Jump to content

நாட்டின் சுய அடையாளத்தை நிலைநாட்டும் நோக்கில் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது – சந்திரிக்கா:

Recommended Posts

நாட்டின் சுய அடையாளத்தை நிலைநாட்டும் நோக்கில் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது – சந்திரிக்கா:

நாட்டின் சுய அடையாளத்தை நிலைநாட்டும் நோக்கில் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது – சந்திரிக்கா:

நாட்டின் சுய அடையாளத்தை நிலைநாட்டும் நோக்கில் தமது தந்தையான முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க தனிச் சிங்கள சட்டத்தை நிறைவேற்றினார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

1956ம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்தை தமது தந்தை நிறைவேற்றியமை ஓர் இனவாத செயற்பாடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

450 ஆண்டுகளாக வெளிநாட்டு ஆட்சியாளர்களின் பிடியிலிருந்த இலங்கையின் சுய அடையாளத்தை மீள நிறுவும் நோக்கில் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரம் பெற்றுக்கொண்டதன் 75 வீதமான சிங்கள மக்கள் தாங்கள் ஒடுக்குமுறைக்கு உட்பட்டதாக கருதியதாகவும் இதனால் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் முஸ்லிம் மக்களினால் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் வெள்ளைக்காரர்களினால் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு மொழிகளுக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டுமெனவும் பெரும்பான்மை சிறுபான்மை என்ற அடிப்படையில் இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1956ம் ஆண்டில் தனிச் சிங்கள சட்டத்தை அமுல்படுத்திய அப்போதைய அரசாங்கம் ஒரு ஆண்டின் பின்னர் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என உணர்ந்த போதிலும் இதுவரையில் அந்த கொள்கை அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியில் நீடித்த அனைத்து அரசாங்கங்களும் தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே அரசாங்க நிறுவனங்களில் தமிழர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதனை மாற்றியமைக்க முயற்சித்த போதிலும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135236/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மையார் வரலாற்றை அறியவில்லை போல 
அரச நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் இருந்த தமிழர்களை துரத்தியடிப்பதற்க்காகவே தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டது 
இவர் என்ன அப்படியே உல்ட்டாவாக மாறி விடுகிறார்,,,ஓ அப்பனிண்ட பெயரை நாற விடாமல் காப்பாற்றுகிறார்.
எல்லாமே குறைவாகத்தான் காணப்பட்டது ,அங்கீகாரம் வழங்கவில்லை ..நீங்களும் முயற்ச்சித்தீர்கள் நடைமுறை சிக்கல் விடவில்லை ...சரி 
இப்போது நடைமுறை சிக்கல் தீர்ந்து விட்டதா ...? இனியாவது மாற்றியமைக்க சிங்கள பௌத்த தீவிரவாதிகள் விடுவார்களா ...?
அடித்தளம் இட்டு உங்களுடைய குடும்ப நன்மைக்காக ஊதி ஊதி வளரவிட்டுவிட்டு இப்போது அப்பனை நல்லவராக்க நல்லா வேடம் போடுகிறார்   

Link to comment
Share on other sites

சட்டங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இன்று நாங்கள் தமிழில் தான் படிக்கவேண்டும் என்ற நிலையை உருவாகிக்கியது பண்டாரநாயக்காத்தான். எங்கள் நீதிமன்றங்களில் தமிழில் தான் வழக்காடவேண்டிய நிலையை உருவாக்கியதும் பண்டாரநாயக்காத்தான். அதற்கு எதிராக தமிழர்கள் ஆங்கிலத்தில் படிக்கவும் வழக்காடவும் உரிமை வேண்டும் என தீவிரமாக வாதிட்டது தமிழரசு கட்சி. அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் ஈழத் தமிழரும் இந்தியத்தமிழர் போல தங்கிலீசில் பேசி எழுதும் இனமாகியிருப்பார்கள். இந்த வரலாறை தமிழர்கள் வசதியாக மறந்துவிடடார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த அம்மா, ஆட்சிக்கு வரமுதல் நானும் உங்களைப்போல் தந்தையை, கணவனை இழந்தவள், உங்களுடைய இழப்புகள் எனக்கு விளங்கும், என்னைத் தேர்ந்தெடுங்கள் உங்கள் பிரச்சனையெல்லாம் நான் தீர்த்துவைப்பேன் என்று மாய்மாலம் கொட்டி, தன்னைச்  சமாதானத் தேவதையாய் காட்டி ஆட்சிக்கு  வந்த பிற்பாடு எங்களை ஊரைவிட்டு துரத்தினா, நவாலிப்படுகொலை. மறப்போமா அம்மணியை? இன்றும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் எப்படிக் கதை அளக்கிறா. தமிழர் எல்லாத்தையும் மறந்து, தன்ர மாயைக்கதைகளை நம்பி விடுவார்கள் என்று தன் காரியம் பார்க்கிறதுக்கு  தாளிக்கிறா. உண்மையை ஒப்புக்கொள்ளாமல் மாற்றம் நிகழாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

1956ம் ஆண்டில் தனிச் சிங்கள சட்டத்தை அமுல்படுத்திய அப்போதைய அரசாங்கம் ஒரு ஆண்டின் பின்னர் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என உணர்ந்த போதிலும் இதுவரையில் அந்த கொள்கை அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியில் நீடித்த அனைத்து அரசாங்கங்களும் தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள  ஜனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க நவம்பர் 12, 1994 - நவம்பர் 19, 2005  பதவி வகித்தார்.

Chandrika_Kumaratunga.jpg

இந்த காலகட்டத்தில்தான் கதிர்காமர் animierte smilies krank krankheit schlecht übel எனும் தமிழருக்கு  மட்டும் சசசசசசகல உரிமைகளையும் வழங்கி --  ------    ---------- ------ ------- குத்தியாட்டம் போட்டார் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருக்கும் போது

தீர்வத்திட்டம்...

இப்ப ....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, hasan said:

சட்டங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இன்று நாங்கள் தமிழில் தான் படிக்கவேண்டும் என்ற நிலையை உருவாகிக்கியது பண்டாரநாயக்காத்தான். எங்கள் நீதிமன்றங்களில் தமிழில் தான் வழக்காடவேண்டிய நிலையை உருவாக்கியதும் பண்டாரநாயக்காத்தான். அதற்கு எதிராக தமிழர்கள் ஆங்கிலத்தில் படிக்கவும் வழக்காடவும் உரிமை வேண்டும் என தீவிரமாக வாதிட்டது தமிழரசு கட்சி. அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் ஈழத் தமிழரும் இந்தியத்தமிழர் போல தங்கிலீசில் பேசி எழுதும் இனமாகியிருப்பார்கள். இந்த வரலாறை தமிழர்கள் வசதியாக மறந்துவிடடார்கள். 

எந்த மொழியில் தாங்கள்  பேசவேண்டும் எழுதவேண்டும் என்று தமிழர்கள் தான் முடிவு செய்யலாமேயொழிய  இன்னொரு கூட்டம் அவர்கள் மொழியை திணிக்க முடியாது ..ஆங்கிலத்தில் பேசி வழக்காடவேண்டி வந்தால் அந்த மொழியை பேசி வழக்காடியிருப்போம் ...இன்னும் எங்கள் புலம்பெயர் தமிழர்கள் எத்தனை பேர்  அவரவர் நாடுகளில் அந்ததந்த நாடுகளுக்குரிய மொழியில் பேசி,வழக்காடுகிறார்கள் ...தமிழ் மொழி அழிந்து விட்டதா என்ன...?  எத்தனையோ புலம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள் எம்மை விட அழகாக தூய தமிழ் பேசுகின்றன...இந்தியத்தமிழர் தமது சுயத்தையே ஹிந்திய போலி முகமூடிக்குள் புதைத்து தமது அடையாளத்தையே இழந்துவிட்டவர்கள். இன்னும் சில வருடங்களில் நாங்கள் ஹிந்திக்காரர்கள்
எண்டு அவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை ...அவர்களை அளவுகோலாக வைத்துகொண்டு ஈழத்தமிழனை ஒரு வீதம் கூட எடை போட முடியாது...ஆங்கிலத்தில் நான் பேசினால் அதனால் நான் தமிழை கொலை செய்துவிட்டேன் என்று அர்த்தம் இல்லை ...ஆங்கிலேயனுடன் ஆங்கிலத்திலும் தமிழனுடன் தமிழிலும் பேசுவது எனது திறமை ...இங்கே அந்த ஆங்கிலேயனுக்கு தமிழனுடன் பேச ஆங்கிலம் மட்டுமே தெரியும்
ஆனால் எனக்கு அவனுடன் பேச அவனது மொழியே தெரியும்..இதனால் எனது மொழிக்கு எவ்வித நட்டமும் இல்லை     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

நாட்டின் சுய அடையாளத்தை நிலைநாட்டும் நோக்கில் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது – சந்திரிக்கா:

நாட்டின் சுய அடையாளத்தை நிலைநாட்டும் நோக்கில் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது – சந்திரிக்கா:

தாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதனை மாற்றியமைக்க முயற்சித்த போதிலும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135236/language/ta-IN/article.aspx

தமிழருக்குச் சாதகமாக ஏதாவது மாற்றம் செய்ய நினைக்கும் பொது மட்டும் இந்த நடைமுறைச் சிக்கல்  வந்து போகின்றது.
சிங்களவர்களால் ஏற்படுத்தப்படும் இந்த நடைமுறைச் சிக்கலைத்தான்
தமிழர்கள் இனவாதம் என்கின்றனர்.

Link to comment
Share on other sites

நான் சொல்வதை புரியாத பாவனையில் கருத்திட்டீர்கள். உங்கள் பெருமதிப்புக்குரிய ஆங்கிலத்தில் நீங்கள் எழுதுவதும் உரையாடுவதும் இங்கு பிரச்சனையில்லை. தமிழில் எழுதவும் வாசிக்கவும் தெரியாமல் அவ்வாறு தெரியாமல் இருப்பதை மேட்டுக்குடி அடையாளமாக கருதும் தமிழர்களை எண்ணி நீங்கள் பெருமைப்படலாம். செல்வநாயகம் நாகநாதன் போன்ற தலைவர்களுக்கு தமிழ் தெரியாது என்று நிறைய யாழ்ப்பாண தமிழர்கள் பெருமையாக சொல்லிக்கொண்டதை கேட்டுள்ளேன். இன்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் ஆங்கிலத்தில் படித்த பழைய தலைமுறை தலைவர்கள் மேடையில் ஏறி தங்களுக்கு தமிழில் பேச இயலாது என்று  பெருமையாக குறிப்பிட்டு  ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்துள்ளேன். ஆனால் பண்டாரநாயக்கா புண்ணியத்தில் தமிழில்  படித்த பரம்பரையினர் எவ்வளவு ஆங்கில புலமை இருந்தாலும் மேடையில் தமிழில்தான் பேசுவார்கள்.  உலகிலேயே தமிழர்கள் தமிழில் கட்டாயமாக  படிக்கவேண்டிய ஒரே நாடு இலங்கைதான். தமிழ்நாட்டில் தமிழ் என்ற பாடம் கூட கட்டாயமில்லை. 

வெளிநாட்டில் வாழும் உங்கள் பிள்ளைகள் தங்களிடையேயான தொடர்பாடலுக்கு தமிழை பயன்படுத்த போவதில்லை. அது சிந்திக்கும் மொழியாய் இருந்தால் ஒழிய. 

வழக்காளிக்கும் குற்றவாளிக்கும் விளங்காத மொழியில் உங்கள் அப்புக்காத்து அரசியல்வாதிகள் பேசுவது உங்களை புல்லரிக்கவைக்கலாம். ஆங்கிலம் தெரியாத அப்பாவி மக்கள் எக்கேடு கெட்டாலும் என்ன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கினி,ஆங்கிலக் கல்வி மூலம் தமிழ்நாடு இப்ப எவ்வளது கேவலமாய் இருக்குது என்று தெரியும் தானே? அதே மாதிரி தமிழை மறக்கின்ற நிலைமை ஈழத்திலும் வர வேண்டுமா என்ன?

Link to comment
Share on other sites

On 8/25/2016 at 4:26 AM, hasan said:

சட்டங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இன்று நாங்கள் தமிழில் தான் படிக்கவேண்டும் என்ற நிலையை உருவாகிக்கியது பண்டாரநாயக்காத்தான். எங்கள் நீதிமன்றங்களில் தமிழில் தான் வழக்காடவேண்டிய நிலையை உருவாக்கியதும் பண்டாரநாயக்காத்தான். அதற்கு எதிராக தமிழர்கள் ஆங்கிலத்தில் படிக்கவும் வழக்காடவும் உரிமை வேண்டும் என தீவிரமாக வாதிட்டது தமிழரசு கட்சி. அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் ஈழத் தமிழரும் இந்தியத்தமிழர் போல தங்கிலீசில் பேசி எழுதும் இனமாகியிருப்பார்கள். இந்த வரலாறை தமிழர்கள் வசதியாக மறந்துவிடடார்கள். 

அதாவது ஒருவன் திருடினான்.. பணத்தை இழந்தவன் கடன்பட்டு வெளிநாடு போனான்.. கஷ்டப்பட்டான்.. சம்பாதித்தான்.. முன்னைவிட நல்ல நிலைக்கு வந்தான்.. இப்போ.. அந்த ஒரிஜினல் திருடனைப் பாராட்டலாமே என்பது மாதிரி இருக்கு உங்கட பதிவு.. :D:

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன் 
நான் சுத்தமான தமிழில்தான் எழுதுகிறேன். ஆனாலும் அது மீண்டும் மீண்டும் பிழையாக விளங்கப்படுகிறது  ஏன்  என்று விளங்கவில்லை. தமிழர்களை தமிழில் கட்டாயமாக படிக்கவைத்தது திருட்டுத்தனம் என்று சொல்கிறீர்களா. அல்லது தமிழர்களிடமிருந்து அவர்கள் காலனித்துவ சொத்தான ஆங்கிலத்தை பண்டாரநாயக்க திருடிவிட்டதாக கருதுகிறீர்களா? ஒன்றுமே புரியவில்லை. 

Link to comment
Share on other sites

21 hours ago, hasan said:

ஹசன்,

நீங்கள் சிந்திக்கும் நிலைக்கும் அவர்கள் சிந்திக்கும் நிலைக்கும் பல காத தூரம். தாம் ஆங்கிலத்தில் அல்ல தமிழில் படிப்பது கட்டாயமாக இருக்கவேண்டும் என்ற முடிவை தமிழர்கள் தாங்களாக எடுக்காமல் சிங்களவரான பண்டாரநாயகா எடுத்ததை அவர்கள் ஏற்று கொள்ளவில்லை. தமிழர்கள் பிரதேசத்தில் உள்ள பல உயர்தர கல்லூரிகளில் ஆங்கிலத்தில் கல்வி ஊட்டப்பட்டதும் பல கிராமப்புறத்து பிள்ளைகளும் ஏழைகளும் இதனால் பல்கலைக்கழகம் செல்லவோ அல்லது உயர்தர தொழில் வாய்ப்புகளை பெறவோ சாத்தியம் இல்லாமல் இருந்ததும் இங்கு முக்கியமாக படவில்லை. ஒரு சிங்களவர் எப்படி தமிழர்களின் கல்வி மொழி பற்றிய முடிவை எடுக்கும் உரிமை பெற்றார் என்பதே அவர்களின் எதிர்ப்பின் காரணமாகும். நீங்கள் இதனை இனவாதம் என்று சொல்லக்கூடும். அவர்கள் இதனை இன மேலாதிக்கம் அல்லது இன ஆக்கிரமிப்பு என கொள்கிறார்கள். தமிழ் மக்கள் மத்தியில் அவர்களின் கருத்தே பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால் அவர்களின் கருத்தே இலங்கை தமிழரின் அரசியல், போராட்டம் மற்றும் பேரழிவுக்கு அச்சாணியான காரணமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாவின் காலத்திற்கு முன்னரும் தமிழர்கள் தமிழ் மொழி மூலம் தான் படித்துக் கொண்டிருந்தார்கள்.
தமிழன் தமிழில் தான் படிக்க வேண்டும்
அந்த உரிமையை யாரும் எங்களுக்குப் பிச்சையாகத் தர வேண்டியதில்லை.
அன்று பண்டா தமிழர்களுக்கான உரிமையை  மறுக்க முடியாத நிலையில் இருந்தபடியால் தான் வேறு வழியில் சிங்களச் சட்டத்தைக்   கொண்டு வந்தார்.

Link to comment
Share on other sites

7 hours ago, வாத்தியார் said:

பண்டா காலத்துக்கு முன்னர் கலை பாடங்கள் மட்டும்தான் சுய பாஷையில் கற்கமுடியும். விஞ்ஞானம் கணிதம் தமிழில் கற்கமுடியாது. தமிழில் புத்தகங்களே கிடையாது. அந்த மொழி மாற்றம் நடந்தபோது கற்ற அனுபவம் எனக்கு உண்டு. ஆங்கில புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து ஆசிரியர் கற்பிப்பார். அந்த மாற்றத்தினால்தான் நானும் என்னைப்போன்ற கிராமப்புற மக்களும் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பொறியியல் பீடங்களை அடைய முடிந்தது. 

தமிழில் கற்பது தமிழரின் உரிமை என்று தமிழ் அரசியல்வாதிகள் சொல்லவில்லை. மாறாக ஆங்கிலத்தில் கற்பது எங்கள் உரிமை என்றே கோஷமிடடார்கள். முஸ்லிம்கள் மட்டுமே ஆங்கிலத்தில் கற்க சட்டம்  இடம் தந்தது. ஆனாலும் ஒருசில மேட்டுக்குடி கொழும்பு முஸ்லீம்களை தவிர முஸ்லீம்கள் தமிழிலேயே கற்றார்கள்.

Link to comment
Share on other sites

சிங்கள-பௌத்த இனமதவெறிப் பயங்கரவாதத்தை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றிய பண்டாரநாயக்கவுக்கு, அந்த இனமதவெறியரின் மக்களும் இன்னொரு போர்க்குற்றவாளியுமான சந்திரிக்கா குமாரதுங்க வெள்ளையடிக்க முயல்வது ஆச்சரியமானது இல்லை.

இவர்கள் ஒருகுட்டையில் ஊறிய சிங்கள-பௌத்த இனமதவெறிக் கும்பல்.

Link to comment
Share on other sites

On 8/27/2016 at 8:18 PM, hasan said:

இசைக்கலைஞன் 
நான் சுத்தமான தமிழில்தான் எழுதுகிறேன். ஆனாலும் அது மீண்டும் மீண்டும் பிழையாக விளங்கப்படுகிறது  ஏன்  என்று விளங்கவில்லை. தமிழர்களை தமிழில் கட்டாயமாக படிக்கவைத்தது திருட்டுத்தனம் என்று சொல்கிறீர்களா. அல்லது தமிழர்களிடமிருந்து அவர்கள் காலனித்துவ சொத்தான ஆங்கிலத்தை பண்டாரநாயக்க திருடிவிட்டதாக கருதுகிறீர்களா? ஒன்றுமே புரியவில்லை. 

நான் எழுதியது ஒரு உவமானத்துக்காக.. நேரடிப் பொருள் கொள்ள வேண்டாம். tw_blush:

தமிழர்களைப் பொறுத்தவரையில் தனிச் சிங்கள சட்டத்தைக் கொண்டு வந்த பண்டார நாயக்க செய்தது ஒரு தவறு. "உள்நாட்டு மொழிகள் சட்டம்" என்று கொண்டு வந்திருந்தால் அதை இன்று பாராட்டலாம். ஆகவே தமிழர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு தீமை. நீங்கள் சொல்வது தீமையிலும் ஒரு நன்மை என்பது. நான் சொல்ல வந்தது தீமையால் நன்மை என்பதைவிட ஒரு நன்மையால் நன்மை விளைந்தது என்று இருக்க வேண்டும் என்பதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/27/2016 at 7:18 PM, hasan said:

இசைக்கலைஞன் 
நான் சுத்தமான தமிழில்தான் எழுதுகிறேன். ஆனாலும் அது மீண்டும் மீண்டும் பிழையாக விளங்கப்படுகிறது  ஏன்  என்று விளங்கவில்லை. தமிழர்களை தமிழில் கட்டாயமாக படிக்கவைத்தது திருட்டுத்தனம் என்று சொல்கிறீர்களா. அல்லது தமிழர்களிடமிருந்து அவர்கள் காலனித்துவ சொத்தான ஆங்கிலத்தை பண்டாரநாயக்க திருடிவிட்டதாக கருதுகிறீர்களா? ஒன்றுமே புரியவில்லை. 

கம்புயூட்டர் கால இன்றைய நிலையில்கூட 
ஆங்கில அறிவு உள்ளவர்கள் வெறும் 5 வீதத்தையும் தாண்டமுடியாது.

தமிழர்களுக்கு ஆங்கில கல்வியை எப்படி 1960களில் எப்படி புகுத்தி 
இருக்க முடியும் ?
எல்லோரையும் இங்கிலாலாந்து அனுப்பியா ?

நடைமுறை சாத்தியம் தான்அதன் அடிப்படை.

பண்டாரநாயக்க என்ன வெட்டி புடுங்கி 
தமிழ் மூல கல்வியை கொண்டுவந்தார் என்று நீங்கள்தான் விளக்க வேண்டும். 
மேற்க்கொண்டு விவாதிக்க. 

ஹிந்தி எதிர்ப்பை செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் 
அதன் பிரதிபலனாகத்தான் ஆங்கிலத்தை உள்வாங்க வேண்டிய 
கட்டாய நிலை உருவாகியது.
ஆங்கிலத்தை இந்திய பொது மொழியாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே 
ஹிந்தியை புறந்தள்ளும் சாத்தியம் இருந்தது.

இலங்கையில் சிங்களம் தனிச்சட்டம் 
இரண்டிட்கும் .....
வேறுபாடு கிரக தூரம்.

இதில் பண்டாரநாயக்க விறகு நீங்கள் சூட்டும் கிரீடம் பற்றிக்கொஞ்சம் 
விளக்கம் தந்தால் அறிந்து கொள்ளலாம். 
 
Link to comment
Share on other sites

6 hours ago, Maruthankerny said:

நான் எதை சொன்னாலும் எதையும் கருப்பு வெள்ளையாக பார்க்கும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆனாலும் இதை வாசிக்கும் மற்றவர்களுக்காக எழுதுகிறேன்.
24 மணி நேரத்தில் எவ்வாறு சிங்களம் அரசகரும மொழியாக்க முடியும் என பல்கலைக்கழக மாணவரான சரத் முத்வேடுகம கேட்கையில் பேப்பரில் என பண்டா பதிலளித்தார். அதுபோலத்தான் பண்டா தனி சிங்கள சட்டத்தின் தவறை உணர்ந்து தமிழ் மொழி விசேஷ  பிரயோகம் Tamil Language (Special Provisions) Act No. 28 of 1958 என்ற சட்டத்தின் மூலம் தமிழ் பகுதிகளில் தமிழில் நிர்வாகம் செய்யும் வகை செய்தார். ஆனாலும் சிங்களமும் தமிழும் நடைமுறைக்கு வர நீண்ட காலம் எடுத்தது. பேப்பரில் என்றால் கூட சிங்களத்தை மட்டும் தேசிய மொழியாக கொண்டுவந்தது பண்டாரநாயக்கவின் மிகப் பெரிய தவறு. அதை திருத்துவதற்குரிய கால அவகாசத்தை ஏகாதிபத்தியங்களின் நலன்களை காக்கும்  கொலையாளியும், ஜே ஆரும் எஸ்ஜேவியும் வழங்கவில்லை. 
இதை விரிவாக எழுத இது களமில்லை.

தமிழர் தமிழில் கட்டாயம் படிக்கவேண்டும் என்பதற்கும் தமிழிலும் படிக்கலாம் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.   பண்டா எல்லா கல்லூரிகளையும் அரசுடைமையாக்கினார். இன்று சர்வதேச கல்வி நிலையங்கள் உருவாக்கி வர்க்க வேறுபாடடை கல்வியில் மீண்டும் உருவாக்குகிறார்கள். இந்தியாவைப்போல தனியார் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாகின்றன. சர்வதேச கல்வி நிலையங்களில் படிக்கும் செல்வந்த பிள்ளைகள் தமிழில் உரையாடுவார்கள். தமிழில் படித்த பெற்றோரே அதற்கு காரணம். ஆனால் அவர்களுக்கு தமிழில் எழுத வாசிக்க தெரியாது. வெளிநாட்டு பிள்ளைகள் போல அடுத்த தலைமுறைக்கு பேசவரும் என்றும் சொல்ல முடியாது. தமிழை ஹிந்தியாலோ சிங்களத்தாலோ அழிக்கமுடியாது. ஆனால் ஆங்கிலத்தால் முடியும். அந்தவகையில் இதுவரை இலங்கையில் தமிழை காத்தது பண்டாரநாயக்காத்தான். 

Link to comment
Share on other sites

1948இல் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் குடியேறி வாழ்ந்த தமிழ் மக்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டது. 1956இல் தனிச் சிங்கள ஆட்சிமொழி சட்டம் வந்தது. இச்சட்டத்தினை எதிர்த்துப் பேரா. தனிநாயகம் அடிகள் செயல்பட்ட நிகழ்வுகள் இக்கட்டுரையில் பதிவாகியுள்ளது. தனிச் சிங்களச் சட்டம், தமிழர்களின் உரிமையைப் பறிப்பது குறித்தும் இக்கட்டுரை பேசுகிறது. ஈழத்தில் வாழமுடியாத சூழலில்தான், அவர் மலாயா பல்கலைக்கழகத்திற்குப் போகவேண்டிய நிலை உருவானது. மீண்டும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோதும், தமிழ் மக்கள் உரிமைக்காக அடிகள் மேற்கொண்ட செயல்பாடுகளையும் இக்கட்டுரை மூலம் அறிய இயலுகிறது. உலகம் முழுவதும் பயணம் செய்த அடிகள் பன்மொழி தொடர்பான நிர்வாகச் சிக்கல்களுக்குத் தெளிவான தீர்வை அறிந்தவராக இருந்தார். இதனைச் சிங்கள ஆட்சியாளர்களிடம் பலமுறை எடுத்து விளக்கினார். சிங்களப் பேரின அரசு அடிகள் கூறியவைகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் தமிழர்கள் தங்களது உரிமைகளைப் போராடித்தான் பெறவேண்டும் என்றும் அவர் கருதியதை இக்கட்டுரை வழி அறியமுடிகிறது.

ஒருவரிடத்தில் அமையப் பெறுகின்ற ஆளுமை அகச்சார் அனுபவங்களால் மட்டுமன்றி சுற்றுப்புறச் சூழல்களாலும் அமையப் பெறுகிறது. ஆகவே ஒரு குறிப்பிட்ட தனியனின் ஆளுமை சமூகத்துடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இந்த வகையில் தனிநாயகம் அடிகளின் ஆளுமை பல்பரிமாண நோக்கில் விரிவாக்கம் பெறுகிறது. குறிப்பாக இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் எதிர்கொள்ளும் அடையாள அரசியல் நெருக்கடிகளின் தருக்க விளைவாகவும் ஆளுமை உருவா கின்றது. இந்தப் பின்புலத்தில் செல்வாக்குச் செலுத்தும் சிந்தனைத் தேட்டங்களையும் மாற்றங்களையும் உள்வாங்கிய ஆளுமையாகவே தனிநாயகம் அடிகளை முன்நிறுத்த வேண்டி யுள்ளது. இந்த அரசியல் நீக்கம் செய்து அடிகளை தூய தமிழியல் செயற்பாட்டாளராக மட்டும் ஒற்றைப் பரிமாணத்தில் நோக்குவது தவறானது.

இன்று அரசியல் நுண்மதி என்பது கட்சி அரசியல், தேர்தல் அரசியல், ஆட்சி அரசியல் என்பவற்றைப் பற்றியல்லாது ஒருவரது சொல் - செயல், பணிகள் தொடர்பான ஆற்றலையும் உளமுயற்சிகளையும் அடியற்றி உருவாக்கப்பட்ட ஓர் எண்ணக்கருவாகும். இந்த எண்ணக்கரு சார்ந்தும் தனிநாயகம் அடிகளை நாம் விளங்கிக்கொள்வது அவசியமாகிறது. ஒருவரது உளப்பாங்குடன் இணைந்து செல்லக்கூடிய சிந்தனைகள், பணிகள் அவருக்கு  உளநிறைவு அல்லது உளத் திருப்தி தரக் கூடியனவாகவே இருக்கும். குறிப்பிட்ட ஒரு சூழமைவில் ஒருவர் எவ்வாறு சிந்திக்கிறார், எவ்வாறு மனவெழுச்சி கொள்கிறார், எவ்வாறு இயங்குகின்றார் என்பதை அவரது உளப்பாங்குடன் தொடர்புடைய இயக்கங்களாக கொள்ளப் படுகிறது.

நாம் இங்கு தனிநாயகம் அடிகளது உளப்பாங்குடன் தொடர் புடைய இயக்கங்களில் ஒன்றான அரசியல் நுண்ணறிவும் அரசியல் செயற்பாடும் எவ்வாறு விளங்கி வந்துள்ளது என்பதை முன்வைத்து அடிகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முயற்சி யாகவே இந்தப் பதிவு அமைகிறது. 1950களுக்குப் பின்னர் இலங்கையின் வரலாற்றில் சிங்கள பௌத்த ஆதிக்கம் நிறுவன மயமானது. இதுவே அரச நிறுவனத்தை இயக்கும் கருவியானது. இக்காலகட்டத்தில்தான் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற் றப்பட்டது. இதனைத் தனிநாயகம் அடிகள் எதிர்கொண்ட விதமும் இந்த நிலைமைகளை மாற்றியமைக்கும் எதிர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாங்கும் கவனிப்புக்குரியது.

இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்திலிருந்து தனிச்சிங்களச் சட்டம் இயற்றப்படும் 1956 வரை ஆங்கிலமே அரச கரும மொழியாக விளங்கி வந்தது. எனினும், இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கும் முன்னரே இலங்கையில் சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக இருக்கவேண்டும் என்ற கருத்து இலங்கை அரசியல் வாதிகளின் மனதிலே இருந்து வந்தது. இதற்கு ஆதாரமாக 1944ஆம் ஆண்டு சட்டசபையிலே நிதி மந்திரியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் ஆங்கிலத் திற்குப் பதிலாக சிங்களமே அரச கரும மொழியாக ஒரு குறிப்பிட்ட காலத்துள் ஆக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது. பின்னர் தமிழும் அரச கரும மொழியாக இருக்க வேண்டுமென்ற திருத்தத்துடன் ஏற்றுக்கொள்ளப் பட்டது. ஆனால் செயலளவில் - நடைமுறையில் ஒன்றும் சாத்தியப்படாமல் ஆங்கிலமே சுதந்திரமடைந்த பின்னரும் அரசகரும மொழியாக இருந்து வந்தது. இடையிடையே ஆங்கில மொழிக்கு எதிராகவும் சுதேச மொழிகளுக்கு சார்பாக வும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

1951ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசில் மந்திரியாக இருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா தனது சிங்கள மகாசபா மாதம்பையில் நடத்திய வருடாந்த கூட்டத்தில் ‘சிங்களம் மட்டும்’ தான் இலங்கையின் அரசகரும மொழியாக இருக்க வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். இத்தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கும்படி சிங்கள மகா சபா கேட்டிருந்தது. ஆனால் ஐ.தே.க ஏற்க மறுத்திருந்து இந் நிலையில் பண்டாரநாயக்கா இதனை சாட்டாக வைத்துக் கொண்டு தனது மந்திரி பதவியை ஜூலை 1951இல் இராஜினாமா செய்தார். பண்டாரநாயக்கா சிங்கள மகாசபாவை மிக விரைவில் கலைத்து விட்டு 1951 செப்டெம்பரில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தாபித்துக் கொண்டார். தொடர்ந்து ஐ.தே.க. அரசாங்கம் அரச கருமமொழி மாற்றம் பெறுவது குறித்த அக்கறையின்றி இருப்பதாகவும் கால வரையறை ஒன்றை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதாகவும் குற்றஞ் சாட்டினார். சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் இரு ஆயுதங்களாகக் கொண்டு இலங்கையில் அரசியல் அதிகாரத் தைப் பெற்றுக்கொள்ளலாம் என கண்ட பண்டாரநாயக்கா அவற்றை வெகு திறமையாகவே கையாள முற்பட்டார்.

1952இன் பின்னர் குறிப்பாக அரச கரும மொழியாக ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களமும் தமிழும் என்ற சமநிலை மாறி சிங்களம் மட்டும் என்பது வலுமிக்க கோரிக்கையாக மாறத் தொடங்கியது. இக்கோரிக்கையானது ஆங்கிலேயர் ஆட்சியில் அரசாங்கப் பதவிகளுக்கு தமிழர்களுடன் போட்டி யிட்ட சிங்களப் புத்தி ஜீவிகள் மத்தியிலே தனிப்பட்ட முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொண்டது. அத்துடன் ‘சிங்களம் மட்டும்’ எனும் கோரிக்கையானது சிங்களப் பழைமைவாதி களை ஒன்றிணைக்கும் மூலமாகவும் அதன் வழியாக சமூகத் திலே உயர்ந்த அந்தஸ்தையும் பெரும் அங்கீகாரத்தையும் பெற வைத்த  ஒன்றாகவும் கருதப்பட்டது. மேலும் இந்தக் கோரிக்கை தனிப்பட்ட உயர் குழாத்தினரை மட்டுமல்லாது சாதாரண சிங்களப் பொது மக்களையும் கூட கவர்ந்தது. இதுவரை சிங்கள மக்களிடையே காணப்பட்ட தாழ்நிலைச் சிங்களவர், கண்டிச் சிங்களவர் என்ற இரு பிரிவுகளையும் ஒற்றுமைப்படுத்து வதாகவும் இக்கோரிக்கை பயன்பட்டது. மேலும் மேலைத் தேயச் செல்வாக்குக்கு எதிராக பழைமைவாதிகள் நடத்தும் கிளர்ச்சிகளின் அடையாளமாகவும் செயற்பட்டது. சிங்கள மக்களிடையே காணப்பட்ட தீவிர தன்மை கொண்டோரை ஒன்றிணைத்தது. 1956ஆம் ஆண்டளவில் பலம் மிக்க சமூக சக்தியாக உருவாக்கியதும் சிங்களம் மட்டும் எனும் கோரிக்கைதான்.

இந்தப் பின்னனியில்தான் தனிநாயகம்அடிகள் தனது பரந்த அறிவைப் பயன்படுத்தி சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக இருப்பதால் சிங்களத்திற்கு எந்த ஆபத்தும் வராது. சிங்களம் அரச கரும மொழியாக இருந்தாலும் தமிழை யும் சிங்களத்தின் நிலையைப் பாதிக்காமல் பயன்படுத்தலாம். இதுபோன்ற பல்வேறு சிந்தனைகளை பன்னாட்டு அனுபவங் களிலிருந்தும் பல்வேறு நாட்டு அரசியலமைப்பு வரைவுகளி லிருந்தும் மேற்கோள்கள் காட்டி பத்திரிகைகளில் கட்டுரை களை எழுதி வந்தார். தொடர்ந்து பல கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு உரைநிகழ்த்தி வந்தார். தான் எழுதியவற்றை ஒன்றாகத் திரட்டி ‘தமிழ் மொழி உரிமைகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நூலையும் வெளியிட்டார்.

சிங்களம் மட்டும் என்ற போராட்டத்தில் சாதாரண மக்களைப் பொறுத்தளவில் பரந்தளவிலான வலுமிக்க ஆதரவு உருவானது. தனிப்பட்ட ஒவ்வொரு சிங்களவரும் தனது மொழியுடன் தனது எதிர்கால நல்வாய்ப்பும் அதன் மூலமாக தனது சுயமரியாதை தங்கியிருப்பதாகவும் கருதிக்கொண்டனர். இப்போராட்டம் மூலமாக வலுமிக்க சிங்கள இன உணர்வின் அடிப்படையிலான ஒற்றுமையை சிங்கள மக்கள் ஏற்படுத்திக் கொண்டனர். மொழி இயக்கமானது சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஒன்றிணைந்த கூட்டு மனோபாவ சிங்கள மீள் எழுச்சிக்கும் சுயமரியாதையை வலியுறுத்துவதற்குமான அடையாளச் சின்னமாகவும் கருதப்பட்டது. சிங்கள மொழி யானது அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான மூலமாக மாற்றமடைந்தது. கட்சி அரசியலையும் கடந்து, சிங்களம் மட்டும் எனும் கோரிக்கை அரசியல் ஆட்சி அதிகாரத்துவ செல்நெறியை தீர்மானிக்கும் சக்தியாகவும் பரிணாமம் பெற்றது.

இலங்கையில் தனிச் சிங்களம் இயக்கம் தீவிரமடைந்து வருவதைக் கண்டு தனிநாயகம் அடிகள் கவலைப்பட்டார். தனது உணர்வுகளை சாத்தியப்பட்ட களங்களில் பதிவுசெய்தார். தனிச்சிங்களச் சட்டம் தமிழ் மக்களைப் பாதிக்கும் கொடுங் கோண்மை சட்டம் என்று அறிவுபூர்வமாக எடுத்துரைத்து வந்தார்.

1956 பொதுத் தேர்தல் இலங்கை வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தது. M.E.P. கூட்டணி பெருவெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பண்டாரநாயக்கா பிரதமர் பதவி வகித்தார். இந்தப் புதிய அரசாங்கத்தின் முதலாவது நடவடிக்கையாக சிங்கள அரச கரும மொழிச் சட்டப் பிரேரணை கொண்டு வரப் பட்டது. 1956 ஜூன் 5இல் கொண்டுவரப்பட்ட இம்மசோதா ஜூன் 14ஆம் திகதி M.E.P. U.N.P .பாராளுமன்ற அங்கத்தவர் களின் ஆதரவுடன் சட்டமாகியது. தனிச் சிங்களம் மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்ட அன்று தமிழரசுக் கட்சி யின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு முன்னால் காலிமுகத் திடலில் அமைதி முறையிலான எதிர்ப்பு சத்தியாக் கிரகப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது தனிநாயகம் அடிகள் அப்போராட்டத்தில் நேரில் கலந்து கொண்டு தனது முழு ஆதரவை வெளிப்படையாக தெரி வித்தார். அந்தப் போராட்டத்திற்கு ஆன்ம வலிமையைக் கொடுத்தார். இந்த எதிர்ப்பு நடவடிக்கையின்போது தனிச் சிங்கள இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களினாலும் மற்றும் குண்டர்களினாலும் அமைதி வழியிலான எதிர்ப்புப் போராட்டம் வெறித் தாக்கு தலுக்கு இலக்காகியது. தமிழ்த் தலைவர்கள் அடி உதைக்கு உள்ளானார்கள். காயங்களுக்குள்ளானார்கள். இதன் போதுதான் துணிச்சலுடன் போராட்டக் களத்திற்கு அடிகள் சென்று தனது ஆதரவை வழங்கினார். இந்த நிலைமையை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிகழ்வு பற்றி தனிநாயகம் அடிகளின் இறுதிச் சடங்கு நிகழ்வில் தமிழ்த் தலைவர்களில் ஒருவரான அ.அமிர்தலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றும் போது மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.

“1956ஆம் ஆண்டு ஆனி மாதம் 3ம் திகதி தனிச்சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் புகுத்தப்பட்ட அன்று காலிமுகக் கடற்கரையிலே அந்தப் பச்சைப்புல் தரையிடல், ஈரமாகக் கிடந்த நிலத்தில் நாமெல்லாம் இருந்து சத்தியாக்கிரகம் செய்து கொண்டிருந்த போது எம்மை ஆயிரக்கணக்கான காடையர் சுற்றி வளைத்து கல்மாரி பொழிந்து தாக்கிக்கொண்டிருந்த நேரத்தில், பொலிஸார் எமக்கும் அவர்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தி, ஓரளவுக்கு அந்தத் தாக்குதலி லிருந்து எங்களை தடுத்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், திடீரென்று அந்தத் தாக்குதலுக்கு ஊடாக ஒரு உருவம், துறவியின் உடையிலே எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. எங்கள் மனம் ஒருநிமிடம் பெருமிதப்பட்டது. இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் நான் இந்தச் சத்தியாக்கிரகத்தை நடத்துபவர்களோடு சேரப் போகிறேன் என்று அந்தக் காடையர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வரக்கூடிய உளம்படைத்த வராக, தமிழுக்காக நடைபெறுகின்ற சத்தியாக்கிரகத்திலே தாமும் பங்குகொள்ள வேண்டுமென்ற அந்தத் வீரியத்தோடு அங்கு வந்திருந்த தனியாகம் அடிகளாரை நாம் என்றும் மறக்க முடியாது’’ என்று நினைவு கூர்ந்தார். மேலும் ‘‘எமக்கு கலாசாரத்தையும் அரசியலையும் பின்னிப் பிணைத்து எமது கலாசாரத்தைக் காப்பதற்கு அரசியல் எந்த வகையில் பணிபுரிய வேண்டுமென்று காட்டக்கூடியவராக அல்லது அரசியல் இலட்சியத்தை அடைவதற்குக் கலாசாரம் எந்த வகையில் உதவ முடியும் என்பதை எடுத்துக்காட்டுபவராக வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகள் விளங்கினார்’’ என்றும் மறைந்த தலைவர் அ.அமிர்தலிங்கம் கூறுவது முற்றிலும் பொருத்தமாகும்.

இந்த சத்தியாக்கிரக போராட்டத்தின் மீது தாக்குதல் நடை பெற்ற தருணத்தில் கிழக்கிலங்கையிலும் மட்டக்களப்பிலும் கல்லோயாக் குடியேற்றத் திட்டத்திலும் சிங்களத் தமிழ் மக்களுக்கிடையிலான இனக்கலவரம் ஆரம்பித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டது. இந்த கலவரத்தைத் தொடர்ந்து நாட்டில் தீவிரமான இன உணர்வுகள் இரு இனங்கள் மத்தியிலும் வலுப்பெறலாயிற்று.

1956ஆம் ஆண்டு அறப்போரில் அடிகளார் கலந்துகொண்ட போது அவர் இலங்கை பல்கலைக்கழகப் பணியில் இருந்து விடுப்பு பெற்றுக் கொண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். விடுமுறையில் இலங்கைக்கு வந்திருந்த போதே அறப்போரில் அடிகள் ஈடுபட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அடிகள் விடுமுறையில் இருந்த பொழுதும் அரசியல் ரீதியான போராட்டம் தமிழினம் சார்ந்து வெளிப்படு கையில் அதில் கலந்துகொள்வது தமது கடமையென்று கருதி னார். அதில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருப்பது கோழைத் தனம் என்ற மனப்பாங்குடன் இயங்கியுள்ளார். இதனால் தனக்கு வரக்கூடிய ஆபத்துக்களைக் குறித்து அடிகள் கவலைப் படவில்லை.

சிங்கள மொழிச்சட்டம் பாராளுமன்றத்தில் அமுலாக்கப் பட்ட பின்னர் பல்வேறு எதிர்ப்புப் பிரச்சாரக்கூட்டங்கள் நடை பெறத் தொடங்கின. பத்திரிகையிலும் கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின. அடிகளும் கட்டுரைகள் எழுதி வந்தார். எதிர்ப்புப் பிரச்சார கூட்டமொன்றில் கலந்துகொண்டு சமஷ்டி அரசியல் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். சமஷ்டி அரசியல் பற்றிய கருத்தாடலை அறிவுபூர்வமாக முன்வைத்தார். பல்வேறு நாட்டு அனுபவங்களின் வெளிச்சத்திலிருந்து தமது கருத்துக்களை தொகுத்து இலங்கைச் சூழலுக்கு பொருத்தமாக எடுத்துரைத்தார். மூன்று இனத்தவரும் நான்கு மொழியினரும் மூன்று சமயத்தவரும் ஒன்றிணைந்து சுவிட்சர்லாந்தில் ஒரு தேசியத்தை உருவாக்கியுள்ளனர். அவ்வாறே நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் காத்திட நாம் விரும்பு வோமாயின் இலங்கையில் இருமொழிகள் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினைக்கு காரணமாகிவிட முடியாது என்று விளக்கினார். தொடர்ந்து தென்னாபிரிக்கா, கனடா, பெல்ஜியம், சுவிட்சர் லாந்து ஆகிய நாடுகள் இருமொழி அல்லது பன்மொழி பேசும் நாடுகளாக இருந்தும் மொழி பிரச்சினைக்கு தக்க தீர்வு கண்டிருப்பதை எடுத்துரைத்தார். இதுபற்றியெல்லாம் நாம் அக்கறைப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. நாட்டை இருண்ட யுகத்துக்குள் கொண்டு போகப்போகிறோம் என்று எச்சரிக்கை செய்தார்.

தமிழ் அல்லது சிங்களப் பண்பாட்டைத் தழுவி வாழ்வதால் இலங்கை தேசிய உணர்வு குன்றிவிடாது. இது அடிகளாரின் ஆணித்தரமான வாதம். ஆகவே தமிழ் மக்கள் தங்கள் இன உணர்வினைப் போற்றி, தங்கள் மொழியை வளர்த்து, தங்கள் பண்பாட்டைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கான சிந்தனைத் தெளிவு நமக்கு வேண்டும் என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் எடுத்துரைத்து வந்தார். அடிகளார் சிங்கள மொழிக்கோ சிங்கள மக்களுக்கோ எதிரானவர் அல்லர் என்பதும் அதே சமயத்தில் தமிழர்கள் தங்கள் இலங்கைத் தேசிய உணர்வுக்கு பங்கமில்லாத வகையில் தங்கள் தமிழின உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அடிகளாரின் உறுதியான கருத்து. இருமையில் ஒருமைப்பாடு அல்லது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும் காப்பதும் மனித இயல்பு. இதை ஆணித்தரமாகவும் நிதானமாகவும் தெளிவுபடுத்தி வந்தார்.

1956ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் தனிச் சிங்கள இயக்கம் தீவிரமடைந்து அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதை அறிந்து கவலை கொண்டார். புதிய பிரதமர் பண்டாரநாயக் காவை நேரில் சந்தித்த தூதுக்குழுக்களில் தாமும் இணைந்து மொழிப்பிரச்சினை பற்றிக் கருத்துரைத்தார்.சிங்களம் - தமிழ் ஆகிய இரு மொழிகளையும் இலங்கையில் ஆட்சி மொழிக ளாக்கி இனப் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும் என்று தகுந்த ஆதாரங்களுடன் பெல்ஜியம், கனடா, சுவிட்சர்லாந்து முதலான நாடுகளின் முன்னுதாரணங்களுடன் எடுத்துரைத்தார். ஆனால் பண்டாரநாயக்கா அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. வாள்முனையில் “இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே நான் விரும்புகின்றேன்” (‘Father, I will rather decide it on the point of sword) என்று பிரதமர் ஆணித்தரமாக கூறினார். இந்தநிலை அடிகளாருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இலங்கையில் மொழிப் பிரச்சினை வலுப்பெற்று சிங்களம் மட்டும் அரச கரும மொழிச்சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து M.E.P., M.E.P. ஆகிய பிரதாய இரு கட்சிகளுமே இலங்கையின் கட்சி முறைமையில் இன ரீதியான பிளவினை அறிமுகம் செய்தன. அதனால் இரு சமூகங்களுமே தேசிய அணியிலான அரசியல் சக்திகளாக இயங்குவதற்கு தடை யாகின. அதனால்தான் முதன் முதலாக மாற்று அரசாங்கத்தை தேர்வு செய்யும் பணி சிங்கள பிரதேசங்களுக்கு மட்டும் கிடைக்கலாயிற்று.

இவ்வகையிலே தமிழ் பிரதேசங்கள் தேசிய நீரோட்டத்தி லிருந்து புறக்கணிக்கப்படலாயின. இந்த நிலைமைகள் குறித்து அடிகள் மிகுந்த கவலையடைந்தார். தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையின் வலிமையால் தமது உரிமைகளை நிலைநாட்டா விடில் எதிர்காலத்தில் அவற்றைப் பெறப் போவதில்லை. ஆகவே தமிழ் மக்கள் தமது உரிமையை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டுமென்பதை வலியுறுத்தி வந்தார்.

பண்டாரநாயக்கா பதவிக்கு வந்து இரண்டு மாதங்களில் கல்லோயா குடியேற்றப் பகுதியில் வெடித்த கலவரம் 150 பேரின் உயிரைக் காவுகொண்டது. இது சம்பந்தமாக பண்டார நாயக்கா அரசாங்கம் எத்தகைய சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதே போல காலிமுகத் திடலில் இடம்பெற்ற சத்தியாக்கிரகத்தை வன்முறையால் குழப்பிய சுதந்திர கட்சி குண்டர்கள் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் அடிகள் உரியவாறு சுட்டிக்காட்டி வந்தார். அரசாங்கம் மிக மோசமாக இனவாத பண்புகள் கொண்டதாக மாறி வருவதையும் அரசியல் ரீதியில் அம்பலப்படுத்தி வந்தார்.

1958இல் பெரும் இனக்கலவரம் மூண்டது. பல்வேறு வதந்திகளை உருவாக்கி தமிழர்களுக்கு எதிரான வன்முறை களை சிங்களக் காடையர்கள் திட்டமிட்டு நடத்தினர். தமிழர்களுக்கெதிரான இனவன்செயல்கள் வெடித்து ஆறு நாட்கள் வரை அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட வில்லை. 1958இல் மே 22 அன்று 500க்கு மேற்பட்ட காடையர் பொலனறுவையில் தமிழ்ப் பிரயாணிகள் பயணம் செய்த புகையிரதத்துக்குள் புகுந்து தாக்கினர். இதைத் தொடர்ந்து பரவலாக கொலை, கொள்ளை, சூறையாடல்கள், பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தன. இவற்றைக் கட்டுப்படுத்தாமல் அரசு மௌனம் காத்து வந்தது. வளர்ந்து வரும் நிலைமையின் கொடூரத்தை உணர்ந்த ஒரு குழுவினர் பிரதமர் பண்டாரநாயக் காவை சந்தித்து, அவசரகால நிலையை பிரகடனம் செய்யுமாறு கோரினர். அதற்கு பிரதமர் ‘ஒரு சிறிய விடயத்தைப் பெரிது படுத்துகிறீர்கள்’ என்று தூதுக்குழுவினரிடம் கூறினார். தமிழ் விரோத நடவடிக்கைகள் அரங்கேறுவதை விளங்கிக்கொண் டும் அதைப் பெரிதுபடுத்தாமல் விசித்திரமாக பதில் கூறினார்.

சிங்கள அரசாங்கம் 1953இல் ஒரு நாள் ஹர்த்தாலிற்காக அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தது. ஆனால் 1958இல் தமிழர்கள் கொல்லப்பட்டும் பெண்கள் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்பட்டும் அகதிகளாக்கப்பட்டும் பொது இடங்களில் தஞ்சம் புகுந்துவரும் போதும் இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரத் தேவையான அவசரகால நிலையை பிரகடனம் செய்ய சிங்கள அரசாங்கம் மறுத்தது. வன்முறைகள் மோசமாக நடந்தேறிய பின்னர் ஆறாம் நாளில் தான் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட தமிழரசுக் கட்சியின் சில பாராளுமன்ற அங்கத்தவர்களும், சிங்களத் தீவிர வாதக் கட்சியான ஜாதிக விமுக்தி பெரமுனவின் தலைவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

பண்டாரநாயக்கா கலவரம் அடங்கிய நிலையில் ‘தமிழ் மொழி விசேட உபயோகம்’ சட்டத்தை இயற்றினர். இம் மசோதா பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்கள் தடுப்புக்காவலில் இருந் தனர். தமிழ்ப் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் இச்சட்ட வரையறை விவாதிக்கப்படுவதை ஆட்சேபித்து எல்லா எதிர்க் கட்சி அங்கத்தவர்களுமே சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

1958 இனக்கலவரம் மற்றும் இனவழிப்பு குறித்து தனிநாயகம் அடிகள் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். ஐ.நா.  சபையில் முறையிடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வும் திட்டமிட்டிருந்தார். குறிப்பாக, இனக்கலவரங்களில் நிகழ்ந்த கொடுமையான நிகழ்ச்சிகளை, உண்மைச் சான்றிதழ் களில் சாட்சியம் எழுதிக் கொடுக்கப்படுவதைத் தூண்டி வந்தார். இவற்றை எவ்வாறு எழுத வேண்டும் என்பதை வழக்கறிஞர்களிடமிருந்து அறிந்துகொள்ளவும் மக்களை வேண்டிக் கொண்டார். தமிழர்கள் அனைவரும் தமிழ் இயக்கத் தில் ஈடுபட வேண்டுமென்று மக்களைக் கேட்டுக்கொண்டார். தமிழ் மொழி உரிமைகளை பெற முயலும் இயக்கம் வெற்றி பெற வேண்டும், அந்த இயக்கத்தில் இணைந்து உளப்பூர்வமாக ஈடுபடுவது, நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்பதையும் உறுதிபடக் கூறி வந்தார்.

மொழிப் பிரச்சினை என்பது அரசியல் எல்லைகளை விட விரிந்து பரந்தது. அது தத்துவப் பிரச்சினை; அரசியல், குடியாட்சி யமைப்பு முறைக் கோட்பாட்டுப் பிரச்சினை; அக்கோட் பாட்டை நடைமுறைப்படுத்தும் பிரச்சினை; அது ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை; சமூகவியல் - மனித இயக்கவியல் பிரச் சினை என்று அடிகளார் மொழிப்பிரச்சினையின் பல்பரிமாணத் துவத்தை விளக்கினார். எனவே மொழிப் பிரச்சினையைப் பற்றிச் சிந்திப்பது அரசியல் வாதிகளுக்கு மட்டும் உரியதல்ல; அரசியல் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், சட்டவல்லு நர்கள், சமூகவியல் அறிஞர்கள் ஆகியோருக்கும் அது உரியது என்றார். அடிகள், ஒற்றுமையில் வேற்றுமை காண்பதன் மூலம் பண்பாட்டுச் சுதந்திரமும் அரசியல் ஒற்றுமையும் கைகோர்த்துச் செல்வதும், ஒரே அமைப்புக்குள் சுய நிர்ணய உரிமையும்  பண்பாட்டு தன்னாட்சி உரிமையும் நிலவுவதும் இன்று உலகில் பரவிவரும் சிந்தனைகள் என்பதையும் தமது எழுத்தில் தெளிவாக வெளிப்படுத்தினார்.

அடிகளாரின் மொழி தொடர்பிலான சிந்தனைகள் இரண்டு வகைப்படும். ஒன்று, தமிழ் மக்களுடைய மொழி உரிமை பற்றியது. மற்றையது, மொழி கற்பித்தல் பற்றியது ஆகும். 1956இல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரவிருந்தபோது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் மொழி உரிமைப் பண்புகளையும் பன்னாட்டு மொழிப் பிரச்சினை அனுபவங் களையும் பல கட்டுரைகளிலும் நூல்களிலும் சொற்பொழிவு களிலும் அடிகளார் வெளிப்படுத்தினார். 1956இல் ‘நம் மொழி உரிமைகள் - தனிநாயகம் அடிகளின் கருத்து’ எனும் சிறுபிரசுரம் கண்டி தமிழ்ப்பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டது. இது பின்னர் புதுப்பிக்கப்பட்டு இரண்டாம் மூன்றாம் பதிப்புகளாக 1961இல் வெளியிடப்பட்டது. (இந்தப் பிரசுரம் இந்த இதழ் ஆவணப் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.)

1960ஆம் ஆண்டு தேர்தலில் ஷிலிதிறி தனிச் சிங்கள அரச கரும மொழிச் சட்டத்தைத் தொடர்ந்தும் பூரணமாக நடைமுறைப் படுத்துவதற்கு மக்கள் அங்கீகாரத்தை வேண்டி நின்றது. 1956 பொதுத்தேர்தலைப் போலவே இத்தேர்தலிலும் மொழியே பிரதான விடயமாக ஆக்கப்பட்டது. பண்டாரநாயக்காவின் (கணவரின்) கொள்கைகளைத் தொடர்ந்து அமுல்செய்வதற்கு தங்களை தொடர்ந்து தெரிவு செய்யுமாறு சிறிமாவோ பண்டார நாயக்கா வேண்டி நின்றார். இவர் தமிழ்மொழி தொடர்பான கணவரின் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றுவார் என்று தமிழ்பேசும் மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஷிலிதிறியின் தேர்தல் அறிக்கையிலும் தமிழ்பேசும் மக்களுக்கு தீங்கிழைக்காத வகையில் சிங்கள அரச கரும மொழிச் சட்டம் அமுல் செய்யப் படும் என்றும் பண்டாரநாயக்காவின் ‘தமிழ்மொழி உபயோ கம்’ சரத்துக்கள் திருந்திய முறையிலே நடைமுறைப்படுத்தப் படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இவற்றுக்கு மாறாக தனது ஆட்சியின் ஆரம்பத் திலேயே நீதி மன்றங்களில் சிங்கள மொழியை பயன்படுத்து வதற்காக நீதிமன்ற மொழிச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்தது. தமிழ்மொழி பேசும் பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட சகல தரத்து நீதிமன்றங்களிலும் சிங்களத்தை திணிக்கும் இச்சட்டம் ஆங்கிலத்துக்குப் பதிலாக கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழ்பேசும் மக்களின் மொழி யுரிமையைப் பாதிக்கும் ஒன்றாகவே அமைந்தது. இச்சட்டத் திற்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் 1961 ஜன 2 இல் ஒருநாள் ஹர்த்தால் இடம்பெற்றது. மொழிஇன உணர்வைத் தூண்டு வதற்கு இச்சட்டம் துணை போனது. தமிழ்பேசும் மக்களின் எதிர்ப்புப் போராட்டம் பரவலாக வெடித்தது. தொடர்ந்து அகிம்சை வழியிலான சத்தியாக்கிரகப் போராட்டத்தை தமிழரசுக்கட்சி ஆரம்பித்தது.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் யாவரையும் ஒன்றுபடுத்திய போராட்டத்தை தமிழரசுக்கட்சி முன்னெடுத் தது. மொழியுரிமைக்கான இயக்கம் வேகமடைந்தது. அரசாங்கம் முன்னெடுக்கும் பாரபட்ச கொள்கைகளை எதிர்க்கும் இயக்க நடவடிக்கை எங்கும் வளர்ச்சியடைந்தது. மக்களை நேரடியாக பங்குகொள்ளச் செய்த முதலாவது போராட்டம் இது எனக் கூறலாம். இந்தப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் தனிநாயகம் அடிகள் ஒதுங்கியிருக்க வில்லை. சத்தியாக்கிரக இயக்கத்திற்கு ஆதரவு தேடும் வகையில் தமிழ்மொழிக்குள்ள நியாயாதிக்கமான உரிமைப் பாட்டையும் சிங்கள மக்கள் நல்வாழ்வுக்கு தமிழர்கள் ஆற்றிய பணிகளையும் விளக்கி ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். சில கோரிக்கைகளை முன்வைத்து தயாரித்த ஆவணங்களில் சக சிங்கள விரிவுரை யாளர்களின் கையப்பத்தையும் வாங்கி ஆதரவு திரட்டி வந்தார். போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று ஆதரவும் ஆலோசனையும் வழங்கி வந்தார். குறிப்பாக பணம் சேர்த்து, சத்தியாக்கிரகம் நடந்த இடங்களுக்குச் சென்று கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

1904 செப் 3ஆம் திகதி சேர் பொன். இராமநாதன் கொழும்பு ஆனந்த கல்லூரி பரிசளிப்பு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிங்கள மக்கள் சிங்கள மொழியை காக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஆற்றிய உரையினை மீண்டும் அடிகளார் துண்டுப் பிரசுரமாக்கி வெளியிட்டார். சில இடங்களில் கூட்டங்கள் நடத்தி இத்துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார். துண்டுப் பிரசுரப் போராட்டத்தை பிரக்ஞை பூர்வமாக திட்டமிட்டு முன்னெடுத்தார். இந்நேரத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தின் முதல் இந்தியவியல் துறைப் பேராசிரியராக பதவியேற்கும்படி அடிகளாருக்கு அழைப்பு வந்திருந்தது. அப்போது நிலவிய சூழ்நிலைக் காரணமாக அடிகளார் யாழ்.சத்தியாக்கிரக முறியடிப்புக்கு மறுநாளைக்கு மறுநாள் விமானம் மூலம் இந்தியா சென்று அங்கிருந்து மலேசியா சென்றார்.

அப்போது இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை முறியடிக் கவும் தலைவர்களை கைதுசெய்யவும் அரசு திட்டமிட்டிருந்தது. பலர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் தேடப்படுபவர்களின் பட்டியலில் தனிநாயகம் அடிகளின் பேரும் இருந்ததாக அறியமுடிகிறது. தொடர்ந்து பொலிஸ் கண்காணிப்பின் நெருக்கடிக்கு அடிகள் உட்பட்ட பொழுதுதான் மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பதவியேற்கும்படி அழைப்பு வந்தது. அப்போது அடிகளாருக்கு வரும் கடிதங்கள் பெரும்பாலும் அரசாங்கத்தால் திறந்து பரிசீலிக்கப்பட்ட பின்னரே கடிதங்கள் அடிகளாருக்கு கிடைத்து வந்தது. இதனை அடிகளாரும் உணர்ந்திருந்தார்.  அப்பொழுது அடிகளார் தங்கி யிருந்த இடத்திற்கு இன்னொருவர் வந்து தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில்தான் எவருக்கும் தெரி யாமல் மலேசியா செல்ல ஆயத்தமானார். தான் மலேசியாவுக் குப் போவதற்கு முன் தனது நெருங்கிய நண்பரும் சக பல்கலைக் கழக விரிவுரையாளருமான கு.நேசையா என்பவருக்கு கடித மொன்றை ரகசியமாக எழுதியிருந்தார். அடிகள் யாரும் அறியாதிருப்பதற்காக கடிதத்தை எழுதிய பின்னர் அதில் ‘எக் நாயக்கா’ என கையப்பமிட்டிருந்தார். சிங்கள மொழியில் எக் நாயக்கா என்றால் தனிநாயகம் என்று பொருள்படும். இவ்வாறு சமயோசிதமாக சிந்தித்து செயல்பட்ட பாங்கு கவனிக்கத்தக்கது. அடிகள் மலேசிய பல்கலைக்கழகப் பணியிலிருந்து 1969ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். 1972க்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தார்.

1978இல் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு புலிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் புலிச்சட்டம் என்ற அடையாளம் கைவிடப்பட்டு 1979இல் பயங்கரவாத தடைச் சட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. இச்சட்டத்துடன் அவசர கால ஒழுங்குவிதிகளும் பிரகடனப்படுத்தப்பட்டன. வடகிழக் கில் தமிழ் இளைஞர்கள் வேட்டையாடப்படத் தொடங்கினர். அப்பாவிகள் பலர் கைது செய்யும் படலமும் ஆரம்பமானது. 1979இல் யாழ்ப்பாணத்தில் எட்டுத் தமிழர்கள் சுட்டுக்கொல் லப்பட்டனர். அப்போது ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தது. இந்த காலத்தில் தமிழர்கள் மிக மோசமாக பல்வேறு இன்னல் களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வந்தனர். இவற்றை அடிகளார் நேரில் கண்டு வந்தார். இந்நிலையில் நீதிக்காக, மனித உரிமைக்காக, நான் மேடையில் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. நமது தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேச ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யும்படி தனது நண்பர் களிடம் வேண்டிக் கொண்டார்.

அடிகளாரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாண வீர சிங்கம் மண்டபத்தில் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் அடிகள் தோன்றி தமிழ் மக்கள் முகங்கொடுக் கும் பிரச்சினைகளின் தாக்கத்தை எடுத்துரைத்தார். தமிழ் மக்களின் நீதிக்காக குரல் கொடுத்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றால் நமது இளைஞர்களின் எதிர்காலம் எப்படிப் பாழாகுமென்பதை தெளிவுபடுத்தினார். உரிமைக்காக நாம் போராடுவதைவிட வேறு மார்க்கம் இல்லையென்பதை யும் உறுதிப்பட கூறினார். அடிகள் கட்சி அரசியலோடு நேரடி தொடர்பற்றவராயினும் தமிழ் பேசும் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக உரிய முறையில் உழைக்கத் தயங்கவில்லை. களத்தில் சென்று போராடவும் பின்நிற்கவில்லை. அடிகளாரின் பேச்சும் எழுத்தும் செயலும் தமிழ் பேசும் மக்களின் விடுதலை அரசியல் சார்ந்ததாகவே அமைந்திருந்தது. அவரது சொற் பொழிவு பின்காணும் வகையில் இருந்தது.

தமிழா!

தமிழை இழந்து நம் ஒப்பற்ற இலக்கியங்களையும் பண்பாட்டினையும் இழப்பதா! தமிழை இழந்து நம் செல்வச் சமய நூல்களையும் வழிபாட்டுப் பாடல்களையும் இழப்பதா! தமிழை இழந்து நம் கவின்கலைகளை இழப்பதா! தமிழை இழந்து பண்பாடின்றி புறக்கணிக்கப்பட்ட கீழ் வகுப்பினராக நம் சொந்த நாட்டில் வாழ்வதா! தன்னலம் கருதித் தமிழ் இனத்தைக்காட்டிக் கொடுப்பதா? பெரும்பான்மையோரின் அடிமைகளாக வாழ்வதா-அல்லது சாவதா- இன்றேல் சம உரிமைகளுடன் தனி இனமாக மானத்துடனும் புகழுடனும் சேர்ந்து இயங்குவதா? அம் மான நிலையை அடைய விடாது முயல்க.

இவ்வாறு முழங்கிய தனிநாயகமடிகளது அரசியல் நுண் ணறிவு நுட்பமாக அடையாளம் காணப்பட வேண்டும். இன்றைய சூழலில் அடிகளாரின் சிந்தனையை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய அவசியப் பணி உருவாகியுள்ளது. ஆகவே தனிநாயகம் அடிகள் பற்றிய மீள்சிந்தனையையும் மீள்வாசிப் பையும் உருவாக்குவோம். அடிகளின் அரசியல் நுண்ணறிவு சார்ந்தப் புலத்தை இன்னும் ஆழமாக்குவோம்.

அடிகள் தமிழ்ப் பணி செய்யவே இறைவன் தன்னை அழைக்கின்றான் என்று உறுதியாக நம்பி செயற்பட்டு வந்தார். யாழ்ப்பாணத்தில் 1951ஆம் ஆண்டு நிகழ்ந்த தமிழ் விழாவில் அடிகள் உரையாற்றும் போதும் சரி பின்னர் அவர் உரையாற்றிய பல்வேறு கூட்டங்களிலும் சரி “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே” என்னும் திருமூலரின் உரையைச் சொல்லித் தம் உரையை முடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதன் மூலம் அரசியல் சொல்லாடல் சார்ந்த சிந்தனை நோக்கி நாம் பயணிப்பது இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

இக்கட்டுரையாளர் கொழும்பில் வசிக்கும் ஆய்வாளர். பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார்.

http://keetru.com/index.php/component/content/article?id=25800

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

On 8/26/2016 at 3:23 PM, hasan said:

நான் சொல்வதை புரியாத பாவனையில் கருத்திட்டீர்கள். உங்கள் பெருமதிப்புக்குரிய ஆங்கிலத்தில் நீங்கள் எழுதுவதும் உரையாடுவதும் இங்கு பிரச்சனையில்லை. தமிழில் எழுதவும் வாசிக்கவும் தெரியாமல் அவ்வாறு தெரியாமல் இருப்பதை மேட்டுக்குடி அடையாளமாக கருதும் தமிழர்களை எண்ணி நீங்கள் பெருமைப்படலாம். செல்வநாயகம் நாகநாதன் போன்ற தலைவர்களுக்கு தமிழ் தெரியாது என்று நிறைய யாழ்ப்பாண தமிழர்கள் பெருமையாக சொல்லிக்கொண்டதை கேட்டுள்ளேன். இன்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் ஆங்கிலத்தில் படித்த பழைய தலைமுறை தலைவர்கள் மேடையில் ஏறி தங்களுக்கு தமிழில் பேச இயலாது என்று  பெருமையாக குறிப்பிட்டு  ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்துள்ளேன். ஆனால் பண்டாரநாயக்கா புண்ணியத்தில் தமிழில்  படித்த பரம்பரையினர் எவ்வளவு ஆங்கில புலமை இருந்தாலும் மேடையில் தமிழில்தான் பேசுவார்கள்.  உலகிலேயே தமிழர்கள் தமிழில் கட்டாயமாக  படிக்கவேண்டிய ஒரே நாடு இலங்கைதான். தமிழ்நாட்டில் தமிழ் என்ற பாடம் கூட கட்டாயமில்லை. 

வெளிநாட்டில் வாழும் உங்கள் பிள்ளைகள் தங்களிடையேயான தொடர்பாடலுக்கு தமிழை பயன்படுத்த போவதில்லை. அது சிந்திக்கும் மொழியாய் இருந்தால் ஒழிய. 

வழக்காளிக்கும் குற்றவாளிக்கும் விளங்காத மொழியில் உங்கள் அப்புக்காத்து அரசியல்வாதிகள் பேசுவது உங்களை புல்லரிக்கவைக்கலாம். ஆங்கிலம் தெரியாத அப்பாவி மக்கள் எக்கேடு கெட்டாலும் என்ன.

இது கூட புரியாத அளவுக்கு தமிழ் மொழியில் குறைபாடு கொண்டவனல்ல நான் ...முதலில் மொழிப்பற்று எம்மாழ் மனதில் இருக்கவேண்டும் ..
அதைவிட்டு இன்னொருவர்  குத்தி முறிவதால்  மொழிப்பற்றை வரவழைக்க முடியாது...நாகநாதன் ,செல்வநாயகம் எதற்கு  முத்தையா முரளிதரனுக்கு கூட தமிழ் தெரியாது ...தமிழர்கள் அவர் தமிழன் என்று உரிமை கொண்டாடவில்லையா .   நாடற்றிருந்த  யூதர்கள் எவ்வாறு தங்கள் மொழியை அடுத்த சந்தததிக்கு கொண்டுசென்றார்கள் என்று நான் சொல்லவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.
 
On 8/27/2016 at 4:12 AM, ரதி said:

அக்கினி,ஆங்கிலக் கல்வி மூலம் தமிழ்நாடு இப்ப எவ்வளது கேவலமாய் இருக்குது என்று தெரியும் தானே? அதே மாதிரி தமிழை மறக்கின்ற நிலைமை ஈழத்திலும் வர வேண்டுமா என்ன?

அக்காவிற்க்கு தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு வம்சாவழித்தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது போல வெளியில் தமிழ் பேசினாலும் 
வீட்டினுள் தெலுங்கு மொழியே பேசுகிறார்கள் இது தான் மொழிப்பற்று ,கர்நாடகாவிலும் இதே கதைதான் வெளியே கன்னடம் வீட்டினுள் தெலுங்கு 
தமிழ்நாட்டு தமிழன் மட்டுமே அமெரிக்க வெள்ளை மாளிகை போட்ட குட்டி . முதலில் தமிழ்நாட்டை கணக்கெடுக்கவே முடியாது 
மொத்தமாகவே தம் அடையாளத்தை இழந்த கூட்டம் . நாளை மாண்டரின் சர்வதேச மொழி என்று அறிவித்தால் அடுத்தநாளையே அதை பேசும் உண்மை அப்புக்காத்துக்கூட்டம் இவர்கள் 

On 8/29/2016 at 5:58 AM, Jude said:

ஹசன்,

நீங்கள் சிந்திக்கும் நிலைக்கும் அவர்கள் சிந்திக்கும் நிலைக்கும் பல காத தூரம். தாம் ஆங்கிலத்தில் அல்ல தமிழில் படிப்பது கட்டாயமாக இருக்கவேண்டும் என்ற முடிவை தமிழர்கள் தாங்களாக எடுக்காமல் சிங்களவரான பண்டாரநாயகா எடுத்ததை அவர்கள் ஏற்று கொள்ளவில்லை. தமிழர்கள் பிரதேசத்தில் உள்ள பல உயர்தர கல்லூரிகளில் ஆங்கிலத்தில் கல்வி ஊட்டப்பட்டதும் பல கிராமப்புறத்து பிள்ளைகளும் ஏழைகளும் இதனால் பல்கலைக்கழகம் செல்லவோ அல்லது உயர்தர தொழில் வாய்ப்புகளை பெறவோ சாத்தியம் இல்லாமல் இருந்ததும் இங்கு முக்கியமாக படவில்லை. ஒரு சிங்களவர் எப்படி தமிழர்களின் கல்வி மொழி பற்றிய முடிவை எடுக்கும் உரிமை பெற்றார் என்பதே அவர்களின் எதிர்ப்பின் காரணமாகும். நீங்கள் இதனை இனவாதம் என்று சொல்லக்கூடும். அவர்கள் இதனை இன மேலாதிக்கம் அல்லது இன ஆக்கிரமிப்பு என கொள்கிறார்கள். தமிழ் மக்கள் மத்தியில் அவர்களின் கருத்தே பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால் அவர்களின் கருத்தே இலங்கை தமிழரின் அரசியல், போராட்டம் மற்றும் பேரழிவுக்கு அச்சாணியான காரணமாக இருக்கிறது.

வந்திட்டார் சிங்கன் 
எல்லோரும் சிங்களம் படித்து சிங்களவனுடன் ஒண்டு மண்டாக கிடக்கவேண்டும் என்ற மொழிப்பற்றாளர்  மொழிப்பற்றை பற்றி கதைக்கிறார். கண்டபாட்டிட்கு கதை விடக்கூடாது ...உயர்தரத்தில் ஆங்கிலத்தில் கொடி வாங்கி மருத்துவபீடம் சென்றோரை   காட்டவேண்டுமா ..இல்லை தனிச்சிங்கள சட்டம் அறிவிக்கப்பட்ட வேளை .சிங்களம் படித்து தொழில் செய்யவேண்டியதில்லை என்று அரச மருத்துவ பணியை தூக்கிஎறிந்து விட்டு ஆயுள் முழுவதும் தனியார் மருத்துவராக வேலை செய்த மொழிப்பற்றாளனை உங்கள் மொழியில் மொழி வெறியனை காட்ட வேண்டுமா...? ஆங்கில மொழி பெயர்ப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்து விட்டு எனக்கு ஆங்கிலம் தெரியாததால் இந்த பதவி கிடைக்கவில்லை என்று ஒற்றைக்காலில் நின்று அழுவதால் பயன் இல்லை ...கணணியை பக்கத்துவீட்டு யோகானந்தமும் ,அருமை ராசாவும் கண்டுபிடித்திருந்தால் கணணியை  தமிழ் மொழியில் உலகமே இயக்கியிருக்கும். ஆங்கிலேயன் கண்டுபிடித்தான். எங்கடை ஆட்கள் புட்டுக்குழல் கண்டுபிடிப்பதில் பிசி ...ஒன்றும் செய்யமுடியாது ஆங்கிலத்தில் தான் இயக்கியாகவேண்டும்..ஆங்கிலம் இன்றியமையாத தொழில்களுக்கு ஆங்கிலத்தில் தான் வேலை செய்ய முடியும் .அதற்காக ஆங்கிலேயனாக மாறவேண்டுமென்பதில்லை     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, hasan said:

நான் எதை சொன்னாலும் எதையும் கருப்பு வெள்ளையாக பார்க்கும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆனாலும் இதை வாசிக்கும் மற்றவர்களுக்காக எழுதுகிறேன்.
24 மணி நேரத்தில் எவ்வாறு சிங்களம் அரசகரும மொழியாக்க முடியும் என பல்கலைக்கழக மாணவரான சரத் முத்வேடுகம கேட்கையில் பேப்பரில் என பண்டா பதிலளித்தார். அதுபோலத்தான் பண்டா தனி சிங்கள சட்டத்தின் தவறை உணர்ந்து தமிழ் மொழி விசேஷ  பிரயோகம் Tamil Language (Special Provisions)

17 hours ago, hasan said:

நான் எதை சொன்னாலும் எதையும் கருப்பு வெள்ளையாக பார்க்கும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆனாலும் இதை வாசிக்கும் மற்றவர்களுக்காக எழுதுகிறேன்.
24 மணி நேரத்தில் எவ்வாறு சிங்களம் அரசகரும மொழியாக்க முடியும் என பல்கலைக்கழக மாணவரான சரத் முத்வேடுகம கேட்கையில் பேப்பரில் என பண்டா பதிலளித்தார். அதுபோலத்தான் பண்டா தனி சிங்கள சட்டத்தின் தவறை உணர்ந்து தமிழ் மொழி விசேஷ  பிரயோகம் Tamil Language (Special Provisions) Act No. 28 of 1958 என்ற சட்டத்தின் மூலம் தமிழ் பகுதிகளில் தமிழில் நிர்வாகம் செய்யும் வகை செய்தார். ஆனாலும் சிங்களமும் தமிழும் நடைமுறைக்கு வர நீண்ட காலம் எடுத்தது. பேப்பரில் என்றால் கூட சிங்களத்தை மட்டும் தேசிய மொழியாக கொண்டுவந்தது பண்டாரநாயக்கவின் மிகப் பெரிய தவறு. அதை திருத்துவதற்குரிய கால அவகாசத்தை ஏகாதிபத்தியங்களின் நலன்களை காக்கும்  கொலையாளியும், ஜே ஆரும் எஸ்ஜேவியும் வழங்கவில்லை. 
இதை விரிவாக எழுத இது களமில்லை.

தமிழர் தமிழில் கட்டாயம் படிக்கவேண்டும் என்பதற்கும் தமிழிலும் படிக்கலாம் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.   பண்டா எல்லா கல்லூரிகளையும் அரசுடைமையாக்கினார். இன்று சர்வதேச கல்வி நிலையங்கள் உருவாக்கி வர்க்க வேறுபாடடை கல்வியில் மீண்டும் உருவாக்குகிறார்கள். இந்தியாவைப்போல தனியார் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாகின்றன. சர்வதேச கல்வி நிலையங்களில் படிக்கும் செல்வந்த பிள்ளைகள் தமிழில் உரையாடுவார்கள். தமிழில் படித்த பெற்றோரே அதற்கு காரணம். ஆனால் அவர்களுக்கு தமிழில் எழுத வாசிக்க தெரியாது. வெளிநாட்டு பிள்ளைகள் போல அடுத்த தலைமுறைக்கு பேசவரும் என்றும் சொல்ல முடியாது. தமிழை ஹிந்தியாலோ சிங்களத்தாலோ அழிக்கமுடியாது. ஆனால் ஆங்கிலத்தால் முடியும். அந்தவகையில் இதுவரை இலங்கையில் தமிழை காத்தது பண்டாரநாயக்காத்தான். 

  என்ற சட்டத்தின் மூலம் தமிழ் பகுதிகளில் தமிழில் நிர்வாகம் செய்யும் வகை செய்தார். ஆனாலும் சிங்களமும் தமிழும் நடைமுறைக்கு வர நீண்ட காலம் எடுத்தது. பேப்பரில் என்றால் கூட சிங்களத்தை மட்டும் தேசிய மொழியாக கொண்டுவந்தது பண்டாரநாயக்கவின் மிகப் பெரிய தவறு. அதை திருத்துவதற்குரிய கால அவகாசத்தை ஏகாதிபத்தியங்களின் நலன்களை காக்கும்  கொலையாளியும், ஜே ஆரும் எஸ்ஜேவியும் வழங்கவில்லை. 
இதை விரிவாக எழுத இது களமில்லை.

தமிழர் தமிழில் கட்டாயம் படிக்கவேண்டும் என்பதற்கும் தமிழிலும் படிக்கலாம் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.   பண்டா எல்லா கல்லூரிகளையும் அரசுடைமையாக்கினார். இன்று சர்வதேச கல்வி நிலையங்கள் உருவாக்கி வர்க்க வேறுபாடடை கல்வியில் மீண்டும் உருவாக்குகிறார்கள். இந்தியாவைப்போல தனியார் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாகின்றன. சர்வதேச கல்வி நிலையங்களில் படிக்கும் செல்வந்த பிள்ளைகள் தமிழில் உரையாடுவார்கள். தமிழில் படித்த பெற்றோரே அதற்கு காரணம். ஆனால் அவர்களுக்கு தமிழில் எழுத வாசிக்க தெரியாது. வெளிநாட்டு பிள்ளைகள் போல அடுத்த தலைமுறைக்கு பேசவரும் என்றும் சொல்ல முடியாது. தமிழை ஹிந்தியாலோ சிங்களத்தாலோ அழிக்கமுடியாது. ஆனால் ஆங்கிலத்தால் முடியும். அந்தவகையில் இதுவரை இலங்கையில் தமிழை காத்தது பண்டாரநாயக்காத்தான். 

   1.	   Short title  
   2.	   Tamil language as a medium of instruction. {Cap. 185.}  
   3.	   Tamil language as a medium of examination for admission to the Public Service  
   4.	   Use of the Tamil language for correspondence  
   5.	   Use of the Tamil language for prescribed administrative purposes in the Northern and Eastern Provinces  
   6.	   Regulations  
   7.	   This Act to be subject to measures adopted or to be adopted under the proviso to section 2 of Act No. 33 of 1956  
   8.	   Interpretation 

Special Provisions) Act (No. 28 of 1958)

உங்களின் கருத்து ...
பண்டரியாக்க வால்தான் நாம் தமிழ் படித்தோம் என்பது.

பண்டாரநாயக்க இல்லாவிட்டால்  நாம் என்ன மொழி படித்திருப்போம் ?
இதுதான் எனது வாதம்.

"நான் என்ன சொன்னாலும் ஏற்க மாட்டிர்கள்' என்று இப்போ குதர்க்கம் பேச தொடங்கி இருக்கிறீர்கள்.

தமிழ் மொழி பிரதேசத்தில் சிங்கள மொழியை அமுல் படுத்தி இருந்தால் ...?
யார் பேசுவது ?
யார் கேட்பது ? 
அதாவது யாருக்கு அந்த சிங்கள அறிவு இருந்தது?

ஆங்கிலம் அதே நிலைதான்.

சிங்களத்தை தனிச்சட்டம் ஆக்கியதை பூசி முழுக்கத்தான் இதை 
கூறினார்கள் ...
இதில் தமிழில்தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
பாட திட்டம்  தமிழ் மூலம் என்பதே இதன் சுருக்கம்.

அப்படி தமிழை எவ்வாறு தடுத்த்திருக்கலாம் ?
பண்டாரநயாகாவால் ?

இதட்குத்தான் நீங்கள் விளக்கம் எழுத வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/25/2016 at 10:25 AM, நவீனன் said:

நாட்டின் சுய அடையாளத்தை நிலைநாட்டும் நோக்கில் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது – சந்திரிக்கா:

சுதந்திரம் பெற்றுக்கொண்டதன் 75 வீதமான சிங்கள மக்கள் தாங்கள் ஒடுக்குமுறைக்கு உட்பட்டதாக கருதியதாகவும் இதனால் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்  ????? முஸ்லிம் மக்களினால் ?????  ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் வெள்ளைக்காரர்களினால் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு மொழிகளுக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டுமெனவும் பெரும்பான்மை சிறுபான்மை என்ற அடிப்படையில் இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1956ம் ஆண்டில் தனிச் சிங்கள சட்டத்தை அமுல்படுத்திய அப்போதைய அரசாங்கம் ஒரு ஆண்டின் பின்னர் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என உணர்ந்த போதிலும் இதுவரையில் அந்த கொள்கை அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியில் நீடித்த அனைத்து அரசாங்கங்களும் தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே அரசாங்க நிறுவனங்களில் தமிழர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதனை மாற்றியமைக்க முயற்சித்த போதிலும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135236/language/ta-IN/article.aspx

ஓ.. ஓ ..போன் வயர் பிஞ்சி ஒரு வாரம் ஆகுது ..!

Link to comment
Share on other sites

On 30/8/2016 at 1:11 AM, Maruthankerny said:

நான் எதை சொன்னாலும் எதையும் கருப்பு வெள்ளையாக பார்க்கும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆனாலும் இதை வாசிக்கும்

4 hours ago, Maruthankerny said:

   1.	   Short title  
   2.	   Tamil language as a medium of instruction. {Cap. 185.}  
   3.	   Tamil language as a medium of examination for admission to the Public Service  
   4.	   Use of the Tamil language for correspondence  
   5.	   Use of the Tamil language for prescribed administrative purposes in the Northern and Eastern Provinces  
   6.	   Regulations  
   7.	   This Act to be subject to measures adopted or to be adopted under the proviso to section 2 of Act No. 33 of 1956  
   8.	   Interpretation 

Special Provisions) Act (No. 28 of 1958)

உங்களின் கருத்து ...
பண்டரியாக்க வால்தான் நாம் தமிழ் படித்தோம் என்பது.

பண்டாரநாயக்க இல்லாவிட்டால்  நாம் என்ன மொழி படித்திருப்போம் ?
இதுதான் எனது வாதம்.

"நான் என்ன சொன்னாலும் ஏற்க மாட்டிர்கள்' என்று இப்போ குதர்க்கம் பேச தொடங்கி இருக்கிறீர்கள்.

தமிழ் மொழி பிரதேசத்தில் சிங்கள மொழியை அமுல் படுத்தி இருந்தால் ...?
யார் பேசுவது ?
யார் கேட்பது ? 
அதாவது யாருக்கு அந்த சிங்கள அறிவு இருந்தது?

ஆங்கிலம் அதே நிலைதான்.

சிங்களத்தை தனிச்சட்டம் ஆக்கியதை பூசி முழுக்கத்தான் இதை 
கூறினார்கள் ...
இதில் தமிழில்தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
பாட திட்டம்  தமிழ் மூலம் என்பதே இதன் சுருக்கம்.

அப்படி தமிழை எவ்வாறு தடுத்த்திருக்கலாம் ?
பண்டாரநயாகாவால் ?

இதட்குத்தான் நீங்கள் விளக்கம் எழுத வேண்டும்.

சுயமொழி கல்விஊடாக தமிழர்கள் எல்லோரும் தமிழில் எழுத வாசிக்க தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆங்கில கல்வியில் கற்ற எனது தந்தை தனது நண்பர்களுடன் ஆழமான விஷயங்களை ஆங்கிலத்தில்தான் பேசிக்கொள்வார்கள். ஏனென்றால் அதை தமிழில் உரையாடவோ எழுதவோ போதுமான தமிழறிவு இல்லை. இன்று சர்வதேச கல்லூரியில் படிக்கும் எனது தம்பியின் பிள்ளைகள் தமிழில் நன்றாக கதைப்பார்கள். ஆனால் தமிழில்  எழுத வாசிக்க தெரியாது.  நான் படித்த மகாஜன கல்லூரியிலும் ஒரு வகுப்பு பரீட்சார்த்தமாக ஆங்கில மூலம் கற்பிக்கப்படுகிறது. இது பரவினால் மீண்டும் தமிழில் எழுத வாசிக்கத்தெரியாத கற்ற தமிழ் சமூகம் ஒன்று உருவாகும். இப்போதெல்லாம் பாலர் பாடசாலைகளில் தமிழ் மழலை பாடல்களை விட்டு ஆங்கில மழலை பாடல்களையே கற்பிக்கிறார்கள். 
தமிழ் இல்லாமல் தமிழர் என்ற அடையாளமே இல்லை. தென்னாப்பிரிக்காவில் பிஜியிலும் உள்ள தமிழர்கள் தங்களை தமிழர்களாக உணர்ந்ததில்லை. இந்தியராகவே உணர்கிறார்கள். தமிழை ஒரு மதமாகவே கருதுகிறார்கள். தங்கள் பெயரை சரியான தமிழில் உச்சரிக்கவோ எழுதவோ தெரியாமல் இருக்கிறார்கள். உதாரணமாக கணேசன் கான்சென் ஆகிவிட்டார்.
பல்கலைக்கழகம் போகும்வரை எனக்கு ஆங்கிலத்தில் ஒரு வசனம் ஒழுங்காக பேச தெரியாது. இன்று ஆங்கிலேயருக்கு ஆங்கிலத்தில் விரிவுரை செய்வதில் எந்த சிரமமும் தெரியவில்லை. தமிழில் கற்றது எனது ஆங்கிலத்தையும் செழுமையாகியிருக்குமே  ஒழிய தடையாக இருந்திருக்காது.

சொந்த மொழியில் கற்பதுதான் ஒரு பிள்ளையின் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்தும் என ஆய்வுகள் சொல்கிறது. அதை இலங்கையில் அறிமுகப்படுத்தியது பண்டா. மெதுவாக அது சாகும் என்றதுதான் இன்றைய நிலை

Link to comment
Share on other sites

15 hours ago, அக்னியஷ்த்ரா said:

வந்திட்டார் சிங்கன் 
எல்லோரும் சிங்களம் படித்து சிங்களவனுடன் ஒண்டு மண்டாக கிடக்கவேண்டும் என்ற மொழிப்பற்றாளர்  மொழிப்பற்றை பற்றி கதைக்கிறார்.  

யார் அந்த சிங்கன்? முதலமைச்சர் விக்னேஸ்வரனை புலி என்றல்லவா சொல்கிறார்கள்?:213_tiger: சிங்களம் படியுங்கள் என்று சொன்னதற்காக அவரை சிங்கன் ஆக்கி விட்டீர்களா?:214_lion_face:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.