Jump to content

ரியோ 2016 | ஒலிம்பிக் செய்திகள்


Recommended Posts

ரியோ ஒலிம்பிக்:7 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்தியா

Date: 2016-08-10@ 16:52:32

Daily_News_5957714319230.jpg

இந்திய ஹாக்கி அணி தனது 3வது லீக் போட்டியில் நேற்று அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் கங்குஜம், இந்திய அணிக்கு முதல் கோலை அடித்தார். இதன்பின் 35வது நிமிடத்தில் கோதஜித் மற்றொரு கோல் அடிக்க 2-0 என இந்தியா வலுவான முன்னிலை பெற்றது. இந்திய அணிக்கு கோல் அடித்த இருவருமே மணிப்பூரை சேர்ந்தவர்கள். 49வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் மூலமாக அர்ஜென்டினாவின் கோன்ஜலா முதல் கோலை அடித்தார்.

இதன் பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால், இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. கடைசி 10 நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஏராளமான கோல் அடிக்கும் முயற்சிகளை இந்தியா தடுத்தது. 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அர்ஜென்டினாவை வீழ்த்த (கடைசியாக 2009ல் அர்ஜென்டினாவை இந்தியா வீழ்த்தியிருந்தது) இதுவே உதவி செய்தது. இந்திய அணி முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக வெற்றியும், 2வது போட்டியில் ஜெர்மனிக்கு எதிராக தோல்வியையும் கண்டிருந்தது.

தற்போது 6 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா, கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொண்டுள்ளது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நாளை மாலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=237898

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply

மதுவால் வந்த வினை பைனலுக்கு முன்னேறிய ஜிம்னாஸ்டிக் வீரரை வீட்டிற்கு அனுப்பியது நெதர்லாந்து அணி

 

Daily_News_6040416955948.jpg

நெதர்லாந்தை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர் யூரி வான் ஜெல்டர், ரிங்ஸ் பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். 33 வயதான இவர் கடந்த சனிக்கிழமை இரவு ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேறி, அங்கீகரிக்கப்படாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மது அருந்தினார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலைதான் ஒலிம்பிக் கிராமத்துக்கு திரும்பினார்.
இந்த தகவல் தெரியவந்ததும், அணி விதிகளை மீறியதாக கூறி, யூரி வான் ஜெல்டரை வீட்டிற்கு திரும்ப அனுப்பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது நெதர்லாந்து அணி நிர்வாகம்.

கடுமையான விதிகளை பின்பற்றி வரும் நெதர்லாந்து அணியின் ஒலிம்பிக் தலைமை அதிகாரி ஹெண்ட்ரிக்ஸ் கூறுகையில், இது போன்ற செயல்களை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். கடந்த 2009ம் ஆண்டில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன் கொகைன் பயன்படுத்தியதாக நெதர்லாந்து ஜிம்னாஸ்டிக் யூனியனால், யூரி வான் ஜெல்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=237896

Link to comment
Share on other sites

திட்டமிட்ட இலக்கை அடையத் தவறினார் மெத்யூ
2016-08-11 10:15:00

(பிரே­ஸி­லி­லி­ருந்து நெவில் அன்­தனி)

 

ரியோ டி ஜெனெய்­ரோவில் நடை­பெற்­று­வரும் 31ஆவது ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் எதை­யா­வது சாதிப்பார் என எதிர்­பார்க்­கப்­பட்ட இலங்­கையின் நீச்சல் நட்­சத்­திரம் மெத்யூ அபே­சிங்­க­வினால் 50ஆவது இடத்­தையே பெற­முடிந்­தது.

 

1851424.jpgஒலிம்பிக் நீச்சல் தடா­கத்தில் நேற்று முன்­தினம் (இலங்கை நேரப்­படி 9.35 மணி) நடை­பெற்ற 100 மீற்றர் சாதா­ரண நீச்சல் (ப்றீஸ்டைல்) போட்­டிக்­கான முதல் சுற்றின் இரண்­டா­வது தகு­திகாண் போட்­டியை 50.96 செக்­கன்­களில் நீந்திக் கடந்து மெத்யூ அபே­சிங்க நான்காம் இடத்தைப் பெற்றார்.

 

இவர் நான்­கா­வது சுவட்டில் பங்­கு­பற்­றி­ய­போ­திலும் எதிர்­பார்த்த நேரப் பெறு­தியை எட்டத் தவ­றினார்.

 

எனினும் எட்டு தகு­திகாண் போட்­டி­களில் மொத்­த­மாக பங்­கு­பற்­றிய 59 நீச்சல் வீரர்­க­ளுக்­கான ஒட்­டு­மொத்த நிலை யில் 20 வய­து­டைய மெத்யூ அபே­சிங்­க­வினால் 50ஆவது இடத்­தையே பெற­மு­டிந்­தது.

 

இப் போட்டி முடிவில் மெத்யூ அபே­சிங்­க­விடம் கருத்து கேட்­ட­போது, ''இரண்­டா­வது தகு­திகாண் போட்­டியில் மூன் றாம் இடத்தைப் பெற்ற போதிலும் ஒட்டு மொத்த நிலையில் 50ஆம் இடத்­தையே பெற்றேன்.

 

இது சற்று கவலையளிக்­கின்­றது. ஆனால் நான் ஏமாற்றமடை­ய­வில்லை. இது எனது முத­லா­வது ஒலிம்பிக் முயற்சி என்­பதால் பெறு­பே­றை­யிட்டு மகிழ்ச்சியடை­கின்றேன். எனது எதிர்­கால இலக்கு டொக்­கியோ 2020 ஒலிம்பிக் போட்­டி­யாகும். ஜப்பான் ஒலிம்பிக் போட்­டிக்கு இப்­போ­தி­ருந்தே என்னைத் தயார்­ப­டுத்­திக்­கொள்­ள­வுள்ளேன்'' என்றார்.

 

ஒலிம்பிக் போட்­டியில் பங்­கு­பற்­றும்­போது உங்­க­ளது இலக்கு என்­ன­வாக இருந்­தது எனக் கேட்­ட­போது, ''ரியோ ஒலிம்பிக் போட்­டி­களில் ஆண்­க­ளுக்­கான 100 மீற்றர் சாதா­ரண நீச்­சலை 50 செக்­கன்­க­ளுக்குள் நீந்திக் கடக்க எண்­ணி­யி­ருந்தேன். ஆனால் அது கைகூ­ட­வில்லை.

 

ஆனால் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்­ப­தற்கு அமைய நான் கடும் பயிற்­சியில் ஈடு­பட்டு 2020 ஒலிம்பிக் போட்­டியில் எதை­யா­வது சாதிக்க முயற்­சிப்பேன். அதற்­காக இப்­போ­தி­ருந்தே என்னை தயார்­ப­டுத்­திக்­கொள்­ள ­வுள்ளேன்'' என மெத்யூ அபே­சிங்க மேலும் தெரி­வித்தார்.

 

ரியோ டி ஜெனய்ரோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் இலங்கை சார்­பாக 9 வீர, வீராங்­க­னைகள் பங்­கு­பற்­று­கின்­றனர்.

 

அவர்­களில் கிமிக்கோ ரஹீம் (நீச்சல்), மங்­கள சம­ரக்கோன் (குறி­பார்த்து சுடுதல்), சுதேஷ் பீரிஸ் (பளு­தூக்கல்), மெத்யூ அபே­சிங்க (நீச்சல்) ஆகி­யோ­ரது ஆற்றல் வெளிப்­பா­டுகள் திருப்­தி­க­ர­மாக அமை­ய­வில்லை. 

 

எனினும் பிர­தான சர்­வ­தேச போட்டி ஒன்றில் முதல் தட­வை­யாக பங்­கு­பற்­றிய ஜூடோக்கா சாமர நுவன் தர்ம வர்தன முதலாம் சுற்றில் வெற்றிபெற்று இலங்கையரில் அதி சிறந்த பெறுபேறை ரியோ ஒலிம்பிக்கில் பதிவு செய்தார். எனினும் இரண்டாம் சுற்றில் சாமர நுவன் தோல்வியைத் தழுவினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18514#sthash.cy71DkxI.dpuf
Link to comment
Share on other sites

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு இந்திய வீரர் மனோஜ் குமார் தகுதி

 

 
 
வெற்றியைக் கொண்டாடும் மனோஜ் குமார் | படம்: ஏ.எஃப்.பி.
வெற்றியைக் கொண்டாடும் மனோஜ் குமார் | படம்: ஏ.எஃப்.பி.

ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய குத்துச் சண்டை வீரர் மனோஜ் குமார் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு தகுதியடைந்துள்ளார்.

ஆடவருக்கான 64 கிலோ எடைப் பிரிவு (லைட் வெயிட்) குத்துச் சண்டை போட்டியில் லிதுவேனியா வீரர் எவல்டாஸ் பெட்ராஸ்கஸை வீழ்த்தி மனோஜ் குமார் அடுத்த கட்டத்துக்கு முன்னேறினார்.

மூன்று சுற்றுகளிலும் மனோஜ் குமார் ஆதிக்கம் செலுத்தினார். 29-28, 29-28, 28-29 என்ற புள்ளிகளில் மனோஜ் வெற்றி பெற்றார்.

அடுத்ததாக 16-வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் பஸ்லுதீன் காயிஸ்னசாரோவை எதிர்கொள்கிறார்.

http://tamil.thehindu.com/sports/ஒலிம்பிக்-குத்துச்சண்டை-காலிறுதிக்கு-முந்தையச்-சுற்றுக்கு-இந்திய-வீரர்-மனோஜ்-குமார்-தகுதி/article8972968.ece

Link to comment
Share on other sites

அணிக்கு எழுவர் ஒலிம்பிக் றக்பியில் நியூஸிலாந்தை பதம் பார்த்தது ஜப்பான்
2016-08-11 11:04:45

(பிரே­ஸி­லி­லி­ருந்து நெவில் அன்­தனி)

 

120 வருட ஒலிம்பிக் வர­லாற்றில் முதல் தட­வை­யாக இவ்­வ­ருடம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட அணிக்கு எழுவர் றக்­பிக்­கான குழு சி போட்டி ஒன்றில் நியூ­ஸி­லாந்தை ஜப்பான் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்­தது.

 

18517895197-01-02.jpg

 

டியோ­டோரோ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் அணிக்கு எழுவர் றக்பி போட்­டி­களின் முதலாம் நாளன்று நியூ­ஸி­லாந்தை எதிர்த்­தா­டிய ஆசிய சம்­பியன் ஜப்பான் 14 க்கு 12 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்­டது.

 

எனினும், அன்­றைய தினம் நடை­பெற்ற தனது இரண்­டா­வது போட்­டியில் பெரிய பிரித்­தா­னி­யா­வு­ட­னான போட்­டியில் கடும் சவால் விடுத்து விளை­யா­டிய ஜப்பான் இறு­தியில் 19 க்கு 21 என்ற புள்­ளிகள் அடிப்
­ப­டையில் தோல்வி அடைந்­தது.

 

இதே­வேளை, நியூ­ஸி­லாந்து தனது இரண்­டா­வது போட்­டியில் கென்­யாவை 28 க்கு 5 என துவம்சம் செய்­தது. அணிக்கு எழுவர் றக்பியல் 12 நாடுகள் நான்கு குழுக்களில் போட்டியிடுகின்றன.

 

 

18517medals.jpg

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18517#sthash.KoeErQcT.dpuf
Link to comment
Share on other sites

ரியோ ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் களமிறங்கும் நேரம் இதுதான்

 

உலகின் மின்னல் வேக வீரர் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட் பங்குபற்றும்  போட்டிகளைதான் உலகில் உள்ள அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

காரணம் 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது பங்குபற்றிய மூன்று போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

அதேபோல் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற லண்டன் ஒலிம்பிக்கிலும் மூன்று தங்கத்தை வென்றார்.

இந்நிலையில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் அவர் தங்கம் வென்று ஹெட்ரிக் தங்கம் வென்ற சாதனையை நிலைநாட்டுவாரா? என்று எதிர்பார்ப்பு உலக மக்களினிடையே  ஓங்கியுள்ளது.

தற்போது அதற்கான காலம் நெருங்கியுள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் பங்குபற்றும் முதல் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அவர் பங்குபற்றும் போட்டிகளின் நேர அட்டவனை இதோ...

asawer2.jpg

http://www.virakesari.lk/article/10068

Link to comment
Share on other sites

பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை ; பின்தொடருகிறது சீனா

 

 

ரியோ ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்ற நிலையில் சீனா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்கா 11 தங்கம், 11 வெள்ளி மற்றும் 10 வெண்கலப்பதக்கம் அடங்கலாக 32 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் சீனா 10 தங்கம், 5 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் அடங்கலாக 23 பதக்கங்களுடன்  2 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இதேவேளை ஜப்பான் 6 தங்கப்பதக்கங்களுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், 3 ஆவது இடத்தில் இருந்த அவுஸ்திரேலியா 5 தங்கப்பதக்கங்களுடன் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ள்ளப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/10082

Link to comment
Share on other sites

ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன்: இரட்டையர் பிரிவில் ஜப்பானிடம் இந்தியா தோல்வி

 

படம்: ஏ.பி.
படம்: ஏ.பி.

ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான அஸ்வினி பொன்னப்பா-ஜுவாலா கட்டா ஜப்பானிய ஜோடியிடம் முதல் போட்டியில் தோல்வி தழுவினர்.

மிசாகி மட்சுடோமா-அயாகா டகாஹாஷி ஜோடி இந்திய ஜோடியை 21-15, 201-10 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இரண்டாவது செட்டில் 1-5 என்று பின் தங்கிய இந்திய ஜோடி பிறகு 6-3 என்று அசத்தியது. ஆனால் ஜப்பானிய வீராங்கனைகள் அதன் பிறகு அசாத்திய அதிரடியில் 10-6 என்று முன்னிலை பெற்றனர். அதன் பிறகு அஸ்வினி-ஜுவாலா ஜோடி ஒரு புள்ளியைப் பெறுவதற்குள் ஜப்பான் வீராங்கனைகள் 5 புள்ளிகள் பெற்று 15-7 என்று முன்னிலை பெற்றனர். கடைசியில் 20-10 என்று வென்றனர்.

முதல் செட்டில் பேக்-ஹேண்ட் ஸ்மேஷ் மற்றும் ஸ்லைஸ் ஆகிய ஷாட்களில் சிறந்து விளங்கிய அஸ்வினி-ஜுவாலா ஜோடி 12-15 என்று நெருங்கி வந்தனர். ஆனால் ஜப்பானிய வீராங்கனைகளின் அதிரடி ஆட்டத்தின் முன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் முதல் செட்டை 21-15 என்று இழந்தனர்.

இந்தத் தோல்வியை அடுத்து நெருக்கடியான நிலையில் நாளை ஹாலந்து அணியைச் சந்திக்கின்றனர். இதில் வெற்றி பெற்றேயாக வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/ஒலிம்பிக்-மகளிர்-பாட்மிண்டன்-இரட்டையர்-பிரிவில்-ஜப்பானிடம்-இந்தியா-தோல்வி/article8974452.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஜெர்சியில் 'இந்தியா ' இல்லை:ஒலிம்பிக் சர்ச்சை!

லிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களது ஜெர்சியின் பின்பக்கத்தில் 'இந்தியா ' என  பெயர் பொறிக்கப்படாதது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

mans.jpg

 

ஒலிம்பிக் போட்டியில், இந்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார் 64 கிலோ எடைப் பிரிவில், லிதுவேனியா வீரர் எவால்டஸ் பெட்ராஸ்காசை வீழ்த்தினார். இந்நிலையில் மனோஜ்குமாரின் ஜெர்சியின் பின்பக்கத்தில் 'இந்தியா' என பொறிக்கப்படவில்லை. வழக்கமாக ஜெர்சியின் பின்பக்கத்தில், தாய்நாட்டின் பெயர் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. இதையடுத்து சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம், இந்திய குத்துச் சண்டை வீரர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

'ஒலிம்பிக்கில் இன்று நடைபெறும் போட்டிகளில், இந்தியாவின் பெயர் பொறித்த  ஜெர்சி அணியவில்லையென்றால் தகுதி நீக்கம் செய்து விடுவோம்' என எச்சரித்துள்ளது. இதையடுத்து இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு ஜெர்சியின் பின்பக்கத்தில் ' இந்தியா' என பொறிக்கப்பட்ட புதிய ஜெர்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

http://www.vikatan.com/news/sports/67054-indian-boxers-run-into-trouble-with-organizers.art

Link to comment
Share on other sites

நம்ம எதைத்தான் உருப்படியா செஞ்சிருக்கோம்.. shame.png

Link to comment
Share on other sites

ஹாக்கி: கடைசி நிமிடத்தில் தொடர்ச்சியாக 5 பெனால்டி கார்னர்களையும் விரயம் செய்து இந்தியா தோல்வி

 

 
ஹாலந்து கேப்டன் ராபர்ட் ஹர்ஸ்ட் இந்திய வீரர்கள் சந்தனா திம்மையா, சிங்ளிசேனா சிங் ஆகியோருக்குப் போக்குக் காட்டி பந்தை எடுத்துச் செல்கிறார். | படம்: ராய்ட்டர்ஸ்.
ஹாலந்து கேப்டன் ராபர்ட் ஹர்ஸ்ட் இந்திய வீரர்கள் சந்தனா திம்மையா, சிங்ளிசேனா சிங் ஆகியோருக்குப் போக்குக் காட்டி பந்தை எடுத்துச் செல்கிறார். | படம்: ராய்ட்டர்ஸ்.

ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஹாலந்து அணியிடம் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது. ஹாலந்து கோல் கீப்பர் ஜேப் ஸ்டாக்மேன் அற்புதமான தடுப்பு உத்தியை வெளிப்படுத்தினார்.

கடைசி நிமிடத்தில் இந்தியாவுக்குச் சார்பான 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன, ஒன்றைக்கூட ஹாலந்து தடுப்பாட்ட வீரர்களைத் தாண்டி கோலுக்குள் செலுத்த முடியவில்லை, ருபிந்தர் பால் சிங், ரகுநாத் ஆகியோரால் கடைசி 5 வாய்ப்புகளையும் கோலாக மாற்ற முடியவில்லை.

ஹாலந்து கோல் கீப்பர் அற்புதமாக இரண்டைத் தடுத்தார், ஒன்றை தடுப்பாட்ட வீரர் அபாரமாக தடுத்தார், ஆனால் சர்க்கிளுக்குள் இவையெல்லம் நடைபெற்றதால் மீண்டும் மீண்டும் 5 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன, கடைசி வாய்ப்பு ஏறக்குறைய சமன் கோல் கிடைத்திருக்கும் ஆனால் இம்முறையும் ஹாலந்து கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார். இதுமட்டுமல்ல முன்னதாகவும் ஜேப் ஸ்டாக்மேன் இந்திய வாய்ப்பு ஓரிண்டை தடுத்தார். ஏதோ ரகுநாத் ஒரு முறை அற்புதமாக அவரைத் திசைத்திருப்பி அவருக்கு இடது புறமாக வேகமாக அடிக்க இந்தியா முதல் கோலை அடித்து சமன் செய்தது.

மீண்டும் அந்த 4-வது கால்மணி நேர ஆட்டம்தான் இந்தியாவுக்கு எமனாகியது. இதில்தான் ஹாலந்து வெற்றிக்கான 2வது கோலை அடித்தது.

ஒரு நேரத்தில் ரகுநாத், எஸ்.வி.சுனில் இருவருமே பவுல் செய்ய மஞ்சள் அட்டைக் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர், 3-வது கால் மணி நேர ஆட்டம் முடிய இருக்கும் தறுவாயில் இந்தியா 9 பேர்களுடன் ஆடியது. இதனையடுத்து 5 நிமிட நேர தண்டனை முடியவடைய வேண்டுமென்பதால் 4வது கால் மணி நேர ஆட்டத்தின் தொடக்கத்திலும் இந்திய அணி 9 பேர்களுடன் விளையாட வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டது.

4-வது கால் மணி ஆட்டம் தொடங்கி 2-வது நிமிடத்திலேயே ஹாலந்து பெனால்டி கார்னர் பெற்றது, இம்முறை வலது புறம் டைவ் அடித்து அருமையாகத் தடுக்க 1-1 நீடித்தது.

கோல் நோக்கி அடிக்கப்பட்ட 20 ஷாட்களில் 14-ஐ தடுத்துள்ளார் ஸ்ரீஜேஷ் இந்தத் தொடரில். இது உண்மையில் அசாதாரணத் திறமை வெளிப்பாடாகும். 8 நிமிடங்கள் இருக்கும் போது 11 வீரர்களுடன் இந்தியா ஆடியது. மீண்டும் ஹாலந்துக்கு பெனால்டி வாய்ப்பு இம்முறையும் ஸ்ரீஜேஷ் திறமையால் கோலாகவில்லை.

ஹாலந்து தொடர்ந்து கடும் நெருக்கடிகள் கொடுக்க கோல் பகுதியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து தவறிழைக்க நேரிட ஆட்டம் முடிய 6 நிமிடங்கள் இருக்கும் போது ஹாலந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. ஹாலந்தின் மின்க் வான் டெர் வீர்டன் என்ற வீரர் ஸ்ரீஜேஷுக்கு வலது புறம் அடித்து 2-வது கோலை அடித்தார்.

3 நிமிடங்கள் இருக்கும் போது ஸ்ரீஜேஷ் வெளியேறினார், ரகுநாத் ஸ்வீப்பர் கோல் கீப்பராகவும் பொறுப்பேற்றார், ஒரு பார்வர்ட் வீரரை இந்தியா களமிறக்கியது.இது மிகவும் அரிதான நிகழ்வே. இதன் பிறகே கடைசி நிமிடத்தில் 5 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு ஷாட்டை கூட கோலுக்குள் செலுத்த முடியவில்லை.

முன்னதாக முதல் அரைமணி நேர ஆட்டத்தில் இரு அணிகளுமே ஆக்ரோஷமாக ஆடாமல் ஏனோதானோவென்று ஆட ஆஃப் டைமில் 0-0 என்றே இருந்தது.

3-வது கால் மணிநேர ஆட்டம் தொடங்கி 2-வது நிமிடத்தில் அதாவது 32-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் டிராக் பிளிக் ஆட ஸ்ரீஜேஷ் அற்புதமாகத் தடுத்தார் ஆனால் ரீபவுண்ட் பந்தை எடுக்க இந்திய வீரர் இல்லை, மாறாக ஹாலந்து வீரர் ரீபவுண்டை எடுத்து கோலாக மாற்றினார், முதல் கோலை அடித்தவர் ரோஜியர் ஹாஃப்மென்.

அதன் பிறகே இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ருபீந்தர் பால் சிங் நேராக ஹாலந்து கோல் கீப்பர் காலில் அடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது அந்த பெனால்டி வாய்ப்பில் ரகுநாத் அற்புதமாக கோலிக்கு இடது புறம் வேகமாக அடித்தார்.

இந்தியா தற்போது கனடாவை வென்று காலிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/ஹாக்கி-கடைசி-நிமிடத்தில்-தொடர்ச்சியாக-5-பெனால்டி-கார்னர்களையும்-விரயம்-செய்து-இந்தியா-தோல்வி/article8974954.ece?homepage=true

Link to comment
Share on other sites

அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸின் தங்க வேட்டை தொடர்கிறது 
ஒலிம்பிக்கில் 22வது தங்கம் வென்று பெல்ப்ஸ் சாதனை 

 http://tamil.oneindia.com/
 

Link to comment
Share on other sites

கால்பந்தில் அர்ஜென்டினா வெளியேற்றம்
whatsapp.png fb.png tw.png gp.png

ஒலிம்பிக்கில் ஆடவர் கால்பந்து போட்டியில் அர் ஜென்டினா தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஹோன்டுராஸ் அணியுடன் மோதியது.

75-வது நிமிடத் தில் ஹோன்டுராஸ் முதல் கோலை அடித்து அதிர்ச்சி கொடுத் தது. இந்த கோலை அந்த அணியின் லோஷானோ அன் டோனி அடித்தார். அர்ஜென் டினா அணியால் இதற்கு கடைசி நிமிடத்தில் தான் பதிலடி கொடுக்க முடிந்தது.

மவுரிசியோ இந்த கோலை அடிக்க ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட் டத்தில் ஜெயித்தால் மட்டுமே காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் அர் ஜென்டினா வெளியேறியது

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கிறனெண்டு கோவிக்கக்கூடாது....ஆசியாவின்ரை பெரிய வல்லரசும் குட்டி வல்லரசும் ஒலிம்பிக்கிலை விளையாடவெண்டு வெளிக்கிட்டவையெல்லோ....இதுவரைக்கும் வெள்ளியோ பித்தளையோ எடுத்ததாய் தெரியேல்லை. உண்மையிலேயே பிரேசில்லைதான் விளையாடீனமோ இல்லாட்டி அட்ரஸ் மாறி வேறை எங்கையும் போய் விளையாடீனமோ? :unsure:

Link to comment
Share on other sites

17 நாட்களாக நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் திருவிழா நிறைவு: பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்; 67-வது இடத்தை பிடித்தது இந்தியா

 

 
 
  • ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மரக்காணா மைதானத்தில் நேற்று நடைபெற்றது
    ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மரக்காணா மைதானத்தில் நேற்று நடைபெற்றது
  • ஒலிம்பிக் நிறைவு விழாவில் இடம் பெற்ற கலைஞர்களின் நடனம்.
    ஒலிம்பிக் நிறைவு விழாவில் இடம் பெற்ற கலைஞர்களின் நடனம்.

17 நாட்களாக நடைபெற்ற உலகின் பெரிய விளையாட்டு திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது. அமெரிக்கா பதக் கப்பட்டியலில் 46 தங்கம் உட்பட 121 பதக்கங்களை குவித்து 17-வது முறையாக முதலிடம் பிடித்தது. இந்தியா இரு பதக்கங்களுடன் 67-வது இடத்தை கைப்பற்றியது.

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம் பிக் போட்டி கடந்த 5-ம் தேதி கோலா கலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திரு விழாவான இந்த ஒலிம்பிக் போட்டி யில் 207 நாடுகளை சேர்ந்த 11,544 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 28 விளையாட்டுகளில் 306 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

நிறைவு விழா

கடந்த 17 நாட்களாக நடைபெற்ற இந்த திருவிழா நேற்றுடன் நிறை வடைந்தது. இதனையொட்டி மரக் காணா மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது. பிரேசில் நாட்டுக் கலைஞர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இந்நிகழ்ச்சி யில் கலந்துகொண்டனர். ஒவ் வொரு நாட்டு வீரர்களும் தங்களது நாட்டின் கொடிகளை ஏந்திச் சென்றார்கள். ரியோ ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்லும் கவுரவம் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக்குக்கு அளிக்கப்பட்டது.

மகளிர் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்தார் சாக்‌ஷி. அவரைக் கவுரவிக்கும் விதமாக அணி வகுப்பில் கொடியேந்திச் செல்லும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. அதனையொட்டி ஜப்பான் நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் நிறைவுவிழாவில் நடைபெற்றன.

2020-ல் டோக்கியோ ஒலிம்பிக்

ஒலிம்பிக் கொடியை ரியோ டி ஜெனிரோ நகர மேயர் எடூரோ பயஸ் இறக்கினார். அந்தக் கொடி யை அடுத்த ஒலிம்பிக் நடைபெற உள்ள டோக்கியோ நகரின் ஆளு நர் யூரிகோ கொய்கோவிடம், சர்வ தேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் ஒப்படைத்தார். பிறகு, அவர் ரியோ ஒலிம்பிக் போட்டியை நிறைவு செய்து வைத்தார். ஒலிம்பிக் ஜோதி முறைப்படி அணைக்கப் பட்டது.

அமெரிக்கா முதலிடம்

இந்த ஒலிம்பிக்கில் அமெரிக்கா 46 தங்கம், 37 வெள்ளி, 39 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பெற்றது. முதல் நாளில் இருந்தே பதக்க வேட்டையை தொடங்கிய அமெரிக்கா 17-வது முறையாக பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியது. நீச்சல், ஜிம்னாஸ்டிக், தடகள போட்டிகளில் அமெரிக்க நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தியதால் முதலிடத்தை கைப்பற்ற முடிந்தது.

இங்கிலாந்து 27 தங்கம், 23 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது. 26 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம் என 70 பதக்கங்களுடன் சீனா 3-வது இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய பிரேசில் 7 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 13-வது இடத்தை பிடித்தது.

இந்தியாவுக்கு 67-வது இடம்

இந்திய அணி ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 67-வது இடம் பிடித்தது. கடைசி நாளில் மல்யுத்தம், மாரத்தான் ஆகிய போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் 118 பேர் கலந்து கொண்டனர்.

அதிகமானோர் பங்கேற்றதால் கடந்த ஒலிம்பிக்கோடு ஒப்பிடுகை யில், ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வின் பதக்க எண்ணிக்கை இரட்டிப் பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையில் பாதியைக் கூட வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நழுவிய பதக்கம்

ஆடவருக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா, 0.5 புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். மகளிருக்கான ஜிம்ஸ்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவு இறுதிப்போட்டியில் 0.150 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார் திபா கர்மாகர்.

டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் 3-வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி தோல்வியடைந்து வெண்கலப் பதக் கத்தை கோட்டைவிட்டது. தடகளத் தில் 36 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த ஒரே வீராங்கனை யான லலிதா பாபர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் பதக்கம் வெல்ல தவறினார்.

ஏமாற்றிய நட்சத்திரங்கள்

இந்தியா சார்பில் இம்முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாட் மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நெவால், ஜுவாலா கட்டா, அஷ் வினி பொன்னப்பா, டென்னிஸ் நட் சத்திரங்கள் லியாண்டர் பயஸ், போபண்ணா, துப்பாக்கி சுடுதல் நட்சத்திரங்கள் ககன் நரங், ஜிது ராய், ஹீனா சித்து, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், குத்துசண்டை வீரர்கள் ஷிவா தாபா, விகாஷ் கிர்ஷன், கோல்ப் வீரர் அனிருபன் லஹிரி ஆகியோர் ஏமாற்றினர். ஆடவர் ஹாக்கியில் கால் இறுதியில் தோல்வியை சந்தித்தது.

பிரதமர் வாழ்த்து

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘ட்விட்டரில்', ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். எல்லா வீரர்களுமே சிறந்த பங்களிப்பை வழங்கினர். ஒலிம்பிக்கை சிறப்பாக நடத்திய பிரேசிலுக்கும் நன்றி” என கூறியுள்ளார்.

olympicc_2982941a.jpg

2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. இதனால் ஒலிம்பிக் கொடியை டோக்கியோ நகரின் ஆளுநர் யூரிகோ கொய்கோவிடம் தாமஸ் பாச் ஒப்படைத்தார். படம்:ஏஎப்பி

 

http://tamil.thehindu.com/sports/17-நாட்களாக-நடைபெற்ற-ரியோ-ஒலிம்பிக்-திருவிழா-நிறைவு-பதக்கப்-பட்டியலில்-அமெரிக்கா-முதலிடம்-67வது-இடத்தை-பிடித்தது-இந்தியா/article9020232.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நவீனன் said:

17 நாட்களாக நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் திருவிழா நிறைவு: பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்; 67-வது இடத்தை பிடித்தது இந்தியா

 

ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மரக்காணா மைதானத்தில் நேற்று நடைபெற்றது

ஒலிம்பிக் நிறைவு விழாவில் இடம் பெற்ற கலைஞர்களின் நடனம்.

17 நாட்களாக நடைபெற்ற உலகின் பெரிய விளையாட்டு திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது. அமெரிக்கா பதக் கப்பட்டியலில் 46 தங்கம் உட்பட 121 பதக்கங்களை குவித்து 17-வது முறையாக முதலிடம் பிடித்தது. இந்தியா இரு பதக்கங்களுடன் 67-வது இடத்தை கைப்பற்றியது.

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம் பிக் போட்டி கடந்த 5-ம் தேதி கோலா கலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திரு விழாவான இந்த ஒலிம்பிக் போட்டி யில் 207 நாடுகளை சேர்ந்த 11,544 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 28 விளையாட்டுகளில் 306 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

நிறைவு விழா

கடந்த 17 நாட்களாக நடைபெற்ற இந்த திருவிழா நேற்றுடன் நிறை வடைந்தது. இதனையொட்டி மரக் காணா மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது. பிரேசில் நாட்டுக் கலைஞர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இந்நிகழ்ச்சி யில் கலந்துகொண்டனர். ஒவ் வொரு நாட்டு வீரர்களும் தங்களது நாட்டின் கொடிகளை ஏந்திச் சென்றார்கள். ரியோ ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்லும் கவுரவம் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக்குக்கு அளிக்கப்பட்டது.

மகளிர் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்தார் சாக்‌ஷி. அவரைக் கவுரவிக்கும் விதமாக அணி வகுப்பில் கொடியேந்திச் செல்லும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. அதனையொட்டி ஜப்பான் நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் நிறைவுவிழாவில் நடைபெற்றன.

2020-ல் டோக்கியோ ஒலிம்பிக்

ஒலிம்பிக் கொடியை ரியோ டி ஜெனிரோ நகர மேயர் எடூரோ பயஸ் இறக்கினார். அந்தக் கொடி யை அடுத்த ஒலிம்பிக் நடைபெற உள்ள டோக்கியோ நகரின் ஆளு நர் யூரிகோ கொய்கோவிடம், சர்வ தேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் ஒப்படைத்தார். பிறகு, அவர் ரியோ ஒலிம்பிக் போட்டியை நிறைவு செய்து வைத்தார். ஒலிம்பிக் ஜோதி முறைப்படி அணைக்கப் பட்டது.

அமெரிக்கா முதலிடம்

இந்த ஒலிம்பிக்கில் அமெரிக்கா 46 தங்கம், 37 வெள்ளி, 39 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பெற்றது. முதல் நாளில் இருந்தே பதக்க வேட்டையை தொடங்கிய அமெரிக்கா 17-வது முறையாக பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியது. நீச்சல், ஜிம்னாஸ்டிக், தடகள போட்டிகளில் அமெரிக்க நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தியதால் முதலிடத்தை கைப்பற்ற முடிந்தது.

இங்கிலாந்து 27 தங்கம், 23 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது. 26 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம் என 70 பதக்கங்களுடன் சீனா 3-வது இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய பிரேசில் 7 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 13-வது இடத்தை பிடித்தது.

இந்தியாவுக்கு 67-வது இடம்

இந்திய அணி ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 67-வது இடம் பிடித்தது. கடைசி நாளில் மல்யுத்தம், மாரத்தான் ஆகிய போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் 118 பேர் கலந்து கொண்டனர்.

அதிகமானோர் பங்கேற்றதால் கடந்த ஒலிம்பிக்கோடு ஒப்பிடுகை யில், ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வின் பதக்க எண்ணிக்கை இரட்டிப் பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையில் பாதியைக் கூட வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நழுவிய பதக்கம்

ஆடவருக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா, 0.5 புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். மகளிருக்கான ஜிம்ஸ்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவு இறுதிப்போட்டியில் 0.150 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார் திபா கர்மாகர்.

டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் 3-வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி தோல்வியடைந்து வெண்கலப் பதக் கத்தை கோட்டைவிட்டது. தடகளத் தில் 36 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த ஒரே வீராங்கனை யான லலிதா பாபர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் பதக்கம் வெல்ல தவறினார்.

ஏமாற்றிய நட்சத்திரங்கள்

இந்தியா சார்பில் இம்முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாட் மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நெவால், ஜுவாலா கட்டா, அஷ் வினி பொன்னப்பா, டென்னிஸ் நட் சத்திரங்கள் லியாண்டர் பயஸ், போபண்ணா, துப்பாக்கி சுடுதல் நட்சத்திரங்கள் ககன் நரங், ஜிது ராய், ஹீனா சித்து, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், குத்துசண்டை வீரர்கள் ஷிவா தாபா, விகாஷ் கிர்ஷன், கோல்ப் வீரர் அனிருபன் லஹிரி ஆகியோர் ஏமாற்றினர். ஆடவர் ஹாக்கியில் கால் இறுதியில் தோல்வியை சந்தித்தது.

பிரதமர் வாழ்த்து

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘ட்விட்டரில்', ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். எல்லா வீரர்களுமே சிறந்த பங்களிப்பை வழங்கினர். ஒலிம்பிக்கை சிறப்பாக நடத்திய பிரேசிலுக்கும் நன்றி” என கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/17-நாட்களாக-நடைபெற்ற-ரியோ-ஒலிம்பிக்-திருவிழா-நிறைவு-பதக்கப்-பட்டியலில்-அமெரிக்கா-முதலிடம்-67வது-இடத்தை-பிடித்தது-இந்தியா/article9020232.ece

இவர்கள் உலக சனத்தொகையில் தாங்கள் இரண்டாவது இடம் என்று சொல்லிக்கொள்ளத்தான் லாயக்கு......
மற்றும் படி.....நலிந்தவனை நசுக்கி மார்தட்டுவதில் விண்ணர்கள்.

Link to comment
Share on other sites

மொங்கோலிய பயிற்றுநர்கள் ஆடை களைந்து ஆர்ப்பாட்டம்
2016-08-23 14:49:55

ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மல்யுத்தப் போட்டியொன்றில் நடுவர்கள் அளித்த தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் விதமாக வீரர் ஒருவரின் பயிற்றுநர்கள் தமது மேலாடைகளை களைந்துவிட்டு உள்ளாடையுடன் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

 

187512016-08-21T173118Z_76415864_RIOEC8L

 

மொங்கோலிய வீரர்களின் பயிற்றுநர்கள் இருவரே இவ்வாறு விநோத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் கடைசி நாளான ஞாயிறன்று நடைபெற்ற, 65 கிலோகிராம் எடைக்குட்பட்டவர்களுக்கான வெண்கலப் பதக்கத்துக்கான மல்யுத்தப் போட்டியொன்றில் உஸ்பெகிஸ்தானின் இக்தியோர் நவ்ருஸோவும் மற்றும் மொங்கோலிய வீரர் மன்தக்னரன் கன்ஸோரிக்கும் மோதினர்.

 

187512016-08-21T192642Z_966736889_RIOEC8

 

இப் போட்டியின் இறுதிக் கட்டத்தில், மொங்கோலியாவின் மன்தக்னரன் கன்ஸோரிக் முன்னிலையில் இருந்தார். அவர் உற்சாக நடனத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், நடுவர்கள் 7 – 7 என  புள்ளிகளை மறு சீரமைத்தனர்.

 

அதன்பின் உஸ்பெகிஸ்தான் வீரருக்கு மற்றொரு புள்ளி அதிகரிக்கப்பட்டது. இதற்கு எதிராக மொங்கோலிய வீரர் தெரிவித்த ஆட்சேபம் நிராகரிக் கப்பட்டது.

 

187512016-08-22T131042Z_1599751_S1BETWXG

 

இப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் நவ்ருஸோவ் வெற்றி பெற்றார்.
இதனால், மொங்கோலிய வீரரின் பயிற்றுநர்கள் இருவரும் அரங்கிலேயே தமது மேலாடைகளை களைந்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

187512016-08-21T192727Z_1056615668_RIOEC

 

'இது ஓர் எதிர்ப்பு நடவடிக்கை, நடுவர்களின் செயற்பாட்டில் பிரச்சினைகள் உள்ளன' என மேற்படி பயிற்றுநர்களில் ஒருவரான பியாம்பரென்சின் பயாரா தெரிவித்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=18751#sthash.xIo62num.dpuf
Link to comment
Share on other sites

 

ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு விழா காணொளி

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றன. மைதானத்தில் நடைபெற்ற வாண வேடிக்கைகள் காணொளி இது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.