Jump to content

சம்பந்தனின் கருத்தும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்


Recommended Posts

13692911_1845382172361789_97918722019656

வடக்கு, கிழக்கை மைய­மாகக் கொண்ட ஒரு தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைக்க எல்லா வித­மான காய்­ந­கர்த்­தல்­களும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்ற ஒரு சூழலில், தமிழ் மக்கள் திருப்­திப்­படும் விதத்தில் அந்த தீர்வை பெற்றுக் கொடுப்­பதில் சர்­வ­தே­சமும் அர­சாங்­கமும் ஒரு புள்­ளியில் கொள்­கை­ய­ளவில் இணக்கம் கண்­டி­ருக்­கின்­றன. வடக்கு கிழக்கில் எந்த அடிப்­ப­டை­யி­லான தீர்வுப் பொதியை வழங்­கி­னாலும், அதற்கு அங்கு வாழும் முஸ்­லிம்­களின் சம்­மதம் தவிர்க்க முடி­யாத ஒன்­றாகி இருக்­கின்­றது. சிங்­கள மக்கள் ஆத­ரித்­தாலும் எதிர்த்­தாலும், முஸ்­லிம்­களை திருப்­திப்­ப­டுத்­தாத எந்த தீர்வும், தமி­ழர்­க­ளுக்கு எதிர்­பார்த்த அனு­கூ­லத்தை கொண்டு வர­மாட்­டாது என்­பதை எல்லா தரப்­பி­னரும் புரிந்து கொண்­டுள்­ளனர்.

தமி­ழர்கள் பட்ட துன்­பங்­களைப் பார்த்து, அவர்­களில் பச்­சா­தாபம் கொண்­டி­ருக்­கின்ற சர்­வ­தேசம், இது விட­யத்தில் மிகப் பெரும் ராஜ­தந்­திர நகர்­வு­களை மேற்­கொண்­டி­ருப்­ப­தாக அறி­ய­மு­டி­கின்­றது. எவ்­வா­றான தீர்வுத் திட்டம் அமையப் போகின்­றது என்ற விடயம் சர்­வ­தே­சத்­திற்கும் அர­சாங்­கத்­திற்கும் தமிழ் தரப்­பிற்கும் பிர­தான முஸ்லிம் கட்­சிக்கும் ஓர­ள­வுக்கு மேலோட்­ட­மாக தெரிந்­தி­ருக்­கலாம்.

எல்லா உள்­ள­டக்­கங்­களும் ஏற்­க­னவே பேசப்­பட்டு விட்­ட­தா­கவும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளியில் சொல்­வது மட்­டுமே மீத­மி­ருக்­கின்­றது என்றும் கூட இன்­னு­மொரு தகவல் கூறு­கின்­றது. இந் நிலை­யி­லேயே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும், முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பரஸ்­பரம் வார்த்­தை­களால் தமது நிலைப்­பா­டு­களை வெளிக்­காட்ட முனைந்­தி­ருக்­கின்­றனர். எனவே, இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்­டத்தில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் இணைப்பு என்ற விட­யத்தை முஸ்­லிம்­களின் கோணத்தில் இருந்து அணு­கு­வது தவிர்க்க முடி­யா­த­தா­கின்­றது.

வார்த்­தை­களின் ஜாலம்

வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டால் முஸ்லிம் முத­ல­மைச்­சரை ஏற்றுக் கொள்ள தயார் என்று எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் கடந்­த­வாரம் கூறி­யி­ருந்தார். இது உண்­மை­யி­லேயே முஸ்­லிம்­களை மனங்­கு­ளிர வைத்த வார்த்­தை­க­ளாகும். கிழக்கில் முஸ்லிம் முத­ல­மைச்­சரை நிய­மிக்க ஒரே கட்­சிக்­குள்­ளேயே குடு­மிச்­சண்டை பிடிக்­கின்ற நிலை முஸ்லிம் அர­சி­ய­லுக்குள் இருக்­கையில், இன்­னு­மொரு இனத்தின் அர­சியல் தலை­வ­ரான சம்­பந்தன், இணைந்த வட­கி­ழக்கில் முஸ்லிம் முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வ­ளிப்­பதை பாராட்­டாமல் விட முடி­யாது.

ஆனால், இந்த வார்த்­தையை அவர் தற்­செ­ய­லாக பேசினார் என்று அறவே கருத இட­மில்லை. சரி­யாகச் சொன்னால், வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­பது தொடர்பில் முஸ்லிம் சமூகம் என்ன நினைக்­கின்­றது என்­பதை அறிந்து கொள்­வ­தற்­கா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் அவ்­வா­றான அறி­விப்பு ஒன்றை விடுத்­தி­ருக்க வேண்டும். அதா­வது, இவ்­வி­ட­யத்தில் பிர­தான முஸ்லிம் கட்சி என கரு­தப்­படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரை பேச வைப்­ப­தற்கு, தமிழ் தேசியம் முயன்­றி­ருக்­கின்­றது.

இதற்கு மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் உட­ன­டி­யாக பதில் எதையும் வெளியி­ட­வில்லை. ஒரு கருத்­துக்கு கால­தா­மதம் இன்றி தெளிவான முறையில் பதி­ல­ளிக்கும் வழக்­கமும் அவ­ருக்கு மிகக் குறைவு. அத்­தோடு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பது பல கட்­சி­களின் கூட்­டாகும். ஆனால் மு.கா. என்­பது தனி­யொரு கட்­சி­யாகும். எனவே, கூட்­ட­மைப்பு தலைவர் தமி­ழர்­களின் நிலைப்­பாட்டை அறி­வித்­தது போன்று, முஸ்­லிம்­களின் நிலைப்­பாட்டை ஏகோ­பித்­த­தாக அறி­விக்கும் அதி­காரம் மு.கா.தலை­வ­ருக்கு இல்­லாத நிலையும் இங்கு காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் கர­வெட்­டியில் நடை­பெற்ற சிவ­சி­தம்­ப­ரத்தின் பிறந்­த­தின நிகழ்வில் உரை­யாற்­றிய மு.கா. தலைவர் ஹக்கீம், சேத­மில்­லாத விட்டுக் கொடுப்­புக்­களை மேற்­கொள்ள நாம் தயார் என்று கூறி­யி­ருக்­கின்றார்.

இது ஒரு­வ­கையில் சம்­பந்­தனின் கேள்­விக்­கான பதி­லாக எடுத்­தா­ளப்­ப­டலாம். ஆனால், தன்­னு­டைய வழக்­க­மான பாணியில் மயக்­க­மான வார்த்தை ஒன்றின் மூலம் முஸ்­லிம்­க­ளுக்கோ தமி­ழர்­க­ளுக்கோ பிடி­கொ­டுக்­காமல் பேசி­யி­ருக்­கின்றார் ஹக்கீம். இங்கு அவர் குறிப்­பிட்ட சேதம் என்ற வார்த்தை எது தொடர்­பா­னது என்­ப­தையும் அதன் ஆழ அக­லங்­க­ளையும் அறிந்­தவர் அவர் மட்­டுமே. ஆனால் முஸ்­லிம்கள் இவ்­வி­டத்தில் மிகத் தெளிவாக இருக்க வேண்­டி­யுள்­ளது.

சுய­நிர்­ணய உரி­மைக்­காக சாத்­வீக ரீதி­யா­கவும் ஆயு­தங்­களின் துணை­கொண்டும் போரா­டிய தமிழ் சமூகம், சிங்­களப் பெருந்­தே­சி­யத்தின் எச்­ச­சொச்­சங்­களை எடுத்துக் கொண்டு திருப்தி கொள்ளமாட்­டாது என்­பதே யதார்த்­த­மாகும். அந்த வகையில் வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு தீர்வுப் பொதியைப் பெறு­வதே தமி­ழர்­களின் எதிர்­பார்ப்­பாகும்.

என்­னதான் முரண்­பட்டுக் கொண்­டாலும் தமிழ்க் கட்­சிகள் எல்லாம் இவ்­வி­ட­யத்தில் ஒற்­று­மைப்­ப­டு­கின்­றன என்­பது முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு எடுத்துக்காட்­டாகும். புலம்­பெயர் தமி­ழர்­களின் முயற்­சியால் இதற்கு சர்­வ­தே­சத்தின் ஆசீர்­வாதம் இருக்­கின்­றது. சிங்­கள தேச­மொன்றில் தமி­ழர்­க­ளுக்கு தீர்­வுத்­திட்­டத்தை வழங்­கு­வது அர­சாங்­கத்­திற்கு மிகவும் சிக்­க­லான விட­ய­மாக இருந்­தாலும், அதைச் செய்­தேயாக வேண்­டிய நிலை­மைக்கு கடந்­த­கால தவ­று­க­ளி­லான அனு­ப­வங்­களும் சர்­வ­தேச கெடு­பி­டி­களும் அர­சாங்­கத்தை கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருக்­கின்­றன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரின் மேற்­படி உரையை உற்று நோக்­கு­கின்ற போது வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு அப்பால் சென்று, யார் முத­ல­மைச்சர் என்­பது குறித்து சிந்­திக்­கின்ற கட்­டத்­திற்கு அவர் சென்­றி­ருக்­கின்றார் எனலாம். ஆனால், அதி­க­மான முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் 90 வீத­மான முஸ்லிம் மக்­களும் வடக்கு, கிழக்கு இணைக்­கப்­பட மாட்­டாது என்றே இன்னும் கூறிக் கொண்­டி­ருக்­கின்­றனர். அர­சாங்கம் ஒருக்­காலும் தமி­ழர்­க­ளுக்கு முழு­மை­யான தீர்வை வழங்­காது என்றும் அதற்கு சிங்­கள மக்கள் விட மாட்­டார்கள் என்றும் தர்க்கம் புரி­கின்ற அதி­புத்­தி­சா­லிகள் பலர் முஸ்லிம் சமூ­கத்­திற்குள் இருக்­கின்­றார்கள். சரி, வடக்கு கிழக்கை இணைத்தால் உங்­க­ளது நிலைப்­பாடு என்­ன­வாக இருக்கும்? அல்­லது வேறு வகை­யான தீர்வுத் திட்­டத்தை வழங்­கினால் அதில் முஸ்­லிம்­களின் பங்கு என்ன? என்று அவ்­வா­ற­ான­வர்­க­ளிடம் கேட்டால், பல­ரிடம் இதற்­கான பதில்கள் இருப்­ப­தில்லை. தொலைக்­காட்சி நாட­கங்­களின் அடுத்த கட்டம் எப்­படி இருக்கும் என முன்­கூட்­டியே ஊகிக்­கின்ற முஸ்­லிம்­களை விட, சமூ­கத்தின் எதிர்­காலம் எப்­படி இருக்கும் என சிந்­திக்­கின்ற முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் மக்­களும் குறை­வா­கவே இருப்­ப­தாக தெரிகின்­றது.

அஷ்ரஃப் சொன்­னது

நமக்கு வர­லாறு நன்கு தெரியும்! முஸ்­லிம்­களைப் பற்றி பெரிதாக கணக்­கெ­டுக்­காத இலங்கை- – இந்­திய ஒப்­பந்­தத்தின் பிர­காரம், வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­பட்­டன. இந்த இணைப்பு தற்­கா­லி­க­மான ஒரு இணைப்­பாக காணப்­பட்­ட­துடன் அதனை நிரந்­த­ர­மாக்­கு­வது என்றால், சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு ஒன்றை மேற்­கொள்ள வேண்­டிய சட்டத் தேவைப்­பாடும் இருந்­தது. இந்­நி­லையில், இவ் இணைப்பு சட்­ட­வி­ரோ­த­மா­னது எனக் குறிப்­பிட்டும், அதனை இரு மாகா­ணங்­க­ளாக பிரிக்­கு­மாறு கோரியும் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­கிற்கு நீதி­மன்றம் தீர்ப்பு வழங்­கி­யது. அதற்கு அமை­வாக, 2007ஜன­வரி 1ஆம் திக­தியில் இருந்து அமு­லுக்கு வரும் வகையில் வட­கி­ழக்கு மாகா­ண­மா­னது வடக்கு, கிழக்கு என இரு மாகா­ணங்­க­ளாக மீண்டும் பிரிக்­கப்­பட்­டன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நினைத்தால், முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மாதிரி அமைச்சுப் பத­வி­க­ளையும் வசதிகளையும் பெற்றுக் கொண்டு சும்மா இருந்­தி­ருக்க முடியும். ஆனால் அவர்கள் அவ்­வாறு செய்­ய­வில்லை. நல்­ல­தொரு அர­சியல் சூழ­மைவு ஏற்­பட்­டி­ருக்­கின்ற வேளையில் தமி­ழர்­க­ளுக்­கான தீர்வுப் பொதியை பெறு­வ­தற்கு என்­னென்ன செய்ய வேண்­டுமோ அதை­யெல்லாம் செய்­தி­ருக்­கின்­றார்கள். இது மிகவும் பாராட்­டப்­பட வேண்­டி­யது. குறிப்­பாக எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருந்து கொண்டே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் இதற்­காக உழைக்­கின்றார். வயது குறைந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் பலர் சோம்­பே­றி­க­ளா­கவும் வரப்­பி­ர­சா­தங்­க­ளுக்குப் பின்னால் போகின்­ற­வர்­க­ளா­கவும் இருக்­கின்ற நிலையில், சம்­பந்தன் தனது தள்­ளாத வய­திலும் ஒரு இளை­ஞ­னைப்போல் பாடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றார். இது சில­வேளை பிர­மிப்­பாக இருக்­கின்­றது. இதைப் பார்த்து சில முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் வெட்­கப்­பட வேண்டும்.

தமி­ழர்­க­ளுக்கு மேலும் கால­தா­ம­த­மின்றி தீர்­வுத்­திட்டம் வழங்­கப்­பட வேண்டும். எத்­தனை உயிர்­க­ளையும், உடை­மை­க­ளையும் பலி கொடுத்து, வலி சுமந்­த­வர்­க­ளாக இந்த தீர்­வுக்­காக அவர்கள் நெடுங்­கா­ல­மாக தவ­மி­ருக்­கின்­றார்கள். தமிழ் சகோ­த­ரர்­க­ளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே புலிகள் உள்­ளிட்ட ஆயுத இயக்­கங்­களில் முஸ்லிம் இளை­ஞர்கள் இணைந்து போரிட்­டார்கள். அது­போல முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சிலர் தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் இணைந்து அர­சியல் செய்­தார்கள். எனவே, முஸ்­லிம்கள் இந்த நியா­ய­மான தீர்­விற்கு தடை­யாக இருக்­க­மாட்­டார்கள். ஆனால், அவ்­வாறு வழங்­கப்­படும் தீர்வு வடக்கு, கிழக்கில் வாழ்­கின்ற முஸ்­லிம்­களும் ஏற்றுக் கொள்­ளத்­தக்­க­தாக அமைய வேண்டும் என்­பதே அங்கு வாழும் முஸ்­லிம்­களின் நிலைப்­பா­டாகும். முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு என்­பது ரவூப் ஹக்­கீ­மி­னதோ அல்­லது ரிசாட் பதி­யு­தீ­னி­னதோ அன்றேல் அதா­வுல்­லா­வி­னதோ தனிப்­பட்ட நிலைப்­பாடு அல்ல என்­பதை இங்கு கவ­னிக்க வேண்டும்.

மக்­களின் விருப்­ப­மின்றி வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­ப­தற்கு கார­ண­மாக அமைந்த இலங்­கை, -­இந்­திய ஒப்­பந்­தத்தை, மறைந்த மு.கா. ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப், முஸ்­லிம்­களின் முதுகில் எழு­தப்­பட்ட அடி­மைச்­சா­சனம் என்று விமர்­சித்தார். அந்தப் பின்­பு­லத்­துடன் பின்­வந்த காலங்­களில் உரு­வான ஆயுதக் கலா­சாரம், முஸ்­லிம்கள் மீதான அரா­ஜகம் என்­ப­வற்­றை­யெல்லாம் சீர்­தூக்கிப் பார்த்த அஷ்ரஃப் தலை­மை­யி­லான மு.கா. கட்சி, இணைந்த வட­கி­ழக்கில் நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் மாகா­ணத்தை வலி­யு­றுத்­தி­யது.

இப்­போது காலம் மாறி­விட்­டது என்று சிலர் சொல்­லலாம். அது உண்­மைதான் ஆயினும் ஒரு தீர்­வுத்­திட்டம் என்று வரும் போது, அத­னுடன் சம்­பந்­தப்­பட்ட ஆட்­புல எல்­லைக்குள் வாழ்­கின்ற இரு சமூ­கங்­க­ளையும் அது ஓர­ள­வுக்கு திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக அமைய வேண்டும் என்­ப­தையும், அவ்­வா­றில்­லா­விட்டால் தமிழ், முஸ்­லிம்­க­ளி­டையே நல்­லி­ணக்கம் ஒருக்­காலும் முன்­னேற மாட்­டாது என்­ப­தையும் கவ­னிக்க வேண்டும்.

இரண்டு கருத்­துக்கள்

வடக்கு, கிழக்கு இணைப்பு விட­யத்தில் இரண்டு வித­மான நிலைப்­பா­டுகள் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மத்­தியில் இருக்­கின்­றன. முத­லா­வது நிலைப்­பாடு, வடக்கும் கிழக்கும் தற்­போது போன்றே தனித்­தனி மாகா­ணங்­க­ளாக இருக்க வேண்டும். ஒரு­போதும் இணை­யவே கூடாது என்­ப­தாகும். இரண்­டா­வது நிலைப்­பாடு, வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைந்தால் அதற்குள் தீர்வைப் பெறு­வ­தாகும். அதா­வது இணைந்த வட­கி­ழக்கில் முஸ்­லிம்­க­ளுக்­கான தனி மாகாண அலகு என்று கூறலாம்.

கிழக்கில் முஸ்­லிம்கள் செறி­வா­கவும் வடக்கில் ஐதா­கவும் வாழ்­கின்­றனர். இவ்­விரு மாகா­ணங்­களும் வெறு­மனே இணைந்தால் முஸ்லிம் முத­ல­மைச்சர் நிய­மிக்­கப்­ப­டு­வதால் மட்டும் முஸ்­லிம்­களின் அபி­லாஷை நிறை­வேறி விடாது. இவ்­வாறு இணைக்­கப்­படும் பட்­சத்தில் இரு இனங்­களும் சில நன்­மை­களைப் பெற்றுக் கொள்ளும். ஆனால் முஸ்­லிம்­களின் விகி­தா­சாரம் குறை­வ­டை­வது உள்­ள­டங்­க­லாக மேலும் பல பாத­க­மான நிலை­மை­களை அவர்கள் எதிர்­கொள்­வார்கள்.

குறிப்­பாக கிழக்கில் வாழ்­கின்ற முஸ்­லிம்­களே அதிக விட்டுக் கொடுப்­புக்­களை செய்ய வேண்­டி­யி­ருக்கும். சுருங்கக் கூறின் தமி­ழர்­களின் அள­வுக்கு, இவ்­வி­ணைப்பால் முஸ்­லிம்­க­ளுக்கு அனு­கூ­லங்கள் கிடைக்கப் போவ­தில்லை எனலாம். அந்த அடிப்­ப­டை­யி­லேயே வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­பட கூடாது என்ற ஒரு நிலைப்­பாடு முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, இவ்­விரு மாகா­ணங்­களும் இணைக்­கப்­ப­டு­மாயின் அதற்குள் முஸ்­லிம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றை தர வேண்டும் என்ற நிலைப்­பாடும் உள்­ளது. எப்­ப­டியோ இணைக்­கப்­பட்டே தீரும் என்றால் அதற்குள் தீர்வைத் தேடு­வதை தவிர வேறு வழியும் இல்லை. எனவே அதை முஸ்லிம் தலை­மைகள் செய்­தாக வேண்டும். இணைந்த வட­கி­ழக்­கி­லான தீர்வு குறித்து பேசும் போது, முன்னர் அஷ்ரஃப் முன்­வைத்த முஸ்லிம் தனி மாகாணம் என்ற கோரிக்கை மீள வலி­யு­றுத்­தப்­பட வேண்டும்.

கிழக்கில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தேச சபை­க­ளையும் மன்னார், முசலி போன்ற பிர­தே­சங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவும் அம்­பாறை மாவட்­டத்தில் உள்ள மூன்று முஸ்லிம் பெரும்­பான்மை தேர்தல் தொகு­தி­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் இந்த நிலத்­தொ­டர்­பற்ற மாகாணம் அமைய வேண்டும் என்று இன்­று­மொரு கோரிக்கை முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­தி­யாவின் பாண்­டிச்சேரி மாதி­ரியில் முஸ்லிம் மாகா­ண­மா­னது நிலத்­தொ­டர்­பற்­ற­தாக அமையும் போது தமி­ழர்­க­ளுக்கு வழங்­கப்­படும் ஆட்­புல எல்­லையும் நிலத்­தொ­டர்பு அற்­ற­தா­கவே இருக்கும். எனவே இந்த சிக்­கலை தீர்ப்­ப­தற்கு ஒரு சிறந்த பொறி­முறை அவ­சி­ய­மாகும். இவ்­வி­ட­யத்தில் விடாப்­பி­டி­யாக நிற்­காமல் இரு­த­ரப்பும் சில விட்டுக் கொடுப்­புக்­களைச் செய்ய வேண்டும்.

முஸ்லிம் மாகாண கோரிக்­கையில் முஸ்­லிம்கள் சில தளர்­வு­களை மேற்­கொள்­ளலாம் என்­றாலும், அது அம்­பாறை மாவட்­டத்­திற்குள் மட்டும் அமையும் ஒரு கரை­யோர மாவட்­ட­மாக குறு­க­ல­டையக் கூடாது. கிழக்கில் பெரு­ம­ள­வான முஸ்­லிம்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கையில், ஒரு மாகா­ணத்­தையே கேட்­கின்ற முஸ்­லிம்­க­ளுக்கு கரை­யோர மாவட்­டத்தைப் போன்ற ஒரு சிறு நிலப்­ப­ரப்பை, நிர்­வாக அலகு என்ற பெயரில் கொடுத்து விட்டு, இதுதான் நீங்கள் கேட்­டது என்று கற்­பிதம் சொல்­வ­தற்கு யாரும் எண்­ணக்­கூ­டாது.

வலை­வீசும் முயற்சி

இப்­போது தமிழ், -­முஸ்லிம் அர­சி­யலில் ஆரோக்­கி­ய­மான சூழல் நில­வு­கின்­றது. இணைந்த வட­கி­ழக்கில் தமிழ் முத­ல­மைச்­ச­ரையும் ஏற்­றுக்­கொள்ள தயா­ரா­க­வுள்ள சம்­பந்தன் இருக்­கின்றார். முஸ்­லிம்­களை பிரித்துப் பார்க்­க­வில்லை என்று கூறும் மாவை சேனா­தி­ராஜா இருக்­கின்றார். முஸ்­லிம்­க­ளுக்கு அநி­யாயம் நடக்கும் போது குரல்­கொ­டுக்க சுமந்­திரன் போன்ற பலர் இருக்­கின்­றார்கள். ஆனால் எதிர்­காலம் எப்­ப­டி­யி­ருக்கும் என்று சொல்ல முடி­யாது. கடந்த கால அனு­ப­வங்­களை விட்­டாலும், அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக ஒலிக்­கின்ற தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் குரல்கள் மற்றும் பல கார­ணங்கள் முஸ்­லிம்­களின் நம்­பிக்­கையில் தாக்கம் செலுத்தி வரு­கின்­றன.

 

சம்­பந்­த­னுக்குப் பிறகு யார் தமிழ் தலை­வ­ராக வருவார், அவர் எப்­பேற்­பட்­ட­வ­ராக இருப்பார்? அப்­போது தமி­ழர்­களின் அர­சி­யலும் முஸ்­லிம்­களின் அர­சி­யலும் இதே உற­வுடன் கூடிக்­கு­லாவிக் கொண்­டி­ருக்­குமா தொியாது. எனவே, தீர்வுத் திட்டம் என்று வரு­கின்ற போது சம்­பந்­தப்­பட்ட இரண்டு தரப்­பி­னரும் ஏற்றுக் கொள்ளும் தீர்­வையே முன்­வைக்க வேண்டும். வர­லாற்றின் பிழையை திருத்தும் போது அது இன்­னு­மொரு வழு­வுடன் இடம்­பெறக் கூடாது.

இப்­போது, வடக்­கையும் கிழக்­கையும் இணைக்கும் விட­யத்தில் முஸ்­லிம்­களின் ஆத­ரவை முன்­னமே பெற்றுக் கொள்ள முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வது நன்­றா­கவே தொிகின்­றது. முஸ்­லிம்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் பிர­தான கட்­சி­யாக முஸ்லிம் காங்­கி­ரஸே, தமிழ் கூட்­ட­மைப்­பி­னாலும் அர­சாங்­கத்­தாலும் சர்­வ­தே­சத்­தாலும் கரு­தப்­ப­டு­கின்ற நிலையில், வடக்­கையும் கிழக்­கையும் இணைப்­ப­தற்­கான முஸ்­லிம்­களின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக அக்­கட்­சியின் தலைவர் றவூப் ஹக்கீம் பாவிக்­கப்­ப­டலாம் என்று அனு­மா­னிக்க முடி­கின்­றது. ஹக்­கீமை வளைத்­துப்­போட்டு, ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் விருப்­பத்தை பெற்றுக் கொள்ளும் இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் இடம்­பெ­று­வ­தாக முஸ்­லிம்­க­ளுக்குள் இப்­போது பர­வ­லாக பேச்­ச­டி­ப­டு­கின்­றது.

முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ருக்கு இது விட­யத்தில் பாரிய பொறுப்­பி­ருக்­கின்­றது. தமி­ழர்­க­ளோடு நெருக்­க­மான உற­வு­களை வளர்ப்­பது வேறு விடயம். முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பெறு­வது வேறு விடயம். ஹக்கீம் இவை இரண்­டையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. அர­சாங்­கமும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் முன்­வைக்­கின்ற தீர்வு வடக்கு, கிழக்கில் வாழ்­கின்ற முஸ்­லிம்­க­ளுக்­கான எவ்­வித உப தீர்­வையும் உள்­ள­டக்கி இருக்­காத பட்­சத்தில் அதைத் தூக்கிக் கொண்டு முஸ்லிம் சமூ­கத்­திற்குள் வரக் கூடாது. ஒன்­று­மில்­லாத தீர்வுப் பொதியை சந்­தைப்­ப­டுத்தும் அற்ப அர­சி­யல்­வா­தி­யாக தேசிய தலை­வர்கள் ஆகி­விடக் கூடாது.

தமி­ழர்­க­ளுக்கு ஒரு விட­யத்தால் நன்மை கிடைக்கும் என்றால், அது யாருக்கு பாதகம் என்­றாலும் சம்­பந்தன் அதைக் கோரியே தீருவார். இது­போ­லவே, தமி­ழர்கள் என்ன நினைத்­தாலும் முஸ்­லிம்­க­ளுக்­கான நியா­ய­மான தீர்வை ஹக்கீம் கோரியே தீர வேண்டும். இதில் தப்­பில்லை. தமி­ழர்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­த­படி தீர்­வுத்­திட்டம் வழங்­கப்­ப­டுமா என்­பதும் அது எவ்­வா­றா­ன­தாக அமையும் என்­பதும் இன்னும் உறு­தி­யாக தொிய­வில்லை. ஆயினும், வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­படும் பட்­சத்தில் தனி முஸ்லிம் மாகா­ணத்தை கோரு­வ­தற்கு மு.கா. தலைவர் பின்­னிற்கக் கூடாது. எந்தக் கார­ணத்­திற்­கா­கவும், தான் சார்ந்த சமூ­கத்­திற்கு வர­லாற்று துரோகம் ஒன்றை றவூப் ஹக்கீம் செய்­ய­மாட்டார் என்ற கடைசி நம்­பிக்­கை­யை­யா­வது அவர் காப்­பாற்றிக் கொள்ள வேண்டும். 18ஆவது திருத்­திற்கு எதற்­கா­கவோ ஆத­ர­வ­ளித்­து­விட்டு பிறகு மனம் வருந்­து­வது போல நடந்து கொள்­வ­தற்கு, தீர்­வுத்­திட்டம் என்­பது சாதா­ரண விட­ய­மல்ல.

கூட்டுப் பொறுப்பு

இங்கு மிக முக்­கி­ய­மாக கவ­னிக்­கப்­பட வேண்­டிய விடயம் என்­ன­வென்றால், இது மு.கா. தலை­வரின் பொறுப்பு மட்­டு­மல்ல. வடக்கு, கிழக்கில் அர­சியல் செய்கின்ற மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா உள்ளடங்கலாக அனைத்து அரசியல்வாதிகளதும் கடமையும் ஆகும். ஒருவேளை, இந்த தீர்வுத் திட்டம் முஸ்லிம்களுக்கு நன்மை அற்றதாக அமையும் பட்சத்தில் அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய தேவையும், முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை எடுத்துரைக்க வேண்டிய கடப்பாடும் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் உள்ளது. அதேவேளை, றவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் பிரதான அரசியல் தலைமை என்றாலும், அவர் மட்டுமே ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி அல்ல என்பதை அரசாங்கமும் தமிழ் தரப்பும் புரிந்து செயற்பட வேண்டும்.

எனவே, முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை மு.கா. தலைவரும் ஏனைய அரசியல்வாதிகளும் இப்போதே தௌிவாக தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் அறிவிக்க வேண்டும். அது, தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாக அன்றி, அந்தப் பொதிக்குள் எமது அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் விதத்தில் சீராக்கங்களை செய்வதாக அமைய வேண்டும். ஹக்கீம் போன்ற முஸ்லிம் தலைவர்கள் தௌிவற்ற கருத்துக்களை வௌியிடுவதன் மூலம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் குழப்பி, காலத்தை வீணாக்கக் கூடாது. அதேபோல் தமிழர்களையும் முஸ்லிம்களையும் சமாந்திரமாக திருப்திப்படுத்தாத எந்தத் தீர்வும் நிரந்தரத் தீர்வாக மாட்டாது என்ற யதார்த்தத்தை அரசாங்கமும் சர்வதேசமும் மறந்து விடக் கூடாது.

நிலைமாறுகால நீதி (Traditional Justice) என்பது, எந்தவொரு சமூகத்திற்கும் அநியாயம் இழப்பதாக இருக்க முடியாது.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=23/07/2016

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.