Jump to content

ஐ. நா மனித உரிமை சபையும் ஈழ தமிழரும்


Recommended Posts

 
ஐ. நா மனித உரிமை சபையும் ஈழ தமிழரும்
 
 

ஜெனி­வாவில் ஐ.நா. மனித உரிமை சபையின் 32 ஆவது கூட்டத் தொடர் நடந்து முடிந்­துள்ள நிலையில், இம் மனித உரிமை சபையில் நேர்­மை­யாக விசு­வா­ச­மாக திட­காத்­தி­ர­மாக தமிழ் மக்­க­ளுக்­கான நீதிக்கு, அர­சியல் உரி­மை­க­ளுக்கும் எதிர்­கா­லத்தில் என்ன செய்­ய­மு­டியும், என்ன செய்­யலாம் என்­பது மிகவும் முக்­கியம்.

நாம் கடந்த இரண்­டரை தசாப்­தங்­க­ளாக ஐ.நா.மனித உரிமை செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­வது மட்­டு­மல்­லாது, இதனால் ஏற்­படும் நன்மை தீமை­களின் பங்­கா­ளி­க­ளா­கவும், பகை­வர்­க­ளா­கவும் திகழ்ந்து வரு­கின்றோம். நாம் 1990 ஆம் ஆண்டு இச் செயற்­பா­டு­களில் ஆரம்­பத்­தி­லி­ருந்து, அன்றும் இன்றும் என்றும் மாறு­பட்ட அர­சுகள் எம்மை ஓர் பகை­வர்கள் என்ற அடிப்­ப­டை­யி­லேயே நோக்கி வரு­வ­துடன், நாமும் அதற்­கான விலையை நாளுக்கு நாள் கொடுத்த வண்ணம் உள்ளோம்.

மனித உரிமை செயற்­பாடு, விசே­ட­மாக ஐ.நா. செயற்­பாடு என்­பது படித்து அறிந்து - சட்ட வல்­லுநர், புத்­தி­ஜீ­வி­களின் ஆலோ­ச­னை­யுடன் செய்­யப்­பட வேண்­டிய ஒன்று. இவ் விட­யத்தில் யாரும் உணர்ச்­சி­வ­சப்­பட்டு தர்க்கம் செய்­யவோ, தாம் நினைத்­ததை ஏற்­க­னவே நிர்­ண­யிக்­கப்­பட்ட விதி­மு­றை­க­ளுக்கு மாறாக சாதிக்க முடி­யாது. சர்­வ­தேச சட்­டத்­து­ட­னான வரை­ய­றைகள், சாரங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே மனித உரிமை விட­யங்கள் பரி­சீ லிக்­கப்­ப­டு­கின்ற கார­ணத்­தினால், சர்­வ­தேச மனித உரிமை செயற்­பா­டு­களும் இதற்கு ஏற்ற வகை­யி­லேயே அமைய வேண்டும்.

ஆகையால் இச் செயற்­பாட்­டுக்கு எண்­ணிக்­கை­யான செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு மேலாக, படித்து அறிந்து சர்­வ­தேச அணு­கு­முறை, சட்­டங்­க­ளுக்கு ஏற்ற முறையில் ஐ.நா.வின் மொழி­க­ளான – ஆங்­கிலம், பிரெஞ்சு, ஸ்பானிய, சீனா, ரஷ்யா, அரபு  மொழி­களில் ஆளுமை கொண்ட சில செயற்­பாட்­டா­ளர்கள் போது­மா­னதே. ஒரு இருவர் கொண்ட அமைப்பு என்­ப­தற்கு மேலாக அவர்­க­ளினால் செய்­யப்­படும் காரி­யங்­களே முக்­கி­ய­மா­னது. சுருக்­க­மாக கூறு­வ­தனால், எண்­ணிக்­கைக்கு மேலாக, ஐ.நா. பற்­றிய புத்­தகப் படிப்பு கொண்ட தர­மா­ன­வர்­களே முக்­கி­ய­மா­னது.

தமிழ் மக்­களை பொறுத்த வரையில், ஒட்­டு­மொத்­த­மாக சக­லரும் இலங்கையின் ஆட்­சி­யா­ளரின் அடக்­கு­மு­றையின் விளை­வு­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களே. இவை வகைப்­ப­டுத்­தலின் அடிப்­ப­டையில், ஒவ்­வொ­ரு­வரும் அனு­ப­வித்த, அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்ற தாக்­கங்கள், மீறல்கள், இன்­னல்கள் மாறு­ப­டலாம் என்­பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடை­யாது.

நடை­முறைச் சிக்­கல்கள்

ஆகையால், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் யாவரும் ஐ.நா.வில் முகம்­காட்ட வேண்டும் என்ற விதி­முறை ஐ.நா.வில் கிடை­யாது. காரணம், பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் போன்று உலகில் உள்ள கோடிக்­க­ணக்­கானோர் ஐ.நா.விற்கு நேரில் வந்து தமது ஆதங்­கங்­களை கூற வேண்­டு­மென்ற நிலை உரு­வானால் - இதற்­கான நிதி, போக்­கு­வ­ரத்து வசதி, தங்­கு­மிடம், தொலைத்­தொ­டர்பு, சுகா­தாரம், உண­வு­வ­சதி போன்ற பல நடை­முறைச் சிக்­கல்கள் உரு­வாகும். ஆனால் பணம் படைத்­த­வர்கள் நேரில் வந்து தமது நிலை­களை கூறு­வதை ஒரு­பொ­ழுதும் ஐ.நா. தடுப்­ப­தில்லை.

ஆனால் ஐ.நா.வுக்கு நேரில் வருகை தரும் பாதிக்­கப்­பட்டோர், ஐ.நா.வின் விதி­மு­றை­க­ளுக்கு ஏற்­ற­வாறு செயற்­படத் தவறும் பட்­சத்தில், அவர்­களின் ஐ.நா.வுக்­கான வருகை, ‘விள­லுக்கு இறைத்த நீராகி விடு­வது’ மட்­டு­மல்­லாது, இவர்­களின் வரு­கையால் குற்றம் சுமத்­தப்­பட்ட நாடும் அரசும், பல நன்­மை­களை பெற்­றுக்­கொள்­வார்கள் என்­பதே உண்மை. இதற்கு நூற்­றுக்­க­ணக்­கான உதா­ர­ணங்கள் உள்­ளன.

ஆகையால் மனித உரிமை செயற்­பாடு என்­பது அவ­தானம், நிதானம், பொறு­மை­யுடன் செய்­யப்­பட வேண்­டி­யது. இவை தவறும் பட்­சத்தில், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்ந்தும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவும், ஒடுக்­கு­முறை, அடக்­கு­மு­றையை மேற்­கொள்வோர் தொடர்ந்தும் தமது அநி­யா­யங்­களை சுதந்­தி­ர­மாக செய்­வ­தற்கு வழி­வ­குப்­ப­துடன், ஐ.நா. மனித உரிமை சபையின் அங்­கத்­துவ நாடு­களின் ஆத­ர­வையும் பாதிக்­கப்­பட்டோர் இழப்­பார்கள்.

இன்று தமிழ் மக்­களை பொறுத்த வரையில் மூன்று முக்­கிய விட­யங்­களின் அடிப்­ப­டையில் செயற்­பட வேண்­டிய தேவை உள்­ளது. முத­லா­வ­தாக, பொறுப்புக் கூறல். அதா­வது, தமிழ் மக்­களுக்கு இழைக்­கப்­பட்­டுள்ள நிலம், அர­சியல் கைதிகள் உட்­பட சகல மனித உரிமை மீறல்கள், சமூக பொரு­ளா­தார கலா­சார பாதிப்­புக்கு பரி­காரம் தேட­வேண்­டிய கட­மைப்­பாடு.

சுய நிர்­ணய உரிமை

இரண்­ட­ாவ­தாக, அர­சியல் உரிமை. இவ்­வி­டயம் மிகவும் பாரிய வேலைத் திட்­டத்தை கொண்­டுள்­ளது. அர­சியல் உரிமை என்னும் பொழுது, சுய­நிர்­ணய உரிமை என்ற அடிப்­ப­டையில், அது உள்­வா­ரி­யா­னதா அல்­லது வெளி­வா­ரி­யா­னதா என்ற கேள்வி எழு­கி­றது. தமிழ் மக்­க­ளு­டைய ஆயுதப் போராட்டம் என்­பது வெளி­வா­ரி­யான சுய­நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டை­யிலே நடத்­தப்­பட்டு வெற்­றி­யையும் கண்­டுள்­ளது. இவ் அடிப்­ப­டையில், இலங்கை அரசின் அனு­ச­ர­ணை­யுடன் எட்­டப்­படும் அர­சியல் தீர்­வா­னது, நிச்சயம் வெளி­வா­ரி­யான சுய­நிர்­ணய உரிமை கொண்­ட­தாக இருக்­கு­மென யாரும் எதிர்­பார்க்க முடி­யாது.

அப்­ப­டி­யானால், உள்­வா­ரி­யான சுய­நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டையில், இலங்கை அர­சினால் எதை, தமிழ்த் தேசிய இனத்­திற்கு வழங்க முடியும்? தற்­போ­தைய அரசில் அங்கம் வகிக்கும் சுதந்­திரக் கட்­சியின் அமைச்­சர்கள் ஏற்­க­னவே, சமஷ்டி முறை­யி­லான தீர்­வை ­நி­ரா­க­ரித்­துள்ள நிலையில், இவர்கள் எதை முன்­வைக்கப்போகி­ன்றார்கள் என்ற கேள்வி இங்கு எழு­கி­றது?

தர்க்­க­ரீ­தி­யாக தமிழ் மக்­க­ளது வெளி­வா­ரி­யான சுய­நிர்­ணய உரி­மைக்கு தகுதி உடை­ய­வர்கள் என்­பதில் ஐய­மில்லை. இதே­வேளை, தமிழ் மக்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட இன அழிப்பு, இன சுத்­தி­க­ரிப்பே என்­பதும், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் இணைப்பு என்­பதும் நிச்­சயம் அர­சியல் தீர்­வுடன் பின்­னிப்­பி­ணைந்து மூன்­றா­வது விட­ய­மாக காணப்­ப­டு­கி­றது. ஆகையால் இவை யாவும் என்று, எப்­பொ­ழுது, எவரால், தீர்க்­கப்­பட்டு தமிழ் மக்கள் சுதந்­திரக் காற்றை சுவா­சிக்க போகின்­றார்கள் என்ற கேள்­விக்கு யாரால் பதில் கூற­மு­டியும்?

ஜெனி­வாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை சபை­யினால், மேலே கூறப்­பட்ட மூன்று விட­யங்­களில்,  முத­லா­வது விட­யத்­திற்கு மட்­டுமே பரி­காரம் காணக்­கூ­டிய நிலை உள்­ளது. இதற்­காக இவை இன்றோ நாளை நடை­பெறும் என்று இங்கு கூற முன்­வ­ர­வில்லை. காரணம் எந்த நாடாக, எந்த இன­மாக இருந்­த­ாலென்ன ஐ.நா. மனித உரிமை செயற்­பா­டுகள் என்றும் நத்தை வேகத்­தி­லேயே செல்­வதை நாங்கள் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

தற்­போ­தைய நிலையில், கடந்த ஒக்­டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமை சபை­யினால் அர­சாங்கம் மீது நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையின் நிபந்­த­னை­க­ளுக்கு அமைய, இப் பிரே­ரணை தனது இரண்­டா­வது கட்­டத்தை எதிர்­வரும் மார்ச் மாதம், அதா­வது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடை­ய­வுள்­ளது.

வாய்­மூல அறிக்கை

இத­னது முத­லா­வது கட்டம் ஏற்­க­னவே கடந்த மாதம் ஐ.நா.மனித உரிமை ஆணை­யா­ளரின் வாய்­மூ­ல­மான அறிக்­கை­யுடன் முடி­வ­டைந்­துள்­ளது. அவ­ரது அறிக்கை மிகவும் இறுக்­க­மா­ன­தாக இல்­லா­வி­டினும், அரசின் பொறுப்­பின்­மை­யையும், கால தாம­தங்­க­ளையும், புதிய கைதுகள் மனித உரிமை மீறல்­களை வெளிப்­ப­டை­யாக சுட்டிக் காட்­டி­யுள்ளார்.

இந்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் வாய் மூல அறிக்­கையை, இலங்கை அரசு தமது பரப்­புரை வேலை­க­ளுக்கு சர்­வ­தேச ரீதி­யாக கிடைத்த மாபெரும் வெற்­றி­யாகக் கொள்ளும் அதே­வேளை, தெற்கில் பெரும்­பான்மை ஆத­ரவை கொண்­டுள்ள கூட்டு எதி­ர­ணி­யென தமக்குத் தாமே பெயர் சூட்­டி­யுள்ள மஹிந்த அணி­யினர், தமது நாட்டின் ஒரு­மைப்­பாட்­டுக்கு ஏற்­பட்­டுள்ள சவா­லாக, ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்­கையை பார்க்­கின்­றனர்.

இதே­வேளை, உணர்ச்சி பொங்கும் ஈழத் தமிழர், விசே­ட­மாக புலம்­பெயர் வாழ் தமிழர் சிலர், இவ் அறிக்­கையை ஏற்று தமி­ழர்­களை திட்டும் அதே­வேளை, இவ் வழி­களை தவிர்த்து வேறு­எந்த வழியில் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு சர்­வ­தே­சத்தின் உத­வி­யுடன் நீதியைத்தேட முடியும் என்­ப­தையும் சொல்ல இய­லாது தவிக்­கின்­றனர். சுருக்­க­மாக கூறு­வ­தனால், சிங்­க­ள­தேசம் தமக்குள் கருத்து வேறு­பா­டுகள் சர்ச்­சைகள் கொண்­டி­ருந்த பொழுதும், தமது இனத்தை நிலத்தை ஏதோ ஒரு கபட நாட­கங்கள் மூலம் பாது­காத்து அப­க­ரித்து விஸ்­த­ரித்து வரு­கின்­றது.

இவை யாவற்­றிற்கும், ஐ.நா.வுக்கு வருகை தரும் பெரும்­பான்­மை­யான தமிழ் மக்­க­ளி­டையே, ஐக்­கிய நாடுகள் சபை பற்­றிய ஓர் ஒழுங்­கான புத்­தகப் படிப்போ கண்­ணோட்­டமோ காணப்­ப­ட­்டாமையே கார­ணி­யா­க­வுள்­ளது.

ஐ.நா. என்­ற­வுடன் சில­ரது எண்­ணங்கள் யாவும் அர்­த்த­மற்ற சிந்­தனை கற்­ப­னை­க­ளா­க­வுள்­ளது. ஆயுதப் போராட்டம் மிகவும் வெற்­றி­க­ர­மாக நடந்த வேளை­யி­லேயே, விடு­தலைப் புலிகள், ஐ.நா. பற்றி மிகவும் தெளி­வான ஆழ்ந்த கருத்தை கொண்­டி­ருந்­தனர்.

பன்­னாட்டு சிக்கல்

ஐ.நா. விட­யங்கள் பற்றி, தமிழ்­நாட்டின் பசுமை தாயகம் என்ற ஐ.நா. அந்­தஸ்தை கொண்­டுள்ள அமைப்பின் பிர­தி­நி­தி­யான அருள் இரத்­தினம், பதிவு செய்­துள்ள கருத்தை மிகவும் சுருக்­க­மாக இங்கு தரு­கிறேன்.

"தென் சீன கடல் படிப்­பி­னையும் - தமிழ் ஈழமும்" - “சர்­வ­தேச அரங்கில் ஐ.நா.வுக்கு என்று பிரத்­தி­யேக அதி­காரம் எல்லாம் கிடை­யாது. ஒரு பன்­னாட்டு சிக்­கலில் எத்­தனை நாடுகள் ஆர்வம் செலுத்­து­கி­றார்­களோ, அதுவும் எத்­தனை பலம்­வாய்ந்த நாடுகள் ஆர்வம் செலுத்­து­கின்றார்­களோ, அந்­த­ள­வுக்கு அந்த சிக்கல் கவனம் பெறும். எனவே பன்­னாட்டு அர­சி­யலில் தமி­ழீழ போராட்டம் என்­பது அதி­க­மான நாடு­களின் கவ­னத்தை ஈர்ப்­பதும், ஐ.நா.வின் நிகழ்ச்சி நிரலில் இலங்­கையை தொடர்ந்து இழுத்துச் செல்­வ­துமே ஆகும்.

இதை­யெல்லாம் விட்­டு­விட்டு - ஐ.நா. அவையின் மூலம் - சுதந்­திர தமி­ழீ­ழத்தை அமைப்போம், கூடவே சேர்த்து, எல்லாம் அமைப்போம் - என்­றெல்லாம் பேசிக்­கொண்­டி­ருந்தால் - பேசு­வ­தற்கு மகிழ்ச்­சி­யாக இருக்கும். நடை­மு­றையில் எதுவும் இருக்­காது.” பன்­னாட்டு அரங்கில் இலங்­கையை தனி­மைப்­ப­டுத்தி, மற்ற நாடு­களின் நட்பை நாட ஈழத்­தமிழ் ஆத­ர­வா­ளர்கள் முன்­வர வேண்டும். பன்­னாட்டு அர­சியல் அரங்கில் வேறு பாதை எதுவும் இல்லை.” (நன்றி) இவற்றை ஏட்டு படிப்பு அற்­றோ­ரினால் புரி­வது கடினம்.

ஐ.நா.மனித உரிமை செயற்­பாட்டை, ஜெனிவா சென்று தான் செய்ய முடியும் என்று நிலைப்­பாட்டில் - லத்தீன் அமெ­ரிக்கா, ஆபி­ரிக்கா, ஆசிய நாடு­களைச் சார்ந்த பாதிக்­கப்­பட்ட ஆயிரம் ஆயி­ர­மானோர் இருந்­தி­ருக்­க­வில்லை. இதற்கு பல உதா­ர­ணங்கள் உள்­ளன.

இதேபோல் அர­சியல் விடு­தலை பெற்ற நாடு­க­ளான – ஏரித்­தீ­ரியா, கிழக்கு திமோர், கொசேவா, தென் சூடான் போன்ற நாடு­களின் உண்­மை­யான நேர்­மை­யான அர­சியல் விசு­வா­ச­மான செயற்­பாட்­டா­ளர்கள், அமெ­ரிக்­காவில் நியூ­யோர்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபை, பாது­காப்புச் சபை போன்­ற­வற்­று­ட­னேயே தமது செயற்­பா­டு­களை விஸ்­த­ரி­த்தத­னால் பல­னையும் பெற்­றனர்.

அர­சி­யலா, மனித உரி­மையா?

ஆகையால் தமி­ழீழ செயற்­பாட்­டா­ளர்­க­ளென கூறிக்­கொள்வோர், தமது கால நேரத்தை முதலில் தம்மை அர­சி­ய­லிலா, அல்­லது மனித உரிமை செயற்­பாட்­டிலா அர்­ப்­பணிக்க போகின்றோம் என்­பதை முடிவு செய்ய வேண்டும். இதன் மூலம் தற்­பொ­ழுது ஜெனி­வாவில் நடை­பெறும் அர்த்தம் அற்ற செயற்­பா­டுகள் யாவும் முடி­வுக்கு வரு­வ­துடன், பாதிக்­கப்­பட்ட மக்­களுக்­கான பொறுப்புக் கூறல் விடயம் சரி­யான பாதையில் பய­ணிக்க முடியும்.

இதே­வேளை, மனித உரி­மைக்குள் அர­சி­யலை புகுத்தி, இரண்­டையும் ஸ்தம்­பிதம் அடையச் செய்­யாது - அர­சியல் செயற்­பாட்­டா­ளர்­க­ளென தம்மைக் கூறி­க்கொள்வோர்,  நியூ­யோர்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபை, பாது­காப்புச் சபை போன்­ற­வற்­றுடன் தமது செயற்­பாட்டை விஸ்­த­ரித்து, தமி­ழ் மக்­க­ளுக்­கான வெளி­வா­ரி­யான சுய­நிர்­ணய பெற்று கொடுக்க செயற்­பட வேண்டும். இவற்றை உட­ன­டி­யாக செய்ய முடி­யு­மென இங்கு கூற முய­ல­வில்லை.

இவை தவிர்த்து தற்­போ­தைய செயற்­பா­டுகள், கழுத்­த­றுப்­புக்கள், காய் நகர்த்­தல்கள் யாவும் - பாதிக்­கப்­பட்டு உள்­நாட்டில் தமது நிலங்­களை இழந்து, உட­மை­களை இழந்து, வாழ வழி­யில்­லாது வாழ்­வோரும், அர­சியல் விடு­தலைப் போராட்­டத்­திற்கு பங்­க­ளிப்ப­தற்கு முன்வந்து இன்று சிறை­களில் வாடு­வோ­ரது நிலையில் எந்­த­வித முன்­னேற்றம் இல்­லாது வாழவே வழி வகுக்கிறது.

இன்று முள்ளிவாய்க்கால் முடிந்து ஆறு, ஏழு வருடங்களில், ஜெனிவாவின் பெயரால் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான பணம் பலராலும் செலவு செய்யப்பட்டும் எதுவித ஆக்க பூர்வமான பலனையும் பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்கவில்லையானால், தற்போதைய “சாம்பாறு” செயற்பாடே காரணி. இதற்கு திரை மறைவில் இலங்கை அரசு காரணியாக உள்ளது.

ஜெனிவாவுக்கான பரப்புரை வேலை என்பது, தமது நாடுகளில் உள்ள வெளிநாட்டு தூதுவராலயங்கள் இராஜதந்திரிகளுடன் ஆரம்பமாகி, சர்வதேச நிறுவனங்களின் ஆதரவுடன் தொடர வேண்டும். இவற்றை தமிழ் மக்கள் தனித்து மேற்கொள்வது முடியாத காரியம். ஆகையால், தெற்கில் வாழும் சிங்கள சிவில் சமூகத்தவரில், திறந்த மனப்பான்மை கொண்டவருடன் இணைந்து முன்னகர்த்த வேண்டும்.

இச் செயற்பாட்டின் அடிப்படையிலேயே, கடந்த ஒக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமை சபையினால் அரசின் மீது நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் முழுப் பயனை சர்வதேச சமுதாயத்தின், விசேடமாக ஐ.நா.மனித உரிமை சபை அங்கத்துவ நாடுகளின் ஆதரவுடன் நாம் அடைய முடியும். இது தவிர்ந்த வேலைப்பாடுகள் யாவும், இலங்கை அரசின் செயற்றிட்டத்திற்கு மறை முகமாக துணை போவதாகவே அமைகிறது.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=30/07/2016

showImageInStory?imageid=287426:mr

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.