Jump to content

வெலிக்கடை படுகொலை தினம் இன்று அனுட்டிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
 
வெலிக்கடை படுகொலை தினம் இன்று அனுட்டிப்பு

ஸ்ரீலங்கா அரசின் முழுமையான அணுசரனையுடன் 33 வருடங்களுக்கு முன்னதாக தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலையின் அதி உச்சகொடூரங்களில் ஒன்றான கறுப்பு ஜூலையின் போது இடம்பெற்ற வெலிகடை சிறைச்சாலை படுகொலை நாள் இன்று தமிழர்களால் மிக உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களில் ஒன்றான வடக்கில் தமது ஆதிக்கத்தை விஸ்தரித்திருந்த ஸ்ரீலங்கா அரச படையினரில் 13 பேரின் உயிரைப் பறித்ததற்காக பழிதீர்க்கும் வகையில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முழுமையான அனுசரணைக்கு அமைய 1983 ஆம் ஆண்டுஜுலை 23 ஆம் திகதி முதல் ஜூலை இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.

1983ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதியான 33 வருடங்களுக்கு முன்னர் இன்றைய போன்ற ஒரு நாளில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அதி உயர் பாதுகாப்புக்கள் நிறைந்த வெலிகடைக் சிறைச்சாலைக்குள் குட்டிமணி தங்கத்துறை உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகள் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

ஜூலை 23 ஆம் திகதி முதல் தொடர்ந்த இந்தத் திட்டமிட்ட இனப்படுகொலைகளின்போது மூவாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், தென்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் அவர்களது அனைத்து உடமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் வடக்கிற்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

அதேவேளை ஆயிரக்கணக்கான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி புலம்பெயர் நாடுகளிலும் தஞ்சமடைந்தனர். இதற்கமைய அன்று முதல் ஆரம்பமான தமிழ் மக்களின் புலம்பெயர்வு இன்றும் தொடர்கின்றன. இதற்கமைய புலம்பெயர் தமிழ் சமூகம் என்ற ஒரு சமூகம் உருவாவதற்கும் ஏதுவாக இந்த கறுப்பு ஜூலை இனப்படுகொலையே வித்திட்டதுடன், அன்று முதல் தொடரும் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரும் போராட்டங்களும் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை நிலைநாட்டுவதாகக் கூறி ஆட்சிபீடம் ஏறிய 83 ஜூலை கலவரத்தின் போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் இதுவரை கறுப்புஜூலை இனப்படுகொலைகள் குறித்து நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

குறிப்பாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதன் ஊடாகவே நாட்டில் நிரந்தர சமாதானத்தையும், அபிவிருத்தியையும் அடைய முடியும் என்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தொடர்ச்சியாக கூறியும் வருகின்றனர்.

எனினும் 33 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா அரசிற்கு சர்வதேச அரங்கில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய 83 கறுப்பு ஜூலை இனப்படுகொலை தொடர்பிலோ, 2009 இல் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பிலோ இதுவரை நல்லாட்சி அரசாங்கம் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

இந்த நிலையிலேயே வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகளை கண்டித்தும், வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தும் இன்று யாழ்ப்பாணத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய வெலிக்கடை படுகொலைதினம் இன்று காலை நல்லூர் ஆலயமுன்றலில் சுடர்கள் ஏற்றப்பட்டு நினைவு கூரப்பட்டது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சிசதரன் உட்பட பலர் கலந்துகொண்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகள் உட்பட கறுப்பு ஜுலை மற்றும் பல்வேறு இனப்படுகொலை நிகழ்வுகளில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகள் மற்றும் மக்களை நினைவு கூர்ந்தனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல், குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன், ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன், தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம், சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம், செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன், அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம், அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன், ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம், சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப்பிள்ளை சுரேஷ்குமார், சின்னதுரை அருந்தவராசா, தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார், மயில்வாகனம் சின்னையா, சித்திரவேல் சிவானந்தராஜா, கணபதிப்பிள்ளை மயில்வாகனம்,தம்பு கந்தையா, சின்னப்பு உதயசீலன், கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன், கிருஷ்ணபிள்ளை நாகராஜா,கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம், அம்பலம் சுதாகரன், இராமலிங்கம் பாலச்சந்திரன்,பசுபதி மகேந்திரன்,கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன், குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம், மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார், ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார், ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம், கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார், யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன், அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம், அந்தோணிப்பிள்ளை உதயகுமார், அழகராசா ராஜன், வேலுப்பிள்ளை சந்திரகுமார், சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் ஆகியோர் முதல்நாள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதேவேளை தெய்வநாயகம் பாஸ்கரன், பொன்னம்பலம் தேவகுமார், பொன்னையா துரைராசா, குத்துக்குமார் ஸ்ரீகுமார், அமிர்தநாயகம் பிலிப்குமாரகுலசிங்கம், செல்லச்சாமி குமார், கந்தசாமி சர்வேஸ்வரன், அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை, சிவபாலம் நீதிராஜா, ஞானமுத்து நவரத்தின சிங்கம், கந்தையா ராஜேந்திரம், டாக்டர் ராஜசுந்தரம், சோமசுந்தரம் மனோரஞ்சன், ஆறுமுகம் சேயோன், தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன், சின்னதம்பி சிவசுப்பிரமணியம், செல்லப்பா இராஜரட்னம், குமாரசாமி கணேசலிங்கன் ஆகியோர் இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டனர்.kuddymania

- http://www.asrilanka.com/2016/07/25/32367http://www.asrilanka.com/2016/07/25/32367
Link to comment
Share on other sites

இலங்கை: வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தமிழ் கைதிகளுக்கு நினைவஞ்சலி

 

இலங்கையில் கடந்த 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு ஜுலை கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த 53 தமிழ் சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்து இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

160725122947_vellikadai_512x288_bbc_nocr

 வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தமிழ் சிறை கைதிகளுக்கு நினைவஞ்சலி

இந்தக் கலவரத்தின் போது, குட்டிமணி, தங்கத்துரை ஆகிய இரண்டு பேர் உள்ளிட்ட தமிழ் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களையும், ஏனைய வன்முறைகளின் போது கொல்லப்பட்ட சுமார் மூவாயிரம் பொதுமக்களுக்கும் இந்த நிகழ்வின்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.

வன்முறையாளர்களினால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலை என வர்ணித்திருந்தார்.

அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத அளவில் இடம்பெற்ற கறுப்பு ஜுலை வன்முறைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உள்ளிட்ட சிங்களத் தவைர்கள் பின்னர் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரியிருந்தனர். அத்துடன் இத்தகைய வன்முறைகள் மீண்டும் இடம்பெறாது என உறுதியளித்தனர்.

இந்த அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜி லிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர, கறுப்பு ஜுலை கலவரத்தின் பின்னரும் தமிழர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு வடிவங்களில் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு, அவற்றுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றத்தக்க வகையில் அரசியல் தீர்வு ஒன்று விரைந்து காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160725_black_july

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை நினைவு கூற இவர்களுடன் சம்பந்தப்பட்ட ஆக்களையே காணவில்லை. சிறீ சபாரட்னத்தையும்.. உமா மகேஸ்வரனையும்.. அமிர்தலிங்கத்தையும்.. நீலன் திருச்செல்வத்தையும் நினைவு கூற சிலர் முண்டி அடிக்கினம். 

வெலிகடையில் சிங்கள இனவெறிக் காடைகளின் இனப்படுகொலைக்கு பலியான உறவுகளுக்கு நினைவு வணக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெலிகடையில் சிங்கள இனவெறிக் காடைகளின் இனப்படுகொலைக்கு பழியான உறவுகளுக்கு நினைவு வணக்கம். 

Link to comment
Share on other sites

இனவெறி அரசின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டு இனப்படுகொலையில் பலியான உறவுகளுக்கு நினைவு வணக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெலிகடையில் சிங்கள இனவெறிக் காடைகளின் இனப்படுகொலைக்கு பலியான உறவுகளுக்கு நினைவு வணக்கம். 

4 hours ago, nedukkalapoovan said:

இவர்களை நினைவு கூற இவர்களுடன் சம்பந்தப்பட்ட ஆக்களையே காணவில்லை. சிறீ சபாரட்னத்தையும்.. உமா மகேஸ்வரனையும்.. அமிர்தலிங்கத்தையும்.. நீலன் திருச்செல்வத்தையும் நினைவு கூற சிலர் முண்டி அடிக்கினம். 

வெலிகடையில் சிங்கள இனவெறிக் காடைகளின் இனப்படுகொலைக்கு பலியான உறவுகளுக்கு நினைவு வணக்கம். 

இதிலிருந்தே தெரியும்

அவர்களின் நோக்கம்  என்னவென்று......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் இந்த சம்பவம் நடந்தபோது கொழும்பு எரிந்து கொண்டிருந்தது. புரக்கோட்டை முழுவ்தும் எரிந்து ஒரே புகைமண்டலமாக‌ காட்சியத்தது. கண்கள் எரிந்தன  உணவுப்பொருட்களுக்கு மிகவும் தட்டுப்பாடக போய்விட்டது. 
எரியும் கடைக்குள் புகுந்து வெளியே கிடந்த சில மீன் டின்களை சாப்பிட ஒன்றும் இல்லாமல் எடுத்துக் கொண்டு வந்தேன்.

சிங்கள காடைகளின் இனவெறியாட்டத்தின் உச்சகட்டம்
கோவில் அர்ச்சகரை தூக்கி கொதிக்கும் தார் பீப்பாயினுல் போட்டு குரூரமாக கொன்றார்கள்.  

ஆனாலும் பல நல்ல சிங்களவர்கள் பாதுகாப்பளித்தார்கள்.

அம்மம்மா மடியில் படுத்துக்கொண்டு இந்த கொலை சம்பவங்களை கதையாக கேட்கும்போது மிகவும் பயமாக இருக்கும். 

குட்டிமணி ஒரு சிறந்த கரேத்தே வீரர் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.
கடைசி நேரத்தில் கூட தன்னுடைய விலங்கிட்ட கைகளினால் தன்னை கொல்ல வந்தவர்களை கழுத்தோடு பிடித்து நசித்து கொன்றுள்ளார். இதனாலேயே அவரை குரூரமாக கண்களை தேண்டி எடுத்து கொன்றுள்ளார்கள்.

இறந்த அனைவருக்கும் அஞ்சலிக‌ள்!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழியான உறவுகளுக்கு நினைவு வணக்கம்.

12 hours ago, colomban said:

இதனாலேயே அவரை குரூரமாக கண்களை தேண்டி எடுத்து கொன்றுள்ளார்கள்.


 

இன்னுமொரு காரணம் ,நீதிமன்றத்தில்  தனது கண்களை பார்வையற்றோருக்கு கொடுக்கும்படி சொன்னவர்,அதன் மூலம் தான் ஈழத்தை பார்க்கமுடியும்  என்று, அந்த கோபமும் ஒரு காரணம்..

Link to comment
Share on other sites

தமிழ்த் தேசிய வீரர்கள் தினம், நாளை வவுனியாவில்
தமிழ்த் தேசிய வீரர்கள் தினம், நாளை வவுனியாவில்
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை மற்றும் குட்டிமணி உட்பட்ட 53 பேரின் நினைவாக அனுஷ்டிக்கப்படும் தமிழ்த் தேசிய வீரர்கள் தினம், நாளை (புதன்கிழமை) வவுனியாவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
 
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில், வவுனியா நகர மண்டபத்தில் நாளை மாலை 3 மணிக்கு இந் நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ளது.
 
இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

http://onlineuthayan.com/news/15503

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.