Jump to content

முரளியின் செயற்பாடுகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கவலை


Recommended Posts

முரளியின் செயற்பாடுகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கவலை

 
 

முரளியின் செயற்பாடுகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கவலை

 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரான, இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் செயற்பாடுகள் குறித்து வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முரளிதரனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.

அணி முகாமையாளர் சரித் சேனாநாயகவை கடுமையாக சாடியமை, அனுமதியின்றி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் அவுஸ்திரேலிய அணியினருக்கு பயிற்சியளித்தமை போன்றனவே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாகும்.

எதுஎவ்வாறு இருப்பினும், இது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவிக்கவுள்ளதாக திலங்க சுமதிபால சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் முரளிதரன் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த மூன்று சந்தர்ப்பங்களில் அவரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பாதுகாத்ததாகவும், பயிற்சியாளராக அவரது தொழில் குறித்து பிரச்சினை இல்லை எனவும் எனினும் ஒழுக்க ரீதியான பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவரது பெயரில் அந்தக் கிராமத்தில் இடம்பெறவுள்ள விளையாட்டுப் போட்டியொன்றுக்காக, சர்வதேச விளையாட்டு மைதானத்தில், எதிரணியினருக்கு பயிற்சியளிப்பது, குறித்து மிகவும் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முரளிதரனின் பெயருக்கு அது கலங்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=81951&mode=lead

Link to comment
Share on other sites

பந்து முரளி பந்துவீசினாலும் அவுஸ்திரேலியாவை வீழ்த்தும் இலங்கை

 

பந்து முத்தையா முரளிதரன் வந்து பந்து வீசினாலும் அதற்கு தாக்கு பிடிக்க கூடியவாறு இலங்கை அணியை தயார் செய்வோம் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

Untitlsdadaed-1.jpg

நேற்று (24) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முரளிதரன் அவுஸ்திரேலியா அணிக்கு பயிற்சி அளிப்பது அவரது தொழில் ரீதியாக சரியானதாகவே காணப்படுகின்றது.  

எனினும் சொந்த நாட்டிற்கு  எதிராக தனது மண்ணில், அதுவும் அவரது சொந்த இடமான கண்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு சுழல் பந்து பயிற்சி அளிப்பதானது எமது இதயம் உடைவது போல்  இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முரளிதரன் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள் இலங்கை கிரிக்கெட் சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கை  அணியின் முகாமையாளர் சரித் சேனாநாயக்கவை திட்டியமைக்காக முரளிதரனுக்கு எதிராக முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதேவேளை அனுமதியில்லாமல்   பல்லேகலை மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டது தொடர்பில் முறைப்பாடடொன்று  கிடைத்துள்ளதோடு, அதனை  அவுஸ்திரேலியா கிரிக்கட் சபைக்கு அறிவித்துள்ளதாகவும்  திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டியில் பத்து முரளிகள் கொண்டு பந்து வீசினாலும் அவுஸ்திரேலியாவை இலங்கை அணி வீழ்த்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/9378

Link to comment
Share on other sites

நான் துரோகியென்றால் கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி - முரளி கூறும் அதிர்ச்சி தகவல்

 

அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

m3.jpg

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலியா அணிக்கு நான் போட்டிக்கு முன்னதான 10 நாட்களுக்கு மாத்திரமே பந்துவீச்சு ஆலோசகராக பணிபுரிகிறேன். அவுஸ்திரேலிய அணி என்னை முழுத்தொடருக்கும் ஆலோசகராக பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.ஆனால் நான் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. காரணம்  இலங்கை அணி விளையாடும்போது என்னால் அவுஸ்திரேலிய அணியின் உடைமாற்றும் அறையிலிருந்து போட்டியை ரசிக்க முடியாது. ஏனென்றால் நாட்டின் மீது நான்  கொண்டுள்ள அன்பு அளப்பரியது.

நாட்டுக்காக பலவற்றை நான் செய்துள்ளேன். ஆனால் இன்று துரோகி என கூறுகின்றனர். ஒன்றை தெரிந்துக்கெள்ள வேண்டும். நான் துரோகி இல்லை கிரிக்கெட் சபைதான் மிகப்பெரிய துரோகி.

2011 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஒருதடவை மாத்திரமே என்னை இலங்கை அணி ஆலோசகராக செயற்படும்படி கேட்டுக்கொண்டது. நான் அப்போது என்னால் முழு நேரமும் அதனை செய்யமுடியாது. என்னால் இயன்ற நேரங்களில் நாட்டுக்காக நான் அதை செய்கிறேன் என கேட்டுக்கொண்டேன்.

இப்போது அவுஸ்திரேலிய அணிக்கு ஆலோசகராக செயற்படும்போது, என் மீது குற்றங்களை சுமத்துகின்றனர். அது பிழையான ஒன்றாகும்.

அவுஸ்திரேலிய அணிக்கு முன்னாள் என்னை இலங்கை அணி அழைத்திருந்தால் நாட்டுக்காக நான் அதனை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு  ஆலோசகராக செயற்பட்டிருப்பேன். அதனை கிரிக்கெட் சபை செய்யவில்லை. இப்போது குறை கூறுவது தேவையற்றது.

நாட்டில் பல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களை விடுத்து வெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து பயிற்சி கொடுக்கின்றனர். அதுமாத்திரமின்றி நிறத்தை பார்த்து  பயிற்சி அளிப்போருக்கு பணம் அளிக்கின்றனர். 

நான் நாட்டை நேசிக்கின்றேன்,  நாட்டு மக்களை நேசிக்கின்றேன் என்னை துரோகியென்பதை விட   உள்ளுர் வீரர்களுக்கு வாய்ப்பை தராத  கிரிக்கெட் சபையே துரோகியாக செயற்படுகின்றது என தெரிவித்துள்ளார்

http://www.virakesari.lk/article/9405

Link to comment
Share on other sites

10 நாட்களில் அவுஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்ய முடியுமாயின், நானே உலகிலேயே தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்

 

10 நாட்களில் அவுஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்ய முடியுமாயின், நானே உலகிலேயே தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்

முத்தையா முரளிதரன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுகின்றமை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் திலங்க சுமதிபால மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக முத்தையா முரளிதரன் செயற்படுகின்றார்.

இந்த போட்டித்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரான காலப்பகுதிக்காக மாத்திரம் இந்த பதவியை தாம் ஏற்றுக் கொண்டதாக இன்று ஸ்போட்ஸ் பெஸ்டுக்கு தெரிவித்தார்.

முத்தையா முரளிதரன்

மூன்று மாதங்களுக்கு முன்னர் முடியுமா என கேட்டார்கள். 10 நாட்களுக்கு மாத்திரம் முடியும் எனவும் போட்டிகளில் பயிற்சியளிக்க முடியாது எனவும் கூறினேன். இலங்கைக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணியினரின் ஓய்வு அறையில்
இருக்க முடியாது என்பதால் நான் போட்டிகளின்போது பயிற்சியளிக்க முடியாது என கூறினேன். போட்டிக்கு முன்னரான தயார்படுத்தலுக்கு பயிற்சியளிக்க முடியும் என தெரிவித்தேன்.

திலங்க சுமதிபால

எமது தனித்துவம் மற்றும் ஒழுக்கம் தொடர்பான பிரச்சினையே இங்குள்ளது. வோர்ன் – முரளி தொடர் என நாம் பெயரிட்டுள்ளோம். இரண்டு நாடுகளுக்காகவும் இருந்த சந்தர்ப்பத்தையே நான் முரளிக்காக ஒதுக்கியுள்ளோம். தமது ஊரில் இலங்கை அணிக்கு எதிராக பயிற்சியளிப்பது தொடர்பில் முரளி சுய மதிப்பீட்டில் ஈடுபட வேண்டும். தொழில்சார் விடயம் ஒருபுறம் இருக்க இந்த செயற்பாடு எமக்கு மன சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது.

முத்தையா முரளிதரன்

இவர்கள் திறமையான பயிற்சியாளர்களை பயன்படுத்துவதில்லை. அனைவரையும் வெளியிலிருந்து அழைத்து வருகின்றனர். இலங்கையிலிருப்பவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கவும் மாட்டார்கள். அவ்வாறு செயற்படுபவர்கள், நாம் வேறு அணிகளுக்கு பயிற்சியளிப்பது சிறந்தது அல்லவென நினைக்கின்றனர். 10 நாட்கள் பயிற்சியளித்து அவுஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்ய முடியுமாயின், உலகிலேயே தலைசிறந்த பயிற்றுவிப்பாளர் நான் ஆவேன். எனது அனுபவம் வீரர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. தமது தவறுகளை மறைத்துக் கொள்வதற்ககாக எம்மைப்போன்வர்களை பயன்படுத்த இவர்கள் முனைகின்றனர்.

திலங்க சுமதிபால

மிகவும் கவலையாகவுள்ளது. நாம் சிரமப்பட்டு பாதுகாத்த வீரராவார். நாம் அவரை மூன்று சந்தர்ப்பங்களில் காப்பாற்றியுள்ளோம். முரளி தற்போது முன்னாள் வீரர் மாத்திரமே. அவுஸ்திரேலியாவை வீழ்த்துவதற்காக நாம் எமது அணியை தயார்படுத்துவோம்.

முத்தையா முரளிதரன்

உண்மையிலேயே இலங்கை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தவறான புரிதலுடன் செயற்பட்ட சந்தர்ப்பத்திலும் நான் இலங்கை மக்களுக்காக முன் நின்றேன். எனது கடினமான காலகட்டத்தில் எனக்கு உதவியதால், நான் ஏதேனும் செய்ய வேண்டுமென நினைத்தேன். நாம் வருடம்தோறும் 50,000 குடும்பங்களுக்கு இலவச உதவிகளை வழங்குகின்றோம். நான் எதிரான செயலில் ஈடுபடவில்லை. இதனை சிறந்த சந்தர்ப்பமாகவே நான் கருதுகின்றேன். ஏனெனில் நான் பந்தை எறிவதாக 95ஆம் ஆண்டிலும் 99ஆம் ஆண்டிலும் அவர்களே குற்றம் சுமத்தினார்கள். இன்று பயிற்சியளிக்க முடியுமா என அவர்களே கேட்கின்றனர். இதனடிப்படையில் அவர்கள் தமது தரப்பு இழைத்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதன் காரணமாகவே நான், அந்த
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டேன்.

திலங்க சுமதிபால

தம்மை திட்டியதாக சரித் சேனாநாயக்க முறைப்பாடு செய்துள்ளார். விளையாட்டரங்கில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படாத சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு விடயங்கள் தொடர்பில் நாம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிருவாகத்திற்கு அறிவித்துள்ளோம். அவ்வாறு இடம்பெற்றிருக்ககக்கூடாது.

முத்தையா முரளிதரன்

அங்கிருந்த அதிகாரியிடம் இதுகுறித்து கேட்டிருக்கலாம். கேட்க முடியும். உண்மையிலேயே அத்தகையவொரு சம்பவம் இடம்பெறவில்லை. நான் அவ்வாறு செய்ததாக அவர் கூறிக்கொண்டு திரிகின்றார். அவரை சந்தித்தபோது நான் கேட்டேன். விசாரணை இருப்பதாக அவர் கூறினார். திலங்கவும் குற்றச்சாட்டு சுமத்துவதற்கு முன்னர் என்னிடம் கேட்டிருக்கலாம். இல்லாவிட்டால், ”கியூரேட்டரிடம்” கேட்டிருக்கலாம்.

இது தொடர்பில் சரித் சேனாநாயக்கவிடம் நான் வினவியபோது, விசாரணை இடம்பெற்று வருவதால் கருத்து வெளியிட முடியாது என கூறினார்.

http://newsfirst.lk/tamil/2016/07/10-நாட்கள்-பயிற்சியளித்து/

Link to comment
Share on other sites


‘துரோகி'யானார் முரளி
 
 

article_1469440253-TamumruishdhgsLEAD.jpமுரளிதரன், இடம்பெறவுள்ள இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடருக்காக, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகராகச் செயற்படுகின்ற நிலையில், அது தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக இலங்கையின் எதிர்ப்பு ஏற்கெனவே வெளிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவும், அது தொடர்பான சர்ச்சையை, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால எழுப்பியுள்ளார்.

"அவுஸ்திரேலியாவுக்குப் பயிற்றுவிக்கும் முடிவு, நீண்டகாலத்தில் முரளிக்கே பாதமாக அமையும், இலங்கை கிரிக்கெட்டுக்கல்ல" என்று அவர் தெரிவித்தார்.  இதற்கு முன்னர், பல்வேறு கடினமான சந்தர்ப்பங்களில் முரளியைப் பாதுகாத்ததாகத் தெரிவித்த அவர், அவுஸ்திரேலியாவோடு இணையும் அவரது முடிவு, தன்னைக் காயப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

இவ்வாறான முடிவால், தனது தொழில் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு எந்தத் தடையும் கிடையாது எனத் தெரிவித்த சுமதிபால, ஆனால் நன்னெறியின் அடிப்படையில் இது இடம்பெறுவதாக நினைக்கவில்லை எனவும், இந்தத் தொடர், வோண் - முரளிதரன் கிண்ணம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, உள்ளூர் விளையாட்டரங்கொன்றை, உரிய அனுமதியின்றி அவுஸ்திரேலிய வீரர்களைப் பயிற்றுவிக்க முரளி பயன்படுத்தியமை குறித்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முரளி விவகாரத்தை, இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், பெரிய விடயமன்று என ஆரம்பம் முதலே தெரிவித்து வருவதோடு, நேற்றைய தினமும் அதை உறுதிப்படுத்தினார். "அதுவொரு விடயமன்று. எவருக்கும் தொழிலொன்றைச் செய்வதற்கு அனுமதியுள்ளது" என அவர் நேற்றுத் தெரிவித்தார்.
ஆனால், இலங்கையின் சில ஊடகங்களும் சமூக ஊடக இணையத்தளங்களும், முரளியைத் துரோகி என அழைக்க ஆரம்பித்துள்ளன.

இது தொடர்பாகக் கருத்துத் தெரவித்த முரளிதரன், 10 நாட்களுக்குள் தான் துரோகி ஆகியுள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு, முரளிதரனைத் துரோகி என பல்வேறு தரப்பினரும் அழைக்க, இலங்கையின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத்துடன், இலங்கை அணி தங்கியிருக்கும் அணி ஹொட்டலில் வைத்து, நேற்றுத் திங்கட்கிழமை நீண்ட நேரமாகச் சந்தித்துக் கலந்துரையாடிக் கொண்டிருந்தார் முரளி.

- See more at: http://www.tamilmirror.lk/177903/-த-ர-க-ய-ன-ர-ம-ரள-#sthash.nvc5Ztw6.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளியும் கொஞ்சம் காசு பார்க்கட்டுமேன்

Link to comment
Share on other sites

If any Sri Lankan spinner walks up to Muri and asks him about bowling he will be the first to spend as much time as needed to help. Free.

241 Retweets 581 Gefällt mir
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

நான் நாட்டை நேசிக்கின்றேன்,  நாட்டு மக்களை நேசிக்கின்றேன் என்னை துரோகியென்பதை விட   உள்ளுர் வீரர்களுக்கு வாய்ப்பை தராத  கிரிக்கெட் சபையே துரோகியாக செயற்படுகின்றது என தெரிவித்துள்ளார்

Now The cat is out of the bag .
இதையே  முன்னர் நாங்கள் கூறினோம் ..இப்போது முரளியே கூறுகிறார் ...
இன்னும் சொறிந்தால் பச்சை பச்சையாக வெளியிடுவார் போல...திலங்க விடாமல் சொறியுங்கள் 
அப்ப தான் உங்கட வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸிகாரன் வந்து பயிற்சி அளிச்சு சொறீலங்கா உலகக் கோப்பை எடுக்கலாம்.. ஆனால் முரளிதரன் அவுஸிக்கு பயிற்சி அளிப்பது சொறிலங்காவுக்கு துரோகம். இதையே சங்ககாரா செய்திருந்தால்.. சொறிலங்காவுக்கு கெளரவம். 

முரளி என்ற முழி எனியாவது சிங்களவன் யாரென்பதை உணரும்.. வெளில சொல்லனும்.

பாவம் முரளி.. அவர் சொறீலங்கா மீது அளவு கடந்து லவ் வைச்சிருக்க.. சிங்கள கிரிக்கெட் சபை அவருடைய லவ் வை ஏற்றுக் கொள்ளாது.. துரோகி என்றாய்களே. 

சுயநலனையும் சிங்கள இனத்தின் நலனையும் காப்பாற்ற.. இந்த முரளி செய்த கொடுமைகளுக்கான விளைவுகள் தாம்.. இப்போ அவர் அனுபவிப்பது சிங்களவனிடம் இருந்து. :rolleyes:

Link to comment
Share on other sites

முரளி ஒரு சிறந்த  இலங்கைக் குடிமகன்: சங்கா
 
 

article_1469515873-image_1469512775-8396இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், ஒரு சிறந்த இலங்கைக் குடிமகன் எனவும் அவர் தனது நாட்டை விரும்பும் ஒருவராகவும் பயிற்றுவிப்பாளராகவும் திகழ்கிறார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

சர்ச்சையில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பாக தனது டுவிட்டரில் தளத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், சுழல் பந்து ஜம்பவானாகிய முரளிதரனுக்கு தன்னை நியாயப்படுத்த வேண்டிய தேவை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும் தனது டுவிட்டர் தளத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

article_1469515903-image_1469512329-487barticle_1469515953-image_1469512209-fb94

- See more at: http://www.tamilmirror.lk/177965/ம-ரள-ஒர-ச-றந-த-க-ட-மகன-சங-க-#sthash.92ERkcYT.dpuf

முரளி சர்ச்சை ; சங்காவின் பகிரங்க அறிவிப்பு

 

முத்தையா முரளிதரன் இலங்கை நாட்டின் சிறந்த மகன். அவர் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள தேவையில்லையென இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் விக்கட் காப்பாளருமான குமார் சங்கக்கார தமது உத்தியோகபூா்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

முரளிக்கு தன் நாட்டின் மீது அன்புள்ளது, மேலும் அவர் யாருக்கு வேண்டுமானாலும் ஆலோசராக அல்லது பயிற்சியாளராகவும் செயற்படலாம்.

இலங்கை கிரிக்கெட் சபை முரளியிடம் பயிற்சியளிக்க இதுவரையும் கேட்டுக்கொண்டதில்லை. தனது நாட்டிற்காக தனது முழு திறமையினையும் வெளிபடுத்தியுள்ளவர். நாட்டிற்காக செயற்பட எப்போதும் தயாராகவே உள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையே முரளியிடம்  கேட்க வேண்டும்.

2016-07-26_at_12-16-37.jpg

நாங்கள் அவரை நினைத்து கட்டாயம் பெருமைபட வேண்டும். எந்தவொரு சுழற்பந்துவீச்சாளரும் பந்துவீச்சு தொடர்பில் ஆலோசனை  கேட்க வந்தால் முரளியே முதலாவதாக சென்று இலவசமாக நீண்ட நேரம் அவர்களுக்கான உதவிகளை வழங்குபவர்.

முக்கிய பிரச்சினைகள் ஏதும்  முரளியுடன் இலங்கை கிரிக்கெட் சபைக்கு இருப்பின் அதை நிவர்த்தி செய்துக்கொள்ள இதுவே சரியான தருணம் என சங்கா தெரிவித்துள்ளார்.

முரளிதரன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பந்துவீச்சி ஆலோசகராக செயற்படுவது குறித்து கடந்த ஞாயிற்கிழமை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமத்திபால வெளியிட்ட கருத்து தொடர்பில் குமார் சங்கக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

2016-07-26_at_12-17-21.jpg

http://www.virakesari.lk/article/9424

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரான, இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் செயற்பாடுகள் குறித்து வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. முரளிதரனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரான, இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் செயற்பாடுகள் குறித்து வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. முரளிதரனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.

   

அணி முகாமையாளர் சரித் சேனாநாயகவை கடுமையாக சாடியமை, அனுமதியின்றி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் அவுஸ்திரேலிய அணியினருக்கு பயிற்சியளித்தமை போன்றனவே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாகும். எதுஎவ்வாறு இருப்பினும், இது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவிக்கவுள்ளதாக திலங்க சுமதிபால சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் முரளிதரன் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த மூன்று சந்தர்ப்பங்களில் அவரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பாதுகாத்ததாகவும், பயிற்சியாளராக அவரது தொழில் குறித்து பிரச்சினை இல்லை எனவும் எனினும் ஒழுக்க ரீதியான பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவரது பெயரில் அந்தக் கிராமத்தில் இடம்பெறவுள்ள விளையாட்டுப் போட்டியொன்றுக்காக, சர்வதேச விளையாட்டு மைதானத்தில், எதிரணியினருக்கு பயிற்சியளிப்பது, குறித்து மிகவும் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், முரளிதரனின் பெயருக்கு அது கலங்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=162267&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

   

முத்தையா முரளிதரனின் தற்போதைய செயற்பாடுகள் தனது நெஞ்சைப் பதற வைப்பதாக இலங்கைக் கிரிக்கட் சபைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அவுஸ்திரேலியா அணிக்கு நான் போட்டிக்கு முன்னதான 10 நாட்களுக்கு மாத்திரமே பந்துவீச்சு ஆலோசகராக பணிபுரிகிறேன். அவுஸ்திரேலிய அணி என்னை முழுத்தொடருக்கும் ஆலோசகராக பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால் நான் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. காரணம் இலங்கை அணி விளையாடும்போது என்னால் அவுஸ்திரேலிய அணியின் உடைமாற்றும் அறையிலிருந்து போட்டியை ரசிக்க முடியாது. ஏனென்றால் நாட்டின் மீது நான் கொண்டுள்ள அன்பு அளப்பரியது.

நாட்டுக்காக பலவற்றை நான் செய்துள்ளேன். ஆனால் இன்று துரோகி என கூறுகின்றனர். ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். நான் துரோகி இல்லை கிரிக்கெட் சபைதான் மிகப்பெரிய துரோகி. 2011 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஒருதடவை மாத்திரமே என்னை இலங்கை அணி ஆலோசகராக செயற்படும்படி கேட்டுக்கொண்டது. நான் அப்போது என்னால் முழு நேரமும் அதனை செய்யமுடியாது. என்னால் இயன்ற நேரங்களில் நாட்டுக்காக நான் அதை செய்கிறேன் என கேட்டுக்கொண்டேன். இப்போது அவுஸ்திரேலிய அணிக்கு ஆலோசகராக செயற்படும்போது, என் மீது குற்றங்களை சுமத்துகின்றனர். அது பிழையான ஒன்றாகும்.

அவுஸ்திரேலிய அணிக்கு முன்னாள் என்னை இலங்கை அணி அழைத்திருந்தால் நாட்டுக்காக நான் அதனை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு ஆலோசகராக செயற்பட்டிருப்பேன். அதனை கிரிக்கெட் சபை செய்யவில்லை. இப்போது குறை கூறுவது தேவையற்றது. நாட்டில் பல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களை விடுத்து வெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து பயிற்சி கொடுக்கின்றனர். அதுமாத்திரமின்றி நிறத்தை பார்த்து பயிற்சி அளிப்போருக்கு பணம் அளிக்கின்றனர். நான் நாட்டை நேசிக்கின்றேன், நாட்டு மக்களை நேசிக்கின்றேன் என்னை துரோகியென்பதை விட உள்ளுர் வீரர்களுக்கு வாய்ப்பை தராத கிரிக்கெட் சபையே துரோகியாக செயற்படுகின்றது’ என தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=162270&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

 

இலங்கை அணியுடனான போட்டி என்பதனாலேயே 10 நாட்கள் மாத்திரம் பயிற்சி வழங்க ஒப்புக்கொண்டேன்

Link to comment
Share on other sites

பாலாய் நின்று பழமாய் சொரிந்தாலும் பிறத்தி பிறத்தி தான் என்ற பழமொழியை முரளி தெரிந்து இருக்க நியாயமில்லை.

Link to comment
Share on other sites

நான் துரோகியா? அவர்கள் துரோகியா? : இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது முரளிதரன் காரசாரத் தாக்கு

 

 
முரளிதரன் ஆவேசம். | படம்: ராய்ட்டர்ஸ்.
முரளிதரன் ஆவேசம். | படம்: ராய்ட்டர்ஸ்.

ஆஸ்திரேலிய அணிக்கு 10 நாட்கள் ஆலோசனை அளிக்க முரளிதரன் ஒப்புக்கொண்டதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரை தாக்கிப் பேசியுள்ளது, இதற்கு முரளிதரனும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்.

இருதரப்பினரும் மாறி மாறி சொற்போரில் ஈடுபட இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் முரளிதரன் குறித்து புகார் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

பிரச்சினை எங்து தொடங்கியது என்றால் ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது, பயிற்சி ஆட்டம் பி.சரா ஓவலில் நடைபெற்றது. இது சரவணமுத்து ஸ்டேடியம் என்று முன்னால் வழங்கப்பட்டது. தமிழ் யூனியன் கிரிக்கெட் கிளப்புக்காக நிறைய ஆடியுள்ள முரளிதரனுக்கு இந்த மைதானம் அத்துப்படி, இங்கு அவருக்கு நிறைய ரசிகர்கள் ஆதரவும் உண்டு.

இந்நிலையில் பயிற்சியாட்டத்தில் இலங்கை வாரிய அணி தோல்வி தழுவியது, பிட்ச் ஸ்பின் பிட்ச் என்பதால் முரளிதரன் தான் மைதான பிட்ச் அமைப்பாளரை ஸ்பின் பிட்ச் போடுமாறு நிர்பந்தித்துள்ளார் என்கிறது இலங்கை கிரிக்கெட் வாரியம், இந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இது ஒரு சர்ச்சை என்றால், முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் பல்லிகிலே மைதானத்தின் நடுபிட்சில் ஆஸ்திரேலியர்களுக்கு முரளிதரன் எந்த வித அனுமதியும் பெறாமல் பயிற்சி அளித்தார் என்பதும் இன்னொரு குற்றச்சாட்டு. இது குறித்தே தற்போது புகார் எழுந்துள்ளது.

முரளிதரன் இது குறித்து கூறியதாவது:

நான் தான் பயிற்சி ஆட்டத்தின் போது பிட்சில் உள்ள புற்களை வெட்டக் கூறினேன் என்று சரித் என் மீது பழிபோடுகிறார். இது ஒரு பெரிய பொய். நான் அவரிடம் நேரிலேயே இது பற்றி கேட்டேன், அதாவது நாம் இருவரும் விளையாடியுள்ளோம், ஒருவரையொரு மதித்துள்ளோம் பின் ஏன் இப்படிக் கூறுகிறீர்கள் என்றேன் அதற்கு அவர் சும்மா விசாரித்ததாகக் கூறினார்.

ஜனகா சம்பத் இலங்கை கிரிக்கெட் வாரிய பிட்ச் தயாரிப்பாளராக இருந்த போது சரா ஓவல் பிட்ச் தயாரிக்கப்பட்டது. அவரிடம் விளக்கம் கேட்பதை விடுத்து வதந்தியை நம்பி செயல்படுகின்றனர்” என்று கடுமையாக பதிலடி கொடுத்தார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபலா கூறும்போது, “முதலில் தன்னை தரக்குறைவாக நடத்தியதாக சரித் சேனநாயகே புகார் அளித்தார். 2-வதாக பல்லகிலே மைதானத்தில் முன் அனுமதியின்றி மையப்பிட்சில் முரளி ஆஸி.வீரர்களுக்கு பயிற்சி அளித்தார் என்பது.

நாங்கள் கடுமையாக ஏமாற்றமடைந்துள்ளோம். முரளிதரனை காப்பாற்றுவதற்காக வாரியம் நிறைய செலவு செய்துள்ளது. அவரை நாங்கள் மூன்று முறை காப்பாற்றியுள்ளோம் இதற்கு நிறைய வாரியம் செலவு செய்துள்ளது. தொழில்பூர்வமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு ஆலோசனை வழங்குவது பற்றி ஒன்றுமில்லை, ஆனால் விஷயம் அறம் சம்பந்தப்பட்டதாகும். இந்த டெஸ்ட் தொடருக்கு முரளி-வார்னே டிராபி என்று பெயர் சூட்டியுள்ளோம்.

கண்டியில் ஒரு முறை முரளிதரனுக்கு ரசிகர்கள் காட்டிய ஆதரவு இன்னமும் நினைவில் உள்ளது, கண்டி அவரது ஹோம் டவுன். ஆனால் பல்லகிலேயில் அவர் எதிரணியினருக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் மிகவும் காயப்படுத்துகிறது” என்றார்.

முரளிதரன் மீண்டும் கூறியபோது, “2 ஆண்டுகளுக்கு முன்பாக வாரியத்தலைவர் நிசாந்தா ரணதுங்கா ஸ்பின்னர்களுடன் பணியாற்ற என்னை அழைத்தார். நான் உடனே சம்மதித்து 10-15 நாட்கள் பயிற்சியளித்தேன். அதன் பிறகு எந்த ஒரு வாரிய அதிகாரியும் என்னை எதற்காகவும் அழைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு முன்னால் என்னை அழைத்திருந்தால் நிச்சயம் நான் சம்மதித்திருப்பேன். ஆனால் அவர்கள் என்னை விரும்பவில்லை, வேறொரு அணி என்னை விரும்புகிறது. நான் எப்படி நாட்டுக்கு துரோகம் இழைத்தவன் ஆவேன்? ஒட்டுமொத்த தொடருக்குமே ஆஸ்திரேலியா என்னை ஆலோசனை வழங்குமாறு கோரியது, ஆனால் இலங்கையில் தொடர் நடக்கும் போது எதிரணியினரின் ஓய்வறையில் இருப்பது முறையல்ல, அறமல்ல, என்று நான் 10 நாட்களுக்கு சம்மதித்தேன்.

இலங்கை மக்கள் எனக்காக நிறைய செய்துள்ளனர், நானும் அவர்களுக்கு முடிந்ததைச் செய்துள்ளதாகவே கருதுகிறேன். நான் என் நண்பரின் உதவியுடன் குட்னெஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும், சுமார் 50,000 குடும்பங்களுக்கு உதவி புரிந்துள்ளோம். சுனாமிக்குப் பிறகு ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 30-40 பிட்ச்களை அமைத்துள்ளோம். இலங்கை கிரிக்கெட் வாரியம் செய்ததை விட நாங்கள் எங்கள் நிதியிலிருந்து அதிகமாகவே செய்துள்ளோம்.

இன்று என்னைக் குற்றம்சாட்டுபவர்கள் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்த்துக் கொள்ளட்டும். நான் என்ன செய்திருக்கிறேன், அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பது அப்போது புரியவரும். இன்னொரு அடிப்படை தவறு என்னவெனில் நம் வீரர்கள் அருமையான கோச்சாக முதிர்ச்சி பெற்றிருக்கும் போது, வாரியம் அவர்களை துரத்தி அடித்துள்ளது. ஹதுரசிங்க, சமிந்தா வாஸ், மர்வன் அட்டப்பட்டு, மரியோ வில்லவராயன், திலன் சமரவீர ஆகியோர் பயிற்சியாளர்களாகி விட்டனர், சமரவீர ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். இவர்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர், அங்கு இவர்களை மதிக்கின்றனர்.

ஆனால் இங்கு என்ன நடக்கிறது வெளிநாட்டிலிருந்து கொண்டு வருகிறோம். நான் துரோகியா இல்லை அவர்கள் துரோகியா? சம்பளமும் கூட அயல்நாட்டு பயிற்சியாளர்களுக்கு அதிகம் வழங்குகின்றனர். நம்மூர் பயிற்சியாளர்களுக்கு குறைவாக வழங்குகின்றனர்.

1995, 96-ல் ஆஸ்திரேலியாவுடன் எனக்கு பிரச்சினை இருந்தது (த்ரோ சர்ச்சை), அப்போது இலங்கை என்னை ஆதரித்தது. பிறகு ஆஸ்திரேலியா என்னை பயிற்சி அளிக்க அழைக்கிறது என்றால் நான் தவறு செய்யவில்லை என்பதை அவர்களே ஒப்புக் கொள்வதாகத்தானே அர்த்தம். அதனால்தான் அவர்கள் ஸ்பின்னர்களுக்கு என்னை பயிற்சி அளிக்க அழைக்கிறார்கள்?

ஆஸ்திரேலியாவுக்கு 10 நாட்கள் நான் பயிற்சி அளித்ததன் மூலம் அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என்றால் நான் உலகிலேயே சிறந்த பயிற்சியாளராக இருப்பேன். இலங்கையும் என்னை ஒவ்வொரு முறையும் பயிற்சிக்கு அழைக்கலாம். நாம் ஒவ்வொரு முறையும் வென்று விடுவோம்” என்று பொரிந்து தள்ளியுள்ளார்.

குமார் சங்கக்காரா, இந்த விவகாரத்தில் முரளிதரனுக்கு முழு ஆதரவு அளித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/நான்-துரோகியா-அவர்கள்-துரோகியா-இலங்கை-கிரிக்கெட்-வாரியம்-மீது-முரளிதரன்-காரசாரத்-தாக்கு/article8902373.ece

http://tamil.thehindu.com/sports/நான்-துரோகியா-அவர்கள்-துரோகியா-இலங்கை-கிரிக்கெட்-வாரியம்-மீது-முரளிதரன்-காரசாரத்-தாக்கு/article8902373.ece

Link to comment
Share on other sites

 

முரளி குறித்து நாம் பெருமை படவேண்டும்!
- அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ

முரளியின் மேல் குற்றம் சுமத்திய அவுஸ்திரேயர்களே
முரளியிடம் பயில்வது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும்.
எங்கள் அணிகளுக்கு அவுஸ்திரேலிய பயிற்றுனர்கள் பயிற்றுவித்துள்ளார்கள். அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டு நாங்கள் ஆடும் போது - அவுஸ்திரேலியர்கள் கோபப்படவில்லை. முரளி அவர்கள் விரும்பியதை செய்ய அவருக்கு சுதந்திரம் இருக்கிறது. அதை தடுக்க எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. முட்டாள் தனமான தர்க்கங்கள் தேவையற்றது. முரளி அவர்களது செயல் எமக்கு பெருமைதான். கிரிகெட் போர்ட்டா அவருக்கு சாப்பிடக் கொடுக்கிறது?

- அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ

 

முரளி மேல் குற்றம் சாட்டியவர்களே
முரளியை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்!
- அர்ஜூன ரணதுங்க

முரளியின் மேல் குற்றம் சுமத்திய அவுஸ்திரேயர்களே முரளியை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதாவது அவர் சரி என்பதே அது.அதனால்தான் அவரிடம் பயில்கிறார்கள். அதில் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

அடுத்து சர்வதேச ரீதியாக நல்ல வீரர்களை இங்கே பயிற்றுவிப்பாளர் தகுதிகளிலிருந்து ஒதுக்கியுள்ளார்கள். சமிந்த - உபுள் - ஆகியோரை விலக்கி விட்டு - வெளிநாட்டு பயிற்றுனர்களை கொண்டு வந்துள்ளார்கள். மகேல இங்கிலாந்துக்கு பயிற்றுவிப்பது குறித்தும் குற்றம் சாட்டுகிறார்கள்.

இன்று கிரிகெட் போர்டில் உள்ளவர்களுக்கு கிரிக்கெட் குறித்த அறிவு இல்லை. அவர்களால் கட்டுப்படுத்தக் கூடியவர்களையே அவர்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால்தான் வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களை கொண்டு வருகிறார்கள். 20 -30 வருடங்கள் வெயிலிலும் -ழையிலும் நனைந்து நாட்டுக்காக விளையாடிய வீரர்களை மதிக்காத போது ; அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வார்கள். எதிர்காலத்திலும் இவை தொடரும்.

எங்களுக்கு வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்கள் தேவையில்லை. எம்மிடம் போதியளவு பயிற்றுவிப்பாளர்கள் இருக்கிறார்கள். எமது தேசிய வீரர்களின் பெறுமதி தெரியாவிட்டால் ; வெளிநாட்டினருக்கு அவர்களது பெறுமதி தெரியுமானால் ; அவர்கள் அந்நாடுகளுக்கு போவது குறித்து ; அவர்கள் மேல் குற்றம் சுமத்த வேண்டாம்.

என்னிடம் முரளி கேட்டிருந்தால் - நான் அங்கு இருந்திருந்தால் முரளி போன்றவர்களை எங்கும் போக வேண்டாம் என தடுத்திருப்பேன். இவை தெரியாத விளையாட்டு அமைச்சர் இருந்தும் பயன் இல்லை. இதற்காக வருத்தப்படுகிறேன்.

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிக்கண்டுள்ளார் முரளி - அர்ஜுன 

 

முரளியின் பந்துவீச்சு விதிமுறைக்கு மீறியது என   குற்றம் சுமத்திய அவுஸ்திரேலியா அணி அவரை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக அழைக்குமானால் முரளி அவுஸ்திரேலியாவை வெற்றிக்கொண்டுள்ளார் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

daa-1.jpg

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலியாவுக்கு முரளிதரன் ஆலோசகராக செயற்படுவாராக இருந்தால் அவரை குற்றம் கூறுவது சரியானதல்ல.

புதிய கிரிக்கெட் சபை தேர்தலின் பின்னர் இலங்கை அணியின்  பயிற்சியாளர்களான அத்தபத்து, புஸ்பகுமார, சமிந்தவாஸ் மற்றும் உபுள் சந்தன ஆகியோர் விலக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு முன்னணி வீரர்களை அணியின் பயிற்சியாளர்களில் இருந்து நீக்கிவிட்டு வெளிநாட்டு பயிற்சியாளர்களை கிரிக்கெட் சபை தீர்மானிக்குமானால், அவர்கள் வேறு அணிக்கு பயிற்சி அளிப்பது தவறில்லை.

நான் இருந்திருந்தால் முரளியை அவுஸ்திரேலியாவிற்கு பயிற்சியளிக்க விட்டிருக்கமாட்டேன்.

அதுமாத்திரமின்றி சங்கக்கார, முரளி, ஜயவர்தன போன்ற சிறந்த வீரர்களை நாட்டில் வைத்துக்கொண்டு, அவர்களிடம் இருந்து கிரிக்கெட் சபை பயன்பெறாமல் இருக்குமானல் வெளிநாடுகள் பயன்பெறுவதை நாம் தடுக்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை  கிரிக்கெட்டில் சூதாட்டக்காரர்கள் நிறைந்துள்ளனர்.அதனை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே விளையாட்டுத்துறை அமைச்சு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/9460

Link to comment
Share on other sites

வெளிநாட்டுப் பயிற்றுநருக்கு 100 ரூபா; இலங்கையருக்கு வெறும் 20 ரூபா! யார் துரோகி என்பதை நீங்களே தீர்மானியுங்கள் – முத்தையா முரளிதரன்
2016-07-27 10:53:26

அவுஸ்­தி­ரே­லிய அணிக்கு பத்து தினங்கள் ஆலோசக­ ராக இருந்து அவ்­வ­ணியை வெற்­றி­பெற முடி­யு­மாக இருந் தால் நான்தான் உல­கி­லேயே அதி சிறந்த பயிற்­று­ந­ராவேன் என பி.பி.சி சிங்­கள சேவைக்கு அளித்த செவ்­வியில் இலங் ­கையின் முன்னாள் சுழல்­பந்­து­வீச்சு நட்­சத்­தி­ரமும் உலக சாதனை நாய­க­னு­மான முத்­தையா முர­ளி­தரன் தெரி­வித்தார்.

 

1821025.jpgமேலும் இலங்கை கிரிக்­கெட்­டிற்­காக எவ்­வ­ளவோ சாதித்ததன்னை பத்து தினங்­களில் துரோகி எனக் கூறு­வது நியா­ய­மல்ல.

 

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு முன்­ப­தாக என்னை ஆலோ­ச­கரா­கு­மாறு இலங்­கை­யி­ட­மி­ருந்து அழைப்பு வந்­தி­ருந்தால் அதனை ஏற்­றி­ருப்­ப­தா­கவும்  அச்­செவ்­வியில் முர­ளி­தரன் தெரி­வித்­துள்ளார்.

 

செவ்வி: 
கே: அவுஸ்­தி­ரே­லி­யாவின் சுழல்­பந்­து­வீச்சு ஆலோ­ச­க­ராக நியி­மிக்­கப்­பட்­டது முதல் நீங்கள் கடும் விமர்­சனத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளமை  குறித்து என்ன கூற விரும்­பு­கின்­றீர்கள்?

 

முர­ளி­தரன்: ‘‘நான் ஆலோ­சகர் பத­வியை பத்து தினங்­க­ளுக்கு மாத்­தி­ரமே வகிக்­கின்றேன். இதற்கு முன்­னரும் இப் பத­வியை நான் வகித்தேன்.

 

இம்­முறை இலங்­கைக்கு வருகை தரும்­போது முழுத் தொட­ருக்கும் ஆலோ­ச­க­ராக பணி­யாற்ற முடி­யுமா என அவர்கள் கேட்­டனர்.

 

முழுத் தொட­ரையும் என்னால் செய்­ய ­மு­டி­யாது என்று பதி­ல­ளித்தேன். போட்­டிக்கு முன்னர் பத்து தினங்­க­ளுக்கு உத­வு­கின்றேன் என்றேன். 

 

ஏனெனில், இத் தொடரில் இலங்கை விளை­யா­டும்­போது நான் எதி­ர­ணியின் தங்­கு­ம­றையில் இருப்­பது சரி­யா­ன­தல்ல என்று கூறியே இந்தப் பத­வியை நான் ஏற்றேன். 

 

ஆலோ­சகர் பத­வியை ஏற்­றதும் பெரிய பெரிய சர்ச்­சைகள் எழுந்­தன. பெரிய சர்ச்சை என்­பது, தமிழ் யூனியன் மைதா­னத்தில் 3 நாள் போட்டி நடை­பெற்­றது. நான்தான் சுழல்­பந்­து ­வீச்­சா­ளர்­க­ளுக்கு சாத­க­மான ஆடு­க­ளத்தைத் தயா­ரித்தேன் என குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

 

ஆனால் அது முற்­றிலும் தவறு. காரணம் என்­ன­வெனில் ஆடு­க­ளத்தை தயா­ரிப்­பது நான் அல்ல. தமிழ் யூனியன் மைதா­னத்தில் நான் விளை­யா­டி­யவன். அவர்கள் என்னை நேசித்­த­வர்கள். 

 

இருப்­பினும் கிரிக்கெட் சபையில் வேலை செய்யும் ஆடு­கள பரா­ம­ரிப்­பாளர் சம்பத் என்­ப­வர்தான் இந்த ஆடு­க­ளத்தை தயார்­ப­டுத்­தி­யவர். இப்­படி ஒரு சம்­பவம் இடம்­பெற்­றதா என அவ­ரிடம் கேட்­டி­ருக்­க­ வேண்டும். அப்­படி ஒன்றும் நடை­பெ­ற­வு­மில்லை.

 

நான் ஆலோ­சனை வழங்­க­வு­மில்லை. அவர்தான் ஆடு­க­ளத்தை தயார்­ப­டுத்­தினார். இலங்கை அணி­யினர் சுழல்­பந்­து­ வீச்­சா­ளர்­க­ளிடம் ஆட்­ட­மிழந்­தனர்.

 

அதுதான் பெரிய பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­தது. அதன் பின்னர் அணி முகா­மை­யாளர் சரித் சேன­நா­யக்க ஒவ்­வொரு இட­மாக சென்று நான்தான் இதனை செய்தேன் என்று கூறினார்.‘‘

 

கே: சரித் சேனா­நா­யக்க உங்­க­ளுக்கு எதி­ராக முறைப்­பாடு ஒன்றை செய்­துள்­ள­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால நேற்று (திங்­க­ளன்று) கூறினார். முரளி அவரை ஏசினார் என்று. இது என்ன சம்­பவம்? 

 

முர­ளி­தரன்: ‘‘இல்லை. உண்­மையில் அவரை நான் பார்த்­ததும் கேட்டேன். நாங்கள் இரு­வரும் ஒன்­றாக கிரிக்கெட் விளை­யா­டி­ய­வர்கள். அதா­வது ஒரு­வரை ஒருவர் மதித்து நடந்­துள்ளோம்.

 

நீங்கள் இந்த மாதிரி கதை ஒன்றை பரப்­பு­வ­தற்கு முன்னர் நடந்­தது என்­ன­வென்று ஆராய்­ந்தி ­ருக்­க­ வேண்டும் என நான் அவ­ரிடம் கூறினேன். இப்­படி ஒரு சம்­பவம் இடம்­பெற்­றதா என ஒன்றில் அவர் என்­னிடம் கேட்­டி­ருக்க வேண்டும் அல்­லது ஆடு­கள பரா­ம­ரிப்­பாளர் சம்­பத்­திடம் கேட்­டி­ருக்­க­ வேண்டும்.

 

உங்­களைப் பற்றி நானும் ஒவ்­வொரு இட­மாக சென்று பொய்­கூ­று­வது சரி­யல்ல என நான் தெரி­வித்தேன். அப்­போ­துதான் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது.

 

அது குறித்து முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என திலங்க கூறு­வா­ரே­யானால், திலங்க என்னை தொலை­பே­சியில் அழைத்து இப்­படி ஒன்று இடம்­பெற்­றதா எனக் கேட்­டி­ருக்­கலாம். 

 

இவர்கள் எத­னை­யுமே நேர­டி­யாகக் கேட்க விரும்­பு­வ­தில்லை என நினைக்­கின்றேன். நான் அர­சியல் செய்ய விரும்­ப­வில்லை. அத்­துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அர­சி­ய­லிலும் இணைய விரும்­ப­வில்லை.’’

 

கே: முரளி இதனைத் தொழி­லாக செய்தால் பர­வா­யில்லை, ஆனால் தொழில்­நெறி முறையில் ஒரு பிரச்­சினை இருப்­ப­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். குறிப்­பாக அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு முரளி உத­வு­வது, பயிற்சி அளிப்­பது தங்­க­ளுக்கு ஒரு பிரச்­சி­னை­யாகி விட்­ட­தாகக் கூறினார். அது ஒரு பிரச்­சினை என நீங்கள் கரு­து­கின்­றீர்­களா? ஏனெனில் உங்­க­ளுக்கும் பிரச்­சினை தோற்­று­வித்த அணி­யினர்....(அவுஸ்­தி­ரே­லி­யாவின் டெரல் ஹெயார், ஹார்ப்பர், அப்­போ­தைய பிர­தமர் ஹவார்ட்)

 

முர­ளி­த­ரன்: ‘‘அவுஸ்­தி­ரே­லியா எனக்கு அவ­தூறு விளை­வித்­ததை நான் மறக்­க­மாட்டேன். இந்தப் பிரச்­சி­னை­யி­லி­ருந்து நான் விடு­ப­டு­வ­தற்கு இலங்­கை­யி­லுள்ள அனை­வரும் எனக்கு உத­வி­னார்கள்.

 

எனினும் நான் அவர்­க­ளுக்கு உத­வினால் அவர்கள் செய்­தது தவறு என்­பதை அவர்கள் ஒப்­புக்­கொண்­ட­தாக அமையும். என்­னிடம் தவறு இருந்­தி­ருந்தால் அவர்கள் என்னை சுழல்­பந்­து­ வீச்­சா­ளர்­க­ளுக்கு பயிற்சி அளிக்­கு­மாறு அழைத்­தி­ருக்­க­ மாட்­டார்­கள்­தானே. இது ஒரு நல்ல சந்­தர்ப்­ப­மாகும்.

 

‘‘2011முதல் இன்­று­வரை ஒரே ஒரு தட­வைதான் இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து எனக்கு அழைப்பு வந்­தது. இலங்கை அணிக்கு ஆலோ­ச­க­ராக செயற்­பட முடி­யுமா என நிஷாந்த ரண­துங்க கேட்டார்.

 

அப்­போது நான்  என்னால் நீண்ட காலம் முடி­யாது. நேரம் கிடைக்­கும் ­போ­தெல்லாம் நான் இல­வ­ச­மாக செய்­கின்றேன் என்றேன்.

 

அப்­போது பியல் விஜே­துங்க தான் சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளுக்கு தலைமைப் பயிற்­று­ந­ராக இருந்தார். அவ­ரோடு இணைந்து நான் சிறுக சிறுக செயற்­பட்டேன்.

 

அது தவிர என்னை ஆலோ­ச­க­ராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­தினர் அழைக்­க­வில்லை.

 

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு முன்­ப­தாக அவர்கள் என்­னிடம் ஆலோ­ச­க­ராக பணி­யாற்­று­மாறு கேட்­டி­ருந்தால் நான் ஒப்­புக்­கொண்­டி­ருப்பேன். தேசத்­திற்கு பணி­செய்­வ­து­தானே பெரிய விடயம். இவர்கள் அழை­யாமல் நானாக செல்­ல­ மு­டி­யா­து­தானே? 

 

‘‘இன்­னு­மொரு விட­யத்தை, பெரிய தவறை நான் சொல்ல விரும்­பு­கின்றேன். கிரிக்கெட் சபையில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பதவி வகித்­த­வர்கள் இலங்­கையில் உரு­வா­கிய சுப்பர் கிரிக்கெட் வீரர்­களைப் பற்றி 2011இலி­ருந்து கரி­சனை கொள்­ள­வில்லை.

 

அந்த சுப்பர் கிரிக்கெட் வீரர்கள் சிறந்த பயிற்­று­நர்­க­ளாக உரு­வா­னார்கள். அவர்கள் ஒவ்­வொரு அணிக்கு பயிற்­சி­களும் வழங்கி வந்­தனர். ஆனால் அவர்கள் எவ­ருக்­குமே வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை.

 

அந்தப் பயிற்­று­நர்கள் வரி­சையில் ஹத்­து­ரு­சிங்க இன்று இல்லை. உப்புல் சந்­தன களத்­த­டுப்பு பயிற்­று­ந­ராக இருந்தார் அவரும் ஓரங்­கட்­டப்­பட்­டு­விட்டார். அவ்­வாறு பார்க்­கும்­போது வாஸ், களு­வித்­தா­ரன போன்ற மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இல்­லாமல் போய்­விட்­டனர்.

 

அதா­வது இவர்கள் பயிற்­று­நர்­க­ளுக்கு அழைப்பு விடுப்­ப­து­மில்லை, சந்­தர்ப்பம் வழங்­கு­வ­து­மில்லை. ஆனால், மற்­றைய அணி­க­ளுக்கு பயிற்சி அளிக்­கக்­கூ­டாது என எதிர்­பார்க்­கின்­றார்கள். அது நியா­ய­மல்­ல­வென நான் கரு­து­கின்றேன். 

 

‘‘எமது தேசத்தில் பயிற்­சியில் ஈடு­பட்­டுள்­ள­வர்­களில் உய­ரிய பயிற்­று­நர்­களை எடுத்­துக்­கொண்டால் அனை­வரும் வெளி­நாட்­ட­வர்கள். எமது நாட்­ட­வ­ருக்கு வாய்ப்பு வழங்­கப்­ப­டு­வ­தில்லை.

 

கொடுப்­ப­னவு வழங்­கும்­போதும் வெளி­நாட்­டவர் ஒரு­வ­ருக்கு இவர்கள் 100 ரூபா கொடுப்­ப­தாக இருந்தால் இலங்­கை­ய­ருக்கு 20 ரூபா­வையே கொடுப்­ப­தாக கூறு­கின்­றார்கள். இந்த இடத்தில் அவர்­க­ளைத்தான் துரோ­கிகள் என்று கூற­வேண்டும்.

 

ஏனெனில் இங்­குள்­ள­வர்­களின் நிறத்தைப் பார்த்­துதான் இவர்கள் கட்­ட­ணத்தை கணிக்­கின்­றார்கள். நான் பயிற்சி அளிப்­பதால் இலங்கை தோல்வி அடை­யப் ­போ­வ­தில்லை.

 

ஏனெனில் பத்து தினங்­களில் எதுவும் செய்­ய­ மு­டி­யாது. அப்­படி செய்­வ­தாக இருந்தால் நான் உல­கி­லேயே அதி சிறந்த பயிற்­று­ந­ராக இருக்க வேண்டும்.‘‘

 

கே: இலங்கை சார்­பாக ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட விக்­கெட்­களை வீழ்த்­தி­யுள்­ளீர்கள், அவ்­வா­றான உங்­களை சிலர் துரோகி என்று கூறு­கின்­றார்கள்.

 

முர­ளி­தரன்: ‘‘கிரிக்கெட் சபையில் சிலர் தத்­த­மது தனிப்­பட்ட கருத்­துக்­களை வெளி­யி­டு­ப­வர்­கள்தான் இம்­மா­தி­ரி­யான சொற்­களைப் பிர­யோ­கிக்­கின்­றனர்.

 

நான் செய்­வது தவறு என  கிரிக்கெட் சபை நினைப்­ப­தாக இருந்தால் அவர் கள் இலங்­கையில் உள்­ள­வர்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்­கா­தது அதனை விட மிகப் பெரிய துரோ­க­மாகும். அத­னைத்தான் எல்­லா­வற்­றுக்கும் மேலாக அனை­வரும் உற்­றுப்­பார்க்­க­வேண்டும்.

 

இங்­குள்ள சிறப்­பு­வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் பயிற்­று­நர்­க­ளாக வந்­த­பின்னர் அவர்­களை நீக்கி அவர்­களை இல்­லாமல் செய்­வ­தற்­கான காரணம் என்­ன­வெனப் பார்க்­க­வேண்டும்.

 

மஹே­லவின் அனு­ப­வத்தை ஒப்­பிட்­டுப் ­பார்ப்­போ­மே­யானால் அவரை ஆலோ­சகர் பத­வி­யி­லி­ருந்து விலக்­கி­யது மிகப் பெரிய தவறு என நான் கரு­து­கின்றேன். 

 

நான் செய்­வது பத்து நாள் பணி­யாகும். இது சரி­யல்­ல­வென எனக்கு தோன்­றினால் அதா­வது இலங்கை வீரர்­க­ளது தங்­கு­ம­றைக்கு எதி­ராக அவுஸ்­தி­ரே­லிய வீரர்கள் தங்­கு­ம­றையில் இருப்­பது சரி­யல்ல என்­பதால் தான் நான் பத்து தினங்­க­ளுக்கு இந்தப் பத­வியைப் பொறுப்­பேற்றேன்.

 

அது எனது விருப்பம் என்­பதால் தான் பத்து தினங்­க­ளுக்கு நான் இதனை ஏற்றேன். அதிலும் அவர்கள் என்­மீது பிழை காண­ வேண்டும் என்­ப­தற்­காக நான் ஆடு­க­ளத்தை தயா­ரித்தேன் அப்­படி செய்தேன், இப்­படி செய்தேன் என எதை­யா­வது உள­று­கின்­றார்கள். 


அவை பொய்க் குற்­றச்­சாட்­டுக்கள். இந்தக் குற்­றச்­சாட்­டுகள் சரியா? தவறா? என்­பதை கிரிக்கெட் சபைத் தலைவர் ஆராய்ந்த பின்­னர்தான், யார் செய்­தார்கள் என்­பதை அறிந்த பின்­னர்தான் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்­டி­ருக்­க­வேண்டும்.

 

இந்த பத்து தினங்­க­ளில்தான் இவர்­க­ளுக்­கெல்லாம் நான் பிரச்­சி­னை­யா­கி­விட்டேன். இவ்­வ­ளவு செய்த நான் பத்து தினங்­களில் இலங்­கைக்கு துரோ­கி­யா­கி­விட்டேன். 

 

கே: கடை­சி­யாக ஒரு கேள்வி. உங்­க­ளுக்குப் பின்னர் சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­களைப் பற்றி பேசினால் ரங்­கன ஹேரத் உரு­வா­கினார். எனினும் அதன் பின்னர் அதா­வது ரங்­கன ஹேரத்­திற்குப் பின்னர் சுழல் பந்­து­வீச்­சாளர் ஒருவர் இலங்­கைக்கு இல்லை. இதற்குக் காரணம் என்ன? நீங்கள் கூறு­கின்­றீர்கள் உங்­களைப் போன்ற சிரேஷ்ட வீரர்­களைப் பயிற்சி அளிப்­ப­தற்கு அழைப்­ப­தில்லை என நீங்கள் குறிப்­பி­டு­கின்­றீர்கள். இலங்­கைக்கு அடுத்த சுழல்­பந்­து­வீச்­சா­ளரைத் தேட முடி­யாமல் இருப்­ப­தற்கு என்ன காரணம் என நீங்கள் கரு­து­கின்­றீர்கள்? 

 

முர­ளி­தரன்: பயிற்­று­நர்கள் மட்டும் தான் காரணம் எனக் கூற­மு­டி­யாது என நான் கரு­து­கின்றேன். எங்­க­ளிடம் சிறந்த பல சுழல்­பந்­து­வீச்­சா­ளர்கள் இருந்­தார்கள்.

 

சச்­சித்ர சேனா­நா­யக்க, தரிந்து கௌஷால், அஜன்த மெண்டிஸ் போன்ற பலர் உரு­வா­னார்கள்.

 

அஜன்த மெண்டிஸ் தான் ஒரு சிறந்த பந்­து­வீச்­சாளர் என்­பதை நிரூ­பித்த ஒருவர். தரிந்து கௌஷாலும் ஐந்து விக்கட் குவி­யல்­களைப் பதிவு செய்­தவர். அவர்கள் குறித்து ஐ.சி.சி யிட­மி­ருந்து சில சில பிரச்­சி­னைகள் எழுந்­தன. அவை நிவர்த்தி செய்­யப்­பட்டு விட்­டன.

 

இதற்கு என்ன காரணம் என்­பதை நேரில் சென்று பார்க்­காமல் எதையும் கூறு­வது சிர­ம­மா­னது. வீரர்­க­ளிடம் திறமை இருக்­கின்­றது. அவர்கள் ஏன் வெளிச்­சத்­திற்கு வர­வில்லை என்­ப­தற்­கான கார­ணத்தை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

 

அத­னால்தான் மஹேல ஜய­வர்­தன ஓய்வு பெற்ற பின்னர் ஆலோ­ச­க­ரானார்.. அவர் ஒரு பிரே­ரணையை முன்­வைத்தார். அதனை நானும் பார்த்தேன். அது மிகவும் சிறந்த பிரே­ரணை. ஆனால் அந்த பிரேரணை இன்று இல்லை.’’

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18210#sthash.4siYvvC5.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நவீனன் said:

இந்த பத்து தினங்­க­ளில்தான் இவர்­க­ளுக்­கெல்லாம் நான் பிரச்­சி­னை­யா­கி­விட்டேன். இவ்­வ­ளவு செய்த நான் பத்து தினங்­களில் இலங்­கைக்கு துரோ­கி­யா­கி­விட்டேன். 

அட நீங்களும் துரோகியா?பேஷ்,பேஷ் .......சிறிலங்கா தேசியத்தின் துரோகியா?

Link to comment
Share on other sites

முரளிதரன் ஓர் தேசிய வீரராவார் – நாமல் ராஜபக்ஸ

முரளிதரன் ஓர் தேசிய வீரராவார் – நாமல் ராஜபக்ஸ - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-


இலங்கை தேசிய அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேசிய வீரராவார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


முத்தையா முரளிதரன் எந்த நாளும் நாட்டின் தேசிய வீரராகவே திகழ்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை தேசம் தொடர்பில் முரளிக்கு காணப்படும் நேசம் பற்றியோ அல்லது நன்றி விசுவாசம் பற்றியோ எவரும் சந்தேகம் எழுப்பத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


அவுஸ்திரேலிய அணிக்கு சுழற்பந்து வீச்சு குறித்த ஆலோசனை வழங்குவது குறித்து இலங்கை கிரிக்கட் நிர்வாகம் முரளிதரனை விமர்சனம் செய்திருந்தது.


இதற்கு பதிலடி வழங்கும் வகையில் பல்வேறு தரப்பினர் முரளிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134423/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

தாய்நாட்டின் 'துரோகியா'
முரளிதரன்
?
showImageInStory?imageid=287813:tn
 

அவுஸ்­தி­ரே­லி­யா­வு­ட­னான கிரிக்கெட் தொடர் ஆரம்­ப­மா­ன­தி­லி­ருந்து இலங்கை கிரிக்­கெட்­டா­னது மிகப் பெரிய குழப்­பத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளது. அது என்­ன­ வெனில், இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்­ப­வா­னான முத்தையா முர­ளி­தரன் தொடர்­பா­ன­தாகும். அதா­வது, முத்­தையா முர­ளி­தரன் அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணிக்கு பத்து நாட்­க­ளுக்கு பந்து வீச்சு ஆலோ­ச­க­ராக செய­லாற்­றி­ய­மையும் அதன் பின்­ன­ணியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் சம்­ப­வங்­க­ளு­மாகும்.

முர­ளி­தரன் அவுஸ்­தி­ரே­லிய அணிக்கு பந்து வீச்சு ஆலோ­ச­க­ராக செயற்­பட்­ட­மையால் 'முரளி ஒரு துரோகி' என இலங்கை கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.

இது இவ்­வா­றி­ருக்க, சர்­வ­தேச கிரிக்கெட் சபை­யினால் கிரிக்கெட் ஜாம்­ப­வான்­களின் பட்­டி­ய­லான 'ஹோல் ஒப் பேம்' இல் முத்­தையா முர­ளி­தரன் இணைக்­கப்­பட்­டுள்ளார். இதன்­படி இந்த 'ஹோல் ஒப் பேம்' பட்­டி­யலில் இடம்­பெறும் முத­லா­வது இலங்­கையர் என்ற பெரு­மையை முத்­தையா முர­ளி­தரன் ஆளா­கின்றார்.

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட் (800) மற்றும் சர்­வ­தேச ஒரு நாள் போட்­டி­களில் (534) அதிக விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­யவர் என்ற மகத்­தான சாத­னைக்குச் சொந்­தக்­கா­ர­ராக முத்­தையா முர­ளி­தரன் பெற்றுள்ளார்.

முத்­தையா முர­ளி­தரன் 'ஹோல் ஒப் பேம்' பட்­டி­ய­லுக்கு இணைத்துக் கொண்­ட­மையை அடுத்து, இந்த யுகத்தில் உரு­வான கிரிக்கெட் வீரர்­களில் முர­ளி­தரன் திற­மை­யா­னவர் ஆவார் என சர்­வ­தேச கிரிக்கெட் சபையின் பிர­தான நிறை­வேற்று அதி­கா­ரி­யான டேவ் ரிச்­சர்ட்சன் தெரி­வித்­துள்ளார். எனினும், சர்­வ­தேச கிரிக்கெட் சபை­யினால் பெய­ரி­டப்­பட்­டுள்ள இத்­த­கைய திற­மை­யா­னவர் இலங்கை கிரிக்கெட் சபை­யினால் 'துரோகி' யாகப் பார்க்­கப்­ப­டு­வது விநோ­த­மா­ன­தாகும்.

முர­ளி­த­ரனின் கிரிக்கெட் வர­லாற்றில் அவுஸ்­தி­ரே­லியா என்­பது முக்­கி­ய­மான ஓர் விட­ய­மாகும். அந்­த­ளவு தூரம் அவ­ரது சுழற்­பந்து வீச்சு சர்ச்­சையை தோற்­று­வித்­தி­ருந்­தது. எந்­த­வொரு விட­யத்தை சாதிப்­ப­தற்கும் சோத­னையை சந்­தித்தே ஆக­வேண்டும். இல்­லை­யெனில் சாத­னைக்கு மதிப்­பி­ருக்­காது. இது போல ''முர­ளி­தரன் பந்தை எறி­கிறார்'', ''அவரின் பந்து வீச்சு முறை சர்­வ­தேச கிரிக்கெட் விதி­மு­றைக்கு அப்­பா­லா­னது'' என அவர் மீது அவுஸ்­தி­ரே­லிய நடு­வர்­களும் அவுஸ்­தி­ரே­லி­யர்­களும் மிகவும் மோச­மாகக் குற்றம் சாட்­டி­யி­ருந்­தனர். அந்த குற்­றச்­சாட்டை மறுத்து தனது பந்­து­வீச்சுப் பாணி சரி­யென அவர் அன்று நிரூ­பித்­தி­ருந்தார்.

இலங்­கையில் எழுந்த சர்ச்­சைகள் தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த முத்­தையா முர­ளி­தரன்,

''எனது தாய் நாட்­டுக்கு நான் ஒரு­போதும் துரோகம் செய்­ய­வில்லை. அவர்கள் (கிரிக்கெட் அவுஸ்­தி­ரே­லிய) என்­னிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தனர். அதற்கு நான் உடன்­பட்டேன். அவர்கள் என்­மீது கொண்ட நம்­பிக்­கைக்கு நான் நன்றி கூறு­கின்றேன். ஏனெனில், அன்று அவர்கள் என்னைக் குற்­ற­வா­ளி­யாக பார்த்­தி­ருந்­தாலும், இன்று அவர்­களால் விடுக்­கப்பட்ட இந்த அழைப்பின் மூலம், என்னை அவர் கள் பெரு­மை­ப­டுத்­து­வ­துடன், குற்­ற­மற்­ற வன் என ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவே நான் பார்க்­கின்றேன். அத்­துடன், என் மீது குற்றம் சுமத்­தி­யி­ருந்­தமை தவறு என்­பதை நிரூ­பிப்­ப­தற்­கா­கவே நான் அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் நிறு­வ­னத்தின் அழைப்பை ஏற்­றுக்­கொண்டேன். அதிலும் வெறும் பத்து நாட்­க­ளுக்கு மாத்­தி­ரமே நான் அவர்­க­ளுக்கு பந்­து­வீச்சு குறித்து ஆலோ­சனை வழங்க முன்­வந்தேன். முழுத் தொட­ருக்­கு­மான பந்து வீச்சு ஆலோ­ச­க­ராக அழைப்பை நான் ஏற்­க­வில்லை. ஏனெனில், தாய் நாட்­டுக்­கெ­தி­ரான போட்­டியின் போது அவுஸ்­தி­ரே­லிய உடை மாற்றும் அறையில் இருப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல. ''

''மேலும், நான் சர்­வ­தேச அரங்­கி­லி­ருந்து ஓய்­வு­பெற்று 5 வரு­டங்கள் ஆகி­விட்ட நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு பயிற்­சி­களை வழங்­க­வென, இலங்கை கிரிக்கெட் நிறு­வனம் ஒரு­போ தும் என்னை அணு­கி­ய­தில்லை. நான் தாய் நாட்­டுக்கு செய்­ததில், நூற்­றுக்கு ஒரு வீதம் கூட இன்று இலங்கை கிரிக்கெட் சபையில் உள்­ள­வர்கள் செய்­த­தில்லை என்­பதை இங்கு

சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின் றேன்'' இவ்வாறு

முத்­தையா முர­ளி­தரன் ஊட­கங்­க­ளுக்கு தெரி

­வித்­தி­ருந்தார்.

இலங்­கைக்கு எதி­ரான கிரிக்கெட் தொட­ருக்கு அவுஸ்­தி­ரே­லிய அணியின் பந்­து­வீச்சு ஆலோ­ச­க­ராக முர­ளி­தரன் செயற்­ப­டு­கின்­ற­மையே இந்த எதிர்ப்­புக்கு பிர­தான கார­ண­மாகும். இத­னையே இலங்கை கிரிக்கெட் நிர்­வா­கத்­தினர் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

இவ்­வாறு முர­ளி­தரன் அவுஸ்­தி­ரே­லிய அணியின் பந்து வீச்சு ஆலோ­­சக­ராக செய

ற்­பட்­ட­மையை சிலர் இன­வா­தத்தை தூண் டும் வித­மான கருத்­துக்­களை தெரி­விக்­கின்­றனர். முரளி ஓர் 'தமிழர்' என்ற கார­ணத்­தினால் இன­வாதம் சார்ந்த துவேச கருத்­துக்­களை சிலர் இணை­யத்­த­ளங்­க­ளிலும், சமூக வளைத்­த­ளங்­க­ளிலும் வெளி­யிட்­டுள்­ளனர். இது முர­ளிக்கு மாத்­தி­ர­மல்ல தன் தாய் நாட்டை நேசிக்கும் ஒவ்­வொரு இலங்­கை­ய­னுக்கும் வேத­னை­ய­ளிக்­கக்­கூ­டிய ஒரு விட­ய­மாகும்.

இலங்கை அணிக்­காக முர­ளி­தரன் வெற்­றி­களை குவித்­த­வேளை, கைதட்டி ஆர­வாரம் செய்து முர­ளியை கொண்­டா­டிய இலங்கை கிரிக்கெட் அபி­மா­னி­களே இன்று தூற்­று­வது மிகவும் வெட்­கக்­கே­டான செய­லாகும்.

இதே­வேளை, முர­ளி­தரன் 'ஹோல் ஒப் பேம்' பட்­டி­யலில் இணைக்­கப்­பட்ட செய்தி

அறிந்­ததும் முழு கிரிக்கெட் உல­க­முமே அவரை வாழ்த்­தி­யி­ருந்­தது.

அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யி­லான இலங்கை கிரிக்கெட் அணி­யா­னது, 1996 ஆம் ஆண்டு நடை­பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடரில் உலகக் கிண்­ணத்தை கைப்­பற்­றி­யது.

இதன்­போது அவுஸ்­தி­ரே­லி­ய­ரான டேவ் வட்மோர் இலங்கை அணிக்கு தலைமை பயிற்­சி­யா­ள­ராக செயற்­பட்டார். தொடரின் இறுதிப் போட்­டியில் இலங்கை அணி அவுஸ்­தி­ரே­லிய அணியை எதிர்த்து விளை­யாடி உலகக் கிண்­ணத்தை வென்­றது. இதன்­போது அவுஸ்­தி­ரேலிய கிரிக்கெட் நிறு­வ­ன­மா­னது டேவ் வட்மோர் மீது எது­வித குற்­றமும் சுமத்­த­வில்லை. அதனை அவர்கள் விளை­யாட்டின் ஒரு அங்­க­மா­கவே நோக்­கினர். இது போன்று முர­ளியின் விட­யத்­தையும் பெரி­து­ப­டுத்தத் தேவை­யில்லை என கிரிக்கெட் ஆர்­வ­லர்கள் கரு­து­கின்­றனர்.

இலங்கை –- அவுஸ்­தி­ரே­லியா அணிகள் மோதும் டெஸ்ட் தொட­ரா­னது நான்­கா­வது முறை­யா­கவும் வோர்ன் –- முரளி என்ற பெய­ரி­லேயே நடை­பெற்று வரு­கி­றது. முர­ளியின் பெயரில் நடத்­தப்­படும் தொட­ருக்கு எதி­ர­ணிக்கு ஆலோ­ச­க­ராக செயற்­ப­டு­கின்­ற­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என இலங்கை கிரிக்கெட் சபை தெரி­வித்­துள்­ளமை கவ­னிக்­கத்­தக்க விட­ய­மாகும்.

இதே­வேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர­ரான திலான் சம­ர­வீர அவுஸ்­தி­ரே­லிய அணியின் துடுப்­பாட்ட ஆலோ­ச­க­ராக செயற்­ப­டு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க, ருவன் கல்­பகே போன்ற முன்னாள் இல ங்கை கிரிக்கெட் வீரர்கள் வேறு நாட்டு கிரிக்கெட் அணி­க­ளுக்கு பயிற்­று­நர்­க­ளாக செயற்படுகின்றமையும் கவனிக்கத்தக்க விடயமாகும். அது போல இலங்கை கிரிக் கெட் அணிக்கும் வெளிநாட்டவர்கள் பயிற் றுநர்களாக செயற்பட்டுள்ளனர். செயற்பட் டும் வருகின்றனர்.

இவற்றை தடுப்பதாயின் இலங்கையி லுள்ள திறமையானவர்கள் பயிற்று நர்க ளாக தெரிவு செய்யப்பட வேண்டும். இது போன்ற பிரச்சினைகளை எதிர் காலத்தில் தோற்றுவிக்காமல் இருப்பதற்கு உறுதுணை யாக அமையும் என கிரிக்கெட் ஆர்வலர் கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு முறை விதிமுறைக்கு அப்பாற்பட்டது என அவுஸ்திரேலியா கூறியிருந்ததுடன், குற்றவாளியாகவும் பார்த்து வந்தது. இன்று குற்றம் சாட்டியவர்களே முரளியை தேடி வந்துள்ளமை முரளிக்கு கிடைத்த மாபெ ரும் வெற்றியாகும்.

 

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=19&editionDate=31/07/2016

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.