Jump to content

அம்பனும் குரங்கும்.


Recommended Posts

அம்பனும் குரங்கும்.

நோர்வேயில் இருந்து வந்த எனது நண்பனை பார்க்க அம்பனுக்கு இன்று போயிருந்தேன். இதுவரையில் பருத்தித்துறைக்கு பஸ்ஸிலே போகாத எனக்கு நேரம் கணிப்பிட முடியவில்லை. எப்படியும் ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை என்று யோசித்தபடி பஸ்ஸில் ஏறி அம்பனுக்கு போக எடுத்தது இரண்டரை மணிநேரம். அட யாழ் குடாநாட்டுக்குள்ளே இருக்கிற அம்பனுக்கு போக இவ்வளவு நேரமா?

அம்பன் என்பது பருத்தித்துறை நாகர்கோவில் வீதியில் குடத்தனைக்கும் நாகர்கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் வாழும் ஒரு கிராமம். வெறும் பனையும் மணலும் கட்டாந்தரையுமா இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் போன எனக்கு ஆச்சரியம்தான் மிஞ்சியது. பச்சை பசேலென்று காணிகளும், வீடுகளும், நெல்லு இல்லாத காய்ந்த வயல்களும் மதவுகளில் இளசுகள், ஹெல்மட் இல்லாமலே மோட்டார் வண்டியில் பயணிக்கும் மனிதர்களும், குடும்பங்களும் - இது வேறு ஒரு உலகம்தான். 

....

உணவையும் முடித்துவிட்டு நானும் நண்பனும்  மதவில் பஸ்ஸுக்கு காத்திருந்தபோது, நண்பனின் குடும்பமே சேர்ந்து வந்தது. வீதியில் வருவோர் போவார் எல்லாம் சுற்றம். அவர்களும் சேர்ந்து காத்திருந்தார்கள் எனது பஸ்ஸுக்கு. 

அன்பான உபசரிப்பு, அழகான கிராமம், அன்பான மனிதர்கள். பொறாமையாக இருக்குது.

எனக்குத்தெரிய யாழ் மாவட்டத்தில் ஒரு மாநகர சபையும் (யாழ்ப்பாணம்) இரு நகர சபையும் (பருத்தித்துறை, காங்கேசன்துறை) இருந்தன - (தவறு இருந்தால் தகவல் தரவும். பருத்தித்துறையை பார்க்கும்போது அதன் வளர்ச்சி எனக்கு பொறாமையா இருக்குது.

எனது காங்கேசன்துறையே நீ மறுபடியும் எழுவாயா?

ஆமா இதுக்குள்ள எப்படி குரங்கு வந்தது?

அம்பனில் குரங்குகளின் அட்டகாசம் சொல்லி மாளாது. சாவகச்சேரி புகையிரத நிலம் அருகில் உள்ள மரத்தில் குரங்கை கண்டு ஆச்சரியப்பட்ட எனக்கு நண்பனின் குடும்பம் சொல்லிய கதைகள் நம்ப முடியாமல் இருந்தது. எப்பாவது ஒன்றிரண்டு வந்து போகுமாக்கும் என்று எண்ணியபடி வேறு விடயங்களை கதைத்து கொண்டிருந்தேன். 

தட புட என்று கூரை மேல ஒரே சத்தம், ஆச்சிரியத்துடன் பாத்த எனக்கு நண்பர் - உனது மூதாதையர்தான் வெளியில போய் பார் என்றார். வெளியே போனா ஒரு கூட்டமா ஒரு 25 ஆவது இருக்கும். மாமரத்தில் உள்ள பிஞ்சுகளை புடுங்கி ஒரு கடி கடிச்சுப்போட்டு கீழ போடுதுகள். இந்த கிராமத்திலேயே  இப்ப மாம்பழம் கிடையாதாம், மாதுளம்பழம் இல்லையாம், தேசிக்காய் வராதாம், முகட்டு ஓடுகள் இல்லை. 

வெடியை கொளுத்தி போட்டாலும் ஏளனமா பாக்குதுகள். நானும் கமராவை தூக்கி கொண்டு வந்தன் - அம்புட்டுதான் பாஞ்சு ஓடீட்டுதுகள். எனக்கு பயமா இல்லை காமராவுக்கா என தெரியாது.

இப்பவெல்லாம் நெல், வெங்காயம் தவிர வேறு எந்த பயிர்செய்கைகளும் இங்கு இல்லையாம்.

நண்பர்களே ஏதாவது பண்ணுங்கள்.ஆர்மியைத்தான் விரட்ட முடியவில்லை, இந்த குரங்குகளையாவது விரட்டலாமே.

13754686_1353874114625928_72924367166657

13707652_1353874394625900_54697877513822

13754224_1353874447959228_70367954830379

13692662_1353874421292564_64523661766723

13754527_1353874674625872_32677020544287

13781774_1353874597959213_19270291413417

13754452_1353874731292533_27684231614613

13716100_1353874971292509_58581456269873

13716052_1353874981292508_60975355610822

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊர் பெயர்  அடம்பனா அல்லது அம்பனா அண்ணே??? 

Link to comment
Share on other sites

 ஜீவன்,

சாவகச்சேரியும் நகரசபை என்று நம்புகிறேன். ஆனால் இப்ப இன்னும் பல நகரசபைகள் இருக்கவேணும்.

தொடருங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து வாழ்வு ஒரு போதும் சலிக்காது.நகரத்தில் உள்ளவன் 3 நாள் ஊரடங்கு சட்டம் போட்டால் கதை காலி.ஒரு மாதம் ஊரடங்குச் சட்டம் போட்டாலும் சாதாரண வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

நானும் அடம்பன் என்று கேள்விப்பட்டுள்ளேன்.இப்ப தான் அம்பனைப் பற்றி அறிந்துள்ளேன்.நன்றி ஜீவா.

Link to comment
Share on other sites

10 minutes ago, முனிவர் ஜீ said:

இந்த ஊர் பெயர்  அடம்பனா அல்லது அம்பனா அண்ணே??? 

அடம்பன் மன்னாரில் இருக்கு..

Link to comment
Share on other sites

6 minutes ago, முனிவர் ஜீ said:

இந்த ஊர் பெயர்  அடம்பனா அல்லது அம்பனா அண்ணே??? 

அம்பன்

2 minutes ago, நவீனன் said:

 ஜீவன்,

சாவகச்சேரியும் நகரசபை என்று நம்புகிறேன். ஆனால் இப்ப இன்னும் பல நகரசபைகள் இருக்கவேணும்.

தொடருங்கள்..

சாவகச்சேரி (Urban Council)பட்டினசபை. இப்போது இந்த சிஸ்டெம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

நண்பர்களே ஏதாவது பண்ணுங்கள்.ஆர்மியைத்தான் விரட்ட முடியவில்லை, இந்த குரங்குகளையாவது விரட்டலாமே.

 

பதிவுக்கு நன்றி!
அனைத்துலக விதிகளுக்கு முரணான கோரிக்கைகளை வைக்கக்கூடாது. அவர்களின் இடத்தைக் கிராமமாக்கிவிட்டு என்ன நியாயமையா? 
சில குரங்குகள் கிட்டப்போனால் துரத்தும். சிறுவர்கள் கவனம்! 
நிழற்படங்கள் அழகு.

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

 ஜீவன்,

சாவகச்சேரியும் நகரசபை என்று நம்புகிறேன். ஆனால் இப்ப இன்னும் பல நகரசபைகள் இருக்கவேணும்.

தொடருங்கள்..

நானும் காங்கேசன்துறை ஒரு நகர சபை town council என்பதுக்கான ஆதாரத்தை தேடினேன். எங்கும் இல்லை - எமது மனங்களை தவிர. விக்கிகூட காங்கேசன்துறையை ஒரு கிராம சபையாகக்கூட குறிப்பிடவில்லை. திட்டமிட்ட ஒரு அழிப்பு. இங்கு மனிதர்களே வாழவில்லை என்பதை யாரோ எதுக்கோ நிரூபிக்க முயல்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

Link to comment
Share on other sites

நீங்கள் காங்கேசன்துறையை  நகரசபை என்றபோது என்மனதில் இந்த கேள்வி எழுந்தது. நானும் தேடி பார்த்தேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில மாதங்களுக்கு முன்னர் எழுதுமட்டுவாளில் குரங்குகளின் அட்டகாசம் பொறுக்க முடியாத விவசாயி இருப்பு கம்பியினால் பொறி செய்து குடும்பம் குடும்பமாக பிடித்து நாடு கடத்திய ஞாபகம் அதே முறையில் இவைகளை கையாளலாம் .

பி கு : இந்த வீதியினால் நானும் பயணித்து இருக்கின்றேன் பல விடங்களை தொட்டு சென்ற நீங்கள் வீதியை பற்றி எழுதவில்லையே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஊரில் இருக்கும்போது 
ஒரு மரியாதையான உடன்படிக்கை அவர்களுக்கும் எங்களுக்கும் இருந்தது 
(மக்கள் இரு பகுதியையும் குரங்குகள் என்று அழைத்து வந்தால் அது வந்திருக்குமோ தெரியவில்லை) 
நாங்கள் புழங்கும் இடங்கள் 
வீட்டு காணிகளுக்கு நீங்கள் வர கூடாது 
நாங்களும் உங்கள் காட்டு பக்கம் வரமாடடோம் ..
வந்தாலும் தொல்லை தரமாடடோம் என்று ஒரு எழுதாத விதி இருந்தது.

இங்கு வந்தால் அவர்கள் ஓரிருவர் இறப்பது என்பது முடிவானது.

இப்போ ஊரில் ஒற்றுமை இன்மை ... போன்ற விடயங்கள் காரணமாக இருக்கலாம்.
அல்லது காடுகள் வீடுகள் ஆகி இருக்கலாம் 
அவர்களுக்கும் உணவு தேவையான ஒன்று! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

palai_monkey_002.jpgpalai_monkey_001.jpg

Link to comment
Share on other sites

16 hours ago, தமிழரசு said:

பி கு : இந்த வீதியினால் நானும் பயணித்து இருக்கின்றேன் பல விடங்களை தொட்டு சென்ற நீங்கள் வீதியை பற்றி எழுதவில்லையே ?

சில விடயங்களை நாசூக்காகத்தான் கூற முடியும் - இல்லையெனில் என்னையும் வந்தேறு குடி என்று மறுபடியும் பிளேனில ஏத்தி நோர்வேக்கு நாடு கடத்தி விடுவார்கள்.

16 hours ago, கலைஞன் said:

ஜீ.சி, கே.கே.எஸ் இலும் குரங்குகள் நிறைய தற்போது இருக்கிதாமே? காணவில்லையா?

அது வேற, இது வேற.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இப்போது தான் கேள்வி படுகிறேன் இந்த ஊர் பெயரை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் ஆண்டவரின் படங்கெல்லாம் இரண்டு மூன்று வருடங்களுக்கு முற்பட்டது போல .... என்னும் அப்டேட் செய்ய வில்லை போல் இருக்கின்றது 

29 minutes ago, முனிவர் ஜீ said:

நன்றி இப்போது தான் கேள்வி படுகிறேன் இந்த ஊர் பெயரை ?

என்ன, முனிவர் ஜீ இந்த ஊரை தெரியாதா ? இதுதான் கூட்டமைப்பில் உள்ள சுமந்திரனின் ஊருக்கு பக்கத்து ஊர். 

Link to comment
Share on other sites

4 minutes ago, தமிழரசு said:

கூகிள் ஆண்டவரின் படங்கெல்லாம் இரண்டு மூன்று வருடங்களுக்கு முற்பட்டது போல .... என்னும் அப்டேட் செய்ய வில்லை போல் இருக்கின்றது 

என்ன, முனிவர் ஜீ இந்த ஊரை தெரியாதா ? இதுதான் கூட்டமைப்பில் உள்ள சுமந்திரனின் ஊருக்கு பக்கத்து ஊர். 

தமிழ் அரசு -  உண்மையில் சுமந்திரன் எந்த ஊர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

தமிழ் அரசு -  உண்மையில் சுமந்திரன் எந்த ஊர்.

குடத்தனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

தமிழ் அரசு -  உண்மையில் சுமந்திரன் எந்த ஊர்.

அவரின் சொந்த ஊர் குடத்தனை என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். அவர் பிற்காலத்தில் கொழும்பில் இருந்து கல்வி கற்றதாகவும் பின்னர் அப்படியே  கொழும்பில் வாழ்ந்து வந்திருக்கின்றார் .  

Link to comment
Share on other sites

5 minutes ago, நந்தன் said:

குடத்தனை

நன்றி.

எனக்கு யாழ் குடாநாட்டின் மேற்குப்புறம் ஓரளவு தெரியும் கிழக்கு புறம் பெரிதாக பரீச்சயமில்லை.

ஆனாலும் எனது பார்வையில் யாழ் குடாநாட்டின் பெரிய நகரம் பருத்தித்துறை என்றுதான் தெரிகிறது. யாழ்ப்பாணம் இல்லை.

சண்டைக்கு வருபவர்கள் தாராளமாக வரலாம். இது எனது கருத்து மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பெரிதாக தெரியாது ஓரளவுக்கு தெரியும் எண்பதுகளில் ஆரம்பத்தில் பல இடங்களுக்கு சென்று பார்த்திருக்கின்றேன் .

Link to comment
Share on other sites

1 minute ago, தமிழரசு said:

எனக்கும் பெரிதாக தெரியாது ஓரளவுக்கு தெரியும் எண்பதுகளில் ஆரம்பத்தில் பல இடங்களுக்கு சென்று பார்த்திருக்கின்றேன் .

 

5 minutes ago, ஜீவன் சிவா said:

ஆனாலும் எனது பார்வையில் யாழ் குடாநாட்டின் பெரிய நகரம் பருத்தித்துறை என்றுதான் தெரிகிறது. யாழ்ப்பாணம் இல்லை.

சண்டைக்கு வருபவர்கள் தாராளமாக வரலாம். இது எனது கருத்து மட்டுமே.

 

Link to comment
Share on other sites

DS Division Main Town Divisional Secretary GN
Divisions
[7]
Area
(km2)
[7][8]
Population (2012 Census)[9] Population
Density
(/km2)
Sri Lankan
Tamil
Sinhalese Sri Lankan Moors Indian
Tamil
Other Total
Delft   A. Siri 6 45 3,780 38 0 1 0 3,819 85
Islands North Kayts Anton Yoganayagam 15 30 9,846 129 3 19 0 9,997 333
Islands South Velanai Manchulathevi Satheesan 30 78 16,379 6 125 15 0 16,525 212
Jaffna Jaffna Sugunarathy Theivendram 28 17 48,413 504 1,682 104 56 50,759 2,986
Karainagar Karainagar Thevanthini Babu 9 22 9,533 0 0 9 2 9,544 434
Nallur Nallur Palasingam Senthilnanthanan 40 38 67,777 199 45 21 6 68,048 1,791
Thenmarachchi Chavakachcheri Anjalidevi Santhaseelan 60 221 64,162 247 62 169 45 64,685 293
Vadamarachchi East Maruthankerney Nadarajah Thirulinganathan 18 179 12,718 1 3 16 0 12,738 71
Vadamarachchi North Point Pedro R. T. Jeyaseelan 35 29 47,183 167 12 26 1 47,389 1,634
Vadamarachchi South West Karaveddy S. Sivasri 35 88 45,495 73 18 38 4 45,628 519
Valikamam East Kopay Maruthalingam Pradeepan 31 102 72,908 252 101 35 2 73,298 719
Valikamam North Tellippalai Kanagarajah Shrimohanan 45 57 28,179 1,336 21 4 6 29,546 518
Valikamam South Uduvil M. Nanthagopalan 30 30 52,574 190 44 25 0 52,833 1,761
Valikamam South West Sandilipay Subramaniyam Muralitharan 28 45 52,039 159 18 8 2 52,226 1,161
Valikamam West Chankanai   25 44 46,260 65 5 9 4 46,343 1,053
Total 435 1,025 577,246 3,366 2,139 499 128 583,378 569

 

Local Authority Area
(km2)
[7]
Population
(2011)
[14]
Registered
Electors
(2011)[f]
Elected Members
(2011)[g]
TNA[h] UPFA UNP Other Total
         
Chavakacheri Divisional Council 200.90 48,166 37,015 12 2 1 0 15
Chavakacheri Urban Council 31.29 15,780 10,987 9 2 0 0 11
Delft Divisional Council 47.16 3,861 3,085 1 8 0 0 9
Jaffna Municipal Council 20.20 76,080 100,417 9 13 0 1 23
Karainagar Divisional Council 21.74 9,505 8,140 3 1 1 0 5
Kayts Divisional Council 45.11 10,534 6,349 1 4 0 0 5
Nallur Divisional Council 20.59 36,472 22,012 10 2 0 0 12
Point Pedro Divisional Council 220.00 39,651 25,375 7 2 0 0 9
Point Pedro Urban Council 4.62 12,161 7,376 7 2 0 0 9
Vadamarachchi South West Divisional Council 68.95 45,386 32,539 15 3 0 0 18
Valikamam East Divisional Council 102.20 70,064 46,570 16 5 0 0 21
Valikamam North Divisional Council 58.50 26,049 63,224 15 6 0 0 21
Valikamam South Divisional Council 33.26 51,612 32,857 13 3 0 0 16
Valikamam South West Divisional Council 55.24 50,971 31,022 12 4 0 0 16
Valikamam West Divisional Council 47.30 45,983 30,214 11 3 0 0 14
Valvettithurai Urban Council 5.36 8,382 5,550 7 2 0 0 9
Velanai Divisional Council 94.80 16,572 12,028 3 8 0 0 11
Total 1,077.22 567,229   151 70 2 1 224

Notes[edit]

https://en.wikipedia.org/wiki/Jaffna_District

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி அம்பன் குடத்தனையெண்டால் ஒரு நக்கலாய் பாப்பினம்....இப்ப என்ன மாதிரியெண்டு தெரியேல்லை.:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.