Jump to content

இலங்கை எதிர் அவுஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு – கிளென் மக்ஸ்வெல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

 

received_867235710074934

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு – கிளென் மக்ஸ்வெல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதை தொடர்ந்து நடைபெறவுள்ள 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடருக்கான ஆஸி அணியின் விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில், இம்முறை  அவுஸ்திரேலியாவின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட, ஆஸியின் ஒருநாள் அணிக்கு முதல் தெரிவாக தெரிவுசெய்யப்படும் கிளென் மக்ஸ்வெல்க்கு இடம் வழங்கப்படவில்லை.

இது தொட‌ர்பாக கருத்து தெரிவித்த தேர்வுக்குழுவின் தலைவர் றோட் மார்ஷ் பின்வருமாறு தெரிவித்தார்.

” அவுஸ்திரேலியாவிற்காக கிரிக்கெட் ஆட வேண்டுமெனின் தொடர்ச்சியான பெறுபேறுகளை கொண்டிருக்க வேண்டும். துடுப்பாட்ட வீரர் எனின் தொடர்ச்சியாக ஓட்டங்களை குவிக்க வேண்டும். பந்துவீச்சாளர் எனின் தொடர்ச்சியாக இலக்குகளை கைப்பற்ற வேண்டும் அல்லது சிறப்பாக பந்துவீச வேண்டும். “

received_867235750074930” மக்ஸ்வெல் கடந்த பந்து ஒருநாள் போட்டிகளில் 10க்கும் குறைவான சராசரியை கொண்டுள்ளார். “

” சிறந்த களத்தடுப்பு வீரர் மற்றும் பந்தும் வீசக்கூடியவர். இவர் தன்னுடைய சிறந்த பெறுதியில் இருப்பின் இவர் எங்களுடைய ஒருநாள் அணியில் முதல் தெரிவு வீரர். ” என்வும் றோட் மார்ஷ் தெரிவித்தார்.

கிளென் மக்ஸ்வெல் 2012 ஆண்டு அறிமுகமானதிற்கு பின் முதல் முறையாக இந்தொடருக்கான அணியிருந்தே வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதை விட அணிக்கு மீண்டும்  மொய்சிஸ் ஹென்றிக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

ஆஸியின் வளர்ந்து வரும் இளம் வீரர் ரெவிஸ் ஹெட் கடந்த முக்கோண தொடரில் அறிமுகம் பெற்றாலும் அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில போட்டிகளில் ஜேம்ஸ் போல்க்னரின் பெறுபேறுகள் சிறப்பாக இல்லாவிடிலும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணி விபரம்:

ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), டேவிட் வோர்னர் (உபதலைவர்), ஜோர்ச் பெய்லி, நதன் கூல்டர்-நைல், ஜேம்ஸ் போல்குனர், அரோன் பின்ச், ஹசல்வூட், மொய்சிஸ் ஹென்றிக்ஸ், உஸ்மான் ஹவாஜா, நதன் லயோன், மிட்செல் மார்ஷ், சோன் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், மத்தியு வேட், அடம் ஸம்பா.

http://vilaiyattu.com/16685-2/

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

மிட்செல் ஸ்டார்க் சாதனை: இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

நோபாலன்

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
ஆட்ட நாயகன் பாக்னர், இலங்கை கேப்டன் மேத்யூஸை 0-வில் வீழ்த்தியதை கொண்டாடுகிறார். | படம்: ஏ.எஃப்.பி.
ஆட்ட நாயகன் பாக்னர், இலங்கை கேப்டன் மேத்யூஸை 0-வில் வீழ்த்தியதை கொண்டாடுகிறார். | படம்: ஏ.எஃப்.பி.

கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ருசித்தது.

முதலில் பேட் செய்த இலங்கை 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 47-வது ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

இந்தப் போட்டியில், 52 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேக ஒருநாள் விக்கெட்டுகளுக்கான உலக சாதனையை நிகழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க், இதற்கு முன்பாக சக்லைன் முஷ்டாக் 53 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேக ஒருநாள் 100 விக்கெட்டுகளுக்கான சாதனையை வைத்திருந்தார்.

ஸ்டார்க் வழக்கம் போல் தனது ஆற்றலில் சோர்வடையாமல் வீசினார், முதல் ஓவரிலேயே குசல் பெரேராவின் ஆஃப் ஸ்டம்பைப் பெயர்த்தார். பிறகு தனஞ்ஜெய டிசில்வாவை வேகம் குறைக்கப்பட்ட பந்தில் வீழ்த்தி அதிவேக 100 விக்கெட்டுகளுக்கான சாதனையை நிகழ்த்தினார். மீண்டும் வீசவந்த போது மிலிந்த சிரிவர்தனாவையும் ஒரு அபாரமான வேகம் குறைக்கப்பட்ட பந்தில் குழப்பி வீழ்த்தினார். 10 ஓவர்கள் 1 மெய்டன் 32 ரன்கள் 3 விக்கெட்டுகள் என்று அசத்தினார் ஸ்டார்க்.

அதே போல் மற்றொரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஃபாக்னரும் குசல் மெண்டிஸை புல் ஷாட்டில் தவறிழைக்கச் செய்து வீழ்த்தினார், பிறகு அதே ஓவரில் கேப்டன் மேத்யூஸும் ரன் எடுக்காமல் பாயிண்டில் அபாரமாக ஹெட் பிடித்த கேட்சுக்கு வெளியேறினார். இதன் பிறகு ஸ்டார்க் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்த 124/2 என்று இருந்த இலங்கை 132/5 என்று ஆனது.

சந்திமால் மீண்டுமொரு முறை அபாரமாக ஒரு முனையில் ஆடி 118 பந்துகளில் 3 பவுண்டர்களுடன் 80 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், ஆனால் இவர் இருந்தும் ஸ்கோரை 250 என்ற இலக்குக்கு கொண்டு செல்ல முடியவில்லை. கடைசியில் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது இலங்கை.

ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்த பாக்னர் 10 ஓவர் 1 மெய்டன் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹேசில்வுட் மட்டுமே கொஞ்சம் அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்தவரானார்.

இலக்கைத் துரத்தும் போது ஆஸ்திரேலியாவின் ஸ்பின் பிரச்சினை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஏனெனில் 3 ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்களுடன் 3 பகுதி நேர ஸ்பின்னர்களும் இலங்கை அணியில் இருந்தனர், ஆனால் இம்முறை திலுருவன் பெரேரா 3 விக்கெட்டுகளையும் சந்தகன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினாலும் ஏரோன் ஃபிஞ்ச் 46 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 56 ரன்களையும், கேப்டன் ஸ்மித் 92 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்களையும் சேர்த்தனர். விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் 26 ரன்களையும், ஜார்ஜ் பெய்லி 39 ரன்களையும் சேர்க்க ஆஸ்திரேலியா எளிதாகவே வெற்றி பெற்றது.

கடைசியில் ஏறக்குறைய வெற்றி உறுதியானவுடன் ஆஸ்திரேலியா 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது, இன்னும் 30 ரன்கள் இருந்திருந்தால் ஒருவேளை நாம் வென்றிருக்கலாமோ என்ற நப்பாசையை இலங்கை அணிக்கு ஏற்படுத்தியிருக்கும்.

ஆட்ட நாயகனாக பாக்னர் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/மிட்செல்-ஸ்டார்க்-சாதனை-இலங்கையை-வீழ்த்தியது-ஆஸ்திரேலியா/article9017519.ece

Link to comment
Share on other sites

இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது  இலங்கை

thumb_large_250525.jpg

 

 

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணியில் சந்தகன் மற்றும் சிறிவர்தன ஆகியோருக்கு பதிலாக குணதிலக மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/10585

124/2

Link to comment
Share on other sites

சிறந்த துடுப்பாட்டம் : பந்துவீச்சில் பிரகாசிக்குமா இலங்கை (படங்கள் இணைப்பு)

 

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 48.5 பந்து ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Cqn_KXZUIAEaBWC.jpg

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் 69 ஓட்டங்களையும், மெத்தியுஸ் 57 ஓட்டங்களையும், குசல் பெரேரா 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆஸி அணி சார்பில் மிச்சல் ஸ்டார்க், போல்க்னர்,சாம்பா ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

ஆஸி அணி வெற்றிபெற வேண்டுமாயின் 50 ஓவர்களில் 289 ஓட்டங்களை பெறவேண்டும்

Cqn_MOfUEAA8PuF.jpg

250715.jpg

250717.3.jpg

250723.3.jpg

250725.3.jpg

250727.3.jpg

250731.jpg

250733.3.jpg

250735.3.jpg

250737.3.jpg

250739.3.jpg

Cqn_P4oVYAAGWzj.jpg

http://www.virakesari.lk/article/10600

Link to comment
Share on other sites

ஜேம்ஸ் ஃபாக்னர் ஹாட்ரிக் சாதனை; இலங்கை 288 ரன்கள் ஆல்அவுட்

 

 
ஹாட்ரிக் சாதனை புரிந்த பாக்னர், திசர பெரேராவை வீழ்த்திய போது. | படம்: ஏ.எஃப்.பி.
ஹாட்ரிக் சாதனை புரிந்த பாக்னர், திசர பெரேராவை வீழ்த்திய போது. | படம்: ஏ.எஃப்.பி.

கொழும்பு பிரேமதாஸா மைதானத்தில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பாக்னர் ஹாட்ரிக் சாதனை புரிய இலங்கை அணி முதலில் பேட் செய்து 288 ரன்கள் எடுத்துள்ளது.

46-வது ஓவரின் கடைசி பந்தில் 54 ரன்கள் எடுத்த குசல் பெரேராவை வேகம் குறைந்த ஃபுல் லெந்த் பந்தில் எல்.பி. ஆக்கிய பாக்னர், 48-வது ஓவரின் முதல் பந்தில் 57 ரன்கள் எடுத்த ஆஞ்சேலோ மேத்யூஸ், 2-வது பந்தில் 12 ரன்கள் எடுத்த திசர பெரேரா ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

மேத்யூஸ், பாக்னர் பந்தை தூக்கி அடிக்க நேர் பவுண்டரி அருகே கேட்ச் பிடிக்கப்பட்டதால் திசர பெரேரா கிராஸ் செய்தார், ஆனால் அவர் அடுத்த பந்தை ஒதுங்கிக் கொண்டு அடிக்க முயன்று பவுல்டு ஆனார். பாக்னர் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை புரியும் 6-வது பவுலராவார் பாக்னர்.

2013-ம் ஆண்டு கடைசியாக கிளிண்ட் மெக்காய் ஹாட்ரிக் எடுத்த பிறகு தற்போது பாக்னர் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா 3 விக்கெட்டுகளை அருமையாக வீசி வீழ்த்தினார். இவர் சந்திமால், மெண்டிஸ், டி.எம்.டிசில்வா ஆகியோரை வீழ்த்த 25-வது ஓவரில் 137/2 என்று இருந்த இலங்கை 30.2 ஓவர்களில் 158/5 என்று ஆனது. சந்திமால் 67 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 48 ரன்கள் எடுத்து ஸாம்ப்பாவிடம் எல்.பி.ஆனார். அணியை 12/2 என்ற நிலையிலிருந்து அபாரமாக ஆடி 69 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்த மெண்டிஸும் ஸாம்ப்பாவிடம் எல்.பி.ஆனார். டி.எம்.டிசில்வா 7 ரன்களில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஸாம்ப்பாவிடம் வீழ்ந்தார்.

முன்னதாக தொடக்கத்தில் குணதிலக ஸ்டார்க்கிடம் பவுல்டு ஆனார். தில்ஷான் 10 ரன்கள் எடுத்து லயன் பந்தில் பவுல்டு ஆக இலங்கை 12/2 என்று திணறியது.

பிறகு மெண்டிஸ், சந்திமால், கேப்டன் மேத்யூஸ் (57), மற்றும் குசல் பெரேரா (54) ஆகியோரின் பங்களிப்புடன் ஸ்கோர் 288 ரன்களுக்கு உயர்ந்தது. கடைசி 5 விக்கெட்டுகளை இலங்கை 27 ரன்களுக்கு இழந்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், பாக்னர், ஸாம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். லயன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

289 ரன்கள் வெற்றி இலக்கு இலங்கையின் ஸ்பின் பலத்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் சாதிக்கக் கூடியதா என்பது போகப்போகத் தெரியும்.

http://tamil.thehindu.com/sports/ஜேம்ஸ்-பாக்னர்-ஹாட்ரிக்-சாதனை-இலங்கை-288-ரன்கள்-ஆல்அவுட்/article9026523.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

சாதனையைத் தவற விட்டார் சந்திமால்
 
24-08-2016 04:16 PM
Comments - 0       Views - 363

article_1472035583-Tamil641375-01-02_567இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய, திலகரட்ன டில்ஷான் ஆகியோரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை மயிரிழையில் இலங்கையணியின் உப தலைவர் தினேஷ் சந்திமால் தவறவிட்டுள்ளார்.

குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய, திலகரட்ன டில்ஷான் ஆகியோருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து அரைச்சதங்கள் பெற்றிருந்த சந்திமால் இப்போட்டியில் அரைச்சதம் பெற்றால் அவர்களின் சாதனையை முறியடிக்கலாம் என்ற நிலையிலேயே, அடம் ஸாம்பாவின் பந்துவீச்சில் எல்.பி.டபில்யு முறையில் 48 ஓட்டங்களுடன் சற்று முன்னர் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்தில் இடம்பெற்றிருந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் இறுதி நான்கு போட்டிகளிலும் அரைச்சதம் பெற்றிருந்த சந்திமால், இத்தொடரின் முதலாவது போட்டியிலும் அரைச்சதம் பெற்றிருந்தார்.

ஓட்டுமொத்தமாக இப்பட்டியலில் ஒன்பது அரைச்சதங்களுடன் ஜாவீட் மியான்டாட் முதலிடத்தில் காணப்படுகின்றார்.  மார்க் வோ, கேன் வில்லியம்ஸன், மொஹமட் யூசுஃப் , அன்ரூ ஜோன்ஸ், ஆசிஃப் இக்பால் ஆகியோர் ஆறு அரைச்சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளனர். 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி  25 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. குசல் மென்டிஸ் 67, அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் மூன்று ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

- See more at: http://www.tamilmirror.lk/180368/ச-தன-ய-த-தவற-வ-ட-ட-ர-சந-த-ம-ல-#sthash.7jaEJqgk.dpuf
Link to comment
Share on other sites

இலங்கை vs ஆஸ்திரேலியா -2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி. 

 

received_10210232833766819

இலங்கை vs ஆஸ்திரேலியா -2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி.

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி  82 ஓட்டங்ககளால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இப்போது 2 போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், 1-1 என்று சமநிலை பெற்றுள்ளது.

இன்று, பகல் -இரவு ஆட்டமாக கொழும்பு, ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ஆரம்பமான 2 வது ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார்.

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குஷால் மெண்டிஸ், அஞ்சேலோ மத்தியூஸ், குஷால் பெரேரா ஆகியோர் அரைச்சதம் கடந்தனர்.தொடர்ச்சியான 5 ஒருநாள் போட்டிகளில் அரைச்சதம் கடந்த சந்திமால் இன்று 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் ஜேம்ஸ் பால்க்னர் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.  46 வது ஓவரின் இறுதி பந்திலும் 48 வது ஓவரின் முதலிரு பந்துகளிலும் விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்தார்.

received_10210231743259557 received_10210231762580040 received_10210231763380060 received_10210231763900073

289 எனும் வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பதிலுக்கு துடுப்பாட ஆரம்பித்த போது, ஆரம்ப வீரர்கள் இருவரையும் திஸ்ஸர பெரேரா ஒற்றை இலக்கங்களுடனும்  களம் விட்டகற்றினார்.

பின்னர் வந்த அணித்தலைவர் ஸ்மித் 30 ஓட்டங்களுடன் , ஜோர்ச் பெயிலி 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.விக்கெட் காப்பாளர் மத்தியூ வேட் அரைசதமடித்து நம்பிக்கை கொடுத்தாலும் மற்றைய வீரர்கள் சரியான ஒத்துழைப்பை கொடுக்காத நிலையில் ஆஸ்திரேலிய அணி 47.2  ஓவர்கள் நிறைவில் 206 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையம் இழந்து 82 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

ஆட்ட நாயகன் விருதை குஷால் மெண்டிஸ் பெற்றுக் கொண்டார். 3 வது ஒருநாள் போட்டி எதிர்வரும் 28 ம் திகதி தம்புள்ள மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.

received_10210232833606815 received_10210232833646816 received_10210232833766819

http://vilaiyattu.com/17355-2/

Link to comment
Share on other sites

மூன்றாவது ஒருநாள் போட்டியின் இலங்கை குழாம்  அறிவிப்பு

 

ஆஸி அணிக்கெதிரான  3 ஆவது ஒருநாள் போட்டியில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட இலங்கை அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

adsas1.jpg

இதன்படி முதல் போட்டியில் விளையாடிய மிலிந்த சிறிவர்தன அணிக்குழாமிலிருந்து நீக்கப்பட்டு அவரது இடத்திற்கு புதிய இளம் இடதுகை துடுப்பாட்டவீரரும், வலதுகை மிதவேக பந்துவீச்சாளருமான லஹிரு குமார அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்சானின் இறுதி ஒருநாள் போட்டியென்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்ட அணிக்குழாம் பின்வருமாறு

1.எஞ்சலோ மெத்தியுஸ் (தலைவர்)

2.தினேஸ் சந்திமால் (உபத் தலைவர்)

3.திலகரட்ண டில்சான்

4.குசல் ஜனித் பெரேரா

5.குசால் மெண்டிஸ்

6.தனஞ்சய டி சில்வா

7.எஞ்சலோ பெரேரா

8.அவிஸ்க பெர்னாண்டோ

9.தனுஷ்க குணதிலக

10.சுரங்க லக்மால்

11.திசர பெரேரா

12.டில்ருவான் பெரேரா

13.சீகுகே பிரசன்ன

14.லக்ஷான் சந்தகன்

15.அமில அபோன்ஷோ

16.லஹிரு குமார

http://www.virakesari.lk/article/10678

Link to comment
Share on other sites

டில்ஷானின் பிரியாவிடைப் போட்டியில் வெற்றியை தனதாக்கியது ஆஸ்திரேலியா.ஒருநாள் போட்டிகளிலிருந்து விடைபெற்றார் டில்ஷான். 

 

Sri Lanka Australia Cricketடில்ஷானின் பிரியாவிடைப் போட்டியில் வெற்றியை தனதாக்கியது ஆஸ்திரேலியா.ஒருநாள் போட்டிகளிலிருந்து விடைபெற்றார் டில்ஷான்.

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 வது ஒருநாள் போட்டி தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது.

பரபரப்பான இந்தப் போட்டியில் இறுதி நேர போராடடத்துக்கு மத்தியில் 2 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 3 போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் 2-1 என்று ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார்.

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி விக்கெட்டுக்களை வேகமாக பறிகொடுத்தாலும், ஒரு புறத்தே நிலைத்து நின்று துடுப்பாடிய சந்திமால் சதமடிக்க ஆஸ்திரேலிய அணிக்கு 227 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.

sll CRICKET-SRI-AUS

இன்று தன்னுடைய பிரியாவிடைப் போட்டியில் விளையாடிய TM டில்ஷான் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.1999 ம் ஆண்டு சிம்பாப்வேயின் புலாபாயோவில் சிம்பாவே அணிக்கெதிராக ஒருநாள் அறிமுகத்தை மேற்கொண்ட டில்ஷான், இலங்கை அணிக்காக 330 ஒருநாள் போட்டிகளில் 22 சதம், 47 அரைச்சதம் அடங்கலாக 10,290 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 11 வது வீரராகவும், இலங்கை சார்பில் 4 வது அதிகூடிய ஓட்ட்ங்கள் குவித்த வீர்ராகவும் டில்ஷான் திகழ்கின்றார்.

tm 1 tmd

Tillakaratne Dilshan ch 3

இறுதிவரை போராடிய சந்திமால் 4 வது சதம் பூர்த்தி செய்து இறுதி ஓவரில் 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க , இலங்கை அணி 49.2 ஓவர்களில் 226 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்தாண்டில் 11 இன்னிங்ஸ்களில் ஆடிய சந்திமால் 8 தடவைகள் 50 ஐ தாண்டிய ஓட்டங்கள் குவித்துள்ளார்.அதுவும் இறுதி 7 இன்னிங்ஸ்களில் ஒரு சதமும், 5 அரைச்சதமும் உள்ளடக்கம்.

Dinesh Chandimal chandi 3

ஆஸ்திரேலியா சார்பில் சம்பா 3 விக்கெட்டுக்களையும் ,ஹஸ்ட்டிங், ஸ்ட்ராக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.ஆஸ்திரேலிய அணிக்கு 227 எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆரம்ப வீரர்களாக அணித்தலைவர் வோர்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோர் ஆடுகளம் புகுந்து முதல் விக்கெட்டில் 31 ஓட்டங்கள் பெற்ற நிலையில் அணித்தலைவர் வோர்னர் ஆட்டம் இழந்தார்.

44 ஓட்டங்களுக்கு வேகமாக 3 விக்கெட்டுக்களை இழக்கப்பட்டாலும் இளம் வீரர் ட்ரெவ்ஸ் ஹெட் மற்றும் ஜோர்ச் பெயிலி ஆகியோர் 4 வது விக்கெட்டில் 62 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்து அணிக்கு தெம்பூட்டினர்.

ஹெட் 36 , அதன்பின்னர் வந்த விக்கெட் காப்பாளர் வேட் 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தாலும் ஜோர்ச் பெயிலி 70 ஓட்டங்களுடன் களம் விட்டகல ஆஸ்திரேலிய அணிக்கு 21 ஓட்டங்கள் தேவையாக இருந்தது.

இலங்கையின் பந்து வீச்சாளர்கள் நெருக்கடியைக் கொடுத்தாலும் இறுதியில் 46 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலிய வெற்றியைப் பெற்றது.

Sri Lanka Australia Cricket CRICKET-SRI-AUS

http://vilaiyattu.com/டில்ஷானின்-பிரியாவிடைப்/

Link to comment
Share on other sites

நான்காவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Published by Pradhap on 2016-08-30 19:15:44

 

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையில் நாளை தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இடம்பெறவுள்ள நான்காவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற டில்ஷானின் இடத்திற்கு சகலதுறை வீரர் சச்சித்ர பத்திரன அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

நான்காவது போட்டிக்கான இலங்கைக் குழாமின் விபரம் இதோ...

1.குசால் ஜனித் பெரேரா

2.குசால் மெண்டிஸ்

3.தினேஸ் சந்திமால் (உபத் தலைவர்)

4.எஞ்சலோ மெத்தியுஸ் (அணித் தலைவர்)

5.தனஞ்சய டி சில்வா

6.எஞ்சலே பெரேரா

7.அவிஷ்க பெர்னாண்டோ

8.தனுஷ்க குணதிலக

9.சுரங்க லக்மால்

10.திசர பெரேரா

11.டில்ருவான் பெரேரா

12.சீகுகே பிரசன்ன

13.லக்ஷான் சந்தகன்

14.அமில அபோன்ஷே

15.லஹிரு குமார

16.சச்சித்ர பத்திரன

http://www.virakesari.lk/article/10794

Link to comment
Share on other sites

இலங்கை தொடரிலிருந்து சோன் மார்ஷ் விலகினார். 

 

shaunஇலங்கை தொடரிலிருந்து சோன் மார்ஷ் விலகினார்.

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், இன்னும் சிலர் காயத்தால் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு, ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்ட 33 வயதான சோன் மார்ஷ் அணியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது இடது கை விரலில் காயம் ஏற்ப்பட்டதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் உடல்கூற்று நிபுணர் டேவிட் வீக்லே குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொடரில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் நாதன் குல்டர்னைல் முதுகுத் தண்டு வடத்தில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தொடரின் இடை நடுவே விலகிக்கொண்டார்,

ஸ்டீவ் ஸ்மித்,மற்றும் சோன் மார்ஸின் சகோதரனான மிட்சல் மார்ஷ் ஆகியோருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலிய எதிர்காலத்த தொடர்களை கருத்தில்கொண்டு முன்னதாகவே ஓய்வை கொடுப்பதாக அறிவித்தது.

இப்போது சோன் மார்ஸும் தொடரிலிருந்து விலகிக்கொண்டுள்ளமை அணிக்கு நெருக்கடியை தோற்றுவித்துள்ளது, ஆயினும் இவரது இடத்தை உஸ்மான் கவாஜா நிரப்புவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டிகள் நிறைவான நிலையில், ஆஸ்திரேலியா 2-1 என்று முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://vilaiyattu.com/17592-2/

Link to comment
Share on other sites

உபாதையுடன் போராடிய மெத்தியுஸ் : இலங்கை 212 ஓட்டங்கள்

 

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றுள்ளது.

251399.jpg

இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தனஞ்சய டி சில்வா 72 ஓட்டங்களையும் அணித்தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் காலில் ஏற்பட்ட உபாதையுடன் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஆஸி அணியின் பந்துவீச்சு சார்பில் ஹெஸ்டைன்ஸ் 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

ஆஸி அணி வெற்றிபெற வேண்டுமாயின் 50 ஓவர்களில் 213 ஓட்டங்களை பெறவேண்டும்.

http://www.virakesari.lk/article/10829

Link to comment
Share on other sites

அதிவேக ஒருநாள் அரைசத டிவில்லியர்ஸ் சாதனையை அச்சுறுத்திய ஏரோன் பிஞ்ச் அதிரடி

 

 
ஷாட் ஆடும் ஏரோன் பிஞ்ச். | படம்: ஏ.பி.
ஷாட் ஆடும் ஏரோன் பிஞ்ச். | படம்: ஏ.பி.

தம்புல்லாவில் நடைபெறும் 4-வது ஒரு நாள் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 213 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச் 18 பந்துகளில் அரைசதம் கண்டு ஆஸ்திரேலிய சாதனையை சமன் செய்தார்.

2-வது ஓவரில் அதிரடியைத் தொடங்கினார் ஏரோன் பிஞ்ச். அபான்சோ என்ற இடது கை சுழற்பந்து வீச்சாளர் வந்தவுடன் ஸ்வீப்பைத் தொடங்கினார் பவுண்டரி, 2-வது பந்து மிஸ்ஹிட்தான் பீல்டர் கையில் பட்டு ஆஃப் திசையில் பவுண்டரி. பிறகு பாயிண்டில் ஒரு பவுண்டரி, எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடித்து ஒரு பவுண்டரி என்று 17 ரன்கள் அந்த ஓவரில் விளாசினார் பிஞ்ச்.

3-வது ஓவரில் திசர பெரேரா வர 2 பவுண்டரிகள் ஒரு நேர் சிக்ஸ். மீண்டும் அபான்சோ வர வார்னர் முதலில் 2 பவுண்டரிகளை அடிக்க பிஞ்ச்சிடம் ஸ்ட்ரைக் வந்த போது மீண்டும் 2 பவுண்டரிகளை அடித்தார். இம்முறை லாங் ஆன் மற்றும் ஃபைன் லெக் திசையில் பறந்தது.

இந்நிலையில் 14 பந்துகளில் 43 ரன்கள் இருந்த ஏரோன் பிஞ்ச், 2 பந்துகளில் அரைசதம் எட்டினால் 16 பந்துகளில் அரைசதம் என்ற உலக சாதனையை சமன் செய்திருப்பார். டிவில்லியர்ஸ் 16 பந்துகளில் ஒருநாள் அரைசதம் எடுத்து சாதனையை வைத்துள்ளார்.

அதன் பிறகு ஸ்ட்ரைக் கிடைத்த போது திலுருவன் பெரேராவை லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்து 15 பந்துகளில் 49 என்று அருகில் வந்தார், ஆனால் அடுத்த பந்து எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடிக்க முயன்றார் பந்து சிக்கவில்லை ஒரு பை ரன்னாக வந்தது.

6-வது ஓவரை இடது கை வீச்சாளர் பதிரனா வீச முதல் பந்தை கவர் திசையில் பஞ்ச் செய்தார் பிஞ்ச் ஆனால் ரன் இல்லை. ஆனால் அடுத்த பந்து டீப் ஸ்கொயர் லெக் திசையில் சக்தி வாய்ந்த ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸ் அடித்து 18 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய அதிவேக ஒருநாள் அரைசதசாதனையை சமன் செய்தார். அடுத்த பந்தே பதிரனா பந்தை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி.ஆனார். 18 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்த பிஞ்ச் 19-வது பந்தில் அவுட் ஆனார். சைமன் ஓ’டன்னலின் 18 பந்து அரைசதத்தை சமன் செய்தார் பிஞ்ச்.

அதே ஓவரில் கவாஜாவும் ஒரு பந்து கழித்து எல்.பி.ஆனார். இது சந்தேகத்துக்கிடமான தீர்ப்பு.

ஆனால் பிஞ்ச் அதிரடியில் முதல் விக்கெட்டுக்காக 5.3 ஓவர்களில் 74 ரன்கள் விளாசப்பட்டது. தற்போது வார்னர் விக்கெட்டையும் பதிரனா கைப்பற்ற ஆஸ்திரேலியா 11 ஓவர்களில் 114/3 என்று உள்ளது.

ஜார்ஜ் பெய்லி 17 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 31 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 8 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். 12-வது ஓவரில் ஆஸ்திரேலியா 117/3 என்று உள்ளது. பதிரனா 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள்ளார்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/அதிவேக-ஒருநாள்-அரைசத-டிவில்லியர்ஸ்-சாதனையை-அச்சுறுத்திய-ஏரோன்-பிஞ்ச்-அதிரடி/article9056148.ece?homepage=true

Link to comment
Share on other sites

6 விக்கெட்டுக்களால் வீழ்ந்தது இலங்கை - கை நலுவியது தொடர்

6 விக்கெட்டுக்களால் வீழ்ந்தது இலங்கை - கை நலுவியது தொடர்

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி, தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பையும் நலுவ விட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, முன்னதாக இடம்பெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது.

இதன்படி டெஸ்ட் தொடரை 3-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.

அத்துடன், திட்டமிடப்பட்டுள்ள ஐந்து ஒருநாள் போட்டிகளில் முன்னதாக இடம்பெற்ற மூன்று ஆட்டங்களிலும் இரண்டில் அவுஸ்திரேலியாவும் ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், ஒருநாள் தொடரை இழப்பதைத் தவிர்க்க இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில், தம்புள்ளை விளையாட்டரங்கில் இலங்கை அணி இன்றைய போட்டியை எதிர்கொண்டது.

இதில், முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த அணியின் ஆரம்ப வீரரான தனஞ்சய டி சில்வா அசத்தலாக ஆடி 76 ஓட்டங்களைக் குவித்தார்.

மேலும் மெத்தியூஸ் 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க ஏனைய வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்காத நிலையில், 50 ஓவர்கள் நிறைவில், இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்படி 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸதிரேலிய அணி 31 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 4 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களை விளாசி வெற்றி வாகை சூடியுள்ளது.

அந்த அணி சார்பில் ஜோர்ச் பெய்லி 90 ஓட்டங்களையும், பின்ஞ் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

எனவே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி, 1-3 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி, 4ம் திகதி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=83203

14141981_1117133085002051_45579049547579

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூசுப் பசங்கள் டெஸ்ட் தொடரை வென்டவங்கள் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றுவாங்கள் என்று பார்த்தால்?

Link to comment
Share on other sites

இலங்கை மைதானங்களை விமர்சிக்கிறார் வோர்னர்
இலங்கை மைதானங்களை விமர்சிக்கிறார் வோர்னர்
இலங்கையிலுள்ள மைதானங்கள் அதிக ஓட்டங்களை எடுக்கும்; வகையில் சீரமைக்கப்படவில்லை என அவுஸ்ரேலிய அணித் தலைவர் வோர்னர் விமர்சித்து ள்ளார். கடந்த ஒரு தசாப்த காலமாக இலங்கை மைதானங்கள் 300 ஓட்ட ங்களுக்கு மேல்  ஒரு வெற்றிக்காக எடுக்க முடியாத வகையிலேயே அமைந்தி ருந்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
 
ஒருநாள் ஆட்டத்தொடரை அவுஸரேலிய வழியில கைப்பற்றியிருப்பதாகவும் வோர்னர் குறிப்பிட்டிருக்கின்றார். 
 
இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்றையதினம் தம்புள்ளையில் நடந்தது.
 
இதில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடு த்தாடியது.தொடக்க வீரர்களாக தனஞ்செய டி சில்வாஇ பெர்னா ண்டோ ஆகியோர் களமிறங்கினார்கள்.
 
பெர்னாண்டோ டக்- அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து வந்த குஷால் மெண்டிஸ் (1)இ சந்திமால் (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
 
அணித்தலைவர் மத்யூஸ் (40) சிறப்பாக விளையாடி வந்த நிலையில்இ பந்து தலையில் தாக்கி வெளியேறினார்.
 
மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த தனஞ்செய டி சில்வா (76) அரைச்சதம் கடந்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்தவர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
 
இதனால் இலங்கை அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை எடுத்தது.
 
அவுஸ்ரேலிய அணி சார்பில் ஜோன் ஹஸ்டிங்ஸ் 45 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டு களை வீழ்த்தினார்.
 
இதன் பின்னர் 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய அவுஸ்ரேலிய அணிக்கு தொடக்க வீரர் வோர்னர் (19) நிலைக்கவில்லை.
vvv.jpg
மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் பின்ச் (55) 19 பந்தில் அரைச்சதம் அடி த்தார். கவாஜா டக்- அவுட் ஆனார்.
 
டிராவிஸ் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்கஇ பெய்லி நிதானமாக ஆடி அரைச்சதம் அடித்தார். இதனால் அவுஸ்ரேலியா 31 ஓவரிலேயே 4 விக்கெட் மட்டும் இழந்து 217 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோர்ஜ் பெய்லி 85 பந்தில் 90 ஓட்டங்கள் எடுத்தார்.
 
இந்த வெற்றியின் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்ரே லியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.  ஆட்டநாயகனாக 6விக்கெட்டுக்க ளை கைப்பற்றிய  ஜோன் ஹஸ்டிங்ஸ் தெரிவானார்
 
இந்த ஆட்டம் முடிந்த பின்னர் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் உபதலைவர் சந்திமால் இலங்கை அணித் தலைவர் மத்தியூஸின் பந்து வீச்சு காயம் காரணமாக இல்லாமல் போனது இலங்கை அணிக்கு ஒரு பேரிழப்பு என கவலை தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் நுழைவுச் சீட்டுகள் கிடைக்காத காரணத்தால் ரசிகர்கள் பலர் தமது ஏமாற்றத்தை வெளிப்ப டுத்தியுள்ளார்கள். நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு விட்டமையே இதற்கு காரணம்.  பார்வையாளர்கள் அரங்கின் நுழைவாயிலில் 5000 ரசிகர்கள் அளவில் தரையில் இருந்து வழியைத் தடை செய்தமையால், பொலிஸார் தண்ணீரைப் பீச்சியடித்து இவர்களை விரட்டியுள்ளார்கள்.

http://onlineuthayan.com/news/17000

Link to comment
Share on other sites

ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Published by Pradhap on 2016-09-03 14:32:27

 

இலங்கை மற்றும் ஆஸி. அணிகளுக்கிடையில் கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெறவுள்ள ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

dassdsad2.jpg

4 ஆவது போட்டியில் உபாதைக்குள்ளான அணித்தவைர் எஞ்சலோ மெத்தியுஸிற்கு பதிலாக உபுல் தரங்க அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை திசர பெரேரா மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தசுன் சானக ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐந்தாவது போட்டிக்கான இலங்கைக் குழாமின் விபரம் இதோ...

1.குசால் ஜனித் பெரேரா

2.குசால் மெண்டிஸ்

3.தினேஸ் சந்திமால் (அணித் தலைவர்)

4.உபுல் தரங்க

5.தனஞ்சய டி சில்வா

6.எஞ்சலோ பெரேரா

7.அவிஷ்க பெர்னாண்டோ

8.தனுஷ்க குணதிலக

9.சுரங்க லக்மால்

10.நிரோஷன் டிக்வெல்ல

11.டில்ருவான் பெரேரா

12.சீகுகே பிரசன்ன

13.தசுன் சானக

14.அமில அபோன்ஷே

15.லஹிரு குமார

16.சச்சித்ர பத்திரன

http://www.virakesari.lk/article/10923

Link to comment
Share on other sites

இலங்கை, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் சர்வதேச போட்டி இன்று! 

 

received_10210279554294803

இலங்கை, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் சர்வதேச போட்டி இன்று!

இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையில் ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் இரு அணிகளிலுமே சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த போட்டிக்கான இலங்கை அணி விபரம் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய உபாதைக்குள்ளான அணித்தவைர் அஞ்சலோ மெத்தியுஸிற்கு பதிலாக இடது கை துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை திசர பெரேரா மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தசுன் சானக ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கை அணியில், குசால் ஜனித் பெரேரா, குசால் மெண்டிஸ், தினேஸ் சந்திமால், உபுல் தரங்க, தனஞ்சய டி சில்வா, எஞ்சலோ பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, தனுஷ்க குணதிலக, சுரங்க லக்மால், நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, சீகுகே பிரசன்ன, தசுன் சானக, அமில அபோன்ஷே, லஹிரு குமார, சச்சித்ர பத்திரன ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவுஸ்திரேலிய அணியிடம் ஒருநாள் தொடரை பறிகொடுத்துள்ள இலங்கை அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது

http://vilaiyattu.com/17711-2/

Link to comment
Share on other sites

கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றது ஆஸி
கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றது ஆஸி
இலங்கை அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
 
இந்த தொடரை ஏற்கனவே அவுஸ்திரேலியா 3-1 என கைப்பற்றியுள்ள நிலையில், 5Mவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பல்லேfலவில் நடந்தது.
 
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய தனன்ஜெய டி சில்வா (34), குணத்திலக (39) ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
 
ஆனால் அடுத்து வந்த அணித்தலைவர் சந்திமால் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மெண்டிஸ் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
kத்யூஸ்க்கு பதிலாக களமிறங்கிய உபுல் தரங்கா 15 ஓட்டங்களே எடுத்தார். இதன் பின்னர் வந்த வந்த தசன் ஷனக (13), குஷால் பெரேரா (14) ஆகியோரும் நிலைக்கவில்லை.
 
சச்சித் பத்ரிராண கடைசி நேரத்தில் நிதானமாக ஆடி 32 ஓட்டங்கள் சேர்த்தார். அடுத்து வந்த தில்ருவான் (5), சுரங்க லக்மல் (0) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இலங்கை 40.2 ஓவரில் 195 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
 
அவுஸ்திரேலிய அணி சார்பில், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஜம்பா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
இதனையடுத்து 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி களமிறங்கியது.
 
தொடக்க வீரர்களாக அணித்தலைவர் வோர்னர் மாத்யூவ் வாடே களமிறங்கினர். இந்த நிலையில் மாத்யூவ் வாடே 3 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த காவாஜாவும் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
 
இதன் பின்னர் வோர்னர், பெய்லி ஜோடி நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்ப்பில் ஈடுபட்டது. சிறப்பாக விளையாடி வந்த நிலையில் பெய்லி 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
1473007001_w.jpg
டிராவிஸ் ஹெட் (13) நிலைக்கவில்லை. கடைசி வரை நிதானமாக ஆடி வந்த வோர்னர் சதம் விளாசினார். அவர் 126 பந்தில் 106 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
பின்னர் வந்த ஹஸ்டிங்ஸ் (4) ஒரு பவுண்டரி விளாச அவுஸ்திரேலிய அணி 43 ஓவரில் 5 விக்கெட் இழந்து 199 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
 
ஆட்டநாயகனாக வோர்னர்,தொடர் நாயகனாக பெய்லி தெரிவாகினர்.

http://onlineuthayan.com/news/17164

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.