Jump to content

ஒரு வருடமாக தயாராகி வந்த ம்யூனிக் தாக்குதல்தாரி


Recommended Posts

ஒரு வருடமாக தயாராகி வந்த ம்யூனிக் தாக்குதல்தாரி

 

ம்யூனிக்கில் கடந்த வெள்ளியன்று 9 பேரை சுட்டுக் கொன்ற 18 வயது துப்பாக்கிதாரி, அந்த தாக்குதலுக்கு ஒரு வருடமாக தயாராகி வந்ததாக ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

160723200920_flowers_are_laid_in_front_o
 

தாக்குதல்தாரியான டேவிட் அலி சன்பாலி முன்னர் துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்ட விநெண்டன் பள்ளிக்கூடத்திற்கு விஜயம் செய்து புகைப்படங்களை எடுத்த்தாக பவாரியன் அரசு குற்றவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் தாக்குதல்தாரி, சிறப்பு மென்பொருளை மட்டுமே பயன்படுத்தி வாங்கக் கூடிய டார்க் வெப் என்ற வளைதலத்தில் தான் க்ளாக் வகை துப்பாக்கியை வாங்கியதாக பவாரியன் அரசு குற்றவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல்தாரி குறிப்பிட்டு யாரையும் குறிவைத்ததாக ஆதாரங்கள் இல்லை என அரசு வழக்கறிஞர்களின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் உள்துறை அமைச்சர் தாமஸ் டி மைசிரி, தாக்குதலைத் தொடர்ந்து துப்பாக்கி குறித்த சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஜேர்மனிய அரசு ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சி செய்கின்றது என இங்கு பலர் பேசிக்கொள்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

வெளிநாட்டவரே வெளியேறு என கத்தியபடி சுட்டதாக கூறப்படுகிறது. மிக அமைதியானவர் எனவும் துருக்கி காரர்(நான் நினைக்கிறேன்)  இவரை நக்கல் அடித்து,வெருட்டி(bullying) இவர் பொறுமையின்  எல்லைக்கு சென்றுள்ளாராம்.மனநிலை சரியில்லாமல் மருத்துவரிடம் சில முறை சென்றுள்ளார். நிச்சயமாக இவர் பழிவாங்கத்தான் சுட்டுத்தள்ளியுள்ளார். துப்பாக்கி வாங்குவதில் மிகுந்த கட்டுப்பாடு உள்ள ஜேர்மனியில் துப்பாக்கிகளும் ரவைகளும் வாங்கி சுட்டுள்ளார் என்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. யாராவது உதவி இருக்க கூடும் என சந்தேகிக்கப்பது நியாயமானதே.

Link to comment
Share on other sites

மியூனிச் தாக்குதல்: வரமாகவும் சாபமாகவும் அமைந்த இணையம்
 
 

article_1469357308-Germanababibdjd.jpgஜேர்மனியின் மியூனிச் நகரில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில், பல்பொருள் அங்காடி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்றில், ஒன்பது பேர் கொல்லப்பட்டதோடு, 16 பேர் காயமடைந்த நிலையில், அந்தத் தாக்குதல் தொடர்பாக சமூக ஊடக இணையத்தளங்களின் பார்வை, கவனத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஈரான் - ஜேர்மன் பிரஜையான 18 வயதான டேவிட் அலி சொன்பொலி என்ற இளைஞன், தனது தாக்குதலைத் திட்டமிடுவதற்காக சமூக ஊடக இணையத்தளங்களையும் இணையத்தையும் பயன்படுத்தினான் என, விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து, தகவல்களைப் பரிமாறுவதற்கு, முக்கியமான கருவியாக சமூக ஊடக இணையத்தளங்கள் அமைந்தன. டுவிட்டர் மூலமாகத் தகவலை வெளியிட்ட ஜேர்மன் பொலிஸார், தாக்குதலாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக, விரைவாக இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்ததோடு, பொது இடங்களைத் தவிர்க்குமாறும் கோரினர்.

அதனைத் தொடர்ந்து, இச்சம்பவத்தைக் கண்டோர், தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பிக்க, அதனோடு இணைந்து, பொய்களும் பரவத் தொடங்கின. குறிப்பாக, இன்னோர் இடத்திலும் தாக்குதல்கள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தவிர, பொலிஸார் தங்களது நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க, அந்த நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் பரவத் தொடங்கின. இதன் ஆபத்து நிலைமையை உணர்ந்த பொலிஸார், அவ்வாறு பகிர்கின்றமை, சந்தேகநபர்களுக்கு ஆதரவாக அமையுமெனவும் அவ்வாறு செயற்பட வேண்டாமெனவும் தெரிவித்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/177814#sthash.pqmPwNlO.dpuf
Link to comment
Share on other sites

ஜேர்மனிய முனிச் நகர துப்பாக்கிச் சூட்டின் போது இரட்டை சகோதரியை காப்பாற்ற உயிர்த் தியாகம் செய்த இளைஞர்
ஹுஸைன் டேயிசிக்
showImageInStory?imageid=286595:tn
 
showImageInStory?imageid=286596:tn
 

ஜேர்மனிய முனிச் நகரிலுள்ள ஒலிம்பியா விற்பனை நிலையத் தில் கடந்த வெள்ளிக்கிழமை அலி சன்போலி என்ற 18 வயது ஆயுததாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது, இளை ஞர் ஒருவர் தனது இரட்டைச் சகோதரியின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரைத் தியாகம் செய்த சம்பவம் தொடர்பான தகவல் ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது.

கிரேக்க வம்சாவளியினத்தைச் சேர்ந்த ஹுஸைன் டேயிசிக் (19 வயது) என்ற இளைஞரே இவ்வாறு தனது சகோதரிக்காக உயிர்த் தியாகம் செய்துள்ளார்.

துப்பாக்கிதாரி தனது சகோதரியை நோக்கி சூட்டை நடத்தத் தயாரான வேளை, ஹுஸைன் டேயிசிக் பாய்ந்து சென்று தனது இரட்டைச் சகோதரியை ஒரு புறமாக தள்ளி விட்டு துப்பாக்கி ரவைகளை தனது உடலில் ஏந்தியுள்ளார். இதன்போது இரு துப்பாக்கி ரவைகள் ஹுஸைன் டேயிசிக்கின் உடலை ஊடுருவியுள்ளன.

தனது குடும்பத்தினருக்கு அன்பளிப்புகளை வாங்கும் முகமாக தனது இரட்டைச் சகோதரியுடன் குறிப்பிட்ட விற்பனை நிலையத்துக்கு ஹுஸைன் டேயிசிக் வந்த போது அந்த விற்பனை நிலையத்திலிருந்த உணவகமொன்றுக்கு அருகில் வைத்து அவர் துப் பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=25/07/2016

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.