Jump to content

செப்டம்பரில் வருகிறது எஸ் 3...


Recommended Posts

செப்டம்பரில் வருகிறது எஸ் 3...

SW_1.jpg

ஸ் - 3 என்றவுடன் சூர்யாவின் சிங்கம் - 3 பற்றிய செய்தி என நினைத்தவர்களுக்கு......ஸாரி நீங்கள் சினிமா பக்கத்தை பின் தொடரவும். இது கேட்ஜட் (gadget) பிரியர்களுக்கான இனிப்பான செய்தி.

ஆம், சாம்சங் தனது கியர் (துணைக்கருவி) எஸ் 3 ஸ்மார்ட் வாட்ச்சை இவ்வருட செப்டம்பர் மாதம் பெர்லினில் நடக்கவிருக்கும் ஐ.எஃப்.ஏ (IFA) தொழில்நுட்ப நிகழ்வில் வெளியிடவிருக்கிறது.

ஸ்மார்ட் வாட்ச் என்பது என்ன?

ஸ்மார்ட் போன்கள் போர் அடிக்க ஆரம்பித்துவிட, பயனாளர்களின் அடுத்து என்ன என்ற கேள்விக்கு பதில் தான் கையடக்க...மன்னிக்கவும்., கைகளில் கட்டிக்கொள்ளக்கூடிய ஸ்மார்ட் வாட்ச்கள். நாம் சாதாரணமாக அணியும் டிஜிட்டல் கைக்கடிகாரமே, ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் செய்யத்தக்க அழைப்பு, குறுஞ்செய்தி போன்ற சில விஷயங்களை இணைத்து உருவாக்கப்பட்டு ஸ்மார்ட் வாட்ச் ஆகியிருக்கிறது. முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களான சாம்சங், ஆப்பிள் போன்றவை இவ்வகை கைக்கடிகார தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன.

சாம்சங் ஸ்மார்ட் வாட்ச்சுகள்

ஆண்ட்ராய்டு போன்களுடன் இணைத்து எளிதாக பயன்படுத்தத்தக்க வகையிலான ஸ்மார்ட் வாட்ச்களை சாம்சங் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. அதில் சாம்சங்கின் கடைசி ஸ்மார்ட் வாட்ச் வெளியீடான கியர் எஸ் 2 பரவலான பயன்பாட்டாளர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதனால், தான் எஸ் 2ன் தொடர்ச்சியாக வெளிவரவிருக்கும் எஸ் 3க்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

SW_2.jpg

எஸ் 3ல் என்னனென்ன ஸ்பெஷல்?

எஸ் 3ன் வரவேற்கத்தக்க சிறந்த மேம்பாடு, இதனை ஆன்ட்ராய்டு போனுடன் இணைத்து பயன்படுத்த தேவையில்லை. எஸ் 3 சாம்சங்கின் சொந்த இயங்குதளமான டைசன்(Tizen )-ஐ கொண்டு இயங்கத்தக்கது. செயலிகளையும், கடிகார முகப்புகளையும் நேரடியாக ப்ளே ஸ்டோரிலிருந்து (play store) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முகப்புகளுக்கு பயனாளர்களிடம் உள்ள புகைப்படங்களையும் பயன்படுத்தலாம். எஸ் ஹெல்த் (S Health) (உடல் ஆரோக்கிய ஆலோசனைகள் வழங்கி உடல் இயக்கங்களை கவனிக்கும் செயலி) ரிசல்ட்களை நேரடியாக முகப்புத்தகத்தில் (FB) பகிரும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலும் பயனாளர்கள், ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்துவது ஜாக்கிங் போன்ற சமயங்களில்தான். ஆனால், அப்போதும் மொபைலை உடன் வைத்திருந்தால் மட்டுமே, மெசேஜ், இ-மெயில் போன்ற நோட்டிஃபிகேஷன்கள் நமக்கு வரும். அதை டைசன் இயங்குதளம் கொண்டு மாற்றி அமைத்து இருக்கிறது எஸ் 3. தனியான இயங்குதளம் என்பதால், நோட்டிஃபிகேஷன்களுக்கு, இனி மொபைலை உடன் எடுத்துச் செல்லும் தேவை இருக்காது.

இந்தக் கடிகாரத்தை அணிந்து உறங்கும் பயனாளரின் உறக்க விகிதங்களையும் கணக்கிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அழைப்பு, செய்தி அனுப்புதலோடு பயனாளரின் தொடர்புகள் (contacts) சேமிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குரல் அடையாளம் கொண்டு இயங்கத்தக்கதாக தயாராகியிருக்கிறது, இந்த எஸ் 3. வரும் நாட்களில் ஸ்மார்ட் வாட்ச்களில் அதிகரித்து வரும் பயன்பாடுகளை பார்க்கும் போது, கூடிய விரைவில் ஸ்மார்ட் வாட்ச்கள் ஸ்மார்ட் போன்களின் இடத்தை பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

http://www.vikatan.com/news/information-technology/66810-s3-smart-watch-technology-coming-soon.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.