்டி இரவு 7 மணிக்கும் தொடங்குகின்றன.

தொடர் அட்டவணை

நவ.9-13: முதல் டெஸ்ட் - ராஜ்கோட்

நவ.17-21: 2-வது டெஸ்ட் - விசாகப்பட்டினம்

நவ.26-30: 3-வது டெஸ்ட் - மொஹாலி

டிச.8-12: 4-வது டெஸ்ட் - மும்பை

டிச.16-20: 5-வது டெஸ்ட் - சென்னை

ஜன.15: முதல் ஒரு நாள் போட்டி - புணே

ஜன.19: 2-வது ஒரு நாள் போட்டி - கட்டக்

ஜன.22: 3-வது ஒரு நாள் போட்டி - கொல்கத்தா

ஜன.26: முதல் டி20 - கான்பூர்

ஜன.29: 2-வது டி20 - நாகபுரி

பிப்.1: 3-வது டி20 - பெங்களூரு

http://www.dinamani.com/sports/2016/08/29/இந்திய-கிரிக்கெட்-அணி-அடுத்/article3602691.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.