Jump to content

65–வது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது பெண் போலீஸ் உள்பட 2 பேர் காயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
201607260110543204_Chennai-AirportGlass-

ஆலந்தூர், 

சென்னை விமான நிலையத்தில் 65–வது முறையாக கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது. இதில் பெண் போலீஸ் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

உள்நாட்டு – பன்னாட்டு முனையங்கள்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த முனையங்களில் உள்ள மேற்கூரைகள், கண்ணாடி கதவுகள் உள்ளிட்டவை அடிக்கடி உடைந்து விழுகின்றன. இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 22 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 20 முறை தடுப்பு கண்ணாடிகளும், 5 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒரு முறை விளக்கு கண்ணாடி, ஒரு முறை பயண அறிவிப்பு டி.விகள் என இதுவரை 64 முறை உடைந்து விழுந்து உள்ளன.

65–வது முறையாக.....

இந்த சம்பவங்களில் 11 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 65–வது முறையாக கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பன்னாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் 17–வது நுழைவு வாயில் பகுதி அருகே உள்ள 8 அடி உயரம் 4 அடி அகலம் கொண்ட கண்ணாடி கதவு திடீரென உடைந்து விழுந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்படை பெண் போலீஸ் மற்றும் தற்காலிக ஊழியர் காயம் அடைந்தனர்.

விமான அதிகாரிகள் விசாரணை

உடனே அவர்களுக்கு விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றி விமான நிலைய ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அதனை தொடர்ந்து உடைந்து விழுந்த கண்ணாடி சிதறல்கள் அகற்றப்பட்டன. இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2016/07/26011054/Chennai-AirportGlass-door-was-broken.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமான நிலைய கட்டிட காண்டிராக்ட் எடுத்தது யார் என்பதை அறிந்து அவரிடம் அல்லவா விசாரணை நடத்தவேண்டும்.
அதை விட்டு அப்பாவி ஊழியர்களிடம் விசாரணை நடத்தி என்ன பயன். அந்த கண்டிராக்கடர் ஒரு முக்கிய அரசியல் பிரமுகருக்கு 
வேண்டியவராக கூட இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழரசு said:

65–வது முறையாக.....

இந்த சம்பவங்களில் 11 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 65–வது முறையாக கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சும்மா சொல்லக்கூடாது.....கண்ணுக்கை  எண்ணைவிட்டு எண்ணிக்கொண்டிருக்கிறாங்க:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் இந்த  காண்டிராக்ட்காரனிடம் தாஜ்மகாலை கட்ட சொல்லி குடுக்கவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சின்ன விடயத்துக்கெல்லாம் இனி விமான நிலயத்தை உடைச்சுக் கட்ட முடியாது.... அந்தக் கன்ராக்டரிடம் கெஞ்சி மன்றாடியாவது கொஞ்சம் ஹெல்மட்டுகள் வாங்கி இருக்கிறவை, வாறவை, போறவை எல்லோருக்கும் குடுக்கலாம்....!

அடுத்து எந்த இடத்தில் உடையும், எவ்வளவுபேர் காயம் அடைவார்கள் என்றூ க்விஸ் போட்டியும் வைக்கலாம்...! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.