Jump to content

என் வன்னி நினைவுகளில் ஒரு பக்கம் - வ.ஐ.ச.ஜெயபாலன்


poet

Recommended Posts

நான் எழுதுவதை தாமதித்து வருகிர புத்தகத்தின் ஒரு பக்கம். தயவு செய்து ஆக்க பூர்வமாக உங்கள் கருத்துக்களை எதிர் கருத்தை சொல்லி உதவிடுங்கள். 

 

amil poet's plea for peace
By Saroj Pathirana 
BBC Sinhala service, Oslo

MY CONTRAVECIAL BBC INTERVIEW AND ITS BACKGROUND
என் நினைவுகளில் ஒரு பக்கம்

ஜெனீவா பேச்சுவார்த்தையை முறித்தபோதே விடுதலைப் புலிகளின் தோல்வி ஆரம்பித்து விட்டது என்று மிக முக்கியமான மேற்கு நாட்டு ராசதந்திரி என்னிடம் கூறினார். சீனா எதிரியுடன், இந்தியாவும் இல்லை. இந்த நிலையில் எஞ்சியுள்ள மேற்குநாடுகளோடும் பகைக்கிறது ஆபத்து என்பதை பாலசிங்கம் மட்டு, உண ர்ந்திருந்தார்.அவர் மட்டுமே தற்துணிபோடு பதில் பேசிவிட்டு பின்னர் வன்னிக்கு விளக்கம் கூற அதிகாரமுள்ளவராக இருக்கிறார். மற்றவர்கள் ஒன்றுக்கும் வாய்திறக்கிறார்கள் இல்லை. ஓவொரு சிறு விடயத்துக்கும் வன்னியைக் கேட்டே பதில் சொல்வதானால் ஏன் அவர்கள் இங்கு வர வேண்டும். பாலசிங்கம் மட்டுமே பேச்சுவார்த்தை மேசையில் பதிலளிக்க வல்லவராக இருக்கிறார் அதனால் அவருடன் மட்டுமே பேச முடிகிறது. பிரரோடு பேசுவது சாத்தியமில்லை என்கிற கருத்து பல மேற்க்கு நாட்டு ராசதந்தரிகளின் பொதுக்கருத்தாக இருப்பதை நான் உணர்ந்திருந்தேன்.

பேச்சுவார்த்தை ஒருபோதும் தங்களால் முறியக்கூடாது என்பதில் ஆரம்பத்தில் இருந்தே இலங்கை அரசும் சிங்கள இராசதந்தரிகளும் உறுதியாக இருந்தனர்.திரு. பாலசிங்கமும் இதே கருத்தோடு உறுதியாக இருந்தது இலங்கை அரசுக்கு சிக்கலாக இருந்தது. ஏனையவர்களால் சுயமாக பேச முடியவில்லை. இதனால் உருவாகும் ஆபத்தான சூழல் தொடர்பாக நான் வன்னிக்கு மின்னஞ்சல் எழுதினேன். பாலசிங்கம் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும் என்பதும் அவருக்கு அனுசரணையாக பாலகுமார் அனுப்பப் பட வேண்டுமென்பதும் என் வற்புறுத்தலாக இருந்தது. வன்னியில் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த கஸ்ரோவும் அவரது வெளிநாட்டுச் சகாக்களும் பாலசிங்கத்தை ஓரம் கட்டுவதில் முனைப்பாக இருந்தார்கள். இது தொடர்பாக என் கடுமையான கண்டனத்தை வன்னிக்கு எழுதீனேன். கஸ்ரோவுக்கும் எனக்குமான மோதல் நான் வன்னிக்குப் போகும் தருணங்களில் எல்லாம் நிகழ்ந்தது. கஸ்ரோவின் கருத்துக்கள் நீண்ட கால அடிப்படையில் போராட்டத்தை அழித்துவிடுமென்று நான் பகீரங்கமாக குற்றம் சாட்டினேன். கஸ்ரோ விடுதலைப் புலிகளின் காவல் துறை மூலம் என்னை கைது செய்ய பலதடவை முயன்றார். மேலிடங்களின் தலையீட்டால் ஒரு தடவையும் கஸ்ரோவால் பூரண வெற்றி பெற முடியவில்லை. மேலும் தலித்துகளை பெரும்பாண்மையாக கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் காவல்துறை என் இளமைக்கால சாதி எதிர்ப்பு வன்முறை நடவடிக்கைகள் தொடர்பாக தனிப்பட்ட மரியாதை வைத்திருந்தது.இது எனக்கு சிறிய அளவில் உடனடிப் பாதுகாப்பாக இருந்தது.

2004 வன்னியில் கிளிநொச்சி மாவித்தியாலயம் என ஞாபகம் கருணாகரனின் 'ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்' வெளியீடு நிலந்தன் தலைமையில் நடந்தது. அந்த மாநாட்டிலேயே நான் பகீரங்கமாக கஸ்ரோவை கடுமையாக விமர்சித்துப் பேசினேன். அதற்க்குமுன்னம் வன்னியில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. கூட்டம் முடிந்ததும் நண்பர் மு.திருநாவுக்கரசு என் பொறுப்பின்மைபற்றி கடிந்துகொண்டார். "நீ பேசிவிட்டுப் போய்விடுவாய் உன்னை ஒன்றும் சொல்லமாட்டார்கள். நாளைக்கு கூட்டம் ஒழுங்கு செய்தவர்களுக்கல்லா பிரச்சினை" என்று அவர் சொன்னது ஓரளவு சரியானதுதான். வன்னியில் கஸ்றோ அணியினர் பாலசிங்கத்தை ஓரம்கட்டிய போது என்கோபம் அதிகரித்தது.

விடுதலைப் புலிகளின் மனபாவம் ஓரழவுக்கு புறநானூறு போன்ற சங்க இலக்கியங்கிய நாயகர்களால் உருவாக்கப் பட்டிருந்தது. இராச தந்திர நிலைபாட்டைவிட மானத்தோடு சேர சோழ பாண்டிய மூவேந்தருடனும் ஒரேசமய்த்தில் போராடிச் சாகிற புறமுதுகு காட்டா நிலைபாடே ஈழத் தமிழர் மத்தியில் கொண்டாடப்பட்டது. பாரி மன்னன்போல ஈழத் தமிழ் போராளிகளை குறிப்பாக விடுதலைப் புலிகளைப் பாதித்த வரலாற்று நாயகர்கள் லியோனிடாஸும் (Leonidas) 300 வீரர்களுமாவர். பின் தளத்தை ஆயுத்தப் படுத்தும் அவகாசத்துக்காக 300 கிரேக்க போர்வீரர்களோடு பல லட்ச்சம் பேர்சிய படை வீரர்களை ஒரு மலைக் கணவாயில் சாகும்வரை தடுத்து வைத்த அந்தக் கதை The 300 Spartans. என ஆங்கில படமாக வெளிவந்திருந்தது. விடுதலைப் புலிகளின் முகாம்களில் அடிக்கடி ஒளிபரப்பபட்ட திரைப்படம் The 300 Spartans. சின் தமிழ் டப்பிங் பிரதியாகும். இத்தகைய பின்னணியில் நான் மிகவும் கலக்கம் அடைந்திருந்தேன்


இந்த தருனத்தில் வன்னியில் வெளி விவகாரங்களை கையாண்ட கஸ்ரோ வின் அழுத்ததால் பாலசிங்கம் ஓரம் கட்டப்பட்டார். இது பேச்சு வார்த்தைக்கு சமூகமழித்த மேற்ற்குலக இராசதந்தரிகளை கோபமுற செய்ததை நான் பார்த்தேன்.

"வன்னி பேச அனுப்புகிறவர்களுக்கு சிறிதளவுகூட பேச பதில் அளிக்க அதிகாரத்தை பகிர்ந்து கொடுப்பதில்லை. பாலசிங்கம் மட்டுமே அதிகாரத்தோடு பேசவும் பதில் சொல்லவும் செய்தார். பேச்சுவார்த்தையில் ஒரு முடிவை எடுத்துவிட்டு பின்னர் அவரால் பிரபாகரனுக்கு விளக்கம் கூற முடிந்தது. ஆனால் வருகிற ஏனையோர் ஒவ்வொரு கேழ்விக்கு வாய்திறக்கவும் வன்னியை தொலைபேசியில் அழைக்கிறார்கள். அல்லது பேச முறுக்கிரார்கள்" என கூறிய மேற்கு ராசதந்தரி ஒருவர் "ஒவ்வொரு கேழ்விக்கும் மேற்கு நாடுகள் வன்னிக்குப் பறந்து வந்து பரசூட்டில் குதித்து தன்னிடம் பதில்க் கேட்க்க வேண்டுமென்று பிரபாகரன் நினைக்கிறாரா, எங்களுக்கு அப்படி ஒரு அவசியம் இல்லை" என்றார். இதுபற்றி உடனடியாகவே வன்னிக்கு கடுமையாக மின்னஞ்சல் எழுதினேன்.

ஜெனீவா பேச்சு முறிந்த மாலை முக்கியமான மேற்குலக ராசதந்தரி ஒருவர் "பாலசிங்கத்தை ஓரம்கட்டி. ப்ச்சுபேச்ர்த்தைச அட்திகாரமும் அனுபவமும் இல்லாதவர்களை அனுப்பி பேச்சுவார்த்தையை முறித்தது புலிகளே" என குற்றம் சாட்டினார். அவர் தனது கருத்தின் முடிவாக "இது புலிகளின் முடிவின் ஆரம்பம்" என்று சொன்னது என்னை பதட்டமடைய வைத்தது. அவரது அலுவலத்தில் வைத்தி என்னுடன் பேசிய பிசிசி நிருபரிடம் அரசையும் புலிகளையும் காரசாரமாக விமர்சித்தேன். அந்த பேட்டி (http://news.bbc.co.uk/2/hi/south_asia/5076930.stm ) இப்பவும் பிபிசி ஆங்கில பக்கத்தில் உள்ளது. உடனடியாகவே நிலமையின் விபரீதம் பற்றியும் என் குற்றசாட்டுகளையும் வன்னிக்குத் தெரிவித்தேன். வன்னி உருப்படியான எதிர்வினை ஆற்றவில்லை. எனினும் ஒரு சில புலிகள் ஆதரவு புலம்பெயர் ஊடகங்கள் என்னை எதிர்த்தும் கிண்டல் செய்தும் எழுதியதை தடுத்ததோடு அவற்றை நீக்கவும் செய்தது.

வன்னி என்னுடைய கோபம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கான வெளியை உருவாக்கும் எத்தணம் என்பதைப் புரிந்துகொண்டது. எனக்கு எதிரான விமர்சனங்களை தடுத்து நிறுத்தியது. ஆனாலும் நான் விரும்பியபடி பாலசிங்கத்தையோ அல்லது பாலகுமாரனையோ அனுப்பி பேச்சு வார்த்தையை மீண்டும் முடுக்கிவிட தயாராகவில்லை. இதுபற்றியும் என் கண்டனத்தை வனிக்கு அனுப்பினேன்.

அது மட்டுமே என்னால் முடிந்ததாக இருந்தது

எனது நினைவுகளில் ஒரு பக்கம்

BBC NEWS | South Asia | Tamil poet's plea for peace
NEWS.BBC.CO.UK

BBC NEWS | South Asia | Tamil poet's plea for peace

Tamil poet VIS Jayapalan tells the BBC both sides must realise the dangers in Sri Lanka's failing peace process before it's too late.

NEWS.BBC.CO.UK

 

amil poet's plea for peace

By Saroj Pathirana 
BBC Sinhala service, Oslo

"I am really sad and disappointed," says Tamil poet VIS Jayapalan.

He is visibly frustrated after talks broke down between the Sri Lankan government and Tamil Tiger rebels in the Norwegian capital, Oslo, last week.

The rebels refused to meet government representatives face-to-face, saying they would talk only to Norwegian mediators.

"I did not even go to meet the Tigers. I did not want to be seen supporting their walk-out from the talks," he says.

Jayapalan, who is based in Oslo, is a former activist of a Tamil militant organisation.

Well known among Tamils, he has campaigned against human rights abuses in Sri Lanka for decades.

'Hooligans'

"Whatever our grievances are, we have to co-operate with Norwegian facilitators and solve our problems through negotiations," Jayapalan told the BBC.

 I appeal to the Tiger leadership and to President Rajapakse to realise the dangers 

Tamil poet Jayapalan

Both parties, he says, behaved in Oslo "like arrogant football hooligans".

It is unusual for members of the Tamil diaspora to speak out against the Tamil Tigers. Most support their struggle for Tamil autonomy.

But the poet says criticism is needed to persuade the Tigers to return to negotiations.

A former president of the Jaffna University student union during the troubled early 1970s and a graduate in economics, Jayapalan has long campaigned for federal-style autonomy for Sri Lankan Tamils.

"The Tigers claim themselves to be a state actor. If they are a state actor, they have to behave like a state player in a responsible manner," he says.

Of reports that the mediators might be considering withdrawing from the peace process, he says: "It would be disastrous if Norway pulled out."

Though highly critical of the rebels, the poet believes it is President Mahinda Rajapakse who can make the real breakthrough.

"Tamils are very disappointed by President Rajapakse... he keeps insisting on a unitary state. Unitary state means war."

After peace talks in Oslo in December 2002, the Tamil Tigers and the government announced that they had agreed to devolve power within a federal framework.

But Mr Rajapakse has rejected federalism. He pledged to find a solution within a unitary state while campaigning for the presidency last year.

Jayapalan also expressed displeasure at rebel criticism of European truce monitors after the European Union proscribed the Tigers as terrorists in May.

"I personally appeal to the Tigers not to refuse monitors from EU countries," the poet says.

As for the Sinhala community, he says they should not consider the EU ban as being pro-Sinhala.

"Don't forget that the EU has strongly criticised the government over paramilitary activities."

Partition

The poet has been helping Norwegian facilitators in their efforts to bring the parties to the negotiating table.

 If war breaks out again, neither party will be able to defend their territory - it will be a vicious circle 

Jayapalan

The two sides agreed to stop attacks and disarm armed groups in Geneva in February, but since then violence has worsened.

"I consider both Sri Lankan army soldiers and the Tigers as my children. I don't want to kill my own children... I urge both parties to reconsider their foolish stand," Jayapalan says.

The polarisation of Sri Lankan society has destroyed political trust between the two major communities, he says.

"Most of us have become part of the partition."

Jayapalan has also used his poetry to fight for the rights of Sri Lanka's Muslim community, a minority among the Tamil minority.

The poet believes the Sudanese model, where parties agreed a five-year interim period before calling for a referendum on devolution of power for southern Sudan, is an ideal example for Sri Lanka.

"I think the parties and the Norwegian facilitators should work on a Sudanese-style power-sharing based on the Oslo accord."

"If war breaks out again, neither party will be able to defend their territory. So the Tigers will bring the war to the south and vice-versa. It is going to be a vicious circle similar to the Israeli-Palestinian conflict."

"I appeal to the Tiger leadership and to President Rajapakse to realise the dangers." 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவத்தை

நீங்கள் சந்தித்ததை எழுதியுள்ளீர்கள்..

நன்றி  தோழர்.

 

Link to comment
Share on other sites

மிக நன்றி விசுக்கு. எங்கள் பிள்ளைகளுக்கு உண்மை தெரியணும். வெற்றி தோல்விகளில் நமக்கு செல்லப்படாத உண்மைகளையெல்லாம் அவர்கள் அறிய வேணும். வரலாற்றின்  உண்மைகள்  மட்டுமே அவர்கள் வெற்றிபெற

உதவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

உங்கள் அனுபவத்தை

நீங்கள் சந்தித்ததை எழுதியுள்ளீர்கள்..

நன்றி  தோழர்.

 

விசுகு அண்ணா.. சும்மா முகஸ்துதிக்கு எல்லாம் சொல்லக் கூடாது.

இப்ப மனசை தொட்டுச் சொல்லுங்க யாரையும் யார் எழுத்தையும் உண்மை என்று அவைட சொந்த அனுபவத்தின் அப்பட்டமான வெளிப்படை உண்மையின் வெளிப்பாடுன்னு நம்பக் கூடியதாவா இருக்குது.

அப்படி நம்ப அந்த உண்மைகளோடு சம்பந்தப்பட்டவர்கள்.. உறுதிப்படுத்தக் கூடியவர்களாக இருக்கினமா.. அதுவும் இல்லை.

இந்த உண்மைகளை ஏன் இவர்கள் அவர்கள் இருந்த போது எழுத துணியவில்லை.. என்ற கேள்வியும் வருகுது...

இல்ல இல்ல.. இது எல்லாமே உண்மை தான்.. என்று ஓரு தலைப்பட்சமாக.. நம்ப.. மக்கள் தொடர்ந்து ஏமாறக் கூடிய முட்டாள்கள் அல்ல.

ஆனால்.. அவரவர் மனத்திருப்திக்கு எழுதித் தள்ளலாம்.. அதற்கு விருது வழங்கவும்.. ஊக்குவிக்கவும் ஆக்கள் இருக்கினம்.. அவை அவைட தேவைகளில்.. இவை எவ்வளவை திருப்தி செய்யுதுன்ன அடிப்படையில். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

உங்கள் காலத்துப் பொய்களில் நீங்கள் மயங்கி கிடக்கலாம். ஆனால் நாளைய வெற்றிகள் உருதிப்பட எங்கள் பிள்ளைகளுக்கு உன்மை தெரிந்தாக வேண்டும். முஸ்லிம் மக்கள் பிரச்சினையாகட்டும்...இராணுவ அரசியல் பிரச்சினைகளாகட்டும் சர்வதேச விவகாரங்களாகட்டும் நான் வன்னியில் தொடற்ச்சியாக விமர்சனங்களை வைத்தே வந்திருக்கிறேன். பரிசில்  சபாலிங்கம் கொலை செய்யபட்டதை கண்டித்து கவிதை வெளியிட்டுவிட்டு வன்னிக்கு நேரில் போய் இத்தகைய வவ்முரைகள் தொடர்வது இயக்கத்துக்கு தட்இ விதிக்கப்படக்கூடிய சிக்கலை ஏற்படுத்துமென கண்டித்தேன்.  கண்டணத்தை தெரிவித்தேன்.   கருணா பிரிவின்போது பிரபாகரனுக்கு கிழக்குமாகாண போராளிகளை சுட மக்கள் ஆணையில்லை. பிரபாகரன் போராளிகளை வீடுகளுக்கு போகும்படி ஆணையிடலாம் என்கிற அறிக்கையை சூரியன் எப் எம்மில் குருபரன் (குளோபல் தமிழ் வானொலி) ஒலிபரப்பியபோது என் நண்பர்கள் அஞ்சி அழுததையும் பொருட்ப்படுத்தாமல்  நான் வன்னிக்கு சென்று என் கருத்தை வலியுறுத்தினேன். இறுதியில் அதுதான் நடந்தது.னுங்கள் அறிக்கை கேட்டோம் என்பதைத்தவிர வேறு எதுவும் அவர்கள் பேசவில்லை. அவர்கள் பேசியதெல்லாம் கிழக்கு மாகாண இராணுவ புவியியல் சம்பந்த பட்டவையே ஆகும். 

விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டபடி விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவுக்குமடீடையில் ஆரம்ப பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட போது ராஜீவ் கொலை வளக்கை விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்போடு முடித்து வைக்கும்  உத்திகள் விவாதிக்கப் பட்டது.  வியமறிந்த பத்திரிகையாளர் ஞானி இராஜீவ் காந்தி கொலை வளக்கில் பிரபாகரனையும் பொட்டம்மானையும் விசாரணைக்காக இந்தியாவிடம் ம்கையளிக்கும்படி விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுப்பீர்களா என்று கேட்டார். பதில் சொன்னாலும் பதில் சொல்லாவிட்டாலும் இராசதந்திர ரீத்யாக என் பணிகளை பாதிக்கும் கேழ்வி அது என்பதை உனர்ந்துகொண்டேன்.  என்பதில் பிரபாகரனை ஆதாரங்கள் இல்லாமல் அரசியல் ரீதியாக இணைத்துள்ளார்கள். ஆதாரங்கள் அடிப்படையில் குற்றபத்திரிகை திருத்தப் பட்டால் ஒத்துழைக்குமாறு வற்புறுத்துவேன் என அமைந்தது. உடனே ஞானி அடுத்த கேழ்வியாக "அப்படியானால் பொட்டம்மானை இந்தியாவிடம் கையளிக்குமாறு வலியுறுத்துவீங்களா" என கிடுக்கிப் பிடி போட்டார், ஆதரங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு வன்னியை வற்புறுத்துவேன் என பதில் சொன்னேன். பின்னர் நேரே இலங்கைக்கு வந்து வன்னிக்கு சென்றேன். வன்னியில் என்னைக் கண்ட மு.திருநாவுக்கரசுவும் நிலாந்தனும் எனக்கு ஏதும் ஆபத்து வரக்கூடுமென பதற்றப் பட்டார்கள். நான் இரு தரப்பு பேச்சு வார்த்தை ஒன்றில் கலந்துகொண்டிருபதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. விடுதலைப் புலிகள் என் பேட்டி பற்றி எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. பேச வேறு விடயங்கள் நிறைய இருந்தது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/08/2016 at 9:20 PM, nedukkalapoovan said:

விசுகு அண்ணா.. சும்மா முகஸ்துதிக்கு எல்லாம் சொல்லக் கூடாது.

இப்ப மனசை தொட்டுச் சொல்லுங்க யாரையும் யார் எழுத்தையும் உண்மை என்று அவைட சொந்த அனுபவத்தின் அப்பட்டமான வெளிப்படை உண்மையின் வெளிப்பாடுன்னு நம்பக் கூடியதாவா இருக்குது.

அப்படி நம்ப அந்த உண்மைகளோடு சம்பந்தப்பட்டவர்கள்.. உறுதிப்படுத்தக் கூடியவர்களாக இருக்கினமா.. அதுவும் இல்லை.

இந்த உண்மைகளை ஏன் இவர்கள் அவர்கள் இருந்த போது எழுத துணியவில்லை.. என்ற கேள்வியும் வருகுது...

இல்ல இல்ல.. இது எல்லாமே உண்மை தான்.. என்று ஓரு தலைப்பட்சமாக.. நம்ப.. மக்கள் தொடர்ந்து ஏமாறக் கூடிய முட்டாள்கள் அல்ல.

ஆனால்.. அவரவர் மனத்திருப்திக்கு எழுதித் தள்ளலாம்.. அதற்கு விருது வழங்கவும்.. ஊக்குவிக்கவும் ஆக்கள் இருக்கினம்.. அவை அவைட தேவைகளில்.. இவை எவ்வளவை திருப்தி செய்யுதுன்ன அடிப்படையில். tw_blush::rolleyes:

 

On 20/08/2016 at 4:50 PM, விசுகு said:

உங்கள் அனுபவத்தை

நீங்கள் சந்தித்ததை எழுதியுள்ளீர்கள்..

நன்றி  தோழர்.

சரியாகத்தான் எழுதியுள்ளேன் நெடுக்கு..

உண்மை பொய்

எங்களுக்கும் தெரியும்

அவர் எழுதி முடிக்கட்டுமே......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.