Jump to content

இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை முன்னேற்றம்


Recommended Posts

இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை முன்னேற்றம்

 

(லியோ நிரோஷ தர்ஷன்)

சகல விதமான இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை அண்மைக்காலமாக சாதகமான முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இனப்பாகுபாட்டை ஒழிப்பது தொடர்பான குழு தெரிவித்துள்ளது.

asdasd1.jpg

கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையிலான அமர்வின் போது கிறீஸ், பிரித்தானியா, பரகுவே, தென்னாபிரிக்கா, லெபனான், உக்ரேன், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அனைத்துவிதமான இன பாகுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச சாசனத்தின் முன்னெடுப்புகள் குறித்து அராயப்பட்டது.

இதன்போதே இலங்கை தொடர்பில் குறிப்பிட்டளவில் முன்னேற்றங்களை கண்டறிந்துள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. அனைத்துவிதமான இன பாகுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச சாசனத்தினத்தினை உள்நாட்டில் காணப்படக்கூடிய இனப்பாகுபாடுகளை ஒழிப்பதற்காக கையாளுகின்ற திட்டங்கள் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் பங்களிப்பு குறித்து கூறிய கவனத்தை இந்த குழுவினர் செலுத்தியுள்ளனர். 

இதன் முழுமையான அறிக்கை  வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது இலங்கையின் சாதகமான முன்னேற்றங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இனப்பாகுபாட்டை ஒழிப்பது தொடர்பான குழுவின் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் அங்கு ஏனைய வேறுசில நாடுகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/10767

Link to comment
Share on other sites

தமிழர் பகுதிகளில் விகாரைகள் எழுவதைக்கண்டு அதனைத் தமிழர்கள்தான் கட்டி எழுப்புகிறார்கள் என்று குழு கூக்குளில் கண்டு தவறாக விளங்கிக்கொண்டதோ....?? :(

Link to comment
Share on other sites

சம்பந்தர் சிங்க கொடி பிடித்ததை நரி சிங்களவர் எப்படி பிரச்சாரம் செய்திருப்பார்கள் என்றால் 30 வருடமாக தனி நாடு கேட்ட  தமிழர் இன்று தமிழரால் தெரிவு செய்யப்பட்ட  தமிழர் தலைவர் ஒரு நாடே போதும் என நாட்டின் சிங்க கொடியை பிடிக்கிறார் என்று பிரச்சாரம் செய்தால் போதுமானது. இவர் ஒரு நாடு என்கிறார் என்றால் புத்தர் சிலை எங்கும் வைக்கலாம் தானே என மேற்கு நாடு எண்ணாதா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பிபிசியில் ஒரு செய்தி படித்தேன்.. ஐநா சிரியாவில் இருந்து பாடம்படித்துக் கொண்டிருக்கிறது என்று. சொறீலங்காவில் பாடம்படிச்சு முடிஞ்சுது பாடம்படிக்க கொடுத்த மனித விலைகளோ எண்ணி முடியல்ல...  இப்ப சிரியாவில்.

ஐநா போன்ற ஒரு வினைத்திறனற்ற ஆதிக்க மேலாதிக்க பேரினவாத பேர்மத சக்திகளுக்கு தலையாட்டும் பொம்மை அமைப்பு இப்படி மட்டுமல்ல.. இன்னும் சொல்லும்.:rolleyes:

 

Link to comment
Share on other sites

14 hours ago, நவீனன் said:

இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை அண்மைக்காலமாக சாதகமான முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இனப்பாகுபாட்டை ஒழிப்பது தொடர்பான குழு தெரிவித்துள்ளது.

உண்மைகளை மறைத்து நிச்சயம் கடைந்தெடுத்த முட்டாள்களால் தான் இப்படியான ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும். இவர்கள் அனைவரும் மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.