Jump to content

கபாலி படத்துக்கு குடும்பத்தோடு போகாதீங்க.. ஏமாற்றம் தான் மிஞ்சும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் இந்த வாரம் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தை கபாலி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இப்படத்துக்கு தயாரிப்பாளர் தாணுவின் ப்ரோமோஷன் அனைவரையும் எதிர்பார்ப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

ஆனால் நேற்று வெளியான இப்படத்திக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.

பல இடங்களில் அதிர வைக்கும் டிக்கெட் விலையால் ரசிகர்கள் கடுப்பாகினர். இப்படத்துக்கு யு சர்ட்டிபிக்கெட் தான் கொடுக்கப்பட்டது. ஆனால் பல வெளிநாடுகளில் இப்படத்துக்கு 15 வயதுக்கு மேற்ப்பட்டவர்களை மட்டும் தான் அனுமதிக்கின்றனர்.

இதுபற்றி டிக்கெட் புக்கிங் செய்யும் போதே சரியான தகவல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது எந்த தகவல்களும் கொடுக்கப்படாததால் பிரித்தானியாவில் பலர் குழந்தைகளோடு குடும்பமாக திரையரங்குக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்ப வந்துட்டேன்னு சொல்லி புலம்பி தவித்துள்ளனர்.

படத்துக்கு வேறு நெகட்டிவ் கமெண்டுகள் வரும் நிலையில் இனியும் இப்படத்தை பார்க்க மாட்டோம் என்று கடுப்புடன்தான் திரும்பி சென்றுள்ளனர்.

மேலதிக விபரங்கள் அறிய

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90

http://www.tamilwin.com/uk/01/111907

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகனவர்களின் இலவசத் தகவலால் இலவசமாகப் பார்த்தேன்.  சில சண்டைக்காட்சிகளுக்காகப் பதினைந்துவயதுக் கட்டுப்பாடாக இருக்கலாம். ஆங்காங்கே தமிழரோடு தொடர்புடைய விடயங்களைத் தொட்டுச் செல்கிறார்கள். முடிவு இன்னொரு கபாலிக்கா முடிவா என்று யோசிக்க வைக்கிறது. 

மணிவாசகனவர்களின்  தகவலுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

கபாலி படம் ஏமாற்றத்தை தருகிறது: இயக்குனர் சமுத்திரக்கனி ஓப்பன் டாக்

  கபாலி படம் ஏமாற்றத்தை தருகிறது: இயக்குனர் சமுத்திரக்கனி ஓப்பன் டாக்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் கபாலி. இந்த படத்தை பார்த்து விட்டு பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தனது டுவிட்டர் பக்கத்தில் படம் பற்றிய தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

1469172696-2829.jpg

கபாலி திரைப்படத்தில் ரஞ்சித்தின் திரைக்கதை மற்றும் பின்னணி இசை மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக ஓப்பனாக தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி கூறியுள்ளார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதால் பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அவர் அதனை நீக்கிவிட்டார்.

கபாலி வியாபாரம் முழு விவரம்

Jul 22, 2016
 
கபாலி வியாபாரம்  முழு விவரம்

ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தை ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு குறிப்பிட்ட விலைக்கு இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வியாபாரம் செய்துள்ளார். ஒவ்வொரு ஏரியாவிலும் ‘கபாலி’ எவ்வளவு தொகைக்கு வியாபாரம் ஆனது என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி,

சென்னை சிட்டி - ரூ. 6.30 கோடி 

செங்கல்பட்டு - ரூ. 14.00 கோடி

கோயம்புத்தூர் - ரூ. 13.00 கோடி

மதுரை - ரூ. 8.10 கோடி

திருச்சி / தஞ்சாவூர் - ரூ. 7.40 கோடி

சேலம் - ரூ. 6.40 கோடி

திருநெல்வேலி / கன்னியாகுமாரி - ரூ. 4.85 கோடி

தென் ஆற்காடு - ரூ. 3.95 கோடி

வட ஆற்காடு - ரூ. 4.50 கோடி

தமிழ்நாட்டில் மட்டும் ரூ.68.50 கோடிகளுக்கு ‘கபாலி’ வியாபாரம் ஆகியுள்ளது. இதுதவிர, மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும், சாட்டிலைட் உரிமம், ஆடியோ உரிமம் ஆகியவற்றிலும் குறிப்பிட்ட விலைக்கு வியாபாரம் ஆகியுள்ளது. அதை கீழே பார்ப்போம்..

ஆந்திரா / தெலுங்கனா (தியேட்டர் மற்றும் சாட்டிலைட் உரிமை) - ரூ. 32.00 கோடி

கர்நாடகா (அனைத்து மொழிகளுக்கும்) - ரூ. 10.50 கோடி

கேரளா (தியேட்டர் மற்றும் சாட்டிலைட் உரிமை) - ரூ. 7.50 கோடி

வடஇந்தியா (தியேட்டர் (அனைத்து மொழிகளுக்கும்) மற்றும் சாட்டிலைட் உரிமை) - ரூ. 15.50 கோடி

வெளிநாடு (அனைத்து மொழிகளுக்கும்) - ரூ. 34.00 கோடி

தமிழ் சாட்டிலைட் உரிமை - ரூ. 30.00 கோடி

ஆடியோ உரிமை (அனைத்து மொழிகளுக்கும்) - ரூ 3.00 கோடி

ஆக மொத்தம் - ரூ.201 கோடி.

வெளியாவதற்கு முன்பே ரூ.201 கோடி வரை சம்பாதித்து விட்ட ‘கபாலி’ படம் வெளியான பிறகு எவ்வளவு சம்பாதிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இருப்பினும், இதுவரை பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ள ‘கபாலி’ படம் வெளியான பிறகு வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என சினிமா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

http://www.tamil.2daycinema.com/news-id-kapali-wholesale-full-details-22-07-162930.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த படத்தை பார்த்துதான் படம் ஊத்திக்கிட்டு என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை......அடுத்த ரஜானியின் படமும் இப்படித்தான் இருக்கும் ....ஆனால் விளம்பரஏஜன்ட்களும் ,பத்திரிகைக்காரர்களும் ஆகா ஒகோ தலைவரின்ட படம் வருகின்றது என்று பப்பிளிஸ்டி செய்வாரகள் சனமும் போய் பார்க்கும் பார்த்து போட்டு தலைவரின்ட படம் ஊத்திக்கிச்சு என்று புலம்பும் மீண்டும் அடுத்த படத்திற்கு பாலாபிசேகம் செய்ய தயாராகிவிடும்..... இது ஒரு தொடர்கதை தான்...வியாபாரிகளுக்கு ஏற்ற படம்  ....ரஜனி என்ற விம்பத்தை வைத்து பணம் சம்பாத்திக்க முடியும் என்பதை மீண்டும் நிருபித்துள்ளனர்......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.