Jump to content

கனவுகள் இலவசம்! - ஸ்பீல்பெர்க்கின் The BFG - படம் எப்படி? #TheBFG


Recommended Posts

கனவுகள் இலவசம்! - ஸ்பீல்பெர்க்கின் The BFG - படம் எப்படி? #TheBFG

TheBFG-440x250.png

சோஃபிக்கு இரவில் சரியாக தூக்கம் வராத ‘இன்சோம்னியா’ வியாதி. தாய் தந்தை இல்லாத அவள், தான் இருக்கும் ஆதரவற்றோர் விடுதியில் படுத்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது 24 அடி உயர பிரம்மாண்ட உருவமொன்றைப் பார்த்துவிடுகிறாள். அந்த உருவம், ஜன்னலுக்குள் கைவிட்டு சோஃபியை, தன் தேசத்துக்கு எடுத்துச் செல்கிறது. என்னைப் போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்ற ரகசியம் உனக்குத் தெரிந்துவிட்டதால், வேறு வழியில்லை.. உன் ஆயுட்காலம் முழுவதும் நீ இங்கேதான் இருக்க வேண்டும் என்கிறது.

giantroom1.jpg

சோஃபியால் BFG (Big Friendly Giant) என்றழைக்கப்படும் அந்த மாபெரும் உருவத்திற்கு, மனிதர்களின் கனவைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. சோஃபிக்கு ‘இன்சோம்னியா’ என்பதால் அதை அவள் நம்பத்தயாராக இல்லை. ’நீ தூங்கியே ஆகணும். இல்லைன்னா,, மனுஷங்களை சாப்டற வேற பெரிய உருவங்கள் வந்து உன்னை சாப்டுடும்’ என்று பயமுறுத்துகிறது.

the-bfg0.jpg

சோஃபி உறக்கம் வராமல் இருக்க, 24 அடி உயர BFG சொன்னது போலவே, அவரை விட மாபெரும் உருவமாக, 54 அடியில் ஃப்ளஷ்லம்பீட்டர் என்கிற மனிதர்களை உண்ணும் உருவம் இவரது இருப்பிடத்திற்கு வருகிறது. ‘என்னமோ மனுஷ வாடை அடிக்குதே’ என்று அது தேட BFG சோஃபியை ஒளிந்திருக்கச் சொல்லிவிட்டு அதெல்லாம் இல்லை என்று சமாளித்து அனுப்பிவிடுகிறது.

flushlumpter.jpg


அதன்பிறகு BFG சோஃபிக்கு சில மாற்று உடைகளைக் கொடுக்க, அதில் அவள் சிகப்புச் சட்டை ஒன்றை அணிந்து கொள்கிறாள். அதைப் பார்த்ததும் ஒரு நொடி, BFGக்கு கண்கள் கலங்குகிறது. காரணம், ஏற்கனவே தன்னைப் பார்த்துவிட்டதால், இதே போல எடுத்துவந்த ஒரு சிறுவன் அணிந்திருந்ந்த சட்டை அது. அந்தச் சிறுவன் மனிதர்களை உண்ணும் கூட்டத்தால் பலியானதுதான் காரணம்.

the-bfgredjacket.jpg

ஒருநாள் BFG-யும் சோஃபியும் கனவுகளின் தேசத்துக்கு செல்ல தீர்மானிக்கிறார்கள். அங்கிருந்து நல்ல கனவுகளை எடுத்து வந்து, உறங்கும் குழந்தைகளுக்கு செலுத்தி வருவதே BFG அடிக்கடி செய்யும் பணி. ஆனால் அங்கே செல்லும் வழியில், ஃப்ளஷ்லம்பீட்டர் தலைமையிலான எட்டு ஒன்பது பேர் அடங்கிய மனிதர்களை உண்ணும் குழுவில் மாட்டிக்கொள்கிறது BFG. அவர்கள் BFGஐ கலாய்த்து, பந்தாய் எறிந்து,  உருட்டி விளையாடுகிறார்கள். சோஃபி அவர்கள் கண்ணில் பட்டுவிட்டால் காலி என்று BFG அதையும் இதையும் செய்து சோஃபியைக் காப்பாற்றி, அவர்களிடமிருந்து தப்பித்து கனவு தேசத்துக்குச் செல்கிறார்கள் இருவரும்.

the-bfg-magical.jpg


‘நீ இப்டி அவங்களைக் கண்டு பயப்படாதே BFG. நாம எதாச்சும் செய்யணும்’ என்று திட்டம் தீட்டுகிறாள் சோஃபி. ‘நம்ம இங்கிலாந்து மகாராணிகிட்ட முறையிடுவோம். இந்த மனிதர்களை திங்கற கூட்டத்தை அவங்க கட்டுப்படுத்துவாங்க. அதுக்கு அவங்களுக்கு கனவைச் செலுத்தி நம்மளைப் பத்தி சொல்லணும்’ என்று ஐடியா கொடுத்து அதன்படி மகாராணியின் அரண்மனைக்குள் நுழைகிறார்கள்.

The-Queen-in-The-BFGthroughwindow.jpg

மகாராணியை சந்தித்து, அரசின் உதவியோடு ஃப்ளஷ்லமீட்டர் உள்ளிட்ட மனித உண்ணிகளை அழிப்பது கடைசி க்ளைமாக்ஸ்!

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில், நேற்று வெளியான இந்தப் படம் 1982ல் Roald Dahl எழுதிய ’THE BFG’ என்கிற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ஏற்கனவே 1989ல் அனிமேஷனாக தொலைக்காட்சியில் வந்தது. 25 ஆண்டுகளால பலர் எடுக்க ஆசைப்பட்ட நாவல்  இது.  E.T. the Extra-Terrestrial  படம் இயக்கியவர்  32 ஆண்டுகளுக்குப் பின் , குழந்தைகளுக்காக ஒரு படம் இயக்கி இருக்கிறார். ஜுராசிக் பார்க் போன்றவை எல்லாம் குழந்தைகள் படத்தில் சேர்த்தி இல்லை.
 

குழந்தைகளுக்கான படம் என்றாலும், எல்லோரும் ரசிக்க நிறைய காட்சிகள் உண்டு. அதில் முக்கியமாக BFGயாக வரும் மார்க் ரைலான்ஸின் நடிப்பு. சோஃபிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்று பதறுவதும், பாசம் காட்டுவதும் என எல்லா உணர்ச்சிகளையும் முகத்தில் கொண்டு வருகிறார். இந்த உலகம் என்பதே ஒரு BFG தான். இறுதியாக , BRAVE சோஃபி என சொல்லிவிட்டு இருவரும் செல்லும் இடமும் சரி, படம் நெடுக சோஃபியைக் காப்பாற்ற BFG எடுக்கும் முடிவுகளும் சரி, நம்பிக்கை தருகிறது. அந்த நம்பிக்கைக்கு, இன்னும் உயிர் ஊட்டுகிறது ஜான் வில்லியம்ஸின் இசை.


காட்சிகளை பார்வையாளனுக்குக் கொடுப்பதில் பல சவால்களை அசால்டாக கடந்திருக்கிறார்கள். சாதாரண மனித உருவமாக சோஃபி, 24 அடி உயர BFG, அதை விட மாபெரும் உருவமாக 54 அடி உயர மனித உயிர்களைத் தின்னும் ஃப்ளஷ்லம்பீட்டர் ஆகிய மூவரின் கோணத்திலும் பல காட்சிகள் வருகிறது. அதற்குத் தகுந்த மாதிரி ரசிக்க வைக்கிறார்கள். கீழே புகைப்படத்தில் இருக்கிற, ‘மகாராணி வீட்டில் உணவருந்தும் காட்சி’.. ஓர் உதாரணம்!

BFGcollage.jpg

சபாஷ் ஷாட்ஸ், படத்தில் பல உண்டு. லண்டன் வீதியில் இரவு வந்துவிட்டு திரும்பும்போது, மற்றவர்கள் கண்ணுக்குப் படாமல் இருக்க, வாகனங்கள் எதிர்வரும்போது சுவரில் ஒண்டிக் கொள்வது, கண்டெய்னர் லாரியில் படுத்துக்கொள்வது என்று பார்க்க அதகளமாக காட்சி அது. அதே போல, லாரியை ஸ்கேட்டிங் ஷூ போல பயன்படுத்தும் மனித உண்ணி அரக்கர்கள், நீருக்குள் இருக்கிற கனவுலகம், மகாராணியின் அரண்மனையில் BFGயின் விஜயம் என்று பல. ' I IS HAPPY' , HUMAN BEANS,  I IS YOUR HUMBACK SERVANT என BFG சொல்லும் ஒவ்வொரு தவறான ஆங்கில வார்த்தைகளுக்கு சோஃபியோடு நாமும் சிரித்துக்கொண்டே இருக்கலாம். ஆர்ட் டைரக்‌ஷனும் ஆஹா சொல்ல வைக்கிறது. BFG வீட்டு சமையலறையில் கத்தி வைக்கும் ஸ்டாண்டாக டெலிஃபோன் பூத், BFG சாப்பிடக் கொடுக்கும் பெரிய ஸ்போர்க் என்று கவனித்து ரசிக்க நிறைய அம்சங்கள்.

’நாவலை சிதைக்காமல் படமாக்கிய விதத்திற்காக ஸ்பீல்பெர்க்குக்கு பாராட்டு குவிகிறது. அதைப் போலவே விஷுவல் எஃபெக்ட்ஸ், இசை எல்லாமே ஆஹா தான். ஆனால் ஸ்பீல்பெர்கின் படங்களிலேயே மிக குறைந்த ஓபனிங் கலெக்‌ஷன் இந்தப் படத்திற்குதான். ஏனோ விளம்பரங்களோ, ப்ரமோஷன்களோ அந்த அளவுக்கு காணோம்.  இந்தியில் அமிதாப்பும், தமிழில் நாசரும் BFGக்கு குரலுதவி செய்து இருக்கிறார்கள்.

படத்தின் ட்ரைலர் தமிழில்..

http://www.vikatan.com/cinema/movie-review/66654-the-bfg-big-friendly-giant-review.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மகிந்த படுத்த கட்டிலில் தம்பி படுத்து எழுந்து வந்திட்டார். மற்றவர்களுக்கும் அந்த ஆசை வரும் தானே? (நான் ஜனாதிபதிக்கட்டிலை சொன்னேன் ராசா😜)
    • பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய  அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி  04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....!  😁
    • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1378726
    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.