Jump to content

வீரப்பனிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர்...! - ஒரு கலகல கடத்தல் அத்தியாயம்


Recommended Posts

வீரப்பனிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர்...! - ஒரு கலகல கடத்தல் அத்தியாயம்

Veerapan%20Cover.jpg

ரு முறை வீரப்பன் அதிகாரிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு, மூன்று கோடி ரூபாய் அரசாங்கத்திடம் கேட்கிறார். பல நாள் காத்திருந்த அரசாங்கமும், அவனுக்கு பணம்  கொடுக்க ஒரு கட்டத்தில் சம்மதித்துவிடுகிறது. பணம் கொடுக்க வருபவரின் அடையாளம் வெள்ளை சட்டையும், ஒரு இருச்சக்கர மோட்டார் வாகனமும்தான்.  

அந்த காட்டிற்கு மத்தியில் இருக்கும் கிராமத்திற்கு செல்லும் பாதையில், வீரப்பனும் அவனது கூட்டாளிகளும், பணத்தை பெறுவதற்காக பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். அப்போது, அந்த சாலையில் ஒருவர் மிதிவண்டியில் தண்ணீர் பானைகளைக் கட்டிக் கொண்டு செல்கிறார். அவரை ஊன்றி கவனித்த வீரப்பனுக்கு சந்தேகம் வருகிறது. அந்த நபர், வீரப்பன் குழு இருக்கும் இடத்தை நெருங்கும் போது, வீரப்பன் பாய்ந்து சென்று துப்பாக்கியை நீட்டுகிறான். அந்த நபர் மிதிவண்டியை சாலையிலேயே போட்டுவிட்டு, தன் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஓடுகிறார். ஆம், வீரப்பன் சந்தேகப்பட்டது போல் அந்த நபர், காவல் துறையைச் சேர்ந்தவர்தான்.

மீண்டும் பணத்திற்காக காத்திருக்கும் படலம் துவங்குகிறது. ஏறத்தாழ இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின், பணத்துடன் ஒரு நபர் வருகிறார். சில விசாரிப்புகளுக்கு பின் பணத்தை பெற்றுக் கொண்டு, அதை எண்ணி பார்த்த போது, அதில் மூன்று கோடி எல்லாம் இல்லை. இருந்தது வெறும் மூன்று லட்சம் ரூபாய் தான். வீரப்பன் கோபமாக, “என்ன இது... எங்கே மீதி தொகை...?” என்கிறார். பணம் எடுத்து வந்த ஊழியரோ பயத்துடன், “ இவ்வளவு தொகைதான் என்னிடம் கொடுத்தார்கள்... எனக்கு ஒன்றும் தெரியாது...” என்கிறார். கையறு நிலையில் வீரப்பன், வந்த தொகையையும் விட மனம் இல்லாமல், பணத்தை எடுத்துக் கொண்டு, “சரி... நீ திரும்பப் போ...” என்கிறார். ஆனால், பணம் எடுத்து வந்த நபரோ அங்கேயே நின்றுகொண்டு இருக்கிறார். இத்தனை காலம் தன்னை பார்த்தவர்கள், தன்னை கண்டவுடன் அஞ்சி ஓடுவதுதான் வழக்கம். ஆனால், இந்த நபரோ திரும்பச் செல்லாமல் அந்த இடத்திலேயே நின்று கொண்டு இருந்தது, வீரப்பனுக்கு வியப்பாக இருக்கிறது. வீரப்பன் சத்தமாக, அந்த நபரை பார்த்து, “என்ன...” என்கிறார். அந்த நபர் கம்மிய குரலில், “எனக்கு ஏதும் இல்லையா..." என்கிறார். பின் வீரப்பன் அந்த நபருக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

இந்த சம்பவத்தை, பின்னர் தன்னால் தவறுதலாக கடத்தப்பட்ட  கிருபாகர் மற்றும் செனானியிடம் விவரித்து இருக்கிறார்.

கிருபாகர் மற்றும் செனானி, கானுயிர் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் பந்திப்பூர் வனத்தில் மூன்று ஆண்டுகளாக தங்கி இருந்து ஆய்வில் ஈடுப்பட்டிருந்தபோதுதான் அந்த சம்பவம் நிகழ்கிறது. ஆம், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் என்று தவறுதலாகக் கருதி, இந்த இருவரையும் கடத்திவிடுகிறார். வீரப்பனுடன் பழகத் துவங்கிய சில நாட்களில், இவர்களுக்குள் ஒரு நெருக்கம் வந்துவிடுகிறது. வீரப்பன் தன் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்ய தகவல்களை இவர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.  

இவர்கள் வீரப்பனுடன் கழித்த அந்த 14 நாட்களையும், "Birds, Beasts and Bandits. 14 days with Veerappan" என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார்கள். அதில்தான், நான் மேலே குறிப்பிட்ட சம்பவத்தையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

ஜப்பானியர்கள் எங்கள் காட்டை சிதைத்தார்கள்:

14%20days%20with%20Senani.jpgவீரப்பன் இவர்களிடம் பகிர்ந்துக் கொண்ட கதைகளில் ஒன்று, அவனது  சொந்த ஊருக்கு வருகை புரிந்த ஜப்பானியர்களின் கதை. நூற்று எழுபத்து ஐந்து பக்கங்களைக் கொண்ட அந்தப் புத்தக்கத்தில், மூன்று பத்திகளே வரும் அந்த நிகழ்வு மிக முக்கியமானது. ஒரு வேளை வீரப்பன் சந்தனக் கடத்தல் வீரப்பனாக மாறியதற்கும் அந்த ஜப்பானியர்களின் வருகை ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

வீரப்பன், “மாதேஸ்வரன் மலை அடிவாரத்தில் இருக்கும் கோபிநத்தம்தான் எங்கள் சொந்த ஊர்.  யானைகள் உள்ளிட்ட பல வன விலங்குகள் எங்கள் ஊருக்கு வரும். எங்கள் பயிர்களை அழிக்கும். ஆனால், நாங்கள் என்றுமே பசியாக இருந்ததில்லை. எங்களுக்கு தேவையான உணவு காட்டில் கிடைத்தது. நாங்கள் வேட்டைக்கு சென்றோம். எங்கள் உணவுக்காக வேட்டையாடினோம். எல்லாம் நலமாக சென்று கொண்டு இருந்தது. அப்போதுதான் அந்த குள்ளமான ஜப்பானியர்கள் எங்கள் காட்டிற்கு வந்தார்கள். எங்கள் பகுதியில் கிரானைட் பிசினஸை துவங்கினார்கள். எங்கள் மலைகள் குண்டுகள் வைத்து சிதைக்கப்பட்டன. எங்கள் கிராமங்களையும், எங்கள் காடுகளையும் தூசுப் படலம் சூழ்ந்தது. பின் எல்லாம் முடிந்தது. எங்கள் தங்க நிலம், சுடுகாடாக மாறியது.

இது மட்டுமல்ல, அப்போதெல்லாம் எங்கள் காடுகளில் ஒரு ஆட்டையும் பார்க்க முடியாது. காடுகளில் ஆடு மேய்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனை இருந்தது. இப்போது எங்கு பார்த்தாலும் ஆடுகள். செடி கொடிகள் என எதுவும் வளர்வதில்லை. சபிக்கப்பட்ட ஆடுகள் காடுகளை பாழாக்கிவிட்டன. பின் எப்படி மழை வரும்...?” என்று தன் பால்ய நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்து இருக்கிறான்.

எப்போதும் விதியை நம்பிய வீரப்பன்:

வீரப்பன் தீவிரமான  கடவுள் பக்தனாக இருந்து இருக்கிறார். ஒரு நாள் வீரப்பன் பூஜை செய்து கொண்டிருந்தபோது, கிருபாகர் மற்றும் செனானியிடம், "ஏன் நீங்கள் பூஜை செய்ய மாட்டீர்களா... " என்று கேட்டு இருக்கிறார். அதற்கு செனானி, “எங்களுக்கு எந்தக் கடவுளையும் தெரியாது. ஆனால், நீங்கள் பூஜை செய்யும் முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்களிடம் உருவ வழிப்பாடு இல்லை... கோயில் இல்லை...”என்று சொல்லி உள்ளார். அதற்கு வீரப்பன், “ஏன் கோயில் வேண்டும், சிலைகள் வேண்டும்... கடவுள் எங்கும் நிறைந்து இருக்கிறார் அல்லவா...? நல்ல உள்ளம் மட்டும் இருந்தால் போதாதா... நீங்கள் தான் கோயிலுக்காகவெல்லாம் சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்” என்றுள்ளார் சர்வசாதாரணமாக.

Veerapan%20300.jpgவீரப்பனுக்கு எப்போதும் ‘விதி’யின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து இருக்கிறது. தனது வாழ்வில் நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் காரணம் விதி என்றே நம்பி இருக்கிறார். இது குறித்து அவர்கள் கேட்டபோது, ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். “நான் ஒரு முறை காட்டில் உலாவிக் கொண்டிருந்தபோது, பாதையில் ஒரு புலி உறங்கிக் கொண்டிருந்தது. நான் என்னுடைய தைரியத்தை சோதித்துப் பார்க்க விரும்பினேன். நான் புலியின் பக்கத்தில் நெருங்கினேன். புலி என்னை பார்ப்பது போல் இருந்தது. ஆனால், புலி உறங்கிக் கொண்டிருக்கும்போது, நம்மை பார்ப்பது போல்தான் இருக்கும். அதனால், இன்னும் அதன் அருகே சென்றேன். திடீரென்று புலி விழித்து என்னைப் பார்த்தது. உண்மையாக நான் திடுக்கிட்டுவிட்டேன். எனது துப்பாக்கியால் அதனை சுட்டு வீழ்த்தினேன். பிறகுதான் தெரிந்தது, அந்தப் புலி முன்பே முள்ளம் பன்றியால் தாக்கப்பட்ட, இதயத்தில் ஏற்பட்ட கடுமையான காயத்துடன்  நகர முடியாமல் படுத்து இருந்து இருக்கிறது என்று. ஆனால், அதன் விதி என் கையால்தான்  சாக வேண்டும் என்று இருந்து இருக்கிறது... இப்போதாவது புரிகிறதா விதியின் வலிமை என்னவென்று...?” என்று விவரித்துள்ளான்.

பின்பு பேச்சு வேறு எங்கு எல்லாமோ சென்று இருக்கிறது. அப்போது கிருபாகர், “நாங்கள் ஒன்பது ஆண்டுகள் முதுமலையில் தங்கி,  பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்து, பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கொரு விநோத ஆசை வந்தது, உங்களை பேட்டி கண்டு பத்திரிகைகளில் எழுத வேண்டும் என்று. பல காடுகள் சுற்றினோம். ஆனால், உங்களை கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

அதற்கு வீரப்பன் சிரித்துக்கொண்டே, “இதைதான் விதி என்கிறேன். பார்த்தீர்களா... நீங்கள் காடு, மலை என்று அலைந்தபோது என்னை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், நானே 150 மைல் பயணம் செய்து, உங்கள் வீட்டிற்கு வந்து, உங்களை அழைத்து வந்து இருக்கிறேன்... இதுதான் விதி...” என்று கூறி உள்ளான்.

சரணடைய விரும்பிய வீரப்பன்:

வீரப்பனை சரணடையச் சொல்லி இவர்கள் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். வீரப்பனும் அப்போது அந்த முடிவில்தான் இருந்து Krupakar%20and%20Senani%20img.jpgஇருக்கிறார். ஆனால், வீரப்பனுக்கு தன் உயிர் குறித்த அச்சம் இருந்து இருக்கிறது. நாம் கைதானால், நிச்சயம் காவல் துறை நம்மை கொன்று விடும். “நான் சரணடைய தயார். ஆனால், எனக்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. அதனை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று கூறி உள்ளார். அதற்கு இந்த இருவரும், “சரி... உன் நிபந்தனைகளை ஒரு ஆடியோ கேசட்டில் பதிவு செய்து தா...நாங்கள் அதனை கர்நாடாகா முதல்வரிடம் கொண்டு சேர்க்கிறோம்” என்று கூறி உள்ளார்கள்.

வீரப்பன் தன் நிபந்தனைகளை ஆடியோ கேசட்டில்  வழக்கமான தன் மிரட்டலான தொனியில் பேசி பதிவு செய்யத் துவங்கி இருக்கிறார்.  அப்போது குறுக்கிட்ட  செனானி, “இதை கேட்கப் போவது மாநில முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகள். நாம் கோரிக்கை வைக்கிறோம். அதை இவ்வளவு மிரட்டலாக எல்லாம் வைக்கக் கூடாது. அமைதியாக பேசுங்கள்” என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். கடுமையாக பயிற்சி செய்து வீரப்பனும் அமைதியாக பேசி இருக்கிறார். ஆனால், அந்த அமைதியான பேச்சுதான், சரணடையும் திட்டத்தையே பாழாக்கி இருக்கிறது.

ஆம், இவர்கள் வீரப்பனிடமிருந்து விடுவிக்கப்பட்டு ஊர் திரும்பிய உடன், அப்போது முதல்வராக இருந்த பட்டேலை சந்தித்து இந்த கேசட்டை அளித்து இருக்கிறார்கள். ஆடியோவில் வீரப்பன் உரையைக் கேட்ட அங்கிருந்த காவலர்களுக்கு அதிர்ச்சி. அவர்கள் குறுக்கிட்டு, “ வேண்டாம்... அவனது நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொள்ளாதீர்கள். பார்த்தீர்களா... வீரப்பன் குரல் கம்மியிருக்கிறது. இது அவனால், முன்பு போல் செயல்பட முடிவதில்லை என்பதையே காட்டுகிறது. அதனால்தான் அவன் சரணடைய விரும்புகிறான்” என்று கூறி உள்ளார்கள்.  இப்படியாக அவனது சரணடையும் முயற்சி பாழாகி இருக்கிறது.

இந்த சம்பவங்கள் மட்டுமல்ல, புத்தகம் முழுவதும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் இடம்பெற்று இருக்கின்றன. அதுவும், எளிமையான ஆங்கிலத்தில் கிருபாகரும், செனானியும் பதிவு செய்து இருக்கிறார்கள். வீரப்பன் குறித்த பல பதிவுகள் இருந்தாலும், வீரப்பனை இன்னொரு கோணத்தில் அணுகுகிறது இந்த புத்தகம்.

http://www.vikatan.com/news/coverstory/66805-govt-employee-who-demanded-bribe-from-veerappan---humorous-kidnap-chapter.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.