Jump to content

உதட்டு கருமையை போக்க சூப்பர் டிப்ஸ்....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
உதட்டு கருமையை போக்க சூப்பர் டிப்ஸ்....!

 

 

July 29, 2016
lipsbeauty.jpg


சிலர் அடிக்கடி லிப்ஸ்டிக் போடுவதால் அவர்களுடை உதடு கருமையாக காட்சியளிக்கும்.

அதனை போக்க எந்த விதமான கொமிக்கல் கலந்த பொருட்களையும் உபயோகிக்காமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உதட்டினை பாதுகாக்கலாம்.

வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி உதட்டு கருமையை போக்கலாம் என்று பார்க்கலாம். 

* சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். லிப் பாமிற்கு பதிலாக தேனை உபயோகித்தால் நாளடைவில் வசீகரமான உதடுகள் கிடைக்கும். கருமையுன் வறட்சியும் மறைந்துவிடும். தினமும் இதை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

* வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் 20 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை படிப்படியாக மறையச் செய்யும்.

* கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பின்னர் 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை சிவப்பு நிறத்தில் மாற்றும்.

* தயிரில் எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

லிப்ஸ்டிக் போடுவதால் உண்டாகும் கருமையை நீக்குவது நீக்கலாம்.http://mithiran.lk/article.php?category=beauty&num=2047

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப குமர்களை விட‌ அன்டிமார் அடிக்கும் உதட்டு சாயம் தான்  ஆளையே இழுத்து கொண்டு போகிறதுtw_blush:

நமக்கெல்லாம்  காஞ்ச பரோட்டா மாதிரீதான் இருக்கிறது எதை பாவித்தாலும் அடிக்கடி அலர்ஜிக் வந்து புண்ணாகிறது இந்த உதடு:unsure: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

இப்ப குமர்களை விட‌ அன்டிமார் அடிக்கும் உதட்டு சாயம் தான்  ஆளையே இழுத்து கொண்டு போகிறதுtw_blush:

நமக்கெல்லாம்  காஞ்ச பரோட்டா மாதிரீதான் இருக்கிறது எதை பாவித்தாலும் அடிக்கடி அலர்ஜிக் வந்து புண்ணாகிறது இந்த உதடு:unsure: 

குமருகள் இயற்கையாகவே அழகாக இருக்கிறபடியால் செயற்கை எதுவும் தேவையில்லை.ஆன்ரிமாருக்கு தான் இப்போ டையில் இருந்து அழகு சாதனம் முழுக்க தேவைப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:

குமருகள் இயற்கையாகவே அழகாக இருக்கிறபடியால் செயற்கை எதுவும் தேவையில்லை.ஆன்ரிமாருக்கு தான் இப்போ டையில் இருந்து அழகு சாதனம் முழுக்க தேவைப்படுகிறது.

என்ன ஒரு அவதானிப்பு நம்மள விட ஒருவர் இருக்கிறார் என்று கூறிtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, முனிவர் ஜீ said:

என்ன ஒரு அவதானிப்பு நம்மள விட ஒருவர் இருக்கிறார் என்று கூறிtw_blush:

நானும் ஒரு ஆன்ரியை வீட்ல வைச்சிருக்கிறனில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் ஒரு ஆன்ரியை வீட்ல வைச்சிருக்கிறனில்ல.

ஏன்பா சொல்லவே இல்லை ஹாஹாஹாtw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.