Jump to content

சட்டச் சிக்கல்களுடன் அரசுக்கு எதிராக மஹிந்த தலைமையில் பாதயாத்திரை


Recommended Posts

சட்டச் சிக்கல்களுடன் அரசுக்கு எதிராக மஹிந்த தலைமையில் பாதயாத்திரை

LIVE BLOG
thumb_Mahinda-rally2.jpg
  • 2016-07-28 09:33:01

    ஒன்றிணைந்த எதிரணியினர் அரசுக்கெதிரான தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக ஒழுங்கு செய்துள்ள ஆர்பாட்டப் பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியிலுள்ள சர்வமத ஸ்தானங்களுக்கு விஜயம் செய்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர்.

    thumb_715da393-c9b6-46c3-803b-d775e61751
  • 2016-07-28 09:08:02

     

    நீதிமன்றங்களின் உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

     

  • 2016-07-28 08:51:43

    அரசுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணியை ஆரம்பிப்பதில் சட்டச் சிக்கல்கள் காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

    தற்போது பேராதெனிய ஹெட்டம்பே விகாரைக்கு முன்பாக கூடியுள்ள பாதயாத்திரையில் ஈடுபடுவோரை அவ்விடத்தை விட்டு அகலுமாறு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/

பாதயாத்திரை  ; சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்ட மஹிந்த தலைமையிலான எதிரணியினர்

 

ஒன்றிணைந்த எதிரணியினர் அரசுக்கெதிரான தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக ஒழுங்கு செய்துள்ள ஆர்பாட்டப் பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியிலுள்ள சர்வமத ஸ்தானங்களுக்கு விஜயம் செய்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர்.

715da393-c9b6-46c3-803b-d775e61751fa.jpg

கண்டி கட்டுகலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்த போது கோவில் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி கோவிந்த சாமி மற்றும் நாகலிங்கம் நிறுவனத் தலைவர் இரத்தினசபாபதி மோகன் ஆகியோர் வரவேற்றதுடன் நிர்வாக அறங்காவலர் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷவை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினர் விசேட பூஜையிலும் கலந்துகொண்டனர்.

93371cfa-e016-4edd-90a9-0e50b2e53038.jpg

இக்குழுவில் பாராளுமன்ற அங்கத்தவர்களான தினேஷ் குணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே, கெஹெலியா ரம்புக்வெல்ல, விமல் வீரவன்ச, லொகான் ரத்வத்தை, உதய கம்மன்பில, பவித்ராதேவி வன்னியாரச்சி, சீ.பீ.ரத்நாயக்கா, ரோகித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் திஸ்ஸ வித்தாரண  மற்றும் மதுமாதவ அரவிந்த உடபட பலர் கலந்து கொண்டனர்.

9ed2e351-f398-4cbe-8423-3ca69363a383.jpg

885ade6f-48d6-402d-94e8-8698b94fffa9.jpg

97dd7bf8-e1ac-4157-a514-b627315819e7.jpg

8c3376bf-16a1-48cd-8a6c-3612fd45ca0c.jpg

http://www.virakesari.lk/article/9507

Link to comment
Share on other sites

பேராதெனிய பாலத்துக்கு அருகிலிருந்து  பாதயாத்திரையை ஆரம்பிக்க தீர்மானம் 

 

 

( லியோ நிரோஷ தர்ஷன் )

பேராதெனியவில் உள்ள ஹெட்டம்பே விகாரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Mahinda-Rajapaksa.jpg

பாதயாத்திரையை கண்டி நருக்கு வெளியில் அமைந்துள்ள பேராதெனிய பாலத்துக்கு அருகில் இருந்து ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/9511

Link to comment
Share on other sites

ஆரம்பமானது பாதயாத்திரை ; போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம்

 

(லியோ நிரோஷ தர்ஷன் )

அரசுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரை சற்றுமுன்னர் பேராதெனியவில் இருந்து ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Fdfdfdf0.jpg

இந்நிலையில் குறித்த பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுவருவதால் பிலிமத்தலாவை பகுதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/9513

Link to comment
Share on other sites

எமது பாதயாத்திரையை எவராலும் தடுக்க முடியாது ; நாமல் எம்.பி.

 

அரசுக்கு எதிராக கொழும்பை நோக்கி முன்னெடுத்துள்ள எமது பாதயாத்திரையை எவராலும் தடுக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

Namal-fdflldfd.jpg

பாரிய சவாலுக்கு மத்தியில் இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளோம். ஆனால் பாதயாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் அதனை உடைத்தெறிந்துள்ளோம். 

 

மக்களின் பலத்துடன் வீதிக்கு இறங்கியுள்ளோம். ஆனால் ரணில் விக்கிரமசிங்க மக்களின் ஆதரவை தேட இப்போது முயற்சிக்கின்றார்.

அரசாங்கம் நாட்டைப் பிளவுபடுத்தி சுயாதீன தன்மையை சர்வதேசத்திடம் ஒப்படைத்து நாட்டை படுபாதாளத்துக்குள் தள்ளியுள்ளது.

முதலில் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/9517

Link to comment
Share on other sites

2016-07-28 12:34:46

பாரிய சவாலுக்கு மத்தியில் இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளோம். ஆனால் பாதயாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சித்தது. அரசுக்கு எதிராக கொழும்பை நோக்கி முன்னெடுத்துள்ள எமது பாதயாத்திரையை யாராலும் தடுக்க முடியாது என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

ஜனசட்டன ஆரம்பம்...
 
28-07-2016 02:48 PM
Comments - 0       Views - 4

article_1469697643-24.jpg

ஒன்றிணைந்த எதிராணியின் 'ஜனசட்டன' பாதயாத்திரை,  பேராதனை  கெட்டம்ப விஹாரைக்கு அருகிலிருந்து இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் இப்பாதயாத்திரையில் கலந்துகொண்டனர்.  (மொஹொமட் ஆஸிக்)

article_1469697657-21.jpg

article_1469697667-22.jpg

article_1469697675-23.jpg

article_1469697690-25.jpg

- See more at: http://www.tamilmirror.lk/178135/ஜனசட-டன-ஆரம-பம-#sthash.tVZRmFIu.dpuf
Link to comment
Share on other sites

thumb_Mahinda-rally-3.jpg

16-07-28 15:56:31

கடுகண்ணாவ பள்ளத்தை வந்தடைந்தது பேரணி : மாவனெல்ல எல்லையில் பொலிஸார் குவிப்பு  

பாதயாத்திரையிலீடுபட்டோரின் அருவருக்கத்தக்க செயல் 

பாதயாத்திரையின் போது விகாரைக்கு முன்னால் உள்ள வீதியால் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி மீது பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

thumb_3dc9a20c-4f1d-445a-9b80-d63a9120b5

2016-07-28 17:42:03

பாதயாத்திரையின் முதலாவது நாள் மாவனெல்ல கனேதென்ன பகுதியில் நிறைவுக்கு வந்துள்ளது.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.