Jump to content

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இன்று ஆரம்பம் ஆடவர், மகளிர் சம்பியன்களுக்கு தலா 52 கோடி ரூபா


Recommended Posts

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இன்று ஆரம்பம் ஆடவர், மகளிர் சம்பியன்களுக்கு தலா 52 கோடி ரூபா
2016-08-29 09:50:51

18859us-open-tennis-logo.jpgசர்­வ­தேச டென்னிஸ் அரங்கில் நொவாக் ஜோகோவிச், செரீனா வில்­லியம்ஸ் ஆகிய இரு­வரும் கடந்த சில வரு­டங்­க­ளாக ஆதிக்கம் செலுத்­தி­வ­ரு­வது சக­லரும் அறிந்த விடயம். 2010 முதல் இவர்கள் இரு­வரும் தலா 11 மாபெரும் (க்ராண்ட் ஸ்லாம்) டென்னிஸ் சம்­பியன் பட்­டங்­களை தமதாக்­கிக்­கொண்­டுள்­ளனர். 

 

ஆனால், ஐக்­கிய அமெ­ரிக்க (யூ.எஸ்) பகி­ரங்க டென்னிஸ் போட்­டிகள் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இரு­வ­ரி­ன தும் தேகா­ரோக்­கியம், மனோ­நிலை, போட்­டிக்­கான தயார்­நிலை ஆகிய விட­யங்கள் தொடர்பில் கேள்­விகள் எழத் தொடங்­கி­யுள்­ளன.

 

நடப்பு கோடைப் பரு­வ­கா­லத்தில் இரு­வ­ருமே உபாதை கார­ண­மாக ஓய்வு பெறு­வதும் சுகம் பெற்று மீண்டும் வரு­வ­து­மாக இருந்­துள்­ளனர். 

 

விம்­பிள்­டனில் தனது 22 ஆவது மாபெரும் ஒற்­றையர் சம்­பியன் பட்­டத்தை வென்ற செரீனா வில்­லியம்ஸ் அதன் பின்னர் தோற்­பட்­டையில் ஏற்­பட்ட உபாதை கார­ண­மாக மூன்று போட்­டி­களில் மாத்­தி­ரமே விளை­யா­டி­யுள்ளார்.

 

ஒலிம்பிக் போட்­டி­களில் சிர­மத்தை எதிர்­கொண்ட செரீனா மூன்­றா­வது சுற்­றுடன் வெளி­யே­றினார்.  தொடர்ந்து சின்­சி­னாட்­டியில் விளை­யா­டு­வதை தவிர்த்­துக்­கொண்டார்.

 

18859novk.jpg‘‘அண்மைக் கால­மாக நான் நிறைய விளை­யா­ட­வு­மில்லை, பயிற்­சியில் ஈடு­ப­ட­வு­மில்லை. ஆனால் ஒவ்­வொரு போட்டி நாளையும் கவ­னத்­தில் ­கொண்டு அதற்­கேற்ப திட்­ட­மிட்டு விளை­யா­ட­வுள்ளேன்’’ என முதல் சுற்றில் உலகின் 8 ஆம் நிலை வீராங்­கனை கெத்­த­ரினா மக்­க­ரோ­வாவை எதிர்த்­தா­ட­வுள்ள செரீனா தெரி­வித்தார்.

 

ஐக்­கிய அமெ­ரிக்க டென்னிஸ் போட்­டி­களில் ஏழா­வது மகளிர் ஒற்­றையர் சம்­பியன் பட்­டத்­திற்கு குறி­வைத்து செரீனா இன்று களமிறங்­க­வுள்ளார்.
இதே­வேளை நொவாக் ஜோகோ­விச்சின் கோடைப் பருவ­காலம் எதிர்­பா­ராத தோல்­வி­களைத் தரு­வ­தாக அமைந்­துள்­ளது.

 

விம்­பிள்­டனில் மூன்றாம் சுற்­று டன் வெளி­யே­றிய ஜொக்­கோவிச், ஒலிம் பிக் விளை­யாட்டு விழா ஆரம்­ப­மா­வ­தற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர் தனது இடது முஷ்­டியை காயப்­ப­டுத்­திக்­கொண்டார். விளைவு ஒலிம்பிக் ஆரம்ப சுற்றில் தோல்வியடைந்து வெளி­யே­றினார்.

 

‘‘ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க போட்­டி­க­ளுக்கு போதிய தயார் நிலையில் இல்லை’’ என ஜோகோவிச் கூறினார்.

 

‘‘நான் 100 வீதம் தேகா­ரோக்­கி­யத்தை பெறு­வ­தற்­காக கடு­மை­யாக முயற்­சித்து வரு­கின்றேன். போட்டி ஆரம்­பத்­தி­லா­வது நான் முழு­மை­யான உடற்­த­கு­தியைக் கொண்­டி­ருப்­ப­தற்கு கவனம் செலுத்தி வரு­கின்றேன்’’ என்றார்.

 

விம்­பிள்­டனில் 2013 இல் அரை இறு­தி­வரை முன்­னே­றிய ஜெர்ஸி ஜனோ­விக்ஸை முத­லா­வது சுற்றில் ஜோகோவிச் சந்­திக்­க­வுள்ளார். ஒலிம்பிக் சம்­பியன் அண்டி மறே முதல் சுற்றில் செக் குடி­ய­ர­சின் லூக்கஸ் ரொசொலை சந்­திக்க­வுள்ளார்.

 

ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களில் மிகவும் முக்­கி­ய­மான ஆடவர் ஒற்­றையர் மற்றும் மக ளிர் ஒற்­றையர் பிரி­வு­களில் இம்­முறை கடும் போட்­டித்­தன்மை நிலவும் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

18859Serena_Williams_Australian_Open_201ஆடவர் ஒற்­றையர் பிரிவில் நொவாக் ஜோகோ விச் (சேர்­பியா), ஒலிம்­பிக்கில் தொடர்ச்­சி­யாக இரண்டு தட­வைகள் சம்­பி­ய­னான அண்டி மறே (பிரித்­தா­னியா), ஸ்டன் வொரின்கா (சுவிட்ஸர் ­லாந்து), ரஃபாயல் நடால் (ஸ்பெய்ன்), மிலோஸ் ராஓனிக் (கனடா) ஆகியோர் நிரல்­ப­டுத்­தலில் முதல் ஐந்து இடங்­களில் இருக்­கின்­றனர்.

 

முன்னாள் சம்பி யன் ரொஜர் பெடரர், முதல் தட­வை­யாக இப்போட்­டி­களில் விளை­யா­ட­வில்லை.

 

ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் போட்­டிகள் இன்று ஆரம்­ப­மாகி செப்­டெம்பர் 11 ஆம் திகதி நிறை­வ­டை­கின்­றது.

 

மகளிர் ஒற்­றையர் பிரிவில் செரீனா வில்­லியம்ஸ் (ஐக்­கிய அமெ­ரிக்கா), ஏஞ்­சலிக் கேர்பர் (ஜெர்­மனி), கார்பின் முகு­ருசா (ஸ்பெய்ன்), அக்­னி­யெஸ்கா ரட்­வான்ஸ்கா (போலந்து), சிமோனா ஹாலெப் (ருமே­னியா) ஆகியோர் நிரல்­ப­டுத்­தலில் முதல் 5 இடங்­களில் உள்­ளனர்.

 

இப் போட்­டி­களை விட ஆடவர் மற்றும் மக­ளி­ருக்­கான இரட்­டையர் போட்­டிகள், கலப்பு இரட்­டையர் போட்­டிகள், கனிஷ்ட பிரிவு டென்னிஸ் போட்­டிகள், சக்­கர இருக்கை டென்னிஸ் போட்­டிகள் என்­பன நடை­பெ­ற­வுள்­ளன.

 

ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் சம்பியனா குபவர்களுக்கு தலா 3,500,000 அமெரிக்க டொலர்களும் (52 கோடி ரூபா) இரட்டையர் சம்பியன்களுக்கு 625,000 அமெரிக்க (9.7 கோடி ரூபா) டொலர்களும் வழங்கப்படுவ துடன் இம் முறை மொத்த பணப்பரிசாக 46.3 மில்லியன் அமெரிக்க டொலர் (694 கோடி ரூபா) ) வழங்கப்படவுள்ளது. 

 (என்.வீ.ஏ.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18859#sthash.XIirvT2X.dpuf
Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நடால், கெர்பர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்; இந்தியாவின் ஷாகத் மைனேனி போராடி தோல்வி

 

 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்ற முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச். படம்:கெட்டி இமேஜஸ்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்ற முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச். படம்:கெட்டி இமேஜஸ்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ரபேல் நடால் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்தியாவின் ஷாகத் மைனேனி கடைசி செட்டில் காயம் காரணமாக அவதிப்பட்டதால் தோல்வியடைய நேரிட்டது.

நியூயார்க் நகரில் ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டி யான அமெரிக்க ஓபன் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 247-வது இடத்தில் உள்ள போலந்தின் ஜெர்ஸி ஜனோவிக்ஸூடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 5-7, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

4-ம் நிலை வீரரான ஸ்பெயின் ரபேல் நடால் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் 107-வது இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்தோமினை எளிதாக வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், 120-வது இடத்தில் உள்ள சுலோவேனியாவின் போலோனா ஹெர்காக்கை எதிர்கொண்டார். இதில் கெர்பர் 6-0, 1-0 என முன் னிலை வகித்தபோது ஹெர்காக் காயம் காரணமாக வெளியேறினார்.

33 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கெர்பர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தரவரிசையில் 3-வது இடத்தில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 2-6, 6-0, 6-3 என் செட் கணக்கில் 137-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார். ரியோ ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற புயர்டோ ரிகோவின் மோனிகா புயிக் அமெரிக்க ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். தரவரிசையில் 32-வது இடத்தில் உள்ள அவர் 61-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஜிஹெங் ஷாயிடம் 4-6, 2-6 என்ற நேர் செட்டில் வீழ்ந்தார்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக பிரதான சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் ஷாகேத் மைனேனி தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள ஜிரி வெஸ்லியுடன் மோதினார். 143-ம் நிலை வீரரான மைனேனி இந்த ஆட்டத்தில் 6-7, 6-4, 6-2, 2-6, 5-7 என்று கடுமையாகப் போராடி தோல்வி யடைந்தார்.

http://tamil.thehindu.com/sports/அமெரிக்க-ஓபன்-டென்னிஸ்-ஜோகோவிச்-நடால்-கெர்பர்-2வது-சுற்றுக்கு-முன்னேற்றம்-இந்தியாவின்-ஷாகத்-மைனேனி-போராடி-தோல்வி/article9053520.ece

Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபன் டென்னிஸ் முகுருஸா, ரயோனிக் அதிர்ச்சி தோல்வி: இந்திய ஜோடிகள் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஏஎப்பி

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
அமெரிக்க ஓபன் 2-வது சுற்றில் தோல்வியடைந்த அதிர்ச்சியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா. படம்: கெட்டி இமேஜஸ். | அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2-வது சுற்றில் குரோஷியாவின் லூசிக் பரோனிக்கு எதிராக பந்தை திருப்பும் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர். படம்: ஏஎப்பி
அமெரிக்க ஓபன் 2-வது சுற்றில் தோல்வியடைந்த அதிர்ச்சியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா. படம்: கெட்டி இமேஜஸ். | அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2-வது சுற்றில் குரோஷியாவின் லூசிக் பரோனிக்கு எதிராக பந்தை திருப்பும் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர். படம்: ஏஎப்பி

அமெரிக்க ஓபனில் 3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா, 5-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக் ஆகியோர் 2-வது சுற்றில்அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச் 2-வது சுற்றில் 49-ம் நிலை வீரரான செக் குடியரசின் ஜிரி வெஸ்லியை எதிர்த்து விளையாட இருந்தார். ஆனால் இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்லி விலகியதால் ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ரயோனிக் தோல்வி

ஜோகோவிச் தனது 3-வது சுற்றில் அர்ஜென்டினாவின் குயிடோ பெலா அல்லது ரஷ்யாவின் மிகைல் யோஷ்னியை எதிர்கொள்ளக்கூடும். 5-ம் நிலை வீரரும் விம்பிள்டனில் இறுதி போட்டி வரை முன்னேறியவருமான கனடாவின் மிலோஸ் ரயோனிக் 7-6, 5-7, 5-7, 1-6 என்ற செட் கணக்கில் 120-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ரேயன் ஹாரிசனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஹாரிசன் 3-வது சுற்றில் நுழைவது இதுவே முதன்முறையாகும்.

4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-0, 7-5, 6-1 என்ற நேர் செட்டில் இத்தாலி யின் அன்ட்ரியாஸ் செபியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். சர்வதேச போட்டிகளில் செபிக்கு எதிராக 9 ஆட்டங் களில் விளையாடி உள்ள நடால் 8-வது முறையாக அவரை வீழ்த்தி உள்ளார். நடால் தனது அடுத்த சுற்றில் ரஷ்யாவின் ஆந்த்ரே குஸ்நெட்சோவை சந்திக்கிறார்.

முகுருஸா வெளியேற்றம்

மகளிர் ஒற்றையர் பிரிவில் 7-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ரோபர்ட்டா வின்சி 6-1, 6-3 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்ஹலேவையும், 14-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா விட்டோவா 7-6, 6-3 என்ற நேர் செட்டில் துருக்கியின் கேஹ்லாவையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.

3-ம் நிலை வீராங்கனையும் பிரெஞ்சு ஓபன் சாம்பியனுமான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 5-7, 4-6 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள லத்வியாவின் அனஸ்டஸிஜா செவஸ்டோவாவிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

5 வருடங்களாக அமெரிக்க ஓபனில் வெற்றி பெறாத நிலையில் செவஸ்டோவா இந்த முறை 3-வது சுற்றில் கால்பதித்துள்ளார். 2-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-2, 7-6 என்ற நேர் செட்டில் குரோஷியாவின் லூசிக் பரோனியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர். இந்த சுற்றில் கெர்பர் 17 வயதான அமெரிக்காவின் சிசி பெலிஸை சந்திக்கிறார்.

இந்திய ஜோடிகள் அசத்தல்

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் சாச்சியா, பிரான்சஸ் ஜோடியைத் தோற்கடித்தது. இந்த ஆட்டம் 51 நிமிடங்கள் நடைபெற்றது.

ஆடவர் இரட்டைர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, டென்மார்க்கின் நில்சன் பிரெட்ரிக் ஜோடி 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் ஸ்டபனேக், செர்பியாவின் நினாட் ஜிம்மோன்ஜிக் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தது. போபண்ணா ஜோடி 2-வது சுற்றில் அமெரிக்காவின் பிரையன் பேக்கர், நியூஸிலாந்தின் மார்க்கஸ் டேனியல் ஜோடியை சந்திக்கிறது.

மகளிர் இரட்டையர் பிரிவில் போட்டி தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைக்கோ ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜடா மியி, எனா ஷிபாஹரா ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 1 மணி நேரம் 9 நிமிடங்கள் நடைபெற்றது.

http://tamil.thehindu.com/sports/அமெரிக்க-ஓபன்-டென்னிஸ்-முகுருஸா-ரயோனிக்-அதிர்ச்சி-தோல்வி-இந்திய-ஜோடிகள்-2வது-சுற்றுக்கு-முன்னேற்றம்/article9064173.ece

Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபனில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 4-வது சுற்றில் நுழைந்தார் நடால்; ரோகன் போபண்னா ஜோடி தோல்வி, சானியா ஜோடி அசத்தல்

 

அமெரிக்க ஓபன் டென்னிஸில் கால்களுக்கு இடையே ஷாட் ஆடும் நடால். | படம்: ஏ.பி.
அமெரிக்க ஓபன் டென்னிஸில் கால்களுக்கு இடையே ஷாட் ஆடும் நடால். | படம்: ஏ.பி.

அமெரிக்க ஓபன் டென்னிஸில் ஜோகோவிச், ரபேல் நடால், ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வியடைந்தது. அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, இவான் டுடிக் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில், முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச், 34 வயதான ரஷ்யாவை சேர்ந்த மிகைல் யோஷ்னியுடன் மோதி னார்.

தரவரிசையில் 61-வது இடத்தில் உள்ள யோஷ்னி முதல் செட்டில் 2-4 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்த போது காயம் அடைந்தார். இடது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட அவர் போட்டியில் இருந்து விலகினார்.

வெறும் 32 நிமிடங்கள் மட்டுமே நடை பெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் அவர் 84-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் கைல் எட்மன்டை சந்திக்கிறார்.

எட்மன்ட் தனது 3-வது சுற்றில் அமெரிக்காவின் ஜான் ஸ்நரை 6-4, 3-6, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். கிராண்ட் ஸ்லாம் போட்டி களில் 4-வது சுற்றுக்கு முதன்முறையாக முன்னேறி உள்ளார் எட்மன்ட்.

ரபேல் நடால்

4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் ஆந்த்ரே குஸ்நெட்சோவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபனில் நடால், முதன்முறையாக தற்போது தான் 4-வது சுற்றில் கால்பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுற்றில் நடால், 24-ம் நிலை வீரரான பிரான்சின் லூக்காஸ் பவுயில்லேவை எதிர்கொள்கிறார்.

ரின் சிலிக் தோல்வி

7-ம் நிலை வீரரும், 2014-ம் ஆண்டு சாம்பியனுமான குரோஷியாவின் மரின் சிலிக் 4-6, 3-6, 3-6 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜேக் சோக்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அமெரிக்க ஓபனில் ஜேக், 4-வது சுற்றில் நுழைவது இதுவே முதன்முறை.

இந்த சுற்றில் அவர் 9-ம் நிலை வீரரான பிரான்சின் சோங்காவுடன் மோத உள்ளார். சோங்கா தனது 3-வது சுற்றில் 6-3, 6-4, 7-6 என்ற நேர் செட்டில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்தார்.

சிபுல்கோவா வெளியேற்றம்

மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 9-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலினி வோஸ்னியாக்கி, 6-3, 6-1 என்ற நேர் செட்டில் 58-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் மோனிகா நிகுலெஸ்குவை எளிதாக வீழ்த்தினார்.

7-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ராபர்ட்டா வின்சி 6-0, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் 84-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஹாரினா வித்தோப்டை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 12-ம் நிலை வீராங்கனையான டோமினிகா சிபுல்கோவா 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் 99-வது இடத்தில் உள்ள உக்ரைனின் சுரென்கோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

2-ம் நிலை வீராங்கனையும் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான ஏஞ்சலிக் கெர்பர் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் 158-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் சிசி பெலிஸை எளிதாக தோற்கடித்து 4-வது சுற்றில் நுழைந்தார்.

22-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா உடன் நடைபெற்ற ஆட்டத்தில் 14-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா விட்டோவா 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 4-வது சுற்றில் கெர்பர்-விட்டோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

போபண்ணா ஜோடி தோல்வி

ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, டென்மார்க்கின் நில்சன் பிரெட்ரிக் ஜோடி 2-6, 6-7 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் பிரையன் பாக்கர், நியூஸிலாந்தின் மார்கஸ் டேனியல் ஜோடியிடம் தோல்வியடைந் தது.

இதேபோல் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜெர்மனியின் ஆந்த்ரே பெஜிமான் ஜோடி தங்களது முதல் சுற்றில் 6-2, 5-7 4-6 என்ற செட் கணக்கில் போராடி பிரான்சின் ஸ்டீபன் ராபர்ட், இஸ்ரேலின் டுடி செலா ஜோடியிடம் வீழ்ந்தது.

சானியா ஜோடி அசத்தல்

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் டொனால்டு யங், டெய்லர் டவுன்சென்ட் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

ரோகன் போபண்ணா கலப்பு இரட்டையர் பிரிவில் அசத்தினார். கனடாவின் கபரியலாவுடன் இணைந்து விளையாடிய அவர் முதல் சுற்றில் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் ருபின், ஜெமி லோயிப் ஜோடியை வென்றது. இந்த ஆட்டம் 67 நிமிடங்களில் முடிவடைந்தது.

மகளிர் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் பிரன்ஜலா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் விக்டோரியா எம்மாவை தோற்கடித்தார்.

http://tamil.thehindu.com/sports/அமெரிக்க-ஓபனில்-3-ஆண்டுகளுக்கு-பிறகு-4வது-சுற்றில்-நுழைந்தார்-நடால்-ரோகன்-போபண்னா-ஜோடி-தோல்வி-சானியா-ஜோடி-அசத்தல்/article9072196.ece

Link to comment
Share on other sites

கால் இறுதிச் சுற்றில் ஜப்பானிய வீரர் நிஷிகோரி
2016-09-07 11:29:40

ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களில் ஆடவர் ஒற்­றை­ய­ருக்­கான கால் இறுதிச் சுற்றில் விளை­யா­டு­வ­தற்கு ஆசிய நாட்­ட­வ­ரான ஜப்­பானின் கெய் நிஷி­கோரி தகு­தி­பெற்­றுள்ளார்.

 

19092japan-kei-Nishikor.jpgகுரோ­­ஷி­யாவின் ஐ கார்­லோ­விக்­குக்கு எதி­ராக நேற்று நடை­பெற்ற நான்காம் சுற்று ஒற்­றையர் போட்­டியில் நிஷி­கோரி 3 நேர் செட்­களில் வெற்­றி­பெற்றார்.

 

முதல் இரண்டு செட்­களில் முறையே 6 – 3, 6 – 4 என இல­கு­வாக வெற்­றி­பெற்ற நிஷி­கோ­ரி, மூன்­றா­வது செட்டில் சிர­மத்­திற்கு மத்­தியில் 7 – 6 என வெற்­றி­பெற்று கால் இறுதி வாய்ப்பை உறு­தி­செய்­து­கொண்டார்.

 

பல்­கே­ரி­யாவின் க்றிகோர் டிமிட்­ரோவை நான்காம் சுற்றில் சந்­தித்த பிரித்­தா­னிய வீரர் அண்டி மறே மிக இல­கு­வாக 3 நேர் செட்­களில் (6 க்கு 1, 6 – 2, 6 – 2) வெற்­றி­பெற்றார்.

 

யூக்ரெய்ன் வீரர் இலியா மார்ச்­சென்­கோ­விடம் கடும் சவாலை எதிர்­கொண்ட சுவிட்­சர்­லாந்தின் ஸ்டான் வொரின்கா 3 –1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்றார்.

 

ஆர்ெ­ஜன்­டீன வீரர் யுவான் டெல் போர்ட்­டோ­வு­ட­னான போட்­டியின் இரண்­டா­வது செட்டின் போது உபா­தைக்­குள்­ளான அவுஸ்­தி­ரிய வீரர் டொமினிக் தியெம் ஓய்வு பெற நேரிட்­டதால் டெல் போர்ட்டோவுக்கு வெற்றி அளிக்கப்பட்டு அவர் கால் இறுதிக்குள்  பிரவேசித்தார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=19092#sthash.9kHLtErf.dpuf
Link to comment
Share on other sites

போட்டியின் போது கையடக்க தொலைபேசி பயன்படுத்திய சைப்ரஸ் டென்னிஸ் வீரர் பக்டாட்டிஸுக்கு எச்சரிக்கை
2016-09-07 12:29:41

ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் போட்டி ஒன்­றின்­போது விதி­களை மீறி கைய­டக்க தொலை­பேசி ஒன்றைப் பயன்­ப­டுத்­திய சைப்ரஸ் வீரர் மார்க்கோஸ் பக்­டாட்­டி­ஸுக்கு கடும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

 

19096Marcos-Baghdatis.jpg

 

பிரெஞ்சு வீரர் காயல் மொன்­பில்­ஸுக்கு எதி­ரான நான்காம் சுற்று ஒற்­றையர் ஆட்­டத்­தின்­போது பக்கம் மாறு­கையில் கைய­டக்கத் தொலை­பே­சியை பக்­டாட்டிஸ் பயன்­ப­டுத்­தி­யுள்ளார்.

 

3 – 6, 2 –5 என்ற புள்­ளிகள் கணக்கில் பின்­னி­லையில் இருந்­த­போது ‘‘நேரத்தைப் பார்க்­க­வேண்­டி­யி­ருந்­த­துஇ அதனால் என்ன?வென மத்­தி­யஸ்­த­ரிடம் பக்­டாட்டிஸ் கேட்­டுள்ளார்.

 

‘‘எனது மனை­விக்கு தகவல் ஒன்றை அனுப்ப எத்­த­னித்தேன்’’ என அப் போட்­டியில் 3 – 6, 2 – 6, 3 – 6 என தோல்வி அடைந்த பின்னர் பக்­டாட்டிஸ் கூறினார்.
‘‘டென்னிஸ் போட்­டி­க­ளின்­போது சில விதிகள் இருக்­கின்­றன.

 

நான் அதனை மீறி­விட்டேன் என கரு­து­கின்றேன். அதற்­கான நான் எச்­ச­ரிக்­கப்­பட்டேன். ஆனால் எனது மனை­விக்கு நான் தகவல் ஒன்றை தயார் செய்தேன்’’ என அவர் குறிப்­பிட்டார்.

 

‘‘இதற்கு முன்னர் போட்டி ஒன்­றின்­போது நான் யாருக்கும் தகவல் அனுப்­பி­ய­தில்லை. ஆனால் இப்­போது அனுப்­பினால் என்­ன­வென யோசித்தேன்’’ என அவர் மேலும் தெரி­வித்தார்.

 

‘‘டென்னிஸ் வாழ்க்­கையில் எனது பந்து பரி­மாற்­றங்கள் மிக மோச­மாக இருந்­தன. காய­லுக்கு எதி­ராக புள்­ளி­களைப் பெறு­வது கடி­ன­மாக இருந்­தது. பந்து பரி­மாற்­றங்­க­ளின்­போது நான் பெரும் நெருக்­க­டியை எதிர்­நோக்­கினேன்’’ என பக்­டாட்டிஸ் கூறினார்.

 

ஒரு­வேளை நெருக்­க­டி­யி­லி­ருந்து தனது மனதை மாற்­றிக்­கொள்­வ­தற்­காக அவர் கைய­டக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியிருக்கலாம் என கருதப்பட்டபோதிலும் அவர் விதிகளை மீறியதால் மத்தியஸ்தரின் எச்சரிக்கைக்கு உள்ளாக நேரிட்டது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=19096#sthash.kHHGD9QI.dpuf
Link to comment
Share on other sites

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் அரை இறுதிகளில் நிஷிகோரி, வொரின்கா, செரீனா, பிளிஸ்கோவா
2016-09-09 11:08:00

நியூயோர்க் ப்ளஷிங் மெடோஸ் டென்னிஸ் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய அமெரிக்க பகி ரங்க டென்னிஸ் போட்டிகளின் கால் இறுதிச் சுற்றுகளில் கெய் நிஷிகோரி, ஸ்டான் வொரின்கா, செரீனா வில்லியம்ஸ், கரோலின் பிளிஸ்கோவா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

 

1915913.jpg

 

ஆடவருக்கான ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் பிரித்தானியாவின் அண்டி மறேயை அதிர்ச்சி தோல்வி யடையச் செய்த ஜப்பான் வீரர் கெய் நிஷிக்கோரி அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றார்.

 

ஐந்து செட்கள் வரை நீடித்த இப் போட்டியில் 2–1 செட்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த அண்டி மறே கடைசி இரண்டு செட்களைக் கோட்டை விட்டு தோல்வியைத் தழுவி வெளியேறினார்.

 

போட்டியின் முதலாவது செட்டில் 6–1 என மறே வெற்றிபெற்றபோது அவர் இலகுவாக வெற்றி பெற்று விடுவார் என கருதப்பட்டது. ஆனால், அடுத்த செட்டில் நிஷிகோரி 6–4 என வெற்றிபெற்றார்.

 

எனினும் 3 ஆவது செட்டில் 6–4 என மறே மீண்டும் வெற்றிபெற்றார். எவ்வாறாயினும் கடைசி இரண்டு செட்களில் முறையே 6–1, 7–5 என்ற புள்ளிகள் அடிப் படையில் நிஷிகோரி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

 

மற்றொரு கால் இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவின் டெல் பெட்ரோவை 3–1 என்ற செட்கள் (7–6, 4–6, 6–3, 6–2) என்ற புள்ளிகள் அடிப்படையில் சுவிட்ஸர்லாந்தின் ஸ்டன் வொரின்கா வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன் னேறினார்.

 

மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், கரோலின் பிளிஸ்கோவா ஆகியோர் கால் இறுதிகளில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறினர்.
ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப்பிடம் கால் இறுதியில் சவாலை எதிர்கொண்ட நடப்பு சம்பியன் செரீனா வில்லியம்ஸ் 2–1 செட்கள் அடிப்படையில் வெற்றிபெற்றார்.

 

முதல் செட்டில் 6–2 என வெற்றிபெற்ற செரீனா, இரண்டாவது செட்டை 4–6 என தவறவிட்டார். எனினும் தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் 6–3 என வெற்றி பெற்று ஒருவாறு அரை இறுதிக்குள் நுழைந்தார்.

 

குரோஷியா வீராங்கனை அனா கொஞ்சுவை கடைசி கால் இறுதியில் எதிர்த்தாடிய செக் குடியரசு வீராங்கனை கரோலின் பிளிஸ்கோவா மிக இலகுவாக 6–2, 6–2 என்ற புள்ளிகளைக் கொண்ட இரண்டு நேர் செட்களில் வெற்றிகொண்டார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=19159#sthash.IWmGAuMX.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.