Jump to content

பிராது மனு - சிறுகதை


Recommended Posts

பிராது மனு - சிறுகதை

சிறுகதை: இமையம், ஓவியங்கள்: ஸ்யாம்

 

p72a.jpg

கொளஞ்சியப்பர் கோயிலுக்குள் வந்த தங்கமணி, சீட்டு கட்டுகிற இடத்தைத் தேடினாள். சாமி கும்பிட்டுவிட்டு வந்த ஓர் ஆளிடம் கேட்டாள். அவன் சொன்ன மாதிரியே நடந்து சீட்டு கட்டுகிற இடத்துக்கு வந்தாள். ஒரு வன்னிமரத்தைச் சுற்றி, ஆள் உயரத்துக்கு இருபது முப்பது சூலங்கள் ஊன்றப்பட்டி ருந்தன. ஒவ்வொரு சூலத்திலும் ஐந்நூறு, ஆயிரம் சீட்டுகள் கட்டப் பட்டிருந்தன. சூலத்தில் இடம் இல்லாததால், கட்டப்பட்டிருந்த சீட்டுகளின் நூலிலேயே கொத்துக்கொத்தாக சீட்டுகள் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள். தான் கொண்டுவந்திருந்த சீட்டை எந்த சூலத்தில் கட்டுவது எனப் பார்த்தாள். குண்டூசி குத்துகிற அளவுக்குக்கூட காலி இடம் இல்லை. சூலத்தில் கட்டப்பட்டிருந்த சீட்டுகளைப்போல, தன்னுடைய மடியில் வைத்திருந்த சீட்டை எடுத்துச் சுருட்டினாள். சுருட்டிய சீட்டை, சூலத்தில் கட்டுவதற்கு நூல் இல்லையே என்ற எண்ணம் அப்போதுதான் வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள். துண்டு நூல் எதுவும் தரையில் கிடக்கவில்லை. அப்படியே மற்ற சீட்டுகளுக்கு இடையே செருகிவிடலாமா என யோசித்தாள். காற்று அடித்தால் மறுநொடியே கீழே விழுந்துவிடும். சீட்டில் எழுதிய வேண்டுதல் காரியம் நடக்காது. ரோட்டுக்குப் போய், பஸ் நிற்கிற இடத்தில் உள்ள பெட்டிக்கடையில் கேட்டுப் பார்க்கலாம் என நினைத்துக்கொண்டு திரும்பியபோது, பக்கத்தில் இருந்த அறைக்குள் ஓர் ஆள் போனான். அவனிடம், ``ரவ நூல் இருக்குங்களா?’’ எனக் கேட்டாள்.

``எதுக்கு?’’

``இந்தச் சீட்டைக் கட்டுறதுக்குங்க’’ - கையில் சுருட்டிவைத்திருந்த சீட்டைக் காட்டினாள் தங்கமணி.

``ஊட்டுலேயிருந்து எழுதி எடுத்தாந்தியா?’’

``ஆமாங்க.’’

``உன்னோட சீட்டு செல்லாது'' - கறாராகச் சொன்னான் சீட்டு கொடுப்பவன்.

``என்னாங்க சொல்றீங்க?'' - பரிதாபமாகக் கேட்டாள் தங்கமணி.

``நீ பாட்டுக்கு எழுதிக்கிட்டு வந்து சீட்டு கட்டிட்டுப் போறதுக்கு, நாங்க எதுக்கு இங்க ஆபீஸ் வெச்சிக்கிட்டுக் குந்தியிருக்கோம்?’’ - இளக்காரமாகக் கேட்டான்.

``நீங்க சீட்டு தருவீங்களா?’’

``ஆமாம்மா... `பிராது மனு’னு நாங்க ஒண்ணு  குடுப்போம். அதுலதான் நீ எழுதிக் கொண்டாந்து கட்டணும். அப்படி நீ கட்டினாத்தான், உன் கோரிக்கையை நிறைவேத்த சாமிய நான் அனுப்புவேன். இங்க கட்டியிருக்க சீட்டுகள் எல்லாம் அப்படித்தான் கட்டியிருக்கு’’ எனச் சொல்லிக்கொண்டே போய், அறையில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். தங்கமணிக்குக் குழப்பமாக இருந்தது.

`சீட்டுக் கட்ட போ’ எனச் சொன்ன சரோஜாவும் ஊர்க்காரர்களும் இந்த விஷயத்தைச் சொல்லவில்லையே என யோசித்தாள். சீட்டு கட்டுவதற்கு எனக் கிளம்பியபோது, நேராகச் சென்று பள்ளிக்கூடத்தில் இருந்த ஆசிரியரிடம் சொல்லி, ஒரு பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டு வந்தாள். சீட்டை எழுதிக் கொடுத்த ஆசிரியரும் ஒருவார்த்தை ‘விஷயம் இப்படி’ எனச் சொல்ல வில்லை. கையில் சுருட்டிவைத்திருந்த பேப்பரைத் தூக்கிப்போட்டுவிடலாம்போல கோபம் வந்தது. அதேநேரத்தில் ஒரு பேப்பர்தானே வாங்கி எழுதிக் கொடுத்துவிடலாம் என எண்ணிக்கொண்டு அறைக்குள் போனாள். நாற்காலியில் உட்கார்ந்திருந்த சீட்டு கொடுப்பவனிடம், ``ஒரு சீட்டு குடுங்க’’ எனக் கேட்டாள்.

``பிராது மனு கட்டணுமா... படிப்பணம் கட்டணுமா?’’

``சீட்டுதாங்க கட்டணும்.’’

``சீட்டு இல்லம்மா, பிராது மனு. பிராது மனு கட்டணும்னா இருநூறு; படிப்பணம் கட்டணும்னா நூறு’’ எனச் சொல்லிவிட்டு, தங்கமணியை ஏற-இறங்கப் பார்த்தான். பிறகு, மேசை மீது இருந்த மூன்று நான்கு நோட்டுகளை எடுத்து ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிவைத்தான். மேசை டிராயரைத் திறந்து, பேனாவை எடுத்து மேசை மீது வைத்தான். சாவியை எடுத்துப் பக்கத்தில் இருந்த பீரோவைத் திறந்து லெட்டர்பேடு மாதிரி இருந்த ஒரு நோட்டையும், பில்புக் மாதிரி இருந்த ஒரு நோட்டையும் எடுத்து மேசை மீது வைத்துவிட்டு பீரோவைப் பூட்டினான். பிறகு, தங்கமணியிடம் கேட்டான்...

``என்னா ஊரு?’’

``கழுதூருங்க.’’

``இங்கிருந்து எம்மாம் தூரம்?’’

தொலைவான ஊரில் இருந்து வந்திருக்கிறேன் எனச் சொன்னால் உதவி செய்வான் என்ற நம்பிக்கையில், ஐந்து மைல் தூரத்தைக் கூட்டிச் சொன்னாள்.

``அப்படின்னா பிராது மனு பணத்தோட நூறு ரூவா சேர்த்துக் குடு.’’

``மின்னாடி இருநூறு ரூவானுதான் சொன்னீங்க?!’’ - தூரத்தைக் கூட்டிச்சொன்னது தவறாகப் போய்விட்டதே என நினைத்தாள்.

``இருநூறு ரூவா சாமிக்கு; நூறு ரூவா சாமியோட குதிரைக்கு’’ - லேசாகச் சிரித்தான். அவன் சிரித்ததைப் பார்க்காமல், ``குதிரைக்கா பணம்?!’’ என ஆச்சர்யமாகக் கேட்டாள் தங்கமணி.

``நீ சீட்டுல எழுதித் தர்ற பிராது மனுவ என்னா ஏதுனு கேக்கிறதுக்கு உன்னோட ஊட்டுக்கு சாமி நடந்தா வரும்? குதிரையிலதான வர முடியும்? குதிரை சும்மா வருமா? கொள்ளும் புல்லும் தின்னாத்தானே சாமியைச் சொமந்துக்கிட்டு வரும்? சாமியா இருந்தாலும் ஆசாமியா இருந்தாலும் பைசாதான் முக்கியம்... புரியுதா?’’ எனக் கேட்டுச் சிரித்தான்.

என்ன சொல்வது எனத் தெரியாமல் குழம்பி நின்ற தங்கமணியைப் பார்த்து, ``என்னம்மா பார்க்கிற? உங்க ஊருக்கு பஸ்காரன் எப்படி உன்னை ஏத்திக்கிட்டுப் போறான்? கிலோமீட்டருக்கு இவ்வளவுனு ரேட்டு போட்டுத்தானே ஏத்திக்கிட்டுப் போறான்? அந்த மாதிரிதான் இதுவும்’’ எனச் சொன்னான்.

``புத்தம்புது நகை சார். எங்க அண்ணன் மவன் கல்யாணத்துக்கு முறம செய்யுறதுக்காக இருந்த அருகாணி நிலத்தையும், முந்தாநாளு சாயங்காலம் அடமானம் வெச்சித்தான் நகை எடுத்தேன். பத்தரமா பொட்டியில வெச்சிப் பூட்டிட்டுத்தான் நேத்து காலையில வேலைக்குப் போனேன். சாயங்காலம் வந்து பார்க்கிறேன்... பொட்டி தொறந்துகிடக்குது. நகையைக் காணோம். ரெண்டு பவுனும் போயிடிச்சு. ‘பத்தரமா வைக்காம எங்க போன? என் பேச்சைக் கேட்காம அடம்புடிச்சி நிலத்தை அடமானம் வெச்சியே’னு கேட்டு, நேத்து ராத்திரி பூராவும் எம் புருசன் அடிச்ச அடி இல்ல... உதைச்ச உதை இல்ல. இன்னிய பொழுதுக்குள்ளார நகை வரலைன்னா, உன்னை உசுரோட வைக்க மாட்டன்’னு சொல்லிட்டான் சார். கண்ணாலத்துக்கு இன்னம் மூணு நாளுதான் இருக்கு. நகையைக் காணாமப்போயிடிச்சுனு சொன்னா, எங்க அண்ணன் பொண்டாட்டி நம்ப மாட்டா. ஒரு வழியும் தெரியாம நிக்கிறேன். என் கை வெறுங்கை சாமி’’ எனச் சொல்லி அழுதாள் தங்கமணி.

``அழுவாதம்மா. இனிமே நகையைத் தேடுறது உன் வேலை இல்ல... கொளஞ்சியப்பரோட வேலை. பிராது மனுவ மட்டும் எழுதி நீ கட்டு. மற்றதை அவன் பாத்துக்குவான். எப்படிப்பட்ட திருடனா இருந்தாலும் கொளஞ்சியப்பரோட கண்ணுலேயிருந்து தப்ப முடியாது.’’

சீட்டு கொடுப்பவனின் பேச்சு, தங்கமணிக்கு லேசாக நம்பிக்கையை உண்டாக்கிற்று. சந்தேகத்தில் ``காரியம் பலிச்சிடுமா சார்?’’ எனக் கேட்டாள்.

``நீ நினச்ச காரியம் ஜெயமாவும். யார்கிட்ட வந்து நீ பிராது மனு கட்டியிருக்க... கொளஞ்சியப்பர். புரியுதா? வேட்டையில அவரை அடிச்சிக்க இந்த ஜில்லாவுல வேற ஆள் இல்ல தெரியுமா? போலீஸ்கிட்ட போவாம எதுக்கு சனங்க இங்க வர்றாங்க? எம்மாம் சீட்டு கட்டியிருக்குது பார்த்தல்ல. பணம் வாங்குறது எதுக்கு... சாமி விஷயத்தை மறந்திடாம இருக்கத்தான்.’’

``சாமி மறந்திடுமா சார்?!’’ - ஆச்சர்யமாகக் கேட்டாள்.

சீட்டு கொடுப்பவனுக்குக் கோபம் வந்துவிட்ட மாதிரி தெரிந்தது. வேகமாகக் கேட்டான்...

``சாமி என்ன, உன்னை மாதிரி ஊட்டுல சும்மாவா குந்தியிருக்கு? உன்னை மாதிரி எம்மாம் பேர் பிராது மனு கட்டுறாங்க. அவங்க காரியத்தை எல்லாம் முடிக்க வேணாமா? ஒவ்வொரு காரியமா முடிச்சிட்டு வரும்போது ஒண்ணு ரெண்டு தப்பிப்போயிடும். மனுஷனுக்கு உள்ளதுதானே சாமிக்கும்? அப்பிடித் தப்பிப்போறதை ஞாபகப்படுத்தத்தான் படிப்பணம் கட்டுறது.’’

``சீட்டுப்பணம் வேற... படிப்பணம் வேறயா?’’

``ஆமாம்மா. குறிப்பிட்ட நாளுக்குள்ள உன் கோரிக்கை நிறைவேறலைன்னா, நீ வந்து படிப்பணம் கட்டினாத்தான் அடுத்து உன் காரியம் நடக்கும்’’ - அதிகாரமாகச் சொன்னான்.

``ஒரு தவணையோடு முடிஞ்சிடுங்களா? கல்யாணத்துக்கு இன்னும் மூணு நாளுதாங்க இருக்கு’’ எனச் சொல்லும்போதே தங்கமணிக்கு அழுகை வந்துவிட்டது.

``பிராது மனு கட்டி பதினெட்டு நாளுக்குள்ளார உன் காரியம் முடிஞ்சிடும். முடியலைன்னா மறுநாளே வந்து படிப்பணம் கட்டணும். அப்படியும் முடியலைன்னா, ரெண்டாவது தவணை படிப்பணம் கட்டணும். சீக்கிரம் மனுவை வாங்கி எழுதிக் கட்டு’’ என்று சொன்னான். அவனுடைய பேச்சும் நடவடிக்கையும் அவசரமாக இருப்பது மாதிரி இருந்தது.

``பதினெட்டு நாளு ஆவுங்களா?’’ - உயிரற்ற குரலில் கேட்டாள் தங்கமணி.

``ஒரு கணக்குத்தானம்மா. சாமிக்கும் ஓய்வு வேண்டாமா... நம்பளை மாதிரி சாமிக்கு ஒரு வேலையா? பதினெட்டு நாள்ல முடியலைன்னா, படிப்பணம் கட்டினாத்தான் காரியம் முடியும். இல்லைன்னா முடியாது’’ என்று சீட்டு கொடுப்பவன் சொன்னதுமே தங்கமணிக்கு ‘பகீர்’ என்று இருந்தது. `முடியாது’ எனச் சொல்கிறானே என மனம் கலங்கிப்போனாள். கெஞ்சுவது மாதிரி கேட்டாள்... ``ஒரே தவணையில காரியம் ஜெயிக்காதா?’’

``முடியும்... முடியும்... ரெண்டாவது தவணைக்கே போவாது. சொல்லும்போது அப்படித்தான் ஒரு பேச்சுக்குச் சொல்வோம். அதுக்குள்ளாரவே காரியம் முடிஞ்சிடும். கவலைப்படாத’’ என்று சொல்லிக்கொண்டே வாசல் பக்கம் பார்த்தான். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் நேராக உள்ளே வந்து ``சீட்டு கட்டணுங்க'' என்று சொன்னார்கள்.

``இப்பத்தான் முதல்முறையா வர்றீங்களா?''

``ஆமாங்க’’ என்று அந்த ஆளும் அந்தப் பெண்ணும் ஒரே குரலாகச் சொன்னார்கள்.

``இருநூறு குடுங்க. குதிரைக்கான கட்டணத்தையும்  குடுங்க’’ எனச் சொல்லி பணத்தை வாங்கினான். லெட்டர்பேடு மாதிரி இருந்த நோட்டில் அச்சிட்டு வைத்திருந்த ஒரு பேப்பரைக் கிழித்துக் கொடுத்தான். பில் புக்கை எடுத்து, ரூபாய் பெற்றுக்கொண்டதற்கான ரசீதை எழுதி, கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான். பிறகு அந்தப் பெண்ணிடம், ``இதுல உங்க கோரிக்கையை எழுதிடுங்க. அப்புறம் நேரா ஐயர்கிட்ட கொண்டுபோய்க் குடுங்க. அவர் சாமி பாதத்துல வெச்சிப் படைச்சித் தருவார். அதை எடுத்துட்டு இங்க வாங்க. நான் நூல் வெச்சுச் சுத்திக் கட்டித் தர்றேன். அப்புறமா எடுத்துட்டுப்போய் சூலத்துல கட்டிடுங்க. காரியம் முடிஞ்சிடும்’’ எனச் சொன்னான்.

``நீங்க இருப்பீங்கல்ல?’’ என அந்தப் பெண் கேட்டாள்.

``இங்கதான் இருப்பேன். போயிட்டு வாங்க’’ எனக் குரலை உயர்த்திச் சொன்னான்.

``வர்றேங்க’’ எனச் சொல்லிவிட்டு அந்த ஆளும் அந்தப் பெண்ணும் வெளியே போனார்கள். அப்போது தங்கமணியைப் பார்த்து சீட்டு கொடுப்பவன் கேட்டான் ``எதுக்கும்மா நின்னுக்கிட்டிருக்க? சீக்கிரம் மனுவை வாங்கிட்டுப்போய் எழுதிக்கொண்டா. லேட்டாவ... லேட்டாவ... உன் நம்பர் பின்னால தள்ளிப்போயிடும். சீனியாரிட்டி பிரகாரம்தான் சாமி வேலை பார்க்கும்’’ எனச் சொல்லிவிட்டு, மேஜை டிராயரில் இருந்த ஒரு டப்பாவை எடுத்து அதில் இருந்த பணத்தை எண்ண ஆரம்பித்தான்.

``லேட்டாவுங்களா?’’ என்று கேட்கும்போதே தங்கமணியின் கண்கள் கலங்கிவிட்டன.

``எங்கிட்ட சீட்டு வாங்குறபடிதான் நான் நம்பரைப் போட்டு சாமிகிட்ட அனுப்புவேன். நான் அனுப்புற வரிசைப்படிதான் சாமி போயி காரியத்தை முடிச்சிட்டு வரும்’’ எனச் சொன்னாலும் அவன் கவனம் எல்லாம் பணத்தை எண்ணுவதில்தான் இருந்தது.

``என் சீட்டை மின்னாடி அனுப்ப முடியாதுங்களா?’’

சீட்டு கொடுப்பவன் லேசாகச் சிரித்தான்.

``இது கவர்மென்ட் நிர்வாகம். எல்லாம் சட்டப்படிதான் நடக்கும். சாமியும் சட்டப்படிதான் நடக்கும். சாமி என்ன உனக்குச் சொந்தமா, இல்ல உன்னோட சாதியா... சாமிக்கும் ஒரு சட்டம் திட்டம் இருக்கு. தனக்குனு உண்டான சட்டத்தை சாமி ஒரு நாளும் மீறாது. அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம். முதல்ல நீ மனுவை எழுதிக் கொண்டு வா’’ - முறைப்பது மாதிரி சொன்னான்.

தங்கமணி உடனே பணத்தை எடுத்துக் கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்டு, லெட்டர்பேடு மாதிரி இருந்த நோட்டில் இருந்து ஒரு பேப்பரைக் கிழித்து, ``இதுல உன் கோரிக்கையை எழுதிக்கொண்டா. விஷயத்த ஒரு வார்த்தை, ரெண்டு வார்த்தையில எழுது. வளவளனு எழுதினா சாமிக்குப் படிக்க நேரம் இருக்காது. எழுதினதும் நேராப் போயி ஐயர்கிட்ட குடு. அவர் மனுவை சாமி பாதத்துல வெச்சிப் படைச்சித் தருவார். அதை எடுத்துட்டு நேரா இங்கே வா. மற்றதை நான் பாத்துக்கிறேன்’’ எனச் சொல்லிவிட்டு பணம் வாங்கியதற்கான ரசீதைக் கொடுத்தான்.

``எனக்கு எழுதத் தெரியாதுங்க. செத்த நீங்களே எழுதிடுங்க’’ என்றாள் தங்கமணி.

``இது உனக்கும் சாமிக்குமுண்டான ரகசியம். இதுல பிறத்தியாள் தலையிடக் கூடாது. அதுவும் நான் கவர்மென்ட் எம்ப்ளாய். சுத்தமா நான் தலையிடவே கூடாது. வேணும்னா வெளியில போய் முகம் அறியாத ஆளாப் பார்த்து எழுதிக்கிட்டு வா’’ - கறாராகச் சொல்லிவிட்டான்.

ஒன்றும் செய்ய முடியாமல் அறையைவிட்டு வெளியே தங்கமணி வரும்போது, ஓர் இளம்பெண்ணும் ஒரு கிழவியும் பிராது மனு வாங்குவதற்காக அலுவலக அறைக்குள் போனார்கள்.

பிராது மனுவை எழுதித் தருவதற்கான ஆளைத் தேட ஆரம்பித்தாள் தங்கமணி. சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வருகிற ஆட்களையும், சாமி கும்பிடுவதற்குப் போகும் ஆட்களையும் பார்த்தாள். யாரிடம் கேட்பது எனத் தயக்கமாக இருந்தது. ஆனாலும் சாமி கும்பிட்டுவிட்டு தனியாக வந்த ஓர் ஆளிடம் விஷயத்தைச் சொன்னாள்.

``பேனா இல்லம்மா’’ என ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு அந்த ஆள் போய்விட்டான். அடுத்து சட்டைப்பையில் பேனா உள்ள ஆளாகத் தேட ஆரம்பித்தாள். ஆட்கள் உள்ளே வந்துகொண்டும், வெளியே போய்க்கொண்டும்தான் இருந்தனர். யாருடைய பையிலும் பேனா இல்லை. பலரிடம் கேட்டுப்பார்த்தாள். எல்லோருமே ‘பேனா இல்ல’ என்ற வார்த்தையைச் சொன்னார்கள். பேன்ட், சட்டை, வாட்ச், மோதிரம், கழுத்தில் செயின், கை செயின் போட்டிருந்தவர்களிடம்கூட பேனா இல்லை. ஆண்களிடமே பேனா இல்லை. பெண்களிடம் எப்படி பேனா இருக்கும் என்ற சந்தேகத்தில், தங்கமணி பெண்களிடம் பிராது மனுவை எழுதித் தரும்படி கேட்கவே இல்லை.

குண்டாக இருந்த ஓர் ஆளிடம் போய், ``செத்த இந்தச் சீட்டை எழுதித் தாங்க’’ எனக் கேட்டாள். சீட்டை வாங்கிப் படித்துப்பார்த்த அந்த ஆள் ``இதை மத்தவங்க எழுதக் கூடாதும்மா’’ எனச் சொல்லி சீட்டைக் கொடுத்துவிட்டு, விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான். அப்போது உண்மையாகவே தங்கமணிக்கு வாய்விட்டு அழவேண்டும் என்ற ஆத்திரம் உண்டாயிற்று. ஆனாலும் அடுத்தடுத்த ஆள் எனத் தேட ஆரம்பித்தாள். கோயிலின் மதில் சுவரை ஒட்டி உட்கார்ந்து இருந்தவனைப் பார்த்தாள். அவனிடம் பேனாவும் இருந்தது. அந்த ஆளை நோக்கிப்போய், பிராது மனுவைக் காட்டி, ``இதை செத்த எழுதித் தர்றீங்களா?’’ எனக் கேட்டாள். அந்த ஆள் வாயைத் திறக்கவில்லை. அதனால், ``எனக்கு எழுதத் தெரியாதுங்க. தெரிஞ்சிருந்தா ஊருலேயிருந்து ஒரு ஆளக் கூட்டியாந்திருப்பேன். ஊருக்குப்போய் எழுதியாரலாம்னாலும் நம்பரு பின்னால போயிரும்’’ என்று சொன்னாள். மனுவை எழுதிக் கட்டிவிட்டால் நகை வந்துவிடும் என நம்பிக்கையோடு பேசினாள்.

தங்கமணி சொன்ன எதையும் காதில் வாங்காத அவன் ``அந்தப் பக்கம் போ’’ என மேற்கில் கையை மட்டுமே காட்டினான். அப்போது அவளுக்கு ஏற்பட்ட எரிச்சலுக்கு அளவே இல்லை. விதியே என மேற்கில் நடக்க ஆரம்பித்தபோது, சரோஜா மீது கோபம் உண்டாயிற்று.

ரோஜா பேச்சைக் கேட்டு வந்தது தவறோ என நினைத்தாள். நகை திருட்டுபோனது தெரிந்ததில் இருந்து தங்கமணி அடித்துக்கொண்டு அழுததை, தெரு சனமே திரண்டுவந்து பார்த்தது. யார் யாரோ சமாதானம் சொன்னார்கள். யாருடைய வார்த்தையும் அவளுடைய காதில் விழவில்லை. ஜோசியம் பார்க்கச் சொன்னார்கள். முட்டை ஓதி புதைக்கச் சொன்னார்கள். எதையுமே அவள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அழுவதையும் நிறுத்தவில்லை. அவளுடைய புருஷன் வேலைக்குப் போய்விட்டு வந்து, ‘என்ன நடந்தது, நகை எப்படிக் காணாமப்போச்சு, வீட்டைப் பூட்டிட்டுப் போனியா?' என ஆயிரம் கேள்விகள் கேட்டான்.

``ஆம்பள சொன்னா கேக்குறியா?’’ எனக் கேட்டு, மாட்டு அடி அடித்தான். அடிவாங்கியதுகூட அவளுக்கு வலிக்கவில்லை. நகை காணாமல்போனதுதான் பெரிய வலியாக இருந்தது. விடிய விடிய அழுதாள். நகை கிடைக்க வேண்டும் என, விடிந்ததுமே குளித்துவிட்டுப் போய் மாரியம்மன் கோயிலில் கற்பூரம் ஏற்றி கும்பிட்டுவிட்டுவந்த தங்கமணியிடம், ``இங்க எதுக்கு அழுதுகிட்டுக் கிடக்கிற? நீ அடிச்சிக்கிட்டும் அழுதுக்கிட்டும் கிடக்கிறதால திருடுபோன நகை தானா வீட்டுக்கு வந்துடுமா? அதுக்கு உண்டான வழிமுறையைச் செஞ்சாத்தான வரும்? நான் சொல்றதைக் கேளு. இப்பவே கிளம்பி நேரா கொளஞ்சியப்பர் கோயிலுக்குப் போயி, ஒரு சீட்டு எழுதிக் கட்டு. நகை தானா வந்துடும்’’ எனச் சொன்னாள்.

அவள் சொன்னதை நம்பாத மாதிரி, ``என்ன சொல்ற சரோஜா... நான் பொறந்த ஊர்ல எல்லாம் பொருள் திருடுபோனா குறி சொல்றவனைக் கூட்டியாந்து உடுக்கை அடிக்கவெச்சுத்தானே குறி கேட்பாங்க?’’ எனக் கேட்டாள். உடனே சரோஜா தன் தம்பி வீட்டில் காணாமல்போன நகை, மூன்று நாட்கள் கழித்துத் திரும்பிவந்து வீட்டுக்குப் பின்புறத்தில் கிடந்த கதையைச் சொன்னாள்.

``நகை காணாமல்போன அன்னிக்கே போய் என் தம்பி கொளஞ்சியப்பர் கோயில்ல சீட்டு கட்டிப்புட்டான். சீட்டு கட்டின சேதியை வந்து ஊர்ப்பூராவும் சொல்லிப்புட்டான். சீட்டுக் கட்டிப்புட்டு வந்த மூணாம் நாளு விடியக்காலையில வீட்டுக்குப் புறத்தால நகை கிடந்து ஆப்புட்டுச்சு. கொளஞ்சியப்பர் சாமிக்குப் பயந்துக்கிட்டு நகையை எடுத்தவங்க கொண்டாந்து தானாவே போட்டுட்டுப் போயிட்டாங்க. நகையைக் கொண்டாந்து போடலைன்னா, கொளஞ்சியப்பர் கை-காலை முடக்கிடுவார்; ஊருக்கு, சேதிக்குப் போகையில கார், லாரி, பஸ்ஸை மோதவெச்சு ஆளை க்ளோஸ் பண்ணிடுவார்னு தெரிஞ்சுத்தான் நகையைக் கொண்டாந்து போட்டுட்டாங்க. அந்த மாதிரி உன் நகையையும் கொண்டாந்து போட்டுடுவாங்க. வெளியூர் திருடனா வந்து திருடிட்டுப் போயிட்டான்? உள்ளூர் ஆளுதான் திருடியிருக்கணும். நீ போய் சீட்டு எழுதிக் கட்டிட்டு வர்ற வழியைப் பார்.’’

சரோஜா சொன்னதைச் சந்தேகப்பட்டது மாதிரி, ``நீ சொல்றது நிசமா?’’ எனக் கேட்டாள் தங்கமணி.

``பொய் சொல்றதால எனக்கு என்ன வரப்போகுது? நாலு மாசத்துக்கு மின்னாடி எந்தம்பி ஊட்டுல எட்டு பவுன் நகை காணாமல்போனது நெசம். சீட்டு கட்டின மூணாம் நாளே நகை திரும்பி வந்து ஊட்டுக்குப் பொறத்தால கிடந்ததும் சத்தியம். இதை நான் சும்மா சொல்லலை. என் மூணு புள்ள மேல சத்தியமா சொல்றேன்’’ எனச் சொல்லி சத்தியம் செய்தாள். சரோஜா பொய் சொல்கிற ஆள் அல்ல. நல்ல மனசுக்காரி என தெருவில் அவளுக்குப் பெயர் இருந்தது. அவள் எதற்காக வந்து தன்னிடம் பொய் சொல்ல வேண்டும் என யோசித்தபடியே ``இந்த நேரம் பார்த்து என் புருசன் இல்லையே?’’ என ஆதங்கப்பட்டாள்.

``இப்ப எதுக்கு உன் புருசனைத் தேடுற?’’ எனக் கோபமாகக் கேட்டாள் சரோஜா.

``நகையைத் திருட்டுக் கொடுத்ததும் இல்லாம ஊர் சுத்தப்போயிட்டியானு கேட்டு அடிக்குமே’’ எனச் சொல்லிக்கொண்டே தங்கமணி அழுதாள்.

``அது வர்றதுக்குள்ளார நீ போயிட்டு வந்திடலாம்... கிளம்பி ஓடு.’’

``கண்ணாலத்துக்கு இன்னும் முணு நாள்தான் இருக்கு. இந்த நேரம் பார்த்து என்னைக் கொலை வாங்கிப்புட்டாங்களே. சாவுற வரைக்கும் பாடுபட்டாலும் ஒரே நேரத்துல என்னால ரெண்டு பவுன் நகை வாங்க முடியாதே. என் பொருளை எடுத்தவங்க நல்லா இருப்பாங்களா...நாதியத்துப்போவாங்களா?’’ - வாய்விட்டு அழுதாள்.

``சொன்னதையே சொல்லிக்கிட்டுக் கிடக்காத. இப்பவே போய் சீட்டைக் கட்டிட்டு வா. ரெண்டு நாள்ல நகை வருதா இல்லியானு பாரு’’ - சத்தியம் மாதிரி அடித்துச் சொன்னாள் சரோஜா.

அவள் வார்த்தைகள் தங்கமணியின் நெஞ்சில் குளிர்ச்சியை உண்டாக்கிற்று. தொடர்ந்து சரோஜா கட்டாயப்படுத்தவே நேற்று சாயங்காலத்தில் இருந்து அழுத களைப்பு, புருஷன் அடித்ததால் ஏற்பட்ட களைப்பு, நேற்று இரவு எதுவும் சாப்பிடாததால் ஏற்பட்ட களைப்பு, நகை திருடுபோனதால் ஏற்பட்ட பதைபதைப்பு என எல்லாம் சேர்ந்து, அவளைத் துவண்டுபோக வைத்தாலும், நகை திரும்பக் கிடைத்துவிட்டால் போதும் என்ற ஆசையில் ``நகை கிடச்சிட்டா உனக்கு கறியும் சோறும் ஆக்கிப்போடுறேன்’’ எனச் சொன்னாள்.

``அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். இப்ப நீ கிளம்பு’’ என சரோஜா சொன்னாள். அவளின் பேச்சைக் கேட்கக் கேட்க, சீட்டு கட்டினால் போதும் நகை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. சரோஜாவிடம் ஐந்நூறு ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு, பஸ்ஸைப் பிடித்து ஓடிவந்தாள்.

ப்படி அலைய வேண்டும் எனத் தெரிந்திருந்தால் சாயங்காலம் வந்திருக்கலாம் என நினைத்தாள். எதை எதையோ நினைத்துக்கொண்டு தேங்காய்க் கடைக்காரனிடம் வந்து, பிராது மனுவைக் காட்டி எழுதித் தரும்படி கேட்டாள்.

அவன் சற்றுத்தள்ளி உட்கார்ந்திருந்த ஆளிடம், ``யோவ்... இந்தச் சீட்டை எழுதிக்குடுய்யா’’ எனச் சொன்னான். ``அவுருகிட்டப் போம்மா’’ என தேங்காய்க் கடைக்காரன் சொன்னான். தங்கமணி அந்த ஆளிடம் போனாள்.

``உட்காரு’’ என அந்த ஆள் சொன்னான். தங்கமணியிடம் இருந்த பிராது மனுவை வாங்கிப் படித்துப் பார்த்தான். சட்டைப்பையில் இருந்து பேனாவை எடுத்தான். பிராது மனுவை தொடையில் வைத்துக்கொண்டு ``என்னா ஊரு?’’ என அவன் ஒரு கேள்விதான் கேட்டான். தங்கமணி தன் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா வைத்தது, அதற்கு அவளுடைய அண்ணன் இரண்டு பவுன் செயின் போட்டது, மஞ்சள் நீராட்டு விழா முடிந்ததும் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வாங்கிய கடனை அடைப்பதற்காக செயினை அடகுவைத்தது, வட்டி கூடிப்போனதால் நகையை மீட்க முடியாமல்போனது, இன்னும் மூன்று நாட்களில் அவன் அண்ணன் மகனுக்குக் கல்யாணம் நடக்க இருப்பது, அண்ணன் மகனுக்கு செயின்போட புருஷன் பேச்சையும் மீறி, கட்டாயப்படுத்தி அரைகாணி நிலத்தை அடமானம்வைத்து செயின் வாங்கியது, நகை திருடுபோனது, அழுது புரண்டது, புருஷன் அடித்தது, சீட்டுக்கட்ட வந்தது... என எல்லா கதைகளையும் ஒரே மூச்சாகச் சொல்லி முடித்தாள்.

அவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்ட அந்த ஆள் நிதானமாகச் சொன்னான், ``நீ சொல்ற கதையை எல்லாம் எழுத முடியாதும்மா. ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தைதான் எழுதலாம். படிக்கிற புள்ளைங்களுக்கு `கோடிட்ட இடத்தை நிரப்புக’னு பரீட்சைவைக்கிற மாதிரிதான் பேப்பரை அச்சடிச்சித் தந்திருக்கானுவ. அதனால நான் கேக்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு’’ என அந்த ஆள் கறாராகச் சொன்னதும் தங்கமணியின் முகம் வாடிப்போயிற்று.

``என்னா ஊரு?’’

``கழுதூருங்க.’’

``புருஷன் பேரு?’’

``அண்ணாமலை.’’

``தெரு பேரு?’’

``கிழக்குத் தெரு.’’

``வட்டம், மாவட்டம் எல்லாம் நானே போட்டுக்கிறேன்’’ எனச் சொல்லிவிட்டு எழுதினான். பிறகு தங்கமணியிடம், ``உன்னோட கோரிக்கை என்ன?’’ எனக் கேட்டான்.

``திருடுபோன நகை, திருப்பி வீடு வந்து சேரணுங்க.’’

``கை-காலை மடக்குறது, முடக்குறது?’’

p72b.jpg

``அதெல்லாம் வேணாம் சாமி. என் பொருள் எனக்கு வேணும்’’ எனச் சொல்லிவிட்டு அழுதாள் தங்கமணி. பிராது மனுவை எழுதி முடித்த அந்த ஆள் பிராது மனுவில் ஓர் இடத்தைக் காட்டி, ``இந்த இடத்துல கையெழுத்துப் போடு’’ எனச் சொல்லி மனுவையும் பேனாவையும் கொடுத்தான்.

நல்ல நாளிலேயே தங்கமணிக்கு தன் பெயரை ஒழுங்காக எழுத வராது. நகை காணாமல்போன கவலையில் எப்படி எழுதவரும்? பேனாவைக் கையில் பிடித்தபோது கை நடுங்கியது. கண்களில் நீர் வந்தது. அவளுக்குத் தன் பெயரைக்கூட எழுத முடியவில்லை. தங்கமணி என எழுதுவதற்குப் பதிலாக முட்டை முட்டையாக ஏதோ கிறுக்கிவைத்தாள். பிராது மனுவையும் பேனாவையும் வாங்கிக்கொண்ட அந்த ஆள், ``இந்தச் சீட்டுல என்னா எழுதியிருக்குனு படிக்கிறேன். கேட்டுக்க. அப்புறம் நீ சொன்னதை நான் எழுதலைன்னு நினைக்கக் கூடாது’’ எனச் சொல்லிவிட்டு பிராது மனுவில் எழுதியிருந்ததைப் படிக்க ஆரம்பித்தான்.

``கொளஞ்சியப்பர் ஸ்ரீமுருகன் சந்நிதி, மணவாளநல்லூர், விருத்தாசலம். நாள் – 18.07.2016 திங்கட்கிழமை. அருள்மிகு கொளஞ்சியப்பர் சுவாமியின் திவ்விய சமூகத்துக்கு கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கழுதூர் கிராமம், கிழக்குத் தெரு, அண்ணாமலை மனைவி வீட்டுக்குடித்தனம் தங்கமணி ஆகிய நான் சுவாமி பாதம் பணிந்து எழுதிக்கொண்ட பிராது விண்ணப்பம். சுவாமி, அடியேன் 18.07.2016 தேதியில் தங்கள் சமூகம் பிராது மனு செய்கிறேன். எனது வீட்டில் இரண்டு பவுன் செயின் களவு போய்விட்டது. எனது பொருளை எனக்குச் சேரும்படி செய்யவேண்டுமாய் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன். எனது கோரிக்கைகள் நிறைவேறிய பிறகு, மேற்படி பிராது மனுவை படிப்பணம் கட்டித் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். தேவரீர் எனது பொருளை என்னிடம் சேர்க்கும்படியும், குடும்ப சகிதம் எங்களுக்கு சகல நலன்களும் தந்து என்றும் காத்தருளும்படியும் பாதம் பணிந்து வேண்டுகிறேன். இப்படிக்கு தங்கமணி.’’

தங்கமணிக்கு முழு திருப்தியாக இருந்தது. பிராது மனுவை வாங்கிக்கொண்டாள். அப்போதுதான் நினைவுக்கு வந்த மாதிரி மடியில் இருந்த மஞ்சள் ரசீது சீட்டை எடுத்துக் கொடுத்தாள். அதை வாங்கிப் பார்த்த அந்த ஆள், ``இது ஒண்ணும் இல்லம்மா. நீ பணம் கட்டினதுக்கு ரசீது. பிராது கட்டணம், சம்மன் கட்டணம், தமுக்குக் கட்டணம், படிப்பணம் கிலோமீட்டருக்கு இவ்வளவுனு போட்டிருக்கு. அவ்வளவுதான்’’ எனச் சொல்லி ரசீதைத் திரும்பக் கொடுத்தான். ``ஐயர், மத்தியான சாப்பாடுக்குப் போயிடுவார். மணி ஆகிடுச்சி... ஓடு’’ எனச் சொன்னான்.

``வர்றேங்க’’ எனச் சொல்லிவிட்டு பிராது மனுவைப் பெரிய தங்கக்கட்டியைத் தூக்கிக் கொண்டுபோவது மாதிரி எடுத்துப்போனாள். ஐயர் மனுவை வாங்கி அர்ச்சனை செய்து உடனே கொடுத்தார். மனுவை எடுத்துக்கொண்டு வேகமாக சீட்டு கொடுப்பவருடைய அறைக்கு வந்தாள். ஒரு நொடிகூடத் தாமதம் இல்லை. பிராது மனுவை வாங்கி சரியாகச் சுருட்டி, நூல்போட்டுக் கட்டி, சூலத்தில் கட்டிவிடுவதற்கு ஏற்ற மாதிரி நூலையும் இணைத்து மஞ்சள், குங்குமம் எல்லாம் தடவித் தந்தான். ஐயரிடமோ, சீட்டு கொடுப்பவரிடமோ ஒரு நொடி தாமதம் இல்லை. இரண்டு பேரும் அப்புறம் எனச் சொல்லவில்லை. போன உடனேயே வேலை முடிந்தது நல்ல சகுனம். நகை திரும்பக் கிடைத்துவிடும் எனத் திடமாக நம்பினாள். மனுவைக் கொண்டுவந்து இடம் பார்த்து, காற்று அடித்தாலும், மழை பெய்தாலும் அவிழ்ந்துவிடாத அளவுக்குக் கெட்டியாகக் கட்டினாள். தரையில் விழுந்து கும்பிட்டாள். ``இன்னமுட்டும் நான் மத்தவங்க பொருளுக்கு ஆசப்பட்டது இல்லை.

அடுத்தவங்க பொருளைத் தொட்டது இல்லை. என் பொருளை எடுத்துக்கிட்டாங்க. என் பொருளைக் கொண்டாந்து எங்கிட்ட சேர்த்துடு. உன்னை குலசாமியா எண்ணிக் கும்புடுறேன். கண்ணாலத்துக்கு முணு நாள்தான் இருக்கு. நகை போடலன்னா எங்க அண்ணன் பொண்டாட்டி என்ன விட மாட்டா. நகை வராட்டி என் புருசன் என்ன உசுரோட வைக்க மாட்டான். நீதான் என்னைக் காப்பத்தணும் கொளஞ்சியப்பா’’ - மனம் உருக வேண்டிக்கொண்டாள். சீட்டு கட்டிய சூலத்தைத் தொட்டுக் கும்பிட்டாள். அப்போது அவள் இடதுகை பக்கம் பல்லி கத்தியது. பல்லி கத்தியச் சத்தத்தைக் கேட்டதும் நிச்சயம் நகை கிடைத்துவிடும் என நம்பினாள். அந்த நம்பிக்கையில் மனநிறைவுடன் எழுந்து பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

பஸ் ஏறுகிற இடத்தில் பிராது மனுவை எழுதிக் கொடுத்த ஆள் நின்றுகொண்டிருந்தான். தங்கமணியைப் பார்த்ததும், ``என்னம்மா வேலை முடிஞ்சிதா?’’ எனக் கேட்டான்.

``ஆமாங்க. சீட்டைக் கட்டிப்புட்டேன்.’’

``இங்கே யாரு உன்னை அனுப்புனது?’’

``ஏங்க அப்படிக் கேக்குறீங்க?’’

``சும்மாதான் கேட்டேன்’’ என்று அந்த ஆள் சொன்னவிதம் தங்கமணிக்குச் சந்தேகத்தை உண்டாக்கிற்று.

``எதுக்கு ஒரு மாரியா கேக்குறீங்க?’’ எனக் கேட்டாள்.

``கொளஞ்சியப்பர் சாந்தமான சாமி. ஊட்டுச்சாமி. நீ சொல்ற விஷயத்துக்கு எல்லாம் நெய்வாச வேடப்பர், ஆவட்டி ஆகாய கருப்பு, பொயனப்பாடி ஆண்டவர், மேல்மலையனூர் சுடலை, திருவக்கரக் காளி, கொஞ்சிக்குப்பம் ஐய்யனார்... மாதிரியான சாமிக்கிட்டத்தான் போவணும். ஏன்னா, அதெல்லாம்தான் கோவக்கார சாமிங்க.’’

``அப்படியா... தெரியாமப்போச்சே’’ தங்கமணியின் குரலில் முன்னர் இருந்த உற்சாகம் வடிய ஆரம்பித்தது. முகமும் வாடிப்போயிற்று.

``பூசணிக்கா, பரங்கிக்கா, எலுமிச்சங்கா குத்துற சாமிவோ எல்லாம் சாந்தமான சாமிவோ. இதுக்கு எல்லாம் ஆக்ரோஷம் கம்மி. கோழி காவு, கெடா வெட்டு, பன்னிவெட்டுனு ரத்தக் காவு, குவார்ட்டரு பாட்டுலு கேக்குற சாமிவகிட்ட போனாத்தான் சட்டுனு வேல ஆகும். அந்தச் சாமிவுளுக்குத்தான் வேகம் அதிகம். பம்ப, உடுக்கைனு அடிச்சா சாமிக்கு பவர் கூடிடும்’’ எனச் சொல்லிவிட்டு அந்த ஆள் லேசாகச் சிரித்தான். அதோடு கிழக்கில் இருந்து பஸ் வருகிறதா எனப் பார்த்தான்.

``இதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. இதை முன்னாடியே சொல்லக் கூடாதா? எங்க ஊரு சனம் எல்லாம் இந்தக் கோயிலுக்குத்தானே போவச் சொன்னாங்க. அப்ப என் காரியம் நடக்காதுங்களா?’’ என அழுதுவிடுவது மாதிரி கேட்டாள். சீட்டு கட்டப் போன விஷயம் தெரிந்தாலே, அவள் புருஷன் அடிப்பான். சீட்டு எழுதிக் கொடுத்தவன் சொன்னதைச் சொன்னால் கூடுதலாக அடிப்பானே என்ற கவலை தங்கமணிக்கு. முதலில் வீடு போய்ச் சேர வேண்டும் என்ற கவலைதான் அவளுக்குப் பெரிதாக இருந்தது. தன் ஊருக்குப் போகிற பஸ் வருகிறதா எனப் பார்த்தாள்.

அப்போது அந்த ஆள் சொன்னான், ``கொளஞ்சியப்பார் எல்லாம் சைவ சாமி. அதுக்கு எல்லாம் வீரம் கம்மி. இந்தச் சுத்துவட்டாரத்துலயே வேடப்பர்தான் நல்ல விளம்பரத்துல இருக்கார். மெட்ராஸ் வரைக்கும் ஃபேமஸ். இருக்கிறதுலயே பெஸ்ட் சாமி. ‘உன்னை நம்பி வந்துட்டேன். நீதான் காப்பாத்தணும்’னு சொல்லி, ஒரு கோழியைக் காவுகொடுத்து ஒரு குவார்ட்டர் பாட்டில ஊத்தி உசுப்பேத்திவிட்டுட்டா போதும். அன்னைக்கி ராத்திரிக்கே போயி எந்த வேலையா இருந்தாலும் முடிச்சிட்டு வந்துடுவான். ஆடு-மாடு காணாமப்போறது, நகைநட்டு காணாமப்போறதுக்கு எல்லாம் அவன்கிட்டத்தான் போவணும்’’ - அந்த ஆள் சொல்லச் சொல்ல தங்கமணிக்கு தன் நகை கிடைக்காதோ என்ற கவலை அதிகரித்தது. சரோஜாவும் சரி, ஊரில் உள்ள மற்றவர்களும் சரி, `வேடப்பர் கோயிலுக்குப் போ’ என ஒருவரும் சொல்லவில்லையே என யோசித்தாள். அந்த ஆள் பொய்ச் சொல்கிறானோ என்ற சந்தேகம் வந்தது. சீட்டு கொடுப்பவன் நம்பிக்கையோடு சொன்னானே என யோசித்தாள். ஒவ்வொன்றாக யோசிக்க யோசிக்கக் குழப்பம்தான் கூடியது.

``அப்பன்னா என் பொருளுக்கு என்னாதாங்க வழி?’’

``ஒரு வாரம் பத்து நாளு பாரு. காரியம் நடக்கலைன்னா, நேரா வேடப்பர் கோயிலுக்குப் போ. பூசாரிகிட்ட விஷயத்தைச் சொல்லு. அவன் உடனே பூசையைப் போட்டு, உடுக்கையை அடிச்சி, வேடப்பரைக் கூப்புட்டுக் குந்தவெச்சிருவான். ‘என்னை நம்பி வந்துட்டாங்க, நான் ஒன்னை நம்பி காசை வாங்கிட்டேன். நீ போய் கச்சிதமா காரியத்தை முடிச்சிட்டு வா. இல்லைன்னா உன் பேர் கெடுதோ இல்லையோ, என் பேர் கெட்டுப்போயிடும்’னு சொல்லி வேடப்பரை உருவேத்திவிட்டு அனுப்பிடுவான். உங்க காரியம் முடிஞ்சிடும். உன் கோரிக்கையை மட்டும் வெச்சிட்டு நீ போ. மத்ததை அவன் பாத்துக்குவான்’’ என அந்த ஆள் அக்கறையாகச் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் தங்கமணிக்கு நேராக வேடப்பர் கோயிலுக்கே போயிருக்கலாம் எனத் தோன்றியது. நாளைக்குப் போயிப் பார்க்கலாமா என்ற யோசனையோடு ``அங்க எம்மாங்க செலவு ஆவும்?’’ எனக் கேட்டாள்.

``வேடப்பரையும், மத்த பரிவார சாமிகளையும் அவன்தான பராமரிக்கணும். அதுக்கு என்னா செலவோ அதைத்தான் பூசாரி கேட்பான்.’’

``முன்னாடியே தெரிஞ்சிருந்தா போயிருப்பேன்’’ எனச் சொன்ன தங்கமணி ``போலீஸுக்குப் போவலாங்களா?’’ எனக் கேட்டாள். அதற்கு அந்த ஆள் பதில் சொல்லாமல் சிரித்தான்.

``என்னாங்க சிரிக்கிறீங்க?''

``போலீஸுக்குப் போறதைவிட போன பொருளு போனாபோவட்டும்னு விட்டுடலாம். பூசாரிவோ ஒரு மடங்கு ஏமாத்துனா, போலீஸ் ஒரு லட்சம் மடங்கு ஏமாத்தும். வேடப்பருக்கு உண்டான பரிகாரத்தை மட்டும் நீ செஞ்சா போதும். மத்ததை அவன் பாத்துக்குவான். வெள்ளைக் குதிரை வெச்சியிருக்கான். கையில அருவா வெச்சியிருக்கான். அவன் பவருக்கு முன்னாடி போலீஸ்லாம் சும்மாதான். வெறும் தூசி.’’

``அப்ப என் பொருளு என்னாதான் ஆவுறது?’’ - அழுதாள் தங்கமணி.

``ஒரு எட்டு நாளு பொறு. பொருளு வரலைன்னா. நான் சொல்ற எடத்துக்குப் போ. பொருளு தானா வந்துடும். உன்னோட குடிசாமி உன் வீட்டுக்கு வரலை. அதனால்தான் பொருளு திருடு போயிருக்கு’’ எனச் சொன்னதோடு, வேடப்பர் கோயிலுக்குப் போகிற வழியையும், எந்தக் கிழமையில் போக வேண்டும் என்பதையும் அந்த ஆள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தங்கமணி ஊருக்குப் போகிற டவுன்பஸ் வருவது தெரிந்தது.

``நீங்க சொல்றபடியே செய்றங்க’’ எனச் சொல்லிவிட்டு பஸ்ஸுக்குக் கை காட்டினாள். பஸ் நின்றதும் ஏறிக்கொண்டாள்.

பஸ்ஸில் உட்கார்ந்திருந்த பிரியங்கா, ``இங்க வா அத்தை’’ எனச் சொல்லி தங்கமணியைக் கூப்பிட்டுப் பக்கத்தில் உட்கார இடம்தந்தாள்.

``எங்கே போயிட்டு வர்ற?’’ என அக்கறையாகக் கேட்டாள். தங்கமணி தெருவுக்கு அடுத்தத் தெருக்காரிதான் பிரியங்கா. காலேஜில் படிக்கிறாள். பிரியங்கா `எங்கே போயிட்டு வர்றே?’ எனக் கேட்டதுதான் தாமதம், தன் மகளுக்கு மஞ்சள் நீராட்டு வைத்தது, அதற்கு அவளுடைய அண்ணன் இரண்டு பவுன் செயின் போட்டது, மஞ்சள் நீராட்டு விழா முடிந்ததும், மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வாங்கிய கடனை அடைப்பதற்காக செயினை அடகுவைத்தது, வட்டி கூடிப்போனதால் நகையை மீட்க முடியாமல்போனது, இன்னும் மூன்று நாளில் அண்ணன் மகனுக்குக் கல்யாணம் நடக்க இருப்பது, அதற்கு முறமை செய்ய செயின் வாங்குவதற்கு நிலத்தை அடமானம்வைத்தது, நகை திருடுபோனது, புருஷன் அடித்தது, கொளஞ்சியப்பர் கோயிலுக்குச் சீட்டு கட்ட வந்தது, சீட்டு கட்டியது, பஸ்ஸ்டாண்டில் சீட்டு எழுதித் தந்தவன் சொன்னது... என எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொன்னாள்.

p72c.jpg

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட பிரியங்கா ``பொருளும் போயி, ஒரு நாளு பொழப்பும் போயி, கைப்பணமும் போச்சா?’’ எனச் சொன்னதும் தங்கமணிக்குக் கோபம் வந்துவிட்டது.
`` யாரு சொல்றதைத்தான் கேக்குறது... நம்புறது? எல்லாரும் சொல்றதைப் பார்த்தா என் பொருளு கிடைக்காதுபோல் இருக்கே. காரியத்துக்கு இன்னும் மூணு நாளுதான் இருக்கு. அதுக்குள்ளார நான் செத்திடுறதுதான் நல்லது’’ எனச் சொல்லி, கைப்பிடி கம்பியில் நெற்றியை மோதி மோதி தங்கமணி அழ ஆரம்பித்தாள்!

vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.