Jump to content

5 வருட முயற்சி பலிக்குமா?


Recommended Posts

5 வருட முயற்சி பலிக்குமா?

 

அன்று காலை நாடு ஒரு­ப­ர­ப­ரப்­பான சூழலில் காணப்­பட்­டது. முழு நாடும் புதிய பிர­தமர் பத­வி­யேற்­ப­தையும் புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்­ப­தையும் தொலைக்­காட்­சி­யூ­டாக பார்ப்­ப­தற்கு தயா­ராகிக் கொண்­டி­ருந்­தது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் ஆட்­சி­ய­மைக்­கக்­கூ­டிய பெரும்­பான்மை பலத்தை பெறாவிடினும் கூடிய ஆச­னங்­க­ளான 106 எம்.பி.க்களை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி வெற்­றி­யீட்­டி­ருந்­தது.

எனவே, ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆட்­சி­ய­மைப்பார் என்றும் பிர­த­ம­ராக பத­வி­யேற்பார் என்றும் ஐக்­கிய தேசிய கட்­சியின் புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்கும் என்றும் முழு நாடும் ஏன் சர்­வ­தே­ச­மும்­கூட எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்­தது. மக்கள் நினைத்­த­ப­டியே காலை 10.00 மணி­ய­ளவில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டின் பிர­த­ம­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் பத­வி­யேற்றார்.

அதன் பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சி புதிய அமைச்­ச­ர­வையில் யார் யாருக்கு என்­னென்ன பத­விகள் கிடைக்கப் போகின்­றன என்­பது குறித்தும் அனை­வரும் ஆர்­வ­மாக இருந்­தனர்.

ஆனால், அது தான் நடக்­க­வில்லை. மாறாக ரணில் விக்­கிர­ம­சிங்க பிர­த­ம­ராக பத­வி­யேற்­ற­துடன் நாட்டு மக்கள் மூக்­கின்மேல் விரலை வைக்கும் வகையில் ஒரு நிகழ்வு இடம்­பெற்­றது. அதா­வது ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் அடுத்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு தேசிய அர­சாங்­கத்தை கொண்டு நடத்­து­வ­தற்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட்­டன.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச் செய­லாளர் கபீர் ஹாஷிம், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் துமிந்த திஸா­நா­யக்க ஆகியோர் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட்­டன. இது யாரும் எதிர்­பார்க்­காத விட­ய­மாக அமைந்­தது.

2015 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி 106 ஆச­னங்­களை பெற்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 95 ஆச­னங்­களை பெற்­றது. அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு -----14 ஆச­னங்­க­ளையும் மக்கள் விடு­தலை முன்­னணி 6 ஆச­னங்­க­ளையும் பெற்­றன. இந்­நி­லையில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான 113 ஆச­னங்கள் கிடைக்­கா­வி­டினும் 106 ஆச­னங்­களைப் பெற்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்கும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

இவ்­வாறு ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சி­ய­மைத்தால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அர­சாங்­கத்­திற்கு வெளியில் இருந்து கொண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கும் என்றும் கரு­தப்­பட்­டது. ஆனால், நிலைமை தலைகீழாகவே மாறி­யது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பேச்­சு­வார்த்தை நடத்தி தேசிய அர­சாங்­கத்தை அமைப்­பது என்ற முடி­வுக்கு வந்­தனர்.

இதனால், ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சுதந்­திரக் கட்­சிக்­கு­மி­டையில் அமைச்சுப் பத­வி­களை எவ்­வாறு பகிர்ந்து கொள்­வது என்­பது தொடர்பில் முரண்­பாடு ஏற்­பட்­டது. சுமார் ஒரு மாதத்தின் பின்­னரே தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை பத­வி­யேற்க முடிந்­தது. உண்­மையில் சொல்­லப்­போனால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சில முக்­கிய உறுப்­பி­னர்கள் இவ்­வாறு தேசிய அர­சாங்கம் அமைப்­பதை விரும்­பவில்லை. ஒரு­சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தனி­யாக சந்­தித்து தேசிய அர­சாங்கம் வேண்டாம் என்றும் ஐக்­கிய தேசியக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்­கலாம் என்றும் தெரி­வித்­தனர்.

எனினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைப்­பதில் உறு­தி­யாக இருந்தார். ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏன் இவ்­வாறு ஆர்­வ­மாக இருக்­கின்றார் என்­பது தொடர்பில் அந்த நேரத்தில் பல்­வேறு கேள்­விகள் எழுப்­பப்­பட்­டி­ருந்­தன. உண்­மையில் அதற்கு பல்­வேறு கார­ணங்கள் இருந்­தன.

காரணம் கடந்த வருடம் இலங்­கை­யா­னது சர்­வ­தேச மட்­டத்­திலும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யிலும் கடும் அழுத்­தங்­களை எதிர்­கொண்­டி­ருந்­தது. அந்த அழுத்­தங்­க­ளி­லி­ருந்து விடு­பட வேண்­டு­மானால் இரண்டு கட்­சி­களும் இணைந்து பய­ணிப்­பது அவ­சியம் என்றும் அத­னூ­டாக சர்­வ­தே­சத்தின் பாராட்­டுக்­களை பெற முடியும் என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் மதிப்­பீடு செய்­தனர்.

அதன்­பி­ர­கா­ரமே நல்­லாட்­சிக்­கான தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டது. எனினும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சில பங்­காளிக் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் ஒரு பிரி­வி­னரும் தேசிய அர­சாங்­கத்தை விரும்­ப­வில்லை.

அது­மட்­டு­மன்றி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சுமார் 50 பேரைக் கொண்ட எம்.பி.க்கள் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் தினேஷ் குண­வர்­தன தலை­மையில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி என்ற பெயரில் இயங்க ஆரம்­பித்­தனர். ஆனால் இந்த ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தலை­மையில் மஹிந்த அணி­யா­கவே செயற்­பட்டு வரு­கின்­றனர். தற்­போது கூட கொழும்பை நோக்கிப் பாத­யாத்­தி­ரையை இந்த அணி­யினர் முன்­னெ­டுத்­துள்­ளனர்.

எவ்­வா­றெ­னினும் தற்­போது தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்டு ஒரு­வ­ரு­ட­காலம் நிறை­வ­டையப் போகின்­றது. இந்த ஒரு­வ­ருட காலத்தில் இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் பல்­வேறு கருத்து முரண்­பா­டுகள், கருத்து மோதல்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. இரண்டு கட்­சி­யிலும் இருந்த சில அமைச்­சர்கள் கடந்த காலங்­களில் பகி­ரங்­க­மா­கவே பரஸ்­பரம் விமர்­ச­னங்­களை முன்­வைத்துக் கொண்­டனர்.

குறிப்­பாக சுதந்­திரக் கட்­சியின் சில அமைச்­சர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை மிகவும் கடு­மை­யாக விமர்­சித்து வந்­தனர். இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஒரு­படி மேலே சென்று சுதந்­திரக் கட்சி தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு என்ற ஒரே கார­ணத்­திற்­காக மட்­டுமே தேசிய அர­சாங்­கத்தில் நீடிப்­ப­தா­கவும் எந்த நேரத்­திலும் தாம் வெ ளியேற வேண்­டிய நிலை ஏற்­ப­டலாம் என்றும் கூறி­யி­ருந்தார்.

இவ்­வாறு பல்­வேறு சவால்கள் தடை­க­ளுக்கு மத்­தியில் நாட்டின் தேசிய அர­சாங்கம் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கும் இடையில் செய்­து­கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் இன்னும் ஒரு வருட காலம் தேசிய அர­சாங்கம் நீடிக்கும்.

ஆனால், தற்­போது முழு­மை­யாக ஐந்து வரு­டங்­க­ளுக்கும் தேசிய அர­சாங்­கத்தை நீடிப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஆராய்ந்­து­வ­ரு­கின்­றன. இது தொடர்பில் அண்­மையில் சமிக்­ஞையை வெளியிட்­டி­ருந்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் ஐந்து வரு­டங்­க­ளுக்கு தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு தயார் என்று அறி­வித்­தி­ருந்தார்.

எதிர்­வரும் ஐந்து வரு­டங்­க­ளுக்கு ஐக்­கிய தேசிய கட்­சியும் சுதந்­திரக் கட்­சியும் இணைந்த தேசிய அர­சாங்கம் பய­ணிக்கும் என்றும் அதனை யாராலும் தடுக்க முடி­யாது என்றும் பிர­தமர் திட்­ட­வட்­ட­மாக கூறி­யி­ருந்தார். பிர­த­மரின் அறி­விப்பை பார்க்­கும்­போது எஞ்­சி­யி­ருக்­கின்ற நான்கு வரு­டங்­க­ளுக்கும் இரண்டு பிரதான கட்­சி­களும் தேசிய அர­சாங்­கத்­தையே அமைப்­ப­தற்கு முயற்­சிக்­கின்­றமை தெளிவா­கின்­றது.

இதனை உறு­தி­ப்ப­டுத்தும் வகையில் சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களும் கருத்­துக்­களை வெளி­யிட்­டு­வ­ரு­கின்­றனர். இது தொடர்பில் அண்­மையில் கருத்து கூறி­யி­ருந்த சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த சம­ர­சிங்க ஐக்­கிய தேசிய கட்­சி­யு­ட­னான தேசிய அர­சாங்கம் நீடிக்கும் என கூறி­யி­ருந்தார்.

அதா­வது ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் உறவை தொடர அடுத்த மூன்று ஆண்­டு­கா­லத்­திற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை நீடிக்க வேண்டும். தேசிய அர­சாங்­கத்தை இரண்டு ஆண்­டு­க­ளுடன் கலைப்­பது நாட்டின் நிலை­மை­களை குழப்பும் செய­லாகும். இப்­போது நாம் இரண்டு ஆண்­டு­க­ளுக்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையை மேற்­கொண்டு அதன் அடிப்­ப­டையில் செயற்­பட்டு வரு­கின்றோம். பிர­தான இரண்டு கட்­சி­க­ளுக்கும் மக்கள் முழு­மை­யான ஆத­ரவை வழங்­காத நிலையில் இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து இந்த தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றன. ஆகவே புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை என்­பது மிகவும் அவ­சி­ய­மான ஒன்­றாகும். அடுத்த மூன்று ஆண்­டு­கா­லத்­திற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை நீடித்து ஐந்து ஆண்­டு­க­ளுக்­கான தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுக்க வேண்டும். தேசிய அர­சாங்­கமே இப்­போது நாடு இருக்கும் நிலையில் நாட்டை முன்­னெ­டுக்க சிறந்த தெரி­வாக உள்­ளது. தேசிய அர­சாங்­க­மாக அடுத்த மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்­னோக்கி செல்­வதா அல்­லது இரண்டு ஆண்­டு­களின் பின்னர் தனித்து செல்­வதா என்­பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­தி­ய­குழு கூடி ஆராயும் என்று சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாட்டை தெளிவாக குறிப்­பிட்­டுள்ளார்.

இதன்­மூலம் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது எதிர்­வரும் ஐந்து வரு­டங்­க­ளுக்கு இல்­லா­வி­டினும் இன்னும் இரண்டு வரு­டங்­க­ளுக்­கா­வது தேசிய அர­சாங்­கத்தை விரும்­பு­வதை அறிய முடி­கின்­றது. அதே­போன்று ஐக்­கிய தேசிய கட்­சியும் எதிர்­வரும் நான்கு வரு­டங்­க­ளுக்கு தேசிய அர­சாங்­கத்தை தொடர விரும்­பு­வதை காண முடி­கின்­றது.

நாடு எதிர்­கொண்­டுள்ள சர்­வ­தேச சவால்­களை முறி­ய­டித்தல் தேசிய பிரச்­சி­னைக்கு அனைத்து தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொள்ளும் தீர்வை தேடுதல். நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரத்தை ஆராய்ந்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டுதல் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களில் தேசிய அர­சாங்கம் இன்­றி­ய­மை­யா­தது என்று ஐக்­கிய தேசிய கட்சி நம்­பு­கின்­றது.

எனவே, ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது தொடர்ந்து தேசிய அர­சாங்கம் நீடிப்­பதை விரும்பும். அக்­கட்­சிக்குள் ஒரு சிலர் தேசிய அர­சாங்­கத்தை விரும்­பா­வி­டினும் பெரும்­பான்மை உறுப்­பி­னர்­களின் தீர்­மா­னத்­துக்கு அமைய தேசிய அர­சாங்கம் நீடிக்கும். இதே­வேளை சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மைத்­திரி அணியும் தேசிய அர­சாங்­கத்தை எதிர்­வரும் நான்கு வரு­டங்­க­ளுக்கு இல்­லை­யா­யினும் இன்னும் இரண்டு வரு­டங்­க­ளுக்­கா­வது நீடித்துச் செல்­வதை விரும்­பலாம்.

ஆக மொத்­தத்தில் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பின்­னரும் நாட்டில் தேசிய அர­சாங்கம் பத­வியில் அம­ரப்­போ­கின்­றது என்­ப­தனை புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. அவ்­வாறு மேலும் மூன்று வரு­டங்­க­ளுக்கு தேசிய அர­சாங்­கத்தை நீடிக்­க­ வேண்­டு­மாயின் மற்­று­மொரு புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் கைச்­சாத்­தி­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இந்­நி­லையில் அவ்­வாறு புதிய புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் கைச்­சாத்­தி­டப்­ப­டு­மாயின் அதன் உள்­ள­டக்கம் எவ்­வாறு அமையப் போகின்­றது என்­பதை ஆரா­ய­வேண்­டி­யது முக்­கி­ய­மாகும். ஏற்­க­னவே முதல் இரண்டு வரு­டங்­க­ளுக்­காக செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது, புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வருதல், தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைத்தல் போன்­றன பிர­தான விட­யங்­க­ளாக காணப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

அத்­துடன் நலி­வ­டைந்து போயுள்ள நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வது தொடர்­பா­கவும் அந்த உடன்­ப­டிக்­கையில் முக்­கி­ய­மாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் கடந்த வருடம் செய்து கொள்­ளப்­பட்ட இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை முடி­வ­டை­வ­தற்கு இன்னும் ஒரு­வ­ரு­ட­கா­லமே உள்­ளது.

எனினும் இது­வரை தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­ப­டவும் இல்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­ப­டவும் இல்லை. பொரு­ளா­தா­ரமும் இன்னும் நெருக்­கடி நிலை­யி­லேயே உள்­ளது.

இந்­நி­லையில் இன்னும் ஒரு­வ­ரு­ட ­கா­லமே தற்­போ­தைய உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் தேசிய அர­சாங்­கத்­திற்கு எஞ்­சி­யுள்ள நிலையில் அந்த காலப்­ப­கு­தியில் இந்த பிரச்­சி­னைகள் தீர்க்கப்பட்டுவிடுமா என்பது கேள்விக்குறியானதாகும். எனவே அடுத்துவரும் மூன்று வருடங்களுக்காக புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் செய்து கொள்ளப்படுமாயின் அதன் உள்ளடக்கம் எவ்வாறு அமையப் போகின்றது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

எனினும் அடுத்துவரும் ஒருவருடகாலம் எவ்வாறு அமையப் போகின்றது என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயம். அடுத்துவரும் ஒருவருட காலத்தில் அரசாங்கம் தேசிய பிரச்சினை தீர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டுவிடுமா ? அல்லது வரலாற்றில் இடம்பெற்றதைப் போன்று இழுத்தடிப்புக்கள் இடம்பெறுமா என்பதை எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகளிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

எது எப்படியிருப்பினும் தேசிய அரசாங்கத்தின் தேவை என்ன என்பது குறித்து இரண்டு பிரதான கட்சிகளும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். சுதந்திரத்திற்கு பின்னர் இவ்வாறு இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து சவால்களுக்கு மத்தியிலும் முன்னோக்கி நகர்கின்றன. எனவே இந்த நிலையை உரிய முறையில் பயன்படுத்தி நாட்டில் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டியது அவசியமாகும்.

இரண்டு கட்சிகளும் இந்த தேவையை புரிந்து கொள்ளுமா?

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=30/07/2016

 

showImageInStory?imageid=287388:mr

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.