Jump to content

இந்திய – மேற்கிந்திய இருபது20 தொடர் அமெரிக்காவில் நாளை ஆரம்பம்


Recommended Posts

இந்திய – மேற்கிந்திய இருபது20 தொடர் அமெரிக்காவில் நாளை ஆரம்பம்
 

இந்­திய, மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரு­பது20 கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி அமெ­ரிக்­காவில் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 

 

இரு போட்­டிகள் இத்தொடரில் நடை­பெ­ற­வுள்­ளன. இவ்­விரு போட்­டி­களும் புளோ­ரிடா மாநிலத்தின் ஃபோர்ட் லவ்­டர்டேல் நக­ரி­லுள்ள சென்ட்ரல் புரோவார்ட் ரீஜனல் பார்க் அரங்கில் சனி, ஞாயிறு தினங்­களில் உள்ளூர் நேரப்­படி காலை 10 மணிக்கு (இலங்கை, இந்­திய நேரப்­படி இரவு 7.30) மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளன. 

 

18834Untitled-3.jpg

 

அமெ­ரிக்­காவில் கிரிக்கெட் விளை­யாட்டை பிர­சித்­தப்­ப­டுத்­து­வ­தற்கு இச்­சுற்­றுப்­போட்டி உத­வி­யாக அமையும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.  

 

அமெ­ரிக்­காவில் கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான நிர்­மா­ணிக்­கப்­பட்ட ஒரே அரங்­காக போர்ட் லவ்­டர்டேல் கிரிக்கெட் அரங்கு உள்­ளது. அண்­மையில் நடை­பெற்ற கரீ­பியன் ப்றீமியர் லீக்கின் 6 போட்­டி­களும் இந்த அரங்கில் நடை­பெற்­றன. 

 

எனினும், இந்த அரங்கில் நடை­பெற்ற முழு­மை­யான சர்­வ­தேச கிரிக்கெட் சுற்­றுப்­போட்­டியில் இலங்கை, நியூ­லாந்து அணி­களே மோதின. 2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற அத்­தொடர் 1:1 விக­ிதத்தில் முடி­வ­டைந்­தது.

 

 நாளை ஆரம்­ப­மாகும் சுற்­றுப்­போட்­டிக்­கான இந்­திய அணிக்கு மஹேந்­தி­ரசிங் தோனியும் மேற்­கிந்­திய அணிக்கு கார்லோஸ் பிராத்­வெய்ட்டும் தலைமை தாங்­கு­கின்­றனர்.

 

18834_248425.jpg

 

குழாம் விபரம்


இந்­திய குழாம் :  எம்.எஸ்.தோனி (தலைவர்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோஹ்லி, அஜின்­கியா ரெஹானே, லோகேஷ் ராகுல், ரவீந்­திர ஜடேஜா, ரவிச்­சந்­திரன் அஸ்வின், ஜஸ்­பிரிட் பம்ரா, மொஹம்மத் ஷமி, புவ­னேஷ்வர் குமார், உமேஸ் யாதவ், அமித் மிஸ்ரா, ஸ்டுவர்ட் பின்னி.

 

மேற்­கிந்­திய குழாம் :  கார்லோஸ் பிராத்வெய்ட் (தலைவர்), அன்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெய்ல், ட்வைன் பிராவோ, எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டர், ஜோன்சன் சார்ள்ஸ், கீரோன் போலார்ட், லென்ட்ல் சிமோன்ஸ், சாமுவேல்ஸ், சாமுவேல் பத்ரி. சுனில் நரெய்ன்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18834#sthash.ZboAs8ek.dpuf
Link to comment
Share on other sites

அமெரிக்காவின் லாடர்ஹில் மைதானத்தில் இந்தியா- மே.இ.தீவுகள் டி 20-ல் இன்று மோதல்: உலகக் கோப்பை தோல்விக்கு பழிதீர்க்குமா தோனி குழ

 
தோனி
தோனி

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையேயான முதல் டி 20 ஆட்டம் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவின் லாடர்ஹில் பகுதியில் இன்று இரவு நடைபெறுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி அந்த அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொரை 2-0 என வென்று சாதனை படைத்தது. இரு ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.

டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து இரு அணிகளும் இரண்டு டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இந்த தொடர் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அந்நாட்டில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் சமீபகாலமாக அங்கு சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றுன.

இதன் ஒருகட்டமாகவே இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டி 20 தொடரும் நடத்தப்பட உள்ளது. புளோரிடா வின் லாடர்ஹில் பகுதியில் உள்ள சென்ட்ரல் புரோவார்டு ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

20 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த மைதானத்தில் கரீபியன் டி 20 தொடரின் சில ஆட்டங்கள் மற்றும் இரு சர்வதேச அளவிலான டி 20 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. கரீபியன் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் பலர் விளையாடி உள்ளனர். இதனால் இந்த மைதானத்தின் தன்மை அவர்களுக்கு பரிச்சயமானதாக இருக்கும்.

மேலும் கடந்த 2012-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிராக டி 20 ஆட்டம் ஒன்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த மைதானத்தில் விளையாடி உள்ளது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதேவேளையில் இந்திய அணி முதல் முறையாக தற்போதுதான் அமெரிக்காவில் விளையாடுகிறது.

தோனி தலைமையில் இந்திய அணி டி 20 தொடரை சந்திக்கிறது. இந்திய அணி கடைசியாக கடந்த ஜூன் மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டி 20 தொடர்களில் வெற்றி பெற்றிருந்தது. பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவுக்கு இது குறுகியவடிவிலான போட்டியின் முதல் தொடராகும்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தோனியுடன் முதல்முறையாக பணியாற்ற உள்ளேன். நாங்கள் இருவரும் நீண்ட காலம் இணைந்து விளையாடி உள்ளோம். டி 20 தொடர் குறித்து நாங்கள் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளோம். ஜஸ்பிரித் பும்ரா போன்ற புதிய வீரர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். ஏற்கெனவே நான் ஐபிஎல் தொடரில் பும்ராவுடன் பணியாற்றி உள்ளேன். தற்போது இந்திய அணியின் ஓய்வறையில் மீண்டும் பும்ரா உள்ளிட்ட வீரர்களை சந்திக்க உள்ளேன்" என்றார்.

டேரன் சமி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் மேற்கிந்தியத் தீவுகள் அணி கார்லோஸ் பிராத்வெயிட் தலைமையில் களமிறங்குகிறது. 28 வயதான பிராத் வெயிட் 3 டெஸ்ட், 14 ஒருநாள் போட்டி, எட்டு டி 20 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நிலையில் அணியை வழிநடத்த உள்ளார்.

டி 20 உலகக் கோப்பை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். அதேவேளையில் டி 20 உலகக் கோப்பை அரை இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க தோனி தலைமையிலான குழு முழுகவனம் செலுத்தக்கூடும்.

அணிகள் விவரம்:

இந்தியா:

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவண், லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி, உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமது ஷமி.

மேற்கிந்தியத் தீவுகள்:

கார் லோஸ் பிராத் வெயிட், பிளட்சர், கிறிஸ் கெய்ல், டிவைன் பிராவோ, இவின் லீவிஸ், மார்லோன் சாமுவேல்ஸ், ஜான்சன் சார்லஸ், கெய்ரோன் பொலார்டு, லென்டில் சிம்மன்ஸ், சாமுவேல் பத்ரி, சுனில் நரேன், ஜேசன் ஹோல்டர்.

http://tamil.thehindu.com/sports/அமெரிக்காவின்-லாடர்ஹில்-மைதானத்தில்-இந்தியா-மேஇதீவுகள்-டி-20ல்-இன்று-மோதல்-உலகக்-கோப்பை-தோல்விக்கு-பழிதீர்க்குமா-தோனி-குழு/article9039816.ece

Link to comment
Share on other sites

முதல் டி20 தெறிக்கவிட்ட வெஸ்ட் இண்டீஸ்: கடிமான இலக்கை நோக்கி இந்தியா!

251007.3.jpg

இந்திய-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகணத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணியில் தவானும், மே.இ.தீவுகள் அணியில் கெயிலும் இடம்பெறவில்லை. 

அமெரிக்க ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. மேலும் 6வது வீரராக ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியை களமிறக்க உள்ளது இந்திய அணி. 2 சுழற் பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது இந்தியா. கோலி, ரஹானே, ரோஹித், ராகுல், தோனி என க்ளாஸிக் பேட்டிங் வரிசையுடன் களம் காணுகிறது இந்தியா.

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி அதிரடி ஆட்டத்தை முதல் ஓவரில் இருந்தே கையில் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர்கள் அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் குவித்தனர். சார்லஸ் 79 ரன்களும், லீவிஸ் 100 ரன்களும் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் மே. இ. தீவுகள் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. 

இந்திய அணியின் பந்துவீச்சை மே.இ.தீவுகள் வீரர்கள் நாலாபுறமும் சிதறடித்தனர். தோனி பந்துவீச்சாளர்களை மாற்றியும் பலனளிக்கவில்லை. பின்னியின் ஒரே ஓவரில் 32 ரன்களை குவித்தனர். இது டி20 போட்டிகளின் 2வது  மிக மோசமான பந்துவீச்சாகும். 

கோலி, ரோஹித், தோனி, ரஹானே பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெறும் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது.

http://www.vikatan.com/news/sports/67698-india-vs-west-indies-first-t20-in-usa.art

Link to comment
Share on other sites

ராகுல் சதம் வீண்! கடைசி பந்தில் இந்தியா தோல்வி!

251007.3.jpg

இந்திய-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகணத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணியில் தவானும், மே.இ.தீவுகள் அணியில் கெயிலும் இடம்பெறவில்லை. 

அமெரிக்க ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. மேலும் 6வது வீரராக ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியை களமிறக்க உள்ளது இந்திய அணி. 2 சுழற் பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது இந்தியா. கோலி, ரஹானே, ரோஹித், ராகுல், தோனி என க்ளாஸிக் பேட்டிங் வரிசையுடன் களம் காணுகிறது இந்தியா.

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி அதிரடி ஆட்டத்தை முதல் ஓவரில் இருந்தே கையில் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர்கள் அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் குவித்தனர். சார்லஸ் 79 ரன்களும், லீவிஸ் 100 ரன்களும் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் மே. இ. தீவுகள் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. 

Florida%20India%20West%20In_velu.jpg

இந்திய அணியின் பந்துவீச்சை மே.இ.தீவுகள் வீரர்கள் நாலாபுறமும் சிதறடித்தனர். தோனி பந்துவீச்சாளர்களை மாற்றியும் பலனளிக்கவில்லை. பின்னியின் ஒரே ஓவரில் 32 ரன்களை குவித்தனர். இது டி20 போட்டிகளின் 2வது  மிக மோசமான பந்துவீச்சாகும். 

246 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்தியா. ஆரம்பம் முதலே சரியான பந்துகளை பவுன்டரிக்கு விரட்டி வந்தது, ராஹானே, கோலி அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் ரோஹித் ஷர்மா 28 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் தோனி 43 ரன்களும், இளம் வீரர் ராகுல் சதமடித்து 51 பந்துகளில் 110 ரன்களும் குவித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் அதிவேக சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.கடைசி பந்தில் இரண்டு ரன் தேவை என்ற போது தோனி ஆட்டமிழந்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. நாளை இதே மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெறுகிறது.

http://www.vikatan.com/news/sports/67698-india-vs-west-indies-first-t20-in-usa.art

Link to comment
Share on other sites

கணிப்பு சரியே, ஆடிய விதம்தான் தவறு: கடைசி பந்து குறித்து தோனி

 

 
கடைசியில் ஆட்டமிழந்த தோனி! ராகுல் ஏமாற்றம். | படம்: ஏ.பி.
கடைசியில் ஆட்டமிழந்த தோனி! ராகுல் ஏமாற்றம். | படம்: ஏ.பி.

டிவைன் பிராவோவின் கடைசி பந்து ஸ்லோ பந்தாக இருக்கும் என்று தனது கணிப்பு சரியே என்றும் ஆனால் ஷாட்டை செயல்படுத்திய விதம் தவறானது என்றும் இந்திய கேப்டன் தோனி தெரிவித்தார்.

மிகப்பெரிய டி20 போட்டி என்ற சாதனை போட்டியில் இந்தியாவின் ஆட்டத்தை பாராட்டுவதே தகும் என்கிறார் தோனி.

“245 ரன்களை விரட்டிய விதம் அருமையானது, பாராட்டுக்குரியது, எப்போதும் வெற்றிப்பாதையிலேயே இலக்கை அணுகினோம், கடைசி பந்தில் கூட எனது கணிப்பு சரியாக அமைந்தது, ஆனால் ஷாட்டை செயல் படுத்தியவிதம் சரியாக அமையவில்லை.

இப்போதைய கிரிக்கெட்டில் கடைசி ஓவர்கள், குறிப்பாக கடைசி ஓவரில் பந்து வீசுவதில் பிராவோ தலைசிறந்தவர் என்றே கருதுகிறேன். அவரது அனுபவம் அவரது பந்து வீச்சை நமக்குக் கடினமாக்குகிறது. எனவே நாம் எவ்வாறு ஷாட்டை கையாள்கிறோம் என்பதுதான் முக்கியமாகி விடுகிறது.

அவர் என்ன வீசுவார் என்பதை ஊகிக்க வேண்டியுள்ளது, அதன் படி ஷாட்களை திட்டமிட வேண்டியுள்ளது. எனவே யூகமும் ஷாட்டும் சரிவர அமைந்து விட்டால் வெற்றி நம் பக்கம். யார் வீசுகிறார் என்பதை விட அவரது பலம் என்னவென்பதை யோசிக்க வேண்டும். அவர் அடுத்த பந்தை எங்கு பிட்ச் செய்வார் என்று கணிக்க வேண்டும்.

மே.இ.தீவுகள் 270 ரன்களுக்கும் மேல் செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தனர், ஆனால் அஸ்வின் 12-வது ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தது உத்வேகத்தை ஏற்படுத்தியது. முதல் 6 ஓவர்களில் இன்னும் கொஞ்சம் பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை. தொடக்கத்தில்தான் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறோம். கடைசி 8 ஒவர்கள் வீசியது திருப்திகரமகா இருந்தது.

பவுலர்கள் சூழ்நிலை எப்படி என்பதை சடுதியில் கணித்து ஆட்டத்தின் திட்டங்களை மாற்ற வேண்டும். சாதாரணமாக 4 ஒவர்களில் 40 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் நல்லது என்று நினைப்போம், இப்படியாக பிட்சிற்கு ஏற்றவாறு எது நல்ல பவுலிங் என்பதை உடனடியாக சிந்தித்து செயல்படுவது அவசியம். இந்தப் பிட்ச் 4 ஓவர் 50 ரன் பிட்ச் என்றால் 2 விக்கெட்டுகள் என்பது ஒரு பிளஸ்.

கே.எல்.ராகுலின் பலம் அவர் கிரிக்கெட் ஷாட்களுடன் டி20 அதிரடி ஷாட்களையும் நன்றாகக் கலப்பதே. மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் அடிக்கிறார், கவருக்கு மேல், மிட் ஆஃபுக்கு மேல், மிட் ஆன், எனவே அவர் ஒரு பூரண கிரிக்கெட்டர். கடைசி 6 மாதகாலமாக அவரது பேட்டிங் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது ஆரோக்கியமான அறிகுறி.

அருமையான மைதானம், வசதிகள் நன்றாக இருந்தது 500 ரன்கள் 40 ஓவர்களில் என்பது மோசமான பிட்சாக இருக்க முடியாது.

எங்கு சென்றாலும் இந்திய ரசிகர்கள் எங்களை பின் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. முதல் முறையாக யு.எஸ்.-இல் ஆடுகிறோம் ஆனால் இங்கு இந்தியர்கள் அணியை ஆதரிக்க திரள்வது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் தோனி.

http://tamil.thehindu.com/sports/கணிப்பு-சரியே-ஆடிய-விதம்தான்-தவறு-கடைசி-பந்து-குறித்து-தோனி/article9042603.ece

Link to comment
Share on other sites

40 ஓவர்களில் 489 ரன்கள்: பரபரப்பு போட்டியில் 1 ரன்னில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த இந்தியா

 

46 பந்துகளில் சதம் 110 நாட் அவுட், தோனியுடன் 107 ரன்கள் கூட்டணி அமைத்த கே.எல்.ராகுல். | படம்: ஏ.பி.
46 பந்துகளில் சதம் 110 நாட் அவுட், தோனியுடன் 107 ரன்கள் கூட்டணி அமைத்த கே.எல்.ராகுல். | படம்: ஏ.பி.

அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய-மே.இ.தீவுகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ரன் மழை பொழிய கடைசியில் மே.இ.தீவுகள் 1 ரன்னில் இந்திய அணியை வீழ்த்தியது.

டாஸ் வென்ற தோனி முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைக்க பிளே என்று நடுவர் கூறத் தொடங்கியவுடனேயே ரன் மழையில் மைதானம் நனைய அந்த அணி 20 ஓவர்களில் 245 ரன்கள் என்று புதிய மே.இ.தீவுகள் டி20 சாதனை ரன் எண்ணிக்கையை எட்டியது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி அதிகபட்ச ரன் இலக்கிற்கான வெற்றிகரமான துரத்தல் சாதனையை நிகழ்த்த வேண்டிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து 1 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக தோல்வி அடைந்தது.

அமெரிக்காவிற்கு டி20 கிரிக்கெட்டை ‘மார்க்கெட்’ செய்வதற்கான இந்தத் தொடரின் முதல் போட்டி காட்சிப் போட்டிக்குரிய அனைத்து தன்மைகளுடன் பவுலர்கள் கோமாளிகளாக பேட்ஸ்மென்கள் ஹீரோக்களாக மட்டை பிட்சில், குறைந்த தூர பவுண்டரி உதவியுடன் பந்துகள் நாலாபுறமும் சிதறடிக்கப்பட்டன. 20 ஒவர்களில் 489 ரன்கள் என்ற புதிய டி20 சாதனை நிகழ்த்தப்பட்டது. ஆனால் இதுதாண்டா அதிரடி என்றவாறு இரு அணிகளுமே விளாசித்தள்ளின.

கடைசியில் இந்தியாவுக்கு 12 பந்துகளில் 24 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. ரஸல் பந்தை தேர்ட்மேனில் அபாரமாக சிக்ஸ் அடித்து 46 பந்துகளில் சதம் எடுத்து சாதனை நிகழ்த்தினார் ராகுல். அடுத்த பந்தே அருமையாக இன்சைட் அவுட் சென்று எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி அடித்தார். 19-வது ஓவரில் 16 ரன்கள் வர கடைசி ஓவரில் வெற்றிக்குக் 8 ரன்களே தேவை.

கடைசி ஓவரை அனுபவமிக்க பிராவோ வீச முதல் பந்தில் தோனி சுழற்ற மர்லன் சாமுவேல்ஸ் மிக மிக எளிதான கேட்சைக் கோட்டைவிட்டார். ஆனால் தோனி 1 ரன் எடுத்து ஸ்ட்ரைக் ராகுல் பக்கம் வந்தது. அடுத்த 3 பந்துகளிலும் சிங்கிள் சிங்கிளாக 3 ரன்களே வந்தது.

அடுத்த பந்து ஆஃப் ஸ்டம்ப் யார்க்கரை தோனி நேராக அடிக்க பிராவோ கையில் பட்டு திசைமாறிச் செல்ல தோனி 2 ரன்களை ஓடினார். ஸ்கோர் 244 ஒரு பந்து வெற்றிக்கு 2 ரன்கள் டை-யிற்கு 1 ரன், ஆனால் பிராவோ வீசிய ஸ்லோயர் பந்தை தோனி ஷார்ட் தேர்ட் மேனில் ஸ்லைஸ் செய்தார் கேட்ச் ஆனது. முதல் பந்தில் கேட்ச் விட்ட அதே சாமுவேல்ஸ் இம்முறை பிடித்தார். தோனிக்கு பந்து சற்றே பிட்சில் கிரிப் ஆகி வந்தது, இதனால் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருந்தது. இதனால் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது. அருமையான ஓவர், பிராவோ தனது அனுபவத்தை தனது சென்னை கேப்டன் தோனிக்கே காட்டினார்.

51 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் ராகுல் 110 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஒருவேளை இவரிடம் ஸ்ட்ரைக் இருந்திருந்தால் இந்தியா வென்றிருக்கலாம்.

மே.இ.தீவுகளின் லூயிஸ் அதிரடி சதம், சாதனைத் தொடக்கம்:

மே.இ.தீவுகளில் சார்லஸ், லூயிஸ் இறங்கினர். ஷமி, பும்ரா, புவனேஷ் யாரும் எடுபடவில்லை முதல் 4 ஓவர்களிலேயே 63 ரன்கள் விளாசல் பிறகு முதல் விக்கெட்டுக்காக 9.3 ஓவர்களில் 126 ரன்கள். சார்லஸ் என்ற இரும்பு வீரர் 6 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 33 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அப்போது மொகமது ஷமி பந்தில் பவுல்டு ஆனார்.

ஆந்த்ரே ரசல் களமிறங்க ரன் மழைக்கு ஓய்வில்லை ஒழிச்சலில்லை. அடுத்த 6 ஓவர்களில் 78 ரன்கள் விளாசல். ரசல் 12 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 22 ரன்கள் எடுத்தார். ஆனால் லூயிஸ் சாத்துமுறை மட்டை பின்னியை ஒன்றுமில்லாமல் செய்தது.

ஒரே ஓவரில் ஸ்டூவர்ட் பின்னி 32 ரன்களை வாரி வழங்கினார்:

11-வது ஓவரை தோனி, ஸ்டூவர்ட் பின்னியிடம் அளித்தார், எந்த விதத்திலும் டாப் அணிகளுக்கு எதிராக வலையில் கூட வீச திறனற்ற பின்னியை லூயிஸ் நேற்று அம்பலப்படுத்தினார். சுமார் ஒருமாதம் கழித்து பந்தைப் பார்க்கும் பின்னியின் முதல் பந்து டீப் மிட்விக்கெட்டில் காணாமல் போனது. அடுத்த பந்து சைட் ஸ்க்ரீனுக்கு மேலே காணாமல் போனது. உடனே பயந்து போய் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடு வீசினார் பின்னி. அடுத்த பந்து லாங் ஆஃபில் சிக்ஸ். அடுத்த பந்து ஷார்ட் அண்ட் வைடு கவரில் சிக்ஸ். அடுத்த பெரிய ஷோயப் அக்தர் ஸ்பீடு உள்ளது போல் மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் டீப் ஃபைன் லெக்கில் கார்பார்க்கில் போய் விழுந்தது. ஒரே ஓவரில் 5 சிக்சர்களுடன் 32 ரன்கள். பின்னியின் கிரிக்கெட் வாழ்வு நியாயமாக இத்துடன் முடிவுக்கு வர வேண்டும்.

ரிச்சர்ட் லெவி அடித்த 45 பந்து சத சாதனையை முறியடித்து விடுவார் லூயிஸ் என்றே நினைத்தோம், ஆனால் 49 பந்துகளில் அவர் 5 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் வீழ்ந்தார். ரசல், பொலார்ட், பிராத்வெய்ட் ஆகியோர் தங்கள் பங்குக்கு சிக்சர் அடிக்க மே.இ.தீவுகள் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது, இந்திய அணியில் அஸ்வின் மட்டுமே 4 ஓவர்களில் 36 ரன்கள் எடுத்து சிக்கனம் காட்டினார். ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டுகள் சிக்சர்கள் கொடுக்காத பவுலர்களே இல்லை. அஸ்வின் பவுண்டரி கொடுக்கவில்லை 4-ம் சிக்சர்கள்தான்.

கே.எல்.ராகுலின் அதிரடி சதமும், மகா விரட்டலும்:

ரோஹித் சர்மா, ரஹானேயுடன் இந்தியா 3 ஒவர்களில் 31 ரன்கள் என்ற அதிரடித் தொடக்கம் கண்டது. இதில் ரோஹித் சர்மா அபாயகரமாகத் திகழ்ந்தார். ரஹானே 7 ரன்களில் ரஸலிடம் ஆட்டமிழந்தார், பவுண்டரியில் டிவைன் பிராவோவைத் தவிர இத்தகைய அதிர்ச்சியான கேட்சை பொலார்ட் மட்டுமே பிடிக்கமுடியும். பயங்கரமான கேட்ச். ரஹானே தன் கண்களையே நம்ப முடியாமல் வெளியேறினார். ரோஹித் சர்மா 4 பவுண்டரிகள் 4 அபாரமான சிக்சர்களுடன் 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இதில் 22 பந்துகளில் அரைசதம் கடந்தார் ரோஹித் சர்மா. மிக முக்கியமாக விராட் கோலி (16) விக்கெட்டை டிவைன் பிராவோ கைப்பற்றினார்.

அதாவது ரஹானேவுக்கு அற்புத கேட்சைப் பிடித்த பிராவோ, கோலிக்கு ஒரு வைட் ஆஃப் த கிரீசிலிருந்து ஒரு பந்தை ஷார்ட் பிட்சாக எழுப்ப, கோலி புல் ஷாட் ஆட முனைந்தார் ஆனால் பந்து எதிர்பார்த்ததை விட எழும்ப கிளவ்வில் பட்டு விக்கெட் கீப்பர் பிளெட்சரின் அருமையான லெக் திசை கேட்ச் ஆனது.

அதன் பிறகு ராகுல் புகுந்தார் நரைனை 2 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 16 ரன்களை 6-வது ஓவரில் விளாச பவர் பிளேயில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது. பிறகு ரோஹித் சர்மா நரைனை அடுத்தடுத்து லாங் ஆன், டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்தார். அப்போதுதான் ராகுல் 36 ரன்களில் இருந்த போது பிராத்வெய்ட் பந்தில் ரஸல் லாங் ஆஃபில் கேட்சை விட்டார், அது மேட்சையே விட்டதற்குச் சமானமாகியிருக்கும், கடைசியில் பிராவோ அந்த ஓவரை வீசியிருக்காவிட்டால். 12-வது ஓவரில் ரோஹித் சர்மா பொலார்ட் பந்தை லாங் பவுண்டரி உள்ள மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

தோனி வந்திறங்கியவுடன் பவுண்டரி அடித்து தனது வழக்கமான பாணியில் இடைவெளியில் தட்டி விட்டு இரண்டிரண்டு ரன்களாக ஓடினார். 13 ஓவர்களில் 150/3 என்ற நிலையில் 7 ஓவர்களில் 95 ரன்கள் என்பது இமாலய இலக்காகவே தெரிந்தது.

ஆனால் ராகுலின் 46 பந்துகள் சதமும் தோனியின் 25 பந்து 43 ரன்களும் இலக்கிற்கு வெகு அருகே இட்டுச் சென்றது, ஆனால் பிராவோவின் அந்த கடைசி ஓவர் அபாரம், ஆனாலும் தோனி ஒரு ரன்னிற்கு முயற்சி செய்திருக்கலாம். இதனால் ராகுலின் அற்புதமான இன்னிங்ஸ் வீணானது. வெற்றி பெற்றது மேஇ தீவுகள். ஆட்ட நாயகனாக நியாயமாக பிராவோ தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் சத நாயகன் லூயிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/40-ஓவர்களில்-489-ரன்கள்-பரபரப்பு-போட்டியில்-1-ரன்னில்-வெற்றி-வாய்ப்பை-பறிகொடுத்த-இந்தியா/article9042581.ece

 

 

 

 

டி20-யில் அதிவேக 2-வது சதம்: ராகுல் சாதனையும், மேலும் சில புள்ளிவிவரங்களும்

 

 
சாதனை சதம் அடித்த ராகுல். | படம்: ஏ.எஃப்.பி.
சாதனை சதம் அடித்த ராகுல். | படம்: ஏ.எஃப்.பி.

நேற்று நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் 46 பந்துகளில் சதம் அடித்தது டி20-யில் 2-வது அதிவேக சதமாகும்.

போட்டியின் சுவையான தகவல்கள் சில:

தென் ஆப்பிரிக்காவின் ரிச்சர்ட் லெவி 45 பந்துகளில் அடித்த டி20 சதமே உலக சாதனையாக இருந்து வருகிறது, கே.எல்.ராகுல் 46 பந்துகளில் சதம் கண்டு தற்போது 2-வது இடத்தில் உள்ளார்.

மே.இ.தீவுகள் வீரர் எவின் லூயிஸ் 48 பந்துகளில் நேற்று சதம் அடித்தது 6-வது அதிவேக சதமாகும். கிறிஸ் கெயில் 47 பந்துகளில் சதம் அடித்ததே மே.இ.தீவுகளுக்கான சாதனையாகும், எவின் லூயிஸ் 2-வது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெயில் காயம் காரணமாக ஆடாத வாய்ப்பை லூயிஸ் அருமையாக பயன்படுத்திக் கொண்டார், அசாதாரணமான ஷாட்களையும் ஆடி மகிழ்வித்தார்.

ஸ்டூவர்ட் பின்னி ஒரே ஓவரில் 32 ரன்கள் கொடுத்து இசாந்த் சர்மா ஒருநாள் போட்டி ஒன்றில் 30 ரன்கள் கொடுத்ததை மறக்கடித்துள்ளார். டி20-யில் முன்பு வெய்ன் பார்னெல் ஆப்கன் வீரர் தவ்லத்சாய் ஆகியோரும் 32 ரன்களைக் கொடுத்தனர். நேற்று பின்னி லூயிஸிடம் சிக்கி பின்னி எடுக்கப்பட்டார், 5 சிக்சர்கள் விளாசினார் லூயிஸ்.

நேற்று அடிக்கப்பட்ட மொத்த 489 ரன்கள் எந்த ஒரு டி20 போட்டிக்கும் அதிகமான ரன் சேர்க்கையாகும். தென் ஆப்பிரிக்கா-மே.இ.தீவுகள் மோதிய 2015 ஜோஹன்னஸ்பர்க் போட்டியில் 467 ரன்கள் குவிக்கப்பட்டது.

அதே போல் இந்த டி20 போட்டியில் மொத்தம் 32 சிக்சர்கள் விளாசப்பட்டது, இது எந்த ஒரு டி20 போட்டிக்கும் அதிகமானது. அயர்லாந்து நெதர்லாந்து போட்டி ஒன்றில் 2014 உலகக்கோப்பை டி20-யில் 30 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே அதிகமாக இருந்தது.

முதல் 10 ஓவர்களில் இரு அணியினரும் சேர்ந்து எடுத்த ரன்கள் 248; மே.இ.தீவுகள் 132 ரன்களையும், இந்தியா 116 ரன்களை எடுத்ததும் புதிய சாதனையாகும். மொத்த ரன்களில் முதல் 10 ஓவர்களில் 251 ரன்கள் கண்ட போட்டி 2015 ஜோஹன்னஸ்பர்க் தெ.ஆ. மே.இ.தீவுகள் போட்டியாகும்.

http://tamil.thehindu.com/sports/டி20யில்-அதிவேக-2வது-சதம்-ராகுல்-சாதனையும்-மேலும்-சில-புள்ளிவிவரங்களும்/article9042682.ece

Link to comment
Share on other sites

2வது டி20: இந்திய அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்கு

 

லாடெர்ஹில்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் பார்க் ஸ்டேடியத்தில் நடந்த 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற  இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  143 ரன்கள் எடுத்தது. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்திய அணி களமிறங்க உள்ளது. முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில்  1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணி, 2 டி20 போட்டிகளில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=241844

Link to comment
Share on other sites

2-வது டி20 மழை பாதிப்பினால் பாதியில் கைவிடப்பட மே.இ.தீவுகள் தொடரை வென்றது

 

 
2-வது போட்டி பாதியிலேயே கைவிடப்பட தொடரை 1-0 என்று வென்றது மே.இ.தீவுகள். | படம்: ஏ.பி.
2-வது போட்டி பாதியிலேயே கைவிடப்பட தொடரை 1-0 என்று வென்றது மே.இ.தீவுகள். | படம்: ஏ.பி.

அமெரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் போட்டியை வென்ற மே.இ.தீவுகள், 2-வது போட்டியில் வெற்றி தோல்வி முடிவு தெரியாமல் போனதால் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரைக் கைப்பற்றியது.

இந்திய அணி நவீன அதிரடி வீரர்கள் கொண்ட மே.இ.தீவுகளை அருமையான பந்து வீச்சின் மூலம் 143 ரன்களுக்குச் சுருட்டியது ஆனால் இந்திய அணி 2 ஓவர்களே ஆட முடிந்தது, இதில் 15 ரன்கள் எடுத்தது.

ஆட்டம் தாமதமாகத் தொடங்கியதற்கு போட்டி அமைப்பாளர்கள் எந்தவித பொது அறிவிப்பையும் வெளியிடவில்லை, சிறிய அளவாக இருந்தாலும் பெரிய தொகையைக் கொடுத்து பார்க்க வந்த ரசிகர் கூட்டம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தனர். காரணம் போட்டியின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆட்டம் தாமதப்படுத்தப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் மைதானத்திற்கு வந்து அதிக தொகை கொடுத்து டிக்கெட் எடுத்தவர்கள் நிலை என்ன என்பது யோசிக்கப்படவில்லை, பெரிய அளவிலான தொலைக்காட்சி நேயர்கள்தான் போட்டி அமைப்பாளர்களுக்கு பிரதானமாக இருந்தது.

பின்னால் மழை பெய்யும் என்று அறிவித்துள்ள நிலையில் 40 நிமிடங்கள் தொடக்கத்தை தாமதம் செய்தது நிச்சயம் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

மே.இ.தீவுகளை 143 ரன்களுக்கு மட்டுப்படுத்திய பிறகு வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்யும் முனைப்புடன் இருந்த இந்திய அணி களமிறங்கியவுடன் 2 ஓவர்கள் கழித்து 20 நிமிடங்கள்தான் மழை பெயதது. மைதானம் முழுதும் கவர் செய்யப்படவில்லை, சூப்பர் சாப்பர் என்ற மிகப்பெரிய நீர் உறிஞ்சியும் இல்லை. புறமைதானமும் ஓரளவுக்கு தயாராக இருந்தது, பிட்சும் தயாராகவே இருந்தது, ஆனால் பவுலர்கள் ஓடி வரும் இடம் காயவில்லை. ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நேற்றும் சார்லஸ் அதிரடி காட்டினார். 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சருடன் அவர் 43 ரன்கள் எடுத்து அமித் மிஸ்ராவின் முதல் பந்தில் அவுட் ஆனார். அதன் பிறகு ஜடேஜா, அஸ்வின் ஆகியோரும் ஆதிக்கம் செலுத்தினர். ஜடேஜா 2 ஓவர்களை சிக்கனமாக விறுவிறுப்பாக வீசினார், அஸ்வின் சாதுரியமாக வீசி லெண்டில் சிம்மன்ஸ், பொலார்ட் ஆகியோரை வீழ்த்தி 3 ஓவர்களில் 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஸ்பின்னர்கள் ஆதிக்கத்தினால் ஜஸ்பிரீத் பும்ரா 10 ஓவர்களுக்குப் பிறகுதான் கொண்டு வரப்பட்டார், அவரும் சாமுவேல்ஸை சொற்ப ரன்களுக்கு வீழ்த்தினார். பிராத்வெய்ட் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள் எடுத்து மிஸ்ராவிடம் அவுட் ஆனார். மிஸ்ரா மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்து சார்லஸ், பிராவோ, பிராத்வெய்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பும்ரா, சாமுவேல்ஸையும் ஆந்த்ரே பிளெட்சரையும் வீழ்த்தினார். 19.4 ஓவர்களில் மே.இதீவுகள் 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

எளிதில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஆட்டம், மழை நின்ற பிறகும் மைதானத்தின் நிலையினால் ஆட முடியாமல் போக மே.இ.தீவுகள் தொடரை வென்றது.

http://tamil.thehindu.com/sports/2வது-டி20-மழை-பாதிப்பினால்-பாதியில்-கைவிடப்பட-மேஇதீவுகள்-தொடரை-வென்றது/article9045675.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஆட்டத்தை நடத்தியிருக்கலாம்: தோனி, பிராத்வெய்ட்டின் மாறுபட்ட கருத்துகள்

 

 
படம்: ஏ.எஃப்.பி.
படம்: ஏ.எஃப்.பி.

அமெரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் 2-வது போட்டி மைதான நிலைமைகள் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது குறித்து இந்திய, மே.இ.தீவுகள் கேப்டன்கள் மற்றுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கவலையை ஏற்படுத்திய களப்பகுதிகள் பற்றி பிராத்வெய்ட் கூறும்போது, “மைதானத்தில் 2 அல்லது 3 இடங்கள் பாதுகாப்பில்லாமல் இருந்தது. பெவிலியனிலிருந்து பார்க்கும் போது, பவுலர் ரன் அப் பகுதிகள், மிட் ஆன், மேற்குப் புறத்திலும் ஒரு இடம் சொதசொதவென தெரிந்தது.

எனவே என் கருத்துப்படி பாதுகாப்பற்றது, விளையாடுவதற்கு ஏற்றதல்ல. ரன் அப்களை கூட ஏற்று கொண்டு ஆடியிருந்தாலும், பந்தை பீல்டர் துரத்திச் செல்லும் போது சில இடங்களில் வழுக்கிவிட்டால் அத்துடன் அவரது கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும். நாங்கள் விளையாட விருப்பம் கொண்டிருந்தோம் என்றாலும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையுடன் விளையாட முடியாது, நடுவர்களும் இதை மனதில் கொண்டுதான் ஆட்டத்தை நிறுத்தினர்” என்றார்.

பிராத்வெய்ட்டின் கருத்தை மறுக்குமாறு தோனி கூறியதாவது:

நடுவர் எங்களிடம் கூறியது என்னவெனில் இங்கு ஈரத்தை முற்றிலும் களைய போதுமான உபகரணங்கள் இல்லை, மைதான நிலைமை மோசமாக உள்ளது எனவே முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே ஆட்டம் சாத்தியம் என்றார்கள். இது ஆட்டத்தை நடத்துபவர்களாக அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு, ஆனால் எனது 10 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் இதை விட மோசமான மைதான நிலைமைகளில் ஆடியுள்ளோம் என்பதே.

நான் சரியாக நினைவில் வைத்திருக்கிறேன் என்றால் 2011-ல் இங்கிலாந்தில் ஒட்டுமொத்த ஒருநாள் தொடரிலும் மழையில்தான் ஆடினோம், ஈரத்தில்தான் ஆடினோம். எனவே நடுவர் முடிவுதான் ஆடலாம் என்று அவர்கள் முடிவெடுத்தால் ஆடலாம், ஆட முடியாது என்றால் ஆட முடியாது அவ்வளவுதான்.

நானும் பிராவோவும் நின்று கொண்டிருந்த மேற்குப் புறத்தில்தான் பிரச்சினை என்றனர், ஆனால் பவுலர்கள் ரன் அப்பிற்கு அப்பால்தான் பாதுகாப்பற்ற அந்த இடம் இருந்தது. அவர்கள் அணியில் அங்கிருந்து ஓடி வந்து வீசும் ஷோயப் அக்தர் இல்லாத நிலையில் கவலையொன்றுமில்லை.

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/ஆட்டத்தை-நடத்தியிருக்கலாம்-தோனி-பிராத்வெய்ட்டின்-மாறுபட்ட-கருத்துகள்/article9046073.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.