Jump to content

'கோழிகளின் வாசனையை நுளம்புகள் விரும்புவதில்லை' எத்தியோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு - மலேரியாவை தடுப்புத் திட்டத்துக்கு புதிய நம்பிக்கை


Recommended Posts

18240Aedes_Albopictus-mosquito.jpg           18240Habte_Tekie.jpg

கோழி­களின் வாச­னையை நுளம்­புகள் விரும்­பு­வ­தில்லை என எத்­தி­யோப்­பி­யா­வி­லுள்ள விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.
 
இதனால், மலே­ரியா நோய் பர­வலை தடுப்­ப­தற்கு நவீன வழி­மு­றை ­ஒன்றை ஏற்­ப­டுத்த முடியும் என்ற நம்­பிக்கை அதி­க­ரித்­துள்­ளது.
 
மனி­தர்­க­ளையும் ஏனைய மிரு­கங்­க­ளையும் நுளம்­புகள் கடிக்­கின்ற போதிலும் கோழி­க­ளி­லி­ருந்து நுளம்­புகள் வில­கி­யி­ருப்­பதை சோமா­லி­யாவின் தலை­நகர் அடீஸ் அபா­பா­வி­லுள்ள அடீஸ் அபாபா பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பேரா­சி­ரியர் ஹெப்தே தெக்கீ தலை­மை­யி­லான பூச்சியில் நிபு­ணர்கள் குழா­மொன்று அவ­தா­னித்­த­னராம்.
 
அதை­ய­டுத்து மலே­ரியா நுளம்­பு­களின் தாக்­கத்­தி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கான புதிய வழிகள் குறித்து இக்­ கு­ழு­வினர் ஆராய்ந்து வரு­கின்­றனர். கோழிகள் தம்மை கொன்­று­விடும் என நுளம்­புகள் கரு­து­வதும் அவை கோழி­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருப்­ப­தற்­கான ஒரு காரணம் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
 

  18240chickens-for-sale-at-a.jpg
எத்­தி­யோப்­பி­யாவின் வட பகு­தி­யி­லுள்ள கிரா­மங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­களின்­படி கோழி­யொன்றைக் கொண்­டுள்ள கூட்டின் அருகில் உறங்­கு­ப­வர்கள் நுளம்புத் தாக்­க­மின்றி உறங்­கி­ய­தாகத் தெரி­வித்­துள்­ள­னராம்.
 
ஆனால், வீட்­டுக்குள் கோழி எதையும் வளர்க்­கப்­ப­டாத வீடு­களில் இந்­நிலை காணப்­ப­ட­வில்லை என ஏ.எவ்.பி. தெரி­வித்­துள்­ளது.
 
இது தொடர்­பான ஆய்வு விப­ரங்கள் மலே­ரியா ஜேர்னல் எனும் மருத்­துவ சஞ்­சி­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.
 
இம்­ மு­றையில் தயா­ரிக்­கப்­படும் நுளம்பு எதிர்ப்புப் பொருள் மனிதப் பாவ­னைக்கு பாது­காப்­பா­ன­தாக இருக்கும் எனவும் அது நீரையோ மண்­ணையோ நஞ்­ச­டையச் செய்­யாது எனவும்  பேரா­சி­ரியர் ஹெப்தே தெக்கீ தெரி­வித்­துள்­ளார்.
 
உலகில் மலேரியாவினால் வருடாந்தம் இலட்சக் கணக்கானோர் இறக்கின்றனர்.

  18240Chickens-smell.jpg
10 கோடி மக்களைக் கொண்ட எத்தியோப் பியாவில் 60 சதவீத மானோர் மலேரியா அச்சுறுத்தலை எதிர்நோக்கு கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

18240815611-01-02.jpg

http://metronews.lk/article.php?category=lifestyle&news=18240#sthash.txWCGK87.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.