Jump to content

அரசியல் மயப்படுத்தபட்ட சிந்தனை


Recommended Posts

அரசியல் மயப்படுத்தபட்ட சிந்தனை

 

 

யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளி­டையே ஏற்­பட்ட மோதல் வட­ப­கு­தியில் மட்­டு­மல்­லாமல் நாட­ளா­விய ரீதியில் பெரும் பர­ப­ரப்பு சம்­ப­வ­மாகப் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. ஊட­கங்­களில் இது, தலைப்புச் செய்­தி­யாக இடம்­பெற்­றி­ருந்­தது. அர­சியல் மட்­டங்­க­ளிலும் புத்­தி­ஜீ­விகள் மட்­டத்­திலும் வாதப் பிர­தி­வா­தங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. 

இந்தச் சம்­ப­வ­மா­னது இரண்டு இனங்­களைச் சேர்ந்த இளை­ஞர்­க­ளி­டையே ஏற்­பட்­டி­ருந்த ஒரு மோத­லாக இருந்த போதிலும்,இன அடை­யா­ளத்தை முதன்­மைப்­ப­டுத்­திய அர­சியல் நோக்கில் இதனை சீர்­தூக்கிப் பார்த்­ததன் விளை­வாக அது ஊதிப் பெருத்து, பெரி­ய­தொரு விவ­கா­ர­மா­கி­யது. பல்­க­லைக்­க­ழகம் ஒன்றில் மாண­வர்­க­ளி­டையே ஏற்­பட்ட ஒரு சிறிய மோதல் சம்­ப­வ­மாக இது பார்க்­கப்­ப­ட­வில்லை. மாறாக, இன­வாத அர­சியல் நோக்கில் இது பார்க்­கப்­பட்­ட­தனால், இன­வா­தத்தைத் தூண்­டு­கின்ற ஒரு நட­வ­டிக்­கை­யா­கவும் முளை­விடப் பார்த்­தி­ருந்­தது  என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

பொது­வா­கவே பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளி­டையே கருத்து வேற்­று­மைகள் ஏற்­ப­டு­வ­துண்டு. அது விவா­த­மாக, வாய்த்­தர்க்­க­மாக மாறி கைக­லப்பில் போய் முடி­வதும் சாதா­ரண நிகழ்­வாகும். அதிலும் குறிப்­பாக மொழி தெரி­யாத நிலையில் தமிழ் மற்றும் சிங்­கள மாண­வர்­க­ளி­டையே தப்­ப­பிப்­பி­ரா­யங்கள் தோன்­று­வதும் அது கைக­லப்பில் போய் முடி­வதும் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இருந்து வெளி­யேறி, பல்­வேறு துறை­களில் பணி­யாற்­று­ப­வர்­களின் பல்­க­லைக்­க­ழக அனு­ப­வ­மாக உள்­ளது. 

அவ்­வாறு அனு­ப­வப்பட்டவர்கள் அந்த மோதல்­களை அந்­தந்த இடங்­க­ளி­லேயே முடித்­துக்­கொண்டு தமது கல்­வியில் கவ­னத்தைச் செலுத்­தி­யி­ருந்­ததை இப்­போது நினை­வு­கூர்­கின்­றார்கள். சில சம்­ப­வங்­களில் மோதல்­க­ளின்­போது காய­ம­டைந்­த­வர்கள் வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சில தினங்கள் தொடர்ச்­சி­யாக சிகிச்சை பெற வேண்­டிய நிலை­மைக்கு ஆளா­கி­யி­ருந்த போதிலும், அது மாண­வர்­க­ளுக்­கி­டை­யி­லான கைக­லப்­பா­கவே பதி­வா­கி­ய­தா­கவும், அவர்கள் கூறு­கின்­றார்கள். ஒரு போதும் அதனை அப்­போது எவரும் அர­சி­ய­லாக்­கவோ அல்­லது இனங்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல்­க­ளா­கவோ பெரி­து­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை என்றும் அவர்கள் குறிப்­பி­டு­கின்­றார்கள். 

ஆனால், யாழ் பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞான பீடத்தில் இடம்­பெற்ற மாண­வர்­களின் கைக­லப்புச் சம்­ப­வ­மா­னது, பல்­க­லைக்­க­ழக வளா­கத்தைக் கடந்து அர­சியல் வெளியில் அக்­கறை கொள்­கின்ற அள­வுக்குப் பெரி­தாக்­கப்­பட்­டி­ருப்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். 

புது­முக மாண­வர்­களை வர­வேற்கும் நிகழ்வில் முதல் நிகழ்­வாக துணை­வேந்தர் உள்ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களை நடை பவ­னி­யாக வைபவம் நடை­பெறும் மண்­ட­பத்­திற்கு மேள­தாளம் நாதஸ்­வ­ரத்­துடன் அழைத்துச் செல்­வதே விஞ்­ஞான பீடத்தின் வழ­மை­யாகும். ஆயினும் இந்த வர­வேற்பு நிகழ்வில் கண்­டிய நட­னத்­தையும் சேர்க்க வேண்டும் என்று சிங்­கள மாண­வர்கள் விடுத்த கோரிக்கை மறுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், பிடி­வா­த­மாக கண்­டிய நடனம் ஆடு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டதன் விளை­வா­கவே மாண­வர்­க­ளி­டையே மோதல்கள் ஏற்­படக் கார­ண­மா­கி­யது. 

சமூக முன்­னேற்­றத்­திற்­கான

கல்­விசார் ஆய்வு மையம்

பல்­க­லைக்­க­ழகம் என்­பது அந்­தந்தப் பிர­தே­சங்­களின் துறை சார்ந்த சமூக வளர்ச்­சிக்­கான ஆய்வு மைய­மாகும். அது, கல்வி, சமய, கலை, கலா­சாரம், சமூகம், விஞ்­ஞான தொழில்­நுட்பம், பொரு­ளா­தாரம், வர்த்­தகம், மருத்­துவம், பொறி­யியல், தொழில்­துறை என பரந்­து­பட்ட ரீதியில் இன ரீதி­யான குறு­கிய பார்­வைகள், கொள்­கை­களைக் கடந்து, அந்­தந்தப் பிர­தே­சத்தின் சமூக முன்­னேற்­றத்­திற்­கான ஆய்­வு­களை மேற்­கொள்­கின்ற ஒரு உயர் கல்வி நிலை­ய­மாகும். 

இதன் கார­ண­மா­கத்தான், நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. எனினும், கொழும்பு மற்றும் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கங்கள் இதற்கு விதி­வி­லக்­காக முழு நாட்­டுக்கும் பொது­வா­ன­தாகச் செயற்­பட்டு வரு­கின்­றன என்­பது குறிப்பிடத்­தக்­கது. 

ஒன்­றுடன் ஒன்று நெருங்­கிய தொடர்பைக் கொண்டு பல்­க­லைக்­க­ழக மானி­யங்­கள் ஆணைக்­குழு, கல்வி உயர்­கல்வி அமைச்சு என்­ப­வற்றின் வலைப்­பின்­னலின் ஒரு அம்­ச­மாக செயற்­படும் வகையில் பல்­கலைக்­க­ழ­கங்கள் கட்­ட­மைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 

அதன் கார­ண­மா­கவே, பல்­க­லைக்­க­ழ­கங்கள் தேசிய கல்வி நிலை­ய­மாக, பல்­லின சமூ­கங்­க­ளையும் சார்ந்த மாண­வர்­களை உள்­ளீர்த்து, அவர்­களின் உயர்­கல்­விக்­கான வாய்ப்­புக்­களை வழங்கி வரு­கின்­றன. 

யாழ். பல்­க­லைக்­க­ழகம் தமிழ் பிர­தே­சத்­திற்­கு­ரிய கலை கலா­சா­ரங்­களைப் பிர­தி­ப­லிக்­கின்ற அதே­நே­ரத்தில் அவற்றைப் பேணி, பின்­பற்­று­வ­தற்கும், உயர் கல்வித் தேவை­களின் அடிப்­ப­டையில் ஏனைய இனத்­த­வர்­களின் கலை கலா­சாரம் தொடர்­பி­லான ஆய்­வு­க­ளையும் கற்றல் நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­வ­தற்­கு­ரிய வாய்ப்­புக்­களைக் கொண்­ட­தா­கவும் செயற்­பட்­டுள்­ளது. தொடர்ந்தும் செயற்­பட்டு வரு­கின்­றது. 

முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப்­பி­ர­தே­சத்தில் இந்தப் பல்­க­லைக்­க­ழகம் அமைந்­தி­ருக்­கின்ற போதிலும், விஞ்­ஞானம், மருத்­துவம் உள்­ளிட்ட முக்­கிய துறை­களில் நாட்டின் அனைத்து இன மாண­வர்­க­ளையும் உள்­ளீர்த்து அவர்­க­ளுக்­கான உயர்­கல்வி வாய்ப்பு அங்கு ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதைக் காணலாம். 

இன ரீதி­யான அடை­யா­ளத்­தையும் கலை கலா­சா­ரத்­தையும் மாத்­திரம் பேணு­வ­தாக அல்­லது அவற்றைப் பின்­பற்­று­வ­தாக யாழ். பல்­கலைக்கழகம் செயற்­பட்­டி­ருக்­கு­மே­யானால், அங்கு சிங்­கள மாண­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­க­மாட்­டாது. தற்­போ­தைய நிலையில் சிங்­கள மாண­வர்­களே  யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் விஞ்­ஞ­ான பீடத்தில் பெரும்­பான்­மை­யாக இருக்­கின்­றார்கள் என்­பது, அந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பன்மைத் தன்­மைக்கு சிறந்த சான்­றாகும். 

என்ன நடந்­தது?

இந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லேயே புது­முக மாண­வர்­களை வர­வேற்­ப­தற்­கான நிகழ்வின் போது சிங்­கள மாண­வர்­க­ளுக்கும் தமிழ் மாண­வர்­க­ளுக்கும் இடையில் ஒரு கைக­லப்பு ஏற்­பட்டு, அது பின்னர் மாண­வர்கள் மத்­தியில் இன ரீதி­யாக ஏற்­பட்ட மோத­லாக, இன­வாத அர­சியல் தீவி­ர­வாதப் போக்­கு­டை­ய­வர்­க­ளினால் பிர­தி­ப­லிக்­கப்­பட்­டி­ருந்­தது. அது தொடர்பில் அர­சியல் நலன் சார்ந்த பிர­சா­ரத்­திற்­கான அறிக்­கைகள், கருத்து வெளிப்­பா­டுகள் என்­பன வெளி­யா­கி­யி­ருந்­தன. 

யுத்த மோதல்கள் கார­ண­மாக சிங்­கள மாண­வர்கள் பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் உள்­ளீர்ப்­பது நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. யுத்தம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, யுத்­தத்­திற்கு முன்னர் இருந்­தது போன்று சிங்­கள மாண­வர்­களும் கல்வி நெறி­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­பட்­டனர். இந்த நிலையில் புது­முக மாண­வர்­களை வர­வேற்கும் நிகழ்வில் தமிழ் கலா­சார முறை­மைக்கு அமை­வாக நாதஸ்­வரம் மற்றும் மேள­தா­ளத்­து­ட­னேயே, துணை­வேந்தர் உள்­ளிட்ட விருந்­தி­னர்­களை வர­வேற்று அழைத்துச் செல்­வது வழ­மை­யாக இருந்து வந்­துள்­ளது.  

இம்­முறை விஞ்­ஞான பீடத்தில் நடை­பெற்ற வர­வேற்பு நிகழ்வில் கண்­டிய நடன நிகழ்வை விருந்­தி­னர்­களை வர­வேற்­கும்­போது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பிடி­வாதம் கார­ண­மா­கவே பிரச்­சினை ஏற்­பட்­டது. 

மேடை நிகழ்வில் சிங்­கள மாண­வர்­களும் பங்­கேற்க வேண்டும் என்­ப­தற்­காக கண்­டிய நடனம் உள்­ளிட்ட, அந்த மாண­வர்­களின் விருப்­பத்­திற்கு அமை­வாக கலா­சார நிகழ்ச்­சி­களை உள்­ள­டக்­கு­வ­தற்­கான சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்டு வந்­துள்­ளது. இதற்­க­மை­வாக மேடை நிகழ்வில் கண்­டிய நட­னத்தை வைத்துக்  கொள்­ளலாம் என்றும் சிங்­கள மாண­வர்­க­ளுக்குக் கூறப்­பட்­டி­ருந்­தது. 

ஆயினும் தமிழர் கலா­சா­ரத்­திற்கு அமை­வாக மேள­தாளம், நாதஸ்­வ­ரத்­துடன் துணை வேந்தர் வர­வேற்று ஊர்­வ­ல­மாக அழைத்துச் செல்­லப்­பட்­ட­போது, ஏற்­க­னவே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த பிடி­வா­த­மான இர­க­சிய ஏற்­பாட்­டிற்கு அமை­வாக கண்­டிய நடனக் கலை­ஞர்கள் ஊர்­வ­லத்தில் தோன்­றினர். சிங்­கள மாண­வர்­களின் அத்­து­மீ­றிய இந்தச் செயற்­பாட்­டை­ய­டுத்தே மாண­வர்­க­ளி­டையே மோதல்கள் வெடித்­தன.

யாழ். பல்­க­லைக்­க­ழகம் மட்­டு­மல்ல. ஏனைய பிர­தே­சங்­களில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களும் அந்­தந்தப் பிர­தே­சத்­திற்­கு­ரிய கலை, கலா­சாரப் பண்­பு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்துச் செயற்­பட்டு வரு­வதைக் காணலாம். இதனை களனி பல்­க­லைக்­க­ழ­கத்தின் பேரா­சி­ரியர் கல்­கத்த தர்­மா­னந்த தேரர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். 

'யாழ். பல்­க­லைக்­க­ழகம் தமிழர் கலா­சா­ரத்­திற்கு முன்­னு­ரிமை கொடுப்­பதை தவ­றான செயற்­பா­டாகக் கருத முடி­யாது. ஏனைய பிர­தே­சங்­களில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்கள் உதா­ர­ண­மாக களனி பல்­கலைக்­க­ழகம், பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழகம் என்­பன அந்­தந்தப் பிர­தே­சத்து கலை கலா­சா­ரத்தைப் பிர­தி­ப­லிப்­ப­தாக அமைந்­துள்­ளன. அவற்றை யாரும் தவ­றான செயற்­பா­டாகக் கருத முடி­யாது' என அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

அதே­நேரம் யுத்­தத்தினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சத்தில் அமைந்­துள்ள யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் சிங்­கள மாண­வர்கள் தமது கலை கலா­சார நடை­மு­றை­களைப் புகுத்த முயல்­வது, யுத்தப் பாதிப்­புக்கு உள்­ளாகி பல பிரச்­சி­னை­க­ளுக்கு இன்னும் முகம் கொடுத்து வரு­கின்ற தமிழ் மாண­வர்கள் தங்கள் மீது கலா­சார ஆக்­கி­ர­மிப்பு நடத்­து­வ­தாக உணர்­வ­தற்கும், அதனால் அவர்கள் வெறுப்­ப­டை­வ­தற்கும் கார­ண­மா­கலாம் என்­ப­தையும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார் 

ஆக்­கி­ர­மிப்புச்

செயற்­பாடு

சிங்­கள மாண­வர்கள் தமது கலை கலா­சா­ரத்தைப் பேணு­வ­தற்­கு­ரிய வகையில் யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. விஞ்­ஞான பீடம் மட்­டு­மல்­லாமல் மருத்­துவ பீடம் உள்­ளிட்ட ஏனைய பீடங்­களில் கல்வி பயிலும் சிங்­கள மாண­வர்­களும் தமிழ் மாண­வர்­க­ளைப்­போன்று சுதந்­தி­ர­மாகத் தமது கலை கலா­சார நடை­மு­றை­களைக் கைக்­கொள்­வ­தற்கும் பின்­பற்­று­வ­தற்கும் உரிய சுதந்­தி­ரமும் வாய்ப்பும் அளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஏனைய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் இத்­த­கைய நடை­மு­றையே பின்­பற்­றப்­ப­டு­கின்­றது. சிங்­களப் பிர­தே­சங்­களில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களில் கல்வி பயிலும் தமிழ் மாண­வர்கள் அவர்­க­ளது கலா­சார அடை­யா­ளங்­களைப் பேணு­வ­தற்கும் அவற்றைப் பின்­பற்­று­வ­தற்கும் உரிய சந்­தர்ப்­பமும் வாய்ப்பும் அளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அந்த வகை­யி­லேயே யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் சிங்­கள மாண­வர்­க­ளுக்­குரிய உரி­மைகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 

சிங்­கள மாண­வர்கள் வெசாக் பண்­டி­கையைக் கொண்­டா­டு­வ­தற்கும், அதற்­கு­ரிய அலங்­கா­ரங்­களை மேற்­கொள்­வ­தற்கும் யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் எந்தத் தடையும் கிடை­யாது. சிங்­கள மாண­வர்கள் வெசாக் பண்­டி­கையை சிறப்­பாகக் கொண்­டா­டு­வ­தற்கு தமிழ் மாண­வர்கள்  ஒத்­து­ழைக்­கின்ற சிநே­க­பூர்­வ­மான நிலைமை அங்கு நில­வு­கின்­றது.  

நிலைமை இவ்­வா­றி­ருக்க நுனிப்புல் மேய்ந்த வகையில் சிங்­கள மாண­வர்கள் தமது கலை கலா­சாரத்தைப் பின்­பற்­று­வ­தற்கு பல்­க­லைக்­க­ழக நிர்­வாகம் வசதி செய்து தர வேண்டும் என கொழும்பில் உள்ள சில அர­சி­யல்­வா­திகள் யாழ். பல்­க­லைக்­க­ழக மோதல்கள் தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்­றார்கள். இது அபத்­த­மா­னது. அத்­துடன் யாழ். பல்­கலைக்கழ­கத்தின் உண்­மை­யான நிலை­மை­களை திரி­பு­ப­டுத்தி சிங்­கள மக்கள் மத்­தியில் இன­வாத ரீதியில் விப­ரீ­த­மான தப்­ப­பிப்­பி­ரா­யத்தை உரு­வாக்­கு­வ­தற்கு வழி­யேற்­ப­டுத்­து­வ­தற்கே துணை­பு­ரியும் என்­பதை மறந்­து­விடக் கூடாது. 

நாட்டின் ஏனைய பல்­க­லைக்­க­ழ­கங்­களில் தமிழ் மாண­வர்­களின் கலா­சார உரிமை மதிக்­கப்­ப­டு­வதைப் போன்றே யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் சிங்­கள மாண­வர்­களின் கலா­சார உரிமை மதிக்­கப்­ப­டு­கின்­றது. அந்த வகையில் இது­கால வரை­யிலும் அவர்­க­ளுக்குக் கௌரவம் அளிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. இந்த நிலையில் திடீ­ரென ஏன் இந்த மோதல்கள் ஏற்­பட்­டன என்­பது ஆழ்ந்த சிந்­த­னைக்­கு­ரிய விட­ய­மா­கும.

சிங்­கள மக்­க­ளுக்கு தாங்கள் இந்த நாட்டின் பெரும்­பான்மை மக்கள் என்ற எண்ணம் அவர்­க­ளு­டைய மனங்­களில் தீவி­ர­மாக முதன்­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சி­யல்­ம­யப்­பட்ட இந்தச் சிந்­த­னையை சிங்­கள தீவிர அர­சி­யல்­வா­தி­களும் சிங்­கள பௌத்த மத­வா­தி­களும் சிங்­களப் பொது­மக்கள் மத்­தியில் தீவி­ர­மாக வளர்த்­து­விட்­டி­ருக்­கின்­றார்கள். 

இந்தச் சிந்­த­னையை யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­க­ளா­கிய வடக்­கிலும் கிழக்­கிலும் இரா­ணு­வத்­தி­னரும் பொலி­சாரும் தமது நாளாந்த வாழ்க்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றார்கள். இதற்கு பல­மான கட்­ட­மைப்பு ஒன்றை முன்­னைய அர­சாங்கம் பாது­காப்பு அமைச்சின் ஊடாக உரு­வாக்­கிவிட்டிருக்­கின்­றது. அந்த வகை­யி­லேயே தமிழ்ப் பிர­தே­சங்­களில் பௌத்த விஹா­ரை­களை அமைப்­ப­திலும் புத்தர் சிலை­க­கைள நிர்­மா­ணிப்­ப­திலும் அவர்கள் தீவி­ர­மாகச் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். ஒரு சில இடங்­களில் இந்து ஆல­யங்கள் அமைந்­துள்ள வளா­கத்­தி­லேயே புத்தர் சிலை­களை நிர்­மா­ணித்து, அந்த இடங்­களை புரா­தன விஹா­ரைகள் என பெயர் சூட்­டி­யி­ருப்­பதைக் காணலாம். 

மன்னார் மாவட்­டத்தில் திருக்­கே­தீஸ்­வரம், முருங்கன், வவு­னியா மாவட்­டத்தில் கன­க­ரா­யன்­குளம் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் கொக்­கிளாய் போன்ற இடங்­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள புத்தர் சிலை­க­ளுடன் கூடிய பௌத்த விஹா­ரைகள் இதற்கு சிறந்த உதா­ர­ணங்­க­ளா­கவும், கண்­கூ­டான ஆதா­ரங்­க­ளா­கவும் திகழ்­கின்­றன. 

அது மட்­டு­மல்ல சிங்­கள மக்­களின் முக்­கி­ய­மான பண்­டி­கை­யா­கிய வெசாக் பண்­டி­கை­யின்­போது, வட­மா­காணம் பௌத்­தர்கள் அதி­க­மாக வாழ்­கின்ற தென்­ப­கு­தி­யை­விட ஒப்­பீட்­ட­ளவில் தோர­ணங்­க­ளினால் அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருக்கும். இரா­ணு­வத்­தினர், பொலி­ஸாரின் முகாம்கள், அலு­வ­ல­கங்கள் மட்­டு­மல்­லாமல், சிங்­க­ள­வர்கள் பணி­யாற்றும் அலு­வ­ல­கங்­களை வெசாக் தோர­ணங்­களும் குடில்­களும், வெசாக் கூடு­களும் மூடி­யி­ருப்­பதைக் காணலாம். வெசாக் பண்­டிகைக் காலத்தில் வீதி­களில் சென்றால், முழு­மை­யா­ன­தொரு சிங்­களப் பிர­தே­சத்தின் உள்ளே பிர­யாணம் செய்­கின்ற உணர்வே மேலிடும். அந்த அள­விற்கு வெசாக் பண்­டி­கையின் அடையாளம் ஆக்கிரமித்திருப்பதைக் காணலாம்.  வெசாக் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது என்ற உணர்வை ஏற்படுத்துவதாக இந்த அலங்காரங்களை ஏற்பாடு செய்தவர்கள் நினைக்கலாம். ஆனால், இங்குள்ள மக்கள் தாங்கள் பௌத்த மத பண்டிகைச் செயற்பாட்டின் ஊடாக மத ரீதியாக ஆக்கிரமிக்கப்படுவதாகவே உணர்கின்றார்கள்.இனந்தெரியாத ஒரு அச்சத்திற்கும், என்ன செய்வதென்று தெரியாததொரு கையாலாகாத நிலைமையில் சிக்கிக் கொண்டிருப்பதான உணர்வுக்குமே அது அவர்களை உட்படுத்தியிருக்கும்.

மொத்தத்தில் நாங்களே பெரும்பான்மையானவர்கள், எங்களுக்கே எல்லா உரிமைகளும் உண்டு என்ற மனப்பாங்கில் உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத நிலையில் இத்தகைய காரியங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சிங்கள பேரினவாத அரசியல் சிந்தனையும் செயற்பாடும் இதற்கு வெளியில்  தெரியாத வகையில் நன்கு திட்டமிட்ட நிலையில் பின்னணியில் இருப்பதை இலகுவில் கண்டு கொள்ள முடியாது. 

இத்தகைய எண்ணப்பாங்கின் வெளிப்பாடாகவும், அத்தகைய போக்கில் தோய்ந்துள்ள தன்மையுமே யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் நடத்தைக்கு முக்கிய காரணமாகும். சொந்த விருப்பத்திற்கு அல்லது சுயமாக சிந்தித்து அவர்கள் செயற்பட்டதன் விளைவாக அந்த சம்பவத்தை நோக்க முடியாது. அவர்களை அறியாமலேயே அவர்களின் மனங்களில் கலந்துவிடப்பட்டுள்ள பேரினவாத முலாம் தோய்ந்த பெரும்பான்மைத் தன்மையின் அப்பட்டமான வெளிப்பாடாகவே அதனை நோக்க வேண்டியிருக்கின்றது. 

சிங்கள இளைஞர் சமூகத்தில் பண்பட்ட தெளிந்த சிந்தனை உருவாகும் வரையில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்க முடியாது, யுத்தத்தின் பின்னரான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக எவ்வளவுதான் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் அல்லது முயற்சிகள் மேற்கொண்டாலும், சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தாத வரையில் அவை வெற்றி பெறும் என்று கூறுவதற்கில்லை.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=27/07/2016

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.