Jump to content

பாகற்காய் சிப்ஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி

 

பாகற்காய் சிப்ஸ் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் : 

பெரிய பாகற்காய்  - 250 கிராம் 
பெருங்காயத்தூள்  - ஒரு சிட்டிகை, 
நசுக்கிய பூண்டு  - ஒரு டேபிள்ஸ்பூன், 
கடலை மாவு  - 5 டேபிள்ஸ்பூன், 
அரிசி மாவு  - 2 டேபிள்ஸ்பூன், 
மிளகாய்த்தூள்  - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), 
மஞ்சள்தூள்  - ஒரு சிட்டிகை, 
தயிர்  - 2 டேபிள்ஸ்பூன், 
உப்பு  - தேவைக்கேற்ப, 
எண்ணெய்  - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை : 

* பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்து விடவும்.

5144BD16-776E-4970-B185-5C96DAE21B68_L_s

* வெட்டிய பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு, மஞ்சள்தூள், தயிர் சேர்த்துப் பிசிறி 20 நிமிடங்கள் ஊறவிடவும். 

441E2DE5-6343-4C91-BA4C-C5BA78A1234A_L_s

* பிறகு தண்ணீர் விட்டுக் கழுவி நீர்போக பாகற்காயை வடிகட்டவும். (இப்படிச் செய்வதால் கசப்பு தெரியாது). 

* வடிகட்டிய பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்துப் பிசிறவும். 

4B4816AD-A83E-497A-850A-0E917C023AC9_L_s

* கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காயைப் போட்டு பொரித்து எடுக்கவும். 

36484B0D-FC12-4454-9BB0-6F5532EA8D65_L_s

* எண்ணெயை வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். இவ்வாறு செய்து 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம். 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.